Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்!

Featured Replies

நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்! - கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு.

சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது.

நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன் ஜான் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து.

அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.

ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.

உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.

பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவாவும் குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்," என்று தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/movies/heroines/2011/08/conversion-nayanthara-hinduism-is-a-crime-aid0136.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நயந்தாரா 18 வயதுக்குள் உள்ளவரென்றால்.... கிறிஸ்தவ அமைப்புக்களின் கோரிக்கை நியாயமானதே. :rolleyes:

வெல்கம் நயந்தாரா.... :wub: ரு, அவ ரிலிஜன். :D:lol:

  • தொடங்கியவர்

இன்னொரு மதத்திலிருந்து தமது மதம் மாறிவருபவர்களை இந்துமதம் அல்லது சைவமதம் வரவேற்கிறதா?

இதுவே அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி இருந்தால் கிறிஸ்தவ அமைப்பு எதிர்த்து குரல் கொடுக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு மதத்திலிருந்து தமது மதம் மாறிவருபவர்களை இந்துமதம் அல்லது சைவமதம் வரவேற்கிறதா?

இதுவே அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி இருந்தால் கிறிஸ்தவ அமைப்பு எதிர்த்து குரல் கொடுக்குமா?

அகூதா,

ஈழத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பம்மாத்து இந்து சமயத்தை விட... ஆறுமுகநாவலரின் சைவ சமயத்தை பின்பற்றுபவர்களே 100%.

ஆரும் வலிய வந்தால்.... ஆராத்தி எடுத்து, பன்னீர் தெளிச்சு சுத்தமாக்கி வரவேற்போம். ஆனால்... வீட்டிற்குள் வந்து மாட்டிறைச்சி சாப்பிட்டால்.... தான் பிரச்சினை. வாசலில் வைத்தே... செம்புத் தண்ணீரில் தலை முழுகி... ஒரு சொந்தமும் வேண்டாம்... என்று பிறந்த வீட்டுக்கே... அனுப்பி விடுவோம். அதில் என்ன தப்பு.

சோனகனை பற்றி, பாப்பாண்டவர் பெனடிக்ரே... கதைப்பதில்லை.. அது சரியான லூசுக் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உபகண்ட சமூகங்கள் நிறைய சமூக முதிர்ச்சி காண வேண்டி உள்ளது. அவர்கள் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்தால் என்ன அதற்கு வெளியில் வாழ்ந்தால் என்ன.. இன்னும் தனி மனித சுதந்திரத்தை ஓரளவுக்கேனும் அனுமதிக்கும் பக்குவமற்று இருப்பதையே இச்செய்தி இனங்காட்டுகிறது.

நயன்தாரா.. ஒரு adult. அவர் தனது சுய அறிவுக்கு ஏற்ப தேவையான முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தைக் கொண்டவர். அதனை மதத்தின் பெயரால்.. சமூகத்தின் பெயரால்.. தடுப்பது அல்லது சிதைப்பது தனிமனித உரிமை மீறலாகும். இதில் சட்டம் எதுவும் தலையிடக் கூடாது. அதுமட்டுமன்றி இது ஒரு தனி மனித விடயம். இதை செய்தியாக்குவதே கீழ்த்தரமான ஒரு செயல் எனலாம். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

காதலுக்கு கண்ணும் இல்லை என்பார்கள்.

மேற்குலக நாடுகளில் தனிமனித சுதந்திரம் நிறையவே உள்ளது. இருந்தும் பல்லின கலாச்சார நாட்டில் வாழும் பலரும் தமது பிள்ளைகளையும் தம்மையும் இவ்வாறான மத மாற்றங்களுக்கு தயார்படுத்துவதில்லை.

இதனால் மனமுடைந்த வாழ்க்கை, அடி - தடி - கொலை கூட நடக்கின்றன பெற்றோர் மட்டத்தில்.

பிள்ளைகள் மட்டத்தில் எதிர்பாராத வாழ்வியல், விவாகரத்து என சீரழிவுகளும் நடக்கின்றன.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் கொஞ்சம் கூடுதலாகவே அதைப்பற்றி ஆரம்பத்திலிருந்தே எல்லா விடயத்தையும் திறந்தமனத்துடன் கதைத்து விவாதித்து தயார்படுத்துவது நல்லது.

உதுகளுக்கு வேற வேலை இல்லை!

ஒரு மதத்தில இருந்து இன்னொரு மதத்திற்கு மாறி திருமணம் செய்வது என்ன புதுசா? காதல் திருமணம் செய்த/ செய்யும் பலர் மதம் மாறி திருமணம் செய்து உள்ளார்கள். சிலர் எம்மதமும் சமதம் என்ற கொள்கையில் வாழுகிறார்கள்.

மதப் பற்று மட்டும் வாழ்கையில் சந்தோசத்தைத் தருமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளுக்கு வேற வேலை இல்லை!

ஒரு மதத்தில இருந்து இன்னொரு மதத்திற்கு மாறி திருமணம் செய்வது என்ன புதுசா? காதல் திருமணம் செய்த/ செய்யும் பலர் மதம் மாறி திருமணம் செய்து உள்ளார்கள். சிலர் எம்மதமும் சமதம் என்ற கொள்கையில் வாழுகிறார்கள்.

மதப் பற்று மட்டும் வாழ்கையில் சந்தோசத்தைத் தருமா? :rolleyes:

பிரபு தேவா தான்... நயந்தாராவுக்கு சந்தோசத்தை கொடுக்க வேணும்.

ஆனால், அவரின் முன்னாள் மனைவியின் சாபம் சும்மா... விடாது.

பிரபுதேவா இப்பவே... பக்கிள் அடிக்கிறார். பாவம் நயந்தாரா.ஹ்ம்ம் .....

ஒழுங்காக கிறிஸ்தவத்தை பின் பற்றும் அமைப்புக்கள் இப்படி வேலை மெனக்கெட்டு அறிக்கைகள் விடாது. நலிவுற்று இருப்பவர்களுக்காக உதவுவதை விட்டு, நயந்தாராவுக்காக மனம் நொந்து ஒரு அறிக்கை. கட்சி நடத்துவதைப் போல முன்னணி, பின்னணி எனும் அமைப்புகளை வைத்து கண்டிப்புக்கள் வேறு. அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்.

அன்பைப் போதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்காக கிறிஸ்தவத்தை பின் பற்றும் அமைப்புக்கள் இப்படி வேலை மெனக்கெட்டு அறிக்கைகள் விடாது. நலிவுற்று இருப்பவர்களுக்காக உதவுவதை விட்டு, நயந்தாராவுக்காக மனம் நொந்து ஒரு அறிக்கை. கட்சி நடத்துவதைப் போல முன்னணி, பின்னணி எனும் அமைப்புகளை வைத்து கண்டிப்புக்கள் வேறு. அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்.

அன்பைப் போதியுங்கள்.

இன்று திண்ணையில் நடந்த ஒரு விவாதத்தில் பதிந்த பதிவு இது தப்பிலி.

நீங்கள், உங்கள் மதத்தில் பற்றுள்ளதை வரவேற்கும் வேளை... நான் அறியக்கூடியதாக.... சைவசமயத்தை சேர்ந்தவர்களும், கத்தோலிக்க சமயத்தை சேர்ந்தவர்களும்...... ஜகவோ, அல்லிலூயா என்னும் புதிய மதங்களில் வேலை, நிரந்தர வதிவிடம் போன்ற ஆசைகளுக்காக சேர்ந்து... இன்று ஆட்களின் முகத்தில் தரித்திரம் குடி கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வளவற்றிற்கும் அவர்கள் ஈழப் போராட்டதை சாத்தான் போராட்டம் என்று சொல்லி எம்மை கேலி பண்ணியவர்கள். இதனுடன் ஒப்பிடும் போது பாதிரியார் சிங்கராஜரிலிருந்து பாதிரியார் இம்மானுவேல் வரை இருக்கும் உண்மை கிறிஸ்தவர்களை நினைத்து பெருமைப் படுகின்றேன். - தமிழ் சிறி - :)

பல்வேறு இக்கட்டான நிலமைகளில் உள்ள ஆட்களிற்கு உதவி செய்வதாககூறி பல கிறிஸ்தவ அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களின் மதங்களை மாற்றுகின்றன. அவ்வாறு மதம் மாற்றப்பட்ட சிலர் எடுத்தற்கெல்லாம் பைபிளை மேற்கோட்காட்டி செய்கின்ற கூத்துக்களும் கொஞ்ச நஞ்சம் இல்லை.

ஒருவர் தானாக விரும்பி தனது காதலன் அல்லது காதலியின் மதத்திற்கு மாறுவது வேறுவிடயம். ஆனால் திருமணம் செய்வதற்காக மதம் மாற்றப்படுவது காதலின் (?) உண்மைத்தன்மையினை கேள்விக்குறிக்கு உள்ளாக்குகின்றது. மேலே செய்தியில் இவ்வாறு ஓர் விடயம் வெளியில் வந்ததே சம்பந்தப்பட்டவர்களின் உறவை - காதலை (?) சந்தேகத்திற்கு உள்ளாக்குகின்றது.

பிரபு தேவா தான்... நயந்தாராவுக்கு சந்தோசத்தை கொடுக்க வேணும்.

ஆனால், அவரின் முன்னாள் மனைவியின் சாபம் சும்மா... விடாது.

பிரபுதேவா இப்பவே... பக்கிள் அடிக்கிறார். பாவம் நயந்தாரா.ஹ்ம்ம் .....

நயன்தாராவுக்கு மட்டும் இல்லை, பொதுவாக வாழ்கையில் சந்தோசத்தை மதப்பற்று மட்டும் தருமா? என்று தான் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அது கூத்தாடிகளின் காதல்.

அதில் கிறிஸ்தவ அமைப்பு தலையை கொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்ததோ... தெரியவில்லை.

இன்று திண்ணையில் நடந்த ஒரு விவாதத்தில் பதிந்த பதிவு இது தப்பிலி.

நான் திண்ணையில் கதைக்கவில்லையே? :blink:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நான் திண்ணையில் கதைக்கவில்லையே? :blink:

உங்கள் கருத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று.

நான் வேறு சிலருடன் கதைத்ததை மீள் பதிவு இட்டேன்.

நீங்கள் கதைத்ததாக எங்காவது குறிப்பிட்டேனா? :o

Edited by தமிழ் சிறி

நான் வேறு சிலருடன் கதைத்ததை மீள் பதிவு இட்டேன்.

உங்கள் கருத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று.

விளக்கமாச் சொல்லுங்கள்.

கனவில் வந்து கதைத்தேனோ என்று பயந்து விட்டேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

----

Edited by தமிழ் சிறி

பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா

ஏனுங்க புறம்போக்கு இனியவனு.......நயனு ப்ரபு லவ்ஸ் மேட்டர் இரண்டு வருசமா நடக்குது....... இதெல்லாம் எப்போ சொல்லி இருக்கணும்?

ஒரு பொண்ணையும் அவ குழந்தைகளையும் நடுத்தெருவில விட்டுபுட்டு , நயன் அவ புருசன தள்ளிகிட்டு போனபோதே .. அவள கூப்பிட்டு ஏ புள்ள நயனு பாரு இதெல்லாம் , பாவம் சொல்லி இருக்கணுமா இல்லியா?!

ஒருவேளை பிரபுதேவா கிறிஸ்தவத்துக்கு மாறி நயனை கை புடிச்சிருந்தா...உங்க அறிக்கையும் வந்திருக்காது, நயன் செய்த பாவங்களும் மன்னிக்கப்படிருக்குமோ என்னவோ?

அப்புறம் என்ன?

" உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது

அதே ஆகமங்களில் கிறிஸ்தவத்துக்கு , மற்ற மததவரை இழுத்து வந்தால் ஏற்படக்கூடிய சாபம் பத்தி எதுவுமே சொல்ல படலியா??

மதங்களுக்கு காவடி தூக்குறது, ஐயரா இருந்தாலும் , பாதரா இருந்தாலும், அடிசே கொல்லணும்போல தோணும்!

ஏன்னா..............

எந்த மதமும் என்னோட வீட்டு இந்தமாத வாடகை அல்லது மோட்கேஜ் பே பண்ணாது!

நானே நித்தா கொள்ளாம வேலைக்கு போனாதான் உண்டு!

மதம் மாறுவது அவரவர் தனிப்பட்டவிருப்பம் .ஏன் எம்மவரில் பல ஆயிரமானோர் மதம் மாறியுள்ளார்களே. நயன் சினிமாவில் இருப்பதால் அது செய்தியாகின்றது.

இன்னொரு மதத்திலிருந்து தமது மதம் மாறிவருபவர்களை இந்துமதம் அல்லது சைவமதம் வரவேற்கிறதா?

இதுவே அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி இருந்தால் கிறிஸ்தவ அமைப்பு எதிர்த்து குரல் கொடுக்குமா?

எனது மனைவி யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் தான் ஆனால் கிந்து முறைப்படி தான் திருமணம் செய்தோம் அதை விட எல்லாமே இந்து முறைப்படி தான் வாழ்கிறோம்/

வெள்ளியிலும் செவ்வாயிலும் மச்சம் சாப்பிடக் கூடாது என்று என்னை விட எனது மனைவிதான் ஆச்சாரமாக இருப்பா.

நான் வேனுமா மதம் வேனுமா என்றபோது நான் தான் என்றார் அதே நயந்தாராவுக்கும் தோன்றி இருக்கும்.

அது கூத்தாடிகளின் காதல்.

அதில் கிறிஸ்தவ அமைப்பு தலையை கொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்ததோ... தெரியவில்லை.

கிறிஸ்தவ மதத்தில் 2 ம் 3ம் 4ம் 5ம் 6ம் 7ம் 8ம் திருணத்தை தடைசெய்யவில்லை.

இந்து மதத்தில் திருமணம் தடை ஆனால் கள்ளக்காதல்தடையில்லை :lol::D

நான் வேனுமா மதம் வேனுமா என்றபோது நான் தான் என்றார் அதே நயந்தாராவுக்கும் தோன்றி இருக்கும்.

என்னிடம் யாராவது நான் வேண்டுமா மதம் வேண்டுமா என்று கேட்டால், நயன்தாராதான் வேண்டுமென்றே கூறுவேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஆணும்பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு மதம் முக்கியமா? அப்ப காதல் கத்தரிக்காயெல்லாம் என்ன மண்ணாங்கட்டிக்கு?இதுக்குள்ளை வேறை தெய்வீகக்காதலாம்!!!!!!

என்னிடம் யாராவது நான் வேண்டுமா மதம் வேண்டுமா என்று கேட்டால், நயன்தாராதான் வேண்டுமென்றே கூறுவேன். :lol:

அஞ்சாறு பேர் சாப்பிட்ட கோப்பைக்கு இப்பவும் கனபேர் வரிசையிலை நிக்கிறாங்களப்பா :lol:

  • தொடங்கியவர்

மதம் மாறுவது அவரவர் தனிப்பட்டவிருப்பம் .ஏன் எம்மவரில் பல ஆயிரமானோர் மதம் மாறியுள்ளார்களே. நயன் சினிமாவில் இருப்பதால் அது செய்தியாகின்றது.

தமிழர் வரலாற்றில் பலரும் வற்புறுத்தலாலும் தூண்டுதல் காரணமாகவும் மதம் மாறினார்.

சிறுவயதில் என் பாட்டனார் கூறுவார் வெள்ளைக்காரன் காலத்தில் தாங்கள் வாழையிலையில் சாப்பிட்டு விட்டு அதை ஒலிப்பது என்று. காரணம் தமது பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற காரணத்தால்.

அவர்கள் படித்தது கிறிஸ்தவ கல்லூரியில்.

மாணர்வர்களில் பலரும் மதம் மாறினார்களாம், நல்ல வேலைகள் வேண்டும் என்று. அவ்வாறு மாறியவர்களுக்கே முன்னுரிமை கூட தரப்பட்டதாம்.

கிழக்கு மாகாணத்திலும் தமிழகத்திலும் கூட இன்று பணத்தால் பலரும் இஸ்லாமியர்காளாக மாற்றப்பட்டு வருகிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு செய்தி என்டு கருத்துக் களத்தில் விவாதித்துக் கொண்டு

அஞ்சாறு பேர் சாப்பிட்ட கோப்பைக்கு இப்பவும் கனபேர் வரிசையிலை நிக்கிறாங்களப்பா :lol:

உங்களுக்கு தெரியாதா அண்ணா பல அணில்கள் கடித்த பழம் தான் ருசி அதிகமாம் :lol:

Edited by ரதி

எந்த மதமும் என்னோட வீட்டு இந்தமாத வாடகை அல்லது மோட்கேஜ் பே பண்ணாது!

நானே நித்தா கொள்ளாம வேலைக்கு போனாதான் உண்டு!

1ம் 2ம் 3ம் தரநிலைகளில் நிலமைக்கு தகுந்தபடி பாஸ்டர் / பூசாரி வேலை பார்த்தால் மதங்கள் மூலம் இவற்றை அடையலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.