Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்ட‌ன் காவல்துறையினர் செய்தது சரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லண்டனில் கறுப்பின[கலப்பின]இளைஞர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே...அவ் இளைஞர் போதைவஸ்து கடத்தல்,காங் லீடராக இருந்தாலும் பின் தொடர்ந்த காவல் துறையினர் அவரை கைது செய்யாமல் பொது மக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொண்டது சரியா? பிழையா?

ஊர்வலமாக போன மக்களுக்கு தகுந்த பதிலை கொடுத்திருந்தால் பிர‌ச்ச‌னை இந்த அளவிற்கு போய் இருக்குமா?... இவ் இளைஞர் வெள்ளையாக இருந்திருந்தால் காவல் துறையினர் அவரை சுட்டுக் கொண்டு இருப்பார்களா?

லண்டன் காவல்துறையினரும்,பிரித்தானியா அரசும் வேண்டும் என்றே இக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்...பொருளாதார பிரச்சனையை திசை திருப்புவதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது கருத்து.

Edited by ரதி

அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் வெள்ளை இனத்தவரும் இவ்வாறு கொல்லப்படுவதுண்டு. ஆனால் விகிதாசாரப்படி அதிகளவில் கொல்லப்படுவது கறுப்பு, இலத்தீன் இல்லை செவ்விந்தியர்கள்.

இவர்கள் மத்தியில் வேலையில்லா மக்கள் வீதம் வெள்ளை இனத்தவர்களுடன் ஒப்பிடும்பொழுது இரண்டு மூன்று மடங்குகள் அதிகம்.

அடிப்படையில் பொருளாதாரம் பலமாக இல்லாத சமூகம், அரசியலிலும் பலவீனமாக இருக்கின்றது, கூடிய அழிவுகளை சந்திக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் எந்த ஒரு குற்றத்திற்கும் மரண தண்டனை கிடையாது. ஆயுள் தண்டனை தான் உச்சம். கடந்த வியாழன் சுட்டுக் கொல்லப்பட்ட 4 குழந்தைகளின் 29 வயது தந்தை.. கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்கலாம்.. காங் லீடராக இருக்கலாம்... அவரை நீதியின் முன் நிறுத்தி குற்றத்தை நிரூபித்து நீதிமன்றத்தூடு தண்டனை வாங்கிக் கொடுப்பதையே பிரித்தானிய காவல்துறை செய்திருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் முதற்கட்ட தகவல்களின் படி அந்த நபர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காகவும் அதனால் உயிராபத்து ஏற்படும் என்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்பட்டதாக லண்டன் பொலிஸாரால் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் இறந்த இடத்தில் இருந்து கைப்பெற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்கப்பட்ட நிலையில் இருக்கவில்லை என்று ஆணைக்குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. இது லண்டன் பொலிஸ் முன்னர் சொன்ன தகவலில் இருந்து மாறுபடுகிறது. அந்த இளம் தந்தை பொலிஸ் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் துப்பாக்கி வைத்திருக்கிறார் என்பதற்காக அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது. அவர் அந்தத் துப்பாக்கியால் பொதுமக்களுக்கோ.. காவல்துறைக்கோ.. உயிர் அச்சுறுத்தல் உள்ள வகையில் அதனை பாவிக்கும் சந்தர்ப்பத்திலேயே அல்லது பாவிக்க முற்படும் சந்தர்ப்பத்திலேயே சுட்டுக் கொல்ல முடியும். அதுவும் அவரை கைது செய்ய வழி இருந்தால் சுட்டுக் கொல்வதற்கு பதிலாக சுட்டுக் காயப்படுத்தி பிடிக்கலாம். இங்கு அந்த நபர் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிலர் தலையில் படுகொலை செய்யும் நோக்கோடு சுடப்பட்டதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இது குறித்து சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எதனையும் இன்னும் சொல்லவில்லை. அது தனது விசாரணைகளை தொடர்கிறது.

ஏலவே 2005 லண்டன் தொடரூந்து குண்டு வெடிப்பின் பின்னர் நிற்கச் சொல்ல நிற்காமல் ஓடினார் என்று ஒரு பிரேசில் நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞரைச் சுட்டுக் கொன்றுவிட்டு.. ஆயிரம் தடவை மன்னிப்புக் கேட்டிருந்தார்கள்.

ஒருவர் காங்கில் இருக்கலாம்.. என்ன தப்பும் செய்யலாம்.. அவரை பொலிஸிற்கு தண்டிக்கும் உரிமை கிடையாது. அவரை நீதியின் முன் நிறுத்துவதும் நீதித்துறை (கோட்) அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து நிரூபித்து தீர்ப்பி வழங்கினால் மட்டுமே அந்த தீர்ப்பை பொலிஸ் நடைமுறைப்படுத்த முடியும்.

சுடு ஆயுதங்களைப் பயன்படுத்தும் உரிமை.. ஒரு உச்சக்கட்ட உரிமை. அதனை ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்கு எல்லாம் சுட்டுக் கொல்ல பயன்படுத்த முடியாது. அவர் அந்தத் துப்பாக்கியை இயக்கியோ அல்லது காட்டியோ அச்சுறுத்தினால் மட்டுமே அவர் மீது சுடு ஆயுதத்தைப் பாவிக்க முடியும்.

எனக்கென்னவோ.. லண்டன் பொலிஸ் விளக்கெண்ணை தனமான நடந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது. எது எப்படியோ சுயாதீன பொலிஸ் ஆணைக் குழுவின் முழுமையாக அறிக்கை.. உண்மையைச் சொல்லும் போது நிச்சயம் அது மீண்டும் ஒரு தடவை லண்டன் பொலிஸுக்கு கறுப்புப் புள்ளியாக மாறுவதை காண நேரிட்டால்... அது தற்போதைய வன்முறைகளுக்கு நியாயத்தை கற்பிக்க நிச்சயம் பாவிக்கப்படும்.

Edited by nedukkalapoovan

ஒரு புறம் பிரித்தானிய பொலிஸார் மீது கோபம் ... கையேலாத நிலையில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று!

மறுபுறம் அனுதாபம் ... உலகிலேயே அதிகாரம் குறைந்தவர்கள் பிரித்தானிய பொலிஸாரே!!! ... அந்த மனித உரிமை, அது இது என்று அவர்களின் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றது!!! ...

... இன்னும் பத்து மடங்கு பொலிஸாரை கொண்டு வந்தாலும் பிரயோசனமில்லை ... கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து, அவர்களினது கரங்கள் பலப்படுத்தாமல் ... எதுவும் நடக்கப் போவதில்லை! ... சிலவேலை இன்றோ நாளையோ இக்கலவரம் ஓய்ந்தாலும் இன்னொரு நாள் இன்னொரு இடத்தில் இது நடைபெறத்தான் போகிறது!!!

அப்போ இவர்களுக்கு என்னதான் தீர்வு??? காவல்துறையின் கையை கட்டிப்போட்டுவிட்டு கலவரம் அடங்குதில்லை என்றால் எப்படி?? தாயகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு பொட்டு வைத்தால், "களையெடுபு" இங்கு நடந்தால் தனிமனித சுதந்திரம், அஜாரகம் ஓன்றும் புரியவில்லை நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் பிரித்தானிய பொலிஸார் மீது கோபம் ... கையேலாத நிலையில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று!

மறுபுறம் அனுதாபம் ... உலகிலேயே அதிகாரம் குறைந்தவர்கள் பிரித்தானிய பொலிஸாரே!!! ... அந்த மனித உரிமை, அது இது என்று அவர்களின் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றது!!! ...

... இன்னும் பத்து மடங்கு பொலிஸாரை கொண்டு வந்தாலும் பிரயோசனமில்லை ... கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து, அவர்களினது கரங்கள் பலப்படுத்தாமல் ... எதுவும் நடக்கப் போவதில்லை! ... சிலவேலை இன்றோ நாளையோ இக்கலவரம் ஓய்ந்தாலும் இன்னொரு நாள் இன்னொரு இடத்தில் இது நடைபெறத்தான் போகிறது!!!

சட்டம்.. அதிகாரம்.. இவற்றின் மூலம் மக்களின் உணர்வுகளை அடக்க வெளிக்கிட்டதனால் தான் மக்கள் அதிகார வர்க்கங்களை எதிரியாக நோக்குகின்றனர். அதிகார வர்க்கங்களுக்கு சேவை செய்யும் காவல் துறையை எதிரியாக பார்க்கின்றனர்.

17 வயது இளம் பெண்கள் சொல்கிறார்கள்.. ஆம்.. இது வன்முறை தான். ஆனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. எங்கள் குரல்களை இப்போதுதான் செவி மடுக்கிறார்கள். பணக்காரர்களுக்கும் பொலிஸுக்கும் நாங்கள் யார் என்று காட்டுகின்றோம்..??! என்று சொல்கிறார்கள் அவர்கள். அந்த வறிய குடும்பப் பெண் பிள்ளைகளின் குரலை ஏன் செவிமடுக்காது இருந்தீர்கள்.. அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டிருந்தால்.. அவர்கள் ஏன் வன்முறையை நாடப் போகிறார்கள்..???!

ரொட்னாம்.. 1985 இலும் ஒரு கலவரத்தைக் கண்ட இடம். அதுவும் பொலிஸ் தலையீட்டால் ஒரு பெண் நினைவிழந்த நிலைக்குச் சென்றதனால் வந்தது. அதன் பின்னரும் கூட அந்தப் பகுதி மக்களை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. திட்டமிட்டு அந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான பல இடங்கள் பணக்காரர்களை குறிவைத்துள்ளன. மக்களை சுரட்டும் பெரும் வர்த்தக முதலைகளை குறிவைத்துள்ளன. ஏன்.. வறிய மக்களின் உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததால் ஆகும்.

இன்றைய இளைய சமுதாயத்தை பிரிட்டன் எப்படி கட்டி வளர்த்து வைத்திருக்கிறது என்பதற்கான சாட்சியே இவை. இதனை சமூகவியலாளர்களும்.. சமூகங்களும்.. அரசுகளும்.. அரசியல்வாதிகளும்.. அலசி ஆராய்ந்து கூடிப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சனையின் மூலம் எதிர்காலத்தில் இளைஞர்களை வன்முறைக்குத் தள்ளாததாக இருக்க வேண்டும். அதுதானே தீர்வே அன்றி.. பொலிஸ் அதிகாரமும்.. இராணுவமும் அல்ல.

நாம் இந்த வன்முறைகளை சட்டம்.. அதிகாரத்தால் அடக்க குரல் கொடுப்போம் என்றால்.. சிங்களவன் எங்களை சட்டம் அதிகாரத்தால்.. இராணுவ பலத்தால் இனப்படுகொலை செய்ததும் நியாயம் என்றாகும்.

இங்கு பிரச்சனை வன்முறையல்ல. இங்கு பிரச்சனை வன்முறையை நாட அந்த இளைஞர்களை தூண்டிய குறுகிய.. நெருங்கால செயற்பாடுகள். அது அரசு சார்ந்ததாக இருக்கலாம். பொலிஸ் சார்ந்ததாக இருக்கலாம். சமூகங்கள்.. பொருண்மியம் சார்ந்ததாக இருக்கலாம். அவற்றை களையவே பெரும்பாலான மக்களும் கேட்கிறார்கள். அந்த வகையில் தான் இந்த இளைஞர்களின் வன்முறையை தடுக்காமல் மக்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். கோபத்தை அரசு மீதும்.. பொலிஸ் மீதுமே மக்களும் காட்டுகிறார்கள்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரித்தானியா காவல்துறையினர் செய்தது சரியா? என்று தான் தலைப்பு போட நினைத்தேன் ஆனால் தவறுதலாக சரி எனப் பதிந்து விட்டேன் <_<

காவல்துறையினர் விடும் பிழைகளில் இது முதாலவது இல்லை!

லண்டனில் G20போராட்டம் நடக்கும் போது இயன் டோம்லின்சன் (வெள்ளை இனத்தவர்) என்பவரை காவல்துறையினரை சேர்ந்தவர் ஒருவர் தரையில் கீழே தள்ளி விழுத்திய பின் குறுகிய நேரத்திற்குள் அவர் மாரடைப்பால் இறந்தார். விசாரணைகளின் பின்பு இந்த வருடம் தான் அந்த காவல் அதிகாரிக்கு தண்டனை வழங்கப் பட்டது.

எம்மவர்கள் போராட்டம் நடத்தும் போது பல காவல் அதிகாரிகள் ஆதரவாக இருந்தார்கள் அதே நேரம் சிலர் எம் இளையோர்களை குறிப்பாக மாணவிகளைக் கூட அவர்கள் இழுத்து எறிந்து தமது கோபத்தை வெளிக் காட்டினார்கள்.

இப்போது மார்க் டக்கன் (கறுப்பினத்தவர்) என்பவர் தனது துப்பாக்கியால் போலிசை நோக்கி சுடுவதற்கு முன்பே அவரை ஆயுதம் தாங்கிய போலீசார் நெஞ்சில் சுட்டதும் அந்த இடத்திலையே இறந்ததாக IPCC விசாரணையின் முதற்கட்ட அறிக்கை இன்று கூறியது. அதே நேரம் ஒருவர் துப்பாக்கியை வைத்து அடுத்தவரை மிரட்டினாலே ஆயுதம் தாங்கிய பொலிசார்ருக்கு சுடுவதற்கு சட்டம் அனுமதிப்பதாக லண்டன் பொலிசார் விசாரணையில் கூறி இருக்கிறார்கள்.

காவல்துறையினருக்கு தமது மேல் பிழை இருப்பதாக ஒரு சந்தேகம் இருந்தபடியால் அதனை விசாரணையின் பின்பு போராட்டம் நடத்திய மக்களுக்கு அறிவிக்க காத்திருந்திருக்கலாம். நான்கு ஐந்து மணி நேரங்களுக்குப் பின்பு திரும்பிப் போய்விடுவார்கள் என்றே நினைத்திருப்பார்களோ என்னவோ....

அதே போல் பொலிஸ் எது செய்தாலும் தமக்கு எதிராகவே கடைசியில் தண்டனை வருவதாக நினைத்து கடையுடைப்புகளை பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்... அத்துடன் முக்கிய காவல்துறையின் அதிகாரியோ அரசியல் தலைவர்களோ நாட்டில் இருக்கவில்லை, அதனால் அவர்களின் கட்டளையை எதிர் பார்த்து இருந்திருக்கலாம், இதே போல் ஒரு நிலைமையை அவர்கள் சந்தித்தது இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

இங்கே பெரும்பாலானோர் கறுப்பினத்தவர்கள் தான் (மற்றைய இனத்தவர்கள் இருந்தாலும்) சிறிய வயதிலேயே பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறுதல் (Truancy) முதல் களவு, போதை பொருட்கள் பாவனை/ விற்பனை, இளையோர்களிடையே சண்டைகள், கத்திக்குத்து, கொலை போன்ற சட்ட விரோத செயல்களை செய்கிறார்கள்.

மார்க்கைக் கொன்றதால் பலர் நிம்மதி என்று கூறியதாக டொட்டணம் பகுதியைச் சேர்ந்த பல கறுப்பினத்தவர் வேலையிடத்தில் பேசிக் கொண்டார்கள். உயிரோடு பிடித்து சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கிக் கொடுத்து இருக்கலாம் என்பது எனது கருத்து ஆனால் பல கொலைகள், கொள்ளைகள், சட்ட விரோத செயல்களை செய்த/ செய்ய மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒருவருக்கு இப்படித்தான் தீர்வு இருக்க வேணும் என்று பொலிஸ் முடிவெடுத்தும் இருக்கலாம். அவர்களின் முடிவின் பலனை இப்போது நாடு முழுதும் பார்க்கிறார்கள்.

David Cameron - If people are old enough to be involved in the madness, they are old enough to face the consequences இது பொலிசாருக்கும் பொருந்துமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இவர்களுக்கு என்னதான் தீர்வு??? காவல்துறையின் கையை கட்டிப்போட்டுவிட்டு கலவரம் அடங்குதில்லை என்றால் எப்படி?? தாயகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு பொட்டு வைத்தால், "களையெடுப்பு" இங்கு நடந்தால் தனிமனித சுதந்திரம், அஜாரகம் ஓன்றும் புரியவில்லை நெடுக்ஸ்.

தாயகத்தில் மரண தண்டனை அதி உச்ச தண்டனை. மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட யாவரும்.. எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு... திருந்த சந்தர்ப்பம்... வாய்ப்பு அளிக்கப்பட்டு.. அவை தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்த இடத்தில் சமூகத்தின்.. போராளிகளின்.. மக்களின்.. போராட்டத்தின்.. தேசத்தின் பாதுகாப்புக் கருதி.. தான் அங்கிருந்த அந்த சட்ட ஒழுங்கிற்கு அமைய.. சமூக நிலைக்கு அமைய.. மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உண்மையில்.. மரண தண்டனைக்கு எதிரானவர்கள் நிச்சயம் அவற்றையும் தான் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு போர் கால சூழலில்.. அது அங்கு அவசியமாக்கப்படிருக்கலாம்.

இப்போ.. பிரிட்டன் இராணுவம் ஆப்கானிஸ்தானில்.. ஈராக்கில்.. போட்டுத் தள்ளுவதற்கு யாரும் காரணம் கேட்பதில்லை. அதை எதிர்த்து யாரும்.. வன்முறையில் இறங்குவதில்லை. அது எப்படி..????!

முபாரக்கை.. கடாபியை எதிர்த்து இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கி.. பேஸ் புக்.. ருவிட்டரை பயன்படுத்தி... இளைஞர்களை தூண்டி.. பிரிட்டன் அதன் பின்னணியில் இருந்து போர் செய்வதில் வரும் மக்கள் அழிவுகள் குறித்து அதை எதிர்த்து.. எவரும்.. வன்முறை செய்யவில்லையே...??!

ஆனால் பிரிட்டன் ஒன்றும் போர்க்கால சூழலில் உள்ள தேசம் அல்ல. ஒப்பீட்டளவில் அமைதியான பொறுமையான மக்களைக் கொண்ட தேசம். அந்த மக்களின் குழந்தைகள்.. வன்முறையை நாடுகிறார்கள் என்றால்.. அதுவும் ஒரு சாதாரண சூழலில்.. அதன் காரணியை தான் கண்டு அகற்ற வேண்டுமே தவிர.. அமைதியான சூழலில்... அச்சுறுத்தல் இன்றி.. துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக ஒருவரை சுட்டுக் கொல்லவது மிக மோசமான மனித உரிமை மீறலாகவே நோக்கப்படும்.

அண்மையில் ஒரு வெள்ளையர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சொந்த குடும்பம்.. நண்பர் என்று வேட்டையாடிய போது 4 நாட்கள் எடுத்தது.. அதுவும் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொல்லும் வரை பொலிஸ் அவரை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. சுட்டுக் கொல்ல முனையவில்லை. அப்போது எங்கே போனது.. இந்த வேண்டுகைகள்..??????! கறுப்பன்.. என்றால் ஒரு சட்டம். வெள்ளை என்றால் இன்னொரு சட்டமா..?????! அதுவும் இந்த வன்முறைகள் முளை விட ஒரு காரணம்.

Edited by nedukkalapoovan

பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லாமல் பூட்டிய அறையில் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்பதா பொருள்?

இவரின் பின்னணி பற்றி முழுமையாகத் தெரியாமல் கருத்துக் கூற முடியாது. குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட நடவடிக்கைகளால் எத்தனை பேர் , எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதைப் பொறுத்தே அமையும். முன்பு இந்த இடத்தில் சிலகாலம் வாழ்ந்த பொழுது ஒரு சில போதைவஸ்து குழுத் தலைவர்களால் பல கண்ணியமான குடும்பங்கள் நாசமாகப்பட்டதை கண்டிருக்கிறேன். முக்கியமாக பெண்களை தேடித் தேடி வேட்டையாடுவார்கள்.

இதே இடத்தில் இரண்டு மூன்று வருடங்களின் முன்பு கொஞ்சம் மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தி விட்டு, சாட்சியங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது பிறப்புறுப்பில் அமிலத்தை (acid) அள்ளித் தெளித்தார்கள். இவையெல்லாம் சரியா பிழையா என்பது அவர் அவரின் மனிதாபிமானத்தைப் பொறுத்தது.

'யாழ்' ஒரு குடும்ப இணையம் என்றபடியால் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுவதை தவிர்த்துக் கொள்கிறேன்.

இங்கு பொலிசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மனிதாபிமானம் என்ற பெயரில் குற்றம் இளைப்பவர்களின் சார்பாகவே நீதியுள்ளது. இது குற்றவாளிகளை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். பாதிக்கப்படப் போவது மத்தியதர மக்கள்தான்.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கி இருப்பவர்களுக்கு இந்த வன்முறைகள் ஒரு வடிகாலாய் அமைவதை தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லண்டனில் கறுப்பின[கலப்பின]இளைஞர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே...அவ் இளைஞர் போதைவஸ்து கடத்தல்,காங் லீடராக இருந்தாலும் பின் தொடர்ந்த காவல் துறையினர் அவரை கைது செய்யாமல் பொது மக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொண்டது சரியா? பிழையா?

-------

ஒரே பதில் பிழை.

அவரை காவல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்து, முழு சமூக விரோத கும்பல்கலையும் கைது பண்னியிருந்தால் புத்தி சாலித்தனம்.

உலகத்துக்கே... ஜனநாயகம் கற்பித்த இங்கிலாந்து, அந்த சந்தேகநபரை தெருவில் சுட்டுக் கொன்றது முட்டாள் தனம்,

இப்போது உள்ள நவீன வசதிகளுடன், ஒருவன் செத்தால்.... ஒரு நிமிடத்தில் அந்தச் செய்தி இரத்தம் காய முதல் உலகம் முழுக்க பறக்கும்.

அந்த ஒரு தீப் பொறியை, இங்கிலாந்துப் பொலிசார் கணிக்கத் தவறியதை, மற்றைய ஐரோப்பிய நாடுகள் வேதனையுடன் பார்க்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லாமல் பூட்டிய அறையில் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்பதா பொருள்?

இவரின் பின்னணி பற்றி முழுமையாகத் தெரியாமல் கருத்துக் கூற முடியாது. குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட நடவடிக்கைகளால் எத்தனை பேர் , எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதைப் பொறுத்தே அமையும். முன்பு இந்த இடத்தில் சிலகாலம் வாழ்ந்த பொழுது ஒரு சில போதைவஸ்து குழுத் தலைவர்களால் பல கண்ணியமான குடும்பங்கள் நாசமாகப்பட்டதை கண்டிருக்கிறேன். முக்கியமாக பெண்களை தேடித் தேடி வேட்டையாடுவார்கள்.

இதே இடத்தில் இரண்டு மூன்று வருடங்களின் முன்பு கொஞ்சம் மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தி விட்டு, சாட்சியங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது பிறப்புறுப்பில் அமிலத்தை (acid) அள்ளித் தெளித்தார்கள். இவையெல்லாம் சரியா பிழையா என்பது அவர் அவரின் மனிதாபிமானத்தைப் பொறுத்தது.

'யாழ்' ஒரு குடும்ப இணையம் என்றபடியால் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுவதை தவிர்த்துக் கொள்கிறேன்.

இங்கு பொலிசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மனிதாபிமானம் என்ற பெயரில் குற்றம் இளைப்பவர்களின் சார்பாகவே நீதியுள்ளது. இது குற்றவாளிகளை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். பாதிக்கப்படப் போவது மத்தியதர மக்கள்தான்.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கி இருப்பவர்களுக்கு இந்த வன்முறைகள் ஒரு வடிகாலாய் அமைவதை தவிர்க்க முடியாது.

உண்மையில் ஒருவரின் பின்னணியை அறிந்து பொதுமக்கள் தீர்ப்பளிக்க முடியாது. காவல் துறைக்கும் அந்த அதிகாரம் இல்லை. அதற்குத் தான் நீதித்துறை இருக்கிறது. உண்மையில்.. அந்த நபர் கொடியவர்.. கொலையாளி என்றால்.. அவரை வெளியில் விட்டு வைத்ததும்.. நீதியின் முன் நிறுத்தாமல்.. தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்காமல் விட்டதும் கூட காவல்துறையின் தவறே அன்றி.. எமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம்.. அவரை சுட்டுக் கொல்வது.. அல்லது நாங்கள் பாதிக்கப்பட்டு விட்டோம் என்பதற்காக.. நீதிக்கு அப்பால் சென்று தண்டனை வழங்கக் கோருவது எந்த வகையிலும் நியாயமாகாது.

எனவே பாதிக்கப்பட்டவரோ.. பாதிப்பைச் செய்தவரோ.. அவர்கள் தொடர்பில் நீதித்துறை தீர்ப்பெழுத காவல்துறை தனது கடமைகளைச் செய்ய வேண்டுமே தவிர.. காவல்துறைக்கு அதிகாரம் அளிப்பது ஆபத்தானது. அது ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும். பிரித்தானிய நீதித்துறை.. வேகமானது.. கூடிய அளவு நம்பகத் தன்மை கொண்டது... மட்டுமன்றி அதிகார வர்க்கத்தையும் கேள்வி கேட்கும் உரிமை கொண்டது. அந்த வகையில் அது இவர்கள் தொடர்பில் தீர்ப்பை வரவதே சிறந்தது.

தாயகத்தில் மரண தண்டனை அதி உச்ச தண்டனை. மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட யாவரும்.. எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு... திருந்த சந்தர்ப்பம்... வாய்ப்பு அளிக்கப்பட்டு.. அவை தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்த இடத்தில் சமூகத்தின்.. போராளிகளின்.. மக்களின்.. போராட்டத்தின்.. தேசத்தின் பாதுகாப்புக் கருதி.. தான் அங்கிருந்த அந்த சட்ட ஒழுங்கிற்கு அமைய.. சமூக நிலைக்கு அமைய.. மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உண்மையில்.. மரண தண்டனைக்கு எதிரானவர்கள் நிச்சயம் அவற்றையும் தான் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு போர் கால சூழலில்.. அது அங்கு அவசியமாக்கப்படிருக்கலாம்.

இப்போ.. பிரிட்டன் இராணுவம் ஆப்கானிஸ்தானில்.. ஈராக்கில்.. போட்டுத் தள்ளுவதற்கு யாரும் காரணம் கேட்பதில்லை. அதை எதிர்த்து யாரும்.. வன்முறையில் இறங்குவதில்லை. அது எப்படி..????!

முபாரக்கை.. கடாபியை எதிர்த்து இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கி.. பேஸ் புக்.. ருவிட்டரை பயன்படுத்தி... இளைஞர்களை தூண்டி.. பிரிட்டன் அதன் பின்னணியில் இருந்து போர் செய்வதில் வரும் மக்கள் அழிவுகள் குறித்து அதை எதிர்த்து.. எவரும்.. வன்முறை செய்யவில்லையே...??!

ஆனால் பிரிட்டன் ஒன்றும் போர்க்கால சூழலில் உள்ள தேசம் அல்ல. ஒப்பீட்டளவில் அமைதியான பொறுமையான மக்களைக் கொண்ட தேசம். அந்த மக்களின் குழந்தைகள்.. வன்முறையை நாடுகிறார்கள் என்றால்.. அதுவும் ஒரு சாதாரண சூழலில்.. அதன் காரணியை தான் கண்டு அகற்ற வேண்டுமே தவிர.. அமைதியான சூழலில்... அச்சுறுத்தல் இன்றி.. துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக ஒருவரை சுட்டுக் கொல்லவது மிக மோசமான மனித உரிமை மீறலாகவே நோக்கப்படும்.

அண்மையில் ஒரு வெள்ளையர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சொந்த குடும்பம்.. நண்பர் என்று வேட்டையாடிய போது 4 நாட்கள் எடுத்தது.. அதுவும் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொல்லும் வரை பொலிஸ் அவரை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. சுட்டுக் கொல்ல முனையவில்லை. அப்போது எங்கே போனது.. இந்த வேண்டுகைகள்..??????! கறுப்பன்.. என்றால் ஒரு சட்டம். வெள்ளை என்றால் இன்னொரு சட்டமா..?????! அதுவும் இந்த வன்முறைகள் முளை விட ஒரு காரணம்.

உங்கு உள்ள சூழ்நிலைகளுக்கு நான் கருத்தை எழுதுவது சரியில்லை.ஆனால் இங்கு உள்ள நடைமுறைகளை வைத்து எழுதலாம் என நினைக்கின்றேன். இங்கு புறநகர்பகுதிகளில் ஒன்றான கிளிச்சி சூ வுவா (CLICHY SOUS-BOIS ) ல் வன்முறைகள் வெடித்து கட்டுக்கடங்காமல் போனபொழுது அப்போதய உள்துறை அமைச்சரினால் முதன்முறையாக 50 வருங்களுக்குப் பின்பு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நிலமையை தொடராவண்ணம் காவல்துறை கட்டுக்குள் கொண்டுவந்த்து. அதேபோல் பாரிஸ் முக்கிய நகரான போதைவஸ்த்து,கிரமினல் கோட்டையான சத்தோ றூஜ் ( CHATEAU ROUGH ) ல் அப்போதய உள்துறை அமைச்சர் சாரல்ஸ் பஸ்குவா ( CHARLS PASCQUA) வினால் என்கவுண்டர் உத்தரவு பிறப்பக்கப்பட்டு பல தாதாக்கள் "பொட்டு" வைக்கப்பட்டார்கள். நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டார்கள். யாரும் உள்துறை அமைச்சரின் / காவல்துறயின் செயலபாடுகளக்கு எதிராக போர்கொடி பிடிக்கவில்லை. நீங்கள் சொல்வது போல் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தும் பொழுது அவர்களுக்காக ஒரு பிரபல சட்டத்தரணி முன்நிறுத்தப்பட்டு சுலபமாக சட்டத்தின் ஓட்டைகளை வைத்து வெளியில் இவர்கள் வந்து அதே பாதையில் பயணிப்பார்கள். பிரிட்டனில் துறை செய்த தவறு அறப் படிச்ச பல்லி கூழ் பானைக்குள் விழுந்த கதையாக பொது இடத்தில் வைத்து "டம்" பண்ணியது தான் . ஒரு காவல் துறை அதிகாரி தனது ஆயுதத்தைத் தூக்குவதற்கும் பொதுமகன் ஆயுதம் / வன்முறை தூக்குவதற்கும் வேறுபாடு உண்டு. முதலாமவரில் நாட்டு நலன் இருக்கும். ஆக உலகில் இல்லாத ஒன்றை பிரிட்டன் காவல்துறை செய்யவில்லை நீங்கள் சொன்ன சமூக நிலப்பாடுகள் அரசால் செய்யவேண்டியது, காவல்தறை இல்லை. முதலில் இந்த சமூக நலக்கொடுபனவுகளை நிப்பாட்டினாலே பாதிப்பிரச்சனை தீர்ந்து விடுகின்றது .ஒருகுறிப்பிட்ட வீத மக்கள் வருமான வரி கட்ட இவர்களைப் போல கூட்டங்கள் சோம்பேறிகளாக குறுக்குவழிகளை நாடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவகையில் எனக்கு நிக்கோலா சார்கோசியைப்பிடிக்கும் (அந்த நேரத்தில் அவரே இங்கு உள்துறை அமைச்சர் அப்போது அவர் குழப்பகாரர்களுக்கு சொன்னது காவல்துறைக்கோ பொதுமக்களுக்கோ ஏதாவது துன்புறுத்தல் வருமாக இருந்தால் அதற்கான தண்டனை அதி உச்சமானதாகவும் எந்தவித மன்னிப்புமற்றதாகவும் இருக்கும் என்று. அதனையே செய்தும் காட்டினார். அதனாலேயே இந்த அடக்கலின் பின்பே அவரது செல்வாக்கு அதிகரித்து இன்று இங்கு ஜனாதிபதியாக உள்ளார்)

அத்துடன் தேடுதல்கள் நடாத்தப்பட்டு போடவேண்டியவர்கள் போடப்பட்டு மீதியானவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டார்கள். இன்று பிரான்ஸ் அமைதியாகவும் நாம் இன்று நிம்மதியாக வேலை மற்றும் தொழில் செய்வதற்கும் இது தான் காரணம்.

நெடுக்கின் கருத்துடன் உடன்பட்டாலும் பொலிசாரின் கோரிக்கைகளையும் பார்க்கவேண்டும். அண்மையில் நான் டென்மார்க்கில் நின்றபோது இப்படியொரு நிலை அங்கும் வந்தது. பொலிசார் சில பகுதிகளுக்கு போக மறுத்துவிட்டார்கள். அவர்கள் சொன்ன காரணத்தை மக்களும் ஏற்றார்கள். அது நாம் தொழில் செய்து பிழைப்பதற்காகவே இந்த வேலைக்கு வந்துள்ளோம் சாவதற்காக அல்ல. :(

எனது கருத்தை செம்மைப் படுத்தியதிற்கு நன்றிகள் விசுகு :):)

  • கருத்துக்கள உறவுகள்

அது நாம் தொழில் செய்து பிழைப்பதற்காகவே இந்த வேலைக்கு வந்துள்ளோம் சாவதற்காக அல்ல. :(

விசுகு அண்ணா, நீங்கள் உங்களை பிரெஞ்சுக்காரன் என்று நம்புகின்றீர்களா அல்லது பிழைக்க வந்த தமிழன் என்று இன்னமும் நினைக்கின்றீர்களா?

கொல்லப்பட்டவர் போதை வஸ்து வியாபாரி எனில் நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டது நூறு விகிதம் சரி. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தான் சட்டம், மனிதாபிமானம், மிருகாபிமானம், பூச்சியாபிமானம் எல்லாம் சமூகத்தினை சீரழிக்கும் காட்டேரிகளுக்கு இல்லை

எனக்கு என்னமோ இங்கிலாந்த் இந்த பிரச்சனையை வைத்து ஏதொ களைஎடுக்க போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, நீங்கள் உங்களை பிரெஞ்சுக்காரன் என்று நம்புகின்றீர்களா அல்லது பிழைக்க வந்த தமிழன் என்று இன்னமும் நினைக்கின்றீர்களா?

எதற்காக கேட்கின்றீர்கள் என தெரியாது விட்டாலும் சிலவற்றிற்கு கட்டுப்பட நாடு, மதம், இனம் பார்க்கத்தேவையில்லை. அத்துடன் எனக்கு அடைக்கலம் தந்தவனுக்கு உபத்திரவம் கொடுப்பதை ஆதரிப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஒரு போதைவஸ்து வியாபாரியாக,கொலைகாரனாக,கொள்ளைக்காரனாக இருக்கலாம் ஆனால் அவனை பின் தொடர்ந்த காவல்துறையினர் பொது மக்கள் முன் நிலையில் வைத்து சுட்டுக் கொண்டது பிழை...எதாவது ஒரு காரணத்திற்காக சசி சொன்ன மாதிரி களையெடுப்புக்குகாகவோ அல்லது அனைத்து போதைவஸ்து வியாபாரிகளுக்கும் பாடம் புகட்ட பொது மக்கள் முன்னிலையில் வைத்து சுட்டு இருக்கலாம் ஆனால் அதற்கு பின் நடந்த,நடக்கிற களவு,சொத்துகள் நாசப்படுத்தல் போன்றவற்றுக்கு காவல் துறையினரே பொறுப்பு இதனால் பாதிக்கப்பட்டது சாதரண அப்பாவி பொது மக்கள்...அவனை சுட்ட காவல் துறையினர் எதற்காக அவனை சுட்டோம் என தகுந்த காரணத்தை காவல் நிலையத்திற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சொல்லி இருந்தால் விடயம் இந்த அளவிற்கு போய் இருக்காது ...எதாவது திட்டத்துடன் தான் இந்த களையெடுப்பு நடந்திருந்தால் அதன் பின் விளைவுகள் பொது மக்களை பெருமளவில் பாதிக்கமல் தடுக்க வேண்டியது காவல் துறையினதும்,அரசினதும் கடமை.

இறந்தவர் குற்றவாளி என்று இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவர் இறப்புக்கும் காரணம் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகள்தான் என்று இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவரின் இறப்புக்குக் காரணம் காவல் துறையினரின் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள்தான் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இப்படியெல்லாம் காவல்துறையும் நீதித் துறையும் ஆராய்ந்து முடிவெடுக்க நீண்ட கால இடைவெளி தேவையாக இருக்க, இந்த அவசரக் குடுக்கைகள் ஆர்ப்பாட்டம் செய்தவுடன் பதில் சொல்ல நிர்வாகத்தால் எப்படி முடியும்.

ஆர்ப்பாட்டம் செய்ததும் உடனே காவல்த்துறையினர் பதில் கொடுக்க எந்த ஒரு வாய்ப்புகளும் இல்லை. உரிய விசாரணையின் பின்பே அறிக்கையாக வெளியிடுவார்கள்.

IPCC (Independent Police Complaints Commission) விசாரணையின் முதல் கட்ட அறிக்கை நேற்று வெளியானது:

http://www.telegraph.co.uk/news/uknews/crime/8692219/London-riots-IPCC-says-no-evidence-Mark-Duggan-opened-fire.html

விசாரணை முழுதும் நடந்து முடிய ஐந்து அல்லது ஆறு மாதங்கள் எடுக்கலாம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர் குற்றவாளி என்று இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவர் இறப்புக்கும் காரணம் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகள்தான் என்று இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இன்னும் நிருபிக்கப்படவில்லை. அவரின் இறப்புக்குக் காரணம் காவல் துறையினரின் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள்தான் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இப்படியெல்லாம் காவல்துறையும் நீதித் துறையும் ஆராய்ந்து முடிவெடுக்க நீண்ட கால இடைவெளி தேவையாக இருக்க, இந்த அவசரக் குடுக்கைகள் ஆர்ப்பாட்டம் செய்தவுடன் பதில் சொல்ல நிர்வாகத்தால் எப்படி முடியும்.

ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல.. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்தினரும் தங்கள் கவலையை உண்மையை அறிதலுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அம்மையார் மே.. அந்தக் குடும்பத்தினரின் நிலைப்பாட்டோடு அரசு தன்னைப் பகிர்ந்து கொள்கிறது என்று கூறி இருக்கிறார். ஆர்ப்பாட்டம்.. கலவரத்துக்கு முதலே அதை அரசு செய்திருக்கலாமே..???! காவல்துறை முன் வைத்த குற்றச்சாட்டு.. அந்த இளைஞர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் தாங்கள் சுட்டுக் கொன்றதாக. ஆனால் சுயாதீன பொலிஸ் விசாரணை ஆணைக்குழு அந்த இளைஞனுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி பாவிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறி இருக்கிறது.

ஒருவரை கொலையாளி.. கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் என்று பொதுமக்களும் காவல்துறையும் தீர்மானிக்க முடியும் என்றால் ஏன் நீதித்துறை என்ற ஒன்றிருக்கிறது..???! இந்தக் கொலை மிகவும் மோசமான செயற்பாடாகவே பார்க்கப்படும். காவல்துறை நீதித்துறைக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் போலவே தோன்றுகிறது. இப்படித்தான் அவசரக் குடுக்கைத் தனமாக பயங்கரவாதி என்று சொல்லி.. 2005 யூலை குண்டுவெடிப்பின் பின்.. ஒரு அப்பாவி பிரேசில் இளைஞனை சுட்டுக் கொன்றது காவல்துறை. பொதுமக்களுக்கு அவரை காட்டியது பயங்கரவாதியாக. இறுதியில் நீதித்துறை தான் அவர் ஒரு அப்பாவி குடியேற்றக்காரர் என்று அறிவித்து காவல்துறையின் செயற்பாட்டை கடிந்திருந்தது.

இரண்டாவது இரவு வன்முறையின் பின்பு தான் தெரேசா மே விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பியதாகக் கூறப்பட்டது.

http://www.bbc.co.uk/news/uk-england-london-14442935

முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லோரும் விடுமுறையில் இருந்த போது இதனை காவல்த்துறையினர் திட்டமிட்டுச் செய்து இருக்ககூடும்...

துணைப்பிரதமரும் தெரேசா மே யும் அந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரே செய்தியையே தெரிவித்தனர். துணைப் பிரதமர் நாட்டில் தானே இருந்திருந்தார். :unsure::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.