Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுகின்றனர்

20 ஆகஸ்ட் 2011

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2010ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதம் n;தாடர்பான அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும், 2010ம் ஆண்டில் இலங்கையில் எதுவித பயங்கரவாத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை அமெரிக்கா தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடஅமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுக்கு ஆதரவான சில அறக்கட்டகளையும் நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சில விடுதலைப் புலி உறுப்பினர்கள், மீள இயங்கும் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பாரியளவு புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பங்களாதேஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளாம், கம்போடியா, ஆப்கானிஸ்தான், தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65909/language/ta-IN/article.aspx

அப்ப இதுக்கு முடிவே இல்லை. உலக தமிழர் உள்ளவரை புலி இருக்கும் என்று சொல்லியே தமிழனை அழித்து விடுவார்கள் போல் உள்ளது.

சரி ஆயுதங்களை வாங்கி எங்க கொண்டு போகினம்?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஏதோ சதி செய்வதற்காகவே திட்டமிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம், இதை சுட்டி காட்டியே லங்கா பயங்கரவாத சட்டத்தை நீடிக்க வாய்ப்புள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை ஒட்டுக்குழுக்களுக்கு (டக்கிலஸ் ,பிள்ளையான் ,கருணா ,) போன்றவகளுக்காக புலிகள் என்ற பெயரில் ஆயுதங்கள் வாங்கியிருப்பினமோ ........?

Edited by தமிழ் அரசு

இந்தியாவில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்......

இந்தியாவில் 9V மின்கலம்(battery ) வாங்கினால் தூக்கு தண்டனை வழங்கப்படும்....

இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி இ வி கே எஸ் இளங்கோவன் தலைமையில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..... அன்ன ஹசாறேவின் போராட்டத்தை விஞ்சுமளவுக்கு மக்கள் திரள்வார்கள் என்று தங்கபாலு ஆரூடம் கூறியுள்ளார்....

வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுகின்றனர்

20 ஆகஸ்ட் 2011

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடஅமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுக்கு ஆதரவான சில அறக்கட்டகளையும் நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சில விடுதலைப் புலி உறுப்பினர்கள், மீள இயங்கும் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இப்படி எதுவும் அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை.

SRI LANKA

Overview: In 2009, the Government of Sri Lanka announced formally the defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), a U.S.-designated Foreign Terrorist Organization. While there were no terrorist incidents within Sri Lanka in 2010, there were continuing concerns that the LTTE's international network of financial support might still be functioning; therefore, most counterterrorism activities undertaken by the Sri Lankan government were targeted at countering terrorist finance.

Legislation and Law Enforcement: Legislative efforts were focused on limiting financial support for the remnants of LTTE. Domestically, there was a large budgetary allocation (about four percent of Sri Lanka’s GDP) for defense and monitoring of Tamil diaspora activity in coordination with foreign governments. The United States provided training for relevant Sri Lankan government agencies and the banking sector in combating the provision of financial support to the LTTE remnants. The Sri Lankan government implemented the Container Security Initiative and the Megaports program at the Port of Colombo.

Countering Terrorist Finance: In February, Sri Lanka provided a high-level written commitment to work with the Financial Action Task Force (FATF) to implement the following corrective measures: (1) adequately criminalizing money laundering and terrorist financing; and (2) establishing and implementing adequate procedures to identify and freeze terrorist assets. The government was drafting amendments to the 2005-2006 laws on money laundering and terrorist financing, in accordance with FATF recommendations, at year’s end.

Regional and International Cooperation: In October, the Financial Intelligence Unit (FIU) of Sri Lanka signed a Memorandum of Understanding (MOU) with the FIU of Bangladesh to share financial information to facilitate the investigation and prosecution of persons suspected of money laundering and terrorist financing. Sri Lanka has already signed MOUs with the Philippines, Nepal, Cambodia, Malaysia, Afghanistan, South Korea, and Indonesia.

Countering Radicalization and Violent Extremism: In order to address lingering resentment in areas that were formerly held by LTTE combatants, the Sri Lankan government was working to restore civil administration, resettle Internally Displaced Persons, provide immediate infrastructure development, encourage private sector participation, and promote the development of industries.

http://www.state.gov...2010/170258.htm

  • கருத்துக்கள உறவுகள்

Overseas members of Sri Lanka's terrorist group LTTE continued to procure weapons in 2010- US report

The overseas members of Sri Lanka's terrorist organization, Liberation Tigers of Tamil Eelam (LTTE) continued to procure weapons while the LTTE diaspora continued to support the organization financially, a report released by the United States Department of State on Thursday (18) said.

In the 'Country Reports on Terrorism 2010' an annual congressionally mandated report released by the State Department says While there were no terrorist incidents within Sri Lanka in 2010, there were continuing concerns that the LTTE's international network of financial support might still be functioning.

The report, which provides an assessment of trends and events in international terrorism revealed within the last year, continues to list the LTTE as a U.S. government designated Foreign Terrorist Organization.

It says that despite its military defeat in Sri Lanka at the hands of government forces in May 2009, the LTTE's international network of financial support persists.

The report reveals that the LTTE network continued to collect contributions from the Tamil diaspora in North America, Europe, and Australia and locally-based LTTE sympathizers reportedly have coerced some of these contributions. Further the outfit has also used Tamil charitable organizations as fronts for its fundraising to procure weapons, communications, funding, and other needed supplies.

Following Sri Lanka's victory over the LTTE, the report says some of the LTTE members have fled the country and have since attempted to reorganize in India.

According to the report, a failed attack against a railway in Tamil Nadu has been carried out by suspected LTTE members. Separately, in March the German police have arrested six Tamil migrants living in Germany for using blackmail and extortion to raise funds for the LTTE.

The Sri Lankan government, responding to the threat from overseas LTTE organization, has launched legislative efforts focused on limiting financial support for the remnants of LTTE.

The Sri Lankan government has made a large allocation to the defense budget in 2010 to monitor Tamil diaspora activity in coordination with foreign governments while the United States has provided training for relevant Sri Lankan government agencies and the banking sector to curtail the provision of funds to the LTTE network.

According to the terrorism report, Sri Lanka has provided a high-level written commitment to work with the Financial Action Task Force (FATF), an organization that combats international money laundering and terrorist financing, to implement corrective measures to adequately criminalize money laundering and terrorist financing and to establish and implement adequate procedures to identify and freeze terrorist assets.

The government was also drafting amendments to the 2005-2006 laws on money laundering and terrorist financing, in accordance with FATF recommendations at the end of 2010.

The Sri Lankan government has also signed a Memorandum of Understanding in October 2010 with the Financial Intelligence Unit (FIU) of Bangladesh to share financial information to facilitate the investigation and prosecution of persons suspected of money laundering and terrorist financing.

Sri Lanka has already signed MOUs with the Philippines, Nepal, Cambodia, Malaysia, Afghanistan, South Korea, and Indonesia, according to the State Department Country Terrorism report.

The Sri Lankan government meanwhile is taking steps to prevent reemergence of terrorism and counter radicalization and violent extremism.

"In order to address lingering resentment in areas that were formerly held by LTTE combatants, the Sri Lankan government was working to restore civil administration, resettle Internally Displaced Persons, provide immediate infrastructure development, encourage private sector participation, and promote the development of industries," the report said.

Access the full report here.

நன்றி நுணா. தனியாக கீழே ஒரு பகுதியில் சொல்லியுள்ளார்கள்.

In early 2009, Sri Lankan forces recaptured the LTTE’s key strongholds and killed LTTE’s

second in command. As a result, the Sri Lankan government declared military victory over

LTTE in May 2009. In 2010, LTTE members reportedly fled Sri Lanka and have since

attempted to reorganize in India.

http://www.state.gov/documents/organization/170479.pdf

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா. தனியாக கீழே ஒரு பகுதியில் சொல்லியுள்ளார்கள்.

In early 2009, Sri Lankan forces recaptured the LTTE’s key strongholds and killed LTTE’s

second in command. As a result, the Sri Lankan government declared military victory over

LTTE in May 2009. In 2010, LTTE members reportedly fled Sri Lanka and have since

attempted to reorganize in India.

http://www.state.gov...tion/170479.pdf

அப்ப யாராம் first in command FIC ?அவர் உயிருடன் இருக்கின்றாரா? :wub: :wub: :wub:

அப்ப யாராம் first in command FIC ?அவர் உயிருடன் இருக்கின்றாரா? :wub: :wub: :wub:

சிங்களவன் காட்டின படத்த அமெரிக்கன் நம்பேல்ல போல கிடக்கிது...

... இச்செய்தி எம்மில் பலரை குளிரச் செய்திருக்கும் ... விசிலடிக்கவும் செய்யும் ... மீண்டும் வெட்டப் போகின்றோம், விழுத்தப் போகின்றோம் என்று ...

... ஆனால் மீண்டும் ஒருதரம் சிங்களவன் நிரூபித்து விட்டான் ... தான் புத்திசாலி என்பதை!! ... இங்கு நம்மவர் பிரதமர், அமைச்சர்வாழ் பதவிக்காக அடிபட்டுக் கொண்டிருக்கையில் ..

... சிங்களவன் சொல்ல வேண்டிய செய்தியை, சொல்ல வேண்டிய இடயத்திற்கு, சொல்ல வேண்டிய விதமாக சொல்லி இருக்கிறான்!!! ... வெற்றியும் பெற்று விட்டான்!!!

... புலமெங்கும் இன்றும் முகமூடிகளுடன் புகுந்திருக்கும் மிக நல்லவர்கள் ... எமக்காக ஆயுதம் தொடர்ந்து வாங்கத்தான் போகிறார்கள்!!!!!

.... ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன், இங்கு சிலரால் ஒரு மக்கள் சந்திப்பு நடத்தப்பட்டதாம். சந்திப்பை நடத்தியோரில் முதலாவனவர் எழுந்து ... எமது ஆயுதப் போராட்டம் முற்றுமுழுவதாக நிறுத்தப்பட்டாயிற்று, இனி ஆயுதம் ஏந்தி போராட முடியாது, நாமும் விரும்பவில்லை. எம் போராட்டங்கள் இனி சர்வதேசம் ஏற்கும் ஜனநாயக வடிவிலாகவே இருக்கும், ... என கூற தொடங்க, அங்கு வந்திருந்த முன்னாள் போராளிகளாம், அதில் ஒன்று எழுந்து ... உனக்கு யார் ஆயுதப்போராட்டம் முடிவடைந்தது என்று கூற அதிகாரம் தந்தது? நீ, ஆயுதம் தூக்கி போராடினாயா? ... நாங்கள் இருக்கிறோம்!!!!!!! ... என்று முழங்க, பல கை தட்டுக்களாம், விசிலடிப்புக்களாம்!!!! ... அங்கு போய் வந்தவர் சொன்னார் ... புலத்தில் முன்னால் போராளிகள் எனும் பெயரில், சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்பட ஒரு கும்பல்!! அங்குள்ள சனத்துக்கு விடிவென்பது இனி இல்லை .... என்று!!! ...

.... இன்று தலைமைச்செயலகம், அனைத்துலக செயலகம் என்றெல்லாம் போட்டிக்கு போட்டியாக களமிறங்கும் கும்பல்களில் ஊடுருவியிருக்கும் பெரியவர் கேபியின் கையாட்களும், சிங்கள புலனாய்வாளர்களும் ... ஆயுதங்கள் தொடர்ச்சியாக வாங்கத்தான் போகிறார்கள்!!!!!!!!!!!!!!!!! .... சாபம்!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் காட்டின படத்த அமெரிக்கன் நம்பேல்ல போல கிடக்கிது...

:lol: :lol: :rolleyes:

அமெரிக்கா தடையை நீக்குவதற்கு அரசியல் ரீதியாக இன்னும் காலம் கனியவில்லை. அவர்கள் தடையை நீக்க 'ஆயுதம் சேர்க்கிறார்கள்' என்ற ஒரு பொய்யான கதையையும் சோடித்திருக்கலாம். அதற்கு சிங்களத்தின் 'கதையை' பாவித்திருக்கலாம் ( இந்தியாவில் புலிகள் பலம் பெறுகிறார்கள் என்றால் ஏன் டெல்லி மௌனம் காக்கின்றது? ). அதன் மூலம் தன்மேல் கோபம் கொண்டுள்ள சிங்களத்தை கொஞ்சம் சாந்தப்படுத்தலாம்.

ஆனால் எம்மை பொறுத்தவரையில் அமெரிக்கா அடுத்தமாதம் இரண்டு காரியத்தை செய்தால் அதுவே வெற்றி, நாம் அதை நோக்கி நகரவேண்டும்:

1. ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கை பற்றிய விவாதத்திற்கு ஆதரவு தருதல்

2. காங்கிரஸ் ஊடாக பொருளாதார தடையை விதித்தல்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

... இச்செய்தி எம்மில் பலரை குளிரச் செய்திருக்கும் ... விசிலடிக்கவும் செய்யும் ... மீண்டும் வெட்டப் போகின்றோம், விழுத்தப் போகின்றோம் என்று ...

... புலமெங்கும் இன்றும் முகமூடிகளுடன் புகுந்திருக்கும் மிக நல்லவர்கள் ... எமக்காக ஆயுதம் தொடர்ந்து வாங்கத்தான் போகிறார்கள்!!!!!

....

புலத்து சனம் விழிப்பாக இருக்கு எந்த கொப்பனுக்கும் காசு கொடுக்காது...அப்பவே காசு கொடுக்க எவ்வளவு கஷ்டப்பதுகள்..இப்ப ஒரு பெரிய சீன் ( அடிபாடுகள்) இல்லாமல்காசு கொடுக்க மாட்டினம்...அப்ப காசு வாங்கின கொம்பன் கே.பி கோஸ்டி என்ன செய்தது என்று சனத்துக்கு இப்ப நல்லாய் விளங்கியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

... இச்செய்தி எம்மில் பலரை குளிரச் செய்திருக்கும் ... விசிலடிக்கவும் செய்யும் ... மீண்டும் வெட்டப் போகின்றோம், விழுத்தப் போகின்றோம் என்று ...

... ஆனால் மீண்டும் ஒருதரம் சிங்களவன் நிரூபித்து விட்டான் ... தான் புத்திசாலி என்பதை!! ... இங்கு நம்மவர் பிரதமர், அமைச்சர்வாழ் பதவிக்காக அடிபட்டுக் கொண்டிருக்கையில் ..

... சிங்களவன் சொல்ல வேண்டிய செய்தியை, சொல்ல வேண்டிய இடயத்திற்கு, சொல்ல வேண்டிய விதமாக சொல்லி இருக்கிறான்!!! ... வெற்றியும் பெற்று விட்டான்!!!

... புலமெங்கும் இன்றும் முகமூடிகளுடன் புகுந்திருக்கும் மிக நல்லவர்கள் ... எமக்காக ஆயுதம் தொடர்ந்து வாங்கத்தான் போகிறார்கள்!!!!!

தமிழினத்தினது ஆயுதபலம் சிதைக்கப்பட்டு அனாதரவாக நிற்கும் நிலையில் புலத்திலே புதிதாக முளைவிடும், முளைவிட்டுள்ள குழுக்களது செயற்பாடுகள் தொடர்பில் மிக விழிப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். நான் தலைவரிட்டை இருந்து வந்தனான் என்றும், நான் போராளியாக இருந்தனான் என்றும், என்னை 2008 இலேயே அனுப்பினவை நான் இஞ்சை என்ன நடக்குதென்று பார்த்துக் கொண்டு திரிஞ்சனான் நடவடிக்கை எடுக்கிறதுக்கென்றும் எனப் பல கதைகளோடு திரிகின்றவர்கள் தொடர்பில் உண்மையில் அவதானமும் ஆய்வுநிலைச் செயற்பாடும் தேவை. எதிர்வரும் மாவீரர் தினத்தைக்கூட சிங்களத்தை முந்திக் கொண்டு சிங்களம் செய்ய முனைவதை சில தமிழ்க் குழுக்கள் செய்ய முனைவதை அவதானிக்கும் போதே முகமூடிகளை இனங்கான முடிகிறது. ஆனால் இவற்றை எதிர்கொள்ளும் விதமாத் தமிழினம் விழிப்பாக இருப்பது ஒன்றே இதுவரை தம்முயிர்களை ஈகம் செய்தோருக்குச் செய்யும் கைமாறக அமையும். இந்த ஈகத்தின் மூலமே தமிழினம் ஒன்று திரண்டு ஒரு திரட்சிநிலையை அடைந்ததோடு ஒரு தேசியமாக நிமிர்ந்தது. இதைச் சிதைக்கும் விதமாகச் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலோடு உலாவுவோரை மக்கள் இனம் காண வேண்டியதோடு தமிழ்த் தேசியத்தை காத்திடத் தொடர்ந்தும் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

அமெரிக்காவின் பொய் பேசும் இராஜதந்திரம் மீதும் படுதோல்வியில் முடியுமா?

ஏற்கனவே இந்தியர்கள் அமெரிக்காவை ஏமாற்றி ஈழத்தில் ஒருசில மாதங்களில் 50,000 க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்று குவிக்க துணை போனார்கள். மனிதாபிமானம், ஜனநாயகம் பேசும் அமெரிக்கர்கள் ஏமாந்து மண்ணைக் கௌவினார். இனப்படுகொலைக்கு மறைமுக துணைபோனவர்கள் என்ற பழியையும் பெற்றுக்கொண்டனர்.

... நாங்கள் காசு கொடுக்கிறோமோ? இல்லையோ? , சிங்களவன் இந்த முகமூடிகளை கொண்டு ஆயுதம் வாங்கிக் கொண்டேதான் இருப்பான்!!!! இல்லை ஆயுதம் வாங்க முயற்சிக்கிறார்கள் என்ற செய்தியையாவது மேற்குலகிற்கு இவர்கள் மூலம் தெரியப்படுத்துவான்?????

... இங்கு இப்போ நாலு மண்டைக்குள் சரக்கிலாததுகள் சேர்ந்து .... தலைமைச் செயலகமாம்!!!!!!!!!???????????? ... இப்போ இவர்கள் தாம் வெட்டப் போகிறோம், விழுத்தப் போகிறோம் என்று வானவேடிக்கைகளுடன் தெருக்களிலாம்!!! ... நாம் கணக்கு காட்டுவோம் என்ற ஓர் கோசத்துடன்!!!! ... இவர்களின் பின்னுக்கு யார் இருக்கிறார்கள்? எங்கிருந்து செயற்படுகிறார்கள்? ... மலேசியாவில்தான் தலைமைச்செயலகம் அமைந்துள்ளதாம் ... முன்பும் ஒருவர் பக்கத்தில் தாய்லாந்தில் இருந்து வானவேடிக்கை காட்டி, மலேசியாவில்தான் சரணாகதி அடைந்தவர்!!!!

... நாம் ஏமாந்தது போதும்!!!!!!

Edited by Nellaiyan

1972 ஆம் ஆண்டும் ஆயுத போராட்டம் தொடங்கிய உலக அரசியல் வேறு, இன்றைய நிலை வேறு. இதுவரை மாவீரர்கள், மக்கள் உட்பட்ட தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் என எமதினம் கொடுத்த விலை அதிகம். இன்றைய உலக அரசியலில் ஆயுதப்போராட்டம் இல்லாமலேயே தமிழீழம் வென்றெடுக்கப்படலாம். எமக்கு முன்னால் உள்ள அந்த வழிகளை சரியாகப்பயன்படுத்தினால் அடுத்த தலைமுறை வாழும், கனவுகள் பலிக்கும். சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

... நாங்கள் காசு கொடுக்கிறோமோ? இல்லையோ? , சிங்களவன் இந்த முகமூடிகளை கொண்டு ஆயுதம் வாங்கிக் கொண்டேதான் இருப்பான்!!!! இல்லை ஆயுதம் வாங்க முயற்சிக்கிறார்கள் என்ற செய்தியையாவது மேற்குலகிற்கு இவர்கள் மூலம் தெரியப்படுத்துவான்?????

.. இவர்களின் பின்னுக்கு யார் இருக்கிறார்கள்? எங்கிருந்து செயற்படுகிறார்கள்? ... மலேசியாவில்தான் தலைமைச்செயலகம் அமைந்துள்ளதாம் ... முன்பும் ஒருவர் பக்கத்தில் தாய்லாந்தில் இருந்து வானவேடிக்கை காட்டி, மலேசியாவில்தான் சரணாகதி அடைந்தவர்!!!!

... நாம் ஏமாந்தது போதும்!!!!!!

மெய்நிலையை பதிந்துள்ளீர்கள் நெல்லையன்.

1972 ஆம் ஆண்டும் ஆயுத போராட்டம் தொடங்கிய உலக அரசியல் வேறு, இன்றைய நிலை வேறு. இதுவரை மாவீரர்கள், மக்கள் உட்பட்ட தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் என எமதினம் கொடுத்த விலை அதிகம். இன்றைய உலக அரசியலில் ஆயுதப்போராட்டம் இல்லாமலேயே தமிழீழம் வென்றெடுக்கப்படலாம். எமக்கு முன்னால் உள்ள அந்த வழிகளை சரியாகப்பயன்படுத்தினால் அடுத்த தலைமுறை வாழும், கனவுகள் பலிக்கும். சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம்.

அகூதா அவர்களே நீங்கள் கூறுவது ஏற்புடையதாயினும் , அதனை செய்ய மக்கள் ஒன்றிணைய வேண்டுமே. அதற்கானதொரு இசைவாக மாவீரரது நாள் இருந்தது. ஆனால் வருகின்ற அறிக்கைப் போர்களைப் பார்க்கும்போது சாத்தியப்படுமா என்ற கேள்வியல்லவா எழுகின்றது. எனவே மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் முன்னெடுப்பதோடு சிறிலங்காவினது வேலைத்திட்டத்தை முன்னெடுக் முனைவோரை இனங்கண்டு முகத்திரையைக் கிழிப்பதூடாகவே எதிர்காலச் சந்ததியாவது வாழ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

Edited by nochchi

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னராக இதுவரை நாம் கண்ட ஒரு சில வெற்றிகளை பாருங்கள். முக்கியமாக போர்குற்ற நடவடிக்கைகளை. அதற்கு பின்னால் யார் இருக்கின்றார்கள்? ஒரு குறிப்பிட்ட அளவு மக்களே ஒழிய பாரிய தொகையில் இல்லை. பல விடயங்கள் காதும் காதும் வைத்தது போல செய்யப்படுகின்றது. மேலும் பரப்புரைகளையும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ள மக்களே முன்னெடுக்கின்றனர். அதுவே இன்று சிங்களத்திற்கு சவாலாக மாறியுள்ளது.

இதை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பொழுது ஒட்டு மொத்த இனமும் இணையும், பெருமை கொள்ளும், விடுதலை கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சனநாயக மிரட்டல்களெல்லாம் வெறும் பம்மாத்துகள்தான் என்பதை சிங்கள அமெரிக்க கூட்டு விமானப்படை ஒத்திகை நிரூபித்திருக்கிறதுபீலங்கையைப் பொறுத்தவரை இந்தியா கைக்கொள்ளும் வழிமுறைக்கும் அமெரிக்கா கைக்கொள்ளும் வழிமுறைக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. இருவருமே சிங்களம் சீனாவிடம் முற்றாக போய்ச் சேர்ந்துவிடக்கூடாதென்ற நினைப்போடுதான் காய் நகர்த்துகிறார்கள். ஆனால் சிங்களத்தின் கணக்கு வேறு.

அது அமெரிக்கா இந்தியாவுக்கு வாலையும் சீனாவுக்குத் தலையையும் காட்டும். முடிந்தபோது, "டமிலர்களைக் கொண்டும்" நாடமாகடும். எம் கையாலேயே எம் கண்ணைக் குத்தும். வழக்கம்போல இறுதியில் ஏமாறப்போவது நாம் மட்டும்தான் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னராக இதுவரை நாம் கண்ட ஒரு சில வெற்றிகளை பாருங்கள். முக்கியமாக போர்குற்ற நடவடிக்கைகளை. அதற்கு பின்னால் யார் இருக்கின்றார்கள்? ஒரு குறிப்பிட்ட அளவு மக்களே ஒழிய பாரிய தொகையில் இல்லை. பல விடயங்கள் காதும் காதும் வைத்தது போல செய்யப்படுகின்றது. மேலும் பரப்புரைகளையும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ள மக்களே முன்னெடுக்கின்றனர். அதுவே இன்று சிங்களத்திற்கு சவாலாக மாறியுள்ளது.

இதை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பொழுது ஒட்டு மொத்த இனமும் இணையும், பெருமை கொள்ளும், விடுதலை கிடைக்கும்.

.. தற்போது மேலை நாடுகளில் வெற்றிகரமாக சர்வதேச நியதிகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை முடிபிற்கு கொண்டு வரவும், மீண்டும் ஓர் ஆயுத மாயைக்குள் மக்களை புகுத்தி நீண்ட காலத்துக்கு சர்வதேசத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருக்கவுமே ... தற்போது சிங்கள பின்னணியில் .... தலைமைச்செயலகம் ... என்ற குப்பைகள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

இக்குப்பைகளுக்கு பின்னணியில் ரி.ஆர்.ஓ றெஜி, மலேசியாவில் இருக்கும் சுபன் எனும் சுகி, இன்னும் சிலர் செயற்படுகின்றனர் என சொல்கிறார்கள்.

... தாம் தலைமையுடன் இறுதிவரை இருந்தவர்கள், நிதி மோசடியற்ற கட்டமைப்பை எம்மால் ஏற்படுத்த முடியும், ... போன்ற வானவேடிக்கைகளுடன் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். ... ஏறக்குறைய மே18 முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின் கேபி இப்படியான சில முழக்கங்களுடன் தான் களமிறக்கப்பட்டவர். பலர் அதில் பலியானோம். கேபின் திருவிளையாடல்களுக்கும் பல முன்னாள் போராளிகள்தான் பயன்படுத்தப்பட்டனர். இன்றும் இதிலும் முன்னாள் போராளிகள் இறக்கப்படுகின்றனர்.

.... தலைமைச்செயலகம் ... எனும் பெயரில் மிகப்பெரிய பொறி புலம்பெயர் தமிழர்களை நோக்கி விரிக்கப்படுகிறது. பொறிவோமா? இல்லை கடந்த காலங்கள் போல் தப்புவோமா????

Edited by Nellaiyan

எட நாசமாபோனவங்களே போதும் ஒரு தீர்வை வாங்கி தாங்கோ என்டா மீண்டும் ,மீண்டும் எங்கோயோ கொண்டு போறியள். இதுக்கு எல்லையே இல்லையா?

அவன் தலைவன் தான் இருந்தால் தான் ஒரு தீர்வு கொடுக்க மாட்டினம் சரி இதோடு ஒதுங்குவம் ஒரு தீர்வாவது

உலகம் பெற்று கொடுகட்டும் என்று ஆயுத மவுனம் வந்தா பிறகும்

திரும்பவும் அந்த கோட்டுக்கே உலக சமூகம் கூட்டி கொன்டு போகுது.

யாரிடம் சொல்வது,யாரை நோவது. தமிழனே நீ பாவம் பலஸ்தீனர்கள் போல் அலைய வேண்டியதுதான்.

புலிகளால்தான் எல்லாவற்றுக்கும் தடை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பாடம் நடத்தப்படுகிறது..!

புலி என்பது சும்மா ஒரு சாட்டுக்காகவே..! உண்மையில் எதையும் அவன் தர முயற்சிக்கப்போவதும் இல்லை..! மேற்குலகம் போதிக்கும் ஜனநாயகத்தாலும் ஏதும் வரப்போவதில்லை..! எல்லோரது முகமூடிகளையும் கிழிப்பதற்கே இந்த இரண்டு வருடங்கள் பயன்பட்டிருக்கின்றன..! :rolleyes:

இனிமேல் இவர்களுக்குள் கொழுவிவிட்டு கூத்துப் பார்க்க வேண்டியதுதான்..! அடிபாட்டின் முடிவில் ஒரு தீர்வு கிடைக்கும்..!! :wub:

சிங்கள, அயலக பயங்கரவாதிகள் தம்மை போர்க்குற்றத்தில் இருந்து பாதுகாக்க கட்டவிழ்த்துவிடும் இன்னொரு முயற்சி.

இதற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போகும் அமெரிக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.