Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதவி தன் போட் காரை அந்த பசன் டிசைனிங் நிறுவனத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு தனது வகுப்பை நோக்கிப் போனாள்...அது ஒரு தனியார் நிறுவனம் அதில் படிப்பது என்றாலே அதிக காசு செலவாகும். மாதவி அந் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதமாக நவீன ரக ஆடை வடிவமைப்பு,மேக்கப் போடுதல்,தலை முடியை எப்படி எல்லாம் ஸ்டைலாக்கலாம் போன்றவற்றை படித்து வருகிறாள்.

இவள் இப்படி எல்லாம் வந்து படிக்கிறதாலே அவளை வசதியான வீட்டு செல்லப் பிள்ளை என நினைக்க வேண்டாம்.அவளுக்கு வேலையும் இல்லை, காதலனும் இல்லை,இப்ப காதலிக்கிற வயசும் இல்லை அவளுக்கு நாற்பது வயது[நாற்பது வயதில் காதலிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.] கல்யாணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கணவன் ஒரு வியாபாரி,வியாபாரத்திற்காக ஊர்,ஊராக சுற்றுபவர்... தான் வீட்டில் தனியாக இருக்கிறேன் என்பதற்காகவும் குழந்தைகளை தனியாக பராமரிக்க முடியாது என்பதாலும் கணவனை நச்சரித்து ஊரில் இருந்து தனது தங்கச்சியை எடுப்பித்து தன்னோடு வைத்திருந்தார்.தங்கச்சி வீட்டில இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வதால் மாதவியால் சொப்பிங்,வகுப்பு,நண்பிகளது வீடு என ஊர் சுற்ற முடிகிறது...வீட்டு வேலைகள் பெரும்பாலும்[கணவரது உடுப்பை அயன் பண்ணுவது கூட]தங்கச்சி தான் செய்கிறார். என்னடா இவள் சொல்ல வாறள் என்பவர்களுக்கு கொஞ்சம் பொருங்கள் வாறன் இனி மேல் தான் இருக்கு கதை.

அன்றும் அப்படி தான் வகுப்பு முடிந்து வீட்டை போய் தன்ட காரைப் பாக் பண்ணிப் போட்டு உள்ளுக்கே டயர்டாப் போனாள்...பிள்ளைகள் மூவரும் கீழ் உள்ள தொலைக்காட்சியில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.சித்தி எங்கேயடா எனக் கேட்டால் தங்களுக்கு தெரியாது என்டாங்கள். எங்கேயடா போய் விட்டால் என யோசித்துக் கொண்டு மேலே தன் அறைக்கு உடுப்பு மாற்றப் போனால் அங்கே மாதவி காதலித்து திருமணம் செய்த அன்புக் கணவனும்,மாதவியின் அன்புத் தங்கச்சியும் தங்களை மறந்து ஒன்றாக ஒரே கட்டிலில் அந்த பட்டப் பகலில் இருந்தார்கள். மாதவிக்கு எப்படி இருந்திருக்கும்...வீட்டை ஒரே ஆர்ப்பாட்டமும் சண்டையும் தான். தங்கச்சியை அடி,அடி என அடித்து உடனே வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டுடா. தங்கச்சியை அடித்தவ அவவால் அவவின் புருசனை அடிக்க முடியல்ல உடனே தன்ட தலை முடியை அறம்,புறமாக வெட்டினா அது தான் மாதவி தன் காதல் கணவனுக்கு கொடுக்கும் தண்டனை என நினைத்தா போல உடனே கணவன் "என்னை மன்னித்து விடு மாதவி" என அவவின்ட காலைப் பிடித்து அழுதார்...தங்கச்சியை வீட்டை விட்டு துரத்திய மாதவியால் கணவனை துரத்த முடியல்ல...கொஞ்ச நாள் வரைக்கும் கணவனோடு கடும் கோபமாய் இருந்த மாதவி கணவன் அவவையும்,பிள்ளைகளையும் இந்தியாவிற்கும்,மலேசியாவிற்கும்,சிங்கப்பூருக்கும் கூட்டிட்டு போய் வந்ததும் அடங்கிட்டா...சுற்றுலா போய் வந்த மாதவி தன்ட கணவன் நல்லவர் தன்ட தங்கச்சி சிறுக்கி தான் அவரை மயக்கி எடுத்திட்டார் என சொல்கிறார்.

என்னால் ஒரு கேள்விக்கு மட்டும் விடை காண முடியல்ல... இப்படியான தப்புகள் நடப்பதற்கு யார் காரணம்?...

1)மாதவியின் கணவனா?[பெண்கள் என்டால் எப்படியும் சமாளிக்கலாம் என்ட இப்படியான ஆண்கள் எப்படிப்பட்ட தப்பையும் செய்வார்கள்]

2)மாதவியா?[சொந்த தங்கச்சியை வீட்டில் வேலைக்காரியாக பாவிக்கிற,தன்ட தங்கச்சிக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை மறந்தது இவர் செய்த தப்பு]

3)மாதவியின் தங்கச்சியா?[ஊரில் கஸ்டப்பட்டுக் கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து நல்ல சாப்பாடு,துணிமணி கொடுத்தால் அதையும் மீறி சொந்த தமக்கைக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது]

  • Replies 109
  • Views 27.3k
  • Created
  • Last Reply

முதலில் தப்பு பண்ணியது மனைவிதான்.......என்னதான் படிக்கப்போனாலும் வீட்டில் இருக்கும் நேரமாவது குழந்தைகள் கணவனை கவனித்திருக்கலாம் இதுக்காக ஊரில் இருந்து அதுவும் கல்யாணம் ஆகாதா தங்கச்சியை வீட்டில் எடுத்து வேலைக்கு வைத்திருந்தது இவாவோட தப்புதான்....

இரண்டாவது தங்கைமேல்தான் பிழை... தங்கச்சி சரியானவாக இருந்தால் அக்காவின் பிழைகளை சுட்டிகாட்டி திரித்தியிருக்கலாம்... ... அவாவும் தனக்காக நல்ல வாழ்க்கை தேடியிருக்கலாம்.. அத்தான்காரர் தப்பு பண்ணவே வந்திருந்தாலும் பளார் என்று கன்னத்திலை அடி போட்டிருந்தால் அத்தான்காரர் இன்னும் ஒரு தடவை தப்பு பண்ண நினைசுக்கமாட்டார்.

மூன்றாவதுதான் கணவனில் பிழை... கேவலம் ஒரு செக்ஸுக்காக காதலித்து மணந்தவளுக்கு துரோகம் பண்ணலாமா? சொந்த மனைவுக்கு துரோகம் பண்ணுறவன் எல்லாம் நாயை விட கேவலமானவன்... உண்மையான கண்வன் என்றால் மனைவியை திரித்தியிருக்கலாம்... அதுதான் ஆண்மைக்கு அழகு...

பின்குறிப்பு.... நான் என்றால் திரும்பவும் இப்படியான ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கவே மாட்டேன்... தப்பு பண்ணியது கணவனாக இருக்கும்போது ஏன் என் முடியை வெட்டிக்கொள்ளவேண்டும்... சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Ayoooooooooo

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே

சுடுதண்ணிய கீழ ஊத்தினால் எந்த ஆணும் தப்பு செய்ய மாட்டார்களா சுஜி

அது எப்படி ஒன்னுமே புரியவில்லை?

Edited by கிளியவன்

இன்னும் ஒரு தடவை தப்பும் பண்ணும்போது ஆவது மனசாட்சி கேள்வி கேட்காதா என்ன>?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால்.. அக்கா தங்கச்சி இருவருமே தப்பானவர்களாக தெரிகிறார்கள். அக்காக்கு உழைக்க கள்ளம்... கணவனின் வசதியில் வாழ விருப்பம். தங்கச்சிக்கும்.. அக்கா புருசன்ர விசாவில.. வசதியில வாழ விருப்பம். உடலைக் காட்டி.. ஒருவர் மனைவியாக.. அந்த ஆணின் பலவீனத்தை தன் பலமாக்கி இருப்பார். இன்னொருவர் மனைவி ஆகாமலே அதைச் செய்திருப்பார். அந்த ஆணும் சூழ்நிலையை பாவித்திருப்பார். இப்படியான பெண்களும் ஆண்களும் இந்த உலகில் தாராளமா ஜீவிக்கினம். அவைக்கு தான் சுடுதண்ணிய கொதிக்க வைச்சு ஊத்தனும். அப்ப தான் வேறு ஆண்களை தேடி போக மாட்டினம்..! தனக்கென்று ஒருவன் வரும் வரைக்குமாவது காத்திருப்பினம். இல்ல சுய ஒழுக்கம் என்ன என்பது பற்றிக் கற்றுக் கொள்ளுவினம்.

இப்படியான பழக்க வழக்கங்கள்.. படிப்பு மட்டம் குறைந்த குடும்பங்களில் அதிகம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையின்படி, இப்படியான தப்புகள் நடப்பதற்கு பெண்கள்தான் காரணம் என்று சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும்..!? :unsure: அப்டி இருக்கும்போது ஆண்களைத் திட்டலாமா? :icon_mrgreen:

இப்படியான பழக்க வழக்கங்கள்.. படிப்பு மட்டம் குறைந்த குடும்பங்களில் அதிகம். :):icon_idea:

இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை பிறதர்... ஒரு சிலதை எழுதலாம் தேவையில்லாதா பிரச்சனைகள் வரும்... படித்தவர்களே அமைதியாக இருந்து தப்பு பண்ணுகிறார்கள்... அவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை... படிக்காதவர்களின் தப்புகள் உடனுக்குடன் வெளியே வருவதால் படித்தவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பும் ஒரு முறை எழுதியுள்ளேன்

எனது மனைவியின் தங்கையை பிரான்சுக்கு கூப்பிட கேட்டதும் என் மனைவியின் முகம் மாறிய விதம் இருக்கே

இப்போ நினைத்தாலும் ............????

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும்..!? :unsure: அப்டி இருக்கும்போது ஆண்களைத் திட்டலாமா? :icon_mrgreen:

:o :o :o

Edited by விசுகு

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும்..!? :unsure: அப்டி இருக்கும்போது ஆண்களைத் திட்டலாமா? :icon_mrgreen:

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கஷ்டப்படப் போகின்றீர்கள் :D :D :D :D

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை பிறதர்... ஒரு சிலதை எழுதலாம் தேவையில்லாதா பிரச்சனைகள் வரும்... படித்தவர்களே அமைதியாக இருந்து தப்பு பண்ணுகிறார்கள்... அவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை... படிக்காதவர்களின் தப்புகள் உடனுக்குடன் வெளியே வருவதால் படித்தவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை...

இப்படியான சம்பவங்கள் படிப்பு மட்டம் குறைந்த இடங்களில் அதிகம் நடக்கிறது என்று தான் எழுதி இருக்கிறேனே தவிர படித்தவர்கள் மத்தியில் நடப்பதே இல்லை என்று சொல்லவில்லை.

சுய மனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத கடைப்பிடிக்க விரும்பாத ஆண்கள் பெண்கள் இருக்கும் வரை.. இவை வழக்கழியப் போவதில்லை. எழுத எழுத தவறுகளும் நடந்து கொண்டே தான் இருக்கும். :):icon_idea:

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

ஊசிகளே வீதி வீதியா அலையும் போது ஏன் நூல்கள் வீடு வீடா போக வேண்டி இருக்குது..???! ஊசி பத்திரமா இருந்தா நூலும் பத்திரமா இருக்கும்..! :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாவதுதான் கணவனில் பிழை... கேவலம் ஒரு செக்ஸுக்காக காதலித்து மணந்தவளுக்கு துரோகம் பண்ணலாமா?

ஆண்களின் மனசு வஞ்சகம் இல்லாதது. எந்தப் பெண்ணையும் தன் மனைவி போல் நினைக்கும் ரொம்பப் பரந்த இயல்பு கொண்டது. :lol:

இங்கு நடந்த தப்புக்கு மூவருமே பொறுப்பாளிகள் தான். வியாபாரத்திற்காக ஊர்,ஊராகத் திரியும் ஒருவரைத் திருமணம் செய்யும் போதும், மூன்று பிள்ளைகளைப் பெறும் வரையும் அவா என்ன கனவா கண்டவா? குடும்பம் என்றால் பொறுப்பில்லாமல்லா இருக்குமா. மற்றது அவவின் துரோகம் செய்த சகோதரியார். வந்தவா வந்த வேலையைச் செய்ய வேண்டியது தானே, அதை விட்டிட்டு அத்தான் காரனனோடு.......அடுத்தது அவர் ஒருத்தர் காதல் திருமணம், மூன்று பிள்ளைகளையும் பெத்துப் போட்டு அதுவும் பத்தாது என்று மச்சாளோடும்....

  • கருத்துக்கள உறவுகள்

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...

எங்கடை சுஜிக்குட்டியா இது ? :lol: நம்ப முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தப்பு பண்ணியது மனைவிதான்.......என்னதான் படிக்கப்போனாலும் வீட்டில் இருக்கும் நேரமாவது குழந்தைகள் கணவனை கவனித்திருக்கலாம் இதுக்காக ஊரில் இருந்து அதுவும் கல்யாணம் ஆகாதா தங்கச்சியை வீட்டில் எடுத்து வேலைக்கு வைத்திருந்தது இவாவோட தப்புதான்....

இரண்டாவது தங்கைமேல்தான் பிழை... தங்கச்சி சரியானவாக இருந்தால் அக்காவின் பிழைகளை சுட்டிகாட்டி திரித்தியிருக்கலாம்... ... அவாவும் தனக்காக நல்ல வாழ்க்கை தேடியிருக்கலாம்.. அத்தான்காரர் தப்பு பண்ணவே வந்திருந்தாலும் பளார் என்று கன்னத்திலை அடி போட்டிருந்தால் அத்தான்காரர் இன்னும் ஒரு தடவை தப்பு பண்ண நினைசுக்கமாட்டார்.

மூன்றாவதுதான் கணவனில் பிழை... கேவலம் ஒரு செக்ஸுக்காக காதலித்து மணந்தவளுக்கு துரோகம் பண்ணலாமா? சொந்த மனைவுக்கு துரோகம் பண்ணுறவன் எல்லாம் நாயை விட கேவலமானவன்... உண்மையான கண்வன் என்றால் மனைவியை திரித்தியிருக்கலாம்... அதுதான் ஆண்மைக்கு அழகு...

பின்குறிப்பு.... நான் என்றால் திரும்பவும் இப்படியான ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கவே மாட்டேன்... தப்பு பண்ணியது கணவனாக இருக்கும்போது ஏன் என் முடியை வெட்டிக்கொள்ளவேண்டும்... சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே :icon_mrgreen:

சுஜி நீங்களாவது சுடு தண்ணீ தான் ஊத்துவீங்கள் என சொன்னீர்கள் நான் என்டால் ஆண் குறியை வெட்டி வேறு பெண்களோடு உறவு வைக்க முடியாமல் செய்வேன்...அதே நேரத்தில் அந்த தமக்கையிலும்,தங்கச்சியிலும் பிழை இல்லாமல் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

:lol:

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே :icon_mrgreen:

ஏதோ மரவள்ளிக் கிழங்கு அவிக்க சுடுதண்ணி ஊத்தற மாதிரியல்லோ இருக்கு. :D

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால்.. அக்கா தங்கச்சி இருவருமே தப்பானவர்களாக தெரிகிறார்கள். அக்காக்கு உழைக்க கள்ளம்... கணவனின் வசதியில் வாழ விருப்பம். தங்கச்சிக்கும்.. அக்கா புருசன்ர விசாவில.. வசதியில வாழ விருப்பம். உடலைக் காட்டி.. ஒருவர் மனைவியாக.. அந்த ஆணின் பலவீனத்தை தன் பலமாக்கி இருப்பார். இன்னொருவர் மனைவி ஆகாமலே அதைச் செய்திருப்பார். அந்த ஆணும் சூழ்நிலையை பாவித்திருப்பார். இப்படியான பெண்களும் ஆண்களும் இந்த உலகில் தாராளமா ஜீவிக்கினம். அவைக்கு தான் சுடுதண்ணிய கொதிக்க வைச்சு ஊத்தனும். அப்ப தான் வேறு ஆண்களை தேடி போக மாட்டினம்..! தனக்கென்று ஒருவன் வரும் வரைக்குமாவது காத்திருப்பினம். இல்ல சுய ஒழுக்கம் என்ன என்பது பற்றிக் கற்றுக் கொள்ளுவினம்.

இப்படியான பழக்க வழக்கங்கள்.. படிப்பு மட்டம் குறைந்த குடும்பங்களில் அதிகம். :):icon_idea:

படிப்பறிவு குறைந்தவர்களை விட படிப்பறிவு கூடினவர்களுக்கு தான் தப்பை நசுக்கிடாமல் செய்து போட்டு தப்பிக்கும் வழி தெரியும் அத்தோடு ஸ்டேடஸ்,அது,இது கணவனோ,மனைவியோ ஒருவர் தப்பு விட்டாலும் மற்றவர் மறைத்து விடுவர் :)

சுஜி நீங்களாவது சுடு தண்ணீ தான் ஊத்துவீங்கள் என சொன்னீர்கள் நான் என்டால் ஆண் குறியை வெட்டி வேறு பெண்களோடு உறவு வைக்க முடியாமல் செய்வேன்...அதே நேரத்தில் அந்த தமக்கையிலும்,தங்கச்சியிலும் பிழை இல்லாமல் இல்லை

வெட்டிய பொருட்களுடன்............ 5 பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து....................

என்ன சமையல் குறிப்பா எழுதுகிறீர்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டிய பொருட்களுடன்............ 5 பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து....................

என்ன சமையல் குறிப்பா எழுதுகிறீர்கள். :lol:

நல்லாச் சொன்னீங்க. இவர்கள் பிரச்சனையை தங்கட மடியில கட்டி வைச்சுக் கொண்டு.. தீர்வை அடுத்தவன்ர மடியில தேடுற ஆக்கள் பாருங்கோ.. தப்பிலி. இவை (இங்கு கருத்தெழுதும் சில பெண்கள் போல) போல இமோசனலா எழுதும்.. ஆக்கள் திருந்தினாலே போதும்.. பாதிப் பெண்கள் உருப்பட்டிடுவாங்க..! :):D:icon_idea:

Edited by nedukkalapoovan

எங்கடை சுஜிக்குட்டியா இது ? :lol: நம்ப முடியவில்லை.

நான் போனவாரம்தான் வயதுக்கு வந்தனான் சாந்தி அக்கா... இதைச்சொல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக உங்களை தொடர்பு கொள்ளுகிறேன் லைனிலை கிடைக்கிறீர்கள் இல்லையே... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாச் சொன்னீங்க. இவர்கள் பிரச்சனையை தங்கட மடியில கட்டி வைச்சுக் கொண்டு.. தீர்வை அடுத்தவன்ர மடியில தேடுற ஆக்கள் பாருங்கோ.. தப்பிலி. இவை (இங்கு கருத்தெழுதும் சில பெண்கள் போல) போல இமோசனலா எழுதும்.. ஆக்கள் திருந்தினாலே போதும்.. பாதிப் பெண்கள் உருப்பட்டிடுவாங்க..! :):D:icon_idea:

எனக்கு என்ன பிரச்சனை?...இப்படியான ஆண்களை என்ன செய்ய சொல்கிறீர்கள் :D ...கட்டி அணைக்க சொல்கிறீர்களா :lol: ...திருத்திற விதமாக எதாவது செய்தால் திருந்துவார்கள் :icon_idea:

ஆண்களின் மனசு வஞ்சகம் இல்லாதது. எந்தப் பெண்ணையும் தன் மனைவி போல் நினைக்கும் ரொம்பப் பரந்த இயல்பு கொண்டது. :lol:

ஒன்று இருக்கிறதுபடியால்தான் ரொம்ப ஆட்டம் போடுகிறீர்கள்...இருக்கிறதுவை இல்லாமல் பண்ணிவிட்டால் எந்தப்பெண்ணை மட்டுமில்லை சொந்த மனைவிகிட்ட கூட நெருங்க முடியாது... <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.