Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போக இனி விசா தேவை

Featured Replies

...எல்லாவற்றையும் விட ராஜவன்னியன் நான் குறிப்பிட்டு சொன்னது இந்திய தேசியமும் அதனை ஏற்கமுடியா கோபத்தையும் தான். அது நிச்சயம் தமிழக உறவொன்றின் பார்வையில் மாறுபட்ட கருத்தை தரும் என்று நினைக்கவில்லை, நான் ஏதேனும் விதத்தில் உங்களின் மனதை; ஒரு தமிழக உறவின் மனதை காயப்படுத்தி இருந்தால் (இந்திய தேசிய பற்றின் பெயரால் அன்றி) மனப் பூர்வமாக மன்னிப்பை கேட்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

...எல்லாவற்றையும் விட ராஜவன்னியன் நான் குறிப்பிட்டு சொன்னது இந்திய தேசியமும் அதனை ஏற்கமுடியா கோபத்தையும் தான். அது நிச்சயம் தமிழக உறவொன்றின் பார்வையில் மாறுபட்ட கருத்தை தரும் என்று நினைக்கவில்லை, நான் ஏதேனும் விதத்தில் உங்களின் மனதை; ஒரு தமிழக உறவின் மனதை காயப்படுத்தி இருந்தால் (இந்திய தேசிய பற்றின் பெயரால் அன்றி) மனப் பூர்வமாக மன்னிப்பை கேட்கின்றேன்.

ச்சே..ச்சே..தவறாக எண்ணவில்லை நிழல்..மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை..அது தேவையும் இல்லை. நான் உறவாடிய ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையோர் எங்கள் பகுதியை தமிழகம், தமிழ்நாடு என்று கூறுவதில்லை.. இந்தியா அல்லது தென்னிந்தியா என்றே கூறுகின்றனர். ஆகவே மனதளவில் தொப்புள் கொடி என்றிருந்தாலும் அதை ஏன் போலி மூடிபோட்டு மறைக்கிறார்கள் என்ற பெரும் ஆதங்கமே..இன்றும் இரு பகுதி தமிழர்கள் அறிமுகமாகி பழக நேரிட்டாலும், முதலில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் பழகி, பின் ஒன்றாவதே கண்கூடு. என்று மனதளவில், உளமார தமிழர்கள் என்று இணையப் போகிறோமோ அன்றுதான் தமிழனுக்கு மீட்சி.

.

Edited by ராஜவன்னியன்

எனது நண்பர் குடும்பம் அண்மையில் தமிழகம் சென்று வந்தனர். 'சம்திங்' கொடுத்தே விசாவை டொராண்ரோவில் எடுத்தனர்.

தமது மூன்று பிள்ளைகளையும் ஒரு வருடம் தமிழகத்தில் விட்டு படிப்பிக்கும் எண்ணம் உண்டு. தமிழை, கலாச்சாரத்தை (இரண்டு பெண் பிள்ளைகள்) ஊட்ட அது ஒரு வழி என அவர்கள் திடமாக நம்புகிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும், ராஜவன்னியனுக்கும் இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது.

கெட்டிக்காரப் பிள்ளைகள்.

ச்சே..ச்சே..தவறாக எண்ணவில்லை நிழல்..மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை..அது தேவையும் இல்லை. நான் உறவாடிய ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையோர் எங்கள் பகுதியை தமிழகம், தமிழ்நாடு என்று கூறுவதில்லை.. இந்தியா அல்லது தென்னிந்தியா என்றே கூறுகின்றனர். ஆகவே மனதளவில் தொப்புள் கொடி என்றிருந்தாலும் அதை ஏன் போலி மூடிபோட்டு மறைக்கிறார்கள் என்ற பெரும் ஆதங்கமே..இன்றும் இரு பகுதி தமிழர்கள் அறிமுகமாகி பழக நேரிட்டாலும், முதலில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் பழகி, பின் ஒன்றாவதே கண்கூடு. என்று மனதளவில், உளமார தமிழர்கள் என்று இணையப் போகிறோமோ அன்றுதான் தமிழனுக்கு மீட்சி.

.

..இல்லை ராஜவன்னியன்... நாங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் அழுது குளறி எம் மக்களையும் தலைமையையும் காப்பாத்துங்கோ என்று அலறும் போது இந்த உலகத்தில் எவனும் எமக்காக ஒரு சொட்டு கண்ணீரைக் கூட சிந்தவில்லை; தமிழகம் தவிர. தமிழக மக்கள் மட்டுமே எமக்காக கண்ணீர் சிந்தினர். தமிழக உறவுகள் தம்மை தீக்குளித்தும் தம் இன பாசத்தையும் காட்டி மாண்ட சோகமும் நடந்ததும் எமக்காகத்தான்

.

இந்த அளப்பரிய உறவு/ உறவுகள் என்னால் கவலை கொள்ளுதல் ஆகாது. அத்துடன் நான் கேட்கும் இசை, நான் பார்க்கும் சினிமா, நான் வாசிக்கும் எழுத்தாள பிரம்மாக்கள் எல்லாம் தமிழகம் தந்ததுதான்;

இந்த பெரிய context இல் வைத்து பார்க்கும் போது மன்னிப்பு சிறு வார்த்தை

I feel bit emotional. தங்களுடன் இதுபற்றி அப்புறம் கதைக்கிறேனே..

நிழலிக்கும், ராஜவன்னியனுக்கும் இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது.

கெட்டிக்காரப் பிள்ளைகள்.

நாகரீகமாக இருவரும் உரையாடியமை அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த களத்துக்கும் சிறப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் உறவாடிய ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையோர் எங்கள் பகுதியை தமிழகம், தமிழ்நாடு என்று கூறுவதில்லை.. இந்தியா அல்லது தென்னிந்தியா என்றே கூறுகின்றனர். ஆகவே மனதளவில் தொப்புள் கொடி என்றிருந்தாலும் அதை ஏன் போலி மூடிபோட்டு மறைக்கிறார்கள் என்ற பெரும் ஆதங்கமே..இன்றும் இரு பகுதி தமிழர்கள் அறிமுகமாகி பழக நேரிட்டாலும், முதலில் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் பழகி, பின் ஒன்றாவதே கண்கூடு. என்று மனதளவில், உளமார தமிழர்கள் என்று இணையப் போகிறோமோ அன்றுதான் தமிழனுக்கு மீட்சி. இது உண்மைதான், அது ஒவ்வொருவரிலும் தங்கியிருக்கு, ஆனா இப்ப நல்ல மாற்றம் இருக்கு இரண்டு பகுதியிலும்

.

ராஐவன்னியன் - நீங்க சொல்வதும் என்னால் ஏற்று கொள்ள முடியாது, நேற்று நான் Perth Station இல் நிற்க தமிழ் பலமா கேட்டிச்சு என்னடா நின்று திரும்பி பார்த்தால் எல்லாம் தமிழ் நாட்டு இளைஞர்கள், உடனே நான் அவர்களுடன் போய் கதைக்க (சென்னை station அதிர்கிற மாதிரி இருக்கு என்றுதான் கதைக்க தொடங்கின்னான்), அவர்கள் எந்த வித தயக்கம் இன்றி நட்போடு கதைத்தார்கள், வந்து கொஞ்ச காலம், அப்ப அவர்கள் தமிழ் கடை ஒன்றை தேடிக்கொண்டிருந்தார்கள், அவர்களை எனக்கு தெரிந்த கடைவரை கொண்டு போய்விட்டு விட்டு வந்தனான்,

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா, நிழலியிடையே நிகழ்ந்த வாதம் சிறப்பாகவும் அதே நேரம் பழைய காயங்களைக் கிளறுவதாகவும் அமைந்தது..! :unsure:

நான் ஈழத்தில் / சிறீலங்காவில் எவ்வளவு காலம் வாழ்ந்தேனோ கிட்டத்தட்ட அதேயளவு காலம் தமிழகத்திலும் வாழ்ந்திருக்கிறேன்..! இன்று நான் ஓரளவு நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்குரிய கல்வித்தகுதியையும் (மிகக் குறைந்த செலவில்), சில வேலை அனுபவங்களையும் வழங்கியது தமிழகம்தான்..! அந்த வகையில் எக்காலமும் தமிழகத்துக்கு நன்றியுடையவனாக இருப்பேன்..! :(

கனடாவுக்கு வந்தது 2003 இல். இங்கு வந்து ஓரளவு கால்பதித்து பின் தமிழகத்துக்கு 2007 இல் சென்று வந்தேன்..! அப்போது விசா வழங்குவதற்கு முன் இலங்கைக்கு எனது தரவுகளை அனுப்பி விசாரித்துவிட்டே வழங்கினார்கள்..! :o நான் அப்போது இலங்கைக் குடிமகனாக இருந்ததால் விட்டுவிட்டேன்..! :(

2008 இல் கனேடியக் குடிமகனாக ஆகியபின், மீண்டும் தமிழகம் செல்லத் திட்டமிட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தேன்..! அதற்கும் இலங்கைக்கு எனது விபரங்களை அனுப்பினார்கள்..! சரி பரவாயில்லை என்று பார்த்தால், விசாவையும் தராமல், எனது கனேடிய கடவுச்சீட்டையும் தராமல் ஏகப்பட்ட அவமானங்கள். :o நான் இருக்கும் இடத்தில் இருந்து ரொராண்டோவுக்கு நல்ல காலநிலையிலேயே 4 மணி நேரப் பிரயாணம். பனிக்காலத்தில் அது ஐந்து அல்லது ஆறு மணிநேரப் பயணம். ஆபத்தானதும் கூட. இவ்வாறான சூழலில் மனைவி, மற்றும் இரண்டு வயது மகளுடன் இரவு பகல் பாராது அலைந்தது மன உளைச்சலின் உச்சம். பணம் கொடுத்து வாங்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. :(

கடைசியில் எனது ஊர் பாராளுமன்ற உறுப்பினரின் உதவியுடன் கடவுச்சீட்டை மீளப் பெற வேண்டியதாகிவிட்டது. அந்தச் சமயத்தில் இருந்த மன உளைச்சலில் திண்ணையிலும் புலம்பித் திரிந்தேன்..! அப்போதும் ராஜவன்னியன் அண்ணா என்னில் சிறிது வருத்தப்பட்டார்..! அதற்கு நான் அப்போது மன்னிப்புக் கேட்கவில்லை.. இப்போது காயங்கள் ஆறிவிட்ட நிலையில் மன்னிப்புக் கேட்கிறேன் அண்ணா.. :(

நிற்க.. அதன்பின் நான் தமிழகத்துக்குச் செல்லவில்லை. எத்தனிக்கவுமில்லை.. மனைவியின் கோரிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை. அவரையும் பிள்ளையையும் போய்வரச் சொன்னாலும் ஒத்துக் கொள்கிறார்களில்லை.. மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி என்கிற மாதிரித்தான் என் நிலைமை..! :(

விசா இல்லாமலா இவ்வளவு காலமும் போய் வந்தீர்கள்?

இவ்வளவும் நாட்களும் போனாட்பிறகு வீசா இப்ப புக முன்னமே வீசா

சிங்களவங்கள் நல்லாத்தான் செய்யிறாங்கள்.

விசா இல்லாமலா இவ்வளவு காலமும் போய் வந்தீர்கள்?

இவ்வளவும் நாட்களும் போனாட்பிறகு வீசா இப்ப புக முன்னமே வீசா

சிங்களவங்கள் நல்லாத்தான் செய்யிறாங்கள்.

இப்பொழுது விமானத்தில் ஏறும்பொழுதே விசா இருக்கவேண்டும்.

முன்னர் அங்கு கால் பதித்ததும் முப்பதுநாள் விசா தருவார்கள் (இது பெரும்பாலான நட்டு கடவுச்சீட்டுகளுக்கு பொருந்தும்). ஆனால், அதுவும் சிலருக்கு நிராகரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு சிங்களத்தால் அனுப்பப்பட்டனர் (கனேடிய வெள்ளை இன அரசியல்வாதிகளுக்கே இது நடந்துள்ளது).

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமாக ஆதங்கங்களையும் கருத்துக்களையும் அளித்த உள்ளங்களுக்கு நன்றி. ஆற்றாமை களைந்து நம் சொந்தம் எப்பொழுதும் தொடர்கதையாக, தமிழே சுவாசமாய் வீசட்டும். சூழ்நிலைகளால் இப்பொழுது அள்ளித்தராத தாயிடம் நிறைகுறைகள் இருந்தாலும், சேய்கள் சோர்வடையாமல் வாருங்களப்பு, தமிழர் நாட்டுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.