Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கொதிரான இறுதி யுத்தத்தில் கருணாவின் படைகள். காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்பட்டமான மனச்சாட்சியின் குரலை ஏற்றுக்கொள்ள கருத்துக்கள உறவுகள் தயாராக இருக்கின்றார்களா????????????? தேசியப்போராட்டத்தில் யாருமே புனிதர்கள் இல்லை . வேண்டுமானால் விகிதாசாரத்தில் வேறுபடலாம் . ஒருவரை ஒருவர் உயர்த்திக்காட்டுகின்ற அரிவரி சண்டைகளை நிறுத்திவிட்டு , இனி எல்லோரும் என்ன செய்யப்போகின்றோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி . அதை செய்யாவிடில் யாருமே எம்மை மன்னிக்கப் போவதில்லை !!!!!!!!!!!!!!.

உண்மை தான் கோமகன்! கடந்த காலத்தை நாம், கட்டுப் படுத்த முடியாது!

ஆனால் வருங்காலம், நமது கையில்!

கடந்த காலம் கற்றுத் தந்த பாடங்களில் இருந்து, வரும் காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்!

  • Replies 134
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கிளிப்பிள்ளை போல் அப்படியே ஒப்பிவிக்கின்றிர்கள்.உமது இசையும் கதையும் வாசிக்கும் போது அதை முற்றுமாக உணர்ந்துகொண்டேன் .நீர் கொஞ்சமும் வெளியில் வர முயலவில்லை.புலிகள் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பியதன் தாக்கம் தான் அது.

இன்று கூட பல ஊடகங்கள் அதைத்தான் செய்துவருகின்றன.அவர்களுக்கு விடுதலையை விட வியாபாரம் தான் முக்கியம்.அதை நம்ப ஒரு கூட்டம் இருக்கென்று அவர்களுக்கு நன்கு தெரியும்.இவர்கள் 2009 முன்பு சொன்னவற்றை மீண்டும் ஒளிபரப்பினால் தெரியும் இவர்கள் வண்டவாளம் .

உதாரணமாக அரசாங்கம் நவீன ஆயுதங்கள் இறக்குமதி செய்கின்றதேன்று செய்தி வந்தால் இவர்கள் சிரித்துக்கொண்டு சொல்வார்கள் இறக்கட்டும் இறக்கட்டும் எல்லாம் எங்களுக்குதானே வரப்போகின்றதேன்று ,கேட்பவர்களும் பூரிப்பில் இருந்தார்கள்,கடைசியில் என்ன நடந்தது காலம் காலமாக காசு சேர்த்து வாங்கிய ஆயுதங்களும்,அவ்வளவு பவுணும் அவங்கள் கையில்.

அதே போல் அந்த அந்த நேரத்தில் அவர்கள் சொன்னதை நீங்கள் இன்னமும் நம்பிக்கொண்டு?

புலியில் இருந்த பெரும் தலைகளே தாங்கள் செய்த சில பிழைகளை ஒப்புக்கொள்ளும் போது சிலர் இன்னமும் அதே பிழைகளுக்கு நியாயம் கற்பிப்பதுதான் நகைப்புக்குரியது.

இசையும் கதையும் கற்பனை அல்ல.. என் கால அனுபவத்தின் பதிவு. நான் அந்தக் கால.. என் அனுபவத்தை தான் எழுத முடியுமே தவிர உங்களுக்காக அதை திரித்து எழுத முடியாது. ஆனால் நீங்கள் அப்படியானவர் அல்ல. வாசகர்களுக்காக உண்மைகளை திரிக்கக் கூடியவர்கள்.. உங்களைக் குற்றமற்றவர்களாக்க ஈயாரையும் நுளம்பாரையும் கூட கூட்டில் நிறுத்தக் கூடியவர்கள்.

புலிகள் மட்டுமல்ல.. புளொட்டும் தான் இந்தா ஆயுதம் வருது கப்பல் வருது.. தமிழீழம் வருது என்று மக்கள் பணத்தை கொட்டி கோடி கோடியா வாங்கின ஆயுதத்தை நடுக்கடலில் வைத்து இந்திரா அன்னையிடம் அன்னதானமாக வழங்கிவிட்டு.. சோத்துப் பார்சல் கொடுத்த மக்களுக்கு கொட்டாவியை பரிசளிச்சது.

புலிகள் ஆயுதம் வாங்கியதும்.. போராடியதும்... தமிழர்களை அடிமைப்படுத்த விரும்பிய சிங்கள சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடவே தவிர.. சர்வதேசத்துடன் அல்ல.

ஆனால் சர்வதேச நிலைப்பாடுகள் என்பதை சிறீலங்கா தனக்கு சாதமாக்கி புலிகளை அந்த வரையறைக்குள் கொண்டு வர வைத்து.. சர்வதேசத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் கீழ் எமது விடுதலைப் போராட்டம் கொண்டு வந்து அழிக்கப்பட்டது.

இதே நிலையில் 1982/3 இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த றொலாட் றேகன்.. ஜே ஆர் ஜெயவர்த்தனவோடு இணைந்து தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட சிங்களத்துக்கு ஆயுத.. இராணுவ உதவிகளை வழங்கிய போது.. புளொட் உட்பட எல்லோருமே தாங்கள் விடுதலைப் போராளிகள் என்று உரக்கக் கத்திக் கொண்டு திரிந்தனர். ஆனால் 2009 இல் அதே நிலை இருந்த போது.. புலிகளைப் பார்த்து பயங்கரவாதிகள் என்றவர்களுடன் சேர்ந்து நின்றனர் இந்தக் கும்பல்களைச் சேர்ந்தோர்.

இன்று.. புலிகள் ஆயுதம் வாங்கினர்.. என்னத்தை வெட்டிக்கிழித்தனர் என்ற கணக்கா கேள்வி கேட்கிற நீங்கள்.. அன்று சிங்கள அரசு பலவீனமாகவும்.. சர்வதேச ஒழுங்கில் எமக்கு ஒரு நிலை சாதகமும் இருந்த போது கிடைத்த ஆயுதங்களையும் வாய்ப்பையும் இந்திரா அம்மையாரிடம் கையளித்துவிட்டு.. மாலைதீவுக்குள் தமிழீழம் அமைக்க முற்பட்டதன்.. தார்ப்பரியத்தையும்.. அதன் பின்னால் இருந்து எழுந்த எமது போராட்டத்திற்கு எதிரான தீவிர பிராந்திய அச்சுறுத்தலையும் தாங்கள் நேர்மையோடு பகிர்ந்து கொண்டதே இல்லை. இப்படியற்ற ஒரு போக்கிரித்தனமான அரசியல் சிந்தனை உள்ள உங்கள் போன்றோர் சொந்தத் தவறுகளை திருத்தி.. புலிகளோடு கரங்கோர்த்து செயற்பட முடியாது.. ஓடி ஒளித்து.. சுபபோக வாழ்க்கையை தேடிக் கொண்ட நீங்கள் இறுதிவரை மக்களுக்காகவே நின்று அவர்களோடே நின்று வீழ்ந்த அந்த மகாத்மாக்களைப் பார்த்து கேள்வி கேட்கும் உரிமையை வழங்கி இருக்கிறார்களே.. அங்கே தான் புலிகளும் அவர்களின் ஜனநாயகத் தன்மையும் நியாயமும் வாழ்ந்து நிற்கிறது. இதையாவது நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த கால தவறுகளைத் திரித்தி எனியாவது.. மக்கள் மனவோட்டங்களைப் புரிந்து கொண்டு.. மக்கள் வழியில் புலிகள் காட்டிய இலட்சிய உறுதியோடு போராட வர வேண்டும். அது ஆயுதப் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.. அது அரசியல் இராஜதந்திரப் போராட்டமாக இரத்தம் சிந்தாத புரட்சியை நோக்கியதாகக் கூட இருந்து விடுதலையை வாங்கித் தரலாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை ஒரு கடியும் கூட நின்றவனை இரண்டு கடியும் கடித்தவாறே தான் போராட்டம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்து போராட்டம் முடியும் இறுதிக்கணம் வரை தன்னினத்தை இரையாக்குதல் நடந்தேறியது. ஆரம்பம் முதல் முடிவுவரை தன்னினத்தை இரையாக்குதல் என்பது தொடர்ந்தது. இதற்குள் எந்த இயக்கமும் தலமையும் விதிவிலக்கல்ல. எல்லாம் தமிழன் என்ற குட்டையில் ஊறின மட்டைகளே ! இனம் என்ற வரையறையை வகுக்கும் குறுந்தேசிய சிந்தனைமுறையையும் அதை வழிநடத்திய தலமைகளையும் கடந்து பல்லாயிரம் மக்கள் இன விடுதலை என்ற குறிக்கோளுக்காக புறப்பட்டு தன்னித்தாலும் எதிரியினத்தாலும் கொல்லப்பட்டு மாண்டுபோனார்கள். தமிழன் தியாகியாகச் செத்தாலும் துரோகியாகச் செத்தாலும் பயங்கரவாதியாக இஸ்லாமியனாக இந்துவாக வன்னிப்புலியாக கிழக்கு புலியாக எப்படி எத்தனைபெயரியல் மாண்டாலும் மாண்டவன் எல்லாம் தமிழனே ! மாண்டுபோனவர்களையும் ஆழுக்கு நாலு பேராக பிரித்து இழுத்துக்கொண்டுபோய் விலாசத்துக்கு திவசம் செய்யும் குணமுடையவனே இந்தத் தமிழன். எத்தனைபேர் வந்து எத்தனை அரசனாக வேசம் போட்டு விதவிதமான மேடையில் நடித்தாலும் தமிழன் என்ற கதையில் கூட இருப்பவனின் தலையை சீவத்தான் வேண்டும் குனிந்து மண்டியிடத்தான் வேண்டும். நாம் தமிழன் என்ற புராணக்கதையை தொடர்ந்து புலம்பெயர் தேசத்தில் இருந்து படித்துக்கொண்டிருப்போம். அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருப்போம்.

இக்கருத்தை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு.. மனச்சாட்சிகள் மின்னி மறைவது போல இருக்கும். ஆனால் இந்த கருத்துக்குள் புதைத்திருக்கும் தொனியில் மரணங்களை எல்லாம் சமன்பாட்டுக்குள் கொண்டு வரும் தமிழ் தேசியத்தை குறுந்தேசியமாக வரைவிலக்கணப்படுத்தும்.. நோக்கம் அதிகம் இருக்கிறது.

மனித இன வரலாற்றில் கற்காலம் தொடங்கி குழு நிலை மோதல்களும்.. அதன் பின்னாலான காலங்களில்.. மனித இனமே தேசங்களாக பூமிப் பந்தின் நிலப்பரப்பை பிரித்து வைத்துக் கொண்டு அதற்கு அடிபடுவதும்.. நடந்தே வருகிறது. ஏன் இந்த நிலை மற்ற உயிரினங்களில் இல்லையா என்றால்.. அங்கும்.. போட்டிகள். உணவுக்குப் போட்டி.. வாழ் விடத்துக்குப் போட்டி.. இணைக்குப் போட்டி.. சண்டை.. அது இந்த அறிவார்ந்த கருத்தியலுக்கு அமைய எந்த குறுந்தேசியம் சார்ந்து வருகிறதோ தெரியவில்லை..????!

ஆக.. தமிழர்கள்.. தமது இன அடையாளத்தை பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு.. தேசியத்தை வரையறுப்பது குறுந்தேசியமாக.. உலகின் பிற பகுதிகளில் மனிதர்கள்.. அதே காரணங்களுக்காக தேசங்களை உருவாக்கி அவற்றைக் கட்டி ஆளுதல்.. மட்டும் நேர்த்தியான தேசிய சிந்தனை ஆகுமோ..????!

அடிப்படையில் இந்தப் பூமிப் பந்து எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது. பூமி முழுவதும்.. மனிதன் சுதந்திரமாக தான் விரும்பிய வடிவில் வாழ உரித்துடையவன். ஆனால் அதற்கான ஒழுங்கு இன்று மனிதனால் மனிதனுக்கே மறுக்கப்பட்டுள்ள நிலையில்.. குறுந்தேசியங்கள்.. மனித மரணங்கள் பற்றிய விவாதங்கள் அர்த்தமற்றவை..!

பலமுள்ளவன் செய்யும் அழிவுகள் நியாயமாக.. பலமற்றவனின் வீழ்ச்சி வெற்றியாகின்ற ஒரு தன்மையே மனித வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இது இயற்கையின் ஒரு நிகழ்வும் கூட...! பலமுள்ள விலங்கு.. பிராந்தியத்தை தனது கட்டுக்குள் எடுக்க பலமற்றது ஒன்றில் வீழ்கிறது.. இன்றேல் இன்னோர் இடம் நோக்கி ஓடுகிறது. தமிழர்களின் போராட்டத்திலும் இதுவே நிகழ்ந்துள்ளது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.. என்பது ஒரு தேசிய இனத்தின் இருப்புக்காக நியாயமான போராட்டம் என்பதைச் சொல்ல.. இது போதுமானது.

மனிதன் தன்னில் ஒரு குழுவை எதிரி என்றும் இன்னொரு குழுவை நட்பு என்றும் பார்க்கும் நிலையை என்று ஏற்படுத்திக் கொண்டானோ அன்றே... மனித மரணங்களுக்கு மனிதனே காரணமும் ஆகிக் கொண்டு விட்டான். இதில் தமிழர்கள் விதிவிலக்கல்ல. ஆனாலும்.. பகுத்தறிவுள்ள மனிதன்.. அதைத் தவிர்க்கலாம். அவனும் விலங்கு நிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையை தனக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு விட்ட மனிதன்.. இயற்கையின் பலத்தின் முன் தன்னை விட்டுக் கொடுக்கவும்.. இயற்கையின் பலவீனத்தின் முன் அதனை ஆளவும் கற்றுக் கொண்டு விட்ட மனிதன்.. ஏன் சக மனிதனிடம் மட்டும் விட்டுக்கொடுப்பற்று இருக்கிறான். அவனிடம் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறான்..??!

1983/4 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற்று.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகப் போராடியவர்கள் எல்லோரும் ஒரு விட்டுக்கொடுப்போடு.. கொள்கைக்காக இணைந்திருந்தால்.. நாம் தமிழீழ வெற்றிக்கனியை எப்போதோ சுவைத்திருக்கலாம்.. பல இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதை விட்டு சொந்த இனத்துக்கான போராட்டத்தையே காட்டிக் கொடுத்து எதிரிகளோடு நின்று சொந்த இனத்தை அழித்த பாதகத்தை புலிகளை விட.. பிற ஆயுதக் குழுக்கள் செய்ததே அதிகம். அந்த வகையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் அவர்களே புலிகளை விட பெரிதும் காரணம்.

இந்தியப்படைகளும் சரி.. சிங்களப் படைகளும் சரி.. களத்தில் வெற்றியை சந்திக்க.. துரோகங்களை தமிழர்களிடையே பலப்படுத்தி.. அவற்றினூடு பயன்பெற்றனர். மாறி மாறி.. எதிரிகளோடு ஒத்துழைக்க கற்றுக் கொண்ட தமிழன்.. (1987 இல் இந்தியப் படைகளோடு நின்று சிங்களத்தை எதிர்த்த கும்பல்கள்.. 1990 இற்குப் பிறகு சிங்களவனோடு நின்று அதைச் செய்தார்கள்.. எதிரிகளோடு இணைவதில் இருந்த ஒற்றுமையில் கொஞ்சத்தை என்றாலும் தேச நலனுக்காக.. புலிகளோடு காட்டி இருக்கலாமே..???! ஏன் செய்யவில்லை..???!).. சொந்தச் சகோதரனிடத்தில் அவனைப் புரிந்து கொண்டு இணைய மறுத்ததன் மர்மம் என்னவோ.. அதற்கும்.. இவ்வாறான சிந்தனைகளின் பெருக்கமே காரணம். அங்குள்ள.. தேசியம் தான் என்னவோ..?????! கலப்புத் தேசியமோ..?????! விளக்கினால் நன்று.

எமது மரணங்களுக்கு எம்மிடையே இருந்த போட்டி மனப்பான்மையும்.. இனம் அழிந்தாலும் பறுவாயில்லை.. என் சகோதரன் அழியனும் என்ற பழிவாங்கல் எண்ணங்களும்.. சகோதரன் வெல்வதை சகிக்க முடியாது.. வெல்வதற்கான சந்தர்ப்பத்தை அது எதிரியாக இருந்தாலும் அவனோடு கூட்டு நின்றாவது.. அழிக்கனும் என்ற சிந்தனைகளே.. இத்தனை இழப்புக்களுக்கும் காரணம். விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. துரோகங்களின் விளைவாக நிகழ்ந்த நேரடி மரணங்களும்.. துரோகத்தின் மூலம் எதிரிகளுக்கு வழங்கிய வெற்றிகளும் தந்த மரணங்களே இன்று எம்மை எம் இனத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள போதும்.. அதை உணர விடாது.. குறுந்தேசியம்.. மரணச் சமன்பாடு எழுதி அதில் குதூகலிக்க முனையும்.. இச்சிற்றறிவுகளை எப்போ நாம் களையப் போகிறோமே தெரியாது. எமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் காரணிகளில்.. இப்படியான மயக்கக் கருத்து மாணிக்கங்களும் ஒரு காரணம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைமுறை திருந்துவதற்கான அறிகுறி ஏதாவது தென்படுகின்றதா?

திருந்தத்தை அடுத்தவனிடம் எதிர்பார்க்காமல்.. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைத் திருந்திக் கொண்டாலே போதும்.. தலைமுறைகள் என்ன ஒருவனுக்கு.. அடுத்தவன் என்ற நிலையில் உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் திருந்தி விடுவீர்கள். மொத்த இனமும் திருந்தி விடும்.

உங்களுக்குள்ளேயே உங்களுக்கு திருந்த இடமளிக்காது.. இருந்து கொண்டு அதை மற்றவனிடத்தில் எதிர்பார்க்கும் காலம் காலமாக நீளும் அதே தவறை தான் தாங்களும் செய்து கொண்டு.. குற்றச்சாட்டை மட்டும் சுட்டுவிரலை எதிர்க்க நீட்டி அடுத்தவனில் குறை கண்டு உங்களை திருப்திப்படுத்திக் கொள்கிறீர்கள்.

இந்த நிலையையே தமிழர்கள் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்..! :):icon_idea:

எனது இந்தநிலைப்பாட்டால் என்னை பாட்டிக்கு கூப்பிடாதவர்களும்,அல்லது கூப்பிட்டு அரசியல் வேண்டாம் என்பவர்களும் கூட இருக்கின்றார்கள்.ஒரு முறை எனது சேட்டைக்கூட ஒரு நண்பன் பிடித்தான்.

பார்டிகளிலகூடவா அரசியல் பேசுவீங்க? விட்டால் வயசான பாட்டிகளோடகூட அரசியல்பேசி சண்டைக்குபோவீங்க போல!

அர்ஜுன் அண்ணா எதை எதை, எங்கெங்கு பேசவேண்டும், எங்கெங்கு ,மெளனம் காக்கவேண்டுமெங்கிற தெளிவே கொண்டிராத, நீங்க எப்டி மற்றவர்களை எதிலுமே தெளிவில்லாதவர்கள் என்று அடிக்கடி கூறிக்கொள்றீங்க? நல்லவேளை உங்க நண்பன் சட்டையை மட்டும்பிடித்தான்! :)

தேசியப்போராட்டத்தில் யாருமே புனிதர்கள் இல்லை . வேண்டுமானால் விகிதாசாரத்தில் வேறுபடலாம் . இனி எல்லோரும் என்ன செய்யப்போகின்றோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி . அதை செய்யாவிடில் யாருமே எம்மை மன்னிக்கப் போவதில்லை !!!!!!!!!!!!!!.

மொத்தல்ல, மனிதர்களில் புனிதர்கள் இருக்கின்றார்களா? அத சொல்லுங்க!

இன்னும் இருபது வருஷங்களில் , தாயகத்தில் &புலத்திலெழுந்து வர்ற அடுத்த தலைமுறை எங்க தேசிய அரசியல் பிரச்னை பற்றி எதுவித அக்கறையும் காட்டப்போவதில்லை!

இப்போ இருப்பவர்கள் அப்போ இருப்பார்களோ இல்லியோ............ அப்போ இருக்கப்போகிறவர்கள் யாரையும் மன்னிக்கவோ , இல்லை தண்டிக்கவோ தங்கள் நேரத்தை செலவிடவேமாட்டார்கள்! அவங்க உலகம் வேறாக இருக்கும்! :)

ஆனால் வருங்காலம், நமது கையில்!

அது என்னமோ சரியா தெரியல, புங்கை அண்ணா, ஆனா ஒண்ணுமட்டும் நிச்சயமா தெரியும்!, வருங்காலம் யாழ்ல கருத்தெழுதுற ஒருத்தரோட கையிலயும் சிக்கி சின்னாபின்னமாகாது! <_<

எதிரியை ஒரு கடியும் கூட நின்றவனை இரண்டு கடியும் கடித்தவாறே தான் போராட்டம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்து போராட்டம் முடியும் இறுதிக்கணம் வரை தன்னினத்தை இரையாக்குதல் நடந்தேறியது. ஆரம்பம் முதல் முடிவுவரை தன்னினத்தை இரையாக்குதல் என்பது தொடர்ந்தது.

அப்போ சுகன் ,தமிழர்கள் சிங்களவனுடன் ஆயுதப்பிணக்கற்ற அரசியல் செய்திருந்தால், தன்னினத்தை தானே இரையாக்கவேண்டி வந்திருக்காது எங்கிறீங்களா?

அல்லது ..

ஆயுதப்போராட்டத்தை கையிலெடுத்த எந்த தேசங்களிலும், இதுபோன்ற சூழ்நிலைகள் தவிர்க்கப்பட்டேவந்திருக்கின்றன என்பதும் உங்கள் பார்வையிலுள்ளது என்று ,நான்

விளங்கிக்கொள்ளலாமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

இக்கருத்தை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு.. மனச்சாட்சிகள் மின்னி மறைவது போல இருக்கும். ஆனால் இந்த கருத்துக்குள் புதைத்திருக்கும் தொனியில் மரணங்களை எல்லாம் சமன்பாட்டுக்குள் கொண்டு வரும் தமிழ் தேசியத்தை குறுந்தேசியமாக வரைவிலக்கணப்படுத்தும்.. நோக்கம் அதிகம் இருக்கிறது.

மனித இன வரலாற்றில் கற்காலம் தொடங்கி குழு நிலை மோதல்களும்.. அதன் பின்னாலான காலங்களில்.. மனித இனமே தேசங்களாக பூமிப் பந்தின் நிலப்பரப்பை பிரித்து வைத்துக் கொண்டு அதற்கு அடிபடுவதும்.. நடந்தே வருகிறது. ஏன் இந்த நிலை மற்ற உயிரினங்களில் இல்லையா என்றால்.. அங்கும்.. போட்டிகள். உணவுக்குப் போட்டி.. வாழ் விடத்துக்குப் போட்டி.. இணைக்குப் போட்டி.. சண்டை.. அது இந்த அறிவார்ந்த கருத்தியலுக்கு அமைய எந்த குறுந்தேசியம் சார்ந்து வருகிறதோ தெரியவில்லை..????!

ஆக.. தமிழர்கள்.. தமது இன அடையாளத்தை பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு.. தேசியத்தை வரையறுப்பது குறுந்தேசியமாக.. உலகின் பிற பகுதிகளில் மனிதர்கள்.. அதே காரணங்களுக்காக தேசங்களை உருவாக்கி அவற்றைக் கட்டி ஆளுதல்.. மட்டும் நேர்த்தியான தேசிய சிந்தனை ஆகுமோ..????!

அடிப்படையில் இந்தப் பூமிப் பந்து எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது. பூமி முழுவதும்.. மனிதன் சுதந்திரமாக தான் விரும்பிய வடிவில் வாழ உரித்துடையவன். ஆனால் அதற்கான ஒழுங்கு இன்று மனிதனால் மனிதனுக்கே மறுக்கப்பட்டுள்ள நிலையில்.. குறுந்தேசியங்கள்.. மனித மரணங்கள் பற்றிய விவாதங்கள் அர்த்தமற்றவை..!

பலமுள்ளவன் செய்யும் அழிவுகள் நியாயமாக.. பலமற்றவனின் வீழ்ச்சி வெற்றியாகின்ற ஒரு தன்மையே மனித வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இது இயற்கையின் ஒரு நிகழ்வும் கூட...! பலமுள்ள விலங்கு.. பிராந்தியத்தை தனது கட்டுக்குள் எடுக்க பலமற்றது ஒன்றில் வீழ்கிறது.. இன்றேல் இன்னோர் இடம் நோக்கி ஓடுகிறது. தமிழர்களின் போராட்டத்திலும் இதுவே நிகழ்ந்துள்ளது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.. என்பது ஒரு தேசிய இனத்தின் இருப்புக்காக நியாயமான போராட்டம் என்பதைச் சொல்ல.. இது போதுமானது.

மனிதன் தன்னில் ஒரு குழுவை எதிரி என்றும் இன்னொரு குழுவை நட்பு என்றும் பார்க்கும் நிலையை என்று ஏற்படுத்திக் கொண்டானோ அன்றே... மனித மரணங்களுக்கு மனிதனே காரணமும் ஆகிக் கொண்டு விட்டான். இதில் தமிழர்கள் விதிவிலக்கல்ல. ஆனாலும்.. பகுத்தறிவுள்ள மனிதன்.. அதைத் தவிர்க்கலாம். அவனும் விலங்கு நிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையை தனக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு விட்ட மனிதன்.. இயற்கையின் பலத்தின் முன் தன்னை விட்டுக் கொடுக்கவும்.. இயற்கையின் பலவீனத்தின் முன் அதனை ஆளவும் கற்றுக் கொண்டு விட்ட மனிதன்.. ஏன் சக மனிதனிடம் மட்டும் விட்டுக்கொடுப்பற்று இருக்கிறான். அவனிடம் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறான்..??!

1983/4 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற்று.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகப் போராடியவர்கள் எல்லோரும் ஒரு விட்டுக்கொடுப்போடு.. கொள்கைக்காக இணைந்திருந்தால்.. நாம் தமிழீழ வெற்றிக்கனியை எப்போதோ சுவைத்திருக்கலாம்.. பல இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதை விட்டு சொந்த இனத்துக்கான போராட்டத்தையே காட்டிக் கொடுத்து எதிரிகளோடு நின்று சொந்த இனத்தை அழித்த பாதகத்தை புலிகளை விட.. பிற ஆயுதக் குழுக்கள் செய்ததே அதிகம். அந்த வகையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் அவர்களே புலிகளை விட பெரிதும் காரணம்.

இந்தியப்படைகளும் சரி.. சிங்களப் படைகளும் சரி.. களத்தில் வெற்றியை சந்திக்க.. துரோகங்களை தமிழர்களிடையே பலப்படுத்தி.. அவற்றினூடு பயன்பெற்றனர். மாறி மாறி.. எதிரிகளோடு ஒத்துழைக்க கற்றுக் கொண்ட தமிழன்.. (1987 இல் இந்தியப் படைகளோடு நின்று சிங்களத்தை எதிர்த்த கும்பல்கள்.. 1990 இற்குப் பிறகு சிங்களவனோடு நின்று அதைச் செய்தார்கள்.. எதிரிகளோடு இணைவதில் இருந்த ஒற்றுமையில் கொஞ்சத்தை என்றாலும் தேச நலனுக்காக.. புலிகளோடு காட்டி இருக்கலாமே..???! ஏன் செய்யவில்லை..???!).. சொந்தச் சகோதரனிடத்தில் அவனைப் புரிந்து கொண்டு இணைய மறுத்ததன் மர்மம் என்னவோ.. அதற்கும்.. இவ்வாறான சிந்தனைகளின் பெருக்கமே காரணம். அங்குள்ள.. தேசியம் தான் என்னவோ..?????! கலப்புத் தேசியமோ..?????! விளக்கினால் நன்று.

எமது மரணங்களுக்கு எம்மிடையே இருந்த போட்டி மனப்பான்மையும்.. இனம் அழிந்தாலும் பறுவாயில்லை.. என் சகோதரன் அழியனும் என்ற பழிவாங்கல் எண்ணங்களும்.. சகோதரன் வெல்வதை சகிக்க முடியாது.. வெல்வதற்கான சந்தர்ப்பத்தை அது எதிரியாக இருந்தாலும் அவனோடு கூட்டு நின்றாவது.. அழிக்கனும் என்ற சிந்தனைகளே.. இத்தனை இழப்புக்களுக்கும் காரணம். விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. துரோகங்களின் விளைவாக நிகழ்ந்த நேரடி மரணங்களும்.. துரோகத்தின் மூலம் எதிரிகளுக்கு வழங்கிய வெற்றிகளும் தந்த மரணங்களே இன்று எம்மை எம் இனத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள போதும்.. அதை உணர விடாது.. குறுந்தேசியம்.. மரணச் சமன்பாடு எழுதி அதில் குதூகலிக்க முனையும்.. இச்சிற்றறிவுகளை எப்போ நாம் களையப் போகிறோமே தெரியாது. எமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் காரணிகளில்.. இப்படியான மயக்கக் கருத்து மாணிக்கங்களும் ஒரு காரணம்..! :icon_idea:

நன்றி நெடுக்....

தங்கள் நேரத்திற்கும் கருத்துக்கும்.

கணண்ணுக்கும் நெஞ்சுக்கும் புலப்படாத தோல்வியின் பின்னான காளான்கள் இவை. தொடரவே செய்யும். தமிழ் மக்கள் கவனமாக இருக்கவேண்டிய தருணம். இதை மட்டுமே சொல்லமுடியும். இதையே புலட்டும் புரட்சிகரங்களும் செய்தன ஆரம்பத்தில்.....???

  • கருத்துக்கள உறவுகள்

திருந்தத்தை அடுத்தவனிடம் எதிர்பார்க்காமல்.. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைத் திருந்திக் கொண்டாலே போதும்.. தலைமுறைகள் என்ன ஒருவனுக்கு.. அடுத்தவன் என்ற நிலையில் உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் திருந்தி விடுவீர்கள். மொத்த இனமும் திருந்தி விடும்.

உங்களுக்குள்ளேயே உங்களுக்கு திருந்த இடமளிக்காது.. இருந்து கொண்டு அதை மற்றவனிடத்தில் எதிர்பார்க்கும் காலம் காலமாக நீளும் அதே தவறை தான் தாங்களும் செய்து கொண்டு.. குற்றச்சாட்டை மட்டும் சுட்டுவிரலை எதிர்க்க நீட்டி அடுத்தவனில் குறை கண்டு உங்களை திருப்திப்படுத்திக் கொள்கிறீர்கள்.

இந்த நிலையையே தமிழர்கள் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்..! :):icon_idea:

எந்தத்தலைமுறையாக இருந்தாலும் அது எமது அடுத்தபடியே.

அதன்படி எனது கடமைகளை அவை நிச்சயம் தொடரும்.

அந்தவகையில் எனக்கு துரோகமோ அல்லது தீங்கோ எவராலாவது இழைக்கப்பட்டிருந்தால்......? நிச்சயம் அதை அது கேட்கும்.

அது நான் அவர்களை வளர்க்கும் வழிகளைப்பொறுத்தது.

அவ்வாறே தனது இனத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக என் பிள்ளை குரல் எழுப்பும். அதன் வடிவம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் நிச்சயமாக எனக்குத்தெரியும்

அது என்னைவிட வலிமையான வழியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு சம்மந்தமா ஆக்க பூர்வமாக ஏதாவது எழுதுவார்கள் என்று பார்த்தால், நான் உட்பட பலரும் எழுதும் கருத்துக்கள் அர்ஜுனின் கருத்துக்களுடன் அதற்க்கு பதில் எழுதுவதால் தலைப்பு விடுபட்டு போகின்றது யாழ் களத்து உறவுகளே இதுபோன்ற விடயத்தை தாங்கள் கருத்தில் எடுக்கவும்.

அப்போ சுகன் ,தமிழர்கள் சிங்களவனுடன் ஆயுதப்பிணக்கற்ற அரசியல் செய்திருந்தால், தன்னினத்தை தானே இரையாக்கவேண்டி வந்திருக்காது எங்கிறீங்களா?

அல்லது ..

ஆயுதப்போராட்டத்தை கையிலெடுத்த எந்த தேசங்களிலும், இதுபோன்ற சூழ்நிலைகள் தவிர்க்கப்பட்டேவந்திருக்கின்றன என்பதும் உங்கள் பார்வையிலுள்ளது என்று ,நான்

விளங்கிக்கொள்ளலாமா?

நான் சிங்களவனுடன் ஆயுதப்பிணக்கற்ற அரசியல் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடவும் இல்லை தனியே ஒரு இயக்கத்தை சுட்டிக்காட்டவும் இல்லை. பிற நாட்டு விடுதலைப்போராட்டங்களுடன் எமது இன விடுதலைப்போராட்டத்தை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

முதலில் முப்பத்திரண்டு இயக்கமும் தலமையும் பிற குழுக்களும் தியாகிகள் துரோகிகள் அரசியல் கட்சிகள் இடது வலதுசாரிகள் இஸ்லாமிய இந்து கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து பிரதேசங்களிலும் வசிப்பவர்கள் தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் அவசியமானது. இந்த ஏற்றுக்கொள்ளுதல் என்பதில் நாம் வெற்றி பெறவில்லையாயின் இன விடுதலை என்பது எந்தக் காலத்திலும் சாத்தியம் இல்லை.

தமிழன் என்கிற கதை இதை ஏற்றுக்கொண்டு எழுதப்படவில்லை. தமிழ்த்தேசியம் இங்கே பலவீனப்பட்டு கேள்விக்குறியாகி நிற்கின்றது. மக்கள் இனம் என்ற பொது வட்டத்துள் இல்லை. இதுதான் அடிப்படையான தளம். இந்த தளத்தின் மீது எத்தனை இயக்கங்கள் முளைத்தாலும் எத்தனை போராட்டங்கள் வெடித்தாலும் எம்மால் வெற்றிபெற முடியாது. (எம்மால் என்று பொதுப்பட சொல்வதே பிரச்சனைக்குரியது)

பானையில் உள்ளதே அகப்பையில் வரும் என்பதுபோல இந்த தமிழ்ச் சமூகம் எவ்வாறு முரண்பட்டு இயங்குகின்றதோ, அது தனக்குள் எத்தனை நூறு விதமாக ஏற்றதாழ்வுகளையும் வெறுப்புணர்வுகளையும் தனித்தனி கருக்களில் இருந்து உற்பத்தி செய்கின்றதோ அதற்கேற்றபவே விழைவுகள் இருக்கும். வினை விதைத்த வயலில் தினையை அறுக்க முடியாது. இந்த இனத்தில் இருந்து முளைப்பவர்கள் தான் கருணா டக்ளஸ் கதிர்காமர் பிரபாகரன் என்னும் ஆயிரம் தனித் தலைகள் குழுக்கள் கட்சிகள் சிந்தனை முறைகள்.

ஒவ்வொரு இயக்கங்களும் தங்களுக்குள்ளும் மாறி மாறியும் மண்டையில் போட்டது குத்துப்பட்டது ஒன்றை ஒன்று தியாகி துரோகி என்றது இதற்குள் நான் எனது கருத்தை முனன்வைப்பதில்லை. எனது கருத்துக்களின் அடிப்படை ஏன் அவ்வாறு மண்டையில் போட்டார்கள் அதற்கான அடிப்படை என்ன தன்னினத்தை இரையாக்கும் சமூக மரபுவழி இயக்கம் அதற்கான உளவியல் என்ன இவ்வாறான கேள்விகள் அடிப்படையில் தான் அமைகின்றது. இதை புரிந்துகொள்ளாத சிலர் புலிக்கு எதிராக எழுதிவிட்டதாக குய்யோ முறையோ எண்டு கத்தினால் அது குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. என்னைப் பொறுத்தவரை பிரபாகரன் முதல் கருணா டக்ளஸ் பிள்ளையான் கதிர்காமர் இஸ்லாமிய இந்து கிருத்து தமிழர்கள் எல்லாம் தமிழர்களே என்ற புள்ளியில் உறுதியாக நின்று கொண்டே எதையும் எழுதவும் கதைக்கவும் செய்வேன். அதையே திருத்தம் என்றும் எனது கருத்தில் குறிப்பிட்டும் இருக்கின்றேன்.

சுகனும் அர்ஜுனும் போலவே பல உறவுகளும் இன்றைய எமது மக்களின் நிலைமையை நினைத்து கவலையிலும் மனவுளைச்சளிலும் உள்ளனர். விட்ட பிழைகளை தொடர்ந்து எழுதும்/அலசும் வேளையில், எமக்கு முன்னால் இன்றும் சில விடுதலைக்கான வழிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். அதில் ஒன்று போர்க்குற்ற விசாரணைகள்.

எனவே பழையதினை அலசும் வேளையில் புதியனவும் படைக்க ஒத்துழைப்பீர்களாக / செயற்படுவீர்களாக !

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியுடன் சேர்ந்து வேலை செய்பவனெல்லாம் ஒன்றில் எதிரி..! இல்லையென்றால் துரோகி..! இதில் இருவேறு கருத்துக்கள் கிடையா..!! மரணித்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் நினைவில் கொண்டு இக்கருத்தை உள்வாங்குங்கள்..!!

புலிகளுக்கெதிராக மாற்றுக்கருத்து சொல்வது என்பது வேறு..! எதிரியுடன் இணைந்து காட்டிக்கொடுப்பு, அரசியல் செய்வது என்பது வேறு..! இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொண்டால் நலம்..!

Edited by இசைக்கலைஞன்

சுகனும் அர்ஜுனும் போலவே பல உறவுகளும் இன்றைய எமது மக்களின் நிலைமையை நினைத்து கவலையிலும் மனவுளைச்சளிலும் உள்ளனர். விட்ட பிழைகளை தொடர்ந்து எழுதும்/அலசும் வேளையில், எமக்கு முன்னால் இன்றும் சில விடுதலைக்கான வழிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். அதில் ஒன்று போர்க்குற்ற விசாரணைகள்.

எனவே பழையதினை அலசும் வேளையில் புதியனவும் படைக்க ஒத்துழைப்பீர்களாக / செயற்படுவீர்களாக !

Edited by மல்லையூரான்

தமிழ் சமூகத்தில் அடையாளத்தில் உள்ள பிழவுகளை எதிரிகள் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டனர்.அதை எங்கனம் முறையடிக்கலாம்? பிளவுகளைக் கழைந்து தமிழ் அடையாளத்தை ஒருமுகப் படுத்துவதன் மூலம்.அதனையே புலிகள் நடைமுறையில் செய்தனர்.ஆனால் புலிகளை விமர்சிக்கும் சுகன் என்ன சொல்கிறார் என்றால் யாழ்ப்பாணிகள் குறுந் தேசிய வாதிகள் என.இங்கே பிளவுகளை உற்பத்தியாக்கும் அரசியல் என்பது யாழ்ப்பாணிகள், குறுந்த்தேசிய வாதம் ,தலித்துக்கள், மாற்றுக் கருத்தாளர், புலி, புலி வால் என்னும் கோட்பாடுகள். அதனை நாங்கள் மறுதலித்து யார் யார் தமிழ் சமூகத்தில் ஒதுக்கப்படுகிறார்களோ அவர்கள் எல்லொரையும் சமூகத்தின் மையங்களாக ஆக்க வேண்டும்.அதனால் தான் பிரபாகரன் கருணாவையும், தமிழ்ச்செல்லவனையும் முக்கியமான இடங்களில் இருத்தினார். குறுந்தேசியவாதாம் தலித்தியம் என்றெல்லாம் கதைத்து போராட்டாத்தை நலிவடையச் செய்த சக்திகளால் இன்று என்ன சாதிக்கப்படுள்ளது? புலிகளால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு யாழ் சமூக நிலையில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீண்டும் அதே யாழ் மேலாதிக்க வர்க்க ஒடுக்கப்படும் நிலைக்குக் கொண்டு வரப்படுள்ளது.

இதனை நீங்கள் மீண்டும் உருவாகியுள்ள சாதிய சண்டைகளில் இருந்து காணலாம்.

தமிழத் தேசியம் என்பதே அனைவரையும் ஒன்றிணைக்கும் கோட்பாடு.தலித்தியம், கிழக்குப் பிரதேச வாதாம் என்பவை எதிரியால் தமிழர்களைப் பிளவு படுத்த பாவிக்கப்படும் கருத்தோட்டங்கள்.இதற்க்கு தமிழர்களே உதவி வருகிறார்கள்.தமிழர்களைடையே ஒற்றுமை வரவேண்டும் எனில் முதலில் எதிரியின் பக்கம் நில்லாது மக்களைன் பக்கம் நின்று அனைவரையும் உள் வாங்கிய தமிழத் தேசிய அடையாளத்தின் கீழ் ஓர் அணியில் திரள வேண்டும்.ஆனால் தெளிவான ஒரு தலமை அற்ற இந்த நிலை மிகவும் பலவீனமான நிலை.அதனை எதிரி தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறான்.அதற்க்கு எம்மில் சிலர் உடந்தையாக இருந்து கொண்டே மற்றவனை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் சிலர் தமது சுய நலனுக்காக எதிரியிடம் கூலி பெற்று இதனைச் செய்கிறார்கள்.இரு தரப்பினருமே எமது போராட்டாத்தை நலிவடையச் செய்கிறார்கள்.

குறுந்தேசிய வாதாம் என்பதற்க்கும் தேசிய வாதாம் என்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்பதை சுகன் விளக்குவாரா?

உண்மையில் கோட்பாட்டு ரீதியாகச் சிந்தித்தால் இந்த இரண்டிற்கும் எந்த விதியாசமும் இல்லை.

நீ புலி, நீ கொமுனியினிஸ்ட், நீ பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் உள் அடக்கம் அற்ற ஒரு வெற்றுச் சொல்லே இந்த குறுந் தேசிய வாதம் என்னும் சொல். இதனைச் சொல்லும் சோபசக்தி இராகவன் முதலானர் தொடக்கம் சுகன் வரை இதற்கான வரைவிலக்கணம் எங்கேயும் எவராலும் சொல்லப்பட வில்லை.

எதிரியுடன் சேர்ந்து வேலை செய்பவனெல்லாம் ஒன்றில் எதிரி..! இல்லையென்றால் துரோகி..! இதில் இருவேறு கருத்துக்கள் கிடையா..!! மரணித்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் நினைவில் கொண்டு இக்கருத்தை உள்வாங்குங்கள்..!!

புலிகளுக்கெதிராக மாற்றுக்கருத்து சொல்வது என்பது வேறு..! எதிரியுடன் இணைந்து காட்டிக்கொடுப்பு, அரசியல் செய்வது என்பது வேறு..! இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொண்டால் நலம்

எதிரி என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கணிசமானளவு மக்கள் கூட்டம் இருந்து வருகின்றது

எதிரியுடன் இணைந்து வாழவேண்டிய நிர்பந்தம் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கின்றது

விடுதலைக்கென்று புறப்பட்ட பல தமிழர்கள் ஒன்றில் மண்டையில் குண்டேந்துவது இல்லையேல் எதிரியுடன் இணைவது இரண்டைத் தவிர வேறு மார்க்கம் அற்ற சூழலில் எதிரியுடன் இணையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

தமிழரை தமிழரே எதிரியாகப் பார்க்கும் மனோபாவத்தை தமிழர்களின் சமூக முரண்பாடு வளர்த்துவிட்டிருக்கும் அடிப்படையில் எதிரி இணைவது குறித்து கடும்போக்கை கடைப்பிடிக்க முடியாது உதாரணமாக மதவாதம் பிரதேசவாதம்

ஒன்றில் எதிரி அல்லது துரோகி என்று கடும்போக்கோடு அணுகுவது சமூக முரண்பாடுகளால் சிதைந்துபோன எமது இனத்தை என்னும் படு குழியில் தள்ளும்.

விடுதலைக்காக போராடி மரணித்த வீரர்களை முன்நிறுத்தி ஒன்றுபடவேண்டுமே தவிர முரண்பாடுகளை வளர்க்கலாகாது.

ஒன்றில் எதிரி இல்லையேல் துரோகி என்றால் முன்னை விட இப்போது துரோகிகள் பட்டியல் பன்மடங்கு நீண்டுவிடும்.

எதிரியுடன் இணைவதற்கான செயற்பாடுகளோ துரோகம் என்பதுவோ அதற்கான சூழ்நிலைகளையும் சமூக காரணிகள் பின்புலங்களையும் கவனத்தில் கொள்வது அவசியமானது

பெரும்பான்மை மக்களின் புலப்பெயர்வும் சிங்களவர்களுக்கு மிகச் சாதகமான ஒரு விசயமாகவே அமைந்தது ஆனால் அதை நாம் புலம்பெயர்வுக்கான சூழ்நிலைகளை முன்நிறுத்தி நியாயப்படுத்துவதால் அது எமக்கு பெரிய விடயமாகத் தெரிவதில்லை.

இனவிடுதலைக்காக மாண்ட வீரர்களின் கனவு பலிக்க வேண்டுமானால் நாம் பல கசப்பான விசயங்களை கடந்தும் அனுசரித்தும் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தி இனம் என்று ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம். இல்லையேல் இனம் என்ற ஒன்று முற்றாக சிதைந்த நிலையில் இனவிடுதலைக்கான அவசியம் இல்லாமல் போகும்.

பல நல்ல விடயங்களை எழுதும் நீங்கள் ஏன் கீழே நீங்கள் எழுதியது பற்றி விரிவாக, எப்படி இதைச்செய்யலாம் என எழுதக்கூடாது?

விடுதலைக்காக போராடி மரணித்த வீரர்களை முன்நிறுத்தி ஒன்றுபடவேண்டுமே தவிர முரண்பாடுகளை வளர்க்கலாகாது.

நான் சிங்களவனுடன் ஆயுதப்பிணக்கற்ற அரசியல் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடவும் இல்லை தனியே ஒரு இயக்கத்தை சுட்டிக்காட்டவும் இல்லை. பிற நாட்டு விடுதலைப்போராட்டங்களுடன் எமது இன விடுதலைப்போராட்டத்தை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை. .

நீங்க சொல்லவில்லைன்னு எனக்கும் தெரியும் சுகன் , நான் அந்த கேள்விய உங்ககிட்ட கேட்டது, காரணத்தோடேதான்! திரும்பவும் கேட்கிறேன்...........

தமிழன் சிங்களவனுடன் ஆயுதப்பிணக்கற்ற அரசியல் செய்திருக்கலாமா? இல்லையா?

ஏன்னா,, அந்தப்புள்ளியிலிருந்துதான் , ஆயுதப்போராட்டத்துக்கான ஏடு தொடக்கப்படிருக்கு! அந்த தீவிரபோக்கு போராட்டவழிமுறைதானே, அதன்பின் நடந்த,,,நீங்க கவலைப்ப்டும் அனைத்திற்கும் ,காரணியாய் போனது!

அந்த கேள்விக்கு நீங்க மிகத்தெளிவான & நழுவிச்செல்லாத விளக்கம் ஒன்றை கொண்டிருந்தாமட்டுமே, மிக நீண்ட விளக்கம் கொடுத்து, அதன்பின் நடந்த சம்பவங்களிற்கு விளக்கம் கொடுத்து விரயமாகும் , உங்கள் நேரம் சேமிக்கப்படலாம்!

பிற நாட்டு விடுதலைப்போராட்டங்களுடன் எமது இன விடுதலைப்போராட்டத்தை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை

அப்பிடீங்கிறீங்களா? சரி:-

* பிறநாட்டு விடுதலைபோராட்டங்களுடன் ஒப்பிட்டுபார்க்க , நீங்க விரும்பாததற்கு ,ஒப்பீட்டளவில் எங்கபோராட்டத்தில,ஆககுறைந்தது, இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம்!

1) உயர்வான அல்லது 2) தாழ்வான :

அந்த இரண்டில் சுகனின் தராசு எந்தப்பக்கம் நிறை அதிகரித்து சரிகிறது?

எல்லோருமே தவறிழைத்தார்கள் என்பதை , ஏறக்குறைய அனைவருமே அதிகபட்சமாக ஓரிடத்திலாவது ஒப்புக்கொண்டபின்னர், சுகனும் அர்ஜுன் அண்ணாவும், ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் சுரண்டிவிடுவது......

காயப்பட்டவர்கள் நகராது, வீழ்ந்த இடத்திலயே ,எப்போதும் குற்றுயிராய் கிடப்பதை உறுதிசெய்வதற்கே!! ,

என்று நான் கருதினால்... சுகனின் விடை அதற்கு என்னவாக இருக்கலாம்?!

//காயப்பட்டவர்கள் நகராது, வீழ்ந்த இடத்திலயே ,எப்போதும் குற்றுயிராய் கிடப்பதை உறுதிசெய்வதற்கே!! ,//

எதிரியும் துரோகமும் ஒன்று சேரும் புள்ளி இது தான்.சமரச அரசியல் என்பதும் இது தான்.மாடேறி மிதித்தவனை அதே நிலையில் வைத்திருக்கும் அரசியலும் இது தான்.

தமிழன் சிங்களவனுடன் ஆயுதப்பிணக்கற்ற அரசியல் செய்திருக்கலாமா? இல்லையா?

சிங்களவர்களுடன் சாத்வீக முறையில் போராடி பலனின்றியே ஆயுதப்போராட்டம் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக உருவானது. இனிமேலும் தமிழர்களுக்கு சிங்களவர்களிடம் இருந்து விடுதலை என்பது இணக்க அரசியல் சார்ந்து கிடைக்கப்போவது இல்லை .

பிறநாட்டு விடுதலைபோராட்டங்களுடன் ஒப்பிட்டுபார்க்க , நீங்க விரும்பாததற்கு ,ஒப்பீட்டளவில் எங்கபோராட்டத்தில,ஆககுறைந்தது, இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம்!

1) உயர்வான அல்லது 2) தாழ்வான :

அந்த இரண்டில் சுகனின் தராசு எந்தப்பக்கம் நிறை அதிகரித்து சரிகிறது?

எந்தப்பக்கமும் இல்லை. எமது விடுதலைப்போராட்டமும் அதன் உள்முரண்பாடுகளும் எமது சமூகத்தில் இருப்பில் இருந்து தனித்துவமான உள்முரண்பாடுகளின் நிமிர்த்தம் பல பின்னடைவுகளை சந்தித்தது. இதை என்னொர் நாட்டு போராட்டத்துடன் ஒப்பிடுவதோ அல்லது வேறு நாட்டு சூழலில் உருவான இசங்கள் சித்தாந்தங்கள் ஊடாக சரிப்ப்ண்ணலாம் என்பதோ சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. உயர்வான தாழ்வான என்று பார்க்கக் கூடிய பிரச்சனை இல்லை.

தமிழ் சமூகத்தில் அடையாளத்தில் உள்ள பிழவுகளை எதிரிகள் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டனர்.அதை எங்கனம் முறையடிக்கலாம்? பிளவுகளைக் கழைந்து தமிழ் அடையாளத்தை ஒருமுகப் படுத்துவதன் மூலம்.அதனையே புலிகள் நடைமுறையில் செய்தனர்.ஆனால் புலிகளை விமர்சிக்கும் சுகன் என்ன சொல்கிறார் என்றால் யாழ்ப்பாணிகள் குறுந் தேசிய வாதிகள் என.இங்கே பிளவுகளை உற்பத்தியாக்கும் அரசியல் என்பது யாழ்ப்பாணிகள், குறுந்த்தேசிய வாதம் ,தலித்துக்கள், மாற்றுக் கருத்தாளர், புலி, புலி வால் என்னும் கோட்பாடுகள். அதனை நாங்கள் மறுதலித்து யார் யார் தமிழ் சமூகத்தில் ஒதுக்கப்படுகிறார்களோ அவர்கள் எல்லொரையும் சமூகத்தின் மையங்களாக ஆக்க வேண்டும்.அதனால் தான் பிரபாகரன் கருணாவையும், தமிழ்ச்செல்லவனையும் முக்கியமான இடங்களில் இருத்தினார். குறுந்தேசியவாதாம் தலித்தியம் என்றெல்லாம் கதைத்து போராட்டாத்தை நலிவடையச் செய்த சக்திகளால் இன்று என்ன சாதிக்கப்படுள்ளது? புலிகளால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு யாழ் சமூக நிலையில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீண்டும் அதே யாழ் மேலாதிக்க வர்க்க ஒடுக்கப்படும் நிலைக்குக் கொண்டு வரப்படுள்ளது.

இதனை நீங்கள் மீண்டும் உருவாகியுள்ள சாதிய சண்டைகளில் இருந்து காணலாம்.

தமிழத் தேசியம் என்பதே அனைவரையும் ஒன்றிணைக்கும் கோட்பாடு.தலித்தியம், கிழக்குப் பிரதேச வாதாம் என்பவை எதிரியால் தமிழர்களைப் பிளவு படுத்த பாவிக்கப்படும் கருத்தோட்டங்கள்.இதற்க்கு தமிழர்களே உதவி வருகிறார்கள்.தமிழர்களைடையே ஒற்றுமை வரவேண்டும் எனில் முதலில் எதிரியின் பக்கம் நில்லாது மக்களைன் பக்கம் நின்று அனைவரையும் உள் வாங்கிய தமிழத் தேசிய அடையாளத்தின் கீழ் ஓர் அணியில் திரள வேண்டும்.ஆனால் தெளிவான ஒரு தலமை அற்ற இந்த நிலை மிகவும் பலவீனமான நிலை.அதனை எதிரி தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறான்.அதற்க்கு எம்மில் சிலர் உடந்தையாக இருந்து கொண்டே மற்றவனை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் சிலர் தமது சுய நலனுக்காக எதிரியிடம் கூலி பெற்று இதனைச் செய்கிறார்கள்.இரு தரப்பினருமே எமது போராட்டாத்தை நலிவடையச் செய்கிறார்கள்.

குறுந்தேசிய வாதாம் என்பதற்க்கும் தேசிய வாதாம் என்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்பதை சுகன் விளக்குவாரா?

உண்மையில் கோட்பாட்டு ரீதியாகச் சிந்தித்தால் இந்த இரண்டிற்கும் எந்த விதியாசமும் இல்லை.

நீ புலி, நீ கொமுனியினிஸ்ட், நீ பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் உள் அடக்கம் அற்ற ஒரு வெற்றுச் சொல்லே இந்த குறுந் தேசிய வாதம் என்னும் சொல். இதனைச் சொல்லும் சோபசக்தி இராகவன் முதலானர் தொடக்கம் சுகன் வரை இதற்கான வரைவிலக்கணம் எங்கேயும் எவராலும் சொல்லப்பட வில்லை.

எல்லோருமே தவறிழைத்தார்கள் என்பதை , ஏறக்குறைய அனைவருமே அதிகபட்சமாக ஓரிடத்திலாவது ஒப்புக்கொண்டபின்னர், சுகனும் அர்ஜுன் அண்ணாவும், ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் சுரண்டிவிடுவது

......

முதலில் எனது கருத்துக்களை புலிகளுக்கு எதிரான கருத்துக்களாக நீங்கள் சித்தரிப்பது குறித்து எனக்கு உடன்பாடு இல்லை. இந்தப் பிரச்சனை சில காலம் தொடர்ந்து இருக்கின்றது. நான் மீளவும் குறிப்பிடுகின்றேன் நான் எப்போதும் விமர்சிப்பது புலிகள் உட்பட்ட அனைத்து பிரிவுகளும் இயங்கிய தளத்தையே ஆகும். இந்தத் தளத்தில் எம்மை நாம் அழித்துக்கொள்வதற்கான அடிப்படை இருக்கின்றது. இந்த அடிப்படைக்கு மேல் எழும் எந்த ஆயுத அமைப்பும் நிறைவானதாக இருக்க முடியாது. சிலர் ஆறுமுக நாவலரை சாதிவெறியர் என்பார்கள். இந்த சமூகத்தின் சாதியத்தை எழுத்துக்கள் மூலம் அவர் மேல் சுமத்திவிடுபவர்கள் நிறைய உண்டு. ஆனால் அவர்வாழ்ந்த காலத்தின் சாதிய சமூகத்தின் நிலைக்கேற்ப அவர் அவ்விடயத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார். சாதியம் அவருக்கு முன்னும் இன்றும் இருக்கவே செய்கின்றது. பிரபாகரன் என்ற ஒருவர் மீது சமூகத் தளத்தில் இருக்கும் அத்தனை குறைபாடுகளையும் சுமத்திவிட்டு இக்காலத்தில் வாழும் நாம் நல்லவர்களாகிவிட முடியாது. நீங்கள் தமிழ்ச்செல்வன் கருணாவை அமர்த்தியது குறித்து சுட்டிக்காட்டுகின்றீர்கள் அதைவிட பல உதாரணங்கள் எனக்கும் தெரியும். ஆனால் நான் சொல்ல முற்படும் விடயம் அதுவல்ல.

குறுந்தேசியம் யாழ்பாணியம் இவைகள் தவிர்க்கமுடியாத தோல்வியின் காரணிகள். ராமநாதன் காலத்துக்கு முற்பட்டே இஸ்லாமியத்தமிழர்களுக்கும் யாழ்பாணத்தமிழர்களுக்கும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கின்றது. சிங்கள இனவாதம் தலைதூக்கி வன்முறையாக மாற்றம் கண்டு ஆயுதப்போராட்டம் என்று வரும்போது இஸ்லாமியத்தமிழர்களும் போராளிகளாக இணைந்து தமிழர் என்ற ஒரு சக்தி உருவானது. ஆனால் அது நீடிக்கவில்லை. எமது பழைய முரண்பாடுகளே வென்றது. இரண்டாகப் பிழந்தோம். அப்போது ஆயுதப்போராட்டத்துக்கு முற்பட்ட ஆதிக்க சக்திகளின் காலத்தில் இருந்த பேதங்களை ஆயதப்போராட்ட காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட தேசியத்தால் சமாளிக்க முடியவில்லை. சிங்களவன் பயன்படுத்தக்கூடிய முரண்பாடு எமக்குள்ளகவே இருந்தது. இஸ்லாமியத்தமிழர்களுக்கிடையிலான விரிசல் என்பதை அதே பாணியில் இருக்கும் எவரும் பெரிதாக எடுப்பதில்லை ஆனால் இது இனவிடுதலைப்போரட்டம் இல்லை என்று உலகுக்கு பறைசாற்றிய முதல் அடி அது என்பதே உண்மை. இந்தப் பிரச்சனையை பலர் புலிகளின் தனிப்பட்ட தவறாக அணுகுகின்றனர் ஆனால் நான் இதை இந்த சமூக இயங்குதளத்தின் பிரச்சனையாக பார்க்கின்றேன்.

அதேபோல் எமது சமூகத்தளம் சிங்கள ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முற்பட்ட காலத்தில் எவ்வாறு இருந்தது என்று பார்த்தால் மேல்சாதித் தெருக்களில் கீழ்சாதி பிணங்கள் எடுத்துச் செல்வதற்கு எதிராக வழக்காடிக்கொண்டிருந்த சமூகம். கீழ்சாதகிளை ஏழை எழியவர்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்த சமூகம். ஒவ்வொரு பிரதேசத்தை சுட்டிக்காட்டி தாழ்த்தி இழித்து பழித்து வாழ்ந்துகொண்டிருந்த சமூகம். இதனூடகத்தான் ஒவ்வொரு தனிமனிதனும் அவனது அழுமையும் காலாகாலம் மரபுவழியாக வளர்ந்துகொண்டிருந்தது.(எமக்குள் நாம் மிக இலகுவாக துப்பாக்கியை பிரயோகிக்கும் குணம் ஒன்றுபட முடியாத மனோநிலை எதிரியுடன் இணைதல் பழிவாங்குதல் எல்லாவற்றுக்குமான அடிப்படை இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றது. எதிரி என்பதும் துரோகி என்பதும் சுலபம் ஆனால் இது சமூகத் தாக்கம் உளவியல் சார்ந்து அணுகப்படவேண்டியது. கடும்போக்கை கடைப்பிடிக்க முடியாது) இதில் எவன் மேலானவனோ அவனே இனத்தின் பிரதிநிதியாக தன்னை அடயாளப்படுத்தி இனத்துக்கொரு வரையறையை கொடுக்கின்றான். இதுதான் கலாச்சாரம் பண்பாடு என்கின்றான். அதன் பின்னால் உருவாகும் அரசியல் என்பதும் இதையொட்டியே உருவாகின்றது. அரசியல் இயங்க முற்படும் இந்த சமூகத்தளத்தில் தான் ஆயுதப்போராட்டமும் நடந்தது தவிர இந்த தளத்தை உடைத்தெறிந்து புதிய தளத்தில் இல்லை. இந்தத் தளத்தின் மீதுதான் பல மாற்றங்கள் நல்லவிதமாக ஆயுதப்போராட்டத்தில் கொண்டுவர முற்பட்டது.ஆனால் இந்த சமூக இயங்குதளம் உடையாமல் இனம் விடுதலை அடைய முடியாது என்பதையே காலம் சொல்லிக்கொண்டிருக்கின்றது.

எல்லோருமே தவறிழைத்தார்கள் என்பதை , ஏறக்குறைய அனைவருமே அதிகபட்சமாக ஓரிடத்திலாவது ஒப்புக்கொண்டபின்னர், சுகனும் அர்ஜுன் அண்ணாவும், ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் சுரண்டிவிடுவது......

காயப்பட்டவர்கள் நகராது, வீழ்ந்த இடத்திலயே ,எப்போதும் குற்றுயிராய் கிடப்பதை உறுதிசெய்வதற்கே!! ,

என்று நான் கருதினால்... சுகனின் விடை அதற்கு என்னவாக இருக்கலாம்?!

ஒப்புக்கொண்டால் நாடுகடந்த அரசு ஏன் இரண்டானது.? ஏன் மாவீரர் தினத்தை ஒரு அணியாகக் கொண்டாட முடியவில்லை புலம்பெயர் தேசத்தில் எத்தனை நுர்று குழுக்கள் தனிநபர் தலையீடுகள் என்று பார்த்தாலும் அதற்கான அடிப்படை இந்த சமூக இயங்கு தளத்தில் இருந்து எம்மால் வெளிவர முடியவில்லை என்பதே. எம் எல்லோருக்கும் தெரியும் நாம் இவ்வாறு பிரிந்து சிதைந்து சென்றால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியாது என்று ஆனால் தெரிந்தும் தான் முரண்படுகின்றோம். இந்தக் களத்தில் எத்தனை தலைப்புகளில் ஒரு தரப்பை பற்றி என்னொருவர் எதைஎதையோ எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். இவைகள் விமர்சனங்கள் இல்லை உடனடியாக அரச கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றது. குற்றுயிராய் கிடப்பவனுக்கு தெளிவுதண்ணி கொடுப்பது போல் எழுதினாலும் பல நேரங்களில் மடேறி மிதிப்பதாக இருக்கின்றது.

சிங்களவர்களுடன் சாத்வீக முறையில் போராடி பலனின்றியே ஆயுதப்போராட்டம் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக உருவானது. இனிமேலும் தமிழர்களுக்கு சிங்களவர்களிடம் இருந்து விடுதலை என்பது இணக்க அரசியல் சார்ந்து கிடைக்கப்போவது இல்லை .

அந்த கேள்விக்கு , அதுவா தெளிவான பதில்?

சுத்தம்!!

எந்தப்பக்கமும் இல்லை. எமது விடுதலைப்போராட்டமும் அதன் உள்முரண்பாடுகளும் எமது சமூகத்தில் இருப்பில் இருந்து தனித்துவமான உள்முரண்பாடுகளின் நிமிர்த்தம் பல பின்னடைவுகளை சந்தித்தது. இதை என்னொர் நாட்டு போராட்டத்துடன் ஒப்பிடுவதோ அல்லது வேறு நாட்டு சூழலில் உருவான இசங்கள் சித்தாந்தங்கள் ஊடாக சரிப்ப்ண்ணலாம் என்பதோ சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. உயர்வான தாழ்வான என்று பார்க்கக் கூடிய பிரச்சனை இல்லை.

நீங்க வேறுநாட்டு போராட்டங்களுடன் ஒப்பிட்டுபார்க்க விரும்பாததற்கு காரணம் அதுவல்ல,

நிஜமான காரணம்,,

எந்த நாட்டில் எழுந்த ஆயுதரீதியான போராட்டத்திலும், எமது நாட்டில் நடந்ததைப்போன்றே, பலவிடயங்கள் நடந்தே இருக்கின்றன!

அதனை தொட்டுசென்றால், எமதுபோராட்டத்திலதான் இவ்ளோ அநியாயம் அக்கிரமம் என்று நீங்கள் வைக்கும் வாதங்கள் , காரம் &சாரம் குறைந்துபோகும்!

அதற்காக நடந்துபோன உயிர்ப்பலிகளை நியாயப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கிடையாது! அதனை தவிர்க்கும் சாத்தியங்கள் சகல தரப்பிலும் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே நிஜம்!!

பெரும்பான்மையான மக்கள் நேசித்த ஒருபோராட்டம், அவர்கள் விரும்பாமலே தலைக்குள் இறக்கப்பட்ட இடியாய் முடிவிற்குவந்த பின்னர்,, அடுத்து என்ன? என்று ஏறக்குறைய அனைவருமே சூன்யமான இருக்கும் இன்றைய நிலையில்,

சுகன் போன்ற கருத்தை உடையவர்கள் ,கடந்த காலங்களில் நடந்தவை பற்றி பாடம் எடுக்க முனைவது, அவை

பற்றி யாரும் அறிந்திருக்கவில்லையென்றா? இல்லை...

அமைதியான குளத்தின்மீது விடாமல் கல்லெறிந்துகொண்டிருந்தால்தான்,, மீன்கள் மேலே வராது என்றா?

ஒப்புக்கொண்டால் நாடுகடந்த அரசு ஏன் இரண்டானது.? ஏன் மாவீரர் தினத்தை ஒரு அணியாகக் கொண்டாட முடியவில்லை புலம்பெயர் தேசத்தில் எத்தனை நுர்று குழுக்கள் .

ஒன்றிலிருந்து ஒன்றிற்கு சடுதியாய் தாவிசெல்வது ,

ஒன்று,,ஒருவருக்குள்ள பதற்றத்தைக்காட்டும், இல்லைனா, பதில் அதற்கு இலகுவானதாக .இருக்கவில்லையென்றும் ஆகலாம்!

தாயகத்தில் தனது இனத்தை தானே கொன்றழித்தது , என்ற உங்கவாததிற்கான விளக்கமே என்னால பதியப்படும்போது, நீங்க நாடுகடந்த அரசு, மாவீரர் மேட்டருக்கு தவ்வுறீங்க!

அவை இரண்டுக்குமான ஆதங்கம், அதிசயிப்பு, மாவீரர்சம்பந்தமான சோகம், ,,,

இது எல்லாவற்றிற்கும் நீங்க கேள்விகேட்கமுதலே , நானே கேள்வி கேட்டுட்டேன் சுகன்,,

யாரையும் இல்லை, அது என்னை நானே!

http://www.yarl.com/...showtopic=92853

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92723

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் எதிரி அல்லது துரோகி என்று கடும்போக்கோடு அணுகுவது சமூக முரண்பாடுகளால் சிதைந்துபோன எமது இனத்தை என்னும் படு குழியில் தள்ளும்.

எனக்குத் தெரிந்த ஒருவர் தாயகத்தில் ஒரு இடைநிலைப் போராளியைக் காட்டிக் கொடுத்துவிட்டு (கேணல் சார்ள்ஸ் இவரின் க்ட்டளையின்கீழ் செயற்பட்டவர்) தப்பிவிட்டார்..! இந்திய ராணுவம் அந்தப் போராளியைச் சுட்டுக்கொன்றது. :(

காட்டிக்கொடுத்தவர் இப்போது கனடாவில் சுகபோகமாக இருக்கிறார்..! :unsure: அடுத்த விழாவில் அவரைக் கண்டால் கட்டி அணைக்கப் போறன்..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கணிசமானளவு மக்கள் கூட்டம் இருந்து வருகின்றது

எதிரியுடன் இணைந்து வாழவேண்டிய நிர்பந்தம் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கின்றது

விடுதலைக்கென்று புறப்பட்ட பல தமிழர்கள் ஒன்றில் மண்டையில் குண்டேந்துவது இல்லையேல் எதிரியுடன் இணைவது இரண்டைத் தவிர வேறு மார்க்கம் அற்ற சூழலில் எதிரியுடன் இணையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

தமிழரை தமிழரே எதிரியாகப் பார்க்கும் மனோபாவத்தை தமிழர்களின் சமூக முரண்பாடு வளர்த்துவிட்டிருக்கும் அடிப்படையில் எதிரி இணைவது குறித்து கடும்போக்கை கடைப்பிடிக்க முடியாது உதாரணமாக மதவாதம் பிரதேசவாதம்

ஒன்றில் எதிரி அல்லது துரோகி என்று கடும்போக்கோடு அணுகுவது சமூக முரண்பாடுகளால் சிதைந்துபோன எமது இனத்தை என்னும் படு குழியில் தள்ளும்.

விடுதலைக்காக போராடி மரணித்த வீரர்களை முன்நிறுத்தி ஒன்றுபடவேண்டுமே தவிர முரண்பாடுகளை வளர்க்கலாகாது.

ஒன்றில் எதிரி இல்லையேல் துரோகி என்றால் முன்னை விட இப்போது துரோகிகள் பட்டியல் பன்மடங்கு நீண்டுவிடும்.

எதிரியுடன் இணைவதற்கான செயற்பாடுகளோ துரோகம் என்பதுவோ அதற்கான சூழ்நிலைகளையும் சமூக காரணிகள் பின்புலங்களையும் கவனத்தில் கொள்வது அவசியமானது

பெரும்பான்மை மக்களின் புலப்பெயர்வும் சிங்களவர்களுக்கு மிகச் சாதகமான ஒரு விசயமாகவே அமைந்தது ஆனால் அதை நாம் புலம்பெயர்வுக்கான சூழ்நிலைகளை முன்நிறுத்தி நியாயப்படுத்துவதால் அது எமக்கு பெரிய விடயமாகத் தெரிவதில்லை.

இனவிடுதலைக்காக மாண்ட வீரர்களின் கனவு பலிக்க வேண்டுமானால் நாம் பல கசப்பான விசயங்களை கடந்தும் அனுசரித்தும் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தி இனம் என்று ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம். இல்லையேல் இனம் என்ற ஒன்று முற்றாக சிதைந்த நிலையில் இனவிடுதலைக்கான அவசியம் இல்லாமல் போகும்.

உங்களுடைய கருத்துக்கள் எதோ ஒரு நியாயத்தை கற்பித்தாலும்.............

இன்னொரு தளத்தை நீங்கள் மறந்து செல்கின்றிர்கள் அல்லது எதோ ஒரு காரணத்திற்காக மறைக்க விரும்முகிண்றீர்கள்.

அது ஒருவனுடைய சுயலமும் ஆச பசங்களுக்கு அடிமையாவதும் ஆகும். சூழ்நிலை காரணமாக அவனிடம் சற்று பொறுப்பும் இருக்கும்போது அது சின்ன பின்னமாக்க படுகின்றது.

ஜோர்ஜ் புஸசின் தனிபட்ட எண்ணை வியாபார ஆசைக்கு அமெரிக்க இராணுவத்தை பலிகொடுத்து அமெரிக்காவின் பொருளாதரத்தை செலவழித்து ஈராக் மீது தொடுத்த போரை................. அமெரிக்க ஏகாபத்தியம் எனும் போர்வைக்குள் இலகுவாக முடிவிட முடியாது.

அதுபோலவே தமிழ் சமுதாயத்திற்குள் பல முரண்பாடுகள் இருந்தது என்ற நிறுவல் ஆமியுடன் சேர்ந்து பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர்களை மறைத்து விட முடியாது.

உமா மகேஸ்வரன் சிறிசபாரத்தினம் பிரபாகரன் எல்லோரும் ஒரே வீடில் இருந்து ஒன்றாக சமைத்து சாப்பிட்டவர்கள். ஒரே இலட்சியத்துடன் ஒன்றாக கூடியவர்கள் இதில் பிரபாகரன் இளையவன் (தம்பி) மூத்தவர்களுக்கு இலட்சியம் ஒத்துவரவில்லை பிரபாகரனுக்கு தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்களுக்கு வந்த இன்ன பிற ஆசைகளே பிரிந்து செல்லவும் தனியாக ஒன்றை தொடக்கவும் வித்திடுகின்றது. இவர்களுடைய இடங்களை நிரவவே பிரபாகரன் தலைவர் ஆகிறார் உறுதியும் இலட்சியமும் புலிகளை புயல் போல பிரதிபலிக்கின்ற அதே நேரம் மற்றைய தளத்தில் பொறாமையும் வெறுப்பையும் உண்டுபண்ணுகின்றது . இதில் சமூதாய முரண்பாட்டை எப்படி சாடுவது ?

உமா மகேஸ்வரன் சிறிசபாரத்தினத்ம் ஆகியோரோடு ஒத்துவரவில்லை என்று தலைவர் பிரிந்தது தவறில்லை அதே போல் கருனா பிரிந்ததும் தவறில்லை ஆனால் ?????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.