Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இருந்தால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு என்னதண்டனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவவின் பேச்சு வன்முறையைத் தூண்டுறதா இருக்கு..! ஆயுதத்தைத் தூக்கிப்போட்டு நாங்கள் பட்ட பாடு போதும்..! சிங்களவனுடன் இணக்க அரசியல் செய்து எங்களைத் தக்கவைக்க வேண்டிய நிலையில் உள்ள தாயகத் தமிழர் இவற்றையும் தாங்கிக் கொள்வர்..! புலம்பெயர்தமிழர் இதில பேச எதுவும் இல்லை..! :icon_mrgreen:

நீங்கள் அந்த அதிகாரிக்கு கூறும் போது அவர் அதற்க்கு ஒன்றும் பேசவில்லையா ? அவருக்கு புரிந்ததோ தெரியவில்லை, <_<

மனம் திறந்து பேசியதற்கு நன்றி ........

இமெல்டா அவர்களே இத் தகைய நச்சுசு சூழல் யாரால் உருவாக்கப்பட்டது? பாலியலைத் தூண்டும் காணொளிகள் யாரால் வினியோகிக்கப் படுகின்றன? பட்டன? ஒரு இளம் யுவதி ஒரு பதிரிகைப் பேட்டியில் எவ்வாறு ஒரு சிறிலங்கா இராணுவ வீரரால் தயார்படுத்தப்பட்டு/காதலிக்கப் பட்டு பின்னர் அவரின் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு காணொளிக் காட்ச்சிகள் எடுக்கப்பட்டு மிரட்டப்பட்டார் என்று சொன்னாரே? அதற்க்கு என்ன நடந்த்தது? திட்டமிட்ட ரீதியில் இராணுவப் புலானய்வுப் பிரிவினால் இவை நடத்தப்படுகின்றன என்னும் பேருண்மை உங்கள் விசாரணைக்ளில் இருந்து உங்களுக்குப் புலப்படவில்லையா?

விகிலீக்ஸில் அமெரிக்கத் தூதுவரே இவை ஒட்டுக் குழுக்களால் நடாத்தப்படும் விபச்சாரம் எனவும் அந்த ஒட்டுக் குழுக்களை சிறிலங்கா இராணுவமும் இயக்குவதாகவும் சொல்லி இருந்தாரே அவருக்குத் தெரிவது யாழ் அரச அதிபரான உங்களுக்குத் தெரியவில்லையா?

சுதந்திரம், தொழில் நுட்பம் எல்லாம் இருக்கும் மேற்குலக சமூகத்தில் இவை இவ்வளவு பரந்து பட்ட அளவில் ஏன் நடப்பதில்லை.?காரணம் மிகச் சுலபமானது, காலனித்துவ இராணுவம் தமக்கு எதிரான செயற்பாடுகளை மழுங்கடிக்க இளையோரை , தமது காமத் தேவைகளுக்காகவு, சமூகத்தை ஆரோக்கியமான வழியில் செல்ல விடாது சீரழிவுக்கு உள்ளாக்க வேண்டும் என்னும் நோக்கிலும் திட்டமிட்டுச் சீரழிப்பதே.இவற்றிற்க்கு எதிரான நடவடிக்கைகள் ஓட்டுக் குழுத் தலவர் டக்கிளசில் தொடங்கி புலனாய்வுத் தலைவர் கெந்த விதாரண முதல் தொடங்க வேண்டும். நடக்கிற காரியமா இது?

எய்தவர் இருக்க அடித் தளத்தில் இருக்கும் சில்லறை அம்புகள் மீது பழியைப் போட்டு, அரச இயந்திரத்தை இராணுவ மயப்படுத்தும் சிறிலங்கா இராணுவப் புலானாய்வு மையம் அரங்கேற்றும் நாடகத்தின் ஒரு பகுதியே இந்தப் பேட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி தொடர்பான யாழ் கள நிலவரம்...

இதை அர்சுன் அண்ணா.. வல்குனோ.. அண்ணா ஆக்கள் பார்த்தா தொலைஞ்சுது. புலிகள் வழங்காத சுதந்திரத்தை மக்கள் இன்று சிங்களப் படைகளிடம் அனுபவிக்கிறார்கள் என்பதையே இது காட்டுது.. இவா அதைக் குலைக்க முயற்சிக்கிறா.. எல்லாம் புலிகளை இன்னும் மனசில வைச்சிருக்கிறதால வாற வினை... என்று சொல்லப் போகினம். :lol:

நம்மட விடிவெள்ளி அண்ணா வந்து.. ஐயோ..ஐயோ.. என்று போட்டு.. இதைத்தான் நான் போயிட்டு வந்து பயணக்கட்டுரையில எழுத.. கேட்கமாட்டிச்சினம் என்றீங்களே. இப்ப அரசாங்க அதிபரே சொல்லிட்டா.. யாழ்ப்பாணத்தில சுதந்திரம் அதிகம் வழங்கப்பட்டிருக்கு என்று..! இப்பவாவது என்னை.. எனது அண்ணன் டக்கிளசை நம்புங்கோ. அண்ணன் மனசு வைச்சா தமிழ் மக்களுக்கே சுதந்திரம் வாங்கி தருவார். :D

நம்மட சிவாண்ணா வந்து.. புலிகளுக்கே இந்த வித்தைகளை எல்லாம் கற்றுக் கொடுத்தது.. நம்மட கிழக்கின் சிங்கம்.. கருணா அம்மான். அவர் கையோட இருக்க ஏன் கவலைப்படுறீங்க. கூப்பிட்டு வைச்சு.. நாலு தட்டுத் தட்டி விடுங்கோவன்.. என்று அலறப் போறார். :D

நம்மட சுகன் அண்ணா வந்து... இது எல்லாம் வன்னி என்ற குறுந்தேசத்தின் குறுந்தேசிய காலக் கொள்கை அடிப்படையில் நவீன யாழ்ப்பாணத்தை பார்க்கிறதால வாற பிரச்சனை. இன்றைய யாழ்ப்பாணம்.. முஸ்லீம்கள்.. சிங்களவர்கள்.. தமிழர்கள் என்று மூவினங்களும் ஒன்றுகூடி வாழும்.. ஒரு அருந்தேசிய நிலம். அதில் இப்படியான ஒரு சில சம்பவங்கள் நிகழ்வதை வைச்சுக் கொண்டு.. முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தை குற்றம்சாட்டுவதும்.. அதன் பரிபாலனத்தை இகழ்வது போன்று கருத்துத் தெரிவிப்பதும் தவறு. :D

நிழலி அண்ணா வந்து.. நான் சுகனின் கருத்தை அப்படியே வரிக்கு வரி வழிமொழிகிறேன் என்பார். :)

சகாரா அக்கா வந்து.. நான் நீண்ட நாட்களின் பின் இமல்டாவிடம் இருந்து நல்ல கருத்தொன்று வந்திருப்பதை இன்று தான் காண்கிறேன் என்பா. :D

நம்ம கிருபண்ணா வந்தா... பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் வழங்கப்படுவதை ஒடுக்கினம்.. இது போதாது என்று சொன்னாலும் சொல்லலாம்..! மகிந்த சிந்தனை.. பெரியாரின் சிந்தனையை ஒட்டியது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :lol:

நான் வந்தா இதைத் தான் சொல்லுவன்.. கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஒன்றை.. சில விடயங்களில் மட்டும் எதிரி வழங்கிறான் என்றால்.. அதில் அவன் ஒரு சூழ்சி வைச்சிருக்கிறான் என்பதே அர்த்தம். அது ஒரு இனத்தை இப்படித்தான் அழிக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சூப்பரு.. :lol: ஒருத்தரும் வந்து கருத்துச் சொல்லாத குறையை நீங்கள் தீர்த்து வச்சிட்டீங்கள்..! :D

அவ பேச்சு சுதந்திரம் இல்லாததால் மெல்லவும் ஏலாமல் விழுங்கவும் ஏலாமால் தவிக்கிறா. குற்றவாளிகள் பூரண சுதந்திரம் அனுபவிக்கிறாரகள். இப்படி மேடை கட்டி கூட்டம் போடவேண்டி வந்ததே கோட்டுக்கு போய் நீதி கேட்க சுதந்திரம் இல்லாமல் போனதால் மட்டுமே. பெண்கள் சுதந்திரத்தால் குற்றங்கள் விளையா. இவசொல்வது போலல்லாமல் அரேபியநாடுகளில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. பெண்களுக்குஎதிராக இழைக்கபடும் வன்முறைகள் பெரும் பாலானவை அங்கே குற்றங்களாக பதிய முடியாது.

வன்னியில் பெண்கள் சுதந்திரமாக உலவி வந்து குற்றங்கள் நிலவா நாட்களைப்பற்றி சமாதான காலத்தில் வன்னிக்குபோன சிங்கள ஆசிரியர் எழுதியிருந்த வரிகள் இவை. (இமெல்டாவும் படித்திருந்திருப்பா). தனது பயண நாட்களில் ஒருநாள் தான் இரவு 11.00 மணிக்கு தெருவில் பயணித்து கொண்டிந்தாராம். ஓர் இளம் பெண்(பள்ளி மாணவி) துவிச்சக்கர வண்டியில் வந்தாராம். தான் வேண்டுமென்றே இடைமறித்து இந்த நேரத்தில் எங்கே போய்விட்டு வருகிறா எனக்கேட்டாராம். எங்கோவோ படித்துவிட்டு வருவதாக கூறினாவாம். இந்த நடு நிசியிலா? உனக்கு பயம் கிடையாதா எனகேட்டாராம். அதற்கு அவ "பயம்......? எதற்கு?" என்று கேட்டு விட்டு பைசிகிளில் ஏறி போய்விட்டாவாம். அவர் இப்படி முடித்திருந்தார். "நமது அரசாங்கம் இந்த பெண்ணின் விடையை சற்று கவனிக்க வேண்டும். அவர்கள் ஆட்சியில், இளம் பெண் ஒருவர் நடுநிசியில் சுதந்திரமாக உலவி வரும்பொது எதற்காவது பயப்பட வேண்டுமா என்பது தெரிய வேண்டியதேவையில்லாமல் வளர்ந்திருக்கிறா. இப்படி பாதுகாப்பு தெற்கிலும் வருமா?"

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் குத்திகும்மியடிச்சாலும்..........உண்மையென்பது வாய்தவறியாவது வெளிவரும்.இதுதான் இயற்கையின் நியதி.

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு குழுக்களும் இன்னும் பல குழுக்களும் வைத்தாலும் வல்லுறவை நிற்பாட்ட முடியாது.ஏனெனில் இராணுவ குண்டர்களும் ,அவர்களோடு சேர்ந்து நிற்கும் தமிழ் குழுக்களும் தான் இவற்றை செய்கிறார்கள்.செய்பவர்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இமெல்டா அக்காவை குடைய "தானாட விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல" புலிகளின் கட்டுப்பாட்டில் இவை நடை பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கவனத்தை ஒரு புள்ளியை நோக்கிக் குவிக்க விடாமல், சில குறிப்பிட்ட இணையத் தளங்களாலும், சில அரசியல் வாதிகளாலும் இடைக்கிடை வெளிவரும் கதைகளே இவை!

இதுவும் எம்மீது அவிழ்த்து விடப்படும் ஒரு விதமான போர் தான்!

நாங்கள் யாழில் படித்த காலத்திலும், கசுரினா பீச்சுக்கு, மாணவ மாணவிகள் போய் வந்தது நடந்தது! இதில் ஒன்றும் புதுமை இல்லை! இந்த நிகழ்ச்சிகள் ஏதோ ஒரு தேவையின் பொருட்டு, இப்போது பெரிதாக்கப் படுகின்றது என்பது எனது, தனிப்பட்ட கருத்தாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்..

எனது நேரத்தை மிச்சப்படுத்திக்கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு குழுக்களும் இன்னும் பல குழுக்களும் வைத்தாலும் வல்லுறவை நிற்பாட்ட முடியாது.ஏனெனில் இராணுவ குண்டர்களும் ,அவர்களோடு சேர்ந்து நிற்கும் தமிழ் குழுக்களும் தான் இவற்றை செய்கிறார்கள்.செய்பவர்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இமெல்டா அக்காவை குடைய "தானாட விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல" புலிகளின் கட்டுப்பாட்டில் இவை நடை பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஹலோ நுணாவிலான்.. :wub:

இதை நான் வன்மையா கண்டிக்கிறன்.. :wub: தமிழ் (ஒட்டு)க்குழுக்கள் ராணுவத்திட்ட போனதுக்குக் காரணம் பாதுகாப்பு தேடி.. புலிகள் சுடுவினம் எண்டு பயந்து பாதுகாப்பு தேடி அங்கை போனவை.. :rolleyes:

ஆனால் இப்ப அநியாயம் பண்ணுகினம்.. பட் தற்ஸ் ஓகே.. :unsure:

அதால இந்த பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியது புலிகளே..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி தொடர்பான யாழ் கள நிலவரம்...

நான் வந்தா இதைத் தான் சொல்லுவன்.. கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஒன்றை.. சில விடயங்களில் மட்டும் எதிரி வழங்கிறான் என்றால்.. அதில் அவன் ஒரு சூழ்சி வைச்சிருக்கிறான் என்பதே அர்த்தம். அது ஒரு இனத்தை இப்படித்தான் அழிக்கும்..! :icon_idea:

இளம்பராயத்தினருக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் எல்லாம் புலம்பெயர்ந்து வந்துவிட்டதால், கட்டுப்பாடற்ற சுதந்திரம் நிலவும் மேற்கு நாடுகளில்கூட புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்ததிகள் ஒழுக்கசீலர்களாக இருக்கமுடிகின்றது. நற்குணம் மிக்கவர்கள் இல்லாததால் தாயகத்தில் உள்ள இளம்பிராயத்தினர் எதிரியின் சூழ்ச்சி வலைக்குள் அகப்பட்டு தமது எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர். இவர்களை வஞ்சகர்களின் கரங்களில் இருந்து மீட்டு, தேசிய உணர்வை ஊட்டி, இழந்த தாயகத்தை மீண்டுகொள்ள புலம்பெயர் தேசத்தில் இருந்து தேசியக் கலாச்சார பண்பாட்டு வீரர்கள் அணியொன்றை நெடுக்ஸ் தலைமையில் அனுப்புவோம். :icon_idea:

சி.கு. இமெல்டா காணொளி(லி) யில் என்ன சொன்னார் என்று பார்க்கவில்லை!

இச்செய்தி தொடர்பான யாழ் கள நிலவரம்...

நம்மட சுகன் அண்ணா வந்து... இது எல்லாம் வன்னி என்ற குறுந்தேசத்தின் குறுந்தேசிய காலக் கொள்கை அடிப்படையில் நவீன யாழ்ப்பாணத்தை பார்க்கிறதால வாற பிரச்சனை. இன்றைய யாழ்ப்பாணம்.. முஸ்லீம்கள்.. சிங்களவர்கள்.. தமிழர்கள் என்று மூவினங்களும் ஒன்றுகூடி வாழும்.. ஒரு அருந்தேசிய நிலம். அதில் இப்படியான ஒரு சில சம்பவங்கள் நிகழ்வதை வைச்சுக் கொண்டு.. முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தை குற்றம்சாட்டுவதும்.. அதன் பரிபாலனத்தை இகழ்வது போன்று கருத்துத் தெரிவிப்பதும் தவறு. :D

நிழலி அண்ணா வந்து.. நான் சுகனின் கருத்தை அப்படியே வரிக்கு வரி வழிமொழிகிறேன் என்பார். :)

:D :D :D :D :D

Emeldasukumar150KL.jpg

Monday, 2011-10-24 20:59:40]

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்ற பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைக் கொடுக்கச் செல்லும் போது கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அந்தப் பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களைக் கேட்பதாகவும் அவர்களின் வீட்டுக்கு வருகிறேன் என பெண்களை துன்புறுத்துவதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இன்ற திங்கட்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் உரிமைகளும் செய்தி அறிக்கையிடலும் என்ற தொனிப்பொருளில் யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இந்தப் பயிற்சிப்பட்டறையில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்முறைகள் இடம்பெற்றால் ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு அதனை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும். சிறுவர்கள் மீதான உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வீடுகளில் நடைபெறும் சிறுவர் உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வருவதோடு நின்றுவிடாது அந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் ஊடகங்கள் பாடுபடவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

'ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலில் சிறுவர்களது உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு செய்தி அறிக்கையிடலைச் செய்யவேண்டும். குடும்ப வன்முறைகள் யாழில் அதிகரித்துள்ளதுடன் இந்த வன்முறைகளினால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். சிறுவர்கள் மனவிரக்திக்கு செல்லவிடாது அவர்களைப் பாதுகாக்க சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் விரைந்து செயற்பட வேண்டும்.

சிறுவர்களின் உரிமைகளில் பெற்றோர்கள் பொறுப்புடனும் கண்டிப்பாகவும் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகளை மீறிச் செயற்படக்கூடாது எனக்கேட்டுக் கொண்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51246&category=TamilNews&language=tamil

http://www.seithy.co...&language=tamil

அவர்களுக்கு தெரிந்ததை தானே அவர்களால் செய்ய முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.