Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 மாநகராட்சிகளில் மதிமுகவுக்கு அதிக ஓட்டு- பலஇடங்களில் கணிசமான வாக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21-vaiko-hand-22-300.jpg

சென்னை: மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

http://thatstamil.on...ls-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.. அதுக்காக ஜெயாவுடன் போய்ச் சேரத்தான் வேண்டுமென்பதில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை வெளியான முடிவுகளின் படி.. குளித்தலை நகராட்சி.. வாழப்பாடி நகராட்சிகளில் மதிமுக வெற்றி பெற்றுள்ளது. கணிசமான வாக்குகளை இதர சில இடங்களில் பெற்றும் போராடித் தோற்றுள்ளது. பெரும் தி.மு.க க்கள் மத்தியில் வைகோ.. இம்முறை நிறையவே தலைநிமிர்ந்து நிற்கிறார். வாழ்த்துக்கள்.

அதேவேளை காங்கிரஸ் சில இடங்களில் வென்றிருந்தாலும்.. பல இடங்களில் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியைத் தழுவி உள்ளது. 3ம் இடத்தை தேமுதிக பிடிக்க காங்கிரஸ் இன்னும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாமக.. விடுதலைச் சிறுத்தைகள்.. இடதுசாரிகள் பெரும் சரிவை சந்தித்துள்ளனர்.

Edited by nedukkalapoovan

அம்மாவின் ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்தால் அவரை யார் வெல்லக்கூடும் என்பதில் வை.கோ. சாதுரியமாக காய்களை நகர்த்தவேண்டும். சந்தர்ப்பங்கள் உண்டு.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க. தனித்து நின்று, தனது பலத்தை நிரூபித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில், இவர்களின் வாக்குப் பலத்தைப் பார்த்து.... கருணாநிதி அழைப்பு விடுக்கலாம்.

அங்கு போய் சேர்வது நல்லது போல்... படுகின்றது.

கிழம் மண்டையை போட்டால்..... தி.மு.க.வில் பெரிய பிரளயம் உண்டாகும்.

அந்தச் சந்தர்ப்பத்தை, வை.கோ. தனது கட்சியை பலப்படுத்த பயன்படுத்தலாம்.

மதிமுக குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் பெறவில்லை; பல இடங்களில் காங்கிரஸை விட குறைந்த அளவுக்கே வாக்கு வாங்கியுள்ளது

அதிமுக ஆதிக்கம்.. மாநகராட்சி முதல் ஊராட்சி வரை!

சென்னை, அக்.21,2011

பல்முனை போட்டி கொண்ட உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகள் முதல் ஊராட்சி ஒன்றியங்கள் வரை அனைத்து நிலைகளிலும் ஆளும் அதிமுகவே முழுமையான ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டது.

மாநிலத்திலுள்ள சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளிலும் அதிமுக மேயர் வேட்பாளர்கள் வசப்படுத்தியுள்ளனர்.

மொத்தமுள்ள 125 நகராட்சிகளில், சுமார் 75 சதவீதத்துக்கும் மேலான நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றுகிறது.

மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய பதவிகளிலும் அதிமுக ஆதிக்கமே ஓங்கியுள்ளது.

இந்தத் தேர்தலில் அதிமுக தனித்து களம் கண்டபோதிலும், தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது என்பது தெளிவு.

மாலை 5 மணி நிலவரப்படி, 4 மாநகராட்சி மேயர்கள் (எஞ்சிய 6-ல் முன்னிலை), 200 மாநகராட்சி கவுன்சிலர்கள், 74 நகராட்சித் தலைவர்கள், 1,352 நகராட்சி கவுன்சிலர்கள், 277 பேரூராட்சி தலைவர்கள், 2,735 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 272 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக அதிமுக 4,923 பதவிகளில் வெற்றி பெற்றிருந்தது.

அதேவேளையில், திமுக 59 மாநகராட்சி கவுன்சிலர்கள், 15 நகராட்சித் தலைவர்கள், 764 நகராட்சி கவுன்சிலர்கள், 114 பேரூராட்சி தலைவர்கள், 1,745 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 67 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக 2,764 பதவிகளில் வெற்றி பெற்றிருந்தது.

பலன் தராத திமுகவின் 'தனி'த்துவம்..

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற நிலை, திமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருந்திருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்துகிறது.

மாநகராட்சிகள் எதையும் கைப்பற்ற முடியாத திமுக, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் சோபிக்கவில்லை.

அதேவேளையில், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் அதிமுகவுக்கு குறிப்பிடத்தக்க நெருக்குதல் தர முடிருந்திருக்கிறது. ஒட்டுமொத்த பதவிகளுக்கான வெற்றிப் பட்டியலில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

தேமுதிகவை முந்திய காங்கிரஸ்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் இணைந்து களமிறங்கிய தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் இருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சியளிக்க கூடிய முடிவாக இருக்கும்.

வாக்கு விகிதாச்சாரத்தில் அதிக எண்ணிக்கையை கொண்டிருந்தாலும், கைப்பற்றிய பதவிகளின் அடிப்படையில் காங்கிரஸை விட பின்னடவைச் சந்தித்திருக்கிறது விஜயகாந்தின் தேமுதிக.

மாலை 5 மணி நிலவரப்படி, 8 மாநகராட்சி கவுன்சிலர், 124 நகராட்சி கவுன்சிலர், 24 பேரூராட்சித் தலைவர், 355 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 14 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

அதேவேளையில், 3 மாநகராட்சி கவுன்சிலர், 1 நகராட்சித் தலைவர், 102 நகராட்சி கவுன்சிலர், 3 பேரூராட்சித் தலைவர், 379 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 15 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளில் தேமுதிக வெற்றி பெற்றிருந்தது.

இதர கட்சிகளில் முந்திய பிஜேபி!

உள்ளாட்சித் தேர்தலில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஒட்டுமொத்த பதவிகளின் எண்ணிக்கையில் பிஜேபி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி அனைத்து பதவிகளுக்கான ஒட்டுமொத்த எண்ணிக்கை : பிஜேபி - 226, பாமக - 163, மதிமுக 138, மார்க்சிஸ்ட் 131, இந்திய கம்யூனிஸ்ட் 48, விடுதலைச் சிறுத்தைகள் 21 பதவிகளில் வெற்றி பெற்றிருந்தது.

கலக்கிய சுயேட்சைகள்..

உள்ளூர்வாசிகளின் நன்மதிப்புக்கு அதிமுக்கியத்துவம் தரப்படும் உள்ளாட்சித் தேர்தலில், இம்முறை சுயேட்சைகள் வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மூன்றாம் இடம் சுயேட்சைகளுக்கே.

மாலை 5 மணி நிலவரப்படி, 20 மாநகராட்சி கவுன்சிலர்கள், 5 நகராட்சித் தலைவர்கள், 425 நகராட்சி கவுன்சிலர்கள், 58 பேரூராட்சி தலைவர்கள், 1,873 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 49 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சுயேட்சைகளே!

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

மதிமுக குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் பெறவில்லை; பல இடங்களில் காங்கிரஸை விட குறைந்த அளவுக்கே வாக்கு வாங்கியுள்ளது

விகடன் தனது குள்ள நரித்துணத்தை காட்டிப் போட்டுது போலை... நிழலி.

காங்கிரசிஸின் வயது 65 மேல் இருக்கும். அதுகும் மத்திய அரசு. பணம் பாதாளம் மட்டும் பாயும்.

ம.தி.மு.க. பதினாறும் தாண்டாத பச்சைப் பிள்ளை. அதை பச்சையாய் சொன்னால்...

பார்பான், திராவிடன் என்று விசர்க்கதை கதைப்பாங்கள்.

ஜெயலலிதா வென்றது கூட சீமானால் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா வென்றது கூட சீமானால் தான் .

இப்படி நக்கலும் நளினமாக கதைக்கும் எத்தனை சோத்துப்பாசல்களை கண்டு விட்டோம் :lol: :lol: .30 வருடமாக செய்ததை தான் இப்பவும் செய்து கொண்டு புலிகள் பிழை,சீமானின் பிரச்சாரம் என்று நக்கல் விடும் அளவுக்கு தங்களின் ஊத்தையை எப்பொழுதுமே சிந்திப்பதில்லை.

ஆய்வாளர் வந்து இதே கருத்துக்களை அன்றாடம் அள்ளித்தெளிக்க ஆகா ஓகோ என்கின்றீர்கள் .அதையே நான் சொன்னால் நக்கல் என்கின்றீர்கள்.

என்ன கொடுமை சார் இது .

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியை கொன்றது புலி மாவீரர்கள்.

இப்போவாவது... அர்சுணுக்கு சந்தோசம் வருதா....? வருதா....?

வரும் காலத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது சிலசமயம் எதிர்கட்சியாக சந்தர்ப்பம் கூட வரலாம் வை கோ க்கு ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வாளர் வந்து இதே கருத்துக்களை அன்றாடம் அள்ளித்தெளிக்க ஆகா ஓகோ என்கின்றீர்கள் .அதையே நான் சொன்னால் நக்கல் என்கின்றீர்கள்.

என்ன கொடுமை சார் இது .

கடந்த தமிழக சட்டசபை தேர்த்தலில் சீமானின் பிரச்சாரம் ஜெயலலிதாவை வெற்றியடைய வைத்தது.மேலும் காங்கிரசின் படுதோல்விக்கும் அவரின் பேச்சுத்தான் முக்கிய காரணம் என குறிப்பிட்ட போது நீங்கள் இல்லை என்று வாதிட்டீர்கள்.இன்று ஜெயலலிதாவின் வெற்றிக்கு சீமான் தான் என்று எப்படி கூறுகிறீர்கள்?

என்ன கொடுமை சார்???

மோசமான தோல்வி நான் எதிர்ப்பார்க்கவே இல்லை!

உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பெறும் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில்:

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைக்கும் என்றுநான் நினைக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் உள்ள 3 பெரிய கட்சிகளில் காங்கிரசும் ஒன்று என்ற நிலை ஆறுதலை தருகிறது.

காங்கிரஸ் தனித்து போட்டி என்றதும் மக்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அது ஓட்டாக மாறவில்லை என்பதுதான் உண்மை. ஆளுங்கட்சிக்கு என்று சில வசதிகள் உள்ளன. அரசு நிர்வாகமும், காவல் துறையும் அவர்கள் கையில் இருக்கிறது.

மக்களுக்கு அதிக அளவு பணமும் தரப்பட்டன. கடந்த 5 மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மின்தட்டுப்பாட்டை தவிர மக்கள் வெறுக்கும் சம்பவங்கள் ஏதும் நடக்க வில்லை. இது அ.தி.மு.க.வுக்கு பெரிய அளவில் வெற்றியை தந்திருக்கிறது. தி.மு.க. தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.

இந்த தேர்தலில் 650 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.

மற்றபடி காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் குழப்பம் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களால் பணம் செலவழிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் ஓரளவு காங்கிரஸ் நன்றாக இருக்கிறது. காங்கிரசை பலப்படுத்த வேண்டியது அவசியம். காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்,” என்றார்.

http://www.alaikal.com/news/?p=85839

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிகளின் பலத்துக்கு ஈடாக தனிநபர் செல்வாக்கும் முடிவுகளைத் தீர்மானிக்கும். காங்கிரசில் உள்ள பண்ணையார்கள், சாதிச் செல்வாக்கு அவர்களுக்கு இடங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம்..!

காங்கிரஸ்க்கு கேரளாவை அண்மித்த கிராமங்களிலும் கொங்கு நாட்டிலும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தமிழக சட்டசபை தேர்த்தலில் சீமானின் பிரச்சாரம் ஜெயலலிதாவை வெற்றியடைய வைத்தது.மேலும் காங்கிரசின் படுதோல்விக்கும் அவரின் பேச்சுத்தான் முக்கிய காரணம் என குறிப்பிட்ட போது நீங்கள் இல்லை என்று வாதிட்டீர்கள்.இன்று ஜெயலலிதாவின் வெற்றிக்கு சீமான் தான் என்று எப்படி கூறுகிறீர்கள்?

என்ன கொடுமை சார்???

:icon_mrgreen::D

படுதோல்வி: வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 எம்எல்ஏக்களை பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேமுதிக புதிய அணி அமைத்து போட்டியிட்டது.

வாய்ப்பு தாருங்கள் மக்களே… வாய்ப்பு தாருங்கள் மக்களே… என விஜயகாந்த் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்தார். அன்னா ஹசாரேவுக்கு முன்னதாகவே ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் விஜயகாந்த் என்று பிரேமலதாவும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

அய்யாவுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க, அம்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க, அண்ணணுக்கு வாய்ப்பு கொடுங்கள் மக்களே… தேமுதிக வேடபாளர்கள் யாரும் ஊழல், லஞ்சம் போன்றவற்றில் ஈடுபடாதவர்கள் மக்களே.. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபட்ட விஜயகாந்த்துக்கும், எனக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் வேறு யாருக்கும் கூடவில்லை. ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும் பிரச்சாரத்தில் கொக்கரித்தார் பிரேமலதா.

ஆனால் தேமுதிக தலைமையில் அமைந்த புதிய அணிக்கு, பெரிய அளவில் அடி விழுந்துள்ளது. தேமுதிக படுதோல்வி அடைந்ததால், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

வழக்கமாக சென்னையில் இருக்கும்போது கட்சி அலுவலகத்துக்கு வந்து செல்லும் விஜயகாந்த், நேற்று (21.10.2011) அங்கு வருவதைத் தவிர்த்துவிட்டார். தன் விருகம்பாக்கம் வீட்டில் இருந்தபடியே, தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்டார். அவரைப்போலவே அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அங்கு வருவதை தவிர்த்துவிட்டனர்.

http://www.alaikal.com/news/?p=85866

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி தேர்தலில் மேயர், நகராட்சி பதவிக்கு கட்சியின் அடிப்படையில் தான் வாக்களிப்பார்கள். அதிலும் ஆளும் கட்சிக்கு சார்பாகவே வாக்களிப்பார்கள்.

மற்றைய பதவிகளுக்கு அந்தத்த வேட்பாளர்களின் செல்வாக்கு சாதி சமயம் என்று பார்த்து வாக்களிப்பார்கள்.

மேயர் பதவிக்கு 10 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. மதிமுக குளித்தலை நகராட்சி தேர்தலில் வென்றுள்ளது. திருவேங்கடம், திருப்போரூர், கீரமங்கலம், உளுந்தூர்பேட்டை, எட்டையபுரம், கல்லுக்கூட்டம், வாள்வச்சகோஷ்டம் ஆகிய ஏழு பேரூராட்சி தலைவர் பொறுப்புகளையும் கைப்பற்றியுள்ளது.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் சென்னையில் ஒரு இடத்தையும், திருச்சியில் மூன்று இடங்களையும், திருநெல்வேலியில் மூன்று இடங்களையும், கோவையில் ஒரு இடத்தையும், திருப்பூரில் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபைத் தேர்தலில் சீமானின் பிரச்சாரத்தோடு, திமுக அரசின் வெறுப்பு, திமுக அரசின் ஊழல், மின்சாரப்பிரச்சனை, நில மோசடிகள், திரைப்படத்துறையில் மூன்று நிதிகளின் கட்டுப்பாடுகள், தென்மாவட்டங்களில் அழகிரியின் அடியாட்களின் தொல்லைகள், ஸ்பெக்ரம் ஊழல் போன்ற பிரச்சனைகள் தான் அதிமுகவை வெல்லவைத்தது.

சீமான்,நெடுமாறன், தமிழ்நாட்டில் ஸீரோ.

இதை விளங்க தமிழ் நாட்டு சுற்றுலா தேவை .

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற சட்டசபைத்தேர்தலில் திமுக தோற்க முக்கிய காரணங்களில் ஒன்று குடும்ப ஆட்சியும் ஊழழும் தான்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - ஒரு அலசல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாகவே இருந்தாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் பல அரசியல் விமர்சகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். காரணம், தங்கள் கட்சியின் உண்மையான பலம் என்ன என்று ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் தனியே நின்று சோதித்துப் பார்க்கும் களமாக இந்தத் தேர்தல் அமைந்தது.

ஒவ்வொரு கட்சிகளும் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கு என்ன என்று நாமும் கொஞ்சம் அலசுவோம், வாருங்கள்.

அதிமுக:

ஆளும்கட்சி என்பதால், மக்களின் ஆதரவை அதிமுக அள்ளியுள்ளது. பொதுவாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சியும் உள்ளாட்சி அமைப்பில் ஜெயிக்கும் கட்சியும் ஒன்றாக இருந்தால், நம் தேவைகள் எளிதிக்ல் நிறைவேறும் என்பதே மகக்ளின் எதிர்பார்ப்பு. அதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனாலும், மின்வெட்டுப் பிரச்சினை இந்த ஆட்சியில் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலும் அதிகளவு இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதிக ஓட்டு வங்கி கொண்ட கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது அதிமுக.

திமுக:

சென்ற உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது, மோசமான தோல்வி தான். சட்டமன்றத்தேர்தலில் வாங்கிய அடி இன்னும் தொடர்கிறது.

இந்தத் தேர்தலில் திமுகவிற்குக் கிடைத்துள்ள நலல் செய்தி என்னவென்றால், இன்னும் மக்கள் இரண்டாவது பெரிய கட்சியாக,திமுகவை அங்கீகரித்திருப்பது தான். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆகிவிட்டாலும், மக்கள் மனதில் திமுகவே உண்மையான எதிர்க்கட்சியாக இருப்பது உறுதியாகியுள்ளது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் திமுக இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

சிபிஐ(மார்க்ஸிஸ்ட்)/சிபிஐ/பாஜக :

மூன்றுமே தலா இரண்டு நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் கிராமப்புறங்களிலும் தனக்கிருக்கும் வாக்குவங்கியை நிலைநிறுத்தியுள்ளன.

பாஜக பெற்றுள்ள வெற்றியும் அதிசயம் தான். ‘வருங்கால முதல்வர்களின்’ கட்சியை விட அதிக இடங்களைப் பிடித்துள்ளது பாஜக.

காங்கிரஸ் :

‘டவுசர்’ கழட்டப்பட்ட கட்சிகளுள் பிரதான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. மாநகரங்களிலும், நகரங்களிலும் ஒரு சீட் கூட பிடிக்க முடியாத அவலநிலைமை காங்கிரஸ்க்கு. இதுவரை அடுத்தவர் தோளிலேயே ஏறிச் சவாரி செய்து நாட்டாமைத்தனம் செய்துவந்த காங்கிரஸின் உண்மையான பலம், இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பஞ்சாயத்துகளில் 24 இடங்களைப் பிடித்ததன்மூலம், இன்னும் கிராமப்பகுதிகளில் கொஞ்சம் உயிர் உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இனியாவது தமிழர் விரோதப் போக்கையும், ‘பிஸ்தா’ பில்டப்பையும் கைவிட்டால் காங்கிரஸ்க்கு நல்லது.

மதிமுக :

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை’ இவரு அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று நினைக்கப்பட்ட வைகோவுக்கும், ‘செத்த பாம்பு’ என்று சென்ற தேர்தலில் புதைக்கப்பட்ட மதிமுகவிற்கும், இந்தத் தேர்தல் மறுபிறவியைக் கொடுத்துள்ளது.

தனியே, எவ்விதக்கூட்டணியும் இல்லாமல் மதிமுக அடைந்திருக்கும் வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நகராட்சிகளில் ஒன்றையும், பஞ்சாயத்துகளில் 49-ஐயும் கைப்பர்றி, தனது வாக்குவங்கி இன்னும் சிதையாமல் இருப்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டியுள்ளது மதிமுக.

’காமெடி பீஸ் என்று நாம் நினைக்கும் வைகோவிடம் அப்படி என்ன தான் இருக்கிறது?’ என்று சக கட்சியினருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அன்று தன் தம்பிக்கு ஓட்டுப் போடாமல், ராஜீவ் கொலைவழக்கு- தூக்குதண்டனைக் கைதிகளைக் காப்பாற்ற டெல்லிக்கு ஓடினாரே வைகோ, அதில் மறைந்துள்ளது அதற்கான பதில்.

தேமுதிக :

வருங்கால முதல்வரும் நமது எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிலைமை தான் பரிதாபகரமாக ஆகிவிட்டது. திமுக மேல் இருந்த வெறுப்பும், அதிமுக ஓட்டு வங்கியும் கைகொடுத்ததால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் 29 சீட்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சி என்ற ‘தோற்றத்தைப்’ பெற்ற விஜயகாந்தின் உண்மையான மதிப்பு, இப்போது தெரியவந்துள்ளது.

நகராட்சிகளில் இரண்டைப் பெற்றுள்ளதன் மூலம் நகரங்களில் தன்னை ஓரளவு நிலைநிறுத்திக் கொண்டாலும், பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை வெறும் இரண்டே இடங்களைப் பெற்றுள்ளது தேமுதிக.

எனவே நாம் தொடர்ந்து சொல்லி வருவது போல், தேமுதிக என்பது பாமகவிற்குத் தான் மாற்று; அதிமுக-திமுகவிற்கு மார்று அல்ல என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்வரை அதிமுக ஆட்சி பற்றி விமர்சிக்காமல், வாய்மூடி இருந்துவிட்டு, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியவுடன் ‘நானே மாற்று’ என்று பேசியதை மக்கள் ரசிக்கவில்லை.

இந்த முடிவுகளால் விஜயகாந்த்தின் தொண்டர்கள், தனியாய் நின்றால் என்ன கதி ஆவோம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே அடுத்த தேர்தல்களில் கண்டிப்பாக கூட்டணி வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். எனவே அவர் அதிமுகவிடமோ, திமுகவிடமோ சரணடைய நேரலாம். அதன்மூலம் இன்னொரு பாமக-வாக தேமுதிக மாறும்.

பாமக:

2016ல் எப்படியும் ஆட்சியைப் பிடிப்பது என்ற லட்சியத்துடன் இருந்த பாமக தான் இந்தத் தேர்தலில் படுகேவலமான தோல்வியைச் சந்தித்திருப்பது.

சென்ற தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தபோதும், திமுக சகவாசம் தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் சாதியின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்படி இருந்தும், பாமக அடைந்துள்ள படுதோல்வி வன்னியர் சமுதாயம் பாமகவை தூக்கி எறிந்துவிட்டதையே காட்டுகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் ஒரு இடம்கூட ஜெயிக்காதது பரவாயில்லை. பஞ்சாயத்துகளில் இரண்டே இடங்களைப் பிடித்ததன் மூலம், பாமகவின் உண்மையான வாக்குவங்கி என்ன என்று தெளிவாகத் தெரிந்துள்ளது.

ஏற்கனவே இனி திமுக-அதிமுக உடன் கூட்டணி கிடையாது என்று சொற்பேச்சு தவறாத தலைவரான ராமதாஸ் அறிவித்துள்ளார்.கூடவே பாமக தலைவர்களுக்கு ஏதாவது ‘சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டத்தையும் அவர் அறிவிப்பது நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்,நெடுமாறன், தமிழ்நாட்டில் ஸீரோ.

இதை விளங்க தமிழ் நாட்டு சுற்றுலா தேவை .

இத சொல்ல நீங்கள் தமிழ்நாட்டு கீரோவா?

நீங்கள் ஒரு ஈழ தமிழன் என்பதால்தான் தொடர்ந்தும் உலக செய்திகளில் இருட்டடிப்பு செய்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.