Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு போராளியின் படுகொலை

Featured Replies

முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார்.

1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார் .

இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார் ஐரியக் குடியரசுப் படை, மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது 1980களில் உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

பெப்ரவரி 2011 இல் எகிப்து, மற்றும் துனீசியாவில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டங்களை அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் பெங்காசி நகரில் தேசிய இடைக்காலப் பேரவை என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை ஐநா பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய நேட்டோ தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனைத இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 சூன் 27 இல் பன்னாட்டுக் காவலகம், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் சைஃப் அல்-இசுலாம் ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் திரிப்பொலி கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார் இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடாபி செய்த நல்லவிடயங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன.?ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி செய்த நல்லவிடயங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன.?ஏன்?

அமேரிக்காவுக்கு ஜால்ரா போடவில்லையே அதுதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு எப்போது பக்க சார்பானது என்பது கசப்பான உண்மை !

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் குசா , புத்தன் , தமிழ் அரசு , இந்தப் போரளியின் மேலதிக தகவல்கள் கீழே தருகின்றேன் . மனிதகுலத்தின் வரலாற்றைப் புரட்டிப்போடுபவர்கள் ஒருபோதும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை . மாறாக சந்தர்பங்களும் சூழ்நிலைகளுமே வரலாற்ரு நாயகர்களை சாதாரணமானவர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது . நீண்டகாலமாக அமெரிக்காவின் தீராத்தலைவலியாக இருந்த இருந்த இரு வரலாற்ரு நாயகர்களில் ஒருவர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார் இனி.....................

1. அரபு தேசத்தின் கதட்ஃபா (Quadhadhfa) எனும் பூர்வீக குடியினத்தில் 1942ம்

ஆண்டு ஜூன், 7ம் திகதி பிறந்தார். பலஸ்தீன எழுச்சிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார். 1948ம் ஆண்டு இஸ்ரேலிடம் பலஸ்தீனம் தோல்வி அடைந்த போது மிகுந்த மனவேதனை அடைந்தார்.

2.அப்போதைய எகிப்திய அதிபர் கமல் அப்தெல் நாஸரை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார்.

Nasser_Gaddafi_1969.jpgஇஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். ஐரோப்பாவின் ஐக்கிய இராச்சியத்தில், சில காலம் தங்கியிருந்து பட்டப்படிப்பை மேற்கொண்டார். அவர் இங்கிலாந்தின் சாண்ட்டூர்ஸ்ட் (Sandhurst) இல் உள்ள அரச இராணுவ அகடமியில் பயின்றதாக ஒரு வதந்தி அந்த காலத்தில் படு பிரபலம். தான் பிரபலமாவதற்கு இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.

3. 1969 அப்போதைய லிபிய அதிபர், கிங் ஐட்ரிஸ் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த போது இரத்தமின்றி இராணுவ சதி புரட்சி மூலம், ஆட்சியை கைப்பற்றினர். அன்றிலிருந்து, லிபியாவை ஆட்சி செய்தார்.

4. அரச பரம்பரையில்லாதவர்களில் உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளராக வரலாற்றில் பதியப்பட்டார்.

(ஆட்சிக்காலம் 42 வருடங்கள்)

5. தனது தத்துவவியல் பார்வையை விளக்கும் The Green Book எனும் புத்தகத்தை 1975ம் ஆண்டு எழுதினார்.

800px-Green_book.jpg

6. 1979ம் ஆண்டு தன்னை பிரதமர் என்பதை அழைக்க கூடாது. மாறாக புரட்சியின் வழிகாட்டி. சகோதர தலைவன் என அழைக்க வேண்டும் என கட்டளையிட்டார். மன்னர்களின் மன்னர் எனவும் அவரை அழைத்ததுண்டு.

7. கடாபியின் சர்வாதிகார ஆட்சியினால் லிபியாவை Paraiah State (தாழ்த்தப்பட்ட பிரதேசம்) என மேற்குலகம் அழைக்க தொடங்கியது.

8. எண்ணெய் நிறுவனங்களால் கடாபி சம்பாதித்த மில்லியன் டாலர் சொத்துக்கள் குறித்து டச்லாந்து முதன் முறையாக விசாரணையை ஆரம்பித்தது. ஐரோப்பா முழுவதும் தனது சொத்துக்களை பரவலாக சேமித்து வைத்துள்ளதாகவும் கூறியது.

9. 1986ம் ஆண்டு லிபியாவில் குண்டு வெடித்தது. 1993ம் ஆண்டு ஐ.நா பல பொருளாதார, சமூக தடைகளை லிபியா மீது விதித்தது. இப்பிரச்சினைகளால், மேற்குலகத்துடன் நட்புறவை பேண தொடங்கினார். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் எனும் குற்றச்சாட்டை அடுத்து விசாரணைகளுக்கு அனுமதித்தார். அணு ஆயுத திட்டத்தை கைவிட்டார். விளைவு 2003 இல் பொருளாதார தடையை நீக்கியது.

10. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளால் பிடிபட்ட 6 வது நாள், தனது பாரிய ஆயுத களஞ்சியங்களை அழித்துவிடுவதாக மீள் அறிவிப்பு செய்ததுடன், அதனை சர்வதேசம் ஆய்வு நடத்தவும் அனுமதித்தார்.

11. ஐக்கிய ஆபிரிக்காவின் (United States Of Africa) ஆட்சியாளராவதற்கு எப்போதும் ஆசைப்பட்டிருந்த கடாபி, 2009-2010 காலப்பகுதியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.

12. துனிசியா, எகிப்து நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து 2011 பெப்ரவரி மாதம் கடாபியின் அரசுக்கு எதிரான சிவில் யுத்தம் ஆரம்பமானது.

13. இப்போராட்டத்தில் வெல்வேன், அல்லது வீரமரணமடைவேன் என சபதமெடுத்தார்.

14. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா கூட்டுப்படை நேட்டோக்களின் துணையுடன் புரட்சிக்குழு பெங்காஸியிலிருந்து முக்கிய ஒவ்வொரு நகரமாக கைப்பற்ற தொடங்கியது.

3.jpg

15. ஜூன் 27, 2011 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கடாபி மற்றும், அவரது மகன்களை கைது செய்வதற்கு பிடி ஆணை பிறப்பித்தது.

16. ஆகஸ்ட், 2011 இல் புரட்சிப்படையிடம் லிபிய தலைநகர் திரிபொலி வீழ்ந்தது. செப்டெம்பர் 16, 2011 இல் இடைக்கால நிர்வாக அரசு, ஐ.நாவில் லிபியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்தது.

17.அக்டோபர் 20, 2011 புரட்சிப்படையினரால் சேர்த் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து அல்லது உயிருடன் பிடிபட்டு பின்னர் மரணமடைந்தார்.

1.jpg

- ஸாரா

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் பகிர்வுக்கு, கடாபியை பலர் வெறுத்துள்ளார்கள், பல கிராம மக்களை குண்டு வீசி அழித்துள்ளான், எங்களுடன் படித்தவர்கள் ரிபோலியில் வேலை செய்யதவன்கள், அதில் ஒருத்தன் சொன்னான் கடாபி ஊரை சுத்தி பார்க்கும் போது யாரோ கல்லை எறித்துவிட்டார்களாம் அதற்காக அந்த ஊரையே அழித்துவிட்டான், இப்படி பல கொடுமைகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மாற்றுக் கருத்து இணையத்தில் இருந்து சுட்டது...நீங்களும் வாசித்துப் பாருங்கள்;

1.லிபியாவில் மின்சாரக்கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2.வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3.வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது, லிபியாவில் வாழும் அணைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால் அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4.அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இலங்கை பணம் சுமார் 56 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை இலவசமாக வழங்கியது.

5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிபிய மக்களில் எழத வாசிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே, ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6.எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும் , விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரனம்களும் , விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7.லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8.எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் பெறுமதியின் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9.அந்தநாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10.லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் எடுத்ததில்லை.

11.உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12.அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டுமக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13.ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5000 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய திநாரை வழங்கும் அதாவது இலங்கை பணம் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15.25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16.உலகிலேயே மிகப்பெரிய செயற்க்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

இது ஒரு மாற்றுக் கருத்து இணையத்தில் இருந்து சுட்டது...நீங்களும் வாசித்துப் பாருங்கள்;

இவ்வளவு செய்திருக்கிறார். மக்கள் ஏன் இவரை வெறுத்தார்கள்.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

கனடா இடியப்பத்தை விட மலிவு.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புத்தகத்துடன் திரிந்த கடாபியை போராளி என்பதைவிடக் கிறுக்கன் என்றுதான் சொல்லலாம். இறுதியில் கொடுத்த வாக்கின்படி லிபியாவிலேயே மாண்டுவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புத்தகத்துடன் திரிந்த கடாபியை போராளி என்பதைவிடக் கிறுக்கன் என்றுதான் சொல்லலாம். இறுதியில் கொடுத்த வாக்கின்படி லிபியாவிலேயே மாண்டுவிட்டான்.

:wub::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மாற்றுக் கருத்து இணையத்தில் இருந்து சுட்டது...நீங்களும் வாசித்துப் பாருங்கள்;

1.லிபியாவில் மின்சாரக்கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2.வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3.வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது, லிபியாவில் வாழும் அணைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால் அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4.அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இலங்கை பணம் சுமார் 56 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை இலவசமாக வழங்கியது.

5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிபிய மக்களில் எழத வாசிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே, ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6.எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும் , விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரனம்களும் , விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7.லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8.எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் பெறுமதியின் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9.அந்தநாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10.லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் எடுத்ததில்லை.

11.உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12.அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டுமக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13.ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5000 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய திநாரை வழங்கும் அதாவது இலங்கை பணம் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15.25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16.உலகிலேயே மிகப்பெரிய செயற்க்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

நன்றி ரதி தகவல்களுக்கு. ஒரு ஐரோப்பிய நாட்டினனோ அல்லது அமெரிக்க நாட்டினனோ இவ்வளவு சலுகைகளை அந்நாட்டு மக்களுக்கு கொடுத்தார்கள் என்றால் இல்லை.தங்களது எண்ணையை தோண்டி எடுத்து தமது நாட்டு மக்களுக்கு கொள்ளை லாபத்துக்கு விற்கிறார்கள்.

கடாபி மேற்கு நாடுகளோடு ஒத்து போயிருந்தால் மக்களுக்கு வாக்குரிமை கொடுக்காவிட்டாலும் மேற்கு நாடுகள் கண்டும் காணாமல் போய் இருப்பார்கள்.ஊ+ம்: சவூதி அரேபியா.அண்மையில் சிலருக்கு சவூதியில் மரன தண்டனை வழங்கப்பட்ட போது ஜனநாயகவாதிகள் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள்.ஆவ்கானிஸ்தானின் பெண்களின் விடுதலைக்காக மேற்கு நாட்டு படைகள் சென்றதற்கு ஒரு காரணமாம்.அப்போ சவூதியில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாதற்கு ஒரு படையெடுப்பு இல்லையா?

கடாபி ஒரு கிறுக்கனாக இருக்கலாம் . அவரை விட கிறுக்கர்கள் மேற்குலகை ஆண்டிருக்கிறார்கள்.உ+ம்: bush_bye_42.jpg

வடகொரியாவிலும் ஒரு கிறுக்கன் இருக்கிறார். மேற்கு நாடுகள் காலடி வைக்க முடியுமா? .இழகின இரும்பை கண்டால் என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

42 வருடங்களாக ஒரு கிறுக்குப் பிடித்த சர்வாதிகாரியாக, மக்களின் விருப்பத்தை அறியாமல் இருந்தவரை போராளி என்று சொல்லமுடியாது. கடாபி 60 களிலேயே தொடர்ந்தும் இருந்துவிட்டார். உலக மாற்றங்களை அதிகாரம் என்ற திரை மூடி மறைத்துவிட்டது.

அரசாட்சியை மாற்றிய கடாபி முதலில் வெகுமக்களுக்கு நன்மைகள் செய்தாலும், பின்னர் தனது சுயநலன்களுக்கும் அதிகாரத்திற்கும் அதே மக்களை பலியெடுத்தவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை தானே மேற்குலக தலைவர்களும் செய்கிறார்கள்.மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பது,பெண்கள் தொடர்புகள், போதையில் வாகனமோட்டுதல், ஒரு நோக்கத்துக்காக ஈராக்கை அடிப்பதாக கூறிக்கொண்டு மறு பக்கம் டிக் செனி தனது வியாபாரத்தை ஈராக்கில் விஸ்தரித்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.(விரல் விட்டு எண்னக்கூடிய நல்ல தலைவர்களும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை).ஆக அமெரிக்கா போல இன்னுமொரு வல்லரசு இருக்குமிடத்து மேற்கூறிய தலைவர்கள் கடாபியை போல சித்திரவதை செய்யப்பட்டு மண்டையில் வெடி வாங்குவதை இவ்வுலகம் ஏற்குமா?இல்லை எனில் ஏன்???

நாலு வருசத்துக்கு ஒருக்கால் லெக்சன் நடக்கிற சனநாய தார்மீக நாடுகள்லை...தனி அரசியல் சுயநலன்களுக்காக சனங்கள் தாரைதாரையாக அழிக்கப்படுறதை என்னெண்டு சொல்லுறது?

அரசியலில் இருக்கும் எல்லோரும் பரிசுத்தமானவர்கள் இல்லை. எல்லா அரசியலுக்குப் பின்னாலும் அதிகாரம், பணம் நிறைய விளையாடும். ஆனால் உலகின் போக்கிற்கு இசைவாக காய் நகர்த்தாமல், மிகுந்த சுயநலத்தோடு செயற்பட்ட கடாபி இறந்ததை அதிகளவு லிபியமக்கள் விரும்பித்தான் உள்ளனர். இந்த பெரும்பான்மை லிபிய மக்களுடன் ஒத்துப் போவதற்கு என்ன தடை உங்களுக்கு உள்ளது என்று விளங்கவில்லை!

நாலு வருசத்துக்கு ஒருக்கால் லெக்சன் நடக்கிற சனநாய தார்மீக நாடுகள்லை...தனி அரசியல் சுயநலன்களுக்காக சனங்கள் தாரைதாரையாக அழிக்கப்படுறதை என்னெண்டு சொல்லுறது?

நாலு வருடத்திற்கும் நாப்பதிரண்டு வருடங்களுக்கும் நிறைய தூரம் இருக்கின்றது. ஒருவர் அதிகபட்சம் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தாலே அவர் சர்வாதிகாரியாவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு வருடத்திற்கும் நாப்பதிரண்டு வருடங்களுக்கும் நிறைய தூரம் இருக்கின்றது. ஒருவர் அதிகபட்சம் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தாலே அவர் சர்வாதிகாரியாவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

அட அதுவே விசயம்!!!!!!அப்ப ஒரு குடும்பத்திலை சந்ததிசந்ததியாய்.....அப்பன்..மனுசி...பிள்ளை...பேரப்பிள்ளை...பூட்டப்பிள்ளை எண்டு மாறிமாறி ஆட்சியிலை நிண்டால் பிரச்சனையில்லை.....உந்த சதாம்,கடாபியெல்லாம் விசரன்கள்....ஒண்டும் தெரியாதவங்கள்.....ஆனால் அந்த ஜோர்ச்சு புஸ்சு குடும்பம் வலுகெட்டிக்காரங்கள்...நேருகுடும்பம் இன்னும் திறம்...........கிருபனுக்கு தீவாளி வாழ்த்துக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஜோர்ச்சு புஸ்சு குடும்பம் வலுகெட்டிக்காரங்கள்...நேருகுடும்பம் இன்னும் திறம்

உண்மைதான்.

கிருபனுக்கு தீவாளி வாழ்த்துக்கள்.

தீபாவளி நான் கொண்டாடுவதில்லை. எனினும் கு.சா. அண்ணாவுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. ஊர் மாதிரி ஊற ஊற நல்லெண்ணெய் வைத்து முழுகி, கடுக்கண்ட கடா வெட்டி கூடி உண்டு மகிழ சந்தர்ப்பம் கிடைத்ததோ?

இவ்வளவு செய்திருக்கிறார். மக்கள் ஏன் இவரை வெறுத்தார்கள்.

கனடா இடியப்பத்தை விட மலிவு.

வாட் இஸ் திஸ் தப்பிலி?

அவனவன் கடாபி செத்தது இல்ல கொலை செய்யப்பட்டது எப்பிடின்னு ,, ரொம்ப பீல் பண்ணி பிரிச்சு மேய்ஞ்சு ,, ஆராஞ்சுகிட்டு இருக்கான்,,, இந்த நேரத்தில,

.கனடா இடியாப்பம், லிபியா ரொட்டி , போன்ற , உலக பொருளாதார வளர்ச்சிபோகை தீர்க்குற , இந்த ரெண்டு மேட்டரை பப்ளிக்கில கம்பேர் பண்ணலாமா நீங்க?

சென்சஸ் (பங்கு சந்தை நிலவரம்) தாழ்ந்திடாதா........... ??

உலகம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை ,,, தப்பிலி மூலமா ... ஒன்ஸ் அகைய்ன் சந்திக்கப்போவுது!! <_<

(சும்மா ஜோக்கு) ! :)

42 வருடங்களாக ஒரு கிறுக்குப் பிடித்த சர்வாதிகாரியாக, மக்களின் விருப்பத்தை அறியாமல் இருந்தவரை போராளி என்று சொல்லமுடியாது.

இப்டி நிஜத்தை .......

ஒரு......வரில போட்டுடைக்க யாரால முடியும் ,,,

என்னோட கிருபன் அண்ணா தவிர்த்து?!

சில் இடங்களில் அவரு கருத்து , செம மொக்கையாவே இருந்தாலும்,,,,,,,,,,

கிருபன்ஸ் ..... கருத்துக்களுக்கு .. எல்லாரையும்போலவே,, நானும் அவர் ரசிகன்!! :)

வாட் இஸ் திஸ் தப்பிலி?

அவனவன் கடாபி செத்தது இல்ல கொலை செய்யப்பட்டது எப்பிடின்னு ,, ரொம்ப பீல் பண்ணி பிரிச்சு மேய்ஞ்சு ,, ஆராஞ்சுகிட்டு இருக்கான்,,, இந்த நேரத்தில,

.கனடா இடியாப்பம், லிபியா ரொட்டி , போன்ற , உலக பொருளாதார வளர்ச்சிபோகை தீர்க்குற , இந்த ரெண்டு மேட்டரை பப்ளிக்கில கம்பேர் பண்ணலாமா நீங்க?

சென்சஸ் (பங்கு சந்தை நிலவரம்) தாழ்ந்திடாதா........... ??

உலகம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை ,,, தப்பிலி மூலமா ... ஒன்ஸ் அகைய்ன் சந்திக்கப்போவுது!! <_<

இங்கதான் பிழை விடுகிறோம். எண்ணெய் விலை கூடினால் மலிவு எண்ணைக்காக மத்திய கிழக்கில் யுத்தங்களை உருவாக்கும் மேற்குலகம், இடியப்ப விலை கூடியதால்........................ :unsure::icon_idea:

என்ற கோணத்திலும் ஏன் சிந்திக்ககூடாது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சில் இடங்களில் அவரு கருத்து , செம மொக்கையாவே இருந்தாலும்,,,,,,,,,,

மொக்கையாகவும் எழுதவேண்டும். இல்லாவிட்டால் இவர் ஒரு ரகம் என்று தரம் பிரித்துவிடுவார்கள். எனவே எல்லாவகையிலும் எழுத முயற்சிக்கின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.