Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புன்னகை (சிறுகதை)

Featured Replies

அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்கத்துக்காக அங்கு வருபவர்களும் உண்டு.அப்படி வந்தவர்களும் திசை தெரியாமால் நிற்கும் இவளைப் போல நிற்பவர்களையும் மதுபானங்களுடன் கூட்டி போவதுண்டு.நிறவெறியில் வந்த ஒருவன் பார்க்க தமிழன் போல இருந்தான்... அக்கா சிறிலங்காவோ ...என்று தள்ளாடிய படி கேட்டான்.அவனே தொடர்ந்தான்...இங்கை மூன்று எழுத்துகள் கனக்க உலவாவி கொண்டிருக்கு .பேசாமால் இதிலை நிக்காமால் பக்கண்டு அடுத்து வாற ரயிலிலை ஏறி மாறுங்கோ ,,,இன்னும் இங்கிருந்து அரை மணித்தியால ஓட்டம் இருக்கு ,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு

அவள் யாருடைய பேச்சையும் கேட்க தயாராய் இல்லை .யாருடைய பேச்சையும் கேட்க அனுமதி இல்லை. ஏனெனில் இவள் செல்ல வேண்டிய இடம் ,இடத்தை அடைவதற்கான பாதை அதில் வரும் இடர்கள் அதை சமாளிக்க வேண்டிய தந்திரங்கள் இலங்கையிலையே போட பட்டு விட்டன. அதை அவளின் அண்ணன் மேற்கு ஜெர்மனி ஏதோ நகரத்தில் இருந்து தொலைபேசி மூலம் துல்லியமாக தெரிவித்து இருந்தான், இராணுவத் திட்டம் போல அவன் கூறிய வழி முறையில் ஆலோசனையில் ஒரு இடத்தில் தவற விட்டால் கூட தான் இருக்கு இடத்துக்கு இலகுவாக வந்து சேர மாட்டாய் என பல முறை எச்சரித்து இருந்தான்.எச்சரிப்புகளில் முக்கிய எச்சரிப்பும் ஒன்றும் இருந்தது ..மேற்கு பெர்லினில் பொலிசிலை பிடிப்பட்டியோ அங்கு வைத்து இருந்து காலம் தாழ்த்தி அவர்கள் விரும்பும் ஏதாவாது மேற்கு ஜெர்மனி நகரத்துக்கு அனுப்புவார்கள் . அப்படி நடந்ததால் உனக்கு அது கட்டாயம் நரகம் மாதிரி இருக்கும் சில வேளை என்று.அதனால் அந்த திட்டத்தின் வரைவில்ஒரு முனை கூட அழியக் கூடாது என நினைத்துக் கொண்டாள் ,,,தன்னை கூட்ட வர வேண்டியவர்களின் தாமதத்தினால் அது எல்லாம் தவிடு பொடியாக போய் விடுமோ என சலனப்பட்டாள்

இவள் இலகுவில் எதுக்கும் சலனப்படக்கூடியவள் அல்ல..என அவளை தெரிந்தவர்களுக்கு தெரியும் ,,எந்த எதிரியையும் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடைய வைக்கும் ஆயுதம் அவளிடம் இருந்ததது.அது என்னவெனில் அவளின் அதரத்தில் எப்பொழுதும் பூத்துக் கொண்டிருக்கும் புன்னகை ,,,அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியுமால் உள்ளுர் இளைஞர்கள் முதல் ஆசிரியர்கள் பெரிசுகள் வரை தலையை பிச்சு கொண்ட வரலாறுகள் உண்டு.கோபத்துக்கும் அந்த புன்னகை தான் .சந்தோசத்துக்கும் அந்த புன்னகை தான்.. .நீ என்ன ஜென்மமடி நட்புடன் கண்டிக்கும் தோழிகளும் உண்டு..அவளை பற்றி யாரும் தவறாகச் சொன்னால் உன்ரை நாக்கு அழிகிடுமடா ..அது ஒரு பாவமடா ,,அதைப் போய் ..என்று அவளுக்கு வக்கலாத்து வாங்கும் ஒரு ரசிகர் பட்டளாமே இருக்கு உள்ளூரில் ,மொனலீசாவின் ஓவியம் போல புன்னகையை பரப்பி கொண்டிருந்த அவளை சொந்த கிராமத்தை விட்டு உடனடியாக விலகி இப்படியான கரடு முரடனான வழிகளால் அந்த அண்ணன் வசிக்கும் நாட்டுக்கு சென்றே ஆக வேண்டும் நிர்பந்தம் வரும் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டாள் சிறிது காலங்களுக்கு முன்

நால்வர் புடை சூழ வந்த உயர்ந்த ஒருவன் அவளின் அருகில் வந்து நீங்க அவரின் தங்கையா ,,,என நளினமாக கேட்டான் ..எப்படி அவளை அவன் இலகுவாக அடையாளம் கண்டான் என்பதற்க்கு ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை .அவர்கள் போட்ட இராணுவத்திட்ட மாதிரியானதின் ஒரு பகுதி தான் இதற்கு உதவி இருக்கு என கூறிக்கொண்டாலும் ,,,அவனுக்கு இது எல்லாம் பெரிதான விடயமல்ல ஏனெனில் எத்தனை பெயரை இப்பிடி அழைத்து இதுவரை காலமும் சென்று இருப்பான் ...ராஜா என்று எதோ பெயர் சொல்லி தன்னை அறிமுகப் படுத்தி கொண்டான் ... தனது பெயரை பதிலுக்கு இப்பொழுது சொல்ல வேணுமென்று அவசியமில்லை என்று பட்டதோ என்னவோ தெரியவில்லை. அர்த்தம் தெரியாமால் மற்றவர்களை கிறங்கடிக்க வைக்கும் வழமையான புன்னகையையே தவழ விட்டாள்.

அந்த அரை மணித்தியால நிலக்கீழ் ரயில் பிரயாணம் அதற்க்குள்.அதில் அவளை அளவெடுத்து கொண்டிருந்தார்கள் அவனும் அவனுடன் வந்தவர்களும். அவனை தவிர மூவர் .அதில் ஒருவர் இவளுக்கு ஒரு சித்தப்பா முறை வரக்கூடியளவுக்கு வயதானவர் மற்றவன் ஒருவன் ராஜா மாதிரியே இருந்தான்.மற்றவன் கொஞ்சம் வயதில் இளையவன் ...இவர்கள் அனைவரும் அவன் தூக்கி எறியும் எலும்பு துண்டுக்காக ஒட்டி இருப்பவர்கள். அவன் விடும் ஏவல்களை தப்பமால் செய்வர்கள் ...எல்லாருக்கும் கிழக்கு ஜெர்மனியின் மலிவு விஸ்கியினால் ஏற்பட்ட மயக்கம் ..அவர்களின் கண்களை முகத்தில் எங்கோ செருக வைத்து கொண்டிருந்தது ...ராஜா மட்டும் ஏனோ தெரியாது இந்த மம்மல் நேரத்தில் கூட கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் .அதனால் தலையிலிருந்து கால்வரையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருந்தான். உள்ளுக்கு விழுங்கிய விஸ்கிக்கு அவளை taste ஆக்கி கொண்டிருப்பது அவளுக்கு தெரியாது. அந்த வயதில் குறைந்த இளையவன் மட்டும் எதிர்காலத்தை அறிந்த ஞானி போல் குழம்பினான் ...அந்த அவளில் தவழும் கள்ளம் கபடமற்ற புன்னகை அந்த சிறியவனுக்கு என்னவோ செய்திருக்கவேண்டும் .ஏன் இவள் இவனிடம் மாட்டினாள் ,இவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேணுமென்று உள் மனது துடித்தது.. ஆனால் வெறியின் வேகத்து இணங்க தனது கையறந்த நிலையை எண்ணி ஏற்ற இறக்கத்துடன் வேதனைப் பட்டு கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அவனால்...இவர்களின் எந்த மனநிலையையும் கணக்கில் எடுக்காமால் அந்த நிலக்கீழ் ரயில் விபரீதமான சத்தத்துடன் மிகப் பெரிய இருட்டை இவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய சுரங்கத்தினூடாக போய் கொண்டிருந்தது.

நிலக்கீழ் ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் இறங்கினார்கள் ..வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளக்கின் ஒளியினால் நகரம் பகல் போல இருந்தது .அது போல நீண்ட அடைக்கபட்ட மதிலை தாண்டி மெல்லிய ஒளியில் தூங்கிய நகரமும் அவள் நின்ற இடத்தில் இருந்து பார்க்க கூடியதாய் இருந்தது..அது கிழக்கு பெர்லின் இது மேற்கு பெர்லின் என ஊகித்து கொண்டாள்,,,

இன்று இரவு பாரிஸ் செல்லும் ரயிலில் உங்களை அனுப்ப இயலாது ..தாமதமாகி போய் விட்டது .நாளை காலை ரயிலில் தான் போகலாம் என்ற குண்டை தூக்கி போட்டான்

ஒரு டெலிபோன் பூத்தடியில் காத்திருந்தார்கள் டெலிபோன் பண்ணுவதற்க்கு ..ஒரு ஜெர்மானியன் ''சைஸ'' என்று சத்தம் போட்டு கொண்டு சென்றான் . அது ஜெர்மனியர்களின் பிரணவ மந்திரம் போன்றது என்று அவர்களுக்கு தெரியும் அவளுக்கு தெரியாது.

முதலில் அவன் அவளின் அண்ணனுடன் உள் சென்று பேசினான்

பின் அவள் பேசினாள்

இவர்களின் ஒழுங்குமயமான திட்டத்தை உடைத்தெறிந்தது ராஜாவின் திட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியாது

அன்று இரவு அவள் அந்த மூவருடன் தங்க வேண்டும் என்ற பதட்டமின்றி அதே புன்னகையுடன் ,அவர்களின் வீடு என்ற கோதாவில் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் ,பிரமச்சாரிகளின் வீட்டை வலிந்து சுத்தம் செய்திருப்பது தெரிந்தது..அதனால் சுத்தம் செய்ய படமாலே பல பகுதி இருந்தது..கண்ணுக்கு புலப்பட்டது.அறைச் சுவரில் அரை குறை ஆடைகளுடன் கவர்ச்சி கன்னிக்ள் நடனமாடிக்கொண்டிருந்தனர்

அந்த சிறியவனையும் ராஜாவையும் தவிர மற்றவர்கள் இருவரும் பிணமாகாத குறை ஒன்றை தவிர மற்றும் படி எல்லாமாகி அந்த வெளி கோலில் உள்ள செட்டியில் சயனித்து கொண்டிருந்தனர்

நீங்கள் உள்ளே படுங்கோ ..நாங்கள் வெளியிலை படுக்கிறம் தேவை என்றால் கூப்பிடுங்கோ என்று நாகரிகமாக கூறினான்

அதே புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எந்த வித அவ நம்பிக்கையின்றி உள்ளே சென்றாள்.நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,

பதட்டத்துடன் வந்த அவன் வெளியில் பொலிஸ்காரர் கதவை தட்டுகிறார்கள்.

ஒரே வழி இருக்கு என்றான் ..நாங்கள் குடும்பஸ்தர்கள் மாதிரி நடிப்பது.

அவர்கள் கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவர்கள் டிஸ்டர்ப் பண்ணமாட்டார்கள் அதன் மூலம் தப்பிக்கலாம் என்றான்

அவள் அதே புன்னகைத்தான் பதிலாக தந்தாள் .

இருவரையும் பெட்சீட் மூடியது

அவன் அவனது வேலைதிட்டத்துடனான அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கலானான்..சந்தர்ப்பம் அமைந்தால். அரைவாசிக் கட்டம் மட்டும் தான் முயற்சி செய்வேண்டும். அதன் பின் இருவரின் செய்கையாக மாறிவிடும் என்ற அவனது அனுபவ கணிப்பு அங்கு பொய்மையாகி கொண்டிருந்தது.

அவள் அவனது பிடியிலிருந்து விலக மூர்கத்தனமாக போராடி கொண்டிருந்தாள்

மீண்டும் கதவு சத்தம் கேட்டது ..அதன் பின்,ஓங்கிய உதை சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது

அங்கே அவர்களில் அந்த வயதில் இளையவன் பெரிய கொட்டனுடன் நின்று கொண்டிருந்தான்

அவளை வெளியை விடு இல்லாவிட்டால் ,,,என்று கொண்டு

வெளியில் வந்து தன்னை மறந்து அவனிடமிருந்து தப்பிய சந்தோசத்தில் அந்த சிறியவனின் கையை பிடித்து நன்றி மனோபாவத்துடன் முத்தமிட்டாள்

கையை உதறிய அவன் ..நீயுமா பரத்தை ..ஏன்டி நாடு விட்டு நாடு வந்து எங்கட கலாசாரத்தை கேவலபடுத்தி எல்லாரும் அலையறியள்..என்று கூவினான்

..இதற்கு அலைவது எனது நோக்கமாக இருந்தால் உன்னிலும் பார்க்க பார்ப்பதற்க்கு கவர்ச்சியாய் இருக்கும் அவனிடம் இணங்கி இருப்பேனே,,,என சொல்ல வாய் எடுத்தவள் சொல்லவில்லை ..ஆனால் வழமையான அவளது புன்னகையே பதிலாக தந்தாள்

அவள் இப்பொழுது பாரிஸ் செல்லும் ரயிலுக்குள் இருக்கிறாள் ,,,மேற்கு பெர்லின் zoolagy garden ரயில் நிலையத்தில்....ஆரோ இரு வெளி நாட்டவரை பொலிசார் பிடித்து செல்லுகின்றனர்.இவள் இருக்கும் இடத்தையும் தாண்டி செல்லும் நோக்கிலும் ஒரு பொலிஸ்காரன் வருகிறான் ..ஆனால் அதே புன்னகையுடன் சலனமற்று இருக்கிறாள் ...அவளது தெளிந்த புன்னகையோ தெரியாது ...வந்தவன் .எந்த வித சந்தேக படாமால் தாண்டி சென்று இறங்கி விடுகிறான்..ரயிலும் வெளிக்கிட்டு விட்டது....இதே புன்னகையுடன் இனிமேல் ஒரு பிரச்சனையில்லாமால் அண்ணணின் மேற்கு ஜெர்மனியின் நகரத்துக்கு சென்று விடுவேன் என்று அவள் நம்புகிறாள்

நாங்களும் அவள் போல அப்படியே நம்புவோம்

http://mithuvin.blog.../blog-post.html

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுபமாக முடிந்துவிடும் என்று நம்புவோம். அப்படி இல்லாத பல சங்கதிகளும் உண்டு..

அருமை நாகேஸ் . புலப்பெயர்வின் வலிமிகுந்த கறை படிந்த அத்தியாயங்களைத் தொட்டிருக்கிறீர்கள் , இந்த நேர்மைத்தன்மை பலருக்கு வராது :) :) :) .

.

Edited by komagan

  • தொடங்கியவர்

கிருபன் ..கோமகன் கருத்து கூறியதுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்புவோம் ..நம்பிக்கைதானே வாழ்க்கை....தொடருங்கோ நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாகேஷ் பகிர்வுக்கு, பயணங்கள் முடிவதில்லை......

  • தொடங்கியவர்

புத்தன் ,உடையார் ,,,மிக்க நன்றி கருத்து கூறியதுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசித்தேன் நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

நாகேஸ் சொல்லப்போனால் கொன்டுட்டீங்கள். நானும் இந்த ஏஜென்சி (முகவர்கள் பற்றி )எழுத பலகாலம் நினைத்திருந்தேன். முடிந்தால் எழுதுகிறேன்.

  • தொடங்கியவர்

புத்தன், சஞ்சயன்,சாத்திரி..மூவரும் பிரபலமான கதை சொல்லிகள்....கதையை பார்த்து ரசித்து கருத்து கூறியது நன்றிகள்

சாத்திரியார் எழுதுங்கோ ...உங்கள் பார்வையில் வாசிக்க காத்திருக்கின்றோம்

Edited by நாகேஷ்

  • தொடங்கியவர்

-

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லபதிவு நாகேஷ் அண்ணை...நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை களமாக்கி உள்ளீர்கள்.உண்மையில் இப்படி எத்தனையோ பிரச்சனைகள் பெண்களுக்கு நடக்கின்றன...பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

சுபேஸ் ,ரதி கருத்து கூறியதுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.