Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசு சார்ப்பு அரசியல் என்பது.. எனி எந்தளவுக்கு தமிழர்களுக்கு உதவும் என்பது இன்று தமிழக மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியும் கூட..! சொந்த மக்களின் வாழ்வாதாரத்தை சிங்களம் சிதைப்பதையே வட இந்திய ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்.. ஈழத்தில்.. தமிழர்களின் அழிவு.. விடுதலை பற்றி எல்லாம் இந்தியா கவலைப்படும் நிலை இல்லை.

ஈழத் தமிழர்களுக்கு உள்ள ஒரே தெரிவு.. இந்தியாவுக்கு சிறீலங்காவிற்கு கூட்டாக.. நெருக்கடி கொடுக்கக் கூடிய வகையில் சர்வதேச இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதே. சிங்களவனுக்கு அதைக் கற்றுக் கொடுத்ததே தமிழன் தான். கதிர்காமர். ஆனால் நாங்கள் அதை முள்ளிவாய்க்காலுக்குப் பின் இன்னும் செய்யவில்லை.

மகிந்த அளவிற்கு சந்திரிக்காவும் போர்க்குற்றங்களைச் செய்தவர். செம்மணியில் புதைக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான உடலங்கள் பற்றிய வரலாறு இன்று மறக்கப்பட்டு சந்திரிக்கா.. நல்ல அரசியல்வாதிகாக வேற தமிழர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதேபோல்.. நாளை மகிந்தவு மறக்க.. மன்னிக்கப்பட மாட்டார் என்றில்லை. அதையும் தமிழர்கள் செய்வார்கள். 1995 யாழ்ப்பாணம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதும்.. வரவேற்ற முதல் நாடு இந்தியா. 2000ம் ஆண்டு ஆனையிறவு வீழ்ச்சியோடு சிங்களப் படைகளை மீட்க பதறி அடித்து ஓடி வந்த நாடும் அதுவே.

தமிழகத்தைப் பொறுத்தவரை.. இரண்டு திமுக பிரதான கிழடுகளும் இருக்கும் வரை.. அது எமக்காக எனிக் குரல் கொடுக்கா. கலைஞரை விஞ்ச ஜெயலலிதாவும்.. ஜெயலலிதாவை விஞ்ச கலைஞரும் சவுண்டு விட்டு தங்கள் பிழைப்பை பார்த்துக் கொள்வார்களே அன்றி வேறு எதையும் செய்யமாட்டார்கள்.

அந்த வகையில் இன்று.. எமக்குள்ள ஒரே தெரிவு.. இந்தியாவின் சவாலை எதிர்கொள்வது தான். நாம் நேசக்கரம் நீட்டிய போதெல்லாம் அதை தட்டி விட்ட இந்தியா அதற்காக வருந்தும் காலத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னென்ன நகர்வுகளை.. நாம் ஒற்றுமையோடு செய்ய வேண்டும்.. இதைப் பற்றி தான் ஆலோசிக்க வேண்டும். செயற்பட வேண்டும். இதற்கு எமக்கு ஒரு பொதுமைப்பாடன வலுவான அரசியல்.. இராஜதந்திரம்.. மதிநுட்பம்.. மக்கள் மதிப்பு மிக்க.. பேராதரவுள்ள.. கொள்கைப் பிடிப்புள்ள.. கட்டமைப்பு அவசியம்.

இன்றைய நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு.. மற்றும்.. பிரித்தானிய தமிழர் பேரவை.. போன்ற நாட்டுக்கு நாடுள்ள அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சி நிரலை வகுத்து அதன்படி.. சர்வதேச ரீதியில் எமது இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள்.. தமிழர்கள் சார்பில்.. இராஜதந்திர உறுதியளிப்புக்கள்.. இவற்றை செய்ய வேண்டும். தாயகத்தில் மக்கள் சக்திகளோடு நெருங்கி உள்ளவர்களையும் இதனுள் அடக்கிக் கொள்ள வேண்டும்.

நாம்.. இன்றைய நிலைபோல்.. பலவீனமாக இருப்போம் என்றால்.. நிச்சயம் இந்தியா அல்ல.. எந்த ஒரு நாடும்.. எமக்காக துணிந்து குரல் கொடுக்கா. நாங்கள் வெட்டிக்கு.. மையவாதங்களையும்.. சாதியங்களையும்.. புலி எதிர்ப்பையும்.. எல்லாம் பிரபாகரனால் தான்.. என்ற குற்றம் காணுதலையும் செய்து கொண்டே காலத்தை ஓட்டுவோம். அதற்குள்.. சிறீலங்காவை முழு சிங்கள தேசமாக்கி.. இந்தியா அதனூடு தன்னைப் பலப்படுத்தவே முனையும்.

இந்தியாவின் இன்றைய கொள்கை.. தமிழர்களை நம்புவதைக் காட்டிலும்.. சிங்களத்தை அரவணைப்பது தனக்கு நீண்ட கால பயனளிக்கும் என்பதே.

இந்தியா கடந்த காலத்தை மறந்து நின்று ஆடுகிறது. அதன் கொட்டத்தை.. அடக்க வேண்டின்.. நமக்கும் அதன் மீது செல்வாக்குச் செய்யக் கூடிய கூட்டுக்களும் பேரம் பேசும் வலுவும் அவசியம். அவற்றை எப்படி பெறுவது தக்க வைப்பது.. இந்த அடிப்படையில் செயற்பட்டால் அன்றி.. இந்தியாவின் சொல்லுக்கு ஆடுவதோ.. இந்தியாவின் வழி இழுபட்டு போவதோ எமக்கு எந்தப் பிரயோசனத்தையும் தராது.

சிலர் இங்கு இந்தியாவின் பின்னால் போனால் அழிவு வராது என்று கனவு காண்கின்றனர். 1984 இல் இந்தியாவின் பின்னால் போனதன் விளைவே 2009 முள்ளிவாய்க்காலும்.. 1987 ஆக்கிரமிப்பும். அதையும்.. குறிப்பாக.. இந்திய அபிமானிகள்.. சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • Replies 87
  • Views 6.5k
  • Created
  • Last Reply

உலகில் அதிகாரவர்க்கம் இல்லாத நாடு இல்லை. சீனா, அமெரிக்கா, ரஷியா, கியுபா என்று எந்த நாட்டை எடுத்தாலும் அதிகாரவர்க்கம் தான் கொள்கைகளை வகுக்கிறது, முடிவுகளை எடுக்கிறது. ஒரு அதிகாரவர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இன்னுமொரு அதிகாரவர்க்கத்தின் உதவி தேவையாக இருக்கிறது. இவ்வாறுதான் இஸ்ரேல் முதல் தென்சுடான் வரை வெற்றி பெற்றன.

அதிகாரமற்ற மக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து போராடுவது என்பது பலமானவர்களின் கூட்டுப்படைகளுக்கு எதிரான பலவீனமானவர்களின் போராட்டமாக அமையும். இறுதியில் பலவீனமானவர்களின் போராட்டம் இலகுவாக நசுக்கப்படும். முள்ளிவாய்க்காலில் நடந்தது இதுவே.

ஜூட் உலக வரலாற்றில் பலவீனமானவர்கள் ,பலமான அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடி வென்ற வரலாறுகள் அமெரிக்கச் சுதந்திரப் போராட்டாத்தில் இருந்து இன்றைய அரபிய மக்களின் போராட்டங்கள் வரை இருக்கு. நாம் ஏன் பலவீனமானோம் என்பதைப் பார்க்க வேண்டும். நாம் எமது எதிரி யார் நண்பன் யார் என்று அறிந்து கொண்டோமா? இந்தியாவில் எமது நண்பர்கள் யார் எத்ரிகள் யார் என்று அறிந்து கொண்டோமா? இந்தியாவில் மத்தியில் இருக்கும் அதிகார வர்க்கம் மட்டுமே ஒரு அதிகாரச் சக்தி கிடையாது. இந்தியாவில் பல இயக்கங்கள் மக்கள் அமைப்புக்கள் இந்திய அதிகார மையத்தை எத்ரித்து அரசியற் போராட்டங்களை ஆயுதப் போராட்டங்களை நடாத்துகின்றன.இவற்றுடன் நாம் எத்தகைய தொடர்புகளை வைத்திருந்த்தோம்? நாம் என்றுமே இந்தியாவைப் பகைக்கக் கூடாத்து என்னும் ஒற்றைச் சூத்திரத்திற்க்குள்ளையே அமது அரசியலை நடாத்திய படியால் முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிப் போனோம். மாறாக எமது போராட்டம் என்பது இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு ஜனனாயகப் போரின் ஒரு பகுதியாகப் புரிந்து கொண்டிருந்தோமாகில் நாம் பலமானவர்களாக இருந்திருப்போம். ஆனால் இந்திய அதிகார வர்க்கம் எம்மை எதிரியாக சரியாகவே கணித்தது. அதனால் தான் அதற்க்கு சீனாவை விட , `புலிகள் ` எதிரிகளாகத் தெரிந்தார்கள். ஏனேனில் தமது அதிகார இருப்புக்கு , எதிரான இந்திய மக்களின் போராட்டத்தின் போக்கை புலிகளின் வெற்றி என்பது பன் மடங்கு வலிமையானதாக ஆக்கும் என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருந்து சுயநிர்ணய அடிப்படையில் பிரிவதற்கு இந்திய உதவியது. தமது நலன்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் தமிழீழம் பிரியவும் இந்தியா உதவியிருக்கும். இந்தியா தமிழீழம் பிரிவது தனது அரசியல் நலன்களுக்கு சாதகமானது என கருதவில்லை.

உண்மையில் தமிழீழம் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமானது என சிறிலங்கா மீண்டும் மீண்டும் பல ஆய்வுகள், கலந்துரையாடல்கள் மூலம் நிருபித்து வந்துள்ளது. தமிழர் தரப்பிலான செயற்பாடுகள் பல சிறிலங்காவின் இந்த நிருபித்தல்களுக்கு ஆதாரங்களை அதிகரித்து வந்திருக்கின்றன. இனிமேலாவது தமிழீழம் இந்திய நலன்களுக்கு சாதமாகனது என்பதை நிருபிக்கும் ஆய்வுகளை நாம் செய்து வெளியிட வேண்டும். இந்திய வெளியுறவு கொள்கைவகுப்பாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாக கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். நீண்டகாலமாக சிறிலங்கா அரசு நிருபித்ததையும், இந்திய புலனாய்வு துறையும் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் நம்பிவந்ததையும் மாற்றுவது இலகுவானதல்ல. ஆனால் இந்தியவின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழீழம் உருவாகும் சாத்தியம் குறைவு..

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்காவின் ஆய்வுகளுக்கு ஏமாந்து விட்டார்கள் என்று சொல்வது இந்தியாவைப் பற்றிய போதிய புரிதல் இன்மையால் எழும் சிறு பிள்ளைத் தனமான கணிப்பு. எந்த அதிகார வர்க்கமும் தமது இருப்புஇல் இருந்தே எந்த கொள்கையையும் முன் வைக்கும். தமிழர்கள் சுய நிர்ணய உரிமையைக் கோரினார்கள்.அந்தப் போராட்டம் வென்றால் இந்தியா எங்கனம் சுய நிர்ணய அடிப்படியில் எழும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் உக்கிரம் பெறும்.அவ்வாறு இந்தியா எங்கனம் போராட்டங்கள் எழுந்தால் அவை மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைக் குலைக்கும்.அப்படிக் குலைந்தால் இந்தியாவின் மத்தியில் இருக்கும் அதிகார வர்க்கம் அதன் அதிகாரத்தை இழக்கும்.இது எந்தச் சிறு பிள்ளைக்கும் விளங்கும் சூத்திரம், இது இந்திய ஆளும் வர்க்கத்துக்கு தெரியாது விளங்காது என்று நீங்கள் கருதினால் உங்களை விடச் சிறந்த ஆய்வாளர் இந்த உலகில் இருக்க முடியாது.

முதலில் எத்ரிகளின் சாணாக்க்யத்தை அறிவை நாம் உச்சி விடுவோம் என்னும் மமதைப் போக்கை விட்டொளிப்போம்.எத்ரி எம்மை விட அறிவுத் திறன் மிக்கவன் என்பதைப் புரிந்து கொள்வோம்.அதில் இருந்து எமது போராட்டச் சக்திகளை அடையாளம் கொண்டு பரந்த்த ஒரு கூட்டணியை நாம் அமைக்க வேண்டும்.அதை விட்டு நாம் விண்ணர்கள் டெல்லியில் இருக்கும் சாணக்கியர்களை விட நாம் வெண்டவர்கள் என்று நினைத்தால் நாம் , ஒன்றல்ல இன்னும் ஒராயிரம் முள்ளிவாய்க்கால்களைத் தன சந்திர்ப்போம்.

கடந்த மாதத்தில் இருந்து கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நலன்களுக்கு உரிய நடவடிக்கைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைய தினமே சிறிலங்காவுக்கு மேல் அனுமதியற்று 10 அமெரிக்க தாக்குதல் விமானங்கள் பறந்தன. அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது. இப்போது நோர்வேயின் அறிக்கை வந்துள்ளது.

இவையெல்லாம் அமெரிக்காவின் தேசியநலன்களுக்கான நடவடிக்கைகள். இந்தியாவின் சிறிலங்கா பற்றிய நிலைப்பாடு அமெரிக்காவின் தேசியநலன்களை பாதிக்கும் வகையில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்க டியாகோ கார்சியா தளத்துக்கு எதிராக முகாமிட சீனாவுக்கு இடமளித்துள்ளது. இனிமேல் இந்தியாவை மீறி அமெரிக்கா நேரடியாக நிலைமையை கையாளவுள்ளதையே இந்த செயற்பாடுகள் காட்டுகின்றன.

ஆனால் அதற்கு நாம் அமெரிக்கா தமிழீழத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா தமிழீழம் உருவாக இடமளிக்கும் என்று நம்புவது கடினம். ஆனால் தேவை ஏற்படுமானால் அமெரிக்கா தமிழீழத்தை உருவாக்க தயங்காது என்பதும் உண்மையானது. அந்த தேவையை உருவாக்க இராஜபக்ஷவின் உதவி எமக்கு தேவை. குறிப்பாக கோத்தபாயவும் கே.பி.யும் இதில் நிறைய பங்களிக்க முடியும்.

உண்மைதான் எம்மை விட அமெரிக்காவுக்கு இந்திய அதிகார வர்க்கத்தின் போக்கு , சீனாவை உள் நுழைய விட்டது என்னும் விளக்கம் இருக்கிறது.அமெரிக்காவுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல ஆனால் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாங்கள் எதிரிகள். இதனை அமெரிக்கா புரிந்து கொண்ட அளவுக்குக் கூட எம்மில் சிலரால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

தமிழகத்தமிழன் இந்தியனாக இருக்கும் வரை இந்த அடிவருடித்தனம் தொடரத்தான் போகின்றது.

இந்திய அதிகாரவர்க்கத்தின் பிடியில் இருந்த தமிழர்கள் விடுபடுதல் என்பது விடுதலைக்கான முதல்ப்படி. முள்ளை முள்ளால் எடுப்பது போன்று இது சாணக்கியத்தால் மட்டுமே சாத்தியமானது. தமிழகம் இந்திய அதிகாரவர்க்கத்திடம் இருந்து விடுபடுவதும் ஈழம் சிங்கள அதிகாரவர்கத்திடம் இருந்து விடுபடுவதும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டிலேயே இருக்கின்றது.

அந்த நேர்கோடு எப்பவுமே ,,, நெளிகோடாதான் இருக்கும் அண்ணாத்த!

என்னதான் ,,, மனித நேயம் உள்ளவங்களா ,,, நம்ம தமிழக உறவுகள் இருந்தாலும்,,,

தேசிய ஒற்றுமை எங்கிறது , அவங்க ரத்ததிலயே ஊறிப்பொய்விட்ட மேட்டர்!

இனமா? தேசமா ?என்னு ஒரு நிலமை வந்தா... முதல்ல தேசம்தான் அவங்களுக்கு!!

ஏறக்குறை எட்டு லட்சம் மக்களே,,, ஏதோ ஒருவகையில் `பங்களிப்பு ஆற்றின ,, எமது போராட்டம்,,, ஒற்றுமையாய் ஒரு வழில போகமுடியலியே!

8 கோடி மக்களை எப்புடி இந்த மேட்டரில விழிப்புணர்வு பண்ணுறது?

இன்னும் சொல்லபோனா,,, ஈழத்தமிருக்கான ஆதரவை ,,வேண்டும் ராஜதந்திரம்(?)

அவங்க மத்தியில ,,,இன்னும் குறையவே வைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் உலக வரலாற்றில் பலவீனமானவர்கள் ,பலமான அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடி வென்ற வரலாறுகள் அமெரிக்கச் சுதந்திரப் போராட்டாத்தில் இருந்து இன்றைய அரபிய மக்களின் போராட்டங்கள் வரை இருக்கு.

பலவீனமாவர்கள் பலம் கொண்ட அதிகாரவர்க்கத்துடன் கூட்டுச்சேர்ந்தே வெற்றிபெற்றுள்ளன. பலவீனமானவர்கள் தனித்து நின்று பலமானவர்களுக்கு எதிராக வெற்றி பெற்ற வரலாறு மிகவும் அரிதானது. அமெரிக்க சுதந்திர போராட்டத்தில் அமெரிக்கர்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக பிரஞ்சு வல்லரசு போன்ற சக்திகளுடன் காலத்துக்கு காலம் கூட்டு வைத்தே தமது போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றார்கள். அராபிய புரட்சியாளர்களுக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பெருமளவிலான ஆதரவை வான்படை கடற்படைகளின் உதவியுடனும் ஐ.நா.வின் பின்னணியிலும் வழங்கிவருகின்றன.

இந்தியாவில் மத்தியில் இருக்கும் அதிகார வர்க்கம் மட்டுமே ஒரு அதிகாரச் சக்தி கிடையாது. இந்தியாவில் பல இயக்கங்கள் மக்கள் அமைப்புக்கள் இந்திய அதிகார மையத்தை எத்ரித்து அரசியற் போராட்டங்களை ஆயுதப் போராட்டங்களை நடாத்துகின்றன.இவற்றுடன் நாம் எத்தகைய தொடர்புகளை வைத்திருந்த்தோம்?

இந்த போராட்டங்களில் எவையாவது வெற்றி பெற்றுள்ளனவா? வெற்றிபெறும் சாத்தியம்தானும் உள்ளதா? தோல்வியிலும் அழிவுக்குள்ளும் வாழ்பவர்களுடன் நாம் கூட்டுச்சேர்ந்து இந்திய பிராந்திய வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றிபெறுவது எவ்வளவுக்கு சாத்தியமானது? வெற்றி சாத்தியமானால் ஏன் எந்த ஒரு இந்திய அரசுக்கு எதிரான போராட்டமும் வெற்றிபெறவில்லை?

மாறாக எமது போராட்டம் என்பது இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு ஜனனாயகப் போரின் ஒரு பகுதியாகப் புரிந்து கொண்டிருந்தோமாகில் நாம் பலமானவர்களாக இருந்திருப்போம்.

இந்தியாவுக்குள் தமிழநாடு முதல் அசாம் வரை போரட்டங்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து இருக்கிறது. இந்த போராட்டங்களை நடத்தயவர்களின் பலம் அவ்வளவுதான். இந்த நிலையில் நாங்கள் பலமுள்ளவர்களாக இருந்திருப்போம் என்று எப்படி சொல்ல முடிகிறது?

ஆனால் இந்திய அதிகார வர்க்கம் எம்மை எதிரியாக சரியாகவே கணித்தது. அதனால் தான் அதற்க்கு சீனாவை விட , `புலிகள் ` எதிரிகளாகத் தெரிந்தார்கள். ஏனேனில் தமது அதிகார இருப்புக்கு , எதிரான இந்திய மக்களின் போராட்டத்தின் போக்கை புலிகளின் வெற்றி என்பது பன் மடங்கு வலிமையானதாக ஆக்கும் என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

இந்தியாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றிபெற இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனியும் தயாராக இருப்பார்களா? இந்தியாவின் பலத்துக்கு எதிராக போராடுவதிலும் பார்க்க நீர்கொழும்பு தமிழர்கள் போல, தென் பகுதி தமிழர்கள் போல, ஏன் நோர்வே தமிழர்கள், பிரான்சு தமிழர்கள் மற்றும் அமெரிக்க தமிழர்கள் போல அடுத்த தலைமுறை அந்நாட்டு மொழிமைய படித்து அந்நாட்டு மக்களாகி இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களாகி, சிங்களவரான மற்ற தமிழர்கள் போல ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ்வதை மக்கள் விரும்பும் சாத்தியமே அதிகம்.

முதலில் எத்ரிகளின் சாணாக்க்யத்தை அறிவை நாம் உச்சி விடுவோம் என்னும் மமதைப் போக்கை விட்டொளிப்போம்.எத்ரி எம்மை விட அறிவுத் திறன் மிக்கவன் என்பதைப் புரிந்து கொள்வோம்.அதில் இருந்து எமது போராட்டச் சக்திகளை அடையாளம் கொண்டு பரந்த்த ஒரு கூட்டணியை நாம் அமைக்க வேண்டும்.

நீங்கள் பிரேரிக்கும் பரந்த கூட்டணியும் ஒரு சாணக்கிய வடிவமே. அது இந்திய சாணக்கியர்களுக்கு புரியாது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு எதிரான ஆதாரத்தை நீங்களே ஏற்கனவே தெரிவித்திருக்கிறீர்கள்: தமிழர் போராட்டம் இந்த திசையில் போகிறது என்று தெரிந்துதான் இந்திய மத்திய அரசு அதை அழித்திருக்கிறது.

இந்திய மத்தியஅரசை பலவீனமாக்கி, அதில் வெற்றி பெற்று, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்று நீங்கள் நம்பினால், இவை எதுவும் ஆரம்பிப்பதற்கு முதலே இன்னும் சில வருடங்களில் நீங்கள் வடக்கு கிழக்கில், கண்டி, கொழும்பிலும் பார்க்க குறைந்த அளவிலான தமிழையே காணமுடியும். இலங்கை, அங்குவாழும் தமிழ்மக்களின் ஆதரவுடனேயே முற்றிலும் சிங்களநாடாகும். இந்தியா முதல் அமெரிக்கா மற்றும் சீனா வரை அனைத்து நாடுகளும் தமிழரை சிங்களவராக்குவதற்கு நிறைவான ஆதரவு தருவார்கள். இது தவறான பாதை.

விடுதலைப் புலிகள் அமைப்பினை அழித்தொழிக்கும் வகையிலான சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது..

சிறிலங்காவில் சமாதானம் தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் ,இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான ஒத்துழைப்பினை வழங்கியது குறித்து தற்போது நோர்வே பகிரங்கப்படுத்தியிருந்தாலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத் தளபதிகள் மற்றும் அமைச்சர்கள் இவ்விடயத்தை யுத்தம் நிறைவடைந்த 2009 காலப்பகுதியிலேயே கூறிவிட்டனர்.

எனினும் இராணுவத்துக்கு உதவியது தொடர்பிலான இலங்கையின் வெளிப்பாட்டை இந்தியா இதுவரையில் மறுக்கவில்லை எனவும் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94276

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான பாதை.

ஜூட், சரியான பாதை என நீங்கள் நினைப்பதை கூறுங்கள் பார்க்கலாம்!!!

பலவீனமாவர்கள் பலம் கொண்ட அதிகாரவர்க்கத்துடன் கூட்டுச்சேர்ந்தே வெற்றிபெற்றுள்ளன. பலவீனமானவர்கள் தனித்து நின்று பலமானவர்களுக்கு எதிராக வெற்றி பெற்ற வரலாறு மிகவும் அரிதானது. அமெரிக்க சுதந்திர போராட்டத்தில் அமெரிக்கர்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக பிரஞ்சு வல்லரசு போன்ற சக்திகளுடன் காலத்துக்கு காலம் கூட்டு வைத்தே தமது போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றார்கள். அராபிய புரட்சியாளர்களுக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பெருமளவிலான ஆதரவை வான்படை கடற்படைகளின் உதவியுடனும் ஐ.நா.வின் பின்னணியிலும் வழங்கிவருகின்றன.

பிரான்சும், ஸ்பெயினும், ஜேர்மனியும் மறைமுகமான உதவிகளையே வழங்கின.அவை அமெரிக்க குடியரசு காலனிகள் பிரித்தானியாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றி அடைந்த நிலையிலையே வழங்க்கப்பட்டன.பிரான்சு அரசோ ஸ்பெயினோ அமெரிக்க மக்களுக்காகப் போராடவில்லை. முதலில் காலனியவாதிகளுக்கு ஆதரவான மானிலங்களும், எதிரானவையும் மோதின.இவை எல்லாவற்றிலும் பலவீனமான மக்கள், போராட்டங்கள் மூலம் பலமானார்கள்.தெளிவான போராட்டக் குணமுடைய மானிலங்கள் ஒன்றானதன் மூலமே அமெரிக்க விடுதலை சாத்தியமானது.அங்கே அமெரிக்கா விடுதலை பெறுவதனால், பிரான்சில் இருக்கும் அதிகாரவர்க்கத்துக்கு எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை.மாற்றாக பிரித்தானியாவைப் பலமிழக்க வைக்கவே அவை அவ்வாறு செய்தன.

அமெரிக்கா அண்மைக் காலம் வரை லிபிய அதிபருடன் நெருங்கிய உறவை வைத்திருந்தது.வீழத்தப்பட்ட எகிப்திய அதிபருடனும் அவ்வாறே வைத்ரிந்தது.அங்கு ஏற்பட்ட மக்கள் புரட்ச்சிகள் அவர்களின் அதிகாரங்களைப் பலவீனமாக்கியது.அதன் பின்னரே அமெரிக்கா மாறிவரும் நிலமைக் கேற்ப்ப தனது ஆதரவை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆகவே மக்கள் போராட்டங்களே புரட்ச்சிகளை உருவாக்குகின்றன.பலவீனமானவர்கள் போராட்டங்கள் மூலமே பலமடைகிறார்கள்.வரலாறு அவ்வாறு தான் இருக்கிறது.

இந்த போராட்டங்களில் எவையாவது வெற்றி பெற்றுள்ளனவா? வெற்றிபெறும் சாத்தியம்தானும் உள்ளதா? தோல்வியிலும் அழிவுக்குள்ளும் வாழ்பவர்களுடன் நாம் கூட்டுச்சேர்ந்து இந்திய பிராந்திய வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றிபெறுவது எவ்வளவுக்கு சாத்தியமானது? வெற்றி சாத்தியமானால் ஏன் எந்த ஒரு இந்திய அரசுக்கு எதிரான போராட்டமும் வெற்றிபெறவில்லை?.

பிரித்தானியக் காலனிய வாதிகளுக்கு எதிராக எல்லா அமெரிக்கக் குடியரசு மானிலங்களும் ஒன்றாகப் போராடியதன் மூலமே வெற்றி பெற்றன.இந்திய மத்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போர் அவ்வகையில் ஒன்று குவிக்கப்படவில்லை.அதனால் அது இனி நிகழ்ந்து விடாது என்று சொல்ல முடியாது.இந்தியாவை எதிர் நோக்கி இருக்கும் மிக முக்கிய பிரச்சினை மவோக்களின் போர் என இந்திய உள் துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.இந்திய மத்திய அரசின் அடக்குமுறை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், தலித்துக்களின் நிலை என எல்லா மானிலங்களிலும் ஏற்படும் போராட்டங்கள் ஒன்று குவிக்கப்பட்டு இந்திய மத்திய அரசை நோக்கித் திரும்பும் ஆகில் ,அதனால் தாக்குப் பிடிப்பது கடினம்.இதுவரை வென்றார்கள் என்பதால் இனியும் வெல்வார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.ரோமானியப் பேரரசில் இருந்து பிரித்தானியப் பேரரசு வரை பேரருசுகள் வீழ்ந்துள்ளன.

இந்தியாவுக்குள் தமிழநாடு முதல் அசாம் வரை போரட்டங்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து இருக்கிறது. இந்த போராட்டங்களை நடத்தயவர்களின் பலம் அவ்வளவுதான். இந்த நிலையில் நாங்கள் பலமுள்ளவர்களாக இருந்திருப்போம் என்று எப்படி சொல்ல முடிகிறது?

இந்தியாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றிபெற இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனியும் தயாராக இருப்பார்களா? இந்தியாவின் பலத்துக்கு எதிராக போராடுவதிலும் பார்க்க நீர்கொழும்பு தமிழர்கள் போல, தென் பகுதி தமிழர்கள் போல, ஏன் நோர்வே தமிழர்கள், பிரான்சு தமிழர்கள் மற்றும் அமெரிக்க தமிழர்கள் போல அடுத்த தலைமுறை அந்நாட்டு மொழிமைய படித்து அந்நாட்டு மக்களாகி இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களாகி, சிங்களவரான மற்ற தமிழர்கள் போல ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ்வதை மக்கள் விரும்பும் சாத்தியமே அதிகம்..

அமெரிக்கக் குடியரசுப் படைகளுக்கு பிரித்தானிய ஆதரவு வழங்கும் என்று எவ்வாறு கூற முடியாதோ அவ்வாறே எமது போராட்டத்திற்க்கு இந்திய அதிகார வர்க்கம் ஆதரவு வழங்காது என்று தெளிவாகக் கூறலாம்.ஏனெனில் தமது இருப்பையே உலை வைக்கும் எந்தப் போராட்டத்திற்க்கும் எத் தரப்பும் உதவி செய்யாது.அறுபது ஆண்டுகால அனுபவம் எமக்கு இதைச் சொல்கிறது.இன்னமும் புரிந்து கொள்லாமல் இருப்பது எங்களின் மடத்தனம்.

நீங்கள் பிரேரிக்கும் பரந்த கூட்டணியும் ஒரு சாணக்கிய வடிவமே. அது இந்திய சாணக்கியர்களுக்கு புரியாது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு எதிரான ஆதாரத்தை நீங்களே ஏற்கனவே தெரிவித்திருக்கிறீர்கள்: தமிழர் போராட்டம் இந்த திசையில் போகிறது என்று தெரிந்துதான் இந்திய மத்திய அரசு அதை அழித்திருக்கிறது.

இந்திய மத்தியஅரசை பலவீனமாக்கி, அதில் வெற்றி பெற்று, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்று நீங்கள் நம்பினால், இவை எதுவும் ஆரம்பிப்பதற்கு முதலே இன்னும் சில வருடங்களில் நீங்கள் வடக்கு கிழக்கில், கண்டி, கொழும்பிலும் பார்க்க குறைந்த அளவிலான தமிழையே காணமுடியும். இலங்கை, அங்குவாழும் தமிழ்மக்களின் ஆதரவுடனேயே முற்றிலும் சிங்களநாடாகும். இந்தியா முதல் அமெரிக்கா மற்றும் சீனா வரை அனைத்து நாடுகளும் தமிழரை சிங்களவராக்குவதற்கு நிறைவான ஆதரவு தருவார்கள். இது தவறான பாதை.

ஜூட், தேவைகளே ஒருவனைப் போராட வைக்கிறது.அதே விதத்தில் தேவைகளே ஒரு போராட்டத்திற்கான ஆதரவு அணிகளையும் உருவாக்கிறது. எமது நேரடி எத்ரியின் பின்னால் இன்னோர் எத்ரி இருக்கிறான்.அந்த எத்ரிக்கு எதிராக பல எதிரிகள் இருகிறார்கள். நாம் எமது எதிரியின், எத்ரிகளுடன் கூட்டமை வைப்போமா அல்லது மறைமுக எத்ரியுடன் கூட்ட்மைப்பு வைப்போமா. நாம் எமது மறைமுக எத்ரியுடன் கூட்ட்மைப்பு வைத்தோம் அவன் தகுந்த தருணத்தில் முத்கில் குத்தினான்.இனியும் நாம் அதனைத் தன செய்வோம் எனில் நாம் மீண்டும் மீண்டறும் இறக்க வேண்டி இருக்கும்.

இன்று தாயகத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழ் நாட்டு மக்கள் இருகிறார்கள், புலத்தில் நாங்கள் இருக்கிறோம் இவையே அங்குள்லவர்களைக் காக்கிறது. இந்திய ஆளும் வர்க்கம் எமது போராட்டங்களை மடுங்கடிக்கிறது ,சர்வதேச அரங்கில் இனப் படுகொலை அரசைப் பாதுகாக்கிறது.இவ்வளவும் நடக்கும் நிலையில் இந்த அதிகார வர்க்கத்தால் தான் ஈழத்தில் தமிழர்கள் பாதுகாக்கப்படுகிரார்கள் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு நான் வேறு ஒன்றையும் சொல்ல முடியாது.தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு அரசோ இல்ல ஒரு ஆயுதக் குழுவோ இருந்திருந்தால் இவ்வளவு துணிவாக இந்திய அதிகார வர்க்கம் இந்தப் படுகொலையில் நேரடியாக இறங்கி இருக்கமாட்டாது. அந்தப் பிழையை இனியும் நாம் விட்டுக் கொண்டு இருக்க ஏலாது.

இந்தியாவின் அதிகார வர்க்க தலைவியான சோனியாவை, உலகத்தமிழர் பேரவையினர் சந்தித்தனர். பின்னர் அதன் தலைவரான இமானுவல் அடிகளார் சென்னைக்கு சென்றபொழுது, விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார். சுயமாக சிந்திக்கும் ஒரு தமிழனையும் டெல்லி ஏற்க மறுக்கிறது.

உலகத்தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் சீனாவையும், பாகிஸ்தானையும் அணுகினால் கூட தப்பில்லை, தமிழரின் இருப்பை தக்கவைக்க வேண்டிய காலம் தேவை இன்றுள்ளது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் ஊடாக புலிகள் தலைமை தப்பிச்செல்ல கேபியால் எடுக்கப்பட்ட முயற்சி தடுத்தமைக்கு யார் காரணம் என்பது இப்போ தெரிய வருகிறது. இன்று புலிகளின் தலைமை மற்றாக அழித்தொழித்தமைக்கு யாருடைய அரை வேக்காடு அரசியல் காரணம் என்பது புரிகிறது. இன்னும் நாம் இவர்களை நம்பகிறோம்.... புலிகளின் தலைவருக்கு வைகோ உறுதியாக அடித்துக் கூறிய ஒரு வசனம் காங்கிரஸ் கவிழ்கிறது கொஞ்சம் பொறுங்கள்... பொறுத்தது மரணம் பொறியாகி விட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

.பலவீனமானவர்கள் போராட்டங்கள் மூலமே பலமடைகிறார்கள்.வரலாறு அவ்வாறு தான் இருக்கிறது.

இந்த பாளைப்போன சர்வதேச அரசியலை எங்கு போய் படிகிறான்களோ தெரியவில்லை. ஒரே விட்டு கொடுப்பு அரசியலா இருக்கு.

யாரவது மூன்றுபேர் கூடி இவர்களது மனைவிமாரை கையில் பிடித்து இழுத்தாலும் விட்டுகொடுப்புடனே போவார்கள்? இவைர்களை நம்பி ஒரு பெண் கழுத்தை நீட்டி இருக்கிறாள் ...........

இவர்களும் தாங்கள் ஆண் என்று சொல்லி மோசடி செய்திருக்கிறார்கள். அதையே செய்தவங்களுக்கு நாட்டை கொடுத்து பிழைப்பு பார்க்க யாரேனும் சொல்லியா கொடுக்கணும்?

அதுதான் பந்தி பந்திய எழுதிதள்ளுரான்கள்.

இருபது வருடத்துக்கு முன்பு புலிகள் செய்ததை .................... நித்திரையால் எழும்பிவந்து இரண்டு தசாப்த காலம் கடந்து எழுதுறாங்கள் . யாருக்கு எழுதுகினம் என்பதுதான் புரியுதில்லை. இப்பவாவது எழும்பிவிட்டார்கள் பெருமைப்பட கூடியது.

எங்களுக்கு ஆயுதம் வேண்டாம் நீங்களே வாங்கோ ............. தமிழருக்கு ஒரு நீதி தாங்கோ என்று ௧௯௮௭ புலிகள் சொன்னார்கள். அவர்கள் வந்தார்கள் அவர்களுக்கு தெரிந்ததை செய்தார்கள். இருபது வருடம் கழித்தும் தமக்கு இதுமட்டுமே தெரியும் என்பதை செய்துகாட்டி இருக்கிறார்கள்.

ஆனால் இந்த சர்வதேச அரசியல் பிராணிகளுக்கு இன்னமும் ஒருக்கா செய்துகாட்டவேனும்போல?

இந்திய............ கிந்தியா என்றால் யாரவது ஒரு இந்தியனா இதை செய்கிறான்? இந்தியனையே அடைவுவைக்கும் ஒரு கொள்ளை கூட்டம்தான் இதை செய்கிறது அந்த கூடதிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கவேண்டும் அது இந்திய மக்களாலேயே முடியும். இதுக்குள்ள நீங்கள் விட்டது விட்டதுதான்............... மனைவிமாரையும் கொண்டுவந்து விடுங்கோ என்ற எதிர்பார்ப்பில்தான் இந்திய இராணுவ தளபதிகள்.

நாரதர் நல்ல அழுத்தி எழுதுங்கோ யாரவது ஒரு பிராணிக்காவது புரியுதா பார்ப்போம். இதுவரைக்கும் புரியாதது இனி புரியும் என்ற எதிர்பார்ப்புதான் அனாவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் நல்ல அழுத்தி எழுதுங்கோ யாரவது ஒரு பிராணிக்காவது புரியுதா பார்ப்போம்.

இதுவரைக்கும் புரியாதது இனி புரியும் என்ற எதிர்பார்ப்புதான் அனாவசியமானது.

:icon_idea:

அண்மையில் சொல்கையும் ஒரு உண்மையப்போட்டு உடைத்துள்ளார். ரோ அதிகாரிகளுடன் தானும் புலிகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் பற்றி இந்தியாவுடன் பேசியதாக. சிறிலங்கா அரசுக்கு பாதகமாக இராணுவச் சம நிலை ஏற்படப் போகும் நேரத்திலையே இந்த சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.அதன் பின்னணியில் இந்தியா இருந்தது முன்னால் நோர்வே இருந்த்தது.பின்னர் சமாதான பார்வையாளர் குழுவையும் இந்தியாவே தேர்ந்தெடுத்தாகவும் கூறி உள்ளார்.இந்த பார்வையாளர் குழுவே பல இராணுவச் சமனிலையை குலைக்கும் முடிவுகளை அமுல் படுத்தியது. இவை எட்டப்பட்ட ஒப்பந்தந்தின் சரத்துக்களை மீறியும் இருந்த்தன.குறிப்பாக புலிகளின் கடல் வழி வழங்கல்களைத் தடுத்தது.

பிறகு பேச்சுவார்த்தை என்று அலக்கழித்து, சிறிலங்கா அரசு மீது எந்த நிர்ப்பந்ததையும் போடாமல் சிறிலங்கா அரசின் கடற் படை வான் படை என சகல படைகளையும் இந்தியா அமெரிக்கா என்பன பலப்படுத்தின.இராணுவச் சம நிலையால் ஏற்பட்ட ஒப்பந்த்ததை ஒரு தலைப் பட்ச்சமாக அமுல் படுத்தி அச் சமனிலையை உடைத்தது இந்தியா. புலிகள் இந்தியச் சதியில் சிக்கினர் என்பதே உண்மை.

ஒரு அரசு அதன் பின்னால் பல அரசுகள் , கால அவகாசம் என்பது யாரைப் பலப்படுத்தும்? சர்வதேச அங்கீகாரம் என்பது இராணுவச் சம நிலையின் மூலம் எட்டப் பட்ட ஒன்று. ஆனால் பேச்சுவார்த்தை என்றும் , நாம் போரைத் தொடங்கக் கூடாது என்றும் இதன் மூலம் எமக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் , காலத்தை எதிரிகளுக்கு புலிகள் வழங்கினர். தமக்கு உவந்த நேரத்தில் உவந்த இடத்தில் தாக்கினால் தான் ஒரு பலவீனமான இராணுவத்தைக் கொண்ட ஒரு அமைப்பால் வெற்றி ஈட்ட முடியும்.ஆனால் புலிகள் அதனையும் கை விட்டனர்.ஏனெனில் அமெரிக்காவும், இந்தியாவும் சில நபர்களினூடகவும் தமது உளவு அமைப்புக்களினூடகாவும் புலிகளுக்கு சில உறுதி மொழிகள் நம்பிக்கைகளை வழங்கினர்.அதனை நம்பி புலிகள் முள்ளிவாய்க்கலில் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு வீரம் செறிந்த உண்மையான போராட்டம் சதிகளாலும் சர்வதேச அரசியற் தெளிவிந்மைகளாலும் தோற்கடிக்கப்பட்டது.

அதே தவறுகளை நாம் மீண்டும் மீண்டும் செய்வதா அல்லது எதிரியை இனம் கண்டு எமது பாதையை வகுப்பதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.