Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம்

Featured Replies

விசரன் என்னை மன்னிப்பார் என்கின்ற நம்பிக்கையில் , எனக்குப் பிடித்த அவரின் ஆக்கத்தை உங்களுடன் பகிர்கின்றேன் . ஆனால் , இதைப் பிரதேசவாதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதைத் தயவு செய்து பார்க வேண்டாம் . எமது மக்களின் ஊத்தைகளை எள்ளலுடன் விபரித்துள்ளார் . இனி....................................................................

ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன். மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை.

டேய் உன்னூர் பாயில் படுத்தால் அப்படியே ஒட்டி விடுமே என்பார்கள். நானும் பதிலுக்கு எங்களூர் உபசரிப்பில் நீங்கள் மயங்கி, சில பல வேளையில் காதலித்து கசிங்து உருகி எங்களூர் மனிதர்களாய் மாறிப்போவதை நாங்கள் மாந்தரீகம் செய்து பாயில் போடுகிறோம் என்கிறீர்கள் என்பேன்.

பின்பு மாந்தரீகம் பற்றி பேசுவார்கள். காதலித்த பெண்ணை வசியம் செய்வது பற்றித் தெரியுமா என்பார்கள் மிகுந்த ஆர்வத்துடன். நானும் அந்தக் காலத்தில் கேட்டறிந்த சில விடயங்களைக் கூறி எங்கள் ஊரின் மேலான அவர்களின் ஒரு வித பயத்தன்மையை ரசித்திருப்பேன்.

பெண்ணை வசியம் செய்வது பற்றியே அடிக்கடி கதை வரும். அப்போதெல்லாம் அமாவாசை அன்று காலை அவளின் காலடி மண் எடுத்து, ஒரு தலைமுடியுடன், ஒரு கோழி சாராயப்போத்தில் ஆகியவற்றுடன் மந்திரவாதியிடம் கொடுத்தால் அவர் அவளை உன் பின்னால் அலையவைப்பார் என்பேன். திறந்த வாய்க்குள் கொசு பூந்தது கூட தெரியாமல் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

எங்கள் ஏறாவூர் காளி கோயில் ”சாமி கட்டுதல், பலி கொடுத்தல்” விடயங்களையும் ஏகத்துக்கும் சஸ்பென்ஸ் கலந்து சொல்வதால் என்னைப் பற்றி ஒரு வித மாந்திரீகம் தெரிந்தவன் என்னும் எண்ணம் சிலரிடம் இருந்தது.

அதனாலோ என்னவோ ஒரிருவர் காதலுக்காக என்னை நாடிய கதையும் இருக்கிறது. உண்மையில் நமக்கு அதெல்லாம் தெரியாதப்பா என்று அவர்களை நான் நம்பவைக்க பெரும் பாடுபட்டேன்.

ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நமக்கு தெரிந்த ஜால வித்தையைக் காட்டினேன். அதனால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ”இமேஜ்” இன்னும் கலைந்ததாயில்லை.

என் நண்பர் ஒருவரின் நெருங்கிய உறவினர், பெண். எதற்கெடுத்தாலும் பயமும், சந்தேகமும் கொண்டவர். பேய், மந்திரம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதற்காகவே பல காலம் எடுத்தது அவர் என்னுடன் சகஜமாகப் பழக. எனது நண்பரும் மிகவும் ஜாலியான பேர்வழி. ஒரு நாள் தனது உறவினரை கலாய்க்க எண்ணி தனது உறவினரிடம் எனக்கு மாந்திரீகம் தெரியும் ‌என்றும், நான் அவருக்கு வாழைப்பழத்ததை உரிக்காமலே துண்டு துண்டாக வெட்டிக் காட்டினேன் என்றும் சொன்னதனால் அதை நிருபித்தக் காட்ட வேண்டும் என்று உறவினர் கேட்டிருக்கிறார். நண்பரும் என்னை அழைத்த வருவதாக கூறி என்னை அழைத்த வந்தார்.

நானும் இரண்டு பழுத்த வாழைப்பழங்களை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூடி, ஊதுபத்தி கொழுத்தி, கற்பூரம் காட்டி, தேசிக்காய் வெட்டி, மந்திரம் சொல்லிய பின் நண்பரின் உறவினரை அந்த இரண்டு வாழைப்பழங்களையும் உரிக்கச் சொன்னேன். அவர் அவற்றை உரித்த போது அவை கத்தியால் வெட்டப்பட்ட துண்டு துண்டுகள் போன்று கீழே விழ, அவர் பலத்த அலரலுடன் கத்தியபடியே வாழைப்பழத்தை கீழே போட்டுவிட்டு நண்பரின் பின்னால் நின்று கொண்டார். நண்பரும் பார்த்தீர்களா இவரின் சக்தியை என்று உறவினரை வெருட்டித் தள்ளினார். உறவினர் உண்மையாகவே என்னை ஒரு மந்திரவாதியாகவே நம்பிவிட்டார். அதன் பின் ஊருக்குள் தான் கண்ணால் கண்டதை சிலரிடம் கூறவும் செய்தார்.

நிலைமை சற்று மோசமடைவதை கண்ட நான் நண்பரை அணுகி உண்மையை கூறுவோம் என்றேன். அவருக்கும் ஏற்புடையதாய் இருந்ததால் உண்மையை செய்முறையால் செய்து காட்டினோம். அந்த உறவினரால் நம்ப முடியவில்லை. எனது நண்பனும் அதை செய்து காட்டிய பின்பே அவர் ஓரளவு நம்பினார். ஏறத்தாள 18 ஆண்டுகளின் பின் அவரை சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். வாடா வா வாழைப்பழ மந்திரவாதியே என்று அன்பாய் அழைத்தார். சேர்ந்து சிரித்தோம்.

பி.கு: ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனை ஒரு மெல்லிய ஊசியினால் குத்தி வாழைப்பழத்தினை குறுக்காக வெட்டினால் தோலின் உள்ளே வாழைப்பழம் வெட்டுப்படும். தோல் வெட்டுப்படாது. இது தான் எனது மாந்தரீகத்தின் சிதம்பர ரகசியம். இதை விட மட்டக்களப்பு மாந்தரீகம் தெரிந்தவன் நான் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்ப டூமச்.

http://visaran.blogs...og-post_09.html

Edited by komagan

அருமையான விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் .. இப்ப அதை கெடுக்க வைத்தது இப்ப தங்களை மட்டகளப்பார் என்று சொல்லுகிற முந்தி வந்த வெளி மாநிலத்தவர் தான்,

// உள்ளதைச் சொல்லப் போனால் கலகலப்பாக சகஜமாகப் பழகும் மட்டக்களப்புப் பெண்களை விரும்பாமல் இருக்க , யாழ்ப்பாணத்து அம்மாமார் கண்டுபிடித்ததுதான் இந்தப் பாயில் ஓட்டும் சமாச்சாரம்.//

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

மட்டக்களப்பு மிக வளமான மண். வசதிகள் கூடிய இடம். ஆறு குளங்களுடன் இருபாட்டி மண் உள்ள பூமி. அதனாலேயே யாழிலிருந்து வந்த பலர் திரும்பிச் செல்லவில்லை. அங்கேயே கலியாணம் கட்டிக் குடியிருந்தார்கள். அதில் ஆண்கள் பெண்கள் சகலரும் அடக்கம். வெளிநாட்டிற்கு வந்த தமிழர்களில் எத்தனை பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள். உங்களை மாந்திரீகம் செய்து மடக்கி வைத்துள்ளார்களா? என்ன பாடுபட்டாவது இந்தக் குளிரிற்குள் 'அசைலம்' அடிக்கும் காரணம் என்ன? வசதி கூடிய இடத்தில் வாழ்ந்து கொண்டு மாந்திரீகம், தாந்திரீகம் என்பவர்களுக்கு சுயபுத்தி இல்லையா? இந்த மாந்திரீகமும் மந்திரமும் வேலை செய்யுமென்றால் சிங்கள இராணுவத்தை மந்திரத்தாலே முகாமுக்குள் முடக்கியிருக்கலாம்.

  • தொடங்கியவர்

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

இத்தோடா.................................... :lol: :lol: :D :D .

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

  • தொடங்கியவர்

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

அதே......................................... :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு யாழில கண்ணிவெடி வைக்கிறார்கள். கவனம். :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மிக வளமான மண். வசதிகள் கூடிய இடம். ஆறு குளங்களுடன் இருபாட்டி மண் உள்ள பூமி. அதனாலேயே யாழிலிருந்து வந்த பலர் திரும்பிச் செல்லவில்லை. அங்கேயே கலியாணம் கட்டிக் குடியிருந்தார்கள். அதில் ஆண்கள் பெண்கள் சகலரும் அடக்கம். வெளிநாட்டிற்கு வந்த தமிழர்களில் எத்தனை பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள். உங்களை மாந்திரீகம் செய்து மடக்கி வைத்துள்ளார்களா? என்ன பாடுபட்டாவது இந்தக் குளிரிற்குள் 'அசைலம்' அடிக்கும் காரணம் என்ன? வசதி கூடிய இடத்தில் வாழ்ந்து கொண்டு மாந்திரீகம், தாந்திரீகம் என்பவர்களுக்கு சுயபுத்தி இல்லையா? இந்த மாந்திரீகமும் மந்திரமும் வேலை செய்யுமென்றால் சிங்கள இராணுவத்தை மந்திரத்தாலே முகாமுக்குள் முடக்கியிருக்கலாம்.

தப்பிலிக்கு ஒரு பச்சை.. வசதிகளும் வாய்ப்புக்களும்தான் எவருக்கும் முக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

யாழ் களத்தில் உள்ளவர்கள் தமது படங்களை போட்டால்தான்..............

அதை முடிவு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

யாழ்ப்பாண பெட்டையள் அழகில்லையெண்டு யார் சொன்னது ?? அழகு இருக்கு ஆனால் ஆக்களை பாத்த்தால் ஒரு காய்ஞ்சுபோன அழகு. அது மட்டுமில்லை லேசிலை கதைக்கமாட்டாளவவை. தேவையில்லாமல் வெருளுறது. ஆனால் மட்டக்களப்பு பெண்களை பாத்தால் தப்பிலி சொன்னதை போல வளமான மண் அதாலை பெண்களிலையும் அதே வளமான அளகும் குளிர்மையும் காணலாம். அதே நேரம் தைரியமாக ஆண்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை இவை என்னுடைய சொந்த அனுபவங்கள் தான் . நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன். ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

திமிர் என்று ஏதும் பொடி வைத்து சொல்கின்றீர்களா???

அல்லது திமிரைதான் சொல்கின்றீர்கள?

கரைசேரும் காலம் வருவதால் உள்ளதுகளை எழுதினால் கொஞ்சம் உதவியாய் இருக்கும்.

  • தொடங்கியவர்

நானும் தப்பிலியும் சொன்னது யாழ் பெட்டையளை :lol: :lol: :D :D .

யாழ் களத்தில் உள்ளவர்கள் தமது படங்களை போட்டால்தான்..............

அதை முடிவு செய்யலாம்.

கருத்து எழுதினமா போனமா என்றில்லாமல் ஏன் வீண் ரிஸ்க்.

கரை சேருகிற காலம் என்று வேறு சொல்கிறீர்கள். :(

நானும் தப்பிலியும் சொன்னது யாழ் பெட்டையளை :lol: :lol: :D :D .

அட பாவி. அதென்ன 'தப்பிலியும்' .

நான் சாத்திரியைப் பார்த்துக் கேள்விதான் கேட்டனான்.

Edited by தப்பிலி

என்னதான் சொன்னாலும் மட்டக்கிளப்பு பெண்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கு

ம்............... சாத்தர் நல்லாய் தான் இரசித்து இருக்கிறார் :rolleyes:

Edited by அலைமகள்

நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன்.

எத்தனையாம் ஆண்டு, எங்கு இருந்தனீங்கள்?

ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

திமிரா...........................அப்படியென்றால்????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதினமா போனமா என்றில்லாமல் ஏன் வீண் ரிஸ்க்.

கரை சேருகிற காலம் என்று வேறு சொல்கிறீர்கள். :(

அட பாவி. அதென்ன 'தப்பிலியும்' .

நான் சாத்திரியைப் பார்த்துக் கேள்விதான் கேட்டனான்.

களத்தில் இருக்கும் பெண்களை பற்றி அந்தளவுக்கு நல்ல அபிபிராயம் வைத்திருக்கின்றீர்கள் ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் யாழ் பெண்கள் அழகில்லை என்று சொல்கிறீர்களா?

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

காவடி சனி பிடிச்சுட்டுது உங்களுக்கு :o .தப்புறது கஸ்ரம் :lol: :lol: :D .

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

இது மரணத்துச் சனி தப்பிலி , கஸ்ரம் தான் :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

திமிர் என்பதை விடப் பெருமைதான். சிலநேரம் வரட்டுக் கெளரவம்..

எவ்வளவு நேரம் செலவழித்து மிதியுந்து உழக்கி அலைந்தாலும் கடைக்கண்ணால்கூடப் பார்க்காமல் விட்டார்கள் என்ற கோபம்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணத்து பெண்கள் இருப்பதை வைத்து எளிமையாக வாழக்கூடியவர்கள்.சேமித்து வாழ நினைப்பவர்கள்.

கிழக்குமாகாணத்து பெண்கள் இருக்குதோ இல்லையோ ஆடம்பரமாக வாழ்பவர்கள்...வாழ நினைப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையாம் ஆண்டு, எங்கு இருந்தனீங்கள்?

தப்பிலி 86 லை சில காலம் அம்பாறை மட்டக்கிளப்பு பக்கம். சின்ன முகத்துவாரம் அக்ரை பற்று ஓலுவில் பிறகு மீண்டும் 93 கரஎயனாறு இலுப்பையடிச்சேனை செங்கலடியெண்டு பல இடம் மண்டுர் தானே பத்தினியம்மன் கோயிலடி அங்கை வரை திரிஞ்சிருக்கிறன். கூடுதலாய் கடலோரககிராமங்கள்தான் பழக்கம். உள்ளை வந்தது குறைவு

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.