Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது தாயகப் பயணமும் சமரச அரசியல் பற்றிய சிந்தனைகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கே என் மீது வைக்கப்படும் கருத்துக்கள், குற்றச்சாட்டுக்களுக்கு என்னுடைய தொடர் மூலமாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். தனித்தனியாக கருத்துக்கள் எழுது யாருடனும் மோதிக் கொண்டிருக்க விரும்பவில்லை.

ஒரு அன்பு வேண்டுகோள். இங்கே உங்களின் கருத்துக்களை தாராளமாக வையுங்கள். அவைகள் என்னை உற்சாகப்படுத்தும். சித்திக்கத் தூண்டும். உங்கள் கருத்துக்களை உள்வாங்கியபடி என் தொடரைக் கொண்டு போவேன். ஆனால் கட்டுரைகளை தனியான தலைப்பின் கீழ் வையுங்கள். அவைகள் என்னுடைய கருத்துக்களுக்கான பதிலாக இருந்தாலும், நீளமான கட்டுரைகளை இடுவது, தொடரின் ஓட்டத்தை பாதிக்கக் கூடும். இது ஒரு அன்பு வேண்டுகோள்

தொடர் 1

சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மனியில் மாவீரர் நாள் நடத்துவது பற்றிய கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அந்தச் சந்திப்பின் பின்னால் இருந்தது.

நான் கடந்த ஆண்டே தலைமைச் செயலகத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தேன். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பலப்படுத்துவதன் ஊடாக மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது என்னுடைய நம்பிக்கையாக இருந்தது.

புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதற்கு நரிகளும் ஓநாய்களும் செய்கின்ற முயற்சிகளை முறியடித்து அதை புலிகளிடம் கொடுத்து விடுவேண்டும் என்ற சிந்தனை எனக்குள் இருந்தது.

ஆகவே அவர்கள் என்னையும் சந்திப்புக்கு அழைத்திருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஜேர்மனியில் தலைமைச் செயலகம் செய்கின்ற மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டுக் குழுவில் நான் கட்டாயம் முக்கிய பங்கு வகிப்பேன் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள்.

தலைமைச் செயலகம் சார்பாக ஜேர்மனியில் என்னால் மிகப் பெரிய பரப்புரையை துணிவான முறையில் முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் கருதியிருந்தார்கள்.

நான் தயங்கியபடி அவர்களிடம் சொன்னேன். 'என்னை உங்கள் குழுவில் சேர்ப்பதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன'

என்னைக் கேள்விக்குறியோடு பார்த்தார்கள். நான் தொடர்ந்தேன். 'தலைவர் உயிரோடு இல்லை என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் நான். கடந்த ஆண்டு நான் எழுதியிருக்கிறேன். தலைவருக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் அடுத்த ஆண்டு, அதாவது இந்த ஆண்டு தனியாக மாவீரர் நடத்துவார்கள் என்று'...

அவர்கள் சற்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தார்கள். தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகின்ற ஓரிரு அப்பாவிகளும் அவர்களுக்குள் இருந்தார்கள்.

'அது உங்களின் சொந்தக் கருத்து, அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை' என்று சொன்னவரை இடைமறித்து...'இல்லை, இதை வைத்துக் கொண்டு எதிரிகள் பெரிய பரப்புரையை மேற்கொள்வார்கள், தலைவருக்கு அஞ்சலி செலுத்தவே மாவீரர் தினத்தை நடத்துவதாக மக்களிடம் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள், ஆதாரமாக நான் உங்களோடு இருப்பதைக் காட்டுவார்கள், இதை விட இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது' என்றேன்.

'சில மாதங்களுக்கு முன்புதான ஊருக்குப் போய் வந்திருக்கிறேன். இதை வைத்துக் கொண்டும் எதிரிகள் பிரச்சாரம் செய்வார்கள். நான் கேபியை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன், கோத்தபாயாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன், டக்ளஸ்... சித்தார்த்தன்....ஆனந்தசங்கரி இப்படி எல்லோரையும் சந்தித்து பிசினஸ் பேசி விட்டு வந்திருக்கிறேன் என்று ஆபாண்டமான பொய்ப் பிரச்சாரத்தை செய்வார்கள், இதை வைத்து உங்களை முறியடிக்கப் பார்ப்பார்கள், ஆகவே என்னை உங்கள் ஏற்பாட்டுக் குழுவில் சேர்க்க வேண்டாம்' என்றேன்.

அவர்கள் என்னை பலமாக கருதி இணைக்க விரும்பினார்கள். ஆனால் அவர்களின் பலவீனமாக நான் ஆகி விடுவோனோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது.

ஆயினும் அவர்கள் ஏற்கவில்லை. 'அண்ணை....அவங்களும் ஒவ்வொரு மாதமும் போய் வாறவங்கள்தான், பேசாமல் வாங்கண்ணை' என்றும் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்.

சரியென்று ஒரு நிமிடம் ஜேர்மன் மாவீரர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவனாக நின்று ஜீரிவிக்கு ஒரு நிமிடம் கருத்துரையும் வழங்கிவிட்டு வந்து விட்டேன். விரைவில் தொலைக்காட்சி, வானொலி, இணையங்களில் மாவீரர் தினத்திற்கான பரப்புரையை மேற்கொள்கிறேன் என்று வாக்குறுதியும் வழங்கியிருந்தேன்.

ஆனால் நான் குழப்பம் தீராதவனாகவே அந்த இடத்தை விட்டு சென்றிருந்தேன். வாக்குறுதியின்படி பரப்புரைகளை மேற்கொள்ளாது என்னுடைய சொந்த வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அவர்களுக்கு நான் அகப்படுவதும் கடினமாகிப் போயிருந்தது.

பலத்த முயற்சிக்குப் பின்பு அவர்களில் ஒருவர் என்னை தொலைபேசியில் பிடித்தார். 'உங்களுக்கு என்ன பிரச்சனை? யாருக்காவது பயப்படுகிறீர்களா? எதுவாயினும் வெளிப்படையாகக் கதையுங்கள்!'

நான் என்னுடைய பிரச்சனையை சொல்லத் தொடங்கினேன். ஊர்ப் பயணம் என்னுடைய சிந்தனையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி சொல்லத் தொடங்கினேன்.

அந்தப் பயணத்தை நாளைக்குப் பார்ப்போம்

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அனைத்துலகச் செயலகத்தைத் தவிர்த்து தலைமைச் செயலகத்திற்கு ஆதரவு கொடுக்க முனைந்தீர்கள் என்பதையும் ஒரு சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தினால் நல்லது!

சபேசன் ...

.... யுத்தநிறுத்தம் 2001ல் ஏற்படுத்தப்பட்டவுடன், இங்கு லண்டனில் இருந்து நாடு சென்ற ஜெயதேவன், இங்கு செயற்படும் சிலரின் தனிப்பட்ட/குடும்ப குரோதங்கள், பதவிப்போட்டியில், அங்கு இருந்து இயக்க முடியாமல் இயங்கிக் கொண்டிருந்த காஸ்ரோவுக்கு பிழையான தகவல்களை கொடுத்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின், இங்கு வந்த ஜெயதேவன் கோபத்தில், மா.க.மாக்கள் தோள் கொடுக்க எழும்பி ஆடத்தொடங்கியபோது, எல்லோரும் ஒழித்து விட்டார்கள், அந்தநேரம் ஜெயதேவன் இங்கு நடைபெற்ற மாவீரர் நாளையே வழக்கு போட்டு நிறுத்த முற்பட்டார். அப்போது இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வி எழுந்த போது, ஒரிருவரே முன்னின்றார்கள், அதில் சபேசன் நீரும் ஒருவர். நீர் உம் இணையத்தளத்தில் எழுதிய இரு கட்டுரைக்கு, ஜெயதேவன் பல நாட்களாக வியாக்கியானம், தன் இணையத்தளத்திலோ, ரி.பி.சி இலோ கொடுக்க வேண்டி இருந்தது என்பதை ஞாபகபடுத்திக் கொண்டு ...

... இதே ஜெயதேவன் தலைமையிலான இலங்கை அரசுக்கு வேலை செய்த ஐரோப்பிய தமிழ் குழுவொன்று, இன்னும் உங்கள் பாணியில் சொல்லப்போனால் சமரச அரசியல் குழுவொன்று, யுத்தம் ஆரம்பமாகும் முன் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு சென்றவர்களுக்கு நாம் புலிகளை அழிக்கப்போகிறோம், அதன் பின் தமிழர்களின் பிரட்சனை தீர்க்கப்படும் என்றார்களாம். அப்போ ஜெயதேவனுடன் சென்றவர்களில் ஓரிருவர், இல்லை புலிகளை அழிப்பதற்கு முன் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குங்கள், எல்லோரும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்களாம். சிங்களமோ இல்லை இல்லை புலிகளை அழித்துப் போட்டுத்தான் தமிழ் மக்களின் பிரட்சனைக்கு தீர்வு என்றார்களாம். சரி இறுதியாக புலிகளை அழித்துப் போட்டு என்ன தீர்வு வைக்கப் போகிறீர்கள் என்றால், பதில் வந்ததாம், இலங்கை சிறிய நாடு, எல்லா மக்களும் சமன், பொருளாதாரத்தில் எல்லோரையும் முன்னேற்றினால் பிரட்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்றார்களாம். மற்றுபடி எந்த அதிகார பகிர்வுக்கும் இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டதாம். அதில் உறுதியாகவும் இருந்தார்களாம். உங்களைப்போல் சமரச அரசியல் பேசி, சிங்களத்துடன் கூடியாடி உரிமைகளை பெறலாம், அதற்கு மேல் இவ்வலவு காலமும் புலிக்காச்சலில் அலைந்ததற்கு மக்களுக்கு ஓர் காரணத்தை கூறலாம் என்ற கனவுடன் போன கும்பல்களுக்கோ பேய் அறைந்த நிலையாம், பலர் சுதாகரித்துக் கொண்டு, வேறு வழி இல்லாமல் தலை ஆட்டினார்களாம். நம்ம ஜெயதேவனும் போன்றோர் குழம்பிக் கொண்டு வெளியேறினார்களாம்.

இன்னும், ........... மானிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோசத்தோடு இணக்க அரசியல் செய்த குத்தியின் கோசத்தையே இன்று பிடுங்கி விட்டதாம் சிங்களம்!

அதற்கு மேல் சொல்படி அரசியல் செய்த சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சிறிதரன் போன்றோர்களை தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது!!

... இப்போ உம்முடைய ரேன்?????????????!!!!!!!!!!!!!!!!!!!! ... என்ன சரியான லேட்டு!!!!!!!!!!! நீர் எழுப்பி இருக்கும் கோசத்தை போட்டவர்கள் சாதித்ததை புரட்டிப்பாரும்!!!

....

என்ன ... சிலகாலத்துக்கு முன் சபேசன், இதே யாழில் பதிந்தது ... நீங்கள் உங்களுக்குள் ஓர் உடன்பாட்டுக்கு வராவிட்டால், நான் கொக்கோகோலா உடைத்து குடித்து என் இலங்கை புறக்கணிப்பு விரதத்தை முடிக்க இருக்கிறேன், அதற்கு மேலும் டக்லஸை என் தலைவனாக ஏற்க இருக்கிறேன்!!! ... நன்றிகள் செயல்வீரன் சபேசன்!

  • தொடங்கியவர்

தொடர் 2

தீவிரமான எதிர்ப்பு அரசியல் செய்பவர்களின் புறக்கணிப்புப் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கும் சிறிலங்கன் எயர் லைன்ஸின் விமானம் என்னையும் என் குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு இலங்கைத் தீவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

நானும் என்னைப் போன்ற பலரும் தீவிரமாக முன்னெடுத்த புறக்கணிப்புப் போராட்டங்கள் பற்றி தனியாகவே ஒரு தொடர் எழுதலாம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரினோம். இலங்கையின் நட்பு நாடுகளின் பொருட்களையும் புறக்கணிக்கக் கோரினோம். கலைஞர், சண் ரீவியையும் புறக்கணிக்கக் கோரினோம். ரஜினிகாந்தை புறக்கணிக்கக் கோரினோம்.

ஆனால் எங்களின் புறக்கணிப்புப் போராட்டங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டன. புறக்கணிக்கும்படி மக்களைக் கேட்டவர்களாலும் சரியான முறையில் புறக்கணிப்பை கடைப்பிடிக்க முடியவில்லை.

இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கும்படி கோரிக்கைகள் வலுவாக வைக்கப்படுவதற்கு முன்னமேயே நான் அவற்றை முடிந்தவரை கடைப்பிடித்துக் கொண்டு வந்தேன். 90களின் ஆரம்பத்திலேயே நான் விரும்பி அருந்துகின்ற „நெக்றோ' போன்றவற்றை புறக்கணிக்கத் தொடங்கியிருந்தேன்.

இதைப் பற்றி அப்பொழுது நான் தெரிந்தவர்களிடம் சொன்ன பொழுது என்னை ஒரு வினோதமாகப் பார்த்தார்கள்.

பின்பு புறக்கணிப்புக் கோரிக்கைகள் சற்றுப் பலமான அமைப்புக்களாலும் முன் வைக்கப்பட்டன. போர் உச்சக்கட்டத்தில் இருந்து பொழுது, புறக்கணிப்புக் கோசமும் உச்சத்தை அடைந்திருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்பு இந்தக் கோசமும் அடங்கிப் போனது.

சில மாதங்களுக்கு முன்பு சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களத்தை தொடர்ந்து மீண்டும் சில அமைப்புக்கள் இந்தப் புறக்கணிப்புக் கோசத்தை எழுப்பின. இப்பொழுது மீண்டும் அடங்கி விட்டன. கொலைக் களத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற வரை இனி காத்திருக்க வேண்டியதுதான்.

2009இன் இறுதிப் பகுதியில் பலத்த யோசனைக்குப் பின்பு நான் என் புறக்கணிப்பு விரதத்தை முடித்துக் கொண்டேன்.

போர் முடிந்து விட்டது. போரில் நாங்கள் தோற்றுப் போய் விட்டோம். இனி எதிரியோடு பேச வேண்டிய ஒரு நிலைக்கு வந்து விட்டோம். கதவுகளை மூடி வைக்க முடியாது. இந்தியாவுக்கு என்று ஒரு கதவை சிலர் திறந்தார்கள். மேற்குலகுக்கு என்று ஒரு சிலர் கதவை திறந்தார்கள். சிலர் சிறிலங்காவிற்கு என்றும் கதவைத் திறந்தார்கள்.

சிலர் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு ஒரு வழி கிடைக்காதா என்று தேடத் தொடங்கினார்கள். நானும் கதவுகளை திறந்தேன்.

என்னுடைய பயணத்தில் எந்த அரசியற் தலைவர்களை சந்திக்கும் திட்டமும் இருக்கவில்லை. அது ஒரு தனிப்பட்ட பயணமே. ஆயினும் அது ஒரு அரசியற் பயணம். அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்காத, தெரிந்தவர்களுடனும் அதிகம் அரசியல் பேசாத, ஆனால் உணர்வுபூர்வமாக அனுபவித்த ஒரு அரசியற் பயணம்.

உண்மையில் இலங்கைக்கு போவது பற்றி சிறிது அச்ச உணர்வு எனக்குள் இருக்கத்தான் செய்தது. இலங்கைக்குப் போவதை நான் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தேன். மிக நெருங்கிய நண்பர்களுக்கும் இந்தியா போவதாகவே சொல்லியிருந்தேன்.

ஊhவலம் போனவர்களின் படங்களை எல்லாம் சிறிலங்கா புலனாய்வுத்துறை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கின்ற கதைகளை நான் நம்பவில்லை.

ஆயினும் யாராவது என்னுடைய எழுத்துக்கள் பற்றி தகவல் கொடுக்கலாம், சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற கும்பல் பணம் பறிக்கும் நோக்கில் என்னை கடத்தலாம், எதுவும் நடக்கலாம். என்னுடைய இணையத்தளத்தை பொட்டு அம்மானே நடத்துவதாக முன்பு ஒரு சிறிலங்கா ஆய்வாளர் கட்டுரை வேறு எழுதியிருந்தார். அந்த நேரத்தில் பொட்டு அம்மானுக்கு இப்படி ஒரு இணையத்தளம் வெளிவருவதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆயினும் முன்னெச்சரிக்கையாக இலங்கையில் என்னை யாராவது கைது செய்தால் ஜேர்மன் தூதரகத்திற்கு உடனடியாக அறிவிக்கும்படி என்னுடைய மனைவியிடம் சொல்லியிருந்தேன். அத்துடன் புலம்பெயர் தமிழ் மற்றும் ஜேர்மனிய ஊடகங்களுக்கும் அறிவுக்கும்படியும் கூறினேன். „எழுத்தாளர் சபேசன் கடத்தல்', „ஊடகவியலாளர் சபேசன் கைது' என்று எமது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் இந்த பிரச்சனையை கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

கைது என்று ஏதாவது நடந்தால் போராடி வெளியே வருவது என்பதே என்னுடைய முதலாவது தெரிவாக இருந்தது. அப்படியான நேரத்தில் கைதை ரகசியமாக வைத்திருந்து உள்ளுக்குள் கதைத்து பணம் கொடுத்து வெளியில் வரக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.

மனைவியிடம் இதைச் சொன்ன பொழுது அவர். „சிறிலங்காவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், பேசாமல் நிற்போம்' என்று புலம்பத் தொடங்கி விட்டார். பின்பு ஒன்றும் நடக்காது என்று அவரை நம்ப வைப்பது எனக்குப் பெரிய பாடாகிப் போய்விட்டது.

எனக்கு இலங்கையில் ஒன்றும் நடக்காது என்றும் நடந்தாலும் சமாளித்து விடலாம் என்று நான் நம்பியதற்கு பல காரணங்கள் இருக்கத்தான் செய்தன. அந்தக் காரணங்கள் மீது இருந்த நம்பிக்கையில் நான் இலங்கைக்கு பறந்து கொண்டிருந்தேன்.

மலையகத்தில் தன்னுடைய ஆட்டத்தை முடித்து விட்டு வடக்கு கிழக்கு நோக்கி கிறீஸ் பூதம் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, நானும் என் குடும்பமும் கட்டுநாயக்காவில் போய் இறங்கினோம்

தொடரும்..

வாழ்த்துக்கள் சபேசன் உங்கள் பயணகதைக்கு . ஆரம்பமே அரசியலின் நெடி தூக்குகின்றது. இதுவும் ஓர் போர்களமாகவே உங்களுக்கு இருக்கும் . உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .இரண்டாவது பச்சைக் காணிக்கை என்னுடையது :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா திறக்க வேண்டும் என்பதற்காகப் பூட்டிய பல கதவுகளைத் திறக்கமுடியாது. திறப்பதற்கான காரண காரியங்களையும் விளக்கமாகச் சொன்னால் நாங்களும் எங்கள் துருப்பிடித்த ஆமைப் பூட்டுக்களை அசைத்துப் பார்க்கலாம்!

நீங்கள் செய்தது சரியோ பிழையோ,நல்லதோ கெட்டதோ ஒருபுறம் இருக்கட்டும்.

நன்றாக எழுதுகின்றீர்கள்.தொடருங்கள் .

தொடர் எழுதும் விதம் நன்றாக இருக்கு.

எடுத்த முடிவுகள் பற்றிக் கதைக்கும் போது, ஏன் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் கொஞ்சம் விளக்கிக் கொண்டு போனால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் இனிதே முடிவுற வேண்டுமென்றால் எழுதியவர்களுக்குகு பதிலளிக்காமல் தொடரை எழுதி முடியுங்கள்.

இறுதியில் எல்லோருக்கும் பதிலளிக்கலாம்.

தாயக மக்களையும் மாவீரர்களையும் மட்டும் மனதில் வைத்து எழுதுங்கள்.

ஏனெனில் எதை விதைக்கின்றோம் என்பது இவர்களது கனவுகளுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இருக்ககடவது....

சபேசன்! விசுகு அண்ணை சொன்னதை நானும் சொல்லோணும் எண்டு நினைச்சனான். எதை எழுதுறதா இருந்தாலும் உங்களுக்கு சரி என்று உங்கள் மனதுக்கு மனச்சாட்சிக்கு படுறதை எழுதுங்கோ! மற்றாக்களின்ரை கருத்துக்களை விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

மற்றவர்களின் எண்ணங்களுக்காக உங்கள் எழுத்துப்போக்கினை மாற்றுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது! அது ஒரு எழுத்தாளனுக்கு அழகல்ல! அதனால்.... துணிவுடன் தெளிவுடன் எழுதுங்கள்! என் கருத்துக்கள் எண்ணங்களுக்கு எதிர்மாறாக உங்கள் கருத்துக்கள் இருக்குமிடத்தில்.... நானும் எதிரிப்புடனான விமர்சனங்களை முன்வைப்பேன்.

நீங்கள் நீங்களாக எழுதுங்கள் சபேசன்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கி இலங்கை மண்ணை தொட்டதும் எனக்கு மெய்சிலிர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை. தாய் மண்ணை அடைவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கின்றது என்பதும், விமானத்தில் இருந்து இறங்கி விட்டேன் என்பதும் சற்று நிம்மதியைக் கொடுத்தது.

நான் யேர்மனிக்கு வருவதற்காக கொழும்பில் ஒரு மாதம் அளவிலேயே நின்றேன். அந்த மண்ணில் மிகவும் அந்நியமாகவே உணர்ந்தேன். தெகிவளை மிருகக் காட்சிச் சாலைக்கு கூட்டிக் கொண்டு போய் கட்டினார்கள். ஆனால் நான் பேயறைந்தவன் போல்தான் இருந்தேன்.

விக்ரோரியா பூங்கா, கொழும்புக் கடற்கரை என்று பல இடங்களுக்கு அழைத்தும் நான் போகவில்லை. என்னுடைய மொழியைப் பேசாத, என்னுடைய பண்பாட்டைக் கொண்டிருக்காத மக்கள் கூட்டத்தின் மத்தியில் அந்நியனாக நின்று இவைகளை ரசிக்கின்ற மனோபாவம் என்னிடம் இருக்கவில்லை.

அந்த மண்ணோடும் மக்களோடும் என்னால் ஒட்ட முடியவில்லை. பல தமிழர்கள் தங்கியிருந்த அந்த வீட்டுக்குள் இருப்பதும், வீட்டிற்கு பக்கத்தில் இருந்த தமிழர் ஒருவரின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதுமாகவே என்னுடைய கொழும்பு வாழ்க்கை கழிந்து போனது.

ஆனால் கொழும்பில் மாதக் கணக்கில் நின்று வெளிநாடு வந்த என்னுடைய நண்பர்கள் கொழும்பின்; நாட்கள் „பம்பல்' மிகுந்தவை என்று பேசுகின்ற பொழுது எனக்கு அவர்களை புரிந்து கொள்வது மிகக் கடினமாகவே இருந்தது. கொழும்பில் சில மாதங்கள் வாழ்ந்த என்னுடைய மனைவியும் இப்படித் துரோகத்தனமாக பேசுவது உண்டு.

இப்படியான நான் யேர்மனியில் எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று நினைக்கின்ற பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது. போர்களுக்கு நடுவிலும் தாயகத்தில் வயல்வெளிகளும், வெட்டை வெளிகளும் சுற்றித் திரிந்த நான் இங்கே ஒரு அறைக்குள் வந்து விழுந்தேன். முற்றத்து வெளி எங்களுடையது அல்ல என்கின்ற வேதனையோடு இன்று வரை வாழ்கிறேன்.

யேர்மனி வந்தவுடன் அடுத்த ஆண்டு திரும்புவேன் என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்லிச் சொல்லியே ஆண்டுகள் ஓடி குடும்பம் உருவாகி பிள்ளை குட்டிகளோடு இப்பொழுது நிற்கின்றேன்.

ஆனால் இப்பொழுதும் சொல்கிறேன் "அடுத்த ஆண்டு தாயகம் திரும்புவேன்'

கடவுச்சீட்டுக்களை பரிசோதிக்கும் இடத்தை அடைகின்ற பொழுது சற்றுப் பதட்டமாகத்தான் இருந்தது. எமக்கு முன்னால் நின்ற இரண்டு தமிழ் இளைஞர்களை அந்தப் பணிப் பெண் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தாள். ஒரு முறைப்புடன் அவர்களை அனுப்பி விட்டு எம்மை வரச் சொன்னாள்

ஏற்கனவே சொன்னது போன்று தமிழீழப் போராட்டத்தையும் அதற்காக போராடிய விடுதலைப் புலிகளையும் ஆதரித்து எழுதியதற்காக என்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருக்கவில்லை.

நிலாந்தன், தீபச்செல்வன் போன்றவர்களின் எழுத்தும் சிறீதரன் போன்றவர்களின் மேடைப் பேச்சுக்களும் இன்றைக்கும் இலங்கையில் அனுமதிக்கப்படுவது எனக்கு ஒரு தைரியத்தை வரவழைத்திருந்தது.

தீபச்செல்வனின் எழுத்துக்களையும் சிறீதரனின் பேச்சுக்களையும் படிக்கின்ற பொழுது சிலர் சொல்வது போன்ற சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடுதான் போலிருக்கிறதே என்கின்ற சிந்தனை எனக்குள் வந்து போகும். ஆயினும் அவர்கள் சகித்துக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள் வேறு என்கின்ற யதார்த்தமும் வந்து நிற்கும்

எதுவாயினும் என்னுடைய எழுத்துக்களால் ஆபத்து ஏற்படும் என்கின்ற அச்சம் எனக்குள் இருக்கவில்லை. ஆனால் நான் அஞ்சியது காட்டிக் கொடுப்பதில் வல்லவர்களான எமது தமிழர்களைப் பார்த்துத்தான். அதனாலேயே என்னுடைய பயணம் ரகசியமானதாக இருந்தது.

இலங்கைக்குப் பயணம் செய்பவர்களுக்கு நான் சொல்லக் கூடிய ஆலொசனையும் இதுதான். தாராளமாகப் போய் வாருங்கள். நீங்கள் நாட்டுக்குப் போனதையோ, அங்கு நிற்பதையோ திரும்பி வரும்வரை யாருக்கும் சொல்லாதீர்கள்.

முக்கியமாக இங்கே தேசியம் கதைப்பவர்களிடம் மறந்தும் மூச்சு விட்டு விடாதீர்கள்.

எமக்கான கடவுச்சீட்டுப் பரிசோதனை வெகு சீக்கிரமே முடிந்து விட்டது. நாங்கள் ஒரு குடும்பமாக இருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

இப்பொழுது நாங்கள் வவுனியாவை நோக்கி ஒரு வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வேகமாகப் பயணிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தத் தொடரை அலுப்பில்லாமல் விரைவாகவும் முடிக்கலாம்.

வான் ஓட்டுபவர் எம்மிடம் தேனீர் குடிப்பதாக இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார். நான் சற்று நோய் வாய்ப்பட்டிருந்தேன். அதனால் ஒரு சூடான தேனீர் குடிப்பது நல்லது என்று பட்டது. "இப்பொழுது அவசரம் இல்லை, அடுத்து வருகின்ற ஏதாவது ஒரு கடையில் குடிப்போம்' என்று சொல்லி வைத்தேன்.

வாகனத்தை ஓட்டிய வேகம் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் அச்சத்தை தருவதாக இருந்தது. இலங்கையின் தெருவில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவது மிக மிக வேகமாக ஓடுவது போன்று இருந்தது.

பாதுகாப்பு பட்டிகள் வாகனத்தில் இருக்கவில்லை. பிள்ளைகள் பின் இருக்கையிலேயே அமர்ந்திருந்தது சற்று ஆறுதலைக் கொடுத்தது. அடிக்கடி ஒலி எழுப்பியபடியும் பிரேக் அடித்தபடியும் வாகனம் பறந்து கொண்டிருந்தது. வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன.

நான் இருந்த காலத்தை விட தெருக்கள் சற்று சிறிதாகத் தெரிந்தன. பல இடங்களில் மகிந்தவினதும் உள்ளுர் அரசியல்வாதிகளின் கட்அவுட்டுக்களும் வைக்கப்பட்டிருந்தன.

நான் வாகனம் நிறுத்தப்படுவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். எனக்கு தேனீர் குடித்தே ஆக வேண்டும் போல் இருந்தது. இப்பொழுது வாய் விட்டுச் சொல்லவும் தொடங்கியிருந்தேன். அடுத்து தேனீர் கடையில் நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் வாகன ஓட்டுனர் நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருந்தார். எனக்கு சற்று ஆத்திரமாகவும் வந்தது.

குறிப்பிட்ட இடத்தை தாண்டியதும் வாகனம் மெதுவாக ஓடத் தொடங்கியது. காவல்துறையினர் நிற்பார்கள் என்றும் வேகமாக ஓடினால் தண்டம் அறவிடுவார்கள் என்றும் காரணம் சொல்லப்பட்டது. தேனீர்க் கடைதான் வந்தபாடில்லை.

ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்கள் தாண்டி ஒரு தேனீர்க் கடையில் வாகன ஓட்டுனர் வானை நிறுத்தினார். கொழும்பில் இருந்து அந்தக் கடை வரும்வரை ஒரு பத்தாயிரம் தேனீர்க் கடைகள் வந்திருக்கும். ஆனால் அவர் நிறுத்தவில்லை.

புத்தளத்தில் தமிழர்கள் வாழும் ஒரு பகுதியல் ஒரு தமிழர் நடத்தும் ஒரு கடையில் அவர் வாகனத்தை நிறுத்தினார்.

தொடரும்..

வணக்கம் நண்பர்களே! பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு அன்பான நன்றிகள்.

இதிலே என்னுடைய தாயகப் பயணம் பற்றிய அனுபவங்களையும் சமரச அரசியல் நோக்கிய என்னுடைய சிந்தனைகளையும் தொடராக எழுது விரும்புகிறேன்.

சமரச அரசியல் என்பது அடிமை அரசியல் அல்ல. அதே வேளை எதிர்ப்பு அரசியலும் இல்லை. விட்டுக் கொடுப்புக்களை செய்து பெறக்கூடியவற்றை பெற்றுக் கொண்டு தன்னை தக்க வைத்தபடி அடுத்த இலக்கு நோக்கி நகர்வதுதான்.

.

இந்த் தொடரில் தாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நான் சந்தித்த மக்கள், கண்ட ஊர்கள் என்பவைகளோடு என்னை சமரச அரசியலின் பக்கம் சிந்திக்கச் செய்கின்ற காரணிகள் பற்றியும் பேச இருக்கிறேன்.

கட்டாயம் புலம்பெயர் நாடுகளில் நிலவுகின்ற அரசியல் பற்றியும் பேசுவேன்.

தொடங்குவதற்கு முன்பு உங்களின் கருத்தை கேட்க விரும்புகிறேன். நான் இதை எழுதலாமா? எழுதுவது ஏதாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு நாளை இரவு வந்து எழுதுகிறேன்

எழுதுங்கள் சபேஸன் . உங்களின் 2 3 கட்டுரையை நான் வாசித்ததில் இருந்து உங்கட அரசியல் அறிவைஇ ஓரளவு தெரிந்து கொண்டேன்.

அதுவும் கீழக்கு மாகனத்தில் புலிகள் ஒவரு இடமாக இழந்து வரும் போது எழுதினிங்களே ஒரு ஆயுவுக் கட்டுரை என்னல முடியலப்பா..

அப்புறம் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இருப்பதூ நல்லது பி ஜே பியை விட என்று ஒரு கட்டுரை எழுதினீங்களே உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இன்னும் அதன் தாக்கம் என்னை விட்டு போகவில்லை.........

இப்படி பல கல்லு எறிகள் விழும் அதை எல்லாம் தாங்கிக் கொண்டு புலம் பெயர் அரசியலை பற்றி எழுதுங்கள் இல்லை என்றால் ஊருக்கு போய்ட்டு வந்த கதை மாட்டும் எழுதுங்கள் ஆனால் அரசியல் எழுத வேண்டாம்.........

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன்

உங்கள் கட்டுரைகளைத் தொடருங்கள். வாசிக்க ஆவலாய் உள்ளோம்.

முன்பு கண்டமேனிக்கு பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருந்தவர்களில் நீங்களும் ஒருவர் . இங்கு ஒரு உறவு (குறுக்கர்) இதைப் பற்றிக் கேட்ட பொழுது, போர் நடக்கும் பொழுது புலம் பெயர்ந்தவர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று எழுதினீர்கள். முன்பு ஆய்வுகள் செய்யும் பொழுது இந்த 'சமரச அரசியல்' செய்ய வேண்டியதன் அவசியத்தை உணரவில்லையா?

அப்போது அவர் தாயகம் சென்று திரும்பவில்லை KP போன்றோரை சந்திக்கவில்லை இப்போதுதான் பலத்தையும் பார்த்தும் கேட்டும் புரிந்துள்ளார் போலுள்ளது :lol::icon_mrgreen:

  • 3 weeks later...

புத்தளத்திலை இறங்கின சபேசனைக் காணேல . எனக்குப் பயமாய் கிடக்கு , எக்கணம் வெள்ளை வான் கொண்டுபோட்டுதோ ??????????? ஆரும் சபேசனை கண்டனிங்களேப்பா ??? எனக்கு மண்டை காயுது . இவர் புத்தளத்தில நிப்பாட்டி போட்டு எங்கை போனவர் :lol::lol::D:D ?

  • 1 month later...
  • தொடங்கியவர்

நான் எங்கும் போகவில்லை. மிகக் கடுமையான வேலைப் பழு. ஆகவே எழுத முடியவில்லை. என்னை மன்னிக்கவும். அடுத்த வாரத்தில் இருந்து தொடர்கிறேன்.

அதே வேளை எனக்குள் ஒரு அச்சம் இருக்கின்றது. எக் காலத்தில் எந்த நேரத்தில், எந்த நோக்கத்தில், எந்த வகையில் சொல்லப்பட்டவைகள் என்பதை ஆராயாது என் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள சிலரால் இங்கே வைக்கப்படுகின்றன.

அவைகளை தவிர்த்துக் கொண்டோ, அலட்சியப்படுத்திக் கொண்டோ, இந்த தொடரை எழுத ஒரு புறம் விரும்பினாலும், மறுபுறம் இப்படியானவர்கள் மத்தியில்தான் இதையும் எழுதுகிறேன் என்கின்ற எண்ணம் எனக்குள் ஒரு தயக்கத்தையும் உருவாக்குகின்றது.

குற்றச்சாட்டுகளுக்கு வேறொரு தலைப்பில் பதில் சொல்லியபடி இந்தத் தொடரை எழுதுவதற்கு முயற்சி செய்வது என்று தீர்மானித்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கின்றோம்

எதை இணக்க அரசியலையோ?வரும்..வராது..தருவான் ...தரமாட்டான்...மகிந்தாவுக்கு கொடுக்க விருப்பம் ஆனால் பிக்குமார் விடமாட்டாங்கள்...ரிஷி யின் அடுத்த கட்டுரை.....தமிழனுக்கு தண்ணி காட்டிய மகிந்தா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.