Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமின் உரை (Full Video)

Featured Replies

தமிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

now.jpg

now01.jpg

thx

http://newjaffna.com

Edited by புறோக்கர்

  • தொடங்கியவர்

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரிக்கு என்று யாழ். இந்துக்கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் முன்னாள்இந்தியக்குடியரசுத்தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம்.

யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக் கல்லூரிக்கு வருகை தந்து வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே யாழ்.இந்துக்கல்லூரிக்குப் புகழ்மாலை சூடினார்.

சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி ஆகியோர் வருகைதந்த பெருமைக்குரிய யாழ்.இந்துகக்கல்லூரி பிரார்த்தனை மண்ணடபத்துக்கு வருகை தந்த கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம், அவரது வருகையையொட்டிய நினைவுக்கல்லைத் திரை நீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்துக்கு வருகை தந்த கலாநிதி அப்துல் கலாமுக்கு கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு யாழ். இந்துக்கல்லூரி மண்டபம் நிரம்பியிருந்தது.

கல்லூரி அதிபர் வீ.கணேசராஜா பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்ட உவகைப்பட்டயத்தை வழங்கி, அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கலாநிதி அப்துல் கலாமைக் கௌரவித்தார்.

நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ, யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அழைக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்கள் மத்தியில் நீண்ட நேரம் உரையாற்றியதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கு தனது விளக்கத்தையும் வழங்கிய அப்துல் கலாம் " கனவு, இலட்சியம், விடா முயற்சியுடன் உழைத்தால் தோல்விக்குத் தோல்வியைக் கொடுக்கலாம்" என்று மாணவர்களைத் தட்டிக்கொடுத்தார்.

http://newjaffna.com/

நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ, யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அழைக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ - இவரின் பல நோக்கங்களுள் ஒன்று யாழ் மாணவர்களின் கல்விலையை சீரழிப்பது. அதையும் மீறி மாணவர்கள் முன்னேறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

thiru .kalaam avarkale....unkalkaruthukkaluku thalai vanangkukinren...intha sinthanai unkalukku 2008..2009 il vanthirunthaal emathu inam inthappaadu paddirukkaathu...kalvikkum uyarvukkum kodukkum uukkam eminaththin vidivukku neengkal kodukkavilai enpathu enathu aathangkam..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இவ்வளவும் காணும், சில தமிழர்களுக்கு!

சொந்தக்காரன் என்றும் சொல்ல வெளிக்கிட்டிருவினம்!

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை கேள்வி கேட்கவே சந்தர்ப்பம் வழங்கவில்லை ஏன் என கலாமுக்கும் இந்திய அரசுக்கும் தெரியும்.மேலும் கலாமின் பூசி மெழுகல் பேச்சை கேட்க முடிந்தது.

மற்றது நியூ ஜவ்னாவின் காணொளி எடிற்றிங் எங்கே பழகியவர் என கேட்க தோன்றுகிறது.

திரு. கலாம் அவர்களே,

ஏன் எமது மண்ணில் ஒரு தமிழ் விஞ்ஞானி உருவாக முடியவில்லை? யார் உருவாக விடாமல் தடுக்கிறார்கள் ??

தமிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதி கேட்டு நின்றபோது வராத நீதி வந்தென்ன வராவிட்டாலென்ன. சாகும்போது வந்து காப்பாற்ற முடியாதவர்கள் செத்தபின் வந்தென்ன விட்டென்ன. தமிழர்களும் இதை உணரவேண்டும். இவர்களுக்கு பந்தா பிடித்தென்ன பிடியாமல் விட்டென்ன. நம்கையே நமக்குவியென்று வீடுகிளில் முடங்கிவிட்டால் தான் மக்களின் உண்மை உணர்வு வெளிப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

நயினை நாகபூசணி அம்மன் கோபுர உச்சியில் ஏறவும் அரசியல் பிரபலங்களை அண்டிநின்று படம்பிடிக்கவும் குடாநாட்டின் முக்கிய நிகழ்வுகளையும் வெளிநாட்டு பிரமுகர்களையும் தடையின்றி வீடீயோ எடுக்கவும் எப்படி நியூ யப்னாவால் முடிகிறது என்பதற்கு புறோக்கர் இங்கு விளக்கம் தந்தால் நல்லது. இவர்கள் சிங்கள அரசின் அடிவருடிகளா அல்லது ஒட்டுக்குளுக்களுடன் தொடர்பா என்பதையும் விளக்கவும். http://www.thamilnat...og-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

கலாம் சொன்ன ஒரு கூற்றை கூர்ந்து அவதானிக்கனும்... நாம் ஒரு தென்றலை சந்திக்க.. பல புயல்களைக் கடக்க வேண்டும் என்பது. மேலும்.. சொன்னார்.. எவனும் வெல்லலாம்.. விடா முயற்சி இருந்தால். இந்தக் கருத்துக்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்.. உண்மைகள் புலப்படனும். இன்னொன்றையும் சொல்லியுள்ளார்.. எல்லோருக்கும் தனித்துவம் இருக்கிறது.. அதை காப்பாற்றனும் என்று..!

சிங்களவர்களுக்கும் ஒன்றைச் சொல்லி உள்ளார்.. மேலாண்மை செய்வது புயலை பிறப்பிப்பது போன்றது.. தென்றலை வீசச் செய்வது போன்றதல்ல. மேலும்.. புத்தரின் போதனைகள்.. அமிக்சைக்கு வழியே தவிர.. படுகொலைகளுக்கு அல்ல.. என்பதை அனைத்து பெளத்த சிங்களவர்களும் விளங்கிக் கொள்வதும் அவசியம்.

கலாமின் பேச்சில்.. பல உட்கருத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக தோல்வியால் துவழும் தமிழர்களுக்கு அவை.. ஒரு ஊக்க சக்தியாக இருக்கும்..! ஒரு ஹிந்திய மேலாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அவரின் விஜயம் அடங்கி இருந்தாலும்.. சொல்லப்பட்டுள்ள கருத்துக்களில் எமக்கு எமது இனத்தின் விடிவுக்கு முன்னேற்றத்திற்கு சமூக விளிப்புணர்விற்கு.. நன்னடத்தைக்கு.. எதிரிக்கு செய்யப்படக் கூடிய போதனையாகக் கூடிய கருத்துகளிற்கு மதிப்பளிக்க வேண்டியதும் நன்றே..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சின் கருத்தை அவர் அவர் விளங்கிக்கொள்ளும் தன்மையிலுள்ளது. இருந்தாலும் 70.000க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படும்பொழுது வாழாவெட்டியாக இருந்தவர்கள் இன்று என்ன மீண்டும் போராட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்து ஸ்ரீலங்காவை அடிபணிய வைக்கும் செயலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாம் சொன்ன ஒரு கூற்றை கூர்ந்து அவதானிக்கனும்... நாம் ஒரு தென்றலை சந்திக்க.. பல புயல்களைக் கடக்க வேண்டும் என்பது. மேலும்.. சொன்னார்.. எவனும் வெல்லலாம்.. விடா முயற்சி இருந்தால். இந்தக் கருத்துக்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்.. உண்மைகள் புலப்படனும். இன்னொன்றையும் சொல்லியுள்ளார்.. எல்லோருக்கும் தனித்துவம் இருக்கிறது.. அதை காப்பாற்றனும் என்று..!

சிங்களவர்களுக்கும் ஒன்றைச் சொல்லி உள்ளார்.. மேலாண்மை செய்வது புயலை பிறப்பிப்பது போன்றது.. தென்றலை வீசச் செய்வது போன்றதல்ல. மேலும்.. புத்தரின் போதனைகள்.. அமிக்சைக்கு வழியே தவிர.. படுகொலைகளுக்கு அல்ல.. என்பதை அனைத்து பெளத்த சிங்களவர்களும் விளங்கிக் கொள்வதும் அவசியம்.

கலாமின் பேச்சில்.. பல உட்கருத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக தோல்வியால் துவழும் தமிழர்களுக்கு அவை.. ஒரு ஊக்க சக்தியாக இருக்கும்..! ஒரு ஹிந்திய மேலாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அவரின் விஜயம் அடங்கி இருந்தாலும்.. சொல்லப்பட்டுள்ள கருத்துக்களில் எமக்கு எமது இனத்தின் விடிவுக்கு முன்னேற்றத்திற்கு சமூக விளிப்புணர்விற்கு.. நன்னடத்தைக்கு.. எதிரிக்கு செய்யப்படக் கூடிய போதனையாகக் கூடிய கருத்துகளிற்கு மதிப்பளிக்க வேண்டியதும் நன்றே..! :):icon_idea:

இந்தியப் பயங்கரவாததின் ஆவி, கலாமின் உடம்புக்குள் புகுந்து வந்துள்ளது.

இவர் வருகை இந்தியப் பயங்கரவாதத்தின் நிகழ்சிநிரலே அன்றி, இவரது அன்று.

சீமான்,வை.கோ மாதிரி தலைவர் வருவார் போராட்டம் வெடிக்கும் என்றால் ஒரு விசிலை அடித்து போட்டு படுக்கலாம் .

இந்த ஆள் ஏன் சும்மா எங்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்களை கதைக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான்,வை.கோ மாதிரி தலைவர் வருவார் போராட்டம் வெடிக்கும் என்றால் ஒரு விசிலை அடித்து போட்டு படுக்கலாம் .

இந்த ஆள் ஏன் சும்மா எங்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்களை கதைக்கிது.

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று கிடந்த காத்திருப்பு; ஒப்புக்கு மேல ஒப்புச் சொல்லி அழுகிறாண்டா சாமி அண்ணன் பிணத்துக்கு மேல!

சீமான்,வை.கோ மாதிரி தலைவர் வருவார் போராட்டம் வெடிக்கும் என்றால் ஒரு விசிலை அடித்து போட்டு படுக்கலாம் .

இந்த ஆள் ஏன் சும்மா எங்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்களை கதைக்கிது.

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும் ஒரு புலம்பெயர் தமிழனாக உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும் நீங்கள் சொல்லுவது விதண்டாவாதம் என்று.

காரணம் உங்களுக்கும் நன்கு தெரியும் தமிழ் மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் துரும்பே இந்த கலாம் என்று.

முதலில் கலாம் வருகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் . இலங்கைக்கு போபவர்கள் எல்லோருமே ராஜபக்சாவின் நிகழ்ச்சிநிரலில் நடப்பதாத ஏன் நினைப்பான் .இலங்கைக்கு போனால் சம்பிரதாயத்திற்கு நாட்டு தலைவரையும் அமைச்சர்களையும் சந்திப்பதேன்பது அவசியம்.

தமது நாடுகளுக்கு திரும்பி தமிழர்களுக்கு சார்பான நிலைகளை கூட அவர்கள் எடுக்கலாம் . தமிழ் நாட்டு எதற்கும் உதவாத அரசியல்வாதிகளின் ஊது குழல்களாக புலம் பெயர் தமிழன் மாறிவிட்டான் .உண்மையில் எமக்கு அதிக பாதிப்பு செய்வதும் ,எமது பிரச்சனையை தமது அரசியலுக்கு பாவிப்பதும் அவர்கள்தான் ,

காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்து உலகம் முழுக்க அனைவரையும் எதிர்த்துதான் மிச்சம் .

இந்தியாவும் எதிரி சீனாவும் எதிரி .கருணாநிதியும் எதிரி ஜெயலலிதாவும் எதிரி .என்ன அரசியல் செய்கின்றீர்கள் .

தனக்கு அணுக்குண்டு போட்ட அமெரிக்காவின் உதவியால்தான் யப்பான் இன்று இந்த நிலையில் இருக்கு .

நிண்டவன் போனவன் எல்லோரையும் கடிக்காமல் கைகொடுக்க பழகுங்கள்.உலகத்தின் ஒரு சிறுமூலைக்குள் இருக்கும் ஒரு சிறுபான்மை இனம் நாங்கள் எங்கள் அரசியலை தொடர்ந்தும் இதே காழ்ப்பு போக்கில் செய்தால் அழிந்தே போய்விடுவோம்.

நிண்டவன் போனவன் எல்லோரையும் கடிக்காமல் கைகொடுக்க பழகுங்கள்.

உலகத்தின் ஒரு சிறுமூலைக்குள் இருக்கும் ஒரு சிறுபான்மை இனம் நாங்கள் எங்கள் அரசியலை தொடர்ந்தும் இதே காழ்ப்பு போக்கில் செய்தால் அழிந்தே போய்விடுவோம்.

சரியண்ணா

நல்லதொரு கருத்து

இதை அடிப்படையாக வைத்துக்கேட்கின்றேன்.

நானும் தாங்களும் இணைந்து தமிழருக்காக வேலை செய்ய முயல்வோமா?

அதற்கான தடைகளை இன்றிலிருந்து களைவோமா?

பச்சை என்னுடையது 1

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்,வை.கோ மாதிரி தலைவர் வருவார் போராட்டம் வெடிக்கும் என்றால் ஒரு விசிலை அடித்து போட்டு படுக்கலாம் .

இந்த ஆள் ஏன் சும்மா எங்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்களை கதைக்கிது.

அர்ஜுன் எங்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது எமது தலைவரும் தலைமறைவாகியுள்ளார் இந்த நிலையில் எம்மை வழி நடத்த யாரும் இல்லை நானும் யாரையும் நம்பத்தயாராக இல்லை இப்படியே இரண்டரை ஆண்டுகள் கழிந்து விட்டது எந்த தீர்வும் எட்டப்படவில்லை இந்தநிலையில் இவ்வாறு போனால் விடுதலைக்கு புறப்பட்ட எல்லா விடுதலை இயக்கங்களின் கனவும் கனவாகவே இருக்கப்போகின்றது இந்த நிலையை ஏற்கும் பக்குவம் என்னிடம் இல்லை ஆகையால்

ஏன் நீங்கள் மக்களுக்கு ஒரு நல்வழியை காட்டக்கூடாது உங்களிடம் ஏதாவது தமிழருக்கு தீர்வு உண்டா ? இல்லாவிடில் எதிர்கருத்து எழுதுவது மட்டும்தானா ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் கலாம் வருகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் . இலங்கைக்கு போபவர்கள் எல்லோருமே ராஜபக்சாவின் நிகழ்ச்சிநிரலில் நடப்பதாத ஏன் நினைப்பான் .இலங்கைக்கு போனால் சம்பிரதாயத்திற்கு நாட்டு தலைவரையும் அமைச்சர்களையும் சந்திப்பதேன்பது அவசியம்.

தமது நாடுகளுக்கு திரும்பி தமிழர்களுக்கு சார்பான நிலைகளை கூட அவர்கள் எடுக்கலாம் . தமிழ் நாட்டு எதற்கும் உதவாத அரசியல்வாதிகளின் ஊது குழல்களாக புலம் பெயர் தமிழன் மாறிவிட்டான் .உண்மையில் எமக்கு அதிக பாதிப்பு செய்வதும் ,எமது பிரச்சனையை தமது அரசியலுக்கு பாவிப்பதும் அவர்கள்தான் ,

காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்து உலகம் முழுக்க அனைவரையும் எதிர்த்துதான் மிச்சம் .

இந்தியாவும் எதிரி சீனாவும் எதிரி .கருணாநிதியும் எதிரி ஜெயலலிதாவும் எதிரி .என்ன அரசியல் செய்கின்றீர்கள் .

தனக்கு அணுக்குண்டு போட்ட அமெரிக்காவின் உதவியால்தான் யப்பான் இன்று இந்த நிலையில் இருக்கு .

நிண்டவன் போனவன் எல்லோரையும் கடிக்காமல் கைகொடுக்க பழகுங்கள்.உலகத்தின் ஒரு சிறுமூலைக்குள் இருக்கும் ஒரு சிறுபான்மை இனம் நாங்கள் எங்கள் அரசியலை தொடர்ந்தும் இதே காழ்ப்பு போக்கில் செய்தால் அழிந்தே போய்விடுவோம்.

"அழிவைக் கொடுத்த அமெரிக்காவையே சார்ந்து நின்று யப்பான் வளர்ச்சியில் வெற்றி பெற்றிருக்கின்றது" என்ற உதாரணத்தை கொடுத்தவர் புலியை அழிப்பதற்கு தன் மொத்த இனத்தின் இருப்பை கூலியாக கொடுக்கும் மனம் படைத்தவர்!

உடைந்த குடம், தனதென்றால் பொன்குடம், அடுத்தவனது என்றால் மண்குடமா?

தன்னுடைய பகையான புலிப்பகை மீது செலவளிக்கப்படாத பொறுமையும், அறிவுடமையும்; எமது பகையான சிங்களம், இந்தியம் இவற்றிடம் நாம் செலவளிக்க வேண்டுமாம். இது என்ன நியாயம்?

ஐயா!! தன் எதிரியை அழிக்க, தன் தாயின் உயிரை கூலியாகக் கொடுத்தவனின் தயவு எந்த ஒரு மனிதனுக்கும் நன்மை செய்யாது!

புலிஅழிப்பு ஒன்றே இந்தியத்திடம் ஒருவனுக்கு நன்றி உணர்வு பிறக்க காரணமாகும் போது, அவனுடைய போதனைப் பித்தம் எவனுக்கு வேண்டும்?

"புலி இந்தியாவின் ஏவல் அமைப்பு" என்று சொல்லி இருந்தால் அந்த கருத்து சுதந்திரத்தை மதித்திருப்பேன்!

"இந்திய அரசியல் கட்சிகள் போல், புலியும் மக்களை மோசம் செய்யப் போகின்ற ஒன்று" என சொல்லி இருந்தால் சொல்பவரின் அறிவில் எந்தக் குறையையும் நான் கண்டிருக்க மாட்டேன்!

ஆனால் "புலியின் ஆட்சியில் இருந்த மக்கள், சிங்களவர் ஆட்சியைத்தான் விரும்புகின்றார்கள்" என்று சொன்ன அந்த சொல்லுக்குரியவரின் அறிவுடமை பரிதாபத்திற்குரியாகிவிட்டது. ஒருவன் கூட ஏற்பானா என்ற அக்கறை துளியும் இல்லாதவன் பேச்சு, அவன் அறியாமைக்குச் செய்யும் அரங்கேற்றம்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கலாம் வருகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் . இலங்கைக்கு போபவர்கள் எல்லோருமே ராஜபக்சாவின் நிகழ்ச்சிநிரலில் நடப்பதாத ஏன் நினைப்பான் .இலங்கைக்கு போனால் சம்பிரதாயத்திற்கு நாட்டு தலைவரையும் அமைச்சர்களையும் சந்திப்பதேன்பது அவசியம்.

தமது நாடுகளுக்கு திரும்பி தமிழர்களுக்கு சார்பான நிலைகளை கூட அவர்கள் எடுக்கலாம் . தமிழ் நாட்டு எதற்கும் உதவாத அரசியல்வாதிகளின் ஊது குழல்களாக புலம் பெயர் தமிழன் மாறிவிட்டான் .உண்மையில் எமக்கு அதிக பாதிப்பு செய்வதும் ,எமது பிரச்சனையை தமது அரசியலுக்கு பாவிப்பதும் அவர்கள்தான் ,

காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்து உலகம் முழுக்க அனைவரையும் எதிர்த்துதான் மிச்சம் .

இந்தியாவும் எதிரி சீனாவும் எதிரி .கருணாநிதியும் எதிரி ஜெயலலிதாவும் எதிரி .என்ன அரசியல் செய்கின்றீர்கள் .

தனக்கு அணுக்குண்டு போட்ட அமெரிக்காவின் உதவியால்தான் யப்பான் இன்று இந்த நிலையில் இருக்கு .

நிண்டவன் போனவன் எல்லோரையும் கடிக்காமல் கைகொடுக்க பழகுங்கள்.உலகத்தின் ஒரு சிறுமூலைக்குள் இருக்கும் ஒரு சிறுபான்மை இனம் நாங்கள் எங்கள் அரசியலை தொடர்ந்தும் இதே காழ்ப்பு போக்கில் செய்தால் அழிந்தே போய்விடுவோம்.

இவரின்ர கதையைப் பார்த்தா ஏதோ உமாமகேஸ்வரனையும்.. புளொட்டையும் உலகம் அங்கீகரித்து தமிழீழத்தை தங்கத்தட்டில் வைச்சு.. சித்தார்த்தனை ஏற்கச் சொல்லி வற்புறுத்திற கணக்கா எல்லோ இருக்குது..!

சும்மா போங்கையா..!

ஒரு தேசம்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரும் இன அழிவைச் சந்தித்துள்ள நிலையில்.. அந்தப் பகுதி மக்கள் இன்னும் பூரணமாக சொந்த இடங்களுக்கே திரும்ப முடியாத நிலையில்.. கல்வி பெறக் கூட அடிப்படை வசதி இன்றி வாழும் நிலையில்.. கலாம் யாழ்ப்பாணத்திற்கு அதுவும் இரண்டு மதிப்புமிக்க.. யாழ் நகரை மையமாகக் கொண்ட இரண்டு இடங்களுக்கு விசிட் அடிச்சாப் போல.. அறிவியல் யாழ்ப்பாணத்தில தளைத்து விடப் போவதில்லை.

காந்தியும் தான் யாழ்ப்பாணத்துக்கு விசிட் அடிச்சார். அதனால என்ன.. எங்களுக்கு விமோசனம் கிடைச்சதா..??! இல்லையே. வெட்டிக்கு காந்தி வந்த பூமி என்று பீற்றிக் கொண்டு திரியுறம்.. அதனால என்ன நன்மை கிடைத்தது தமிழர்களிற்கு..????!

கலாம் வன்னிக்குப் போய்.. வாகரைக்குப் போய் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை நேரில சந்திச்சு.. அதுகளுக்கு ஒரு ஆறுதல் கூறி இருந்தால் கூட.. அவரின் மனிதாபிமானத்தை கண்டாவது மெச்சி இருக்கலாம்.

இது.. மும்மொழி.. இணைப்பு என்ற பெயரில்... ஐக்கிய இலங்கைக்காக வக்காளத்து வாங்க வந்து மாரித்தவளை போல கத்திட்டுப் போறதிற்கு ஏன் கலாம் வரனும். ஒரு உலகப் புகழ்பூத்த அறிவியலாளன்.. இந்த செயலின் மூலம்.. தன் நிலையை தாழ்த்திக் கொண்டிருக்கிறாரே அன்றி வேறெதனையும் செய்யவில்லை.

40,000 மக்களின் படுகொலையைப் பற்றி பேசாமல்.. மொழி ஐக்கியம் பற்றி பேசிவிட்டுப் போவதால்.. எந்தப் பயனும் இல்லை. 40,000 மக்களைச் சார்ந்த பல்லாயிரம் மக்கள் கண்ணீர் வடிக்க.. கலாம் சிரித்துப் பேசி இன ஐக்கியம் வளரும் நிலை இலங்கைத் தீவில் இல்லை..!

மக்களோ.. மூலை முடுக்கெங்கும்.. கண்ணீரோடு.. என்பதை யாழ் பல்கலையில் எழுந்த அந்தக் குரல் சொல்லியுள்ளது. ஐயா இவ்வளவு காலமும் வராது நீங்கள் இப்ப ஏன் வந்தனீங்கள்.. அதுவே அவர் முகத்தில் செருப்பால் அடித்தது போல.. உள்ளது. அதுமட்டுமன்றி அந்தக் கேள்வியைத் தொடர்ந்து எழுந்த கரகோசமும்.. கலாமை நோக்கிய நக்கல் சிரிப்புமே.. கலாமின் வருகையை மக்கள் இதயத்தால் வரவேற்கவில்லை என்று காட்டுகிறது.

சரி வந்ததும் தான் வந்தார்.. தான் சொல்லும்.. அந்த யாழ்ப்பாண வாத்தியாரின் நினைவோட கிடந்திருக்கலாமே. செத்துப் போன அந்த வாத்தியாரின் சமாதியாவது யாழ்ப்பாணத்தில இருக்கான்னு பார்த்தாரோ தெரியவில்லை. வந்து.. தமிழ் மக்களைக் கொன்று குவித்த.. தமிழ் பெண்களின் வாழ்வறுத்த.. தமிழ் மக்களின் வளங்களை.. சுதந்திரத்தைச் சூறையாடிய இந்திய ஜவான்களுக்கு.. மலர் மாலை சாத்திட்டுப் போனதைத் தவிர.. கலாம் செய்த தமிழ் மக்களுக்கு உதவக் கூடிய.. புத்திசாலி நகர்வு தான் என்ன..??!

டக்கிளஸ் தேவானந்தாவிற்கு பாவ மன்னிப்பும்.. மகிந்தவிற்கு.. உலக இரட்சகன் விருதும்.. கலாமிற்கு நோபல் பரிசு பரிந்துரையும்... தான் இந்த விஜயத்தின் பிரதிபலன். மக்களுக்கோ.. கண்ணீரும்.. வெலிகடையில் வதையும்..!

இதனை எல்லாம் மக்கள் எதிர்ப்பின்றி வரவேற்கனும் என்று உமாமகேஸ்வரன் ஆவியா வந்து கட்டளை இடலாம். ஆனால் வைகோவும்.. நெடுமாறன் ஐயா போன்றவர்கள்.. கலாம் போல.. இந்தப் போலி உருவங்களோடு.. மனித கொடுமைகளை மறைக்க துணை போகமாட்டார்கள். அவர்கள் படித்த இந்த கலாமை விட.. பல மடங்கு மனிதாபிமானத்தில் உயர்ந்தவர்கள். அதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்வது அவசியம்..!

யாழ் இந்து அன்னை நேற்று வெட்கித் தலைகுனிந்திருப்பாள். காரணம் அவள் மடியில் தவழ்ந்து உன்னத இலட்சியத்திற்காக மரணித்த.. வீரர்களைக் கொன்றவர்களை துதித்துவிட்டு வந்த ஒருவருக்கு மாலை போட்டு வரவேற்றதற்காக..! 121 ஆண்டுகள் சூரியனைச் சுற்றிய இந்துக்கல்லூரி.. ஒளியையும் இருளையும் கண்டது. நேற்று முதல்.. இருளை மட்டுமே சுற்ற ஆரம்பித்திருக்கிறது..! இன்று இந்துவின் மைந்தன் என்று என்னை அழைத்துக் கொள்வதில் வெட்கப்படுகிறேன்..! காரணம்.. ஒரு ஏகாதபத்திய கொள்கை விபரிப்பாளனுக்கு.. செங்கம்பளம் விரித்ததற்காக..! அதுவும்.. ஒரு இனப்படுகொலையாளனான.. சந்திர சிறியை வைச்சுக் கொண்டு..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்

கருத்துக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலாம் வருகையைக் கண்டு சநதோசப்பட்டு ஆர்ப்பரிக்காதீங்க. யாழ் மக்களின் மனநிலையை நாடி பிடித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் புரொஜெக்ட் தயாரிக்க வந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்திய விஞ்ஞஞானியின் வருகையை ஆதரித்துவரும் அன்பர்களுக்கு.............

முதலாவதாக அவர் இங்கே வந்திருப்பது போர்க்குற்றவாளியான சிங்கள அரசின் அணுசரணையில். ஆகவே அவர் வந்திருக்கும் நோக்கம் மிகவும் தெளிவானது. அவர் போர்க்குற்றவாளியான சிங்களத்தையும், அபோர்க்கக்குற்றத்திற்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்து இலங்கையின் வடக்குக் கிழக்கை தனகது காலணியாக மாற்ற விரும்பும் இந்திய மேலாதிக்கத்தின் முகத்தினையும் மறைப்பதற்கே என்றால் அது மிகையாகாது.

அடுத்தது இவர் இங்கு வந்திருப்பது மகிந்தவின் சிந்தனையில் உதித்த மும்மொழித்திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக. ஒரு இனத்தின் அடியாளத்தையே அழித்து அதனை ஒட்டுமொத்த அடிமைத்தனத்திற்குள் வைத்திருந்து கொண்டு, இதுவரை செய்யப்பட்ட போர்க்குற்றங்களுக்கான எந்த நிவரண்மோ அல்லது அம்மக்களுக்கான நீதியான அரசிய தீர்வையோ தரவிரும்ஆத ஒரு அடக்குமுறை அரசு "மும்மொழித்" திட்டத்தினை னாரம்இக்கிறது என்றால் அது 1958 இல் சிங்கள இன ஆதிக்கத்தின் பிதாமகனான பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தினை மிஞ்சும் தன்மையுடையது என்றால் அது மிகையாகாது. அத்திட்டத்தினை ஆரம்இத்து வைப்பதற்காக ஒரு தமிழரையே சிங்களம் வரவழைத்திருப்பது இந்திய மேலாதிக்கத்தின் ஈழத்தமிழர் தொடர்பான கரிசணை என்பது எந்தளவில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒருகாலத்தில் தமிழர்களாகவிருந்து பின்னர் சிங்கள பவுத்தர்களாக மாறிய சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களக்கு நடந்த கதியே இறுதியில் வடக்குக் கிழக்கிலும் இன்னும் ஒன்றிரண்டு சந்ததிகளில் நடக்கப் போகிறதென்பது கண்கூடு.

தனது பேச்சில் ஓரிடத்தி. "போர் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது" என்று சொல்லும் அப்துல் கலாம் அவர்கள் 140,000 தமிழர்கள் சிங்களத்தாலும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசினாலும் கொண்றுகுவிக்கப்பட்டபோது எங்கிருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

மேலும் தனது பேச்சில் 2300 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற கலிங்கத்துப் போரில் அசோகச் சக்கரவர்த்தி அகிம்ஸா எனும் கொள்கையைக் கற்றுகொண்டதாகப் பெருமைப் பட்டுக்கொள்ளும் கலாம் அவர்கள் அசோகனால் கொன்றுகுவிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களளுக்கான நீதியோ அல்லது அவர்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட தேசங்களோ அம்மக்களுக்கு அசோகனால் திருப்பி வழங்கப்படவில்லை என்பதை மறந்து விட்டார் போலிருக்கிறது.

மேலும் தனது பேச்சில் மகாத்மா காந்தியைப் பற்றிப் பேசத் தவராத கலாம் அவர்கள், காந்தியின் வெள்ளை மேலதிக்கவாததிற்கெதிரான உடன்படாக் கொள்கை பற்றி எந்தவித அறிவுமற்றவராக யாழ்ப்பானத்து இளைஞர்களைப் பார்த்து இனவழிப்பு அரசுடனும், அந்த அரசினை வழிநடத்தும் இந்திய மேலாதிக்கவாதத்துடனும் கை கோர்த்து ஒன்றுபட்டு வாழுங்கள், அபிவிருத்தி செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.

தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சியாளர்களுக்கெதிரான தனது நாடு உற்பட்ட சர்வதேச அழுத்தத்தினைப் பாராட்டும் கலாம் அவர்கள், தென்னாப்ரிக்க அடக்குமுறையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்களத்திற்குத் தொடர்ந்தும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மேலாதிக்கவாதம் ஏன் இன்னும் உதவிவருகிறதென்பதை கூற மறந்துவிடுகிறார்.

தனது பேச்சில் ஐரோப்பிய ஒன்றியத்தினை உதாரணமாக எடுத்துக்கொண்ட கலாம் அவர்கள், அந்நாடுகள் பன்மொழி, பல் கலாச்சார தன்மையைக் கொண்டிருந்தாலும் நெருக்கடி காலத்தில் ஒன்றிற்கொன்று உதவுவதாகச் சுட்டிக் காட்டி தென்னாசியாவிலும் அப்படியானதொரு ஒன்றியம் தேவை என்றும் தமிழர்களும் அதில் சேர்ந்துகொள்ள வேண்டுமெனவும் அறிவுரை கூறுகிறார். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளெல்லாம் தமது இறமையையும், சுய நிர்ணய உரிமையும் எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காமலேயே ஒன்றியத்திற்குள் வேலை செய்கின்றன என்பதையும், ஆனால் தமிழர்களின் இறமையும் சுய நிர்ணய உரிமையும் இந்திய மேலாதிக்கத்தின் துணையுடன் சிங்களத்தால் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கலாமுக்கு உரையை எழுதிக் கொடுத்தவர்கள் ஏனோ சொல்ல மரந்துவிட்டர்களோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்திய ராணுவத்தின் மிக உயர் மதிப்பிற்குரிய கலாம் அவர்கள் இனவழிப்பு நாயகர்களான இந்திய மேலாதிகத்துடனும், சிங்களப் போர்க்குற்றவாளியான மகிந்தவுடனும் விருந்துண்அதென்பது அவரின் செல்வாக்கை அவரின் சமூகத்தில் நிச்சயம் சரிக்கவே வழி வகுக்கும். அத்துடன், 1980 களின் இறுத்திக்காலத்தில் இந்திய நாட்டுப் படைகள் இலங்கையின் வடக்குக் கிழக்கில் கொன்றுகுவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் மறைவுக்கு இதுவரையில் அனுதாஅம் தெரிவிக்க விரும்ஆத கலாம் போன்றவர்கள் அந்தப் படுகொலைகளைச் செய்த இந்திய படையின் நினைவுத்தூஇக்கு விஜயம் செய்து அஞ்சலி செய்தது அவரின் நாட்டினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதில் இன்னுமின்னும் இந்தியா பற்றிய தெளிவை அதிகரித்திருக்கிறது.

ஈழத்தமிழர் மேல் இன்னறுவரை அனுதாஅம் கொண்ட ஒரே மக்கள் கூட்டமான தமிழ்நாட்டை திசை திருப்புவதற்காக இந்திய மேலாதிக்கவாதம், கலாம், சுவாமிநாதன், சுதர்சன நாச்சியப்பன் போன்ற தமிழர்களை பல முனைகளில் களமிறறக்கி விட்டிருக்கிறது. அவர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு அது சொல்லும் செய்தி இதுதான், " தமிழர்களின் சுய நிரணய உரிமை, விடுதலை, போர்க்குற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு, தமிழின அழிப்பு போன்றவற்றை விட்டுத் தள்ளுங்கள், மாறாக விட்டுக் கொடுத்தல், அபிவிருத்தி, சகிப்புத்தன்மை என்பதை மட்டுமே பேசுங்கள். சிங்கள அரசுடன் அவிருத்தித் திட்டங்களில் பங்கெடுங்கள், அதன்மூலம் வடக்குக் கிழக்கில் உங்கள் வியாபார திட்டங்களை முன்னெடுங்கள்" என்பதுதான் அது.

அண்மையில் இந்து நாளிதழில் வெளியான பேட்டியின் பார்த்தசாரதி எனும் முன்னால் இந்திய அதிகாரி தமிழ்நாடு இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியுடன் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுதல் அவசியம் என்று கூறியிருக்கிறார். வடக்குக் கிழக்கில் நடைபெறும் இவ்வாறான அஇவிருத்தித் திட்டங்களின் மூலம் தமிழர் மட்டுமல்லாது முழு இலங்கையுமே பலன்பெற முடியும் என்று கூறியிருக்கிறார். இலங்கை மீது போர்க்குற்றங்களை சுமத்தும் எந்த திட்டங்களிலிருந்தும் இந்தியா விலக வேண்டுமென்றும், அவ்வாறு செய்யாவிடில் சீனா, பாக்கிஸ்த்தான்ணிஸ்லாமிய நாடுகள், அமெரிக்கா போன்றவற்றிலிருந்து அதற்கான ஆதரவு கிடைக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இது முழுப் பூசணிக்கஐஅயி சோற்றில் மறைப்பதைப் போன்றது. ஏனென்றால் இனக்கொலைய திட்டமிட்டு நடத்தியத்யஉ முதல் அதை இன்றுவரை மறைத்துவருவது இந்தியாதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம், அப்படியிருக்க இந்தியா போர்க்குற்ற விசாரனைத் த்ட்டத்தை கைவிட வேண்டுமெறு இந்திய அதிகாரி ஒருவரே கோருவது நகைப்பிற்கிடமானது.

உண்மையான் அபிவிருத்திக்கும், மேலாதிக்க அவிருத்திக்குமிடையே நிறைய வேறுபாடிருக்கிறது. உண்மையான அரசியல் விடுதலையின் மூலமும், அம்மக்கள் கூட்டத்தின் உண்மையான பங்களிப்பின் பெறப்படும் அபிவிருத்தியென்பது வேறு, அம்மக்கள் கூட்டத்தை அடிமைப்படுத்தி இனவடையாலங்களை அழித்தொழித்து இறுதியில் தான் விரும்பும் அடிமைத்தன அபிவிருத்தியை அம்மக்கள் கூட்டத்தின்மீது திணிப்பதென்பது வேறு.

இந்திய மேலாதிக்கத்தின் பூரண அணுசரணையுடன் ஈழத்தில் நடத்தப்பட்ட இனவழிப்பினை மரைத்து அஇவிருத்தி மலாம் பூச வந்திருக்கும் அதுல் கலாம் போன்றோரின் உபதேசத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள் என்பது கவனிக்கப்படவேண்டியது.

இந்தியா பெருமை பட்டுக்கொள் இலங்கை என் அண்டை நாடு

என , எத்தனை காணொளி கொடுத்தாலும் , நம் காலுக்கு கீழே இருக்கும் செருப்பு போல இருக்கும் இலங்கை செருப்பை நக்கி பணிந்துடுவாய் இந்தியா

இந்தியா குடியரசு நாளில் (அதாவது இந்தியா மக்களாட்சியாகிய நாளில்) இந்திய இராணுவம் 1947ஆகத்து 15லிருந்து இந்திய மக்களுக்கும், அண்டை நாடுகளிலுள்ள மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

அமைதி படை என்ற பெயரில் ஈழத்தில் நுழைந்த இந்திய இராணுவம் மருத்துவமனைகள் என்று கூட பாராமல் குண்டு வீசியது, பொதுமக்களின் மேல் டாங்கிகளை ஏற்றியது என பல வன்முறைகளை செய்தது, இவையெல்லாம் சாத்தானின் படைகள் என்று நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது மட்டுமின்றி, எல்லா தொழில்நுட்ப உதவிகளும் செய்தது.

வங்காள தேசத்தில் விடுதலைக்காக போராடிய உண்மையான குழுக்களை அழித்தொழித்து.

காங்கோவில் ஐநா அமைதி பாதுகாப்பு படையில் இருந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த பல பெண்களை கற்பழித்துள்ளார்கள். பல நாடுகள் இராணுவமும், பன்னாட்டு ஊடகங்களும் இருக்கும் பொழுதே இப்படி செய்தவர்கள், ஊடகங்களும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களும் மறந்து போன இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும், காசுமீரில் என்ன செய்வார்கள் என்று நான் விளக்க தேவைஇல்லை

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், மேகலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இராணுவ அதிகார சிறப்பு சட்டம் 1958 (AFSPA 1958) மூலம் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் கொன்று, கைது செய்து வருகின்றது. பெண்களை கற்பழித்து வருகின்றது. இந்த மாநிலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகளை அறிய உங்களுக்கு இரு நிகழ்வுகள் போதுமானது. 1)எங்கள் குழந்தைகளை விட்டுவிடுங்கள், எங்கள் சதைகளை எடுத்துக்கொள்ளுங்கள், எங்களை கற்பழியுங்கள் என்று இராணுவ முகாம் முன்பு நிர்வாணமாக போராடினர் மணிப்பூர் தாய்கள். 2) மனோரமா என்ற பெண்ணை இராணுவம் கற்பழித்து கொன்றதை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்

உதவுகிறேன் என்ற பெயரில் காசுமீர் நாட்டிற்குச் சென்று இன்னும் அந்த நாட்டை விட்டு நகராமல் அந்த நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று, பெண்களை கற்பழித்து, சிறுவர்களை அனாதையாக்கி வருகின்றது. காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து 100க்கும் அதிகமான சிறுவர்களும், இளைஞர்களும் இறந்தார்கள் என்பதை இந்திய ஊடகங்களே கூறியுள்ளன.

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969

கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912

பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும், காசுமீரிகள் இராணுவத்தால் கொல்லப்படுகின்றார்கள் என்ற உண்மை அண்மையில் வெளியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.