Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்துல் கலாம் -தியாகி துரோகி இன்னும் பல ........அருளியனின் வலைப்பதிவில் இருந்து

Featured Replies

403221_357157680978526_100000528921830_1409672_1948389638_n.jpg

மேதகு அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை சில அன்பர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை,அப்துல் காலம் துரோகி என சில நண்பர்களும்,சில ஊடகங்களும் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன,முகப் புத்தகத்தில் ஒரு அன்பர் அப்துல் கலாம் தமிழின துரோகி எனவும் அவரைப் போட்டுத் தள்ள வேண்டும் எனவும் தனது அறச் சீற்றத்தைக் கொளுத்திப் போட்டு இருந்தார் , இந்த துரோகி , தியாகி என்பதற்கு அவசியம் ஒரு டெபினிசன் வேண்டும் தனது முகப் புத்தக பிரண்ட் ரிக்குயஸ்ட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணை துரோகி என்றும் அவளை போட்டுத் தள்ளவேண்டும் எனவும் ஒரு நண்பர் தனது சீற்றத்தைக் என்னிடம் காட்டி இருந்தார் , என்ன இழவு வாழ்க்கடா இது , ஒரு முறை என்னுடன் கதைத்த நண்பன் ஒருவன் கூறினான் மச்சான் ஒரு தமிழனால் இன்னொரு தமிழனுக்கு இலகுவாக கொடுக்க கூடிய பட்டம் துரோகிப் பட்டம் தான் என்று, ya.......off course he was correct

உண்மையில் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே,அப்துல் காலம் என்பவர் மிகப் பெரிய ஆளுமை,எத்தனையோ ஏழை இளைஞர்களுக்கு அவர் ஆதர்சனம்.இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் எனும் பெயருடைய ஒரு ஏழைச் சிறுவன்,இந்தியாவின் அணு சக்தித் துறைக்கே தந்தை எனும் நிலையை அடைந்தான் என்றால் அதுincredible ,அப்துல் கலாம் தனது இன்றைய நிலையை அடைவதற்கு அவர் கடந்த நெருப்பாறுகள் அதிகம் .உண்மையில் அப்துல் கலாம் ஒரு ஜீனியஸ் ,எத்தனையோ கோடிக் கணக்கான இளைஞர்களின் ரோல் மாடல்.சில நாட்களுக்கு முன்பு I am Kalam எனும் ஒரு ஹிந்தி மூவி பார்த்தேன்,ராஜஸ்தான் பாலை வனத்தில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடையில் வேலை செய்யும் ஒரு ஏழைச் சிறுவன் அப்துல் காலமைப் பற்றி அறிந்து அவர் போல ஆக வேண்டும் என நினைப்பது தான் படத்தின் ஒன் லைன்,நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று,அந்தப் படத்தில் வரும் சிறுவனைப் போல எத்தனையோ இளைஞர்களை நான் பார்த்துள்ளேன். எனது ஒன்று விட்ட தம்பியின் நோட் புக்கை நான் ஒரு முறை பார்த்த போது அதில் அப்துல் கலாமின் சுய சரிதை ஆன அக்கினிச் சிறகுகளில் தனக்கு பிடித்த சுய ஆளுமை வசனங்களை குறித்து வைத்திருந்தான் அப்போது அவன் ஏழாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான் , எனக்கும் மிக மிகப் பிடித்த முதல் ஜந்து புத்தகங்களில் அக்கினிச் சிறகுகளும் ஒன்று . பெங்களூரில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தருணுக்கு அப்துல் கலாம் தான் ஆதர்சனம்,வெட வெடக்கும் பெங்களுர் குளிரில் ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கு எழுந்து இருப்பான் கேட்டால் அப்துல் கலாம் நான்கு மணிக்கு எழுந்து இருப்பார் எனக் கூறுவான்,இந்தியாவின் வேறு ஒரு மூலையில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த எனது நண்பன் தருணுக்கு இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஆதர்சனம் என்றால் அப்துல் கலாம் எனும் மேதையைப் பற்றி நான் வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாது,அப்துல் கலாம் உண்மையில் ஒரு மாமனிதர் [அந்த மாமனிதர் அல்ல], அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை எத்தனையோ இளைஞர்களின் சிந்தனைப் போக்கை மாற்றி இருக்கும் ஆராவது ஒருத்தனாவது அப்துல் கலாம் போல வர வேண்டும் என சபதம் பூண்டு இருப்பான்,அவ்வாறு சபதம் பூண்டு இருந்தால் மிக மிக வரவேற்கப் பட வேண்டிய விஜயம் ,அப்துல் கலாம் ஏன் புலிகள் ஆண்ட போது வர வில்லை என சிலர் லாஜிக் கேட்கிறார்கள் ,இந்தியாவின் பிரதமரைக் கொன்றவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் வர முடியாது என்பது நாலாம் கிளாஸ் படிச்சவனுக்கும் தெரியும் [இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த படுகொலைகள் எவ்வளவு தூரம் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவுக்கு கண்டிக்கப்பட வேண்டியது ராஜீவ் காந்தியின் படு கொலை ],இதே போல ஒரு வாதம் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்ற போதும் பரவியது , என்னுடன் பேசிய ஒரு அன்பர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து சொல்லி இருக்க வேண்டும் என க் கூறினார் , அப்படி கூறாத ஏ ஆர் ரகுமான் துரோகி எனவும் பொங்கி இருந்தார் , வெளி உலகத்தில் அதுவும் வெளி மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஒருவனும் கருத்து சொல்ல முடியாது என்கிற அளவிற்கு தான் விடுதலைப் புலிகளைப் பற்றியும் எமது போராட்டம் சார்ந்த உண்மையான நீதிகளையும் நாம் மிக கேவலமான முறையில் தான் வெளி உலகத்துக்கு கொண்டு சென்று உள்ளோம் ,எமது போராட்டம் தோற்றுப் போக மிக மிகப் பிரதான காரணமும் அது தான் ..

கூடங்குளம் அணு உலைக்கு அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்து இருந்தார் ,ஆகவே அப்துல் கலாம் ஒரு துரோகி என ஒரு அன்பர் எனக்கு கூறினார் ,மேலும் அப்துல் கலாம் காங்கிரஸின் அஜன்டாவிற்கு ஏற்ப செயற்படும் இத்தாலி அன்னையின் அடிவருடி எனவும் என்னிடம் கொந்தளித்து இருந்தார் ,அப்துல் கலாம் ஏதோ காங்கிரஸ் கேட்டுக் கொண்டதுக்கு ஏற்ப நேற்று திடீர் என முளைத்து அணுசக்தி மின்சாரத்தை ஆதரிக்கிறார் என கூறுவது அடி முட்டாள் தனம் ,அப்துல் கலாமை சரியாக பின் பற்றுபவர்களுக்கு தெரியும் அப்துல் கலாம் எத்தனை ஆண்டுகளாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் என்று , ஒரு அணு வி ஞ்ஞனி அணு உலையை எதிர்த்தால் தான் அது அதிசயம் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை சொல்வார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாக்கு சென்ற சிலர் இந்தியாவில் மாருதிக் காரைப் பார்த்தவுடன் தங்களுக்குள் ஆச்சரியப்பட்டார்களாம்

அட அட டே ..........இந்தியாவிலும் மாருதிக் கார் இருக்கு என்ன ...........? ,

ஏறத் தாள இதைப் போலத் தான் இருக்கிறது,அணு மின் விவகாரத்தில் அப்துல் கலாமை துரோகி என்பவர்களின் நிலையும், அப்துல் கலாம் இன்று நேற்று அல்ல ஆண்டு ஆண்டு காலமாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் , நான் பெர்சனலாக எனது அறிவுக்கு ஏற்ற படி அணு மின்சாரத்தை எதிர்கிறேன் [அணு சக்தி சம்பந்தமான எனது அறிவு பூச்சியம் என்பது வேறு விடயம்]

அணு சக்தி இந்தியர்களின் பிரச்னை அதை விடுத்து எமது மக்களின் பிரச்சனைக்கு வருவோம் ........

அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை யார் எதிர்கிறார்கள் என்று பார்த்தல் அவர்களில் பெரும் பாலானவர்கள் புலம் பெயர் தமிழர்கள்,இன்னும் சிலர் இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்கள் , இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை விடுவோம் அவர்களுக்கு சில விடயங்கள் இந்த உலகம் அழியும் வரை விளங்காது , விளங்கப்படுத்தவும் முடியாது,அவர்களில் பெரும் பாலானவர்கள் இன்னும் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகின்றனர் ,அவர்களுக்கு போரின் வலி தெரியாது அவர்களில் பெரும் பாலானவர்கள் போரை விஜயின் சுறா படம் போல நினைக்கிறார்கள்,ஆனால் பெரும் பாலான புலம் பெயர் தமிழர்களுக்கு போரின் வலி தெரியும் ஆனால் அவர்கள் அதனை இலகுவாக மறந்து விடுகிறார்கள்,இவர்கள் ஈழத்தில் இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் ,அவர்களின் பாஷையில் சொன்னால் கொடிய அரக்கன் மகிந்தவின் ஆட்சியில் ஈழத்தில் இன்னும் லட்சக் கணக்கான தமிழர்கள் இருகிறார்கள் , ஈழத்திற்கு யாருமே போகக் கூடாது என்றால் என்ன சார் நியாயம் ,ஈழத்துக்கு எவனுமே போகக் கூடாது என்ற ஒருவரிடம்

அப்ப யாராம் போறது என்று கேட்டதுக்கு

நாங்கள் லீவில போவம் தானே ,அது போதாதா என்றார் .

சுருங்க சொன்னால் இன்றைய ஈழத்து இளம் சந்ததியின் போர்க் குணத்தை மாற்றும் எந்த விஜயத்தையும் புலம் பெயர் சில அன்பர்கள் விரும்புவது இல்லை,அவர்களுக்கு எமது இளம் சந்ததி எப்போதும் போர்க் குணத்துடன் தான் இருக்க வேண்டும் ,போராட வேண்டும் சாக வேண்டும் தாம் வளமாக வாழ வேண்டும் , அவர்களுக்கு தமது பாக்கெட்டை நிரப்ப ஈழத்தில் போர் அவசியம்.

நாம் ஈழ தமிழர்கள் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் முற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிப் பார்த்து விட்டோம் உலகின் அத் தனை துயரங்களும் ஈழத்தமிழனுக்கு தெரியும் நாம் மேற்கொண்ட நீதிக்கான போர் எமது தவறாலும் சர்வதேசத்தின் தவறாலும் படு தோல்வியில் முடிந்துள்ளது,ஆம் ஈழத்தமிழர்கள் நாம் தோற்று விட்டோம் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,எமக்கு முன்னால் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வி தான்

அடுத்தது என்ன..............?

download.jpg

போராடிப் பார்த்தாகி விட்டது,முள்ளி வாய்கால் வரை எமது மக்கள் பார்த்து விட்டனர்,இனி ஒரு போராட்டம் எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை என்கிற உண்மை பெரும் பாலான ஈழத்தமிழனுக்கு விளங்கிவிட்டது,ஆனால் புலம் பெயர் சில புலிப் பினா மிகளுக்கும் இந்தியாவில் உள்ள சில அன்பர்களுக்கும் விளங்க வில்லை ,மாற்றிச் சொன்னால் அவர்களுக்கு உண்மை நிலை விளங்கினால் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்,ஈழத்தமிழனை முதலாக கொண்டு செய்து வரும் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆகும்,ஆகவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ "பிரபாகரன் திரும்பி வருவார்' "தமிழர் மானம்" "வீரம்" லொட்டு லொசுக்கு என்று கண்ட மேனிக்கு அடித்து வருகிறார்கள்,சில புலம் பெயர் தமிழர்களுக்கு எமது இளம் சந்ததியின் இர த்தம் இன்னும் கேட்கிறது தாம் பாதுகாப்பாக வெளி நாடுகளில் இருந்து கொண்டு எமது அப்பாவி இளைஞர்களை சாகடித்தது போதாது என்று அவர்கள் இன்னும் மனித உடல்களை பலியாக கேட்கிறார்கள்,வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் அடையாமல் வெளிக்கிருக்க மாட்டாதவர்கள் வெளிக்கிருக்காமல் இருக்கட்டும்,இல்லை என்று இன்னும் முக்குபவர்களை போராட தமிழ் ஈழம் அன்போடு வரவேற்கிறது.............................!

ஆனால் ஈழத்தில் உள்ள இன்றைய இளம் சந்ததி உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் ,இனியொரு போராட்டம் எம்மால் சாத்தியம், இல்லை ஆனாலும் நாம் போராட வேண்டும் அதுவும் முழு மூச்சாக , முன்னயதை விட தீவிரமாக,ஆனால் வேறு விதமாக

எவ்வாறு.........?

அந்தப் போராட்டம் கல்வியால் மாத்திரம் தான் முடியும்..

ஈழத்தமிழன் கல்விக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் ,பொதுவாக எந்த இனத்தையும் விட ஈழத் தமிழர்களின் கல்வி அறிவு

அசாதாரணம் ஆனது , எம்மில் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகிறார்கள் ,அவர்களை தடுக்க வேண்டும் என சிங்கள பேரினவாத அரசு கிரிமினலாக சிந்தித்து கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஈழத்தில் போரை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது,இன்றும் கூட உலகின் எத்தனையோ பெரும் பதவிகளில் ஈழத்தமிழர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள்,இனி நாம் எடுக்க இருக்கும் போராட்டம் அல்லது எடுக்க இருக்கும் ஆயுதம் "கல்வி"யாக இருக்க வேண்டும்.குழந்தைப் போராளிகளை , தற்கொலைப் போராளிகளை உருவாக்கியதை விடுத்து நாம் இப்போது மேதைகளை உருவாக்க வேண்டிய நிலையில் / கட்டாயத்தில் இருக்கிறோம்.எம்மால் எமது இழந்த பெருமையை மீண்டும் பெற கல்வியால் மாத்திரம் தான் முடியும் எமது அடுத்த சந்ததி தமக்கு இருக்கும் வரலாற்றுக் கடமையை உணர்த்து கல்வியில் முழு நாட்டம் செலுத்த வேண்டும்,எமது அடுத்த சந்ததியாவது சுயமாக சிந்திக்கக் கூடிய ,பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்கொள்ளக் கூடிய சந்ததியாக மாற வேண்டியது அல்லது மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் அல்லது...இனிவரப் போகும் வரலாறுகளில் "ஈழத்தமிழர்கள் எனும் ஒரு இனக் குழுமம் இலங்கையில் இருந்தார்கள்" என பதியப் படப் போவதை யாராலும் தடுக்க முடியாது"........

நான் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயத்தை அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வின் ஒரு படியாகத்தான் பார்க்கிறேன்,அப்துல் கலாமிற்கு எமது யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த தடல் புடலான வரவேற்பை பார்க்கும் போது எமது இளம் சந்ததியின் மனம் சிறிதளவேனும் கல்வியின் பக்கமாக திரும்புகிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது,

334032_256725091065216_100001831803283_648956_560693518_o.jpg

396315_3097071914580_1497575843_3071286_1450746378_n.jpg

408984_300355606678498_100001121826134_888133_699776299_n.jpg

409032_3097071434568_1497575843_3071285_1613937557_n.jpg

398404_3097074874654_1497575843_3071290_658766949_n.jpg

ஒரு அட்வைஸ் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று சொல்வார்கள்,போரால் கெட்டு நொந்து சிக்கி சீரழிந்து உள்ள ஈழத்தமிழனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லக் கூடிய தகுதி அப்துல் கலாம் எனும் பெரியவரிடம் மட்டும் தான் இருக்கிறது ஏன் என்றால் அப்துல் கலாம் தனது வாழ்வின் ஆரம்ப காலங்களில் போரை சந்திக்கா விட்டாலும் போரின் விளைவுகள் என்று சொல்லக் கூடிய வறுமை தனிமை முதலிய அனைத்தையும் அனுபவித்து தான் இன்று அப்துல் காலமாக மிளிர்கிறார்,அப்துல் காலாமின் யாழ்ப்பாண வருகை எமது இளம் சந்ததியில் ஒருவரது மனத்தை மாற்றி ,அவனது போர்க் குணத்தை மாற்றி அவனைக் கல்வியின் பக்கம் திருப்பி இருந்தால் அப்துல் கலாம் ஈழமக்களுக்கு நன்மை செய்த உத்தமர்களின் பட் டியலில் முதல் இடம் பிடிப்பார்

Edited by arjun

எனது பார்வையில், கலாமின் வாழ்க்கை கட்டாயம் ஒவ்வொருவருவருக்கும் தெரியவேண்டிய வெற்றிக்கதை.

ஆனால் அவர் யாழுக்கு வரவழைக்கப்பட்டது சிங்களம்-டெல்லி என்ற வரையறைக்குள் ஈழ தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முடக்கவே. அவரை துரோகி என சிங்கள-கிந்திய தொடரும் துரோகத்தால் ஈழத்தமிழன் அழைப்பதில் தவறில்லை, காரணம் அவரும் ஒரு தமிழர், எவ்வளவோ செல்வாக்கு இருந்தும் தமிழருக்காக ஈதியும் செய்யாத, சோரம்போன / சோரம்போகும் தமிழர். எனவே இவர் எதிரியல்ல, துரோகியாகிறார்.

Edited by akootha

அர்ஜுன்,

பல இடங்களில் 'ஹலிவூட்டை' யங்கள் கருத்திற்கு பலம் சேர்க்க நீங்கள் பாவிப்பதுண்டு. எனவே, இந்தியா போன்ற மக்களாட்சி கொண்ட நாட்டில், இதே திரையுலகத்தை சேர்ந்த புகழ்பெற்ற ரஹ்மான், (ஒரு ஜோர்ஜ் க்ளூனி தென் சூடானுக்காக குரல் கொடுத்து சுதந்திரத்தையே பெற உதவியுள்ளார்), ஒன்றுமே செய்ததில்லையே?

அண்மையில் ஒரு நாள் விக்கிபீடியா அமெரிக்காவில் இருட்டடிப்பு செய்தது மூலம் பல அரசியல்வாதிகளை வர இருக்கும் சட்டத்திற்கு எதிராக மாற்றினார்கள்.

கலாம் வந்ததால் இல்லை டெல்லியில் இருப்பதால் எமது மக்கள் வாழ்கையில் ஏதாவது மாற்றம் வந்ததா? இன்றும் கூட அங்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் மக்கள் பற்றி கலாமோ இல்லை ரஹ்மானோ குரல் கொடுப்பார்களா? அவர்களுக்கு அப்படி குரல் கொடுக்கவேண்டிய வரலாற்றுக்கடமை இல்லையா?

இவர் போர் முடிந்து அங்கே எமது உறவுகள் 'எல்லா சுதந்திரத்துடனும்' 'மகிழ்வாக' வாழுகின்றனர் என காட்டப்படவே அழைத்து வரப்பட்டுள்ளார். அதன்மூலம் தொடரும் இன அழிப்பு கொள்கைக்கு இவரும் உடந்தையாகிவிட்டார் :o

Edited by akootha

  • தொடங்கியவர்

ஜோர்ஜ் குளுனி என்ன தென்சூடானை சேர்ந்தவரா ?

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிராக இவர் குரல் கொடுப்பாரா ?

கலாமும் ரகுமானும் அரசியல்வாதிகள் அல்ல (ரகுமான் எங்களுக்கா குரல் கொடுத்ததாக நினைவு இருக்கின்றது ).

எங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடுகளே பிழையாக இருக்கின்றன .நாம் என்னவும் செய்வோம் அதையாரும் கேட்க கூடாது ஆனால் எமக்கு என்று ஒன்று வரும்போது எல்லோரும் எமக்காக குரல் கொடுக்கவேண்டும் .கடைசி முழுத்தமிழனாவது குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஏன் அவர்களை கேட்டா நாம் போராட்டம் தொடங்கினோம் அல்லது அவர்கள் ஆலோசனைபடியா அனைத்தையும் செய்தோம்.

எமது அரசியலை ஒழுங்காக செய்யவேண்டியதுதான் எங்கள் பணி.உதவவிரும்புபவன் உதவட்டும்.மற்றவர்களை விட்டுவிடுவோம்.எல்லோரும் நாங்கள் விரும்புவது போல நடக்கவேண்டும்,நடப்பார்கள் என நினைப்பது அறிவீனம் என நினைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா?

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசபதி கலையரங்கினுள் ஊடகவியலாளர்களுக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.puthinappalakai.com/view.php?20120124105432

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க விருப்பமில்லாமல் அல்லது உண்மையை பேசமுடியாமல் இருந்தமையால ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கலாமும் ரகுமானும் அரசியல்வாதிகள் அல்ல

இந்தியாவின் ஜனாதிபதியாக அரசியல்வாதி இல்லாமல் எப்படி கலாம் இருந்திருக்க முடியும்? ஓ ஒருவேளை அவர் ஒரு கைப்பொம்மையாக இருந்தார் என்பதை பூடகமாக சொல்கிறீர்களோ?

ஜோர்ஜ் குளுனி என்ன தென்சூடானை சேர்ந்தவரா ?

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிராக இவர் குரல் கொடுப்பாரா ?

நன்றி புரிந்துகொண்டேன் :D

கலாமும் ரகுமானும் அரசியல்வாதிகள் அல்ல (ரகுமான் எங்களுக்கா குரல் கொடுத்ததாக நினைவு இருக்கின்றது ).

எங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடுகளே பிழையாக இருக்கின்றன .நாம் என்னவும் செய்வோம் அதையாரும் கேட்க கூடாது ஆனால் எமக்கு என்று ஒன்று வரும்போது எல்லோரும் எமக்காக குரல் கொடுக்கவேண்டும் .கடைசி முழுத்தமிழனாவது குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஏன் அவர்களை கேட்டா நாம் போராட்டம் தொடங்கினோம் அல்லது அவர்கள் ஆலோசனைபடியா அனைத்தையும் செய்தோம்.

எமது அரசியலை ஒழுங்காக செய்யவேண்டியதுதான் எங்கள் பணி.உதவவிரும்புபவன் உதவட்டும்.மற்றவர்களை விட்டுவிடுவோம்.எல்லோரும் நாங்கள் விரும்புவது போல நடக்கவேண்டும்,நடப்பார்கள் என நினைப்பது அறிவீனம் என நினைக்கின்றேன் .

ஏற்கனவே பலரும் எழுதிவிட்டனர். அதாவது புலிகள் அற்ற இரண்டரை வருடத்தில் தமிழினம் விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றது. இதை தடுக்க யாரும் குரல் கொடுக்கலாம், மனிதனாக.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர்களை கேட்டா நாம் போராட்டம் தொடங்கினோம் அல்லது அவர்கள் ஆலோசனைபடியா அனைத்தையும் செய்தோம்.

அர்ஜுன் அண்ணாவின் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன்..! :unsure: புலிகள் இந்தியாவின் பேச்சைக் கேட்கவில்லை..! :( அதனால் அவர்களுக்கு செவிசாய்க்கவேண்டிய அவசியம் ஒரு இந்தியருக்கும் கிடையாது..! :blink:

ஆனால் தற்போது புலிகள் இல்லை..! இந்தச் சமயத்திலாவது இந்தியாவின் பேச்சைக் கேட்டு மாலைதீவைப் பிடிக்கப்போன புளொட்டின் பேச்சைக் கேட்குமா இந்தியா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முகநூலும் வலைப்பூக்களும் வந்தாலும் வந்துது-எதையும் ஒரு ஆழத்திற்கு மேல் புரிந்து கொள்ள முடியாத அல்லக் கைககள் எல்லாம் ஆய்வு எழுத வெளிக்கிட்டு விட்டுதுகள். நல்ல உதாரணம் இங்கே இணைக்கப் பட்டிருக்கிற கட்டுரை. கலாமின் அடக்கம் அறிவு பற்றியெல்லாம் ஒரு கேள்வியும் யாருக்கும் இல்லை. எப்படி இந்தியாவுக்கு "ரப்பர் ஸ்டாம்ப்" தலைவராக இருந்து இந்தியாவின் அழுக்கு மூட்டைகளை தன் பெயரால் மறைக்க கலாம் பயன் பட்டாரோ அது போலவே இப்பவும் பயன் பட்டிருக்கிறார். அவர் பயணத்தின் போது நடந்த சம்பவங்களே (அல்லது எதுவுமே நடக்காமை) அவரது பயணத்தின் உள் நோக்கத்தை உரத்துக் கூறி நிற்க "கலாம் போனால் யாழ் மக்கள் போர் வெறி தணிந்து கல்வியில் முன்னேறுவர்" எண்டு ஒரு "கல்விக் கொழுந்து" எழுதுது. யாழ் இளைஞர்களுக்கு இப்ப தேவை கலாமின்ர தரிசனம் மட்டும் தான். மிச்சப் பிரச்சினையெல்லாம் தானே தீர்ந்து போகும்! அப்பிடித் தீர்ந்து போகா விட்டாலும் பரவாயில்லை. கலாம் க்ஷ்டப் பட்டுத் தான் முன்னேறினவர். அது மாதிரியே பிரச்சினைகளுக்கூடாக முன்னேற வேண்டியது மட்டுமே யாழ் இளைஞர்களின் கடமை! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இளைஞர்களின் நாடி பிடிச்சுப்பார்க்க வந்த ஒரு உளவாளி தான் அப்துல் கலாம். ஒரு பெரிய மேதையாக இருந்தால் இவ்வளவு தமிழ் மக்களின் இறப்பைத் தடுத்திருக்கமுடியும்.

அந்தப் போராட்டம் கல்வியால் மாத்திரம் தான் முடியும்..

ஈழத்தமிழன் கல்விக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் ,பொதுவாக எந்த இனத்தையும் விட ஈழத் தமிழர்களின் கல்வி அறிவு

அசாதாரணம் ஆனது , எம்மில் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகிறார்கள் ,அவர்களை தடுக்க வேண்டும் என சிங்கள பேரினவாத அரசு கிரிமினலாக சிந்தித்து கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஈழத்தில் போரை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது,இன்றும் கூட உலகின் எத்தனையோ பெரும் பதவிகளில் ஈழத்தமிழர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள்,இனி நாம் எடுக்க இருக்கும் போராட்டம் அல்லது எடுக்க இருக்கும் ஆயுதம் "கல்வி"யாக இருக்க வேண்டும்.குழந்தைப் போராளிகளை , தற்கொலைப் போராளிகளை உருவாக்கியதை விடுத்து நாம் இப்போது மேதைகளை உருவாக்க வேண்டிய நிலையில் / கட்டாயத்தில் இருக்கிறோம்.எம்மால் எமது இழந்த பெருமையை மீண்டும் பெற கல்வியால் மாத்திரம் தான் முடியும் எமது அடுத்த சந்ததி தமக்கு இருக்கும் வரலாற்றுக் கடமையை உணர்த்து கல்வியில் முழு நாட்டம் செலுத்த வேண்டும்,எமது அடுத்த சந்ததியாவது சுயமாக சிந்திக்கக் கூடிய ,பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்கொள்ளக் கூடிய சந்ததியாக மாற வேண்டியது அல்லது மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் அல்லது...இனிவரப் போகும் வரலாறுகளில் "ஈழத்தமிழர்கள் எனும் ஒரு இனக் குழுமம் இலங்கையில் இருந்தார்கள்" என பதியப் படப் போவதை யாராலும் தடுக்க முடியாது"........

முதலில் மேலே எழுத்துக்களை எழுதியுள்ள நபர் ஈழம் யாழ்ப்பாணம் என்ற இரண்டு சொற்களை சம்மந்தமில்லாமல் போட்டுக் குழப்புகின்றார். ஒன்று பிரதேசத்தைக் குறிப்பது மற்றயது ஒட்டுமொத்த பிரதேசத்தையும் சேர்த்த தேசத்தைக்குறிப்பது. எழுதியவர் ஈழம் என்றால் அது யாழ்ப்பாணம் என்ற மேட்டுக்குடிக்கனவில் இருந்து என்னும் எழுந்திருக்கவில்லை. ஈழத்தின் ஏனைய பிரதேசமக்களுக்கு சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையையும் யாழ்ப்பாணிய மேலாதிக்க ஒடுக்குமுறையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய தேவை தொடர்ச்சியாக இருக்கின்றது.

மேதைகளை உருவாக்கி தமிழீழம் பெறப்போகின்றாராம் ! ஏற்கனவே இருக்கும் மேதைகளுக்கு என்னாச்சு?

எந்த இனத்தையும் விட அசாதராணமான கல்வியறிவாம், இதுவரை காலமும் யுதர்களுக்கு நிகரான சமமானது என்று கதைத்தார்கள் இப்போது அதையும் கடந்து சென்றுவிட்டார்கள். கோமாளிகள்.

கதிர்காமர் ஒரு சிறந்த அறிவாளி. அதனால் சிங்களம் அவருக்கு வெளிவிவகார அமைச்சுப்பதவி கொடுத்து தமிழின அழிப்புக்கு வக்காலத்து வாங்கும் பொறுப்பையும் கொடுத்தது.

அடிமைக்குணம் அடிமைப்புத்தி என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் விட புத்திஜீவிகள் (மேதைகள் ?) இடமே அதிமாக உள்ளது. பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவதே இவர்களின் தொன்றுதொட்ட குணம். சிங்களவனும் வேணும் தமிழனும் வேணும். சிங்களவனிடம் மானியம் பதவி கிடைக்குமாயின் தமிழனை காவுகொடுப்பது புத்திஜீவிகளின் குலத்தொழில்.

அடிமையிடம் எவ்வளவு அறிவு நிரம்பியிருப்பினும் அது அவனையும் அவன் சார்ந்தவர்களுக்கும் எவ்விதத்திலும் பயன்படாது. சுயமரியாதையை துறந்த ஒருவன் மேதையாக முடியாது. தமிழ்ச்சமூகத்தில் புத்திஜீவிகள் வல்லுனர்கள் அவதானிகள் பேராசிரியர்கள் என கல்வித்தளத்தை அடிப்படையாக வைத்து ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களால் சமூகம் சார்ந்து ஒரு துரும்பையேனும் அசைக்க முடியாது காரணம் அவர்கள் அடிமைகள். அடிமையின் அறிவு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளிபோன்றது அல்லது சிறகுகள் கத்தரிக்கப்பட்ட கிளி போன்றது. கீ கீ என்று சத்தம் மட்டும்தான் போடமுடியும். சிரிப்பு போலீஸ் போல் சிரிப்பு பேராசிரியர்கள் நிறையப்பேர் இருக்கினம்.

எமது சமூகத்தில் கல்வியின் மீதான பற்று என்பதை விட வெறித்தனம் இருக்கின்றது. இதையே ஆசீர்வதிப்பு என்று மேலே எழுதியவர் பீத்திக்கொள்கின்றார். இந்த வெறித்தனம் என்பது உருவாகியது சமூகத்தில் உள்ள சாதிய வர்க்க போட்டிகளின் விழைவால். அறிவுசார் கல்வியை மொழியை தம்வசம் வைத்திருந்த மேட்டுக்குடிகள் தாள்ந்தவர்கள் கல்வி கற்பதை என்றும் விருப்பியதில்லை. ஆங்கிலேய அரசுகள் தாழ்ந்த சாதிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முன்வந்தபோது அதை தடுப்பதையும் துறை சார்ந்த கல்வியை தாம் கற்பதையும் உத்தியோகம் பதவிகளை தாமே அனுபவிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இந்தக் காலப்பகுதியிலேயே எப்படியாவது கல்வி கற்று மேன்நிலையை அடைதல் என்ற வெறி உருவாகியது.

இது சரசுவதி ஆசீர்வதித்தல்ல சாதியும் வர்க்கமும் ஆசீர்வதித்தது. மேலும் சாதிய ஏற்றதாழ்வை மாற்ற முடியாத சமூகத்தில் ஓரளவு சமநிலை என்பதை கல்வி ஊடான உத்தியோகம் அந்தஸ்த்து பொருளாதாரம் ஊடகாகவே நிரப்ப முடியும் என்ற ஒரே ஒரு தெரிவும் இந்த வெறித்தனத்துக்கு அடிப்படை. ஒட்டுமொத்தத்தில் புத்திஜீவிதம் மேதைத்தனம் என்பது சமூகத்தை நல்வழிப்படுத்துதல், சமூகத்தில் ஒற்றுமைப்படுத்துதல், இனத்தை கட்டியெழுப்புதல் என்பதற்கு நேரெதிராகவே தோற்றம் பெற்றது. சமூகத்தை இணைப்பதற்குப் பதிலாக பிளப்பது, சமூகத்தை காப்பதற்குப் பதிலாக சமூகத்துள்ளாகவே இரைதேடுவது. இதுதான் அடிப்படை. இந்த அடிப்படைக்குமேல் எத்தனை எஞ்சினீயர் டொக்டர் பேராசிரியர் அறிவியல் என்ன வந்தாலும் அது சமூகத்திற்கு அழிவே. அடிப்படையில் மாற்றம் அவசியம். இரண்டு ஊர்களை ஒற்றுமைப்படுத்தலாம் ஆனால் இரண்டு புத்திஜீவிகளை ஒற்றுமைப்படுத்தவோ ஒரு பொதுக்கருத்தின்கீழ் கொண்டுவரமுடியாமைக்குஇந்த அடிப்படை பாரம்பரியமான காரணமாக இருக்கின்றது.

சிங்களவருக்கும் இந்திய ஆழும்வர்கத்துக்கும் தமிழ்ச்சமூகத்தை எவ்வாறு கையாழ்வது என்பது நன்கு தெரிந்திருக்கின்றது. ஒரு கதிர்காமர் என்ற தமிழரை உலகெல்லாம் அனுப்பி போருக்கு ஆதரவு தேடியது போன்று அப்துல் கலாம் வந்து சமூக முரண்பாட்டின் ஆதிக்க அடயாளங்களை தடவிச்சென்றுள்ளார். எமது சமூகத்தில் கல்வி புத்திஜீவிதம் மேதைத்தனம் எல்லாவற்றையும் எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எமது கைகளைக்கொண்டே எமது கண்களை குத்துவது என்பதை எத்தனை தரம் அனுபவித்துவிட்டோம். அறிவு கூடிய மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட சமூகத்தில் இது சகஜம் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.