Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களிடம் இருக்கும் உணர்வு எங்களிடம் இன்னும் இல்லையே! வெட்கப் படுவதா? இல்லை வேதனைப் படுவதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Boycott SL, TN campaign organizer Rajkumar went and met the officer incharge of Tamilnadu Civil Supply Corporation and gave the attached memo and successfully convinced the officer to order not to buy products from SL.

Kudos to Rajkumar Palanisamy and friends for taking this action to remove the products made in SL. Thank you!

Rajkumar's facebook page https://www.facebook...100000145796525

-----------

தோழர் ஒருவர் (படத்தில் உள்ளவர்) எனக்கு அலைபேசியில் அழைத்து , இலங்கை பொருட்கள் தமிழ்நாடு நுகர்வோர் வணிகக் கடையில் (TUCS ) விற்பனைக்கு உள்ளன என தகவல் கொடுத்தார் . அந்த பொருட்களையும் விலைக்கு வாங்கி என்னிடம் கொடுத்தார். உடனே நாம் களத்தில் இறங்கினோம். நேராக TUCS தலைமை அலுவலகத்திற்கு பயணித்தோம் . அங்கு பொறுப்பில் உள்ள IAS சிறப்பு தலைமை அதிகாரி திரு சக்தி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து இந்த படத்தில் காணப்படும் மனுவை கொடுத்தோம். அதை படித்தவுடன் அவர் நம்மிடம் ஒன்று பேசவில்லை. தொலைபேசியில் தன் பொருட்கள் வாங்கும் மேலாளரை (Purchase Manager ) அழைத்தார் . பிறகு நாம் கொண்டு வந்த மனுவில் எழுதி கையொப்பம் இட்டார் . இன்று முதல் TUCS கடைகளில் இலங்கை பொருட்களை நீக்க வேண்டும் என எழுதி உத்திரவிட்டார். நம்முடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்து " உங்களிடம் இருக்கும் உணர்வு தான் என்னிடமும் இருக்கிறது " என்று நமக்கு தெரிவித்தார்.

இலங்கை புறக்கணிப்பு குழுவிற்கு மேலும் ஒரு வெற்றி என மகிழ்ந்து கை குலுக்கி அங்கிருந்து நகர்ந்தோம். ( TUCS கடை மற்றும் அலுவலகம் முன்பு எடுத்த படம் )

தோழர்களே , இது போன்று இலங்கை பொருட்களை நீங்கள் தமிழ் நாட்டில் எங்காவது பார்த்தால் எம்மை தொடர்பு கொள்ளவும். நாம் இணைந்து இவைகளை இங்கிருந்து அப்புறப்படுத்துவோம்.

இவரால்: Rajkumar Palaniswamy

அன்புடன் (Kind Regards),

க. தில்லைக்குமரன் (Ka. Thillaikumaran)

தரமான சமூகக் கட்டுரைகளுக்கு சிறகுத் திங்களிதழ் - www.siragu.com

இளந்தமிழரணி - www.ilantamilar.org

பேரறிஞர்மு. வரதராசனார்நூற்றாண்டுவிழா

தலைநகரில்வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவையின்வெள்ளிவிழாக்கொண்டாட்டம்

தமிழால்இணைவோம்! செயலால்வெல்வோம் !!’

www.fetna.org

--

outlookz.jpg

outlookk.jpg

சிங்கள தேசத்து பொருட்களைப் புறக்கணிக்குமாறு 2009 மேமாதத்துக்கு முன்பு அழைப்பு விடுத்த பிரபல கருத்தாளர் ஒருவர் அண்மையில் யாழில் கதைகதையாம் பகுதியில் சிங்கள தேசத்துக்கு சிறிலங்கா விமானத்தில் பயணித்ததினை சொல்லியிருந்தார்.

என்ன செய்வது?

புலம் பெயர் தேசங்களில் சிறி லங்கா பொருட்களை இறக்குமதி செய்வதில் அன்றும் இன்றும் முன்னின்றது புலிகளுக்காக புலம் பெயர் நாடுகளில் முகவர்களாக இருந்த வியாபாரிகள் தான்

இதை புலிகள் நன்கு அறிந்தும் சும்மா தான் இருந்தார்கள்; அல்லது 'ஒன்றும் செய்ய வழியில்லை' என்று இருந்தார்கள்

காசு வந்தால் காணும் என்று தான் வன்னியில் அமைந்த தலமையும் யோசித்து இருக்க வேண்டும்

தலைவரின் படம் தாங்கிய புலிகளின் முகவர் கடைகளில் இலங்கை பொருட்கள் மிக சாதாரணமாக விற்கப்பட்டது/ படுகின்றது என்பது நானும் நீங்களும் எல்லாரும் அறிந்த ஒன்று. இதனால் தான் சனமும் இந்த கோட்பாட்டை நிராகரித்தது

எப்பவும் சனத்தின் மேல் பழியை போடாமல் புலிகளுக்காக இயங்கிய அயோக்கியர்களையும், இந்த நிலை தெரிந்தும் பேசாமல் இருந்த புலிகளின் தலமையில் இருந்த பலரையும் நினைவில் கொள்ளுங்கள்

(இதை வாசித்த உடன் இப்ப இருவர் வந்து எனக்கு பேப்பனங்கட்டி குத்தி முறிவர் பாருங்கள்...)

Edited by நிழலி

கூட இருந்து கொண்டே குழிபறிக்கும் துரோகி நிழலி..

பேய்ப் பனங்கட்டியோ? அதென்னது?

அந்த இருவர் யாராய் இருக்கும்.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேய்ப் பனங்கட்டியோ? அதென்னது?

பேய்ப்பனங்கட்டி=பேய்*பட்டம்*கட்டி இப்படி வருமோ? :unsure: :unsure: :unsure:

நெக்டோ 2 எடுத்தால் 1 பவுன், மஞ்சு பிஸ்கட் 3 எடுத்தால் 1 புவுன் .இதுதான் இன்றைய ஈழத்தமிழனின் சிரிலங்கா பொருள் புறக்கணிப்பு நிலை...

கடைகளை குற்றம் சொல்லி பிரயோசனம் இல்லை, நாங்கள், நாங்களாக சிந்திக்க வேண்டும்.

அங்க நோர்வேயில இருந்து ஒருத்தர் கிளிநொச்சி போய் பெரிய கட்டிடம் எல்லாம் கட்டுறாரம்,கிளிநொச்சி ஆமிக்காரன் வந்து கொழும்பில இருந்து அவரை ஏத்தி கொண்டு போறானாம். .நோர்வெயில சிரில்லங்கன் தூதுவரொட நல்ல ஒட்டாம், வீட்டு நிகழவு ஒன்றுக்கும் தூதுவரை கூப்பிட்டவராம்.

முந்தி புலிக்கு காசு கலக்ட் பண்ணினன ஆக்களில் 10ல் 9பேர் இந்திய/இலங்கை எஜெண்டுக்கள் . ஏவ்வளவு எடுத்து சொல்லியும் புலிகளின் தலைமை இதை கண்டுகொள்ளவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பு என்பதும்

மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதும் மக்களின் மனங்களிலிருந்து வந்து அவர்களேயே முன் எடுக்கப்படணும்.

அல்லாது விடில் பிரபாகரன் போன்ற தலைவர்களாலேயே ஒன்றையும் புடுங்கமுடியாது.

நான் சிறிலங்காப்பொருட்களை கடந்த 20 வருடங்களாக புறக்கணிக்கின்றேன். வெற்றி எந்தளவு என்று பார்த்ததில்லை.

என்னைச்சுற்றியுள்ளவர்களையும் அதைச்செய்ய ஊக்குவிப்பேன். வழிமுறைகளை முன் மொழிவேன். 2 நாட்களுக்கு முன்பு கூட என்னைச்சந்திக்க வந்திருந்த யாழ் உறவு நெக்டோ தான் குடித்தார். அதையும் நான் பதிவு செய்தேன். இன்னும் கொஞ்சம் அறிமுகம் ஆனவுடன் அவரையும் இதை விடும்படி வேண்டுவேன்..

பிரபாகரன் அல்லது புலிகள் வந்து தான் இதையும் கண்காணிக்கணும் வழி நடாத்தணும் என்றால்....???

(இதை வாசித்த உடன் இப்ப இருவர் வந்து எனக்கு பேப்பனங்கட்டி குத்தி முறிவர் பாருங்கள்...)

இதை எழுதும்போதே நிழலியின் மனச்சாட்சி அவரை வழி மறித்துள்ளது. நன்றி.

நிழலியின் எழுத்துக்களில் பெரும்மாறுதல்களை சில நாட்களாக பார்க்கின்றேன்.

வேறொரு இடத்தில் புலிகளின் பாசிச போக்கு என்று எழுதியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.

Edited by விசுகு

நாங்கள் மற்றவர்களில் தான் எப்போதும் குற்றம் கண்டோம் எம்மை எள்ளளவும் மாற்றிக்கொள்ளவில்லை.இன்றும் அதுதான் நடைபெறுகின்றது.

முன்னரும் இதை எழுதியிருந்தேன் .எனது நண்பன் முழு புலி, பெரிய வியாபாரி 2009 ஜுன் மிக பிரமாண்டமாக மகளின் சாமத்தியவீடு செய்தார் ,நான் நேரடியாகவே கேட்டேன் .அவர் சொன்ன பதில் முற்கூட்டியே அனைத்து ஒழுங்கும் செய்துவைத்திருந்தேன் அதை மாற்ற என்னால் முடியாது.

நாம் எமது போராட்டத்தை அது எனதானதும் என்று பார்க்கவில்லை அப்படி பார்த்திருந்தால் சரி ,பிழை இரண்டையும் சொல்லியிருப்போம் ,எதோ அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள் என்றநிலையில் தான் இருந்தோம் .அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

Arjun மற்றும் நிழலி இருவரும்சேர்ந்து இவர்களைப்போல் ஒரு அமைப்பை கனடாவில் உருவாக்குங்கள். அதற்கு இப்படி ஒரு விளம்பரத்தையும் தாருங்கள்.

தோழர்களே , இது போன்று இலங்கை பொருட்களை நீங்கள் கனடாவில் எங்காவது பார்த்தால் எம்மை தொடர்பு கொள்ளவும். நாம் இணைந்து இவைகளை இங்கிருந்து அப்புறப்படுத்துவோம்.

செய்வோமா?

செய்வோமா?

என்னது? தீவிரவாதியும் ஒட்டுக்குழுவும் சேர்ந்து செய்யப்போறீங்களா... கிழிஞ்சுது போ..

எலே கந்தபு நம்ம யாவாரதுகு மண் அள்ளி போடுறாபுளே

தமிழ்மக்களும் சிறிலங்கால இருகிறாக எலே

கிளையுல ஒக்காந்து மரதை வெட்டுற புத்திகு செருபால அடிகனும் எலே

தமிழ்மக்கள் எங்கினை ஈரானிலையா வாசம் செய்கிறாக எலே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கான ஆதரவு மக்களின் அடிமனதிலிருந்து

எழ வேண்டும்.அதே போலப் புறக்கணிப்பும் மக்களால் உணர்ந்து

செய்யப்பட வேண்டும்.

கடை முதலாளிகளிடம் கேட்டால்

இப்போது நாங்கள் தாய்லாந்திலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் தான்

பொருட்களை இறக்குமதி செய்கின்ற்ம் என்பார்கள்

எலே வாத்தி

நாம travels and tours எலே

சிறிலங்கனில ஏத்தாதை என்டால்

கனடியனில அமெரிகனில இந்தியனில ஏத்தலாமோ எலே

முல்லிவாய்காலில இவங்க எல்லாரும் சேந்த்துதானே எலே சனங்களுகு சமாதி கட்டினாக எலே

நாம சீப்பாய் வசதியாய் பார்த்து சிறிலங்கனில ஏத்தாவிட்டா

அந்த பிசினச இன்னொருதன் அவன் தமிழனாய்தான் இருப்பான் தூக்கிடுவான் எலே

சும்மா எதையும் எழுதலாம் எலே

நடதி பார்த்தால் தெரியும் எலே பிரசனை :(

எலே கந்தபு நம்ம யாவாரதுகு மண் அள்ளி போடுறாபுளே

தமிழ்மக்களும் சிறிலங்கால இருகிறாக எலே

கிளையுல ஒக்காந்து மரதை வெட்டுற புத்திகு செருபால அடிகனும் எலே

தமிழ்மக்கள் எங்கினை ஈரானிலையா வாசம் செய்கிறாக எலே :unsure:

எங்களை வைத்து சிங்களவன் தான் உழைக்கிறான்.

- மீன் பிடிக்க விடுவதில்லை, தனது ஆட்களை குடியேத்துகிறான் மீன் பிடிக்க

- தேயிலையால் கிடைப்பது கோடிகள், கொடுப்பதோ கோவணம்

- எயர்லங்காவில் பறப்பதோ புலத்தமிழன், இலாபமோ/வேலையோ மாதன முத்தாவுக்கும் மாலினிக்கும்

- யாழில் உருளைக்கிழங்கு சீசனில் தெற்கில் இருந்து ஏற்றுகிறான்

- மேலும் வாசியுங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=80651&st=20

அஆ சொல்ல வாரது புரியுது ஆனா சிறீலங்கனை புறகணிசு நம்ம பிசுனச பழுதாக முடியாது நம்மால எலே இத்தாள் இதையே சொல்ல வாரன் எலே

நாம புறகணிசால் இன்னொரு தமிழன் நம்ம பிசுனச புடுங்க போறான் அதவிடை நாமே கொன்சம் காசு பார்கலாமே எலே

இதில் என்ன குறைகண்டீர் கந்தபு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி புலிகளிலும் உங்களைப்போல் சிலர் இருந்திருப்பினம் உள்ள இருந்து கொண்டே அந்தாளின் (தலைவர் ) பெயரைக்கெடுக்க .....

நான் பல முறை உங்களின் பின் ஊட்டல்களை பார்த்திருக்கின்றேன் நோகாமல் நுங்கு எடுக்கும் நபர் என்பது புரிகின்றது. :D:icon_mrgreen:

மட்டுறுத்துநர் இந்த அதிகாரத்தை துஸ்பிரயோகம்

செய்ய மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

Edited by தமிழரசு

இந்த 'புறக்கணி சிறிலங்கா'வைப்பற்றி பலரும் பல அமைப்புக்களும் பல இடத்தில் கதைத்துள்ளோம்.

ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிற்பாட்டக்கூடியதாக இருந்தது. ஆனால் இதுவரை ஆக்கபூர்வமான செயற்திட்டத்தை உருவாக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

இதற்கான காரணங்கள் என்ன? எவ்வாறு எமது மக்களை பாதுகாத்தவாறு சிங்களத்தை புறக்கணிக்கலாம்? என்பன வெளிப்படையாக ஆராயப்படல் வேண்டும். பின்னர் அமுல்படுத்த அதற்குரிய திட்டங்களை போட்டு நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், நடைமுறையில் சாத்தியமானது மக்கள் தாமாகவே முன்வந்து சிங்களத்தை புறக்கணிப்பது தான். அதற்கும் விழிப்புணர்வே தேவை. அந்தவகையில் அதை இந்த திரி செய்கின்றது.

சரி

Arjun மற்றும் நிழலி இருவரும்சேர்ந்து இவர்களைப்போல் ஒரு அமைப்பை கனடாவில் உருவாக்குங்கள். அதற்கு இப்படி ஒரு விளம்பரத்தையும் தாருங்கள்.

தோழர்களே , இது போன்று இலங்கை பொருட்களை நீங்கள் கனடாவில் எங்காவது பார்த்தால் எம்மை தொடர்பு கொள்ளவும். நாம் இணைந்து இவைகளை இங்கிருந்து அப்புறப்படுத்துவோம்.

செய்வோமா?

விசுகு,

கனடா, முக்கியமாக ஒன்ராரியோ; தமிழகம் அல்ல

தமிழகத்தில் இலங்கைப் பொருட்களை விற்கும் கடைகள் ஆயிரத்தில் ஒன்றுதான் இருக்கும். எனவே ஆராவது கண்டால் அறிவிக்க சொல்லினம். ஆனால் இங்கு கனடாவில் 99.99 வீதமான தமிழ் கடைகளில் முக்கால்வாசிக்கும் மேலாக இலங்கைப் பொருட்கள்தான் காணப்படுகின்றன (நிச்சயம் உங்கள் பிரான்ஸிலும் இதே நிலமைதான் இருக்கும்). நீங்கள் சொல்வது மாதிரி கனடாவில் எங்காவது பார்த்தால் எம்மை தொடர்பு கொள்ளவும் என்று சொல்லும் அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விற்கப்படவில்லை. அனைத்து தமிழ் கடைகளும் விற்கின்றன. இதுக்கு ஒரு அமைப்புத் தேவை இல்லை. நான் போகும் அனைத்து கடைகளிலும் அதிகமாக இலங்கைப் பொருட்கள்தான் இருக்கின்றன. 2009 இல் பல கடைகளின் உரிமையாளர்களிடம் இது பற்றி கதைத்து என் தரத்தை குறைத்துக் கொண்டது தான் மிச்சம்

அடுத்தது,

இனி சிறிலங்காப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று கோரிக்கை வைக்கும் சாத்தியமில்லை. போர்க் குற்றத்தை முதன்மை படுத்தி சர்வதேச மற்றும் இந்திய அழுத்தங்களின் மூலம் ஒரு அதிக பட்ச தீர்வு இனி வரப் போகும் 100 வருடங்களிற்குள் கிடைக்கும் என்றால் அது இலங்கை என்ற தேசத்தின் கட்டமைப்புக்குள் இருக்கும் ஒரு மாநிலம் என்ற அளவில்தான் அமையும். சுய நிர்ணய உரிமையும் அற்ற ஒன்றாகத்தான் அமையும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஊரில் உள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஊரில் உள்ள பொருட்களை இங்கு விற்க முடிந்தால் அதுவே பெரும் உதவியாக அந்த மக்களுக்கு அமையும். அப்படி விற்கப்படும் போது அதுவும் சிறிலங்கா பொருட்கள் என்றே பெயர் கொண்டு வரும்

இன்னுமொன்று,

புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் வியாபாரிகளால் இங்குள்ள தமிழ் மக்களுக்கு இலங்கைப் பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களை அறிமுகப்படுத்தி பழக்கப்படுத்த தேவையான கால அவகாசம் கடந்த பல்லாண்டுகளில் கிடைத்து இருந்தது, ஆனால் அவற்றை பயன்படுத்தாமல், புலிகளாலும் பயன்படுத்தச் சொல்லி கேட்கப்படாமல் மீண்டும் மீண்டும் இலங்கைப் பொருட்களையே விற்று மாற்றங்களை ஏற்படுத்த மறுத்து விட்டனர். போரால் தினம் தினம் மக்கள் மடியும் போது செய்யாதவர்கள் இப்ப செய்யப் போவதில்லை. ஆனால் எமது அடுத்த அடுத்த தலைமுறைகள் தத்தம் நாடுகளில் உள்ள உணவு பழக்கத்தை பின்பற்றுவதால் நாளடைவில் சிறிலங்கா பொருட்கள் விற்பனை தன்னாலேயே மறைந்து விடும்

Edited by நிழலி

நிழலி புலிகளிலும் உங்களைப்போல் சிலர் இருந்திருப்பினம் உள்ள இருந்து கொண்டே அந்தாளின் (தலைவர் ) பெயரைக்கெடுக்க .....

நான் பல முறை உங்களின் பின் ஊட்டல்களை பார்த்திருக்கின்றேன் நோகாமல் நுங்கு எடுக்கும் நபர் என்பது புரிகின்றது. :D:icon_mrgreen:

மட்டுறுத்துநர் இந்த அதிகாரத்தை துஸ்பிரயோகம்

செய்ய மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

..உங்களைப் போல என்னால் கண்களையும் அறிவையும் அடகு வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் நலன் பற்றி கதைக்க முடியாது. விமர்சனம் என்பது எந்தவிதமான அழுத்தங்களுக்கும் சரி, முகம் பார்த்தும் சரி செய்பன அல்ல. ப

புலிகளானாலும் சரி, எந்த இயக்கமானாலும் சரி மக்களுக்கான விடுதலைக்காவே உருவானவை. மக்களுக்காகத்தான் இவையும் இவற்றின் தலைமைகளும் என்பதை நெஞ்சில் நிறுத்தினாலே போதும்

மட்டுறுத்தினர் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றேன் என நீங்கள் உணர்ந்தால் சான்றுகளுடன் உறவோசையில் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் இருக்கும் உணர்வு எங்களிடம் இன்னும் இல்லையே! வெட்கப் படுவதா? இல்லை வேதனைப் படுவதா?

சிறிலங்காவில் மனித உரிமை மீறப்பட்டதால் அந்த நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் படி கேட்கின்றார்கள்....அமைப்பாளர்கள்.

தமிழ் உணர்வு என்று நாம் அதற்கு முத்திரை குத்த வேண்டிய அவசியம் இல்லை.தமிழ் உணர்வு என்பது காலத்துக்கு காலம் மாறுபடும் என்பதை நாங்கள் நல்லாவே புரிந்து கொண்டுள்ளோம்..சில வேளை இந்த அமைப்பாளர்களிடம் தமிழர் சிங்களவருக்கு செய்த மனித உரிமை மீறள்கள் என சில ஆதாரம் கிடைத்தால் அதை பிரசுரித்து ஈழத்தமிழனை புறக்கணி என்று சொன்னாலும் சொல்ல்லுவினம்....

தமிழ் உணர்வு எப்படி எல்லாம் மாறியது என்பதை மாத்தையா,கே.பி,டக்கிளஸ்,கருணா இன்னும் பலரிடம் நாம் கண்ட உண்மைகள் ஆகவே தமிழ் உணர்வால் புறக்கணிப்பு செய்யாமல் மனித உரிமை மீறல் என்ற வகையில் புறகணிப்பு செய்யுங்கள்

சொறிலங்கா பொருட்களை ,, தடை செய்ய சொல்லியோ .....

புறக்கணிக்க சொல்லியோ........... யாருக்கும் கட்டளை போடகூடாது.......

அவர்கள் மனசு... ருசிக்கு ,,என்ன வேணுமோ அதெல்லாம் பண்ணட்டும்!

தங்களோட உழைப்பை ,,,,

எதுக்குமே கவலைபடாம அள்ளி போராட்டத்துக்கு தந்தவங்கதான்,,,

அந்த கடைய நடத்துறவனும்...அதுல பொருளை வாங்குறவனும்!

சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி நாங்க எதையுமே ... யூஸ் பண்ணிக்கலாம்!

இந்த உணர்வுதான் முக்கியம்னா...

சொரிலங்காவுக்கு நாங்க அனுப்புற ,,,காசுதானே.......

மிகப்பெரிய தேசதுரோகம்?!

அத கூட ஏன் இயக்கம் கண்டுக்கல 2009 க்கு முன்னும்.. பின்னும்?

இயக்கம் இருந்தா என்ன... இல்லாம போனா என்ன.......

அவங்க போல ஸ்மார்ட்டா நாங்களும் இருக்கணும் எங்கிறது........

என் மனசுல படுது...அது நீங்க தப்புன்னாலும்... ப்

ஐ டோண்ட் கெயார்( இங்கிலீசுமா) smile007.gif

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

1-கனடா, முக்கியமாக ஒன்ராரியோ; தமிழகம் அல்ல

அடுத்தது,

இனி சிறிலங்காப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று கோரிக்கை வைக்கும் சாத்தியமில்லை.

2-போர்க் குற்றத்தை முதன்மை படுத்தி சர்வதேச மற்றும் இந்திய அழுத்தங்களின் மூலம் ஒரு அதிக பட்ச தீர்வு இனி வரப் போகும் 100 வருடங்களிற்குள் கிடைக்கும் என்றால் அது இலங்கை என்ற தேசத்தின் கட்டமைப்புக்குள் இருக்கும் ஒரு மாநிலம் என்ற அளவில்தான் அமையும். சுய நிர்ணய உரிமையும் அற்ற ஒன்றாகத்தான் அமையும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஊரில் உள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஊரில் உள்ள பொருட்களை இங்கு விற்க முடிந்தால் அதுவே பெரும் உதவியாக அந்த மக்களுக்கு அமையும். அப்படி விற்கப்படும் போது அதுவும் சிறிலங்கா பொருட்கள் என்றே பெயர் கொண்டு வரும்

இன்னுமொன்று,

புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் வியாபாரிகளால் இங்குள்ள தமிழ் மக்களுக்கு இலங்கைப் பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களை அறிமுகப்படுத்தி பழக்கப்படுத்த தேவையான கால அவகாசம் கடந்த பல்லாண்டுகளில் கிடைத்து இருந்தது, ஆனால்

3-அவற்றை பயன்படுத்தாமல், புலிகளாலும் பயன்படுத்தச் சொல்லி கேட்கப்படாமல் மீண்டும் மீண்டும் இலங்கைப் பொருட்களையே விற்று மாற்றங்களை ஏற்படுத்த மறுத்து விட்டனர். போரால் தினம் தினம் மக்கள் மடியும் போது செய்யாதவர்கள் இப்ப செய்யப் போவதில்லை. ஆனால் எமது அடுத்த அடுத்த தலைமுறைகள் தத்தம் நாடுகளில் உள்ள உணவு பழக்கத்தை பின்பற்றுவதால் நாளடைவில் சிறிலங்கா பொருட்கள் விற்பனை தன்னாலேயே மறைந்து விடும்

1- எதையுமே எங்கும் ஆரம்பிக்கலாம். முயற்சியே இல்லாமல் அவன் செய்கிறான் இவன் செய்கின்றான் என்ற விமர்சனம் எதற்கு???

2- இனி அது தேவையற்றது என்பதன் மூலம் தமிழகத்தில் செய்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு என்ன சொல்லவருகின்றோம்.

3- இது பற்றி புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களில் நான் பங்கு பற்றியிருக்கின்றேன்.

வியாபாரிகள் மக்கள் கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்ய என்றும்

மக்கள் அவர்கள் விற்கிறார்கள் நாங்கள் வாங்குகின்றோம் என்ற இழுபாட்டிலேயே காலம்போய்விட்டதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறீலங்கா பொருட்களை நுகர்வதில்லை..! இதை யாரும் எனக்குச் சொல்லி நான் செய்வதில்லை..! அப்பொருட்களை நினைத்தாலே சதை, ரத்தம், பிணங்களை உண்ணுவதுபோல் ஒரு நினைவு..! :unsure:

மற்றும்படி மற்றவர்களுக்கு அவ்வாறு தோன்றவில்லையாயின் அது அவர்களைப் பொறுத்தது..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.