Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவள்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் திண்ணை இல்லாத காலங்கள் அது ஸ்கைப்பும் வரவில்லை யாழ் உறவுகள் எம்.எஸ்.என்னில் தனியாகவும் கூட்டாகவும் கடைலை போட்ட கனாக்காலம் அது. அன்றை யாழ் உறவுகளில் நட்பாகி காதலாகி திருமணம் வரை சில காதல் சென்றது பலகாதல் கைகாட்டிவிட்டு போனது. அதில் ஒன்று உங்களுடையது நெடுக்கு. அனால் அவை அனுபவங்கள். சுகமாக சுமையாககூட இருக்கலாம். அனால் சுமை அழுத்தாமல் இருக்கும்வரை சுகமானதே

யாழைத் தேடி வந்தது நாம். யாழில் எழுதியதும் நாம். நம் எழுத்துகளுக்காக செயல்களுக்காக யாழை குற்றம் சுமத்த முடியாது. நமக்கு நன்மை செய்தால் யாழை வாழ்த்துவதும்.. நமக்கு நம் செயலே தீமையானால்.. யாழை குறைவதும்... தப்பு. பாவம்.. யாழ்..!

நான் கவிதையில் எழுதியது.. இணையத்தளம் என்றே தவிர.. யாழ் என்றல்ல. யாழின் அடிப்படை நோக்கம்.. காதல் செய்யத் தூண்டுவதல்லவே..! நாம் அதற்காக வரவும் இல்லை..! இதுதான் யதார்த்தமும் கூட..! இடையில்.. நடந்த சம்பவங்களுக்கு யாழ் எப்படி பொறுப்பாக முடியும்..! நாம் எப்படி பொறுப்பாக முடியும்..! :)

காதலாகிக் கண்ணீர் மல்கியோர் தான் எங்கும். ஒன்றில் ஆனந்தக் கண்ணீர்.. இன்றேல் சோகக் கண்ணீர். இது எல்லாம் நியூட்டனின் விதிகள் போல..! சுமை என்று இவற்றை நான் கருத மாட்டேன்..! மற்றவர்களையும் கருதச் சொல்லவும் மாட்டேன்..!

தங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி...! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 58
  • Views 4.9k
  • Created
  • Last Reply

நான் சொன்னது உதாரணமேயன்றி உங்களையல்லவே. :icon_idea:

அண்ணா என ஒருகணமேனும் விளித்ததால் அவள் அப்படியொன்றும் அழகில்லை அவளிற்கு இப்பொழுது ஒரு குறையுமில்லை

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஊரிலை நாம்பன்மாடுகள் எல்லாம் பகல்முழுக்க தினாவெட்டாய் திரிஞ்சு போட்டு...பின்னேரப்பாரிலை கட்டைக்குவரும் அழகே தனியழகு :D:lol:

.... ஒவ்வொரு ஆணும் மறக்கக்கூடாத கவிதை ...

"உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்,

உன் கருவை சுமக்கும் பெண்னையும்

நீ கல்லறை செல்லும் வரை நேசி"

... எங்கேயோ பார்த்த வரிகள் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.... ஒவ்வொரு ஆணும் மறக்கக்கூடாத கவிதை ...

"உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்,

உன் கருவை சுமக்கும் பெண்னையும்

நீ கல்லறை செல்லும் வரை நேசி"

... எங்கேயோ பார்த்த வரிகள் ...

அண்ணா அது தாயையும் தாரத்தையும் கொண்ட சம்சாரிகளுக்குச்.. சொன்ன அறிவுரை..! நமக்கல்ல..! :):icon_idea:

நான் சொன்னது உதாரணமேயன்றி உங்களையல்லவே. :icon_idea:

அண்ணா என ஒரு கணமேனும் விளித்ததால் அவள் அப்படியொன்றும் அழகில்லை அவளிற்கு இப்பொழுது ஒரு குறையுமில்லை.

என்னைச் சொல்லாட்டி சரி.

"அவள்"... அண்ணான்னு எங்கும் சொல்லவில்லை.. "அவள்" என்னளவில் அழகு தான்... நான் கவிதையை சொன்னன்..! :):icon_idea:

அங்கை ஊரிலை நாம்பன்மாடுகள் எல்லாம் பகல்முழுக்க தினாவெட்டாய் திரிஞ்சு போட்டு...பின்னேரப்பாரிலை கட்டைக்குவரும் அழகே தனியழகு :D:lol:

எனக்கு இந்த உவமை புரியவில்லை..! :(:rolleyes:

கவிதை நன்று ஆனால் இந்த பயம் ஏனென்று தெரியவில்லை .இப்போ பெட்டையை பிடி என்றுதானே பெற்றோர் சொல்லுகின்றார்கள் .

போன கிழமை மனைவியும் நானும் மவுனகுரு படம் பார்க்கும் போது மொட்டை மாடி சீன் வர நான் மனைவிக்கு சொன்னேன் எனக்கு திரும்பவும் காதலிக்க வேணும் போல கிடக்கு என்று .

காதல்

கவிதையில் கதையில் சினிமாவில் கொண்டுவரமுடியாத ஒரு உன்னத உணர்வு ,அதை உணர்ந்து பார்த்தால் மட்டுமே முடியும்.

காதல் செய்ய மனசாகிய மூளைதான் தேவையே ஒழிய.. வயதல்லவே..! :):lol:

நன்றி அர்ஜீன் அண்ணா. :)

###காதலிக்கும் ஆண்களுக்கு மட்டும்####

NEVER MISS A GIRL WITH THE FOLLOWING QUALITIES"

When a girl WALKS for miles to see u....

When a girl SAYS SORRY even though she didn't do anything,..

When a girl CRIES bcz she still loves/misses u....

When a girl still TRIES TO GET U BACK...

When a girl no matter how much U HURT HER STILL LOVES U...

when a girl STOPS her argument with her guy to SAFE her relationship...

When a girl continuously MAKES U FEEL SPECIAL and TRIES TO MAKE U HAPPY...

When a girl is upset but DOES NOT tell u as she thinks she is ANNOYING U.....

When a girl wants to LEAVE u bcs of ur RUDE BEHAVIOR but she is not able to do...

.

.

.

DO NOT LET HER GO, bcz U MAY NEVER FIND SOMEONE LIKE THAT EVER AGAIN. ♥ SHE MAYBE VERY SPECIAL AND GOD'S GIFT FOR U ♥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

###காதலிக்கும் பெண்களுக்கு மட்டும்####

NEVER MISS A BOY WITH THE FOLLOWING QUALITIES"

When a boy WALKS for miles to see u....

When a boy SAYS SORRY even though he didn't do anything,..

When a boy CRIES bcz he still loves/misses u....

When a boy still TRIES TO GET U BACK...

When a boy no matter how much U HURT HIM STILL LOVES U...

when a boy STOPS his argument with his gal to SAFE his relationship...

When a boy continuously MAKES U FEEL SPECIAL and TRIES TO MAKE U HAPPY...

When a boy is upset but DOES NOT tell u as he thinks he is ANNOYING U.....

When a boy wants to LEAVE u bcs of ur RUDE BEHAVIOR but he is not able to do...

.

.

.

DO NOT LET HIM GO, bcz U MAY NEVER FIND SOMEONE LIKE THAT EVER AGAIN. ♥ HE MAY BE VERY SPECIAL AND GOD'S GIFT FOR U ♥

இப்படி எழுதுவது தான் சாலப் பொருந்தும்.. வீணா..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இணையக் காதல் வாழ்க்கைக்கு உதவாது என

இலகு நடையில் அழகாகக் கூறியுள்ளீர்கள் நெடுக்ஸ்.

வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையக் காதல் வாழ்க்கைக்கு உதவாது என

இலகு நடையில் அழகாகக் கூறியுள்ளீர்கள் நெடுக்ஸ்.

வாழ்த்துகள்

இந்த மொழி நடையை.. எழுதியவின் வாழ்க்கையாக நோக்காமல்.. சரியாக நோக்கிய..ஒரே ஒருவருன்னா.. அது வாத்தியார் தான். வாத்தி இன்னா சும்மாவா..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி,

ஏதோ பெடியன்கள் திறம் என்பதுபோலும் அப்பாவிகள் என்பது போலும் உங்கள் கவிதை அமைந்திருக்கிறது..... உங்கள் கவிதையில் பெண்கள் மீதே பல குற்றச்சாட்டுகள் ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் மாதிரியும் வனையப்பட்டிருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன். பெரிய பெட்டை பெட்டைகளுடன் தூர நில் என்றதற்கு காரணம் தன்னுடைய மகன்மீதான அவநம்பிக்கை என்று வைத்துக் கொள்ளலாமே... :lol: ஆரம்பத்திலேயே பாருங்கள் உங்கள் சாம்பிளை ஆட்டையைப் போட???..ஒரு பெண் கல்வி விடயத்தில் நெருங்கி வந்து உதவி கேட்டால் உடனே பெடியன்களுக்கு மயிர்கூச்செறிந்துவிடும்.. காரணம் என்ன? அதுவரைக்கும் பெண்பிள்ளைகள் அருகில் வந்து பேசாமல் காய்ந்து கிடக்கும் பெடியன்களுக்குத்தான் தலை கிறுகிறுத்துப் போகும்.. கைக்கெட்டாத பொருட்களில்தான் மோகம் அதிகமாக இருக்கும் அந்த வகையில் பெடியன்களுக்கு மதி மயக்கம் வருவது ஒன்றும் ஆச்சரியமில்லை... பெரிய பெட்டை எதற்கு பெட்டைகளுடன் கதைக்கக்கூடாது என்று சொன்னாள் என்பது இங்கு வெள்ளிடை மலை. :rolleyes:

இந்தப் பெடியன்களே இப்படித்தான் பெட்டைகள் தங்களுடன் கதைக்கிறார்கள் என்றால் உடனே கனவுலகில் திரிய ஆரம்பித்துவிடுவார்கள்..நண்பியாகப் பேசுகிறவளையும் உடன காதலியாக நினைக்கிறது அல்லது அப்படி நட்புடன் பேசும் பெண் தன்னை காதலிப்பதாக மனக்கோட்டை கட்டுறது பிறகு கடைசியில் நட்புடன் பேசும் பெண்ணை வேண்டாத சங்கட நிலைக்கு கொண்டு செல்வதுவரை பெடியன்கள் அப்பாவித்தனமாகத்தான் :icon_mrgreen: செய்து கொண்டிருப்பார்கள் நண்பியான அந்தப் பெண் இந்தப் பெடியன்களின் கண்றாவி நினைப்புக்கு ஒத்துவரவில்லை என்றவுடன் என்னை ஏமாத்திப்போட்டாள் என்று தாங்களே புலம்புவது.... எப்பதான் ஒரு பெட்டை ஒரு பெடியனுடன் கதைப்பதை இயல்பாக நட்பாக பெடியன்கள் எடுத்துக் கொள்கிறார்களோ... அப்போது பெடியன்கள் ஏமாறமாட்டார்கள்.. ஏனென்றால் பெடியன்கள் மனதிற்குள் கட்டும் கோட்டைதான் அவர்களைக் குப்புற வீழ்த்தி கும்மி அடிக்கிறது...புரிகிறதா?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

அது

சரியான போட்டி

நெடுக் வந்து பதில் சொல்லணும்

ஊர் எரிந்தால் நாம குளிர் காயலாம்....? :lol::icon_idea:

அவ்வளவு குளிரப்பா இங்கு??

பந்தி 1 க்கான பதில்..

எந்தத் தாயும் தன் குழந்தை நல்லவனுன்னு.. சிந்திப்பாளே அன்றி.. தன் குழந்தை கெட்டவனா வரப்போகுது என்று புத்தி சொல்லுறதில்ல. (சிலவேளை நீங்கள் விதிவிலக்கான அம்மாவோ. பாவம் உங்கட பிள்ளையள்..!) ஒரு தாய்.. தன் பிள்ளைக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி வழி காட்டுவாளே தவிர.. கெட்டவழில போன்னு.. வழிகாட்டமாட்டாள். அந்த வகையில் அந்தத் தாயின் வழிகாட்டல் என்பது தன் பிள்ளை எதிர்காலத்தில் பிரச்சனைகள் குறைந்த பாதையில் பயணிக்க என்று அமைந்திருக்கச் சந்தர்ப்பம் உள்ளதே அன்றி.. தன் பிள்ளை கெட்டது.. அதனால ஊர் பெட்டையள் பாழாப் போயிடப் போறாளவ.. என்று அந்தத் தாய் சொந்தப் பிள்ளையை மறந்து ஊர்ப் பெட்டையளப் பற்றி அக்கறைக்கப்பட்டதாக விதண்டாவாதத்திற்குச் சொல்லிக் கொள்ளலாமே அன்றி.. நிஜத்தில் நீங்கள் கூட அப்படிச் செய்ய மாட்டீர்கள்..! அந்த வகையில் உங்களின் பந்தி 1 அர்த்தமற்ற வெறும் அலட்டல்..! :lol:

பெட்டையளோட கதைக்காத என்பதன் அர்த்தம்.. தேவையில்லாத கதை அவளவையோட ஏன்.. அது உனக்கோ.. உலகத்திற்கோ பயன்படப் போறதில்ல என்ற தொனியில் அமைந்ததே அன்றி.. ஒரு எச்சரிக்கையாக அமைந்ததே அன்றி.. பெட்டையள் இல்லா ஊரில் போய் குடி இரு என்று அந்த அம்மா சொல்லேல்ல..! மேலும் பெட்டையளக் கண்டா சிலிர்த்திக்கிட்டு திரியிற அளவுக்கு பசங்க ஒன்றும் பகுத்தறிவற்ற ஜந்துகள் கிடையா...! :):icon_idea:

அந்தப் பையனின் சாம்பிளை ஆட்டையப் போட்டது.. அந்தப் பெட்டையின் இயலாமையே அன்றி.. அவனது பலவீனம் அல்ல. அவன் கூடப் படிக்கிற தோழின்னு நினைச்சு.. பழகினா.. அவள் அதை அட்வாரேஜா எடுத்துக்கிட்டு.. அவனுடைய சாம்பிளை ஆட்டையப் போட்டா அவன் எப்படி பிராக்டிக்கல் பாஸாக முடியும். பிராக்டிக்கல் பெயில் ஆகத்தான் முடியும். அது பெட்டைகளின் கள்ளப் புத்தியை இனங்காட்டுகிறதே தவிர வேறில்லை. பையன்களுக்கு பெட்டையள் போல.. கள்ளப் புத்தி.. கிடையாது. அவங்க நேர் வழில தான் அதிகம் சிந்திப்பாங்க. பெட்டையளுக்கு சந்தேகம்.. கள்ளப் புத்தி அதிகம். அதனால் தான் அவர்களுக்கு பையன்கள் மேல போலிக் குற்றம் சுமத்தி தங்கள் சந்தேகங்களை அவங்க வாயாலையே கிளியர் பண்ணிக்கிற.. செயலைச் செய்யுறவங்க. அப்புறம் அந்தப் பழியை பையங்க மேலேயே போட்டிட்டுவாங்க. இதை எல்லாம் வாழ்க்கையில் கண்ணுறும் எந்தத் தாயும் பெட்டையளோட கதையுங்கோ.. பழகுங்கோ என்று துணிஞ்சு சொல்லமாட்டாள் தானே..! அந்த வகையில் வந்த எச்சரிக்கையே அது எனலாம்..!

பந்தி: 2

சும்மா பொழுதுபோக்கிற்கு.. எழுதிக்கிட்டு கிடக்கிறவண்ட.. புளொக்கில வந்து.. தேவையில்லாத பதிலைப் போடு.. உசுப்பேத்தி.. எம் எஸ் என் ஐடியை கேட்டு வாங்கி.. நான் உன்னை காதலிக்கிறேன்.. என்று ரோஜாப் பூ அனுப்பும் போதும்.. போட்டோ போட்டு வேடிக்கை காட்டும் போதும்.. சந்திக்க கூப்பிட்டு.. அவன் அழகா.. குருடா.. கூனலா.. சிமாட்டா.. என்று அளவெடுக்கின்ற போதும்.. எப்படி பொக்கட் நிரம்பின ஆளா.. படிப்பு பட்டம் என்ன.. குணம் நலம் என்ன.. சண்டை பிடிப்பானா.. வாய் காட்டுவானா.. ஊர்.. குடும்பம் எப்படி.. என்னத்தில வாறான்.. காரா.. பஸ்ஸா.. என்றெல்லாம் பார்க்கிறப்போ.. தோழமை தான் பெட்டைகளின் மனதில் நிரம்பி வழிகிறதோ..???! :lol:

அதுவும் இல்லாமல்.. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.. என்று கூட சுத்தி திரியுறப்போ.. தெரியிறதில்லைப் போல.. அது நட்பை தாண்டிட்டு என்று. அப்புறம்.. நாங்க காதலிப்பம்.. ஆனால்.. வாழ வேண்டாம் என்று சொல்லுறப்போ.. கூட.. அதில நட்பு கடந்து போயிட்டு என்று தெரியுறதில்லையோ..! அப்புறம் ஏதோ கனவைக் கண்டிட்டு.. அல்லது றோட்டில இன்னொருத்தனைக் கண்டிட்டு.. எங்களுக்க காதல் இருந்தது.. ஆனால் வாழ முடியாது.. என்று சொல்லுறப்பவும்.. அது நட்பு தான் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையோ வேடிக்கை. எந்த உலகத்தில இப்படி ஒரு நட்பு பாராட்டிறது..??! ஒருவேளை பெட்டையளின் நட்பு என்பது இப்படித்தானோ என்னமோ..???! :)

காதலிக்கிறன் என்று சொல்லுறவளட்ட.. சா.. நான் காதலிக்கல்ல.. நட்போட இருக்கிறன் என்று சொல்லுறவனை பெட்டையள்.. எப்படி நினைப்பினம்.. பைத்தியம் என்று தான் நினைப்பினம். பதிலுக்கு அவனும் காதலிக்கிறேன்னாவது.. சொல்லத்தான் வேணும்..! சும்மா பகிடிக்கு சொல்லுற காதல்.. அல்லது விடயங்களை தெரிஞ்சு கொள்ள செய்யுற போலிக் காதல் என்பது வேறு. அது நீடிக்காது. இது காதலிக்கிறன்னு.. மாதக்கணக்கா சுத்தி திருஞ்சிட்டு.. கூட குந்தி இருந்து கொட்டிக்கிட்டு.. கடலை போட்டிட்டு.. கடைசியில.. நாங்க காதலிப்பம்.. ஆனால் சேர்ந்து வாழ வேணாம்.. நான் நேரம் கிடைக்கிறப்போ.. இன்னொருத்தன பார்த்து கட்டிக்கிறன் என்று.. எவள் சொல்லுவாள். பெட்டையள் சொல்லுவாளவ. அப்படிச் சொல்லுற பெட்டையள் இருக்கினம்..! அவையிட மொழில இது நட்போ...???! அவை சொல்லமாட்டினம்... இது நட்புன்னு.. அப்ப..! ஆனால்...

அவைக்கு வக்காளத்து வாங்கிற நீங்கள் சொல்லுவீங்கள். ஆனால்.... இதே தான் பெட்டையளின் நட்பா.????! அப்படின்னா.. சரி.. நாங்க பசங்க தான் உங்கட நட்பின் வரைவிலக்கணத்தை தவறா புரிஞ்சு கொண்டிட்டம். கவிதை எழுதிட்டம். எனிமேல் எல்லா பசங்களும்.. கூட இருந்து காதலிக்கிறன்.. என்று சொல்லி.. நல்லா கும்மாளம் அடிச்சிட்டு.. சீ யூ பிரண்ட் என்றிட்டு போங்கோ. அது தானாம் பெட்டையளுக்கு நட்பா தெரியும்.. அப்படின்னு வல்வை அக்கா இத்தாழ் பிரகடனப்படுத்தி இருக்காங்க..! நமக்கென்ன.. நட்டமா.. வரப் போகுது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பந்தி 1 க்கான பதில்..

எந்தத் தாயும் தன் குழந்தை நல்லவனுன்னு.. சிந்திப்பாளே அன்றி.. தன் குழந்தை கெட்டவனா வரப்போகுது என்று புத்தி சொல்லுறதில்ல. (சிலவேளை நீங்கள் விதிவிலக்கான அம்மாவோ. பாவம் உங்கட பிள்ளையள்..!) ஒரு தாய்.. தன் பிள்ளைக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி வழி காட்டுவாளே தவிர.. கெட்டவழில போன்னு.. வழிகாட்டமாட்டாள். அந்த வகையில் அந்தத் தாயின் வழிகாட்டல் என்பது தன் பிள்ளை எதிர்காலத்தில் பிரச்சனைகள் குறைந்த பாதையில் பயணிக்க என்று அமைந்திருக்கச் சந்தர்ப்பம் உள்ளதே அன்றி.. தன் பிள்ளை கெட்டது.. அதனால ஊர் பெட்டையள் பாழாப் போயிடப் போறாளவ.. என்று அந்தத் தாய் சொந்தப் பிள்ளையை மறந்து ஊர்ப் பெட்டையளப் பற்றி அக்கறைக்கப்பட்டதாக விதண்டாவாதத்திற்குச் சொல்லிக் கொள்ளலாம்.. நிஜத்தில் நீங்கள் கூட அப்படிச் செய்ய மாட்டீர்கள்..!

பெட்டையளோட கதைக்காத என்பதன் அர்த்தம்.. தேவையில்லாத கதை அவளவையோட ஏன்.. அது உனக்கோ.. உலகத்திற்கோ பயன்படப் போறதில்ல என்ற தொனியில் அமைந்ததே அன்றி.. ஒரு எச்சரிக்கையாக அமைந்ததே அன்றி.. பெட்டையள் இல்லா ஊரில் போய் குடி இரு என்று அந்த அம்மா சொல்லேல்ல..! மேலும்.. அந்தப் பையனின் சாம்பிளை ஆட்டையப் போட்டது.. அந்தப் பெட்டையின் இயலாமையே அன்றி.. அவனது பலவீனம் அல்ல. அவன் கூடப் படிக்கிற தோழின்னு நினைச்சு.. பழகினா.. அவள் அதை அட்வாரேஜா எடுத்துக்கிட்டு.. அவன் சாம்பிளை ஆட்டையப் போட்டா அவன் எப்படி பிராக்டிக்கல் பாஸாக முடியும். பிராக்டிக்கல் பெயில் ஆகத்தான் முடியும். அது பெட்டைகளின்ன் கள்ளப் புத்தியை இனங்காட்டுகிறதே தவிர வேறில்லை. பையன்களுக்கு பெட்டையள் போல.. கள்ளப் புத்தி.. கிடையாது. அவங்க நேர் வழில தான் அதிகம் சிந்திப்பாங்க. பெட்டையளுக்கு சந்தேகம்.. கள்ளப் புத்தி அதிகம். அதனால் தான் அவர்களுக்கு பையன்கள் மேல குற்றம் சுமத்தி தங்கள் சந்தேகங்களை அவங்க வாயாலையே கிளியர் பண்ணிக்கிற.. செயலைச் செய்யுறவங்க. அப்புறம் அந்தப் பழியை பையங்க மேலேயே போட்டிட்டுவாங்க. இதை எல்லாம் வாழ்க்கையில் கண்ணுறும் எந்தத் தாயும் பெட்டையளோட கதையுங்கோ.. பழகுங்கோ என்று துணிஞ்சு சொல்லமாட்டாள் தானே..!

தம்பி பெட்டைகளுக்கு எதிராக கருத்தெழுதி மொத்தத்தில் உங்கள் கருத்தின்படி பெரிய பெட்டையை அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். பெட்டைகளுடன் பழகாதே என்று பெரிய பெட்டை சொல்கிறாள் என்றால் அந்தப் பெட்டைகளின் வயதை பருவத்தைத் தாண்டிவந்தவர்தான் அவர் என்பதை முதலில் நீங்கள் உணரவேண்டும். இந்த இடத்தில் நான் மேலதிகமாக சுட்டிக்காட்ட விரும்பவில்லை. சந்தர்ப்பவசத்தால்கூட ஒரு தாயை அவமானப்படுத்துவதை நான் விரும்பவில்லை.

ஏன் நெடுக்குத் தம்பி... பெட்டைகள் எப்போது ஏமாற்ற ஆரம்பிக்கிறார்கள்? எப்போதாவது அவர்கள் ஏமாற்ற ஆரம்பிக்கும் காரணத்தை அறிய முற்பட்டிருக்கிறீர்களா? இனிமேலாவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது எதற்காக என்பதை அறிய முற்படவும்... ஒருமுறை தவறிவிட்டது...அது பதின்மக்காதலாக இருக்கும் அது காதல் அல்ல ஒருவித இனக்கவர்ச்சி ஒரு ஆணும் பெண்ணும் பருவம் அடையும்போது ஏற்படும் மாற்றங்களால் விளைவது...அது பருவமாற்றங்களை அறியும் அவாவில் ஆரம்பிக்கும் அதற்கு நீண்ட எதிர்காலத்தைப்பற்றிய எண்ணங்கள் இருக்காது. கலோ சொன்னோமோ, கவர்ச்சியுற்றோமா?, கிளர்ச்சி அடைந்தோமா? காணமால் போனோமா...? இதுதான் பதின்மக்காதல் இந்தப்பருவம் பெடியனுக்கும் சரி பெட்டைக்கும் சரி அநேகமாக விழுந்து எழும்பித்தான் நடக்கவைக்கும் தடுமாறுவதும் தடக்கி விழுவதும் காதல் இல்லை. அதைக்காதல் என்று நீங்கள் கணக்குப் பார்த்து எழுதி இருக்கிறது பெடியனின் பலவீனத்தைக் குறிக்கிறது. படிக்கிற பருவத்தில் எல்லாவற்றுக்கும் பெற்றோரை எதிர்பார்த்துநிற்கும் நிலையில் காதல் என்றால்??? ஒரு வேளை அந்தப் பெட்டைக்கு இந்தப் பெடியனால் ஒரு ரிப்பன்கூட வாங்கிக் குடுக்கேலமால் இருந்திருக்கும் இதற்குள் பெரிய பெட்டையின் வரிகளைச் இந்தச் சின்னப் பெடியன் அந்தச் சின்னப் பெட்டையிடம் பெரிய ரோயல்கதைமாதிரி அளந்திருக்கக்கூடும். சின்னப்பெட்டை விலகிப்போக சின்னப் பெடியனிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதைத் திருப்பிப் பார்க்கத் தெரியாத சின்னப்பெடியன் பெட்டையில பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறான்.... :icon_mrgreen:

பந்தி: 2

நான் உன்னை காதலிக்கிறேன்.. என்று ரோஜாப் பூ அனுப்பும் போதும்.. சந்திக்க கூப்பிட்டு.. அவன் அழகா.. குருடா.. கூனலா.. சிமாட்டா.. என்று அளவெடுக்கின்ற போதும்.. எப்படி பொக்கட் நிரம்பின ஆளா.. படிப்பு பட்டம் என்ன.. குணம் நலம் என்ன.. சண்டை பிடிப்பானா.. வாய் காட்டுவானா.. என்னத்தில வாறான்.. காரா.. பஸ்ஸா.. என்றெல்லாம் பார்க்கிறப்போ.. தோழமை தான் பெட்டைகளின் மனதில் நிரம்பி வழிகிறதோ..???!

அதுவும் இல்லாமல்.. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.. என்று கூட சுத்தி திரியுறப்போ.. நாங்க காதலிப்பம்.. ஆனால்.. வாழ வேண்டாம் என்று சொல்லுறப்போ.. அதுக்குள்ள நட்பா இருக்குது. எந்த உலகத்தில இப்படி ஒரு நட்பு பாராட்டிறது..??! ஒருவேளை பெட்டையளின் நட்பு என்பது இப்படித்தானோ என்னமோ..???! :)

காதலிக்கிறன் என்று சொல்லுறவளட்ட.. சா.. நான் காதலிக்கல்ல.. நட்போட இருக்கிறன் என்று சொல்லுறவனை பெட்டையள்.. எப்படி நினைப்பினம்.. பைத்தியம் என்று தான் நினைப்பினம். பதிலுக்கு அவனும் காதலிக்கிறேன்னாவது.. சொல்லத்தான் வேணும்..! சும்மா பகிடிக்கு சொல்லுற காதல்.. அல்லது விடயங்களை தெரிஞ்சு கொள்ள செய்யுற போலிக் காதல் என்பது வேறு. அது நீடிக்காது. இது காதலிக்கிறன்னு.. மாதக்கணக்கா சுத்தி திருஞ்சிட்டு.. கூட குந்தி இருந்து கொட்டிக்கிட்டு.. கடலை போட்டிட்டு.. கடைசியில.. நாங்க காதலிப்பம்.. ஆனால் சேர்ந்து வாழ வேணாம்.. நான் நேரம் கிடைக்கிறப்போ.. இன்னொருத்தன பார்த்து கட்டிக்கிறன் என்று.. எவள் சொல்லுவாள். பெட்டையள் சொல்லுவாளவ. அப்படிச் சொல்லுற பெட்டையள் இருக்கினம்..! அவையிட மொழில இது நட்போ...???! அவைக்கு வக்காளத்து வாங்கிற நீங்கள் சொல்லுங்கோ.. இதோ பெட்டையளின் நட்பு..????! அப்படின்னா.. சரி.. நாங்க பசங்க தான் உங்கட நட்பின் வரைவிலக்கணத்தை தவறா புரிஞ்சு கொண்டிட்டம். கவிதை எழுதிட்டம். எனிமேல் எல்லா பசங்களும்.. கூட இருந்து காதலிக்கிறன்.. என்று சொல்லி.. நல்லா கும்மாளம் அடிச்சிட்டு.. சீ யூ பிரண்ட் என்றிட்டு போங்கோ. அது தானாம் பெட்டையளுக்கு நட்பா தெரியும்.. அப்படின்னு வல்வை அக்கா இத்தாழ் பிரகடனப்படுத்தி இருக்காங்க..! :lol::icon_idea:

இதை அப்படியே அடுத்தபக்கம் போட்டு பாருங்கள் தம்பி... :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான ஒரு தாய் என்பவள் தன் வாழ் நாளில் கண்டதை.. அனுபவத்தில் பெற்றதை.. பாடமாகக் கற்று அதில் கெட்டதை குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது என்று நினைப்பாளே தவிர.. அனுபவிக்கட்டும் என்று விடாள். அந்த வகையில் இந்த தாயின் எச்சரிப்பு எவ்வளவு சரி என்பதை பின்னாளில் அந்தப் பையனே உணர்ந்திருக்கிறான்..! அது கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

மேலும்.. ஆயிரம் காரணங்களை மனுசுக்குள்ள பூட்டி வைச்சிட்டு.. எதுக்கு வெளில.. காதலிக்கிறம் வேசம் போடனும். அந்த ஆயிரம் காரணங்களில் ஒன்றிரண்டை வெளிப்படையாகச் சொல்லி.. ஆரம்பத்திலேயே காதல் என்ற எண்ணம் தோன்றுவதை சின்னப் பெட்டையள் தவிர்க்க ஆயிரம் வழி இருக்கே. அதை எல்லாம் செய்யாமல் விட்டுப்போட்டு.... காதலிச்சு.. சுற்றித் திரிஞ்சு.. நல்லா பையங்க மனசை கனவு காண விட்டிட்டு.. செய்ய வேண்டியதை எல்லாம் செய்து போட்டு.. கடைசில.. காரணமே எதுவும் இன்றி.. சொல்லாமல் கொள்ளாமல்.... காதலிப்பம்.. ஆனால் வாழ முடியாது என்பதற்குப் பின்னால் உள்ள மர்மக் காரணங்களை அவிழ்ப்பது.. எல்லாம் சின்னப் பையங்களால முடியாத காரணம். அதுக்கு ஜேம்ஸ் பாண்ட்.. மாயாவி வேடம் தான் அவங்க போடனும்..!

எங்கும் எதிலும்.. நியாயத்தைப் பேசனும். ஆரம்பத்தில எதையும் தவிர்த்திட்டா பாதிப்புக் குறைவு. காதல் என்ற எண்ணத்தை வளர்த்து.. அதை வளர விட்டு.. அது முற்றினாப் பிறகு முறிக்கிற குணம்.. பொடியள விட பெட்டையளட்ட அதிகம். அது.. மனங்களை மிக ஆழமாக காயப்படுத்தி.. வளமான வாழ்வையே சிதைத்து விடும். இப்படியான பெட்டையளுக்கு.. காதலிச்சானா.. படுக்கையை பகிர்ந்தானா.. வயிற்றை நிரப்பினானா.. விட்டிட்டு ஓடினானா.. அணுகுமுறை தான் சரியான பாடமாக இருக்கும். புனிதக் காதல் செய்தீங்கள்.. தேவதாசா அலைவதை விட வேறு பிறவிப் பயன் கிடையாது. இதுதான் இன்றைய வாழ்வியலில் பெட்டையளின் முன்னாள் உள்ள பையன்களுக்கான ஒரே மார்க்கம் என்றால் அதை வல்வை அக்கா வரவேற்கக் கூடும்...! ஆனால் என்னைப் பொறுத்தவரை அது பாவம்.. சுய ஒழுக்கத்திற்கு.. பண்பாட்டுக்கு கேடு....! அதிலும் விலகி வேறு நல்ல பாதையில் பயணிக்கலாம். காதல் என்ற வார்த்தையையே வாழ்வியல் அகராதியில் இருந்து அழிக்கலாம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை விளங்கிக் கொள்ளவேணும் நெடுக்கு

இன்றைய சின்னப் பெட்டைதான் நாளைய பெரிய பெட்டை இன்றைய சின்னப் பெடியன்தான் நாளைய பெரிய பெடியன் அதனால எப்படியோ சின்னப் பெடியன் ஒரு சின்னப் பெட்டையை வாழ்க்கைத்துணையாக ஏற்றுத்தான் ஆகவேண்டும் அப்படி ஏற்கும் அந்த சின்னப்பெட்டை உங்கள் பாணியில் பார்த்தால் வேறு சின்னப் பெடியன்களுக்கு ஆட்டையைப் போட்டிருக்கலாம் கடலை போட்டிருக்கலாம், கனவுகள் காண வச்சிருக்கலாம், காதல் முற்றும் பைத்தியமாகியிருக்கலாம்…… என்ன எல்லாம் ஒரு வட்டத்திற்குள் மறுபடியும் பயணிக்கிறது என்று பார்க்கிறீர்களோ? :icon_idea: அதேபோல மற்றப் பக்கத்தில் சின்னப் பெட்டைகளும் இங்கு நீங்கள் பெட்டைகளைச் சொல்வது மாதிரி பெடியன்களைச் சொல்லலாம்.

என்ன பெடியன்கள் காதல் தோல்வி என்றால் ஊருக்கே தம்பட்டம் அடித்து அவ என்னை ஏமாத்திட்டா என்று படம் காட்டுவீங்கள்..பாவம் பெட்டைகள் வேதனைகளையும் வலிகளையும் வெளியே சொல்லாமல் மூடி மறைச்சு மனதளவில் செத்துப் போய்விடுவார்கள்.. அதிலும் காதல் உச்சத்தில்போய் கலவியில முடிஞ்சிருந்தா வயிற்றை நிரப்பிக் கொண்டு மறைக்கவும் தெரியாமல் கேவலப்பட்டதை மறுக்கவும் முடியாமல் சமூகத்தின் கல்லெறிகளால் கடைசியில தற்கொலை முயற்சி அப்படி இப்படி என்று கடைசியில உறவுகளின் கால்களுக்குள் மிதிபடும் சாக்குத்துணிக்கும் கீழாக மாற்றப்பட்டுவிடுவார்கள்… பெரிதாக ஏமாத்துறது பெட்டைகள் அவர்களுக்குக் கள்ளப்புத்தி அதிகம் என்று எழுதித் தொலைக்கிறீர்களே… பெடியன்களால் ஏமாற்றப்படுகிற பெட்டைகளின் வாழ்க்கை மீள முடியாத பாதாளத்தில் தள்ளப்படுவதைக் கண்ணால் பார்க்கவில்லையா?.... ஒருத்தி காதலில் ஏமாந்தவளாக இருப்பின் அவளுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு அவளின் முழுக்குடும்பமுமே திண்டாடும் அப்படியே திண்டாடி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு கட்டுகிறவன் தனக்குக் கோபம் வரும் வேளைகளில் எல்லாம் தினம் தினம் வார்த்தைகளால் அந்தப் பெட்டையை துடிக்கத்துடிக்கச் சாகடித்துக் கொண்டிருப்பானே….. இப்படி காதலில் தோல்வியைக் கண்ட பெடியன்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?....ஆக உருப்படி இல்லாத காதலுக்குள் மாண்டு தோற்றுப் போவதிலும் சுதாகரித்துத் தப்பித்துக் கொள்வது நலம். பெட்டைகள் ஏமாற்றுவதில்லை….அவர்கள் தற்காத்துக் கொள்கிறார்கள்….சில ஏமாளி பெடியன்கள் இருக்கும் சமூகத்திலேயே பல ஆதிக்கத்தனம் உள்ள பெடியன்களும் இருக்கிறார்கள். எப்படியோ ஏமாளிகள் வாழ்வதில்லை ஆதிக்கமுள்ளவர்களே வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட சமூகத்தில் ஆதிக்க சக்திக்குள் தன்னை நிலைப்படுத்தி வாழ ஒரு பெட்டைக்குப் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. ஆகவே பெட்டை சில இடங்களில் தேவைக்கேற்ப தனது புத்திசாலித்தனத்தைப் பாவிக்க உந்தப்படுகிறாள்….. இதில் ஆதிக்கத்திலும் இல்லாமல் புத்திசாலித்தனத்திலும் இல்லாமல் மொக்கை போடும் பெடியன் ஏமாறுவது இயல்புதானே….

பாவம் பெரிய பெட்டை மொக்கைப் பெடியனை புத்திசாலியாக முயற்சி செய்திருக்கிறா….. :lol: :lol: :D

நெடுக்கரே! சும்மா கிம்மா காமெடி பண்ணாதீங்க?

உங்களோட கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா நீங்க சொல்லுறமாதிரி நீங்களே நடக்கமுடியாதெண்னு உங்களின்ர மனச்சாட்சிக்கே தெரியும். அப்புறமென்ன?

சகோதரி ஷஹாரா பாவம். :( வீணா உங்களோட வதம் சாறி விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கா. :D

ஏதாவது வில்லங்கம்,விடுப்பு எண்னு வந்திட்டா எங்கட ஊர் பொம்பிளையளும் எல்லா வேலையையும் தூக்கிப்போட்டுட்டு வந்திடுங்கள் போல கிடக்கு.

ஆனா அவ பிஸியான ஆள். எழுதுறதுக்குக் கூட நேரமில்லாமல் இருக்கிற மனிஷியை வம்புக்கு இழுக்கதையுங்கோ நெடுக்கு.

உங்களைப் பொறுத்தவரையில் அவ பந்தி பந்தியா எழுதிச் சொல்லுறதிலயும் கொஞ்சம் நியாயம் இருக்குத்தான். :rolleyes:

அதை வெளிப்படையா நான் எப்பிடிச் சொல்லுறது,என்னால ஏலாதுப்பா?

ஆளை விடுங்கோ. :o

மனசில தோணிச்சு சொல்லிட்டன். கோபிக்காதையுங்கோ என்ன. :)

  • கருத்துக்கள உறவுகள்

பத்தோட பதினொண்டு..

நான் போட்ட பச்சையைச் சொன்னேன் :icon_mrgreen:

பத்தோட பதினொண்டு..

நான் போட்ட பச்சையைச் சொன்னேன் :icon_mrgreen:

என்னது கச்சையா? :o ஓ! சாரி!! :lol::icon_mrgreen:

முன்பு பல ஆக்கங்களில் நீங்கள் பெண்களை பற்றி தவறாய் எழுதுவதை பார்த்து பலமுறை நானும் ஒரு பெண் என்ற வகையில் வேதனை பட்டிருக்கிறேன் .சில முறை உங்களுடன் விவாதமும் செய்திருக்கிறேன்.இப்போதுதான் அதன் அர்த்தம் புரிகிறது .மனதில் இருந்த அறாத வடுக்கள் தான் அப்படிப்பட்ட வார்த்தைகளாக வடிவம் பெற்றிருக்கின்றது என்று இப்போது புரிகிறது .அதற்காக பெண் இனமே அப்படி என்று ஒதுக்கி விடாதீர்கள் .நல்லதும் கெட்டதும் எல்லா இடமும் இருக்கிறது .உங்களுக்கு என்று ஒரு நல்ல மனைவி அமையும் போது அதை நீங்கள் மனதளவில் உணர்வீர்கள் .

அனுபவத்தை அழகாக கவிதை ஆக்கி இருக்கிறீர்கள் .பகிர்விற்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை விளங்கிக் கொள்ளவேணும் நெடுக்கு

இன்றைய சின்னப் பெட்டைதான் நாளைய பெரிய பெட்டை இன்றைய சின்னப் பெடியன்தான் நாளைய பெரிய பெடியன் அதனால எப்படியோ சின்னப் பெடியன் ஒரு சின்னப் பெட்டையை வாழ்க்கைத்துணையாக ஏற்றுத்தான் ஆகவேண்டும் அப்படி ஏற்கும் அந்த சின்னப்பெட்டை உங்கள் பாணியில் பார்த்தால் வேறு சின்னப் பெடியன்களுக்கு ஆட்டையைப் போட்டிருக்கலாம் கடலை போட்டிருக்கலாம், கனவுகள் காண வச்சிருக்கலாம், காதல் முற்றும் பைத்தியமாகியிருக்கலாம்…… என்ன எல்லாம் ஒரு வட்டத்திற்குள் மறுபடியும் பயணிக்கிறது என்று பார்க்கிறீர்களோ? :icon_idea: அதேபோல மற்றப் பக்கத்தில் சின்னப் பெட்டைகளும் இங்கு நீங்கள் பெட்டைகளைச் சொல்வது மாதிரி பெடியன்களைச் சொல்லலாம்.

என்ன பெடியன்கள் காதல் தோல்வி என்றால் ஊருக்கே தம்பட்டம் அடித்து அவ என்னை ஏமாத்திட்டா என்று படம் காட்டுவீங்கள்..பாவம் பெட்டைகள் வேதனைகளையும் வலிகளையும் வெளியே சொல்லாமல் மூடி மறைச்சு மனதளவில் செத்துப் போய்விடுவார்கள்.. அதிலும் காதல் உச்சத்தில்போய் கலவியில முடிஞ்சிருந்தா வயிற்றை நிரப்பிக் கொண்டு மறைக்கவும் தெரியாமல் கேவலப்பட்டதை மறுக்கவும் முடியாமல் சமூகத்தின் கல்லெறிகளால் கடைசியில தற்கொலை முயற்சி அப்படி இப்படி என்று கடைசியில உறவுகளின் கால்களுக்குள் மிதிபடும் சாக்குத்துணிக்கும் கீழாக மாற்றப்பட்டுவிடுவார்கள்… பெரிதாக ஏமாத்துறது பெட்டைகள் அவர்களுக்குக் கள்ளப்புத்தி அதிகம் என்று எழுதித் தொலைக்கிறீர்களே… பெடியன்களால் ஏமாற்றப்படுகிற பெட்டைகளின் வாழ்க்கை மீள முடியாத பாதாளத்தில் தள்ளப்படுவதைக் கண்ணால் பார்க்கவில்லையா?.... ஒருத்தி காதலில் ஏமாந்தவளாக இருப்பின் அவளுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு அவளின் முழுக்குடும்பமுமே திண்டாடும் அப்படியே திண்டாடி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு கட்டுகிறவன் தனக்குக் கோபம் வரும் வேளைகளில் எல்லாம் தினம் தினம் வார்த்தைகளால் அந்தப் பெட்டையை துடிக்கத்துடிக்கச் சாகடித்துக் கொண்டிருப்பானே….. இப்படி காதலில் தோல்வியைக் கண்ட பெடியன்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?....ஆக உருப்படி இல்லாத காதலுக்குள் மாண்டு தோற்றுப் போவதிலும் சுதாகரித்துத் தப்பித்துக் கொள்வது நலம். பெட்டைகள் ஏமாற்றுவதில்லை….அவர்கள் தற்காத்துக் கொள்கிறார்கள்….சில ஏமாளி பெடியன்கள் இருக்கும் சமூகத்திலேயே பல ஆதிக்கத்தனம் உள்ள பெடியன்களும் இருக்கிறார்கள். எப்படியோ ஏமாளிகள் வாழ்வதில்லை ஆதிக்கமுள்ளவர்களே வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட சமூகத்தில் ஆதிக்க சக்திக்குள் தன்னை நிலைப்படுத்தி வாழ ஒரு பெட்டைக்குப் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. ஆகவே பெட்டை சில இடங்களில் தேவைக்கேற்ப தனது புத்திசாலித்தனத்தைப் பாவிக்க உந்தப்படுகிறாள்….. இதில் ஆதிக்கத்திலும் இல்லாமல் புத்திசாலித்தனத்திலும் இல்லாமல் மொக்கை போடும் பெடியன் ஏமாறுவது இயல்புதானே….

பாவம் பெரிய பெட்டை மொக்கைப் பெடியனை புத்திசாலியாக முயற்சி செய்திருக்கிறா….. :lol: :lol: :D

அக்கா என்ன சொல்லாவாறான்னா... பெட்டையள் புத்திசாலிகள் என்று காட்ட.. அவையை.. காதல் என்ற பெயரில் எக்ஸ்பெரிமண்ட் செய்திட்டு.. தூக்கி வீசிட்டு போறதுதான்.. அவைக்குப் பிடிக்கும்.. அப்படியான ஆதிக்க நாயகர்களை நோக்கித்தான் பெட்டையள் படை எடுக்கினம் என்று. நிச்சயமா.. மிருகத்தனமா உலவும் எல்லா ஆண்களும்.. இப்படியான மிருகத்தனத்தோட வாழ விரும்பும் பெட்டையளுக்கு ஒன்றா அல்ல பலவாக கிடைப்பார்கள். அதில் பெட்டையளின் புத்திசாலித்தனம் பெருகி.. மாதத்துக்கொரு.. கருக்கலைப்பும் செய்து வாழ வாழ்த்துக்கள்..!

ஆளை விடுங்க சாமி...! உங்கட புத்திசாலித்தனத்துக்கு முன்னால எயிட்ஸ் வைரசே தோத்துப் போயிடும்.. நாங்க எங்க..! :lol::D:icon_idea:

பத்தோட பதினொண்டு..

நான் போட்ட பச்சையைச் சொன்னேன் :icon_mrgreen:

நன்றி கிருபண்ணா. :)

முன்பு பல ஆக்கங்களில் நீங்கள் பெண்களை பற்றி தவறாய் எழுதுவதை பார்த்து பலமுறை நானும் ஒரு பெண் என்ற வகையில் வேதனை பட்டிருக்கிறேன் .சில முறை உங்களுடன் விவாதமும் செய்திருக்கிறேன்.இப்போதுதான் அதன் அர்த்தம் புரிகிறது .மனதில் இருந்த அறாத வடுக்கள் தான் அப்படிப்பட்ட வார்த்தைகளாக வடிவம் பெற்றிருக்கின்றது என்று இப்போது புரிகிறது .அதற்காக பெண் இனமே அப்படி என்று ஒதுக்கி விடாதீர்கள் .நல்லதும் கெட்டதும் எல்லா இடமும் இருக்கிறது .உங்களுக்கு என்று ஒரு நல்ல மனைவி அமையும் போது அதை நீங்கள் மனதளவில் உணர்வீர்கள் .

அனுபவத்தை அழகாக கவிதை ஆக்கி இருக்கிறீர்கள் .பகிர்விற்கு நன்றி

நன்றி.. அக்கா/தங்கச்சி..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரே! சும்மா கிம்மா காமெடி பண்ணாதீங்க?

உங்களோட கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா நீங்க சொல்லுற மாதிரி நீங்களே நடக்கமுடியாதெண்னு உங்களின்ர மனச்சாட்சிக்கே தெரியும். அப்புறமென்ன?

மனசில தோணிச்சு சொல்லிட்டன். கோபிக்காதையுங்கோ என்ன. :)

மனச்சாட்சி உள்ளவங்க கிட்டதான்.. உண்மையான மனச்சாட்சியத்தோட கதைக்கலாம். மனச்சாட்சியே இல்லாதவங்க கிட்ட போய் அதைப் பற்றி பேசுறது வீண்..! பெட்டையளைப் பொறுத்தவரை மனச்சாட்சியை விட மனசா(ஆ)ட்சி தான் அதிகம். தாங்க செய்வது நினைக்கிறது விரும்புறது எல்லாம் சரி என்று அவங்க நினைக்கிறாங்களே தவிர அவர்களிடம் மனச்சாட்சி கிடையாது. :icon_idea:

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி. :)

  • 2 months later...

நெடுக்ஸ் அண்ணா, நிச்சயம் காதல் என்பது ஓர் மறக்க முடியாத அனுபவம். உண்மையான காதலர்களுக்கு நிச்சயம் ஒருவர் போனால் இன்னொருவர் என்ற மனப்பாங்கு வராது. அவர்களின் மனவலிக்கும் யாராலும் ஆறுதல் கூற முடியாது. :(

ஏமாற்ற நினைத்து காதலிப்பவர்களும் உண்டு.

காதலித்த பின் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிபவர்களும் உண்டு.

இவர்கள் பிரிந்தாலும் மனதில் இறுதிவரை காதல் நிலைகொண்டே இருக்கும். இதில் இருவருமே பாதிக்கப்படும் அதேநேரம் குறித்த நபரின் சூழ்நிலை மற்றைய நபரால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம்.

இவை தவிர தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் செய்யும் தவறுகளும்(பேசும் வார்த்தைகள் உட்பட) மற்றவருக்கு பிடிக்காது போகும் சாத்தியம் உள்ளது.

இத்தவறுகள் காதலின் ஆரம்பத்தில் தெரியாமல் இருக்கலாம், போக போக தான் தெரியும். ஓரிரு தடவை சுட்டிக்காட்டிய பின்னும் மீண்டும் அத்தவறை செய்யின் அதுவும் பிரிதலுக்கு காரணமாகி விடும்.

இவை அனைத்தும் இருபாலாருக்கும் பொருந்தும். ஒரு பெண் / ஆணை வைத்து ஒட்டுமொத்த பெண்/ ஆண் சமுதாயத்தை அவர்களுடன் ஒப்பிட்டு குறை கூற முடியாது.

உங்களுக்குள் இருந்த புரிந்துணர்வின் அளவோ, உங்களில் யார் தவறு விட்டார் என்பதோ தெரியாமல் நாம் கருத்து கூற முடியாது.

ஆனால் காதல் தோல்வியில் முடிந்தால் அக்காதலிலிருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் மீண்டுமொருமுறை காதலில் விழுவதை தடுக்கும் அல்லது அடுத்த காதலில் ஏமாறாமல் இருக்க உதவும்.

எனினும் பிரிந்த காதலர்களுக்கு வாழ்க்கையில் இன்னொரு நல்ல காதல் அமைந்தால் மீண்டும் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் இம்முறையும் தோல்வி ஏற்படலாம் என்பதையும் எதிர்பார்த்தே தொடங்க வேண்டும்.

சிலருக்கு காதல் தோல்வியுற்றாலும் துணை நல்லதாக அமையும். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமையாது. உங்களுக்கென என்ன விதி உள்ளதோ அதன் படி நடக்கும்.

பொதுவாக நல்லவர்களுக்கு துணை நல்லதாக அமைவதில்லை. கெட்டவர்களுக்கு துணை நல்லதாக அமையும். அல்லது கெட்டவர்களுக்கு கெட்டவர்களே அமைவார்கள். இங்கு நல்லவர்களுக்கு நல்லவர்களே வந்தமைவதென்பது விதிவிலக்கு. ஆனால் எதையும் சமாளித்து செல்லும் மனப்பாங்கு வேண்டும். மாறாக அவரவர் துணையை ஏனையோர் முன் மட்டந்தட்ட கூடாது.

காதலிப்பவர் சேர்ந்தாலென்ன பிரிந்தாலென்ன, அவர்களின் காதல் தான் அவர்களின் எதிர்காலத்தை ஆளும். ஒன்றில் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற வருத்தத்துடன் அல்லது சேராமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்துடன்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு தான் சொல்லுறது பீல் பண்ண கூடாது என்று..

"காதலிக்க தெரிஞ்சவனுக்கு காதல் தோல்வியை,வலியை ஏற்கும் பக்குவம் வேண்டும்

அதை ஏற்கத்தெரிந்திருக்க வேண்டும்" என்று யாரோ ஒரு பெரியார் சொல்லி இருக்கிறார். :rolleyes:

சும்மா பீல் பண்ணுறதை விட்டு நெக்ஸ்ட் டை பார்த்திட்டு போங்கப்பா.. :lol::icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.