Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

தாயக விடுதலைக்காக தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்களை தனித்தனியாக இணைக்கத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக 1982 முதல் 1986 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

விபரங்களைப் பார்க்க

http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

இணைப்பிற்கு நன்றி மின்னல்.

விடுபட்டுப்போன சிலரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம்.

அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணுக்கு உரமாகியவர்களுக்கு, வீர வணக்கங்கள்!

நன்றிகள், மின்னல்!!!

வீரவேங்கை விஸ்வம் முத்துலிங்கம் கருணாநிதி கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 18.03.1985

karuna.jpg

கருணா (விஸ்வம்) ஆரம்பகால உறுப்பினர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தவர். சிறந்த ஓவியர். வர்த்தக விளம்பரப் பலகைகள் வரைபவர். ஆயுதப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது தோள்பட்டை மூட்டை விட்டு விலகும் பிரச்சனை இருந்தது. அதனால் தாக்குதல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இயக்கத்தை விரிவு படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்தார்.

இந்த நேரத்தில் பிரித்தானிய SAS மற்றும் இஸ்ரேல் பயிற்சி முடித்து வந்த முதற்தொகுதி சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடியில் முகாம் அமைத்துக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஈபிஆர்எல்எப் , டெலோ, புளொட் இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு அழிக்கப்பட்டார்கள். போராளிகளிடம் இருந்து தகவல்களை பெற்றுக் கொண்டபின், அவர்களின் கழுத்தில் டயரை போட்டு தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள. அதிரடிப்படையுடன் வரும் முகமூடி அணிந்த ஒருவரே எல்லோரையும் துல்லியமாக அடையாளம் காட்டினார். போராளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டார்கள்.

ஒருநாள் கருணா துவிச் சக்கர வண்டியில் பயணிக்கையில், ஒழிந்து இருந்த அதிரடிப்படையின் ட்ரக்கில் இருந்த அந்த முகமூடி தலையாட்டி விட்டான். கருணாவை பிடிக்க முயற்சிக்கையில், கருணா அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டு பிடிக்க வந்த அதிரடிப்படையினனின் M16 துப்பாக்கியை பறித்து மற்றவர்களை சுட முயற்சித்தார். அந்த கைகலப்பில் அவரது தோள்மூட்டு விலகியதால், பலவீனமான நிலையில் அதிரடிப்படையியானரால் வாகனத்திற்குள் தூக்கி எறியப்பட்டார். சயனைட் அடித்துக் கொண்டு, அங்கிருந்த காட்டிக் கொடுக்கும் முகமூடியின் முகத் துணியை கிழித்து, அந்த முகமூடியின் பெயரைச் சொல்லிக் கத்தினார். அந்த முகமூடி மத்திய வயதுடைய ஒரு குடும்பஸ்தர். வன்னிப் பக்கம் அரச பதவியில் இருந்தவர்.

அதிரடிப்படையினர், தாங்கள் முதன் முதலாக ஒரு உண்மையான புலியை பிடித்துள்ளதாகவும் அவனை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்றும் கத்திக் கொண்டு பல முயற்சிகள் செய்து அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் மின்னல்.. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

தப்பிலி உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம்.

அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.

உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள் தப்பிலி

இணைப்பிற்கு நன்றிகள் மின்னல்.. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

தப்பிலி உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள்..! :(

வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம்.

அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.

உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள் தப்பிலி

நன்றி இசைக்கலைஞன், விசுகு

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, மீண்டும் தெரிந்தவற்றை எழுதுவேன்.

மாவீரர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள் !!!

மனத்திற்கு ஆறுதலும் பெருமையும் தரும் முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

இணைப்பிற்கு நன்றி மின்னல்

வீரவேங்கை பன்னீர் இரத்தினம் பன்னீர்ச்செல்வம் கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 13.08.1986

panneer.jpg

இரா. பன்னீர்ச்செல்வம், இளைஞர் பேரவையின் முக்கிய உறுப்பினர். சிறந்த பேச்சாளர். சிறிய வயதிலேயே அமிர்தலிங்கத்துடன் கூட்டணி மேடைகளில் பேசுவார். நல்ல கவிஞரும் கூட. சில காலம் சிறையில் இருந்தவர். அந்தக் காலத்தில் அம்பாறையில் விடுதலை தொடர்பாக வெளியிடப்படும் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் எல்லாவற்றிலும் இவரது எழுத்துக்கள்தான். இன்பம் செல்வம் போன்றோருக்கு நெருக்கமானவர். இவரது சகோதரியும் ஒரு ஆரம்ப கால பெண் போராளி.

நல்ல அரசியல் அறிவுள்ளவர். இயக்கப் பிளவுகளை வெறுத்தவர். எல்லா இயக்கத்தவருடனும் வேறுபாடின்றிப் பழகுவார். 84 இல் இயக்கங்களின் மிதமிஞ்சிய வளர்ச்சியைப் பார்த்து

'சரியான செயல்திட்டங்களின்றி பிரிந்து நின்று போராடினால், செகுவராப் புரட்சியில் பத்தாயிரம் சிங்கள இளைஞர்களின் உயிர்களும் வீணாகப் போனது போல தமிழ் இளைஞர்களின் உயிர்களும் வீணாகிப் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்' என்று இவர் கவலைப்பட்டுச் சொன்னதை மறக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அம்பாறைப் பகுதியில் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவராக இருந்தாலும், இவரை ஒரு சிறந்த அரசியல் போராளியாக அடையாளப்படுத்த முடியும்.

லெப்டினன்ட் சைமன் கனகரத்தினம் ரஞ்சன் பொத்துவில், அம்பாறை வீரச்சாவு: 13.02.1985

ரஞ்சன் கனகரத்தினம், புலிகளால் (பிரபாகரன், உமா மகேஸ்வரன் பிரிவின் முன்) சுடப்பட்ட பொத்துவில் எம்பியின் மகன். பரமதேவாவுடன் சேர்ந்து தனிக்குழுவாக இயங்கி செங்கலடி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு சிறை சென்றவர். சிறையிலிருந்து வந்த பின் குடும்பத்தினர் இவரை கனடா அனுப்ப முயற்சிக்க, கனடா போவதாக போக்குக் காட்டிவிட்டு இந்தியா சென்று புலிகளில் இணைந்து கொண்டார்.

பண்டிதரின் மறைவிற்கு பதிலடியாய் நடத்தப்பட்ட கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலில் இவர் வீர மரணமடைந்தார். புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முதன் முதலில் அதிகளவு புலிகள்(16) பலியானார்கள். அத்துடன் புலிகளின் பலம் குறித்து இலங்கையரசை விழிப்படைய வைத்த தாக்குதல்.

Edited by தப்பிலி

எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்

பிறர் நலன் கருதி மேலோட்டமாகத்தான் பதிய முடியும்.

  • தொடங்கியவர்

நன்றி தப்பிலி மாவீரர்கள் தொடர்பான உங்களின் குறிப்புக்களிற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் இணைப்புக்கு நன்றிகள்,

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

மின்னல் இணைப்புக்கு நன்றிகள்.

லெப்டினன்ட் சைமனின் படத்தை மாற்றவும்.

மாவீரர் கையேட்டில் பிழையாக அச்சாகியிருக்கிறது.

கீழே இணைத்துள்ள படத்தில் முதலில் இருப்பவர்தான் ரஞ்சன்.

நன்றி

kokulaai-112-page-001.jpg

Edited by Saniyan

  • தொடங்கியவர்

நன்றி சனியன்

லெப்.சைமன் அவர்களின் படம் மாற்றப்பட்டுள்ளது.

நன்றி சனியன்

லெப்.சைமன் அவர்களின் படம் மாற்றப்பட்டுள்ளது.

நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.