Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பந்து இப்போது இந்தியாவிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பந்து இப்போது இந்தியாவிடம் 3ecf46ef75bd65c2ad8b991aaa521076.jpg"தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது, இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.

மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன. அதனை எதிர்ப்பதில் இந்தியா விடாப்பிடியாக நின்றது. அதனால் அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணையாக மாற்றப்பட்டது.

இலங்கையின் இறுதிப் போரின் கடைசியில் அரச படைகளாலும், தமிழ் புலிகளாலும் மிக மோசமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை 2009 மே பிரேரணையில் சுட்டிக்காட்டி இருந்த 17 நாடுகளும், இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய பராமரிப்பு, மனிதாபிமான அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றல், ஊடக சுதந்திரத்தை மதித்தல், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல் போன்றவற்றை இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த இந்தியா, "மேற்கு நாடுகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, மூன்றாம் உலக நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது எவ்விதத்தில் நியாயமானது?'' எனக் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தியாவால் இலங்கைக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரப்புரை வெற்றியடைந்தது. இதன் மூலம் இலத்தீன் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள் போன்றவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளை வழங்கின.

இதன் பின்னர், அந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்தது. விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியது.

இலங்கைப் படைகள் மேற்கொண்ட மனித உரிமை மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்போது கருத்தில் எடுக்கப்படவில்லை.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் இலங்கையை ஆதரித்து 29 வாக்குகளும் எதிர்த்து 12 வாக்குகளும் வழங்கப்பட்டன. 06 உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை.

பிராந்திய அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே அப்போது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படியல்ல.

கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு பயணம் செய்திருந்தார். பெருந்தொகையான நிதியை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதற்கான உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குகின்ற, இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார் எனவும் அறிவித்தார். இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், கிருஷ்ணா இலங்கைக்கான தனது "வெற்றிகரமான பயணத்தை'' முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி ஒரு நாள் ஆவதற்குள் 600 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதலை மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 200 படகுகள் வரை சேதமடைந்தன. தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்களைக் கொண்டு சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. இதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை.

இலங்கை என்ற மிகச் சிறிய நாடானது, வல்லரசான இந்தியாவை எதிர்த்து நிற்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை இந்திய அரசு கவனத்தில் எடுக்காததாலேயே, தற்போது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கிருஷ்ணாவிடம் மஹிந்த ராஜபக்ஷவால் எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் "இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பரிந்துரையானது வெளிநாட்டு சக்திகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. அது இலங்கையின் நாடாளுமன்றில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்'' எனவும் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது இந்தியாவை வெளிப்படையாக எதிர்க்கின்ற செயல்.

எனவே இலங்கை தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மீளாய்வு செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டது.

இந்த மாதத்தின் இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளுமா? பந்து இப்போது புதுடில்லியின் அரங்கிலேயே உள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?view=essay_more&id=2878825323525963

பந்தை இலாவகமாக கொண்டு சென்று இலக்கை அடைவது (கோல் போஸ்ட்க்குள் போடுவது) இராசதந்திரம்.

பந்தை போடுவதற்காக இலக்கை மாற்றிக்கொண்டே ( கோல் போஸ்டையே மாற்றிக்கொண்டு இருப்பது )

இருப்பது இந்திய தந்திரம்.

Edited by akootha

இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் தமிழின அழிப்பை தொடர்ந்து மேற்கொண்டுவரும் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தம்மைத் தாமே அழித்துக்கொள்ள ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு அயோக்கியத்தனத்தை மறைக்க தொடர்ந்து அயோக்கியத்தனங்களை செய்துவரும் இந்திய அரச பயங்கரவாதிகளை பாதிக்கப்பட்ட, தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தமிழர் மட்டுமல்ல உலகமே சேர்ந்து அகற்றும் சூழ்நிலை ஏற்படுவது, அந்த இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பந்தை இலாவகமாக கொண்டு சென்று இலக்கை அடைவது (கோல் போஸ்ட்க்குள் போடுவது) இராசதந்திரம்.

பந்தை போடுவதற்காக இலக்கை மாற்றிக்கொண்டே ( கோல் போஸ்டையே மாற்றிக்கொண்டு இருப்பது )

இருப்பது இந்திய தந்திரம்.

கோல் போஸ் - சோனியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பந்தை வைத்து என்ன செய்வினம்? விளையாட்டுக்கும் இந்தியாவுக்கும் வெகு தூரம். 

வரும் ஒலிம்பிக்ஸில் ஐந்து மெடல்  எடுப்பினமே?

வல்லரசு என்று பஞ்ச் டியலாக் பேச தான் லாயக்கு. 

சிறிலங்கா தொடர்பான பந்து முன்பு எப்போதுமே இந்தியாவிடந்தான் இருந்தது. அதைத் தட்டிவிட சீனத்தின் உதவியோடு சிறிலங்கா எடுக்கும் முயற்சிகள் ஓரளவு பலித்தும் விட்டன. மீண்டும் பந்தைத் தனதாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழர்களின் உரிமைப் பிரச்சனைதான் இங்கு ஊசலாடுகிறது.

என்னதான் இருந்தாலும் தற்போதய நிலையிலும் இச் சந்தர்ப்பம் இலங்கைக்குச் சாதகமாக மாற்றப்பட்டாலும் தொடர்ந்தும் நிலை சிறிலங்காவிற்கு இழுபறியாகத்தான் இருக்கப்போகிறது.

ஈழத்தமிழரின் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியாதான் என்பது இலங்கைக்குத் தெரியும். உலக நாடுகள் இப்பிரச்சனையை மனிதாபிமானத்தோடு தீர்க்க முற்படின் அவை இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அல்லது சீன ஆதிக்கம் இலங்கையில் இந்தியாவை பயங்கொள்ளச் செய்யுமளவிற்கு நிலைப்பட வேண்டும்.

இவைகள் நடந்தால்தான் தமிழர்களுக்குத் தீர்வுண்டு.

சிறிலங்கா தொடர்பான பந்து முன்பு எப்போதுமே இந்தியாவிடந்தான் இருந்தது. அதைத் தட்டிவிட சீனத்தின் உதவியோடு சிறிலங்கா எடுக்கும் முயற்சிகள் ஓரளவு பலித்தும் விட்டன. மீண்டும் பந்தைத் தனதாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழர்களின் உரிமைப் பிரச்சனைதான் இங்கு ஊசலாடுகிறது.

என்னதான் இருந்தாலும் தற்போதய நிலையிலும் இச் சந்தர்ப்பம் இலங்கைக்குச் சாதகமாக மாற்றப்பட்டாலும் தொடர்ந்தும் நிலை சிறிலங்காவிற்கு இழுபறியாகத்தான் இருக்கப்போகிறது.

ஈழத்தமிழரின் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியாதான் என்பது இலங்கைக்குத் தெரியும். உலக நாடுகள் இப்பிரச்சனையை மனிதாபிமானத்தோடு தீர்க்க முற்படின் அவை இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அல்லது சீன ஆதிக்கம் இலங்கையில் இந்தியாவை பயங்கொள்ளச் செய்யுமளவிற்கு நிலைப்பட வேண்டும்.

இவைகள் நடந்தால்தான் தமிழர்களுக்குத் தீர்வுண்டு.

நீண்டகாலமாக இந்தியாவின் கைகளே பலமாக இருந்தன, ஆனால், சீனாவின் வருகையால், அமெரிக்கா தலையிடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துள்ளது

கோல் போஸ் - சோனியா?

கோல் போஸ்ட் - இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் ஒரு நட்பு நாடாக வைத்திருப்பது.

அந்த இலக்கை இப்பொழுது மாற்றி ஒரு வடக்கையும் கிழக்கையும் மட்டுமே பொருளாதார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இலக்காக மாற்றியுள்ளது இந்தியா.

அந்த இலக்கும், கோல் போஸ்ட், மாறலாம், இந்தியாவின் இராசதந்திரம் மீண்டும் தோற்கும் பொழுது.

Edited by akootha

இந்தியாவின் ராசா தந்திரம் எங்கே வென்றது?

அவர்களுடைய எந்தவொரு ராசா தந்திரமும் வென்றதாக பெரிய சரித்திரமில்லை.

மாறாக இந்தியாவின் சனத்தொகையின் வளர்ச்சியாலும் அதனுடனான நுகர்ப்பு பொருளாதாரத்தின் தோற்றமும்,

பொருளாதாரப் போட்டியால் மூளைசாலிகளின் வெளியேற்றமும் தான் இந்தியாவை இன்னும் ராசா தந்திர கோதாவில் இன்னும் நிக்க வைத்திருக்கின்றது.

இந்தியாவின் அரசியல் ராசா தந்திரம் இலங்கையின் தந்திரங்களோடு ஒப்பிடும் போறது உங்களுக்கே தெரியும் வித்தியாசம்.

இலங்கையால் இந்தியாவை மிரட்ட முடியுமென்றால் இது யாருடைய ராசா தந்திர தோல்வி?

இந்தியாவை அடிக்கும்படி கூறித் தமிழர்கள் 30 வருடங்களுக்கு முன் பந்தை வீசினார்கள். பணத்திற்கும், பரத்தையற்குமாக வழமையாகத் தோற்கும் மாச் போலவே மட்டையை நிலத்தில் போட்டுவிட்டு குமரிகளுக்கு வேடிக்கை காட்ட ஐஸ் பழம் வாங்கி உமிழ்ந்து காட்டினார்கள் இந்திய வீரர்கள். சீனா தனக்குச் சந்தர்ப்பம் என்று நினத்துக்கொண்டு என்ன விளையாட்டு எனபதையே கவனியாமல், ஓடிவந்து பந்தை உதைத்தது. ஆர்வம் கடந்த சீனாவின் உதைப்பால் பந்து மேற்குலகத்தின் வோலிபோல் "கோட்"க்குள் விழுத்து விட்டது. ஓடுமீன் ஒடி உறுமீன் வரும் வரையும் வாடி இருந்த கொக்குபோல தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா இப்போது "intercepted the pass". இனி அமெரிக்காவோடு இலங்கை அமெரிக்கன் ஃபுட்போல் விளையாடியே ஆகவேணும். இந்த விளையாட்டில் இந்திய சீனா இன்னமும் சரியாகப் பரீட்சையப்படவில்லை. இது அமெரிக்கா மட்டும் ஆடும் சுப்பர்போல். இந்தியா, அமெரிக்கா வெல்வதற்க்காக விசில் அடிக்கலாம் அல்லது இலங்கை வெல்லவும் விசில் அடிக்கலாம். அது இந்தியாவின் விருப்பம். ஆனால் அந்த விசிலடி எந்தக்கரை வெல்லும் என்பதைத்தீர்மானிக்காது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வளவுக்குள்ள, எங்கட பந்து போனாத் திரும்ப அது பந்தாக வராது! இரண்டு பாதியாகத் தான் திரும்பி வருவது வழக்கம்! :D

இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவில் ஒரு நிரந்தர உறுப்பினராக வர நீண்ட நாள் ஆசை. ஆனால், இப்படியான அரசுகளை ஆதரித்தால் அது உருசியா, சீனா போன்றே மேற்குலகால் பார்க்கப்படும், அந்த ஆசையும் கனவாகவே போய்விடும்.

இந்தியாவும் அதன் நேசசக்திகளும் எப்படிப்பட்ட முடிவை எடுக்கப்போகின்றன என்பதை உலகம் எதிர்பார்க்கின்றது. இதில் பெரிய ராஜதந்திரம் எதுவுமில்லை. தப்பியோடுவது கூட சுலபமான காரியமில்லை.

ஒன்றேயொன்று நடக்கலாம். சிறிலங்காவை பணிய வைப்பது போன்ற ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி தற்போதைக்கு ஒரு மீட்பைத் தேடிக்கொள்ளலாம். அதுவும் எவ்வளவு காலத்திற்குப் பயனளிக்கும்?

இந்தியா பிரச்சனையை பின் போடுவதால் அது போய்விடும் என எண்ணுகிறது.

சிங்களம் அதை கணித்து இந்தியாவை தன் மீது செலுத்தக்கூடிய அழுத்தத்தை சீனா ஊடாக குறைத்து வருகின்றது.

இறுதியில் இந்தியா எல்லாவற்றையும் இழக்கப்போகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

பந்து, இந்தியாவிடம் இருந்தாலும்.....

பொந்து, சோனியாவிடம் தான் இருக்கின்றது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol::rolleyes::unsure::(

எங்கேயோ போய்விட்டீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் தமிழின அழிப்பை தொடர்ந்து மேற்கொண்டுவரும் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தம்மைத் தாமே அழித்துக்கொள்ள ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு அயோக்கியத்தனத்தை மறைக்க தொடர்ந்து அயோக்கியத்தனங்களை செய்துவரும் இந்திய அரச பயங்கரவாதிகளை பாதிக்கப்பட்ட, தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தமிழர் மட்டுமல்ல உலகமே சேர்ந்து அகற்றும் சூழ்நிலை ஏற்படுவது, அந்த இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்தியா அழிக்கப்பட வேண்டிய நாடு. அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. காட்டுமிராண்டிகள் வாழும் உலகின் மிகவும் கேவலமான நாடு இந்தியா. அதனால் அதனைச் சுற்றியுள்ள நாடுகளும், மக்கள் கூட்டங்களும் அடைந்துவரும் அழிவுகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஆகவே ஒன்றில் முற்றாக அது அழிக்கப்பட வேண்டும் அல்லது நூறு துண்டுகளாக அது உடைந்து சிதற வேண்டும்.

பந்து, இந்தியாவிடம் இருந்தாலும்.....

பொந்து, சோனியாவிடம் தான் இருக்கின்றது. :icon_mrgreen:

இது கருத்து........!!!!!!!

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

பந்து, இந்தியாவிடம் இருந்தாலும்.....

பொந்து, சோனியாவிடம் தான் இருக்கின்றது. :icon_mrgreen:

பாத்துப்பா, உள்ள உழுந்துடபோகுது !!!!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பாத்துப்பா, உள்ள உழுந்துடபோகுது !!!!! :icon_mrgreen:

உள்ளே... போகாமல், பார்பதில்...

மன்மோகன் சிங், கிங். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே... போகாமல், பார்பதில்...

மன்மோகன் சிங், கிங். :lol:

நன்னாச் சொன்னேல் போங்கோ !!!!! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.