Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சியுடன் சனல் 4 இன் புதிய வீடியோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chanel42.jpg

இலங்கையின் கொலைக்களம் – 02 ஐ மார்ச் 14ஆம் திகதி வெளியிடஉள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற இப்புதிய ஆவணப் படம் எதிர்வரும் 14.03.2012 அன்று சனல்4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படுகின்ற நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்படத்தில் விசேடமாக ஆராயப்பட்டு உள்ளது. இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? என்றும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது.

*யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் நடத்தப்பட்ட பயங்கரமான எறிகணைத் தாக்குதல்கள்

*பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கு உணவு, மருந்து ஆகியன மறுக்கப்பட்டதுடன் யுத்த வலயத்துக்கு மனிதாபிமான உதவிகள் வர விடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள்

*மீட்பு நடவடிக்கையின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணம் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்

*12 வயது சிறுவன் ஒருவன் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

ஆகியனவே இந்த ஆவணப் படத்தில் முக்கியமாக காட்டப்பட்டு இருக்கின்ற நான்கு வகையான போர்க் குற்றங்கள்.

இவ்வாவணப்படத்தின் மேலதிக விபரங்களை சனல் 4 நிறுவனத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்:

http://www.channel4....imes-unpunished

http://www.eeladhesa...chten&Itemid=50

சனல் நாலு, இன்றர்சிட்டி பிரஸ் போன்றன பெரிய சேவைகளை செய்கின்றன.

அவர்கள் வாழைப்பழைத்தை உரித்து தருகிறார்கள், நாம் தான் சர்வதேசத்தின் வாயுக்குள் கொண்டு செல்லவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டங்கள் மூலம் உலகுக்கு உணர்த்தியதை விட சனல் நாலு, இன்றர்சிட்டி பிரஸ் போன்றன நிறுவனங்கள் உலகுக்கு உணர்தியத்தில் அதிக பங்குண்டு அவர்களுக்கு தமிழர்கள் ஆகிய நாம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

எமது போராட்டங்கள் மூலம் உலகுக்கு உணர்த்தியதை விட சனல் நாலு, இன்றர்சிட்டி பிரஸ் போன்றன நிறுவனங்கள் உலகுக்கு உணர்தியத்தில் அதிக பங்குண்டு அவர்களுக்கு தமிழர்கள் ஆகிய நாம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

எமது வலுவான போராட்டத்தின் மூலம் பெரியளவு செய்திகளை வெளி உலகுக்கு தெரிவிக்க முடியாமைக்கு முக்கிய காரணம், தாயகத்திலும், புலத்திலும் தரம் வாய்ந்த ஊடகவியலாளர்களால் நடாத்தப்படும் ஒரு சில தரமான ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் (சினிமா, பொழுதுபோக்கற்ற), நம் வசம் இல்லாமையே. இன்றும் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்படவில்லை.

தமிழினப் படுகொலைகளை நீண்டகாலமாக செய்துவரும் சிங்களப் பயங்கரவாதிகள் தங்களை ஜனநாயகவாதிகளாகவும், அடிப்படை மனித உரிமைக்காக போராடும் போராளிகளை பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்க பெரிதும் உதவியது அவர்களின் ஆங்கில மொழி மூலமான பொய்ப் பிரச்சாரமே. இதில் கதிர்காமர், மற்றும் பீரிஸ், சமரசிங்க, நிமால், போன்ற சிங்களப் பயங்கரவாதிகளின் ஆங்கில அறிவு பெரும் பங்கு வகித்துள்ளது.

அதுபோல் சிங்கள பேரினவாதிகளின் பிடியில் இருக்கும் தமிழின விரோத செய்திகளை மட்டும் பிரசுரிக்கும்

The Island, Daily news, Daily Mirror, Sunday times, Sunday Leader, Nation போன்ற ஆங்கில பத்திரிகைகளுடன், சிங்களப் பயங்கரவாதிகளால் நடாத்தப்படும் ஆங்கில online செய்தி ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்று சனல் 4 போன்றவை எடுபடுவதற்கும் ஆங்கில மொழியும், தரமான ஊடகவியலாளர்களுமே காரணம்.

தமிழர் தரப்பு இன்றும் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை.

Edited by ஆராவமுதன்

சனல் நாலு, இன்றர்சிட்டி பிரஸ் போன்றன பெரிய சேவைகளை செய்கின்றன.

இவர்கள் முன்வராவிட்டால் இறுதி யுத்தத்தில் என்ன நடந்ததென்ற உண்மை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும்.

எமது போராட்டங்கள் மூலம் உலகுக்கு உணர்த்தியதை விட சனல் நாலு, இன்றர்சிட்டி பிரஸ் போன்றன நிறுவனங்கள் உலகுக்கு உணர்தியத்தில் அதிக பங்குண்டு அவர்களுக்கு தமிழர்கள் ஆகிய நாம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

நிச்சயமாக.

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை அமெரிக்கா Aurora பல்கலைக்கழகத்தில் வரும் 20ம் திகதி சனல் 4 தொலைக்காட்சி காணொளி காண்பிக்கப்படவுள்ளது.

When : Tuesday March 20

Time: 6:30-9:30pm

Where: 347 S. Gladstone Ave.

Aurora, Illinois

60506-4892

-Screening takes place in Crimi Auditorium located in the Institute Collaboration and Education Building

-Candle Ceremony will be at the Alumni Patio (we will be walking together after the Q & A)

Schedule

6:30-7:30pm Screening of the documentary

*Must be 16 and older to view

7:30-8:30pm Jim McDonald will talk about the current issues in Sri Lanka and will do a Question and Answers.

8:30-9 or 9:30pm Candle ceremony for those who have died and those who are still struggling in the world (candles are provided)

We will also ask for donations and the proceeds will go to Amnesty. Also this screening is a apart of Human Rights Week and if you can

wear purple,because this day resembles the day of peace.

தாயகத்திலும், புலத்திலும் தரம் வாய்ந்த ஊடகவியலாளர்களால் நடாத்தப்படும் ஒரு சில தரமான ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் (சினிமா, பொழுதுபோக்கற்ற), நம் வசம் இல்லாமையே.

இன்று சனல் 4 போன்றவை எடுபடுவதற்கும் ஆங்கில மொழியும், தரமான ஊடகவியலாளர்களுமே காரணம்.

புலம்பெயர் தமிழர்கள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் தாம் இருக்கும் நாட்டின் முக்கிய பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களுடன் நட்புறவுடன் தொடர்புகளை பேண முயற்சி செய்ய வேண்டும். இவர்களும் நம்பகத்தன்மையான தகவல்களை வழங்க வேண்டும். அவற்றை அந்தந்த நாட்டு முக்கிய பத்திரிகைகள் பிரசுரிக்கும் போது அதிகளவிலான மக்கள் பார்க்கும் படி அமையும்.

இன்று சனல் 4 போன்றவை எடுபடுவதற்கும் ஆங்கில மொழியும், தரமான ஊடகவியலாளர்களுமே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதையும் தாண்டி "சனல் 4" ஆனது யுத்தத்தை மேற்கொண்ட இருதரப்பினருடைய தொலைகாட்சி/ஊடகமாக அல்லாமல் வேறு நாட்டின் தொலைகாட்சி/ஊடகமாக இருப்பதுவும், அது பிரித்தானியா போன்ற முக்கிய நட்டினதுமாக இருப்பதுவும், ஏற்கனவே புகழ்பெற்ற தொலைகாட்சி/ஊடகமாக இருப்பதும் பிரதான காரணமாக அமைகின்றன.

இதேவேளை அமெரிக்கா Aurora பல்கலைக்கழகத்தில் வரும் 20ம் திகதி சனல் 4 தொலைக்காட்சி காணொளி காண்பிக்கப்படவுள்ளது.

நல்ல விடயம். பகிர்வுக்கு நன்றி.

இன்று சனல் 4 போன்றவை எடுபடுவதற்கும் ஆங்கில மொழியும், தரமான ஊடகவியலாளர்களுமே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதையும் தாண்டி "சனல் 4" ஆனது யுத்தத்தை மேற்கொண்ட இருதரப்பினருடைய தொலைகாட்சி/ஊடகமாக அல்லாமல் வேறு நாட்டின் தொலைகாட்சி/ஊடகமாக இருப்பதுவும், அது பிரித்தானியா போன்ற முக்கிய நட்டினதுமாக இருப்பதுவும், ஏற்கனவே புகழ்பெற்ற தொலைகாட்சி/ஊடகமாக இருப்பதும் பிரதான காரணமாக அமைகின்றன.

இதில் உண்மை உண்டு. மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்தத் தாக்கம் ஒரு குறுகிய காலத்தில் (ஆகக் கூடியது 3 வருடம்) முடிந்துவிடும். இன்னோர் நாட்டில் வேறு பிரச்சினைகள் ஏற்பட்டால் சனல் 4 தமிழரை மறந்துவிடும் (அவசியமும் இல்லை, எதிபார்க்கவும் முடியாது).

ஆனால் சிங்களப் பயங்கரவாதிகள் நீண்ட கால பாதிப்புக்களை தமது ஆங்கில ஊடகங்கள் மூலமே ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணராவிட்டால் கஷ்டம். இவை நடுநிலை ஊடகங்கள் இல்லை.

இன்று கொழும்பிலுள்ள அனைத்துத் தூதரக நூலகங்களிலும் இந்தப் பத்திரிகைகளே (வீரகேசரி உட்பட) ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆனால் சில காலத்தின் பின்னர் வரும் ராஜதந்திரி, களநிலை ஆய்வாளர் ஒருவர், பழைய விபரங்களை தானே விளங்கிக் கொள்ளும் ஆங்கிலப் பத்திரிகைகள் மூலமே சேகரிக்கப் போகிறார் (வீர்கேசரியை புரட்டப் போவதில்லை).

அப்போ வன்னியில் சிறுவர்கள். சிறுமியரை பலாத்காரமாக பிடித்து படையில் சேர்த்து சண்டைக்கு அனுப்பியது. இறுதியுத்தத்தில் இராணுவ கட்டுபாடு நோக்கி வந்த மக்கள் மீது கண்மூடிதனமாக கலிபர் தாக்குதல்கள் நடாத்தியது. மக்கள் சரணடயும் முன்னரங்க நிலையில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தது எல்லாம் இதில் வருமோ அல்லது அதுக்கு இன்னொரு தொலைக்காட்சிவருமோ?

ஆனால் சிங்களப் பயங்கரவாதிகள் நீண்ட கால பாதிப்புக்களை தமது ஆங்கில ஊடகங்கள் மூலமே ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணராவிட்டால் கஷ்டம். இவை நடுநிலை ஊடகங்கள் இல்லை.

நான் channel 4 பற்றி கூறினேனே தவிர தாயகத்தில் ஆங்கில ஊடகம் தேவை என்று நீங்கள் கூறியதை மறுக்கவில்லை.

ஆனால் இந்தத் தாக்கம் ஒரு குறுகிய காலத்தில் (ஆகக் கூடியது 3 வருடம்) முடிந்துவிடும். இன்னோர் நாட்டில் வேறு பிரச்சினைகள் ஏற்பட்டால் சனல் 4 தமிழரை மறந்துவிடும் (அவசியமும் இல்லை, எதிபார்க்கவும் முடியாது).

அதனால் தான் இவ்வாறான ஊடகங்கள் முக்கியம் பெறுகின்றன. உலகில் எங்கு பிரச்சினை நடக்குதோ அவற்றை கூறும் இது போன்ற ஊடகங்களால் எமது பிரச்சினை வெளிவரும் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே தான் புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள் முக்கிய பத்திரிகை,தொலைக்காட்சிகளின் ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளை பேண வேண்டுமென்று கூறினேன்.

channel 4 வை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் வெவ்வேறு ஊடகங்களுடன் தொடர்புகளை பேண வேண்டும். எமக்கு பயன் தரும் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் எமக்கென்றொரு ஊடகம் தேவைதான். அதையும் சர்வதேச மயமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் "channel 4" ஆல் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தை போல் எமது பத்திரிகைகளால் ஏற்படுத்த முடியாது போய்விடும்.

இன்று கொழும்பிலுள்ள அனைத்துத் தூதரக நூலகங்களிலும் இந்தப் பத்திரிகைகளே (வீரகேசரி உட்பட) ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆனால் சில காலத்தின் பின்னர் வரும் ராஜதந்திரி, களநிலை ஆய்வாளர் ஒருவர், பழைய விபரங்களை தானே விளங்கிக் கொள்ளும் ஆங்கிலப் பத்திரிகைகள் மூலமே சேகரிக்கப் போகிறார் (வீர்கேசரியை புரட்டப் போவதில்லை).

நாமும் tamilnet இணைய தளத்தினை காண்பிக்கலாம். ஆனாலும் அதை புலிகளின் ஊடகமாக தான் கருதுவார்கள். பொதுமக்கள் சார்பில் எமக்கு ஆங்கில பத்திரிகை, தொலைகாட்சி தேவை. எனினும் எமது நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக செய்தி வழங்கும் பத்திரிகை, தொலைகாட்சி தாக்கபட்டுக்கொண்டிருக்கும். அதையும் மாற்ற முடியாது.

அப்போ வன்னியில் சிறுவர்கள். சிறுமியரை பலாத்காரமாக பிடித்து படையில் சேர்த்து சண்டைக்கு அனுப்பியது. இறுதியுத்தத்தில் இராணுவ கட்டுபாடு நோக்கி வந்த மக்கள் மீது கண்மூடிதனமாக கலிபர் தாக்குதல்கள் நடாத்தியது. மக்கள் சரணடயும் முன்னரங்க நிலையில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தது எல்லாம் இதில் வருமோ அல்லது அதுக்கு இன்னொரு தொலைக்காட்சிவருமோ?

உயிருடன் சரணைடைந்த/சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகள் மற்றும் தளபதிகளை, கருணாவை , கே.பி. யரை சுயாதீனமாக சனல் நாலிடம் பேட்டி காண ஒருவழி எடுத்துக்கொடுங்கள், உங்கள் கேள்விக்கு விடைகள் கிடைக்கும்.

நீங்கள் channel 4 இன் srilankan killing fields இன்னும் பார்க்காவிட்டால் பார்த்துவிட்டு வந்து கூறுங்கள். நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

Edited by காதல்

உயிருடன் சரணைடைந்த/சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகள் மற்றும் தளபதிகளை, கருணாவை , கே.பி. யரை சுயாதீனமாக சனல் நாலிடம் பேட்டி காண ஒருவழி எடுத்துக்கொடுங்கள், உங்கள் கேள்விக்கு விடைகள் கிடைக்கும்.

:unsure:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வன்னியில் சிறுவர்கள். சிறுமியரை பலாத்காரமாக பிடித்து படையில் சேர்த்து சண்டைக்கு அனுப்பியது. இறுதியுத்தத்தில் இராணுவ கட்டுபாடு நோக்கி வந்த மக்கள் மீது கண்மூடிதனமாக கலிபர் தாக்குதல்கள் நடாத்தியது. மக்கள் சரணடயும் முன்னரங்க நிலையில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தது எல்லாம் இதில் வருமோ அல்லது அதுக்கு இன்னொரு தொலைக்காட்சிவருமோ?

அதுதான் பயங்கரவாதிகள் என்று சொல்லி அவர்களை அழித்து விட்டார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி உந்தக் கேள்வியை சனல் நான்கிடம் கேட்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வன்னியில் சிறுவர்கள். சிறுமியரை பலாத்காரமாக பிடித்து படையில் சேர்த்து சண்டைக்கு அனுப்பியது. இறுதியுத்தத்தில் இராணுவ கட்டுபாடு நோக்கி வந்த மக்கள் மீது கண்மூடிதனமாக கலிபர் தாக்குதல்கள் நடாத்தியது. மக்கள் சரணடயும் முன்னரங்க நிலையில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தது எல்லாம் இதில் வருமோ அல்லது அதுக்கு இன்னொரு தொலைக்காட்சிவருமோ?

இல்லையில்லை, நீங்கள் பிழையாய்ச் சொல்லுறியள். நீங்கள் நேர முன்னால் நிண்டு பாக்கேக்க அவையள் 152 மி.மீ பீரங்கியாலையும், வானத்தில இருந்து F 16 இல இருந்துமெல்லோ தாக்குதல் நடத்தினவை?? நீங்கள் வெறும் கலிபர் எண்டு சொல்லுறியளே??? நீங்களே உப்பிடிச் சொன்னால், மிச்சச் சனமெல்லாம் செத்தது உங்கட அரசாங்கத்தின்ர இராணுவம் நடத்தின கட்டப்போல்த் தாக்குதலில எண்டு நீங்களே சொன்னமாதிரியெல்லோ வரப்போகுது??

உங்கட அரசாங்கத்தின்ர பெயரை உவங்கள் வெளியில பொய்சொல்லி நாரடிக்கிறாங்களே எண்டு நீங்கள் கவலைப்படுறது எங்களுக்கும் விளங்குது. என்ன செய்ய, சனல் 4 க்குப் போட்டியா உங்கட ஆக்கள் எடுத்துவிட்ட படமும் சரியா ஒடேல்லைக் கண்டியளோ??

இப்பிடிச் செய்துபாருங்கோ, சனல் 4 க்குப் போட்டியா "சனல் லங்கா புவத்" எண்டு எடுத்து விடுங்கோ, சனமும் நம்பிப் பாக்கும். நான் வெளிநாட்டுச் சனத்தைச் சொல்லேல்ல, உங்கட ஆக்களைத்தான் சொல்லுறன். :blink::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வன்னியில் சிறுவர்கள். சிறுமியரை பலாத்காரமாக பிடித்து படையில் சேர்த்து சண்டைக்கு அனுப்பியது. இறுதியுத்தத்தில் இராணுவ கட்டுபாடு நோக்கி வந்த மக்கள் மீது கண்மூடிதனமாக கலிபர் தாக்குதல்கள் நடாத்தியது. மக்கள் சரணடயும் முன்னரங்க நிலையில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தது எல்லாம் இதில் வருமோ அல்லது அதுக்கு இன்னொரு தொலைக்காட்சிவருமோ?

ஐயா! விடிவெள்ளி!!!புலிகளால்(சிறிலங்காவைப் பொறுத்த வரையில்) சிறுவர்கள் கடத்தப்பட்டு பட்டு போருக்கு அனுப்பப்பட்டார்கள் என்று சொல்லும் ஒரு பொறுப்புள்ள அரசு சிறுவர்களை எப்படி நடத்தியிருக்கிறது என்பதை விளக்கும்படந்தான் காண்பிக்கப்படப்போகிறது.

:):lol::D

புலவா! you are great........ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வன்னியில் சிறுவர்கள். சிறுமியரை பலாத்காரமாக பிடித்து படையில் சேர்த்து சண்டைக்கு அனுப்பியது. இறுதியுத்தத்தில் இராணுவ கட்டுபாடு நோக்கி வந்த மக்கள் மீது கண்மூடிதனமாக கலிபர் தாக்குதல்கள் நடாத்தியது. மக்கள் சரணடயும் முன்னரங்க நிலையில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தது எல்லாம் இதில் வருமோ அல்லது அதுக்கு இன்னொரு தொலைக்காட்சிவருமோ?

புலிகளின் மேல் குற்றம் சுமத்தும் உங்களைப்போன்றோர் ஏன் சிங்களஅரசு செய்யும் குற்றங்களை சுட்டிக்காட்டுவதுமில்லை, கண்டிப்பதுமில்லை ..... ?

உங்களைப்போன்றோருக்கு பிரச்சனை பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது உங்களின் பிரச்சனை அல்ல, உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் புலிகள் மேலுள்ள வெறுப்பால் தமிழ் மக்களையும் சேர்த்து பழி வாங்குகின்றீர்கள் இது எந்தவகையில் நியாயமாகும் ?

சிங்களவன் தமிழர்களை அழிக்கும் விடயத்தில் மாறுபட்டு நின்றது கிடையாது தமிழர்கள் நாம் ஏன் அப்படி ....... ? சற்று சிந்தித்துபாருங்கள்.

உறவுகளை சென் பீட்டசிலும் , நாகர் கோவிலிலும் ,செஞ்சோலையிலும் இழந்திருந்தால் தெரியும் அவலம் .

என்ன செய்வது ???

புல்லுரிவிகள் யாழ் இணையதில்லும் உடுருவல்,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

அவர்

தனது விமானக்கம்பனிக்கு ஆள் சேர்ப்பதற்கு விளம்பரம செய்ய வந்துள்ளார்

எல்லாம் காசு பார்க்கும் சேவை.

ஆனால் நேரம்; தான் நல்லாயில்லை.

ஏனெனில் இது தமிழரால் கொண்டுவரப்பட்டதல்ல என்பதால் கோபத்தை எங்கு காட்டுவது என்ற குழப்பத்தால் வரும் தூற்றுதல் இது...

விட்டுக்கொடுப்பும் இல்லை சகிப்பு தன்மையும் இல்லை, இராணுவபலமும் கிடையாது அரசியல் சாணக்கியமும் அறவே கிடையாது. பிடிவாதத்தின் பலாபலன் இனறு தமிழினத்தின் இந்த இழி நிலைக்கு காரணமாகிவிட்டது. யுத்தத்தின் கோரத்தால் குடும்பதலைவனை இழந்த பெண்கள் இன்று தன் உடலை விற்று தன் குடும்பத்தின் பசியை தீர்க்க முயற்சிப்பது அடுக்குமாடியில் அடங்கி இருந்து அகதிக்காசும எடுத்து கள்ளவேலையும் செய்து ஓகோ என்று பிளைப்பு நடத்தும் உங்களுக்கு எங்கு அந்த வலியின் கொடுமை எங்கு தெரியப்போகின்றது ??

. பிடிவாதத்தின் பலாபலன் இனறு தமிழினத்தின் இந்த இழி நிலைக்கு காரணமாகிவிட்டது. யுத்தத்தின் கோரத்தால் குடும்பதலைவனை இழந்த பெண்கள் இன்று தன் உடலை விற்று தன் குடும்பத்தின் பசியை தீர்க்க முயற்சிப்பது அடுக்குமாடியில் அடங்கி இருந்து அகதிக்காசும எடுத்து கள்ளவேலையும் செய்து ஓகோ என்று பிளைப்பு நடத்தும் உங்களுக்கு எங்கு அந்த வலியின் கொடுமை எங்கு தெரியப்போகின்றது ??

... விட்டுக்கொடுப்பும் இல்லை சகிப்பு தன்மையும் இல்லை, இராணுவபலமும் கிடையாது அரசியல் சாணக்கியமும் அறவே கிடையாது ... ஆனால் காட்டிக்கொடுப்பும், கூட்டிக்கொடும்பும் இருக்கவே இருக்கிறது!! :o

... அதுதானே பார்த்தேன் எங்கே ... நவீன தேசிய தலைவரின் வாரிசுகளை ... காணவில்லை என்று???!!!! ... அசைமென்ட் கொடுபட்டிருக்கும், பட்டுவாடாவும் நடத்திருக்கும் ... இதோ வந்து விட்டார்கள்!!!! :o

... உந்த பிள்ளை பிடித்ததை இங்கு நியாயப்படுத்த வரவில்லை! ஆனால் பிடித்த கள்ளக்கூட்டம் முழுக்க இன்று சிங்களவனோடு சேர்ந்து நிற்குதுகள்! அதுகளோடு கடந்த காலங்களில் புலத்தில் புலனாய்வுத்துறை என்று அயலவர்கள், நிண்டதுகள், நடந்ததுகள், மருத்துவர்களுக்கு நிதி என்று சுருட்டியதுகளும் சேர்ந்திட்டுதுகள் ... கணக்கு காட்டுவதில் இருந்து தப்ப!! :o

உந்த புலி செய்த யுத்தக்குற்றங்களை ஆராய வெளிக்கிட்டால் ... இப்போ புலத்தில் கேபி என்று ... மே18 மட்டும் நாய் பிடிதான் மருந்து என்று முழங்கிய ... உலாவுகிறதுகளும், அங்கு சிங்களவனோடு சேர்ந்து நிற்கிறதுகளும் ... கேபி, கருணா, பிள்ளையான், பாப்பா, ... உட்பட ... விசாரிக்கட்டும்! ... ஆயிரம் யுத்தக்குற்றங்கள் விடிவெள்ளியாக வெளிவரும் :o

விட்டுக்கொடுப்பும் இல்லை சகிப்பு தன்மையும் இல்லை, இராணுவபலமும் கிடையாது அரசியல் சாணக்கியமும் அறவே கிடையாது. பிடிவாதத்தின் பலாபலன் இனறு தமிழினத்தின் இந்த இழி நிலைக்கு காரணமாகிவிட்டது. யுத்தத்தின் கோரத்தால் குடும்பதலைவனை இழந்த பெண்கள் இன்று தன் உடலை விற்று தன் குடும்பத்தின் பசியை தீர்க்க முயற்சிப்பது அடுக்குமாடியில் அடங்கி இருந்து அகதிக்காசும எடுத்து கள்ளவேலையும் செய்து ஓகோ என்று பிளைப்பு நடத்தும் உங்களுக்கு எங்கு அந்த வலியின் கொடுமை எங்கு தெரியப்போகின்றது ??

சரி உங்கள் பார்வையில் தாயக உறவுகள் எப்படி அரசியல் செய்யவேண்டும் என எண்ணுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.