Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் அறிவிப்பு

Featured Replies

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் அறிவிப்பு

sing.jpg

ஐ.நா. மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும். தமிழர்களின் அதிகாரப்பகிர்வு ‌குறித்தும் இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும். என அவர் அறிவித்தார்.

இவ்வாறு அவர் அறிவித்ததும் அவையில் இருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பிக் கோஷமிட்டனர்.

logonbanner-1.jpg

  • தொடங்கியவர்

ிறிலங்காவைக் கைவிட்டது இந்தியா - தீர்மானத்தை ஆதரிப்பதாக மன்மோகன்சிங் அறிவிப்பு [ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 08:13 GMT ] [ அ.எழிலரசன் ]

Manmohan_Singh.jpgசிறிலங்காவுக்கு எதிராக ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார். இதன்போதே அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

" சிறிலங்காத் தமிழர்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவலைகளையும் உணர்வுகளையும் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளும்.

சிறிலங்காவில் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

சிறிலங்காவில் நல்லிணக்கம் ஏற்பட்ட இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தமிழர்கள் சமஉரிமை, கெளரவம், நீதி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இந்தியா உதவும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

அதுபோல அதிகாரப்பகிர்வு விடயத்திலும் அர்த்தமுள்ள தீர்வை எட்ட வேண்டும் என்று சிறிலங்கா அரசை வலியுறுத்துகிறோம்.

இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புகளுடனும் பேச்சுக்களை நடத்தப்பட வேண்டும்.

அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுக்களை மீளவும் ஆரம்பிக்குமாறு இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவை வலியுறுத்தும்.

சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.com/view.php?20120319105815

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்காவிற்கு கொடுக்கும் ஆதரவு வெளிப்படையானதே. இந்தியாவின் உள்மனதில் என்ன பதும் ஓழிந்திருக்கின்றதோ தெரியவில்லை. இதையிட்டு யாரும் மகிழவடையத்தேவையில்லை. இந்தியாவின் வருங்காலச் செய்ற்பாடுகள் கவனிக்கப்படவேண்டியவை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் சமாளிக்கமுடியாமல் எடுத்துக்கொண்ட தீர்மானம் தான். இதையும் மிகவும் கடினமான நிலையில் தான் டெல்லி ஒத்துக்கொணடுள்ளது. சிங்களமும் இந்தியாவும் சேர்ந்து அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமாளிக்க ஏமாளி வித்தைகள் செய்து காலத்தைக்கடத்துவார்கள். அப்படிக்காலம் கடக்குமபோது எல்லாச்சூடும் தணிந்துவிடும். பின்னர் தங்கள் ஆட்டத்தில் இறங்கிவிடுவார்கள். தமிழர்கள் ஒற்றுமையாக மேற்குலகுடன் கைகோர்த்து பயணித்தால் இவர்களை இறுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா இராஜதந்திரத்தின் இயல்பு என்பது முண்டி விழுங்கிய பூசனிக்காயை அவன் வாயாலேயே வாந்தி எடுக்க வைப்பது என்பதே!

தன் ஊடக ஆழுமையால் ஈழத்தின் படுகொலை அவலத்தை தமிழ்நாடு அறியவிடாது தடுத்த இந்தியா இன்று உலக ஊடகத்தின் பலமான ஆழுமையால் செய்வதறியாது நிற்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் மெச்சத்தக்க விடையம் இல்லை.இந்தியா ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றியடையவே செய்யும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக, இந்தியாவும் இதில் தனது பங்களிப்பைச் செய்தது என்பதற்காக இந்த அரசியல் விளையாட்டு. மற்றும் நீண்ட நேரக் காத்திருப்புச் செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, தமிழர்களையும் தமிழர் அபிமானிகளையும் மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களையும் தங்கள் மீது கரிசனைவைத்திருக்கச் செய்யும் ஒரு தந்திரமே தவிர எதுவுமில்லை. மாறாக "தமிழர் விரோத தேசம் இந்தியா" இது விடையத்தில் எதிர்மையான முடிவெடுத்திருந்தால் உலகத் தமிழினம் மிகவும் சந்தோசப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் ஏற்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் வடக்கில் படு தோல்வி,தெற்கிலும் இதே நிலை தொடராது இருக்க (அனைத்து தமிழ் நாட்டு கட்சிகளின் பலமான எதிர்ப்பு), சீனா,சிறிலங்கா பக்கம் சார்ந்தும் தமக்கு ஆப்பு வைக்கும் சீன, சிறிலங்கா, ஏதோ ஒரு பக்கம் எடுக்க வேண்டும் ஆனால் வெல்லும் குதிரையில் பணம் கட்ட வேண்டும் என்ற பல காரணங்களால் இப்போது இந்தியா அடக்கி வாசிக்க எண்ணி இருக்கலாம்.ஆனால் இவர்களின் சுயமுகத்தை யார் அறியாவிட்டாலும் தமிழ் மக்கள் நன்கே அறிவார்கள்.தமிழில் ஒரு பழ மொழி உண்டு :நம்ப நட நம்பி நடவாதே" என்பது.

மீண்டும் எமது ஆய்வாளர்களின் வாயில் மண் .

போரை நடாத்தியதே இந்தியாதான் அது எப்படி இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்? அப்படி வாக்களித்தால் முழு உண்மைகளையும் சிறிலங்கா போட்டு கொடுத்துவிடும் என்று பக்கம் பக்கமாக வேழுத்து வாங்கினார்கள்.

இத்தாலி நாயே என்றவர்கள் இத்தாலி தாயே என்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

இந்தியா எல்லாம் தனக்கு எதிராக போவதால் தான் இந்நிலையை எடுத்துள்ளது என்பதை பாலகன் கூட சொல்லுவான்.மேலும் தான் வாக்களித்தும் தோல்வி எனும் நிலையை இந்தியா அல்ல எந்த நாடும் எடுக்க விரும்பாது:இந்தியா ஏதாவது ஒரு பக்கத்தை எடுக்க வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

ஆய்வுகளுக்கும் தீர்க்க தரிசனத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் எமது ஆய்வாளர்களின் வாயில் மண் .

போரை நடாத்தியதே இந்தியாதான் அது எப்படி இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்? அப்படி வாக்களித்தால் முழு உண்மைகளையும் சிறிலங்கா போட்டு கொடுத்துவிடும் என்று பக்கம் பக்கமாக வேழுத்து வாங்கினார்கள்.

இத்தாலி நாயே என்றவர்கள் இத்தாலி தாயே என்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

அறிவுக் கொழுந்து என்றால் இது அல்லவா?

அன்று ஐநா பாதுகாப்புச் சபையில் சிங்களத்தின் ஆபத்துக்கு தோள் கொடுத்தது மட்டும் அல்ல மகிந்தாவிற்கு பாராட்டு மாலையை அந்த சபையைக் கொண்டே வாங்கிக் கொடுத்த இந்தியா, அன்று அதற்கு தெரியாத உண்மையா இன்று சனல் 4 சொல்லி இருக்கும்! ஆக இந்தியாவால் உலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்ட உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்து விட்டது அது ஒரு காரணம். இரண்டு அதன் பாதிப்பால் தமிழ்நாட்டுக்குள் இருந்த வந்த எதிர்வினை.

விபச்சாரி என்று தனக்கு மட்டும் தெரிந்தவளை மணம் முடித்து ஊருக்கும் படம் காட்டித்திரிந்தவன் அவளை விபச்சாரி என்று ஊர் அறிந்தது அவளை கைவிடுதலைப் போன்றது இன்று இந்தியாவின் நிலையும். அனால் எங்கட மேதாவி அர்யுன் அவனை ஒழுக்கத்தின் மாணிக்கம் என்று பட்டம் கொடுக்க ஆசைப் படுகின்றார்! நாம் என்ன செய்ய முடியும் தன் இனத்தின் கஸ்ரம் தன் இனத்தவனுக்குத்தானே புரியும் என்றுதானே சொல்லலாம்!

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டுக்கை வைச்சாலும் இப்படி அபத்தமாக குலைப்பதை அது நிறுத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் மக்களுக்கு நன்மை தருமாக இருந்தால் ஆதரிப்போம்" என்று ஆங்கில மூல அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது. மேலும் "ஆதரிப்போம்" என்றில்லாமல் "ஆதரிக்கத் தலைப்படுவோம் (inclined to back)" என்றும் இருக்கிறது. அவசரப் பட்டு இதை ஒரு வாக்குறுதியாக நம்பிக் குதூகலிப்பதைத் தவிர்ப்போம். இறுதி நேரத்தில் முதலில் சொன்னது போல "இது ஒருமைப் பாட்டு நடவடிக்கைகளைப் பாதிக்கக் கூடும்" என்று கூறி வாக்களிக்காமல் இருந்து விடவும் கூடும். இந்தியாவின் வாக்கு மனித உரிமைச் சபையில் ஒரு எண்ணிக்கை மட்டும் தான். ஆனால் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் அதனால் சிங்களவன் இந்தியாவைப் பழி தீர்க்கிறேன் பேர் வழி என்று இன்னும் இந்தியாவின் பகைமையை வளர்த்துக் கொள்வான். அதற்கு மட்டுமே இந்த வாக்கு முக்கியம் என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு தமிழீழம் கிடைக்கு மட்டும் நாம் இரானிய கொங்கிரசை நம்ப மாட்டம். 

எழுபது வர்சமா எமாதுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசையோ இந்திய மத்திய அரசையோ நம்பமுடியாது என்பது எல்லோரும் அறிந்தது.

நான் பார்க்கும் ஒரேயோரு நன்மை தமிழகம் அதிலும் சிதம்பரம் உட்பட எமது பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வந்திருப்பதும் இந்தத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று ஒரே குரலில் பேசியிருப்பதையுமே படிக்கல்லாக பார்க்கின்றேன். மற்றும்படி இந்தியா மடடுமல்ல அமெரிக்காவும் தங்கத்தட்டில் வைத்து தமிழீழம் தரும் என்பதனை நம்புவதை விட தமிழகத்தில் நடக்கும் இந்த மாறுதல்கள் தான் மலை என எம்மைக்காக்கக்கூடியவை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாற்றம் ,இந்தியா எப்போதும் மதில்மேல் பூனைதான் . இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியை நம்ப ஏலாது . தமிழக கட்சிகள் , இயக்கம்கள் , அமைப்புகள் விழிப்பாக இருந்து இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் . நேற்றைய பொழுது மெரினாவில் மே 17 இயக்கம் நடத்திய பேரணியை பார்த்தபொழுது சந்தோசமாக இருந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல எமது மக்களின் எழுச்சி எமது உடன் பிறப்புகள் மூலம் அரங்கேற்ற படுகிறது . எப்போதும் சில விடயங்களை கொதி நிலையிலேயே வைத்திருந்தத பன்னாட்டு ஊடகம்களும் பாரட்டப்பட வேண்டும்.

இந்தப்பேரணியின் காணொலியை இணைத்தால் நாங்களும் பார்க்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பேரணியின் காணொலியை இணைத்தால் நாங்களும் பார்க்கலாமே.

என் மச்சான் சென்று இருந்தான்.. நான் ஒன்லி மதிமுக பேரணி ஆர்பாட்டம்தான்..

அறிவுக் கொழுந்து என்றால் இது அல்லவா?

அன்று ஐநா பாதுகாப்புச் சபையில் சிங்களத்தின் ஆபத்துக்கு தோள் கொடுத்தது மட்டும் அல்ல மகிந்தாவிற்கு பாராட்டு மாலையை அந்த சபையைக் கொண்டே வாங்கிக் கொடுத்த இந்தியா, அன்று அதற்கு தெரியாத உண்மையா இன்று சனல் 4 சொல்லி இருக்கும்! ஆக இந்தியாவால் உலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்ட உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்து விட்டது அது ஒரு காரணம். இரண்டு அதன் பாதிப்பால் தமிழ்நாட்டுக்குள் இருந்த வந்த எதிர்வினை.

விபச்சாரி என்று தனக்கு மட்டும் தெரிந்தவளை மணம் முடித்து ஊருக்கும் படம் காட்டித்திரிந்தவன் அவளை விபச்சாரி என்று ஊர் அறிந்தது அவளை கைவிடுதலைப் போன்றது இன்று இந்தியாவின் நிலையும். அனால் எங்கட மேதாவி அர்யுன் அவனை ஒழுக்கத்தின் மாணிக்கம் என்று பட்டம் கொடுக்க ஆசைப் படுகின்றார்! நாம் என்ன செய்ய முடியும் தன் இனத்தின் கஸ்ரம் தன் இனத்தவனுக்குத்தானே புரியும் என்றுதானே சொல்லலாம்!

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டுக்கை வைச்சாலும் இப்படி அபத்தமாக குலைப்பதை அது நிறுத்துமா?

அண்ணை இன்னமும் கோமாவிலா? கடைசி என்ன பிரேரணை என்றாவது தெரியுமா?

இப்படியான பிரேரணை ஒன்றில் இந்தியா இதுவரை வாக்களிக்காமலே இருந்து வந்தது.

சனல் 4 ஆரம்பமே இதைத்தான் சொன்னார்கள், யுத்தம் முடிய இலங்கை அரசு உலகிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல இழுத்தடிப்பத்கால் ஒரு சிறிய அழுத்தத்தை இப்போ கொடுக்கின்றார்கள் .

ராஜீவை போட்ட அன்றே தலைவரின் நாட்கள் எண்ணப்பட தொடங்கிவிட்டது.

எமது இலக்கு போர்குற்றம் ஊடான சுதந்திரமே.

இந்தியாவோ இல்லை வேறு யாருமோ ஆயுதம் கொடுத்தார்கள், அறிவுரை வழங்கினார்கள் என்பது போர்குற்ற விவகாரத்தில் இரண்டாம் கொலையாளியே. கொலையை செய்தவனே முதலாம் தர குற்றவாளி.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்துத் தெரியவில்லை, இருந்தாலும் ஆதரிப்போம்-பிரதமர்

திங்கள்கிழமை, மார்ச் 19, 2012, 13:20 [iST]

19-manmohan-sing4-300.jpg

டெல்லி: இலங்கையில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மான விவரம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் அதை ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகலாம் என்று கருதப்படும் திமுகவை, காங்கிரஸ் மேலிடம் தற்காலிகமாக அமைதிப்படுத்த எடுத்துள்ள முயற்சியாக கருதப்படுகிறது.

முன்னதாக மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒரே குரலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி போராடி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

மேலும் திமுகவும் தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதாக அறிவித்தது. மேலும் இன்று காலை திடீரென ஒரு உண்ணாவிரத அறிவிப்பையும் திமுக தலைமை அறிவித்தது. அதன்படி 22ம் தேதி கருணாநிதி தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் நெருக்கடி கொடுக்க இந்த அறிவிப்புகளை திமுக வெளியிட்டதாக கருத்து எழுந்தது. இந்தப் பின்னணியில் இன்று மக்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முனைப்புடன் உள்ளதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர் நேரடியாக இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறவில்லை. மாறாக, அதை முழுமையாகப் படித்து விட்டு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடந்த மனித உரி்மைகள் மீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி்க்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன், பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து, பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

ஆனால் பிரதமரின் பதில் தங்களுக்குத் திருப்தி என்பது போல டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்டனர்.

http://tamil.oneindia.in/news/2012/03/19/india-india-likely-vote-against-sri-lanka-war-crimes-manmohan-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார்.

நான் நினைக்கவில்லை எழுத வாசிக்க தெரியாத இந்தியக்கும்பல் ஜெனிவா சென்றதென. :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவை போட்ட அன்றே தலைவரின் நாட்கள் எண்ணப்பட தொடங்கிவிட்டது.

பிறந்ததிலிருந்தே எல்லோரது நாட்களும் எண்ணப்படத் தொடங்கிவிடும்..! :D இதென்ன புதுசா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததிலிருந்தே எல்லோரது நாட்களும் எண்ணப்படத் தொடங்கிவிடும்..! :D இதென்ன புதுசா? :icon_mrgreen:

எல்லாம் அவருக்கு புதிசு தான்.குழந்தை தானே. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததிலிருந்தே எல்லோரது நாட்களும் எண்ணப்படத் தொடங்கிவிடும்..! :D இதென்ன புதுசா? :icon_mrgreen:

இல்ல இசை. அவர் சிரஞ்சீவி..! அதுவும் இல்லாம.. இவர் தான் தலைவருக்கு பக்கத்தில நின்று ராஜீவ போட பிளான் கொடுத்தவர். மாலைதீவை பிடிக்கப் போனதோடையே.. புளொட்டின்ர வரலாறு முடியத் தொடங்கினதுகள்.. சொல்ல மாட்டினம். எதுக்கும் ஒரு ராஜீவு.. அதை விட்டா இவைக்கு மாற்றுக் கருத்து சொல்ல ஒரு வழியும் இல்ல.

இப்ப கூட சனல் 4 காணொளிதான் இந்தியாவை இந்த நிலைக்கு நகர வைத்துள்ளதே அன்றி.. அமெரிக்காவின் தீர்மானம் அல்ல..! இந்த நிலையில் தாயக அரசியல் கல்விச் சமூகமும்.. புலம்பெயர் சமூகமும் ஒரு பொதுப்புள்ளியை நோக்கி நகர ஆரம்பித்து.. அதனூடு.. தமிழ் மக்களுக்கு ஒரு விடிவுள்ள எதிர்காலத்தை அமைக்க முயல்வது நல்லம்..!

புலம்பெயர் சமூகத்தின் நடவடிக்கைகள் வேறாக இருந்தாலும்.. அதன் இலக்கும் தாயக அரசியல் சக்திகளின் இலக்கும் ஒன்றாக அமைவதையே தமிழ் மக்கள் விரும்புகிறனர் என்பதை தாயக அரசியல் சக்திகளும் விளங்கிக் கொள்வது அவசியம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரேரணை ஒன்றில் இந்தியா இதுவரை வாக்களிக்காமலே இருந்து வந்தது.

சனல் 4 ஆரம்பமே இதைத்தான் சொன்னார்கள், யுத்தம் முடிய இலங்கை அரசு உலகிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல இழுத்தடிப்பத்கால் ஒரு சிறிய அழுத்தத்தை இப்போ கொடுக்கின்றார்கள் .

ஏனண்ணா

தமிழரது துயரங்களுக்கு ஒரு ஆறுதல் தருவதாக சில வியடங்களும் நகர்வுகளும் தெரிகின்றன.

இவை பற்றிய எமது மகிழ்ச்சியை எமக்குள் பகிரும் போது அதையும் தாங்கள் எட்டியுதைப்பதுபோல் எழுதுவது மனதுக்கு சங்கடமானதாக உள்ளது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை இன்னமும் கோமாவிலா? கடைசி என்ன பிரேரணை என்றாவது தெரியுமா?

இப்படியான பிரேரணை ஒன்றில் இந்தியா இதுவரை வாக்களிக்காமலே இருந்து வந்தது.

சனல் 4 ஆரம்பமே இதைத்தான் சொன்னார்கள், யுத்தம் முடிய இலங்கை அரசு உலகிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல இழுத்தடிப்பத்கால் ஒரு சிறிய அழுத்தத்தை இப்போ கொடுக்கின்றார்கள் .

ராஜீவை போட்ட அன்றே தலைவரின் நாட்கள் எண்ணப்பட தொடங்கிவிட்டது.

சின்ன திருத்தம்.  ஊழல் இளவரசன் ராஜீவை போட முன்னரே தலைக்கு நாள் குறித்தார்கள். 

என்ன தலை முந்தி, இந்தியாவையே இரானிய குடும்பத்திடம் இருந்து காப்பாற்றினார்.  

அது சரி, ராஜீவ், இந்திரா எல்லாம் போக பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஏன் பாதுகாப்பு ஆலோசகர் பதவி? 

மறறும் ரா இருபது வருடமா நிறைய நாட்கள் எண்ணி இருப்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.