Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்!

19-udaya-kumar-kudankulam-300.jpg

இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அதன் தலைவர் உதயக்குமார் இன்று குதித்துள்ளார். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 150 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவில் முக்கிய உறுப்பினர் ஆவார். போராட்டக் குழுவில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை இவர் சந்தித்துள்ளார். அதேபோல பிரதமரை சந்தித்த குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

இந்த கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இடிந்தகரையில் உள்ள புனித லூர்து மாதா ஆலயம் முன்பாக போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் இன்று உண்ணாவிரதம் தொடங்கியது. தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக உதயக்குமார் அறிவித்துள்ளார். கைது நடவடிக்கைக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/03/19/tamilnadu-udayakumar-launches-fast-unto-death-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியனை நம்பி உண்ணாவிரதத்தில குதிக்காதீங்கப்பா..! :(

150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்!

19-udaya-kumar-kudankulam-300.jpg

http://tamil.oneindi...th-aid0091.html

அட இன்னும் இவரு வெளியில தான் இருக்காரா ??? சரி சரி ஆற அமர யோசிச்சிட்டு ஆப்பு வெப்பாங்க போல . பாக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அணுமின் நிலையங்களை, உலகமே... மூடிக் கொண்டு வரும் நிலையில்...

தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் திறக்க மத்திய அரசும், மாநில அரசும் முன்னிற்பது கண்டிக்கப்பட வேண்டியது.

என்றோ... ஒரு நாள், அணுக்கசிவு ஏற்பட்டு... 20 லட்சம், 30லட்சம் தமிழன் செத்தான் என்று செய்தி வரும்.

அதன் பிறகு, தமிழன் தானே... செத்தது என்று நாலு அறிக்கை விட்டு விட்டு, மௌனமாகி விடுவார்கள் இந்த அரசியல்வாதிகள்.

இதனைக் கொண்டுபோய்... வட மாநிலங்களில் அமைப்பது தானே...

தமிழனை அழிக்க... ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

தமிழ் சிறி அவர்களே! கொஞ்சம் விளங்கி கதைக்கணும் பாருங்கோ.... அணு உலைகளை உலகமே மூடுதெண்டு சும்மா பொதுவாய் அளவளாவக் கூடாது. அண்மையில் அணு கசிவால் பெரியளவில் பாதிக்கப்பட்ட ஜப்பானே அணு உலைகளை புதுப்பிக்கிறது. பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த இந்த நாடே மாற்று வழிகளை தேடவில்லை. இன்றை உலக பொருளாதார போட்டியில் பொருட்களுக்கான சந்தைப்படுத்தலை அதிகரிக்க உற்பத்தி செலவை குறைக்க வேண்டி உள்ளது. இதை சமாளிக்க அணு உலை மின் உற்பத்தியே சிறந்தது.

அணுஉலைகளை மூடிய ஜேர்மனி படும் திண்டாட்டம் தெரியுமோ? உலகிலேயே பிரபல மருந்து பொருட்டகளை தயாரிக்கும் நிறுவனம் மின் உற்பத்தி செலவை சமாளிக்க முடியாமல் தனது உற்பத்திகளை ஜேர்மனில் நிறுத்தியதால் ஒரு இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஜேர்மன் ஒரு தனிநபர் வருமானம் கூடிய அபிவிருத்தி அடைந்த நாடு என்பதால் இதை சமாளிக்க முற்படுகிறது.

சுவீடனிலும், நோர்வேயிலும் புதிய அணு உலைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதாவது இன்றைய உலக ஒழுங்கில் குறிப்பாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பாதுகாப்பான அணு உலைகளின் தேவை இன்றியமையாததும், தவிர்க்க முடியாததுமாகும்.

நன்றி இளங்கதிர் அவர்களே . நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள் . ஏனெனில் நான் எதை சொன்னாலும் இங்கே குத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அவர்களே! கொஞ்சம் விளங்கி கதைக்கணும் பாருங்கோ.... அணு உலைகளை உலகமே மூடுதெண்டு சும்மா பொதுவாய் அளவளாவக் கூடாது. அண்மையில் அணு கசிவால் பெரியளவில் பாதிக்கப்பட்ட ஜப்பானே அணு உலைகளை புதுப்பிக்கிறது. பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த இந்த நாடே மாற்று வழிகளை தேடவில்லை. இன்றை உலக பொருளாதார போட்டியில் பொருட்களுக்கான சந்தைப்படுத்தலை அதிகரிக்க உற்பத்தி செலவை குறைக்க வேண்டி உள்ளது. இதை சமாளிக்க அணு உலை மின் உற்பத்தியே சிறந்தது.

அதாவது இன்றைய உலக ஒழுங்கில் குறிப்பாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பாதுகாப்பான அணு உலைகளின் தேவை இன்றியமையாததும், தவிர்க்க முடியாததுமாகும்.

விளக்கத்திற்கு நன்றிகள், இளங்கதிர்!

கீழே இணைக்கப் பட்ட படத்திற்கும், தயவு செய்து விளக்கம் தருவீர்களா?

வட இந்தியாவில், மக்கள் அதிகம் வசிப்பதில்லையா?

india_facilities.gif

  • கருத்துக்கள உறவுகள்

india_facilities.gif

அடேயப்பா.. :D உபி, மபி, காபி எல்லாம் கவனமா விடுபட்டிருக்கு..! :D

ஏன்.. கங்கையிலதான் நிறையத் தண்ணி வருமே.. பக்கத்தில அமைக்கிறதுதானே? :rolleyes:

ஜேர்மனி, ஒஸ்திரியா, சுவீடன், இத்தாலி, பெல்ஜியம், சுவிஸ் ஆகிய நாடுகள் அணு மின் நிலையங்களைக் கைவிட்டுள்ளன. வேறு பல நாடுகள் கைவிடுவதற்கு ஆலோசித்து வருகின்றன.

ஜேர்மனி கைவிடுவதற்கான காரணங்களில் ஒன்று அணுக் கழிவுகள். உலகில் அதிக அணு உலைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் அணுக் கழிவுகளை வைப்பதற்குத் திண்டாடுகிறது. அவற்றை ஜேர்மனி போன்ற வெளிநாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பாதாள அறைகளில் சேமிக்கின்றது. இப் பாதாள அறைகள் நிரந்தரமானவையல்ல. சில 100 ஆண்டுகளுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அதற்குள் இவற்றை நிரந்தரமாக அழிப்பதற்கான தொழில்நுட்பத்தை மனிதன் கண்டுபிடித்துவிடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. அது மட்டுமல்லாது பிரான்ஸ் உள்நாட்டிலேயே பல இடங்களில் செறிவு குறைந்த கழிவுகளை வயல்களில் சேமித்து பாதுகாத்து வருகிறது. இது பிரெஞ்சு மக்களின் மத்தியில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.

ஜப்பான் போலவே பிரான்ஸும் அணு மின்நிலையங்களைக் கைவிடுவதிலுள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் அவை அணு மின்நிலையங்களில் போட்டுள்ள முதலீடுதான். ஜப்பான் தனது அணு மின் நிலையங்களை மூடுமானால் அதற்கான செலவு பல நூறு பில்லியன் டொலர்களாக இருக்கும். அத்துடன் அதற்கு மாற்றீடாக வேறு வழிகளும் வேண்டும். பிரான்ஸ் தனது அணுமின் நிலையங்கள் பலவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்கிதியால் இன்னும் இலாபம் அடையவில்லையாம். இலாபம் அடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இலாபம் அடைந்தாலும் பழைய அணுமின் நிலையங்களை மூட ஆகும் செலவை ஈடுசெய்ய மேலும் அதிக இலாபத்தை ஈட்ட வேண்டும்.

என்ன இருந்தாலும் இப்போது பாவிக்கப்படும் வேகத்தில் கதிரியக்க அணுக்கள் பாவிக்கப்பட்டால் அதன் இருப்பு இன்னும் ஏறத்தாள 90 ஆண்டுகளே. அதற்குள் பெற்றோல் தீர்ந்துவிடும். வேறு வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் தமிழ் விரோதக்கொள்கையின் ஒரு பாகம் அயல்நாடான சிறிலங்காவில் தமிழர்களை அளிப்பதற்கு நேரடியாக உதவிய இந்தியா தமிழ் நாட்டில் அணு கதிவீச்சின் ஊடாக தமிழர்களை சிறுகச்சிறுக அளிக்கமுயல்கின்றது.

ஏன் வாட மாநிலங்களில் இந்த அணு ஆலைகளை நிறுவவில்லை ?

ஏன் தமிழ் நாட்டிலேயே எல்லா அணு ஆலைகளையும் நிறுவவேண்டும் ??

இப்படி பல கேள்விகளுக்கு இந்தியாவால் பதில் தர இயலாது மாறாக எதற்கும் மவுனம் காப்பதே இவர்களின் வேலையாகிவிட்டது

சுவீடனிலும், நோர்வேயிலும் புதிய அணு உலைகள் திறக்கப்பட்டுள்ளன.

சுவீடன் போன்ற நாடுகள் வளி மாசுபடுதலைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சுவீடன் ஏற்கனவே இருந்த 3 அணு உலைகளைப் புதுப்பிக்கின்றது. அவற்றை முற்றாக நிறுத்துவதர்கான மாற்றீடுகள் இன்னும் கண்டுபிடிக்கபப்டவில்லை. தற்போது அந்நாட்டில் பாவிக்கப்படும் எரிபொருட்கள் காபனீரொக்சைட்டைக் குறைக்கப் போவதில்லை.

நோர்வேயில் 20 வீதமான மின்சாரமே அணுசக்த்தி மூலம் உருவாக்கப் படுகின்றது. இதுவரை ஜேர்மனியிடமிருந்து பெற்று வந்த மின்சாரம் குறைக்கப்படுவதால் அணுசக்தியை தொடர்ந்தும் பாவிக்கப் போகின்றது. அதுவும் அதிக காலத்துக்கில்லை.

சுவிசில் ஒரு அணுமின் நிலையம் வருகின்ற ஆண்டு மூடப்படவுள்ளது. கட்டம் கட்டமாக குறைத்துக்கொண்டு வருவதே திட்டம்.

அணுமின் நிலையம் வைத்து தான் பொருளாதாரத்தில் தாக்குப்பிடிக்கமுடியும் என்பது முட்டாள் தனமான கருத்து. அணுமின் நிலையங்கள் குறைந்தால் பொருட்கள் உற்பத்தி செலவு அதிகரிக்கும். உற்பத்தி செலவு அதிகரித்தால் லாபம் குறையும். இது தான் மாற்றுவழி சிந்தனைக்கு தடையாக உள்ளது என்பது எனது கருத்து.

தமிழரசுவின் கதையைப் பார்த்தால் ரஸ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இன்று முற்றாக அழிந்திருக்கவேண்டும். சிறுகச்..... சிறுக........

அதாவது இன்றைய உலக ஒழுங்கில் குறிப்பாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பாதுகாப்பான அணு உலைகளின் தேவை இன்றியமையாததும், தவிர்க்க முடியாததுமாகும்.

நிச்சயமாகத் தவிர்க்கக் கூடியது.

இவ்வுலையிலிருந்து ஆண்டுதோறும் வெளியாகப் போகும் பல தொன் நிறைவான கழிவுகளை இந்தியா என்ன செய்யப் போகிறது ?

பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

http://www.ilankathir.com/?p=2075

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வுலையிலிருந்து ஆண்டுதோறும் வெளியாகப் போகும் பல தொன் நிறைவான கழிவுகளை இந்தியா என்ன செய்யப் போகிறது ?

மனித கழிவுகளை அகற்றவே இந்தியாவுக்கு இன்னும் பல பத்தாண்டுகள் எடுக்கலாம்.இந்த லட்சணத்தில் அணுக்கழிவுகளை இவர்கள் அகற்றி விட்டாலும்.....

பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

http://www.ilankathir.com/?p=2075

அணு உலைகளை அமைத்துக் கொடுக்கும் நாடுகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் மட்டுமே பேசப்பட்டது. அணு உலைகளை அமைப்பது வெறும் வர்த்தக நோக்கத்தை மட்டுமே கொண்டது. அணுக் கழிவுகள் பற்றி சரியாக விவாதிக்கப் படவில்லை.

இந்தியாவின் தலையில் அணு உலைகளைக் கட்டிவிட எத்தனிக்கும் நாடுகள் அமெரிக்கா, ரஸ்யா, பிரான்ஸ். ரஸ்சியா தனது நாட்டில் ஏற்பட்ட அணு உலை விபத்தையே சமாளிக்க முடியாமல் திணறியது. இன்றுவரை சேர்னோபில் அணு உலையைச் சரியான முறையில் பாதுகாக்க முடியவில்லை. பிரான்சில் அணுஉலைகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தியாவின் செறிவான அணுக் கழிவுகளைப் பெற்றுக் கொள்ள அமெரிக்கா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. செறிவு குறைந்த கழிவுகளை இந்தியாதான் மடியில் வைத்திருக்க வேண்டும். அவற்றை என்ன செய்வதாக உத்தேசம் ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுவின் கதையைப் பார்த்தால் ரஸ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இன்று முற்றாக அழிந்திருக்கவேண்டும். சிறுகச்..... சிறுக........

ரஷ்சியா அமெரிக்காவோடு இந்தியாவை ஒப்பிடுகின்றீர்களா ? இந்த நாடுகளில் அவர்களுக்கு அணுவிடயமாக போதிய அனுபவமும் எப்படி அந்த தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது என்பது அவர்களுக்கு நன்றாக புரியும்.

ஊழல் நிறைந்த இந்தியா சரியான பாதுகாப்பு கட்டுமான விதிமுறைகளை கடைப்பிடிப்பார்களா ?

இந்தியாவில் ஏற்க்கனவே போபாலில் விசகசிவு ஏற்பட்டு பல ஆயிரம் பேர் இறந்தனர் அது விசக்கசிவுதான், அணு ஆலைகளில் இருந்து ரேடிஜேசன் அனுக்கதிர்தாக்கம் ஏற்பட்டால் அதனால் இறக்கப்போபவர்கள் தமிழர்கள்தான் என்பதே எனது வருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.