Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி

Featured Replies

அன்பின் விடுமுறை தினங்கள்

நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன்.

திருமணமான இரு மாதங்களில், மயக்கிப் பேசி என் கடவுச்சொற்களிடமிருந்து என்னைப் பிரித்திருந்தான். விரைவில் என் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே சுதந்தரத்துடன் எனது மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான். என்னுடைய கடவுச்சொல் உனக்கு எதற்கு எனக் கேட்டேன். என்னுடையது உன்னிடம் இருக்கிறதே என்றான். நான் அதைக் கேட்கவே இல்லையே என்றேன். நீ என்னை உண்மையாக‌க் காதலிக்கவில்லை என்றான். என்னை வைத்துக் கொள், என்னை வைத்துக் கொண்டிருப்பதற்காக‌ நான் உன்னை வைத்துக் கொள்வேன்: உடைமையாக்குதல் என்ற ஒற்றைக் கருத்து வெறியேறிய,‌ தனக்கு மட்டும் உரியதென‌ எண்ணும்‌ பித்துநிலை மனிதனின் சிந்தனைகள்.

காதல் என்பது அடிமை சகாப்த அதிகாரமாகி விடும் போது எந்த ரகசியமும் சாத்தியமில்லை. ஒரு வாரம் பொது மின்னஞ்சல் முகவரி என்ற எண்ணத்தை முன்வைத்தான், அடுத்த வாரம் அது செயல்படுத்தப்பட்டது. அவன் அந்தரங்க எல்லைகளை மறையச் செய்தான். நான் என் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். சுத்திகரிக்கும் பணியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் 25,000 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டன. நான் வரலாறற்ற பெண்ணானேன்.

விரைவில் என் காதலற்ற கல்யாணத்தில் கலவியானது சந்தைப் பொருளாதார மாதிரியைப் படியெடுக்கத் தொடங்கியது: கேட்பு அவனது, அளிப்பு எனது. என் எதிர்வினை என்ன என்பது பற்றி நினைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கு ஏற்பட்டது குறித்து யோசித்ததில்லை. என் வலியிலிருந்து தான் அவன் சந்தோஷத்தை எடுத்துக் கொள்கிறான் என்பது பற்றி எண்ணியதில்லை. சிதறிய இதயத்தோடும், இச்சையற்ற மனதோடும் எனக்குள்ளிருந்த பெண் மேற்கூரையோடு உரையாடிக் கொண்டிருந்தாள், திரைச்சீலைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அத்தனை சேதாரங்களுடன் அவள் சந்தோஷத்தைத் தேடியது இயற்கையின் சுடர்மிகு சக்திகளில்: சுரீர் சூரியஒளி, திடீர் மழைத்துளி. ரகசியமாய், அவள் அடங்க மறுத்தாள்.

முதன்முறை அவன் என்னை அடித்த போது, நான் திருப்பி அடித்தது நினைவிருக்கிறது. பதிலடி என்பது சரிசமமான போட்டியாளர்களுக்குத்தான் பொருந்தும், ஆனால் நாற்பத்தைந்து கிலோ குறைந்த எடை கொண்ட பெண் வேறு மார்க்கங்கள் சிந்திக்க வேண்டும் என அனுபவம் கற்றுத் தந்தது. அது வேறு விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. எது வேண்டுமானாலும் தண்டனைக் கருவியாக மாறலாம் என்பதை உணர்ந்தேன்: கணிப்பொறியின் மின்கம்பிகள், தோலினாலான பெல்ட்டுகள், ஒருகாலத்தில் நான் உலகின் அத்தனை காதலுடனும் பற்றியிருந்த அவனது வெறும் கைகள். அவனது சொற்கள் அந்த‌ அடிகளை மேலும் கூர்மையாக்கின‌. நான் வேகமாக அடித்தால் உன் மூளை சிதறி விடும் என்பான். அவனது ஒவ்வோர் அடியும் என்னைத் தகர்த்தன‌. ஒருமுறை அவன் என் கழுத்தை நெரித்த போது அடைத்த தொண்டையின் மௌனத்தை உள்ளீர்த்துக் கொண்டேன்.

நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான். அவன் எப்போதும் தன்னை ஒழுக்கத்தின் உயர்நிலையில் இருத்திக் கொண்டு அதீத பொதுமைப்படுத்தல்களை அடுக்குவான்: இலக்கிய விழாக்கள் விபச்சார விடுதிகள், பெண் எழுத்தாளர்கள் வேசிகள், என் கவிதைகள் பாலியலைத் தூண்டுபவை. அவனது கம்யூனிச அடையாளங்கள் கலைந்தன. நான் பெண்ணியவாதியாக இருப்பதைக் குற்றமென்றான். வர்க்க எதிரிகளுக்கென நிர்ணயிக்கப்படுகிற‌ வெறுப்போடு அவன் என்னை நடத்தினான்.

சலிப்படைந்த‌ இல்லாளாக, வீட்டு வன்முறைக்கு வண்ணக் குறியீடுகள் இட்டேன்: என் தேகத்தில் விழும் அடிகளின் புதுச்சிவப்பு, உறைந்த ரத்தத்தின் கறுப்பு நிறம், குணமான காயங்களின் மங்கிய ஊதா… வதை, வருத்தம் நிரம்பிய மன்னிப்பு, மேலும் நிறைய வதை என்ற இந்த‌ முடிவில்லா சுழற்சியிலிருந்து விடுதலையே கிடையாது என்று தோன்றியது. ஒரு நாள் நான் பெல்ட்டால் அடி வாங்கிய போது அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றியது. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவேன் என அவனை மிரட்டினேன். என் கவிதையிலிருந்து ஒரு வரியைப் படித்த பின் சீருடை அணிந்த எவனும் என்னை மதிக்க மாட்டான் என்று பதிலளித்தான். யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் போகச் சொல்லி சவால் விட்டான். அந்தச் சின்ன உலகத்தில் எனக்கு நண்பர்களே இல்லை – அவன் உலகத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவன் பணிச் சகாக்கள், அவன் நடந்த பூமியை வழிபடும் அவன் மாணவர்கள்… எனக்கு யாரை நம்புவது எனத் தெரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்னை அவனிடம் மறுபடி ஒப்படைக்கக் கூடியவர்கள் தாம். நடு இரவில் அருகிலிருந்த கன்னி மடத்துக்கு ஓடிப் போய் தங்கிக் கொள்ள விரும்பினேன். நான் புரிந்து கொள்ளப் படுவேனா? இது சரியாக வருமா? என் மொழி பேசாத ஒரு நகரத்தில், மதுக்கூடங்க‌ளில் இளம்பெண்கள் அடிக்கப்படும் ஒரு நகரத்தில் நான் எவ்வளவு தூரம் ஓடி விட முடியும்?

இனிமேல் அவனுடன் வாழ முடியாது என்பதை அவனிடம் சொன்னேன். நான் அவனுக்குக் கொடுத்த கடைசி வாய்ப்புகளின் எண்ணிக்கையே மறந்து போயிற்று என்பதை அவனிடம் சொன்னேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்த போது அவன் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் தன் தசையைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டதைக் கண்டேன். திருகலான மூளை மற்றும் அதன் திருகலான காதல். அவன் தன் தரப்பை விளக்க விரும்பினான்: நான் என் தவறை உணர்ந்ததால் என் மீதே இந்த தண்டனையை சுமத்திக் கொள்கிறேன். அதன் உள்ளர்த்தம்: தயை கூர்ந்து பழியை நீ ஏற்றுக் கொள், தயவு செய்து அடிகளையும் நீயே பெற்றுக் கொள். நான் உணர்ச்சி வயத்தின் பணையக்கைதியாக ஆக்கப்பட்டேன். என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சுதந்தரத்தை நான் யாசித்தேன். என் கதையை நானே பேச உதவும் சொற்களைத் தேடித் தடுமாறினேன். அடைக்கப்ப‌ட்ட கதவுகளும் உடைக்கப்பட்ட கனவுகளும் கொண்ட ஒரு வீட்டில் நான் வாழ்ந்தேன். நான் நானாக இல்லை. வேறொருவரின் துன்பியல் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பதாக‌ என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நான் மரணத்தை எதிர்நோக்கி இருந்தேன். மரணம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் என நினைத்தேன்.

அச்சம் கசிந்தொழுகும் என் உடலில் கலவி என்பது சமர்ப்பிக்கும் செயலானது. நான் மனைவியாக நடித்த இந்த நாடகத்தில் விட்டுச்செல்வதன் ஆறுதலும், உபயோகித்தபின் விலகுதலும் தவிர வேறெதுவும் நினவில் இல்லை. வதையினாலான திருமணத்தில் முத்தங்கள் மறைந்து போகிறது.

நாங்கள் தனித்தனி அறைகளில் உறங்கினோம். ஒவ்வோர் இரவும் என் மனம் ஒரு சோககீதம் இசைத்தது. நான் மிருதுத்தன்மைக்கு ஏங்கினேன். துக்கமானது ஒரு கிராமத்துப் பெண் தெய்வம் போலவும், நான் என் காயமுற்ற தசையை அதற்கு உணவாக அளிப்பது போலவும் அதைச் சுற்றி உழன்றேன். வந்து என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேன். யாரும் அதைக் கேட்கவில்லை, நானே என் தலைக்குள் அலறிக் கொண்டிருந்தேன். என்னை நானே சேர்த்து இழுத்துக் கட்டி வைக்க‌ முடிந்தது. நான் ஒருபோதும் உடைந்துவிடலாகாது என சபதமிட்டிருந்தேன்.

நான் தூரப் போனேன். நாங்கள் விலகிப் போனோம்.

பிற்பாடு அவனது இரட்டை வாழ்க்கை வெளிப்பட்டது: அவன் ஏற்கனவே திருமணமானவன், அவனது குடும்பத்தினரே மறைத்த ஓர் உண்மை அது. அவன் தன் முதல் மனைவியிடமிருந்து இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. நான் அவனை எதிர்கொண்ட போது, எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக விளக்க முயற்சித்தான், அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்து நின்றது. இன்னும் நிறைய பெயரிடுதல்கள், சிகையிழுத்தல்கள், கெட்டவார்த்தைகள், மிரட்டல்கள். அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். என்னை சிறுக்கி என்று முத்திரை குத்தினான். உயிருடன் என் தோலை உரித்து விடுவேன் என்றான். உன் தந்தையைக் கூப்பிட்டு வந்து உன்னை அழைத்துப் போகுமாறு சொல்லுவேன் என்றான். நான் உணர்வற்றுப் போயிருந்தேன், எதிர்வினை புரிய முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த இரவில் நான் ஒரு குப்பை போல் வெளியே எறியப்பட்டேன்.

கைப்பையுடனும், மோசமானவள் என்ற பட்டையுடனும் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். விமான நினையத்திலிருந்த துணை ராணுவ அதிகாரிகளை அங்கே உறங்க‌ அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அவர்கள் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள், ஆனால் தங்க அனுமதித்தார்கள். அதில் ஒருவர் எனக்கு இரவு உணவு வாங்கித் தந்தார். அடுத்த நாள் காலையில் நான் சென்னைக்குத் திரும்பினேன். என் பெற்றோர்களுக்குச் சொல்ல எனக்கு யாதொரு வார்த்தையும் கைவசமிருக்கவில்லை. அவர்கள் என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் அம்மா ஒரு பெண்ணின் சுகந்தத்துடன் என்னைக் கட்டிக் கொண்டார், இனிமேல் என்னைப் போக விடமாட்டேன் என்பது போல. என் சகோதரி ஏன் அவளை விட்டுப் போனேன் என்பதற்கே கோபித்துக் கொண்டாள்.

சில வாரங்கள் கழித்து நான் வக்கீல்களுடன் பேசினேன். என் திருமணமே செல்லுபடியாகாது, அதனால் விவாகரத்து என்பது அர்த்தமில்லாத முயற்சி என்று அவர்கள் சொன்னார்கள். கருணையின் செயலாக சட்டம் கூட என்னை விடுவித்து விட்டது. அவனது தண்டனைக்காக நான் அழுத்தம் தந்த போது காவல்துறையினர் நீதிமன்ற சிக்கல்களைப் பேசினர். நீங்கள் வேறெங்கோ வசிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நீதி தேவதை இடம்பெயர்ந்த பெண்களுக்கு சேவை செய்வதில்லை.

என் பெற்றோரின் இடத்துக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. நான் என் நலம் விரும்பிகளுடன் பேசுகிறேன், என் சகோதரியின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன். இரவில் தனிமையில் அழுகிறேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்க்கிறேன், நான் வாழ்ந்தது “என் வாழ்க்கை”யே அல்ல, வேறொருவர் எனக்கு வரையறுத்து அளித்தது என்பது புரிகிறது. மனைவியை அடிக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, என் கதையைச் சொல்ல நான் உயிரோடிருப்பேன் என்றே நான் நம்பவில்லை. கொடூரத்தன்மையின் முதல் தர அனுபவம் எனக்குண்டு என்று என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்: மோசமான நாட்களில் பகிர்ந்து கொள்ளவென்று இருக்கும் போராட்டம் மற்றும் ஜீவித்திருத்தலின் கதை. அந்த வெற்று ஆறுதல்கள் வன்முறைக்குள்ளான உடல்களை அமைதிப்படுத்தும். நான் குடும்பத்தின் அரவணைப்பில் சுகங்காணும், நண்பர்களின் கதகதப்பில் ஆறுதல் கொள்ளும், அறிமுகமற்ற அன்புள்ளங்களின் சொற்களால் காயங்கள் குணம் பெறும் வன்முறைக்குள்ளான பெண்களின் அதிர்ஷ்டக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன்.

இந்தக் கல்யாணம் எனும் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா? என்னிடம் நேரடியான பதில்கள் இல்லை. நான் எனக்கான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நான் தனியாள் என்பதும் பாதுகாப்பானவள் என்பதும் எனக்குத் தெரியும். துயருற்ற பெண்ணின் கண்களுடனும் ஆத்மார்த்தமான புன்னகையுடனும் நான் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம் பெற்று விட்டேன். என் வலிகளை மறந்து விடுவதற்கு போகும் வழியில் ஒருவேளை என் கவிதைகள் உதவக்கூடும்.

http://www.tamilpaper.net/?p=5684

  • கருத்துக்கள உறவுகள்

மீனா கந்தசாமியின் அனுபவமா இது? அவர் ஏன் பெண் நிலைவாதியாக இருக்கிறார் என்பதற்கு இது விளக்கம் தருகிறது. வீட்டு வன்முறை பற்றி எங்கள் சமூகத்தில் விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டும். இந்தியா என்று நினைத்துக் கொண்டு மனைவியரை அடித்த சில ஆண்கள் வசமாக அமெரிக்க நீதித் துறையினரால் தண்டிக்கப் பட்ட சம்பவங்கள் சிலவற்றை இங்கே கண்டிருக்கிறேன். புலம் பெயர்ந்து வாழும் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வன்முறை செய்யும் ஆண்களைத் திருத்துவது கடினம்.

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களால் வீட்டு வன்முறைக்கு.. சொல் வன்முறைக்கு இலக்காகும் ஆண்களும் இதே முடிவை எடுக்கலாமா..??! ஆண் பாதிக்கப்படும் போது.. ஏன் பெண்கள் கருத்துச் சொல்வதில்லை. ஆனால் பெண் பாதிக்கப்படும் போது ஆணும் கருத்துச் சொல்கிறான் தானே. மற்ற ஆண் மீது குற்றம் சுமத்திறான் தானே. பெண்ணின் நிலையை உணரத்தலைப்படுகிறான் தானே. ஆனால்.. பெண்கள் ஏன் அப்படிச் செய்வதில்லை..???????????????????????????! :rolleyes::icon_idea:

ஆண்களுக்கு இழைக்கப் படும் வீட்டு வன்முறை உட்பட்ட கொடுமைகளைப் பெண்கள் கண்டிப்பதை நான் கண்டிருக்கிறேன். புள்ளிவிபரங்களை எடுத்துப் பார்த்தால் பெண்கள் தான் அதிகம் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப் படுகிறார்கள். இதனால் பொது விவாதங்களில் இது அதிகம் பேசப்படுவது சகஜமானது தான். "இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் போரில் இறந்தாலும், தமிழர்களுக்குத் தான் பாரிய பாதிப்பு" என்பதற்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? அது போலத் தான் இதுவும்!

புள்ளிவிபரங்களின் படி பெண்களை விட ஆண்களே அதிகம் பெண்களால் சொல் வன்முறைக்கு இலக்காவதாக தெரிவிக்கப்படுகிறது. பெளதீக வன்முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும்.. பெளதீக வன்முறைக்கு இட்டுச் செல்லும் முக்கிய காரணியாக சொல் வன்முறை இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளது தானே.

1-graph-a-e.gif

http://www.toolkitnb.ca/emain.asp?477

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பகிர்வுக்கு நன்றி....அபராஜிதன்.

இதை வாசிக்கும் போது என்ற மனிசி எவ்வளவு கொடுத்து வைச்சவ என்று இப்பதான் விளங்குது................

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

இப்படியான ஆண்கள், பொதுவாகத் தாழ்ந்த மனப்பான்மையுள்ளவர்களாக இருப்பார்கள்!

எதிரிகளை, நேருக்கு நேர் தாக்கும் மனவலிமை இவர்களிடம் இருக்காது. பொதுவாக இவர்கள், கோழைகளாக இருப்பார்கள்!

கூட்டில் அடைக்கப் பட்டிருக்கும் ஒரு சிங்கத்தை மட்டும் சீண்டுவது தான், இப்படிப் பட்டவர்களின் வீரம்!

குடும்ப வாழ்க்கைக்கு இவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல!

மனநோய் வைத்தியசாலைகள் தான் இவர்களுக்கு ஏற்ற இடம்!

கெஞ்சினால் மிஞ்சுவார்கள்! மிஞ்சினால் கெஞ்சுவார்கள்! என்றும் திருந்தவே மாட்டார்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிவிபரங்களின் படி பெண்களை விட ஆண்களே அதிகம் பெண்களால் சொல் வன்முறைக்கு இலக்காவதாக தெரிவிக்கப்படுகிறது. பெளதீக வன்முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும்.. பெளதீக வன்முறைக்கு இட்டுச் செல்லும் முக்கிய காரணியாக சொல் வன்முறை இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளது தானே.

1-graph-a-e.gif

http://www.toolkitnb.ca/emain.asp?477

தரவுகளைப் பலமாதிரிப் பார்க்கலாம். ஒரு தடவை நீங்கள் இணைத்த வரைபு 'ஏ" ஐ உற்றுக் கவனிக்கவும். 10 விதமான வன்முறைகளில் 5 உயிராபத்து விளைவிக்கக் கூடிய வன் முறைகளைப் பெண்கள் மிக அதிகமாக ஆண்களை விட அனுபவித்திருக்கிறார்கள். கன்னத்தில் அறைதல், ஏதாலாவது எறி படுதல் போன்ற வன் முறைகளை ஆண்கள் அதிகமாக எதிர் கொண்டிருக்கிறார்கள். வேறு இரண்டு வகையில் இரு பாலாரும் ஏறத்தாழச் சமன்.ஐந்தும் ஐந்தும் சமன் என்று நீங்கள் எண்ணுக் கணக்குப் பார்த்தால் இரு பாலாரும் சமமான பலிகள் என்று கொள்ளலாம். பாலியல் வன்முறை செய்வதும், துப்பாக்கி/கத்தியால் மிரட்டுவதும் மற்றைய ஆயுதம் ஏந்தா வன் முறைகளுக்குச் சமன் என்று நீங்கள் நினைத்தால் அதை என்னால் மாற்ற இயலாது. சொல் வன்முறையைப் பற்றி உங்கள் வரைபு "ஏ" யில் ஒன்றுமில்லை. சொல் வன்முறை செயல் வன் முறைக்கு இட்டுச் செல்லல் நடைபெறலாம் என்றாலும் சொல்லுக்கு அடியைப் பதிலாகக் கொடுப்பது ஒன்றும் வீரமான செயலாக எனக்குத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

இப்படியான ஆண்கள், பொதுவாகத் தாழ்ந்த மனப்பான்மையுள்ளவர்களாக இருப்பார்கள்!

எதிரிகளை, நேருக்கு நேர் தாக்கும் மனவலிமை இவர்களிடம் இருக்காது. பொதுவாக இவர்கள், கோழைகளாக இருப்பார்கள்!

கூட்டில் அடைக்கப் பட்டிருக்கும் ஒரு சிங்கத்தை மட்டும் சீண்டுவது தான், இப்படிப் பட்டவர்களின் வீரம்!

குடும்ப வாழ்க்கைக்கு இவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல!

மனநோய் வைத்தியசாலைகள் தான் இவர்களுக்கு ஏற்ற இடம்!

கெஞ்சினால் மிஞ்சுவார்கள்! மிஞ்சினால் கெஞ்சுவார்கள்! என்றும் திருந்தவே மாட்டார்கள்!!!

மிகச் சரியான கருத்து புங்கை. என்னைப் பொறுத்த வரை மனைவியரை மட்டுமல்ல எங்களில் பல தேவைகளுக்காகத் தங்கியிருக்கும் யாரையும் நாங்கள் வன் முறைக்குள்ளாக்கவே கூடாது. சிறு குழந்தைகள், செல்லப் பிராணிகள், எங்களின் மேற் பார்வையின் கீழ் வேலை செய்யும் வேலையாள் இவர்கள் எல்லாம் எங்களுக்குத் திருப்பி வன் முறை மூலம் பதில் சொல்ல இயலாதவர்கள். எங்கள் சமூகத்தைப் பொறுத்தவரை அனேகமான மனைவியரும் கணவனிடம் தங்கியிருக்கின்றனர். இவர்கள் மீது வன் முறையைப் பிரயோகிக்கும் கணவன் மாருக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும் என்பது என் கருத்து!

  • தொடங்கியவர்

இவரை இந்தளவு தூரம் வன் கொடுமைக்கு ஆளாக்கினவர் வேறு யாருமல்லர் சார்லஸ் ஆண்டனி இவரின் கட்டுரைகளை கீற்று இணையத்தில் சிலவேளைகளில் நீங்கள் வாசித்து இருக்க கூடும்

இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்

Oh! Jesus Christ!!! :wub:

பெண்கள் குழந்தைகளுக்கு அடிப்பதில்லையா..??! செல்லப் பிராணிகளுக்கு அடிப்பதில்லையா..??!

இந்த ஆண்களுக்கு எதிரான பெண்களின் வன்முறை என்பது இன்று உலகம் பூராவும் வளர்ந்து வருகிறது..

ASPIRE talks new police statistics: More men reporting domestic abuse.

Published: Thursday, March 15, 2012

http://www.guardian....-domestic-abuse

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தரவுகளைப் பலமாதிரிப் பார்க்கலாம். ஒரு தடவை நீங்கள் இணைத்த வரைபு 'ஏ" ஐ உற்றுக் கவனிக்கவும். 10 விதமான வன்முறைகளில் 5 உயிராபத்து விளைவிக்கக் கூடிய வன் முறைகளைப் பெண்கள் மிக அதிகமாக ஆண்களை விட அனுபவித்திருக்கிறார்கள். கன்னத்தில் அறைதல், ஏதாலாவது எறி படுதல் போன்ற வன் முறைகளை ஆண்கள் அதிகமாக எதிர் கொண்டிருக்கிறார்கள். வேறு இரண்டு வகையில் இரு பாலாரும் ஏறத்தாழச் சமன்.ஐந்தும் ஐந்தும் சமன் என்று நீங்கள் எண்ணுக் கணக்குப் பார்த்தால் இரு பாலாரும் சமமான பலிகள் என்று கொள்ளலாம். பாலியல் வன்முறை செய்வதும், துப்பாக்கி/கத்தியால் மிரட்டுவதும் மற்றைய ஆயுதம் ஏந்தா வன் முறைகளுக்குச் சமன் என்று நீங்கள் நினைத்தால் அதை என்னால் மாற்ற இயலாது. சொல் வன்முறையைப் பற்றி உங்கள் வரைபு "ஏ" யில் ஒன்றுமில்லை. சொல் வன்முறை செயல் வன் முறைக்கு இட்டுச் செல்லல் நடைபெறலாம் என்றாலும் சொல்லுக்கு அடியைப் பதிலாகக் கொடுப்பது ஒன்றும் வீரமான செயலாக எனக்குத் தெரியவில்லை.

New study shows women are more verbally abusive and home breakers than men.

{பெண்களால் அதிக சொல் வன்முறைக்கு இலக்காகும் ஆண்கள். புதிய ஆய்வு சொல்கிறது}

A new study completed by a group, and headed by Dr. Kenny Iwunwa of National Auto Club ( http://www.kensautoregister.com/) shows that women are more abusive than men in most relationships, at least verbally. While studying the behavior of clients based on telephone conversations, four of my employees became curious and wanted us to find out the untold hard truth that rocks most homes and lovers. To do so, we sent out 2.2 m random questionnaires across the country. We picked ten big cities and five rural settlements. We also considered income levels- lifestyle, education, age, gender, religion, married and singles. Finally, we paid attention to race and ethnicity and or place of origin. The work also reviewed domestic violence statements (by both parties), police reports and unedited court filings, victims statements. To make sure we arrive at a near accurate result, we ran the survey twice. The second survey went to a different set of audience. Error margin was 4.0%. Total duration of the survey: 9-months.

The result was overwhelmingly shocking (full report will be published on the June edition of Timeline Newspaper, a small newsprint in San Antonio-Texas. Part of this work can also be downloaded at http://www.kensautoregister.com/ . ( Click on Contest/ Community page).

More than 40% of domestic violence victims are male, report reveals.

{சுமார் 40% ஆண்கள் வீட்டு வன்முறைக்கு இலக்காகின்றனர். இது புறக்கணிக்கக் கூடிய எண்ணிக்கையா.. ஜஸ்ரின் அண்ணா..?????!}

http://www.guardian....mestic-violence

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், சொல் வன்முறையும் உடல் வன்முறையும் ஒன்று என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தனிப் பட்ட கருத்து. உடல் வன்முறை மிகவும் ஆபத்தானது என்கிறேன் நான். மனைவி திட்டினால் தாங்கிக் கொள்ள இயலா ஆண் பேசாமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு போகலாம். அல்லது சொல்லுக்குப் பயந்த ஆண் கல்யாணம் வேண்டாம் என்று "அம்மா" பிள்ளையாகவே இருந்து விட்டுப் போகலாம். மேலும், தரவுகளை நீங்கள் உங்களுக்கு ஏற்ற மாதிரி மட்டுமே பார்ப்பது விஞ்ஞான பூர்வமான ஒரு செயல் அல்ல என நினைக்கிறேன். 40% இற்கு மேற்பட்ட ஆண்கள் வீட்டு வன் முறைக்குள்ளாகிறார்கள் என்றால், மிகுதி 60% வீதமான வன்முறையின் பலிகள் யாரென்று நினைக்கிறீர்கள்? அலிகளா? :D

இவரை இந்தளவு தூரம் வன் கொடுமைக்கு ஆளாக்கினவர் வேறு யாருமல்லர் சார்லஸ் ஆண்டனி இவரின் கட்டுரைகளை கீற்று இணையத்தில் சிலவேளைகளில் நீங்கள் வாசித்து இருக்க கூடும்

இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்

அப்ப விஷயத்தை மெல்ல அமுக்கிட வேண்டியதுதான்.அல்லது இதுவும் எமது கலாச்சாரம் என்று கதைவிட்டாலும் விடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், சொல் வன்முறையும் உடல் வன்முறையும் ஒன்று என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தனிப் பட்ட கருத்து. உடல் வன்முறை மிகவும் ஆபத்தானது என்கிறேன் நான். மனைவி திட்டினால் தாங்கிக் கொள்ள இயலா ஆண் பேசாமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு போகலாம். அல்லது சொல்லுக்குப் பயந்த ஆண் கல்யாணம் வேண்டாம் என்று "அம்மா" பிள்ளையாகவே இருந்து விட்டுப் போகலாம். மேலும், தரவுகளை நீங்கள் உங்களுக்கு ஏற்ற மாதிரி மட்டுமே பார்ப்பது விஞ்ஞான பூர்வமான ஒரு செயல் அல்ல என நினைக்கிறேன். 40% இற்கு மேற்பட்ட ஆண்கள் வீட்டு வன் முறைக்குள்ளாகிறார்கள் என்றால், மிகுதி 60% வீதமான வன்முறையின் பலிகள் யாரென்று நினைக்கிறீர்கள்? அலிகளா? :D

நான் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிராகரிக்கவில்லை. மாறாக.. பெண்களைப் போலவே ஆண்களும் பெண்களால் கணிசமான அளவிற்கு வன்முறைகளை எதிர்கொள்கிறார்கள்.. அவர்களும் இவ்வாறான முடிவுகளை எட்ட முடியுமா.. அவர்களுக்கு எவ்வாறான நிவாரணங்கள் என்பது குறித்து சிந்திக்க வைக்க விளைகிறேனே தவிர.. ஒரு தலைப்பட்சமான முடிவை நோக்கி நகர்த்திச் செல்வதல்ல நோக்கம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி தரவுகள் ஏராளமாக உள்ள நிலையில் ஆண்களுக்கு எதிரான பெண்களின் வன்முறைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.. அதன் தரவுகள் சரியாக வெளிப்படுத்தப்படாத நிலை தொடர்ந்து நிலவுகின்ற சூழலில்.. அவற்றை வெளிப்படுத்துவதை செய்கின்றோமே தவிர.. ஒரு தலைப்பட்சமான முடிவை நோக்கி கொண்டு சொல்கிறோம் என்ற வாதம் தவறானது.

மாறாக வழமை போல.. பெண்களுக்கு எதிராகத்தான் வன்முறை என்பதோடு நிறுத்திக் கொண்டு ஆண்கள் மீது மட்டும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு போகும் ஒரு தலைப்பட்ச நிலைப்பாட்டையும் நாம் கண்டிக்கிறோம்..! பெண்களுக்கு நிகராக ஆண்களும் பெண்களால் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்ற உண்மையை சமூகம் உணர வேண்டும் என்பதே இங்கு எமது குறிக்கோள்..! :icon_idea:

சாத்திரியின் கதைக்கு வரிந்து கட்டி பொங்கி எழுந்த எமது கலாச்சார காவலர்கள் இங்கு ஒரு மூச்சையும் விடுவதாக காணோம் ,

இதை செய்தது சிங்களவன் அல்லது மாற்று இயக்கதவன் என்றால் இப்ப படத்துடன் விளக்கத்திற்கு வெளிக்கிட்டிருப்பார்கள் எங்கள் வித்துவான்கள்.

நீங்கள் "பிடிச்சு விளையாடினோம்" என்ற சொல் வரும் படி கட்டுரை எழுதினால் தான் நாங்கள் விமர்சனம் எழுதுவோம்.

  • தொடங்கியவர்

இவர் ஒரு தமிழக உறவு அர்ஜுன் தமிழகத்திற்கான உறுப்பினராக நியமிக்க பட்டவர் உங்களை போலவே உறவுகளுக்கும்

இவரை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்து இருக்கலாம் ..இங்கு பாதிக்க பட்டவர் ஒரு பெண் ஒரு பெண்ணியவாதி ஒரு பத்திரிகையாளர் என்பதால் தையிரியமாக முன் வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதி இருக்கார் இன்னும் எத்தனையோ ஆயிரகணக்கான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த/நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள் பற்றி வெளியே சொல்ல முடியாமல் வாய் மூடி தமக்குள்ளே அழுது கொண்டிருக்கின்றனரோ...

//இவர் ஒரு தமிழக உறவு அர்ஜுன் தமிழகத்திற்கான உறுப்பினராக நியமிக்க பட்டவர் உங்களை போலவே உறவுகளுக்கும்

இவரை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்து இருக்கலாம் ..இங்கு பாதிக்க பட்டவர் ஒரு பெண் ஒரு பெண்ணியவாதி ஒரு பத்திரிகையாளர் என்பதால் தையிரியமாக முன் வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதி இருக்கார் இன்னும் எத்தனையோ ஆயிரகணக்கான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த/நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள் பற்றி வெளியே சொல்ல முடியாமல் வாய் மூடி தமக்குள்ளே அழுது கொண்டிருக்கின்றனரோ... //

நன்றி!! நல்ல கட்டுரை!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.