செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரியொன்றின் பணிப்பாளரொருவர் தன்னை விட சுமார் 35 வருடங்கள் வயது குறைந்த மாணவியை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியரான அவரது வயது 64 எனவும் , மாணவியின் வயது 27 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமது மகள் , திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்கு , திருமணச் சான்றிதழை பெற வருவதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோடிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. www.hirunews.lk/.
-
- 16 replies
- 841 views
- 1 follower
-
-
64 வருடங்களுக்கு முன்பு அதாவது 1956 இல் எடுக்கப்பட்ட ஒரு ரெக்கோர்டிங் இது. கடைசி 40 செக்கன்களை நன்றாக கவனியுங்கள்
-
- 10 replies
- 1.1k views
-
-
65 ஆண்டுகளின் பின் வெளியாகிய இரகசியம் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெண்களை பரீட்சார்த்த நடிப்புகளில் ஈடுபடுத்தும்போது இயக்குநர் ஒருவர் நடந்துகொண்டுள்ள விதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் 65 ஆண்டுகளின் பின்னர் வெளியாகியுள்ளன. 1950 ஆம் ஆண்டுகளில் லைஃப் சஞ்சிகையின் ஜேம்ஸ் பர்க் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட படங்களே தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. டிலாகி (1949), துலாரி (1949), டில் தியா டார்ட் லியா (1966) போன்ற பிரபல ஹிந்தித் திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர். காதர் என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார். பரீட்சார்த்த நடிப்புக்காக வரும் பெண்களை ஒவ்வொரு கோணத்தில் நிற்கச் சொல்லியும் மேலாடைகளை அகற்றியும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி…
-
- 3 replies
- 1.7k views
-
-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 42 வயதான பெண்.. ஒரு ஆண்டில் மட்டும் 65,000 தொலைபேசி அழைப்புக்கள் (தினமும் சராசரியாக 178 அழைப்புக்கள்..)... ரெக்ஸ்ட்கள்.. ஈமெயில்கள் என்று.. தூதுவிட்டு.. 62 வயதான ஒருவரை ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்.. அந்த வயதானவரை நிம்மதியாக தனிய வாழ விட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்.. பிணையில் விடுதலையாகி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தனக்கு அந்தப் பெண்ணுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.. அந்தப் பெண்ணால் ஒருதலையாக காதலிக்கப்ப்பட்ட.. 62 வயதான.. ஒருதலைக் காதலன்..! http://www.bbc.co.uk...e-14913053#_tab
-
- 3 replies
- 747 views
-
-
650 கோடி செலவில் இந்திய தொழிலதிபர் மகளின் திருமணம்; திருமண சேலைக்கு 17 கோடி! 2016-11-17 12:05:28 முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழிலதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் நேற்று பெங்களூரில் மிக பிரமாண்டமான முறையில், 650 கோடி இந்திய ரூபா (சுமார் 1,430 கோடி இலங்கை ரூபா) செலவில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999ஆம் ஆண்டு தான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்களான கருணாகர ர…
-
- 2 replies
- 664 views
-
-
ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள் பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர். இருவரும் 1940ன் கடைசிகளிலும் 1950ன் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். காதலர்களாக இருந்த போது தங்கள் திருமணம், எதிர்காலம், தங்களிற்கு பிறக்கும் குழந்தைகளிற்கு என்ன பெயர்கள் வைப்பது என்பனவற்றை எல்லாம் குறித்து கலந்துரையாடினர். இருவரதும் சொந்த ஊர் ஒட்டாவா. ஆனால் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோர்ஜ் கிரான்டிற்கு ஓக்வில், ஒன்ராறியோவில் வேலை கிடைக்க ஒர் ஒட்டாவாவில் தங்கிவிட்டார். இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்று திருமணமும் செய்து குடும்பஸ்தர்களாகினர். …
-
- 8 replies
- 726 views
-
-
பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உள்ள உறவை கூறுவதில் தயக்கம் இல்லை: திக்விஜய் சிங் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் தனக்கு உள்ள உறவை ஒப்புக்கொண்டுள்ள 67 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், விரைவில் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமிர்தா ராய் என்ற அந்தப் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு தானும், திக் விஜய் சிங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து திக் விஜய் சிங் தனது காதலை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திக்விஜய் சிங் தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமிர்தா ராயுடன் தனக்கு உள்ள உறவை கூறுவதில் தன…
-
- 5 replies
- 971 views
-
-
கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார் http://newuthayan.com/story/16/67-வருடங்களாக-அடைத்து-வைக்கப்பட்டிருந்த-பெண்-நேரில்-கண்ட-பொலிஸார்-அதிர்ச்சி.html
-
- 0 replies
- 374 views
-
-
69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த 12வயது சிறுவன்! 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை நாதன் ருஷ்கின் என்ற கனேடிய சிறுவன் கண்டுபிடித்துள்ளான். விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் அல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது, இந்த டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தான். டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான அல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம் செல்வதுண்டு. ஒரு வருடத்துக்கு முன்பு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, சிறு சிறு ப…
-
- 0 replies
- 382 views
-
-
ஜெர்மனியில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும் நடவடிக்கைகள் பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அந்த நாட்டு எம்.பி.க்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த கருத்துக் களில் சிலவற்றை பரிசீலித்து அரசு புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறது. கேபரிலிபால் என்ற எம்.பி. அரசுக்கு தெரிந்த யோசனை யில் திருமணங்கள் பதிவு செய்யப்படும் போது அவை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று கால நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கால கட்டத்துக்கு முன் விவாவகரத்துக்கு அனுமதி வழங்ககூடாது. 7 ஆண்டுகள் கடந்ததும் தம்பதிகள் திருமணத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீடிக்க விரும்பினால் அதை நீடிக்கலாம். இதற்காக திருமண பதிவை புதுப்பித்து…
-
- 21 replies
- 3.4k views
-
-
7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். …
-
- 0 replies
- 222 views
-
-
7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது! பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வா…
-
- 4 replies
- 422 views
- 1 follower
-
-
7 பழங்களை பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்…! மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்…! மத்திய பிரதேசத்தில் மாம்பழ தோட்டத்தில் விளைந்துள்ள 7 மாம்பழங்களை பாதுகாக்க நான்கு காவலர்கள் மற்றும் ஆறு நாய்களை காவலுக்கு வைத்துள்ளார் தோட்டத்துக்கு உரிமையாளர்.என்னாடா 7 மாம்பழத்துக்கு இவ்வளவு காவலா என வினோதமாக இருப்பதை நீங்கள் எண்ணலாம். அந்த தோட்டத்தில் விளையும் அரிய மாம்பழங்களின் விலையை நீங்கள் கேட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாம்பழ தோட்டம் வைத்து இருப்பவர்கள் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ர தம்பதிகள்.தங்களுடைய பழத்தோட்டத்தில் தெரியாமல் பயிரிட்ட மாம்பழ மரக்கன்றுகள் ஜப்பானின் மியாசாகி மாம்பழ…
-
- 0 replies
- 364 views
-
-
திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு தற்போது வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 ஏ பெறுபேறுகள் கிடைத்துள்ளன. உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதேவேளை இவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், கல்லீரல், கண், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் என்பன ஏழு நோயாளிகளுக்கு வெற்றிகரமா…
-
- 3 replies
- 340 views
- 1 follower
-
-
யுடியூப்பில் 7 மாத குழந்தையின் கங்னம் ஸ்டைல் டான்ஸ் இப்போது கலக்கி வருகிறது. அப்லோடு செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் இதனை பார்வையிட்டுள்ளார்களாம். உலகம் முழுவதும் கங்னம் காய்ச்சல் பிடித்து ஆட்டுகிறது. இந்தியாவில் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடனம் கண்டிப்பாக இடம் பெறுகிறது. நம் செய்தி அதைப் பற்றியதல்ல. 7 மாத குழந்தை ஒன்று கங்னம் நடனமாடி அதை யுடியூப்பில் அப்லோட் செய்திருக்கின்றனர். 46 நிமிடம் ஓடக்கூடிய அந்த கிளிப்பிங்ஸ்சில் குழந்தையின் சிரிப்பும் நடனமும் இடம் பெற்றுள்ளது. ஒரு வார காலத்திற்குள் அந்த படக் காட்சியை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்களாம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=38fhbOuP2Og …
-
- 20 replies
- 1.2k views
-
-
குடி போதைக்கு தனது மகளையே விற்ற கொடுமை ஆந்திராவில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுப்பகுதியில் அதிர்ச்சியை தந்திருந்தாலும், குழந்தையை வாங்குவதற்கும் ஒருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து, வர மறுத்த அந்த குழந்தையை தர, தர., வென இழுத்துச்சென்றவரை இப்பகுதி மக்கள் நையப்புடைத்தனர் என்பது கொஞ்சம் ஆறுதல். ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்களுடைய வறுமையை போக்கிட இப்படி முடிவு எடுக்கிறார்களாம். நேற்று கடப்பா மாவட்டம் ராமாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு: லக்கிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (40 ). இவர் கூலித்தொழில் ( கட்டட பணி ) செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜ…
-
- 1 reply
- 689 views
-
-
பாட்னா, பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட தெல்கரா மண்டலத்தில் பண்டைய நாகரிகத்தை சேர்ந்த பொருட்கள் அடிக்கடி கிடைக்கின்றன. குறிப்பாக குப்த பேரரசின் கடைசி பகுதியில் வசித்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்துமாறு கடந்த 2009–ம் ஆண்டு முதல்–மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி அங்கு மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 7–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘விஸ்வவித்யாலயா ஸ்ரீபிரதம் சிவ்புரா மகாவிரா பிட்சு சங்கம்’ என்ற பல்கலைக்கழகம் இருந்த இடமாக கருதப்படும் பகுதியில் சமீபத்தில் இந்த குழுவினர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். அப்போது தங்க முல…
-
- 1 reply
- 270 views
-
-
70 அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த 9 வயதுடைய தங்கையை 13 வயது அண்ணன் துணிகரமாகக் காப்பாற்றிய சம்பவமொன்று சிலாபம் அத்துவன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தன்று குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்ற ஒன்பது வயதுடைய அச்சினி தனஞ்ஜய எனும் சிறுமி கிணற்றில் விழுந்துள்ளார். அதைக் கண்ட அவளது அண்ணனான 13 வயதுடைய நிபுன் தனஞ்ஜய உடனடியாக கூச்சலிட்டு அயலாரின் உதவியைக் கோரினார் எனினும் எவரும் அங்கு விரையாததைத் தொடர்ந்து கிணற்று வாளியின் கயிற்றை மரமொன்றில் கட்டி அதன் உதவியுடன் நிபுன் தனஞ்ஜய எனும் சிறுவன் கிணற்றில் இறங்கி தனது தங்கையைக் காப்பாற்றியுள்ளான். அதன்பின்னர் எவ்வாறு தங்கையுடன் கிணற்றிலிருந்து மேலே வருவது என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில…
-
- 0 replies
- 568 views
-
-
குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்த…
-
- 0 replies
- 352 views
-
-
70 இலட்சம் கர்ப்பம் உருவாகலாம் என்கிறது ஐ.நா உலகம் முழுவதும் கொரோன வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிகளவான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது. இந்த நிலை தொடர்பில், ஐ.நாவின் மக்கள்தொகை நிதியம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கருத்தடை சாதன கட்டுப்பாடுகள் காரணமாக வரும் மாதத்தில் 70 இலட்சம் கர்ப்பங்கள் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் காரணமாக பெண்கள் அச்சத்தில் வைத்தியசாலைக்கு கூட செல்ல விரும்புவதில்ல…
-
- 13 replies
- 1.1k views
-
-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்தே கிடக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை சிபாரிசு செய்யலாம் என்றும் அறிவதற்காக இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதற்காக, ‘பெட் ரெஸ்ட்’ ஆராய்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆனால், அமெரிக்க குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும். விண்வெளி வீரர்களை போன்றே அவர்களது உடல்நிலை இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் பல்வேறு உடல் தகுதிகளுக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அ…
-
- 1 reply
- 1k views
-
-
70 வயது தென் ஆப்பிரிக்க அதிபருக்கு அடுத்த வாரம் 6வது கல்யாணம்..! ஜோஹன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகி விட்டார். இது அவருக்கு 6வது கல்யாணம். போன வாரம்தான் தனது 70வது பிறந்த நாளை தனது மனைவிகள் புடை சூழ கொண்டாடினார் ஜூமா. அவருக்கு ஏற்கனவே நடந்துள்ள 5 கல்யாணங்கள் மூலம் 21 குழந்தைகள் உள்ளன. தற்போது 6வது முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் ஜூமா. அவரது மனைவியாகப் போகிறவர் போங்கி நெகமா. இருவரும் ஏற்கனவே சேர்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமாக போங்கியை மணக்கப் போகிறார் ஜூமா. தென் ஆப்பிரிக்காவின் ஜூலு கலாச்சாரப்படி ஒருவர் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும…
-
- 8 replies
- 1.3k views
-
-
70 வயதான வயோதிப நபரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து அந்த நபரிடமிருந்து பத்து இலட்ச ரூபாவை மோசடி செய்ததாக கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பெண்ணொருவரை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கும் படி நீதிவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்.தாரகர் சில்வா என்ற 22 வயதான சந்தேக நபரை இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார். கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியதாவது முறைப்பாட்டாளர் விடுமுறையில் இக் நாட்டுக்கு விஜயம் செய்த போது ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்தொன்றின் போது சந்தேக நபரான யுவதி அறிமுகம…
-
- 5 replies
- 583 views
-
-
1945 ஆம் ஆண்டு பிரிந்த காதல் ஜோடியொன்று 70 வருடங்கள் கழித்து மீளவும் இணைந்து கொண்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 1945 ஆம் ஆண்டில் 17 வயதான சக் ரெட் லெவிஸும் 16 வயதான சான்டி பிரான்சி றிக்கின்ஸும் கலிபோர்னிய கடற்கரையில் சந்தித்து முதல் பார்வையிலேயே காதல் கொண்டனர். இந்நிலையில் சான்டியின் குடும்பம் லொஸ் ஏஞ்செல்ஸுக்கு சென்றதையடுத்து அவர்களிடையேயான காதல் தொடர்பு முறிவடைந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரும் வெவ்வேறு வாழ்க்கைத் துணைகளுடன் திருமண வாழ்வில் இணைந்தனர். இந்நிலையில், தமது வாழ்க்கைத் துணைகளை இழந்து தனிமையில் வாழ்ந்த லெவிஸும் (85 வயது), சான்டியும் (84 வயது) 7 வருடங்களுக்கு முன் இலத்…
-
- 19 replies
- 1.1k views
-
-
-
- 38 replies
- 5.5k views
- 1 follower
-