Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி! ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது! 'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி. இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக…

  2. பாஸ் மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர். சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேத…

  3. Editorial / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 06:00 - 0 - 32 கனகராசா சரவணன் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக ஞாயிற்றுக்கிழமை (14)இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலையில் வீடு திரும்பியுள்ள…

  4. டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார். அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது …

  5. தனது நாட்டில், இறந்தவர்களின் நினைவுகளை கொண்டாட தடை போடும் கோத்தா, நியூயோர்க்கில், ரோஜாபூவுடன், 9/11 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார், மனைவியுடன். 🥴 http://www.sundaytimes.lk/210926/uploads/special-event.jpg

    • 17 replies
    • 1.5k views
  6. வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா? நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து விடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம் ஆண்டு முதல் குந்தி (தற்போது ஜார்ஹன்ட்) தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரே…

    • 2 replies
    • 1.5k views
  7. திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் காதலன் மதுரா தொகுதியில் உள்ள கவுன்சிலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையில் , கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். எனினும், பின்னர் பதி…

  8. டி20 கிண்ணத்திற்காக நிர்வாணமாகும் நடிகை ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனிடையே ரசிகர்கள் தமது அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் அதிர்ச்சி தரும் காணொளி ஒன்றை வௌியிட்டுள்ளார். இம்முறை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுகின்றது. இந்நிலையில் உலகக் கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால், பாகிஸ்தான் வீரர்கள் முன் தான் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அணித் தலைவர் அப்ரிடி தன்னிடம் எது கேட்டால…

    • 22 replies
    • 1.5k views
  9. இன்று உலக முத்த தினம் சூலை 6 உள்ளம் பட பட என்று திண்டாட கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா அவன் விரல்கள் கூந்தலில் தொலைய வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள அவர்களது இதயங்கள் உறவாட உதடுகள் மெய்மறந்து உரச காதல் . . . . உள்ளங்களை பரிமாறிக்கொண்டது /////////////////////////////////////////////////////////////////// கொடுத்த முத்தத்தை விட கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம். முத்தமிட்டது சில வினாடிகளே! முத்தம் தந்த பரவசம் தினம் தினம். சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன் அவளை முத்தமிட. ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன் முதல் முத்தம். முதலில் கை பின் கன்னம் அப்புறம் உதடுகள் இந்த வரிசையில் முத்தமிட…

  10. பொலிவியாவில் மூன்றுநாள் கட்டிப் பிடி திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொலிவியத் தலைநகரான லா பஸ் நகரில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த இவ்விழாவின் கடைசி நாளில் மட்டும் சுமாராக 10 லட்சம் பேர் பங்கு கொண்டனராம். இந்த விழாவின் போது வரிக்குதிரை உடை அணிந்து வந்த இளைஞர்கள் வருவோர் போவர் அனைவரையும் கட்டிப் பிடித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவை, லா பஸ் கல்சுரல்ஸ் அஃபெர்ஸ் என்ற அமைப்பு நடத்தியுள்ளது. வித்தியாசமான இந்த கட்டிப் பிடித் திருவிழா உலக மீடியாக்களின் கவணத்தை பொலிவியாப் பக்கம் திருப்பியுள்ளது. இந்த கட்டிப் பிடி திருவிழாவில் நிபந்தனையும் உள்ளது. என்ன போட்டி என்றால் போட்டியில் பங்கேற்பவர் இந்த ‘ஹக் டே’ அன்று மட்டும் 30,000 ஹக் (அனைப்பு)ஸ் பெற…

  11. சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும், சுருட்டு சாமியார் என்றழைக்கப்பட்டவருமான பழனிச்சாமியும், அவர் 3வது கல்யாணம் செய்து கொண்ட பெண் டாக்டர் திவ்யாவும் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டனர். சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந் நிலையில் தன்னிடம் குறி கேட்க வந்த பெண் ஹோமியோபதி டாக்டர் திவ்யாவுடன், பழனிச்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திடீரென கல்யாணம் செய்து கொண்டனர். இந்தக் கல்யாணத்திற்கு 2வது மனைவி மணிமேகலை ஆதரவாக இருந்தார். மேலும் கல்யாண…

  12. 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o

  13. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை. நாணயத்தாள்களைச் …

  14. பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புள்ளி விபரத் தகவலின் படி பிரித்தானியாவில் போதைப்பொருள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதுடன் இதர குற்றங்களும் கடந்த ஆண்டு போலவே குறைவில்லாமல் இருக்கிறது. பிரித்தானியாவில் 24 மணி நேரமும் மதுப்பானச்சாலைகளை திறக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டுகின்ற போதும் பிபிசி போன்ற அரச தரப்பு ஊடகங்கள் அவற்றை பூசிமெழுகிக் கொண்டு இருக்கின்றன..! பிரித்தானியா குழந்தைகள் வளர உகந்த இடமாக இல்லை என்று ஐநா அறிக்கை வெளியிட்டது.. அதன் பின்னர் ஐரோப்பாவிலேயே குடும்பப்பிரிவினைகளால் வீதிக்கு வரும் பிள்ளைகளால் வன்முறை அதிகரித்திருப்பது பிரித்தானியாவில் தான் அ…

  15. அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர். ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர். மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த கோயிலை உருவாக்கி, நிர்வகித்து வரும் கணேசமூர்த்தி மௌன அடிகளார் இது குறித்து கூறும்போது, ''இந்த கோயிலை நான் உருவாக்கி 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆ…

  16. Last witness remembers Hitler's suicide Guy Jackson | Berlin Rochus Misch still remembers the sight as if it were yesterday: 60 years ago on Saturday he looked through a doorway and saw Adolf Hitler had committed suicide. Misch (88) is the only person still alive today to have seen the Nazi leader and his wife Eva Braun dead in their bunker deep under the shattered city of Berlin. "Hitler was sitting at the table, slumped forward, and Eva Braun was lying next to him. I saw that with my own eyes," Misch told French news agency AFP on Thursday from his home in the German capital. "But we had been expecting it. It didn't come out of the blue. …

    • 0 replies
    • 1.5k views
  17. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...? பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன…

  18. நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வானில் விநோத உருவங்கள் வட்டமிடுவதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். காரணம், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக கூறப்படுகிறது. முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகளாக இருக்கும் என நினைத்த பொதுமக்கள், பின்னர் அவை மனித உருவத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மிக உயரத்தில் பறக்கும் இந்த விநோத உருவங்கள் திடீரென பூமிக்கு வெகு அருகில் வருவதாகவும், பின்னர் அவை மீண்டும் வானத…

  19. லோரியல் ஷாம்பு விளம்பரத்தில் இருந்து ஐஸ்வர்யாராய் நீக்கமா? திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 05:54 மும்பை : பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் கடந்த 10 ஆண்டுகளாக லோரியல் ஷாம்பு விளம்பரதூதராக இருந்து வருகிறார். இவரை கம்பெனி நிர்வாகம் அதிலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அக்கம்பெனியின் புத்தாண்டு விளம்பரத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து தங்களது கம்பெனி விளம்பர தூதராக இருந்து வருவதாகவும் அவரை அதில் இருந்து நீக்கவில்லை என்றும் தங்களது கம்பெனியின் அங்கத்தினர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் இருப்பதாகவும் லோரியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே சில வேலைகளில் ஒப்புக்…

    • 2 replies
    • 1.5k views
  20. 12 APR, 2024 | 10:10 AM கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (11) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்து. பிரேத பரிசோதனையில் கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைய…

  21. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதுண்டா ? நீதிபதிகள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அத்திபூத்தாற் போல் ஒரு சில தமிழர்களைத் தவிர.. ஒரு நாள் நிகழ்ச்சியில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நீதிபதியாக வந்திருந்தார். அப்போதுதான் அவருடைய தமிழின உணர்வு எனக்கு தெரிந்த்து. தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்காத பாடகர்களை தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று திருத்தியது மட்டுமில்லாமல் ”நீ தமிழச்சியா ? ஒரு தமிழச்சி தமிழை இப்படி உச்சரிக்கலாமா ?” ”தமிழச்சினா தமிழச்சிதான்” என்று பூரிப்பு அடைந்தது வரை நிகழச்சி முழுக்க தமிழ், தமிழச்சி என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். இது தாங்காத ஒரு கேரள மாநில போட்டியாளர் பெய…

    • 16 replies
    • 1.5k views
  22. இந்திய வெளிவிவகார அமைச்சு யாருக்கு? சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகார அமைச்சு கேட்பதாக செய்தி உலாவருகிறது. ஆனால் அவருக்கு அத்துறையின் அமைச்சுப் பதவி கொடுக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. News: Moments after BJP's parliamentary meet was concluded, Narendra Modi urged Rajnath Singh to accompany him to Varanasi. The BJP President had other work lined up in the day. Nevertheless, he cancelled all plans and decided to go with Modi. More than a symbolic gesture - that of having his party's president by his side while he performs the widely-watched Ganga aarti - Modi and Rajnath decided to do the Varanasi trip together to discuss the look of the Cabinet, say sources…

  23. போதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன் இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது. இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். …

  24. கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்! சென்னை: கணவரின் இறந்த உடலுடன் 3 நாட்களாக தனியாக வசித்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெண். அவர்கள் வளர்த்து வரும் 7 பூனைகளும், 3 நாய்களும் வெளியில் எங்கும் போகாமல் அந்த முதியவரின் உடலுக்கு அருகேயே அமர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சென்னை அடையார், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (60). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. சசிகலாவுக்கு லேசான மன நல பாதிப்பு உண்டு. குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியினர் 7 பூனைகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.