செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இது தேர்தல்காலம். அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பரபரப்பாக இருப்பதற்கு ஈடாக- இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் அதிகமாக- பரபரப்பாக பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மக்களை பரபரப்பாகவும், சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வைத்திருக்க வேண்டியவர்கள் அவர்களல்லவா. ஆகவே செய்திகளை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் காலடி தேடியே செய்திகள் வந்து கொண்டிருக்கும் காலம். இவர்கள் ஒரு வகை பத்திரிகையாளர்கள். இன்னொரு வகை பத்திரிகையாளர்களும் இருப்பார்கள். அவர்கள் கல்லாப் பெட்டியை நிறைப்பதில் குறியாக இருப்பார்கள். சாம,தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமிருந்து பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள். எப்படியோ, ஒரு தேர்த…
-
- 3 replies
- 772 views
-
-
மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் திருட்டு! மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. பரிஸின் ஆறாம் வட்டாரத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாம் நெப்போலியனான Jean-Christophe Napoleon Bonaparte இன் மனைவி பேரரசி யூஜெனீ (Empress Eugenie) இன் மோதிரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த மோதிரம் 40 கரட் இரத்தினங்களால் செய்யப்பட்டது எனவும், இதன் இன்றைய மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://athavannews.com/மாவீரன்-நெப்போலியன்-மனைவ/
-
- 2 replies
- 772 views
-
-
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் எனத்தகவல் வாஷிங்டன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்தை 75- க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்ச…
-
- 0 replies
- 771 views
-
-
ரயில் நிலையத்தில் வைத்து தனது அலைபேசியில் ஆபாச படம்பார்த்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை விடுவித்த சம்பவமொன்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரணவீர பட்டபெதிலாகே ரணில் விக்கிரமசிங்க என்ற இளைஞனே இவ்வாறு ஆபாச படம்பார்த்துகொண்டிருந்துள்ளார். அவரை அவரது தந்தையான ஆர்.பி. மைத்திரிபால பொலிஸுக்கு வந்து பொலிஸ் பிணையில் மகனை அழைத்துச் சென்றார். - See more at: http://www.tamilmirror.lk/153328/ஆப-சப-படம-ப-ர-த-த-ரண-ல-ப-ண-ய-ல-எட-த-த-ர-ம-த-த-ர-#sthash.z75fU7mu.dpuf
-
- 2 replies
- 771 views
-
-
மெக்சிகோ நாட்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், ஒன்பது சிசுக்களை சுமந்து கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் 20ம் தேதி இவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண், கடந்த 2009ல் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றது தான் உலக சாதனையாக கருதப்பட்டது. இதேபோல, தற்போது மெக்சிகோ நாட்டின் கோயஹுய்லா பகுதியை சேர்ந்த கர்லா வனிசா என்ற பெண், ஒன்பது குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லை பகுதிக்கு அருகே இவரது ஊர் உள்ளது.இந்த பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை. தற்போது இந்த பெண் சால்டிலோ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், 20ம்தேதி இவரது பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவரது கர்…
-
- 1 reply
- 771 views
-
-
அமெரிக்காவின் மிசூரியை சேர்ந்த பெண் ஒருவர் வாகனம் ஓடியபோது வாகனத்திலுள்ள வாயுமிதிபலகை (accelerator/Gas pedal) செருகுப்பட்டதால் வாகனம் சடுதியாக வேகம் கூடி மணிக்கு 190km வேகத்தில் பயணிக்க தொடங்கியது. வாகனத்தின் சாரதியான பெண்ணும் பலவிதமாக வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். பிரேக்கை பலவாறு மிதித்து பார்த்தார். கியரை மாற்றி பார்த்தார். என்ஜினை நிறுத்த பார்த்தார். அவசரகால பிரேக்கை பிரயோகம் செய்தார். எதுவுமே பலன் அளிக்கவில்லை. வாயு மிதிபலகை செருகுப்பட்டதை உணர்ந்த அவர் இறுதியாக 911 ஐ அழைத்தார். அவசரகால சமிக்ஞைகளை கொடுத்தபடி உதவிக்கு வந்த ஒரு காவல்துறை வாகனம் முன்னாலும் இன்னோர் காவல்துறை வாகனம் பின்னாலும் பயணிக்க தொடர்ந்து குறித்த பெண்…
-
- 5 replies
- 771 views
-
-
- பாறுக் ஷிஹான் - கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .வருகின்ற கதாபாத்திரங்கள…
-
- 10 replies
- 771 views
- 1 follower
-
-
இது சாத்தியமா..? முடியுமா..? நடக்குமா..? இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகச் சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு பதினோறு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளதாக இணையத்தில் விநோத செய்தி ஒன்று உலவுகிறது.. இது வதந்தி அல்லது பேத்து மாத்து வேலையாகவே இருக்க முடியும்... http://www.nairaland...c-862360.0.html http://www.zurmat.co...ds-all-at-once/ .
-
- 3 replies
- 771 views
-
-
'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது. அதன்படி, இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டில் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79-வது இடத்திலும், 2017-ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்தபோதிலும், 81-வது இடத்தைப் பிடித்து, பின்தங்கியது. தற்போது 2018-ம் ஆண்டு 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின…
-
- 1 reply
- 770 views
-
-
வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் ப…
-
- 6 replies
- 770 views
-
-
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்பர் அல் கடாபி சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி படையினரால் கொல்லப்பட்டார். கடாபி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்க்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கடாபி இறந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. டெய்லி மெயில் தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் க…
-
- 3 replies
- 770 views
-
-
நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது. அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார். நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு. கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்ட…
-
- 9 replies
- 770 views
-
-
நான்கு முட்டைகள் போட்ட பாம்பு https://www.facebook.com/video/video.php?v=607377166055073
-
- 6 replies
- 769 views
-
-
விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து, அம்மாநில தலைநகர் கவுகாத்தி நோக்கி, நேற்று காலை, ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றபோது, நடுவானில் விமானத்தின் முன்சக்கரம் கீழே விழுந்தது. இருந்தாலும், மிகுந்த திறமையாகச் செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் விமானிகள். இதனால், 48 பயணிகள் உட்பட 52 பேர் உயிர் தப்பினர். அசாம் மாநிலம் சில்சார் விமான நிலையத்திலிருந்து, தலைநகர் கவுகாத்திக்கு நேற்று காலை, ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் 48 பேர், விமானியான கேப்டன் ஊர்மிளா, துணை விமானி யாஷூ மற்றும் பணியாளர்கள் என, மொத்தம் 52 பேர் இருந்தனர். சில்சார் விமான நிலையத்தில்…
-
- 6 replies
- 769 views
-
-
'தண்ணீருக்காக தன்னந்தனியாக வெட்டிய சுரங்கம்' - பத்மஸ்ரீ விருது பெறும் கர்நாடக விவசாயியின் உத்வேகக் கதை தண்ணீருக்காக தன்னந்தனியாக சுரங்கம் வெட்டி, தரிசு நிலத்தை மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளார். உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கைக் கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் கோவையைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாள். தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து இயற்கையான உணவு என ஆரோக்கியமான முறையில் வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள். விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மூதாட்டி பாப்பம்மாளை கௌரவிக்கும் விதமாக பத்ம விருது வழங்கப்பட்டது. மூதாட்டி பாப்பம்மா…
-
- 5 replies
- 769 views
-
-
பேசுவதற்காக மட்டுமே கண்டறியப்பட்ட தொலைபேசி இன்று அலைபேசியாக உருமாறி நிற்கின்றன. இன்றைய அவசர யுகத்துக்கு அவை அவசியமும் கூட. ஆனால், இன்றும் தன் தாத்தா வாங்கிய தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். பழைமையான தொலைபேசி பற்றி நம்மிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், ``இப்போது நானே ஐபோன் 10x மொபைல் வைத்திருக்கிறேன். ஆனால், இந்தத் தொலைபேசியைவிட மனமில்லை. இன்றைய தலைமுறைகளுக்கு இதன் அருமை தெரியாது. அந்தக் காலத்தில் தொலைபேசி இருக்கும் வீட்டுக்கு ராஜ மரியாதை இருக்கும். இப்போதிருக்கும் செல்போன் கதிர்வீச்சுகள் பிரச்னை அப்போது இல்லை. இந்த போனில் ஒரு முனையை மட்டும் காதில் வைத்து போன் பெட்டியில் உள்ள மைக்கில் பேச வேண்டும். எதிர்முனையில் மெல்…
-
- 1 reply
- 769 views
-
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 02:33 PM (அட்டன் கிளை) டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்த…
-
-
- 13 replies
- 769 views
- 1 follower
-
-
நோர்வேயில் கடலுக்கடியில் உணவகம் முதன் முறையாக ஐரோப்பாவில் கடலுக்கடியில் உணவகம் திறந்து அமைக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் தென்பகுதியில் இந்த உணவகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 40 பேர் அமர்ந்து இங்கு உணவு உட்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடலுக்கடியில் 5 மீட்டர் ஆழம் வரை கட்டப்பட்டுள்ள குறித்த உணவகத்தின் பெயர் ‘Under’ என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நோர்வேயில்-கடலுக்கடியில/
-
- 3 replies
- 768 views
-
-
‘பள்ளிக்கூடங்கள் என்பவை கட்டளைகளுக்குக் கீழ்ப்பணியச் சொல்லும் கேந்திரங்கள். அதனால், நீ எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் போகாதே’ என்று எந்த அம்மா சொல்லுவாள் ? ஒருத்தி சொன்னாள். அதனாலேயே அந்தச் சிறுவன் படித்ததெல்லாம் வீட்டில்தான். கொஞ்ச நஞ்சமல்ல. நிறையப் படித்தான். நூலகங்கள், வெளியுலகப் புத்தகங்கள் என்று, படிப்பைத் தவிர வேறெதுவும் தெரியாமல் படித்தான். பின்பு பல்கலைக்கழகப் படிப்பு. அம்மா அவனுக்கு கமாடார் 64 (Commodore 64) என்ற பழசான ஒரு கணினியை வாங்கிக்கொடுத்தாள். 16 வயதில் Mendax என்கிற பெயரில் உலாவ ஆரம்பித்தான். அவனும் அவனுடைய 2 நண்பர்களும் சேர்ந்துகொண்டு International Subversives என்ற ஒரு குழுவை ஆரம்பித்தார்கள். இரண்டே வருடங்கள், ஜூலியனுக்கு நெட்வொர்க் எல்லாம் பழகி…
-
- 1 reply
- 768 views
-
-
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அ…
-
- 4 replies
- 768 views
-
-
இங்கிலாந்து எம்5 நெடுஞ்சாலையில்(near Taunton) இரவு நடந்த வாகன விபத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் 43க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 20சிறிய ரக வாகனங்களும், 6 பாரஊர்திகளும் சேதமடைந்துள்ளன.மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அவற்றில் பலர் சிக்கி இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://youtu.be/7kvzia4XSlY http://www.manithan.com/view-2011110515176.html
-
- 3 replies
- 768 views
-
-
எனது பங்களாவில் செடிகளுக்கு, சிறுநீரை தான் ஊற்றுகிறேன். கட்கரி சொன்ன ரகசியம்! நாக்பூர்: தனது டெல்லி பங்களாவில் இருக்கும் செடிகளுக்கு தனது சிறுநீரை ஊற்றுவதால் தான் அவை வேகமாக வளர்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நீர்பாசன முறைகள் பற்றி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், ஒரு 50 லிட்டர் கேனை எடுத்து அதில் என் சிறுநீரை சேமித்தேன். அதை என் தோட்டக்காரிடம் அளித்து சில செடிகளுக்கு ஊற்றுமாறு கூறினேன். என்ன அதிசயம், சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள் பிற செடிகளை விட ஒன்றரை மடங்கு வேகமாக வளர்ந்துவிட்டன. தினமும் சிறிய பிளாஸ்டிக் கேனில் சிறுநீரை பிடித்து அதை 50 லிட்டர் கேனில் …
-
- 9 replies
- 767 views
-
-
எனது புகைப்படம் நன்றாக இல்லை, வேறு படம் மாற்றுங்கள்; தேடப்படும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கோரிக்கை சந்தேக நபர் ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி, பேஸ்புக் பக்கத்தில் சந்தேக நபரின் புகைப்படத்துடன் பொலிஸார் தகவல் வெளியிட்டனர். "இப்புகைப்படம் நன்றாக இல்லை, வேறு அழகான படம் போடுங்கள்" என சந்தேக நபரே பதில் அளித்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பொலிஸார், டேனியல் டொமோன் எனும் சந்தேக நபரை தேடிவந்தனர். அந்நபர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டேனியலின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்…
-
- 0 replies
- 767 views
-
-
வணக்கம்! உடுப்பிட்டி அமெரிக்கன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவ மாணவிகள் ஒன்றினைந்த சங்கத்தின் {கனடா கிளை} வருடாந்த பொதுக்கூட்டமும், நடப்பு வருடத்திற்கான நிர்வாக சபைத்தெரிவும் 23-05-2010 ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று மாலை 4.00 மணியளவில் 5310 Finch Ave East, Unit 37[ Markham & Finch] இல் அமைந்துள்ள பாரதி ஆர்ட்ஸ் மண்டபத்தில் கடந்தாண்டுக்கான நிர்வாகத் தலைவர் சு.பாலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. தாயக அவலங்களின்போது சிக்குண்டு உயிர்நீர்த்த உறவுகள், தாயக மீட்புக்காக வீரமரணமடைந்த போராளிகள், புலம்பெயர்ந்த நாடுகளின் உயிர்நீர்த்த அனைத்து உறவுகளுக்காகவும் ஓரிரு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தி இந்நிகழ்வு ஆரம்பமாகியது. அதைத்தொடர்ந்து கடந்தாண்டு அறிக…
-
- 2 replies
- 767 views
-
-
அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச் சேர்ந்த ஆன் மேரி ஓ டூல் எனும் பெண்ணை காதலித்து வந்தார். ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமானதாக்குவதற்கு அயர்லாந்து மக்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தனது காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி யொன்றின் தில் விக்கிரமசிங்க வெளியிட்டார். இத் திருமண யோசனைக்கு ஆன் மேரி சம்மதம் தெரிவித்தார். செயற்கை முறையில் கருத்தரி…
-
- 7 replies
- 766 views
-