Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே …

    • 33 replies
    • 253.5k views
  2. மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். கீழே உள்ள பாடலில் திரிபதாதி சொல் ஒளிந்துள்ளது. முன்னொரு ஊரின் பேராம் முதலெழுத்து இல்லாவிட்டால் நன்னகர் மன்னர் பேராம் நடுவெழுத்து இல்லாவிட்டால் கன்னமா மிருகத்தின் பெயர் கடையெழுத்து இல்லாவிட்டால் உன்னிய தேனின் பேராம் ஊரின் பேர் விளம்புவீரே !! விடை : மதுரை 1. துரை 2. மரை 3, மது இதே மாதிரி வேறு எதாவது திரிபதாதி பாடல் தெரிந்தால் பகிரவும்.

    • 1.6k replies
    • 131.3k views
  3. ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!

  4. காளமேகம் குறிப்பு: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும். காளமேகப் புலவர் …

  5. தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3 வாக்கியங்கள் எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும். பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும். சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க. பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்! “அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க. “மூல…

  6. பல பொருள் கொண்ட ஒரு சொல்லை இங்கே இணையுங்கள். அவற்றின் விளக்கத்தையும் தாருங்கள். உதாரணமாக 1. குடை - வெயில் மழையில் சாதாரணமாக பாவிப்பது. (சிறப்பான பாவனைக்கு சைவனை கேட்கவும்) 2. குடை - மனதில் ஏதேனும் தொடர்ந்து வந்துகொண்டிருத்தல்.( இது சரியான விளக்கம் இல்லை). 3. குடை - ஒரே அணியில் ஏனைய அணிகள் இணைந்து செயற்படல் 4. குடை - பேரூந்து குடை சாய்ந்தது. 5. குடை - துருவித்துருவி கேள்வி கேட்டல் 6. குடை - அவன் அதை வைத்து குடைந்து கொண்டிருந்தான். அவன்தான் அதனை பழுதாக்கியிருக்கவேண்டும். எங்கே உங்களாலும்முடியும். நினைவுக்கு வருவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • 6 replies
    • 58.9k views
  7. தமிழ்ப் பழமொழிகள் என்றால் அது மிகையாகாது. ஆண்டாண்டு காலமாக எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வழங்கிவந்த பழமொழிகளை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் சேர்ப்பதென்பது கஷ்டம், கீழே உள்ளவற்றில் இல்லாத ஏதவது பழ மொழிகள் உங்களுக்கு தெரிந்தால், இணைத்துவிடுங்கள், பல பழ மொழிகள் பேச்சு வழக்கில் இருக்கு ஆனா எழுத்துவடிவில்ல இல்லை ======================================== அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல இருந்தால் பகையும் உறவாம். அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். அக்காள…

  8. ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது. ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்! வேண்டுவதை வேண்டியபடி எளிதில் தரும் அட்சய பாத்திரம் என்ற வகையில் திருக்குறளைப் புரட்டினேன். கல்வி க…

  9. நிலம் 1. நிலம் (பொதுவாக சொல்வது) 2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் 3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம் 4. மேய்ச்சல் நிலம் - கால்நடைகள் மேய்யும் நிலம் 5. வட்டகை நிலம் - சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம் 6. அசும்பு -- வழுக்கு நிலம் 7. அடிசிற்புறம் - உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம் 8. அடுத்தூண் - பிழைப்புக்கு விடப்பட்ட நிலம் 9. அறப்புறம் - தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம் 10. ஆற்றுப்படுகை - நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம் 11. இதை - புன்செய் சாகுபடிக்கான நிலம் 12. இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம் 13. உவர்நீலம் - உப்புத்தன்மை கொண்ட நிலம் 14. உழவுகாடு - உழவுக்கேற்ற நிலம் 15. உ…

  10. Started by Eelathirumagan,

    நண்பர்களே!! தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள். அன்புடன் - ஈழத்திருமகன் -

    • 69 replies
    • 37.2k views
  11. தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2 விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம் சொல்லதிகாரம் ஒரு எழுத்துத் தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு முளுப்பொருளைத் தருமாயின் அதற்குச் சொல் அல்லது பதம் எனப்பெயர். அதாவது சொல் என்பதற்கு அவசியம் அதன் பொருள் என்னவென்பதே. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியரும் எல்லாச் சொற்களும் பொருள் உள்ள கருத்துள்ள சொற்களே என்று இலக்கண விதிகளும் உண்டு. இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள் அற்ற சொற்களை அசைச் சொல் எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா எல்லா என்ற சொற்களும் நாங்கள் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஹலோ என்ற சொல்லும் இன்னும் வேறுபலவும் இருக்கலாம் மியா என்ற சொ…

    • 106 replies
    • 36k views
  12. வணக்கம் எல்லோருக்கும்.. இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள். “கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன் பரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்” கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்..... என்னட…

  13. APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம் APRICOT - சர்க்கரை பாதாமி AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா BANANA - வாழைப்பழம் BELL FRUIT - பஞ்சலிப்பழம் BILBERRY - அவுரிநெல்லி BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY - நாகப்பழம் BLUEBERRY - அவுரிநெல்லி BITTER WATERMELON - கெச்சி BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம் CARAMBOLA - விளிம்பிப்பழம் CASHEWFRUIT - முந்திரிப்பழம் CHERRY - சேலா(ப்பழம்) CHICKOO - சீமையிலுப்பை CITRON - கடாரநாரத்தை CITRUS AURANTIFOLIA - நாரத்தை CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம் CITRUS MEDICA - கடரநாரத்தை CITRUS RETICULATA - கமலாப்பழம் CITRUS SINENSIS - சாத்துக்கொடி CRANBERRY - குருதிநெல்லி CUCUMUS T…

    • 17 replies
    • 34k views
  14. பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல் ஔவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது, அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தெறித்த குறள். என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு…

  15. 'களவும் கற்று மற' தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம். ' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும். எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் …

    • 3 replies
    • 29.3k views
  16. நான் அறிந்த ஒரு சில தூய தமிழ்ச் சொற்களை இப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளேன். மேலதிகமான தூய தமிழ்ச் சொற்களை அறிந்தவர்கள் இப்பகுதிக்கு எடுத்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி சைக்கிள் - மிதியுந்து அலாரம் - துயிலெழுப்பி மோட்டார்ச்சைக்கிள் - உந்துருளி லொறி - பாரஊந்து பேக்கரி - வெதுப்பகம் ஜிவலரி - பொற்தொழிலகம் ஐஸ்கிறீம் - குளிர்கழி கூல்பார் - குளிர்பருகை நிலையம் எயிட்ஸ் - எசகு நோய் (எதிர்ப்பு சக்தி குறைவு) புகையிரதம் - தொடருந்து சந்தோசம் - மகிழ்ச்சி

    • 39 replies
    • 29.2k views
  17. புறம் கூறுதல்! வேறொரு பகுதியில் "புறம் கூறுதல்" என்ற சொல்லில் வருகின்ற "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கும் என்பதில் எனக்கும் நண்பர் நெடுக்காலபோவானிற்கும் ஒரு விவாதம் ஏற்பட்டுள்ளது. புறம் கூறுதல் என்பது ஒருவரிடம் நேரடியாக குறைகளை சொல்லாது அவர் இல்லாத நேரத்தில் குறையை கூறுவது ஆகும். இந்த விடயத்தில் இருவரும் ஒத்துப் போகிறோம். ஆனால் பிரச்சனை இங்கே "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதாகும் நெடுக்காலபோவன் "புறம்" என்ற சொல் "குறை" என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்று கூறுகிறார். நான் "புறம்" என்ற சொல் குறை கூறும் இடத்தை (அதவாது நேராக இன்றி புறமாக) குறிக்கும் என்கிறேன். இந்தச் சொல் கூறப்படுகின்ற விடயத்தை (குறையை) அடிப்படையாக இல்லாது, குறை கூறப்படுக…

    • 94 replies
    • 28.3k views
  18. வணக்கம் அன்பான கள உறவுகளே , ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன் . பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளயசமூகத்திற்கு , உலகின் பெருமளவு வழக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள்…

  19. Started by Theventhi,

    தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி அருமையான கவி வரிகளைக் கொண்டது, இந் நூல் தற்போது எம்மவரிடம் கைவசம் இருப்பதே அரிதிலும் அரிது. ஆகவே இப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசம் அடைகின்றேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள், அத்துடன் கருத்துக்களையும் எழுதுங்கள், தற்காலத்தில் அதன் பயன்பாட்டை நோக்குவோம். (விவேக சிந்தாமணியை எனது பதிவான "தமிழ்" பகுதியில் முன்னர் பதிவு செய்திருந்தேன், ஆனால் "விவேக சிந்தாமணி"யை தனிப் பிரிவில் பதிவு செய்வதே சிறப்பாக இருக்குமென்பதால் தனித் தலைப்புக்கு மாற்றியுள்ளேன், சிரமத்துக்கு மன்னிக்கவும்) விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுத…

    • 31 replies
    • 25.8k views
  20. இங்கு பொன்னியின் செல்வன் பகுதியை தொடர்ந்து இணைக்க போகிறேன், நல்ல எழுத்து நடையில் கல்கியால் எழுதப்பட்டது, நான் கன தரம் வாசித்துவிட்டேன், இன்னும் இதில் உள்ள மோகம் தீரவில்லை. என் கதாநாயகன் வந்தியதேவன் & கதாநாயகி பூங்குழலி. உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை பற்றி நீங்கள் விபரமாக எழுதாலம் அல்லது கீழே உள்ள வெப் இல் போய் சுட்டு இணைத்துவிட்டு அடுத்த அத்தியாத்தை வாசிக்கலாம் முதல் அத்தியாயம் வாசித்து முடித்துவிட்டால், சிலவேளைகளில் நான் இடையில் காணாமல் போய்யிடுவேன் பின் தங்கிய கிராமங்களுக்கு வேலை நிமித்தமாக. நீங்கள் உங்கள் தார்மீக ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள் By kalki - Posted on 29 October 1950 htt…

  21. "கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன? (நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ )

  22. ஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச் சாற்றினன்.. சிலம்பு - வரந்தரு காதை 32, 33. இந்தச் சிக்கலுக்கு இன்னது தீர்வு என்று எடுத்துக் கூறப்படும் செய்திக்குச் செம்மொழி என்று பெயர். நிறைமொழி, மறைமொழி, நன்மொழி என்ற வரிசையில் செம்மொழி என்பது தமிழின் ஒரு தனிப்பண்பு என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் “செவ்வை நன்மொழி” என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. மறுக்கவில்லை. அவ்வை அம்மையாவது போல, கொவ்வை கொம்மையாவது போல செவ்வை நன்மொழி என்பது செம்மொழி ஆகிறது எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன என்று கொள்ளலாம். அகநானூற்றுப் புலவர் மாமூலனார் குறிப்பிடும் செம்மொழியும், சிலம்பு குறிப்பிடும் செம்மொழி மாதவச்…

    • 0 replies
    • 23.1k views
  23. பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுகளுக்கான இலக்கியப் பெயர்கள் : காண்க - தாய் & தந்தை:- அம்மா, அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் கணவன் :- கணவன் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் மனைவி :- மனைவி என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் தம்பதி- மணவினையர், சோடி, இரட்டை. கணவன் மனைவியினை அழைக்கும் விதம் - பெண்டில் , என்னவள் , இஞ்சாருமப்பா, பெயர்கூறி அழைத்தல் (தமிழ்நாட்டு வழக்கு) மனைவி கணவனை அழைக்கும் விதம் - என்…

  24. பொன்னியின் செல்வன் - முதலாவது பாகம், புது வெள்ளம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180&st=0

  25. தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம். தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன. இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும். இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல் எழுதி வ ரவும் கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும். அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம். பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் ம…

    • 224 replies
    • 20.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.