தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். "மாடப் புறாவே…
-
- 5 replies
- 2.5k views
-
-
ஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம்…
-
- 1 reply
- 2.1k views
-
-
யார்...மடையர்கள்? ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை" மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது. வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். மழ…
-
- 5 replies
- 3.5k views
-
-
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். இறைவனை மட்டுமே வணங்குதலும், மனிதர்களை வாழ்த்துதலுமே தமிழர் மரபு. சேர மன்னன் குடும்பத்துடன் கானகம் சென்ற போது 'வாழ்க எம்கோ' என மக்கள் வாழ்த்தினர். அவ்வாறே 'வாழ்க நீ எம்மான்' என அரசர்களைப் புலவர்கள் வாழ்த்துதலே தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது. சம்ஸ்கிருத மொழிக்கலப்பால் பிற்காலத்தில் வணக்கம் மனிதர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது. சம்ஸ்கிருதத்தில் அவர்கள் `நமஸ்காரம்' என்று கூறியதை நாம் வணக்கம் எனத் தவறாக மொழிமாற்றம் செய்து, மனிதர்களையும் வணங்க ஆரம்பித்தோம். மனித வணக்கம் என்பது தமிழர் பண்பாட…
-
- 1 reply
- 3.3k views
-
-
இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? மின்னம்பலம் -இலக்குவனார் திருவள்ளுவன் ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
காந்தள் மெல்விரல் குமரன் கிருஷ்ணன் டிசம்பர் 29, 2019 குமரன் மாலை நேர மழையால் சுத்திகரிக்கப்பட்ட மாசுற்ற பெங்களூர் சாலைச் சந்திப்பு ஒன்றில் பச்சை வேண்டிக் காத்திருந்த போது சத்தமின்றி காரின் முன் கண்ணாடி மீது விழுந்தது செக்கச் சிவந்த இதழ் ஒன்று. குமிழ், உடைய எத்தனிக்கும் குமிழ், சற்று முன் உடைந்த குமிழ் வழியே நனைந்த மென்தேகம் என மழையின் வடிவங்களை தன் மேல் தாங்கி என்னை நோக்கிச் சாய்ந்திருந்தது இதழ். சிதைக்க மனமின்றி சட்டென்று வைப்பரை நிறுத்தினேன் நான். பூஜ்யத்திற்கு பக்கத்தில் இருக்கும் என் தாவரவியல் அறிவு அது பற்றிய கூச்சமின்றி, நினைவில் நிற்கும் பூக்களின் பெயர்களை வேகமாகப் பரிசீலனை செய்தது. அது குல்மொஹராகவோ காந்தளாகவோ இருக்கலாம். குறிஞ்சியில் செழிக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
# வடசொல் தமிழ் 1 அகங்காரம் செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல் 2 அகசுமாத்து தற்செயல், திடீரெனல் 3 அகதி வறியவன், யாருமற்றவன் 4 அகந்தை இறுமாப்பு, செருக்கு 5 அகம்பாவம் தற்பெருமை, செருக்கு 6 அகராதி அகரவரிசை 7 அகற்பிதம் இயல்பு 8 அகா…
-
- 1 reply
- 8.4k views
-
-
தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் -சுப.சோமசுந்தரம் இப்போதெல்லாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வள்ளுவம் தமிழர்தம் வாசிப்பில் கலந்ததோ என்னவோ, சுவாசிப்பில் கலந்தாற் போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள் எக்காலத்தும் வாழ்ந்தவர்தாமே! நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாய், திடீரென உறவாடிக் கெடுக்க நினைக்கும் உன்மத்தர்க்கே நம் நன்றி உறித்தாகுக! ‘ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்…
-
- 2 replies
- 2k views
- 1 follower
-
-
ரசித்த சில சிலேடைகள் திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும். அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார். “அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்." அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார் விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சி…
-
- 4 replies
- 14.7k views
-
-
உயர் தனிச் செம்மொழி?! பிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது? தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும்…
-
- 0 replies
- 2.9k views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும், பழமொழிகளின்... உண்மையான அர்த்தம் இதுதான்.
-
- 1 reply
- 2.6k views
-
-
திருக்குறளில் மரம் முன்னுரை: வாயுறை வாழ்த்து எனப் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் மரம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. நுண்மாண் நுழைபுலம் மிக்க தெய்வப் புலவராம் வள்ளுவர் மரத்தின் தன்மைகளைப் பற்றியோ நன்மைகளைப் பற்றியோ அறியாதவரல்லர். 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்', 'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்று மரத்தின் நன்மைகளைக் கூறி அவற்றைப் போற்றிய வள்ளுவர் 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்', 'மண்ணோடியைந்த மரத்தனையர்', ' மரமக்கள் ஆதலே வேறு' என சில இடங்களில் மரத்தின் சிறப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக இன்றைய உரைநூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் உண்மையில் அவ்வாறு கூறியிருப்பாரா?. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பதை ஆய்வின் ம…
-
- 0 replies
- 18.8k views
-
-
'களவும் கற்று மற' தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம். ' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும். எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் …
-
- 3 replies
- 29.4k views
-
-
திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்? வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கும்போது அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்? மேற்கண்ட வினா 'Quora' தமிழ் தளத்தில் வினவப்பட்டு, பலநாட்கள் கழித்தே என் கண்ணில்பட்டது. ஐயம் வினவுவதற்குப் பதிலாக, தீர்ப்பை எழுதிவிட்டு, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் தொனியில் இரு…
-
- 6 replies
- 8.6k views
-
-
உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாய் இருந்த போதும் காலாதிகாலமாக தமிழ் பல மொழிகளிடம் இருந்து சொற்களை வாங்கி தன்னை வளப்படுத்தியே வந்திருக்கிறது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் பண்டைத் தமிழரின் பரந்த மனோநிலையும் இதற்கு ஒரு காரணம். வடமொழி முதல், மலாய், டச்சு, போர்த்துகீசு, ஆங்கிலம் என பல மொழிகளிடம் இருந்து சொற்களை சுவீகரித்து அவற்றை “திசைச் சொற்கள்” என இலக்கணப்படுத்தியும் வைத்துள்ளது தமிழ். ஆனால் இந்த போக்குவரத்து ஒன்றும் ஒரு வழிப்பாதை அல்ல. ஏனைய மொழிகளும் தமிழிடம் பல சொற்களை இரவல் வாங்கியுள்ளன என்பது மறுக்கவியலாத உண்மை. சொற்களை மட்டுமல்ல, இன்று மலாய், பாசா இந்தோனேசியா என இரு சிறு மொழிகளாய் பிரிந்து கிடக்கும் மலாய் மொழி, ஒரு காலத்தில் தமிழ் பல்லவ எழுத்துருக்…
-
- 7 replies
- 3.4k views
-
-
கவியரசு கண்ணதாசனின் நெத்தியடி பதில்! - "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது தெரியாமல் போனாலோ வேதாந்தம்!" பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பது ஏன்? - இது 'quora' தளத்தில் கேட்கப்பட்ட வினா. இவ்வினா இரண்டு வினாக்களை உள்ளடக்கியது! 1. முதல் வினா: அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது ஏன்? 2. அத்துவைத வேதாந்தம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது ஏன்? இதற்கு நான் பதிவிட்ட விடைகளை இங்கு தருகி…
-
- 0 replies
- 5.5k views
-
-
"தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும் நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றிவேற்கை நன்கு வளர்ந்த ஆலமரத்தில் உள்ள கனிந்த ஆலம்பழத்தின் உள்ள ஒரு சிறு விதையானது சிறிய மீனின் முட்டையை விடவும் சிறிதாக இருப்பினும் கூட, அந்த விதையால் உருவான ஆலமர நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும். அதைப்போல,நீங்கள் பிறர்க்குதவும் செல்வம் குறைந்த அளவே இருப்பினும்கூட அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாகக் கூடும். இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 3 replies
- 19.8k views
-
-
ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது. ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்! வேண்டுவதை வேண்டியபடி எளிதில் தரும் அட்சய பாத்திரம் என்ற வகையில் திருக்குறளைப் புரட்டினேன். கல்வி க…
-
- 6 replies
- 49.6k views
- 1 follower
-
-
தமிழ் அறிக - 1 கையெழுத்தும் தலையெழுத்தும் சகாயம் பற்றிய இரண்டாம் கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் அதில் கையாண்டிருந்த இரு சொற்கள் குறித்து வினவினார். அவரது முதல் வினா கையெழுத்து , கையொப்பம் ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதாகும். இன்று பேச்சு வழக்கில் Hand writing , signature ஆகிய இரண்டு பொருள்களுக்கும் கையெழுத்து என்னும் ஒரே சொல்லைக் கையாள்கிறோம். அது சரியல்ல. 'புரியாத மாதிரி அவன் கையெழுத்து இருக்கிறது', 'புரியாத மாதிரி அவன் கையெழுத்துப் போடுகிறான்' இந்த இருதொடர்களிலும் வெவ்வேறு பொருள்களில் கையெழுத்து என்னும் சொல் வருகிறது. 'கையெழுத்துப் போடுதல்' என்று வந்துவிட்டால் அது Signature எனப் புரிந்துகொள்கிறோம். ஆனால் கையொப்பம் என்பதுதான் அதற்குச் சரி. வெவ்…
-
- 6 replies
- 9.6k views
-
-
இதில், சங்க இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட 46,000 தனித்தமிழ் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. பெட்னா மாநாடு ஒரு கலாசாரத்தின் வரைபடம் 'மொழி. ஒருவர் எங்கிருந்து வருகிறார், எதை நோக்கிப் பயணிக்கிறார் போன்ற தனிநபர் வரலாற்றின் சான்று அவர்களின் மொழியே. அப்படிப்பட்ட அரிய அடையாளத்தை எந்த அளவுக்கு நாம் பாதுகாக்கிறோம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. ஒரு நாளில் நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் நம் 'பெயர்'கூட இன்றைய சூழலில் பிறமொழியைச் சார்ந்துதான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் சிகாகோவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில், தமிழ் இயக்கம் உருவாக்கிய 'சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' எனும் நூல் வெளி…
-
- 1 reply
- 4k views
-
-
சங்க கால பெண்களின் நிலை குறித்த பல்வேறு விவாதங்களும், எதிர்மறைக் கருத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும், அப்பெண்கள் வீரத்திலும், அறத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறுக்க இயலாது. சங்க காலப் பெண்பால் புலவர்கள் பலரும் பெண்களின் வீரம், செருக்கு, துணிவு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளைப் பற்றிப் பல்வேறு செய்யுள்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். புறநானூற்றுப் பாடலொன்றில் ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்பால் புலவர் ஒருவர், தந்தை மற்றும் கணவனை இழந்து நிற்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தன் நாட்டைக் காப்பதற்காக, அவளது சிறு மகனையும் போருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார். புறநானூறு பாடல் எண் - 279 ஆசிரியர் - ஒக்கூர் மாசாத்தியார் திணை – வா…
-
- 0 replies
- 3.4k views
-
-
மணிமேகலையின் காதலும் துறவும்.. மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக…
-
- 1 reply
- 3.1k views
-
-
பதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்… தமிழ்ச் சமூக வரலாறு நீண்ட நெடிய வரலாற்றை, மனித குலம் தோன்றி நிலைபெற்ற செயல்முறையை விளக்கும் ஒளிவிளக்கமாய் திகழ்ந்து வருகிறது. தோண்ட தோண்ட நீர் பெருகுவது போல, ஆராய ஆராய பல புதிய கருத்துக்கள் தோன்றி பழந்தமிழர் வாழ்வை புதிய நோக்கில் ஆராயும் வேட்கையும் மிகுதியாகிறது. கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இலக்கியங்களும் இன்ன பிற சான்றுகளும் வரலாற்றை வெளிக்கொணரும். அதே வேளையில் அவை முழுமையும் உண்மை நிலையை பிரதிபலித்து விடுவதில்லை. எனினும் பல்லாயிரம் கருத்துக்களை தம்முள் புதைத்தும், மறைத்தும் இன்று விதையாக நின்று புதிய கோட்பாடுகளோடு பொருத்தி ஆராய்கையில் புதிய வாழ்வியல் கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் ‘…
-
- 3 replies
- 6.3k views
-
-
எரிதழல் -சுப.சோமசுந்தரம் நான் இதற்கு முன் எழுதிய ‘என்னே இந்த நகைமுரண் !’ என்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் அளித்த நண்பர் ஒருவர் பின்வரும் கருத்துக்களைக் கூறியிருந்தார் : “ பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியாரும் தம் தவறுக்குத் தண்டனையாக தம் உயிர் மாய்த்த பின் கண்ணகி மதுரையை எரித்தது ஏற்புடைத்தன்று.” “ இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் இலக்குவன் மீது சீதை கடுஞ்சினம் பொழிந்ததன் விளைவே இலக்குவனால் மூட்டப்பெற்ற சிதையில் சீதை பாய நேரிட்டது.” இவ்விரண்டினையும் ஒன்றாய்க் கட்டும் இழையாக ‘எரிதழல்’ எனும் இத்தலைப்பு அமைந்ததுடன், இலங்கையில் அனுமன் இட்ட தீயும் இண…
-
- 6 replies
- 6.1k views
- 1 follower
-
-
என்னே இந்த நகைமுரண் ! ( What an irony! ) - சுப.சோமசுந்தரம் வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்னேன், "குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அர…
-
- 13 replies
- 5.6k views
- 1 follower
-