Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நற்றிணை காட்டும் நற்பண்புகள்.! காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம். அன்பு: தலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி "என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது " நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பா…

  2. ஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம்…

  3. [size=1] [size=4]"மீனாட்சி! எதற்காக இப்படிக் கோபங் கொள்கிறாய்? காமாட்சி! நான் கொஞ்சுவது உன் காதிலே விழவில்லையா? நீலாயதாட்சி! நீ இப்படி இருந்தால் என் மனம் நிம்மதியடையுமா? அகிலாண்டேஸ்வரி! நான் உனக்குத் தவறென்ன செய்தேன்! அம்பிகே இப்படிப்பார், தியாகவல்லி! திரும்பிப்பார், திரிபுரசுந்தரி........” என்று சரசமாடும் சந்தம் கேட்டது.[/size][/size] [size=1] [size=4]இது யார், அர்த்தராத்திரியிலே, அனேக ஸ்திரிகளின் பெயரை அழைப்பது என்று பார்த்தேன், ஆலவாயப்பன், சொக்கன், சிவபெருமானிருக்கிறாரே, அவர் தமது தர்மபத்தினியுடன் பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். அவருக்கும் அம்மைக்கும் ஆயிரக் கணக்கிலே நாமதேயம் உண்டல்லவா! ஆலயத்துக்கு ஆலயம், வேறுவேறு பெயரல்லவா! ஆகவேதான் அவர் க…

  4. நன்னீரை வாழி அனிச்சமே ! --- சுப. சோமசுந்தரம் நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் …

  5. ஈழத்துக் கதைகள் - காசி ஆனந்தன் கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது. நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது. வளைக்குள் இருந்த ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது. அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு. தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:- 'முன்பே காப்பான் அன்பே நட்பு" நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது. 'மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறா…

    • 4 replies
    • 2k views
  6. தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும் சிலம்பம் கோலாட்டம் பட்டிமன்றம் வில்லுப்பாட்டு ஆட்டங்கள் கும்மி மயிலாட்டம் காவடியாட்டம் பொய்கால் குதிரை ஆட்டம் தெருக்கூத்து ஒயிலாட்டம் பாம்பாட்டம் உருமி ஆட்டம் புலி ஆட்டம் பறை ஆட்டம் கரகாட்டம் மாடு ஆட்டம் உறியடி ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம் சிலம்பாட்டம் குறவன் குறத்தி ஆட்டம் கைச்சிலம்பாட்டம் தேவராட்டம் தப்பாட்டம் காளியாட்டம் சேவையாட்டம் பேயாட்டம் சாமியாட்டம் கூத்துக்கள் சாந்திக் கூத்து சாக்கம் மெய்க் கூத்து அபிநயக் கூத்து நாட்டுக்கூத்து விநோதக் கூத்து குரவைக் கூத்து கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' கரகம் என்னும…

  7. இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம். காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே. ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்…

  8. Proud To Be Tamil இது போன்ற ஒரு பாடலை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.!! தயவு செய்து இதைப் படித்து விட்டுக் கடைக்கோடித் தமிழன் வரை பகிரவும்.!!! வில்லிப்புத்தூரார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர். ... அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம் வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சியிருந்தனர். எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒ…

  9. தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் -சுப.சோமசுந்தரம் இப்போதெல்லாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வள்ளுவம் தமிழர்தம் வாசிப்பில் கலந்ததோ என்னவோ, சுவாசிப்பில் கலந்தாற் போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள் எக்காலத்தும் வாழ்ந்தவர்தாமே! நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாய், திடீரென உறவாடிக் கெடுக்க நினைக்கும் உன்மத்தர்க்கே நம் நன்றி உறித்தாகுக! ‘ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்…

  10. கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா? மணி ஸ்ரீகாந்தன். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர். உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர். “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்…” என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் …

  11. கொஞ்சம் பெரிய கவிதை தான். ஆனாலும் இதை எழுதியவரின் திறமையும், தமிழின் இனிமையையும் மெச்சித்தான் ஆக வேண்டும்.. இன்பம் - ஐம்பது அன்பொடு இகத்தினில் வாழுதல் இன்பம்; அறிவொடு நிலத்தினில் ஆளுதல் இன்பம்; பண்புடை மாந்தராய்த் திகழுதல் இன்பம்; பணிவுடை மனிதரைப் புகழுதல் இன்பம்; தென்றலில் மழையினில் நனைதல் இன்பம்; சந்தனக் காற்றினில் தவழுதல் இன்பம்; வெண்மதி வானில் உலவுதல் இன்பம்; நிம்மதி நெஞ்சினில் நிலவுதல் இன்பம்; இரவினில் காதலில் கொஞ்சுதல் இன்பம்; உறவினில் களிப்பினில் கெஞ்சுதல் இன்பம்; அருகினில் சிறகினில் துஞ்சுதல் இன்பம்; அருமையில் பெருமையில் மிஞ்சுதல் இன்பம்; திரையினில் மறைவினில் அஞ்சுதல் இன்பம்; திறமையில் கடமையில் விஞ்சுதல் இன்ப…

  12. தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள் Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வா…

  13. 1 = ஒன்று ONDRU -one 10 = பத்து PATTU -ten 100 = நூறு NOORU -hundred 1000 = ஆயிரம் AAYIRAM -thousand 10000 = பத்தாயிரம் PATTAYIRAM -ten thousand 100000 = நூறாயிரம் NOORAYIRAM -hundred thousand 1000000 = பத்து நூறாயிரம் PATTU NOORAYIRAM - one million 10000000 = கோடி KODI -ten million 100000000 = அற்புதம் ARPUTHAM -hundred million 1000000000 = நிகர்புதம் NIGARPUTAM - one billion 10000000000 = கும்பம் KUMBAM -ten billion 100000000000 = கனம் KANAM -hundred billion 1000000000000 = கர்பம் KARPAM -one trillion 10000000000000 = நிகர்பம் NIKARPAM -ten trillion 100000000000000 = பதுமம் PATHUMAM -hundred trillion 1000000000000000 = சங்கம் SANGGAM -one z…

  14. மாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி படைப்பாளியான கவிஞன், தன் பாடுபொருளுக்குச் சொற்கள் கிடைக்கப் போதாமையால் கையறு நிலை அடைந்து தவிக்கும்போது பயன்படுத்துவது 'ஐயோ!' என்னும் சொல். மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டான மாணிக்கவாசகரின் காலத்தில் இறைவனைப் பாடும்போது, மங்கலமான சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கவிதை மரபு இருந்தது. எனவே, திருவாசகம் - சிவபுராணத்தில் "உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் ஐயோ! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!" என்று எழுதவேண்டிய இடத்தில் 'ஐயோ' என்பது அமங்கலமாகக் கருதப்பட்டதால், அச்சொல்லுக்குப் பதிலாக 'ஐயா' என்ற சொல்லை இ…

    • 2 replies
    • 1.9k views
  15. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS …

  16. சிலம்பிலே திருமணக்காட்சி தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும் கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும் மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக் காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது வருமாறு: "யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம் அவ்வழி முரசியம்பின முருடதிர்ந்தன முறையெ…

  17. Wednesday, August 20, 2014 மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்த வரிகளைக் கேட்டு வியக்காமல் எவ்வண்ணம் இருப்பது? அனைவரும் சமம் எனக் கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை! சிறியோரையிகழ்தலதனினுமிலமே என்பதைக் கூடக் கடைபிடிக்கலாம் ஆனால் பெரியாரை வியத்தலும் இலமே என்பதைக் கடைபிடிப்பது எப்படி என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் கவியின் சொல் வீச்சும் கருத்தாழமும் தெரிகிறது! கவிதையின் முதல் வரி மிகவும் பிரசித்திபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைப் பிரயோகிக்காத தமிழர்கள் உலகில் இல்லையெனவேகொள்ளலாம்! உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, எல்லா த…

  18. அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் "மக்கள் வாசிப்பு" சார்ந்தவை. தமிழ் எழுத்துலகின் படைப்பாளிகளைக் குறித்து நாம் அறிந்திராத அரிய செய்திகளை, 'இவர்' 'அவர்'களை 'வாசித்ததன்' பின்புலத்தில் மண்ணின் மணம் கமழ, சுவையுடன் படைப்பது இவரின் தனித்துவம். விளையும் பயிர்! மாணவப்பருவத்திலேயே தம் படைப்புகளைத் தொடங்கிவிட்ட "எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை"ப் உயர்நிலைப்பள்ளி நாட்கள் தொட்டு வாசித்…

  19. பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தின் மூலம் ஆண்டுதோறும் நூறு அயல்மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவுள்ளது பற்றிய செய்தியை ‘தி இந்து’ செப்டம்பர் 26 இதழில் கண்டேன். மிகவும் வரவேற்கத்தக்க பணி. பாரதி தொடங்கி வைத்த இந்தப் பணியை க.நா.சு. தீவிரப்படுத்தினார். நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டிய அந்தப் பணியை க.நா.சு. ஒருவரே நின்று ஆயுள் பூராவும் செய்தார். அவர் செய்ததைத் தொடர்ந்து இன்று பல மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான அளவில் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். உலக அளவில் பிரபலமான எந்த எழுத்தாளராக இருந்தாலும் அல்லது, பிரபலம் ஆகாத தாஹர் பென் ஜெலோன் (மொராக்கோ) போன்றவர்களாக இருந்தாலும் அவர்களின் படைப்புகள் தமிழ் ம…

  20. முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் எழுதிய இந்த மிளகின் சுயசரிதத்தை இணைப்பது "தமிழும் நயமும்' பகுதியலா அல்லது "நலம்பெற' என்னும் பகுதியிலா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் இதில தமிழின் சுவையும், உடல்நலன் பேண் குணமும் ஒருங்கே அமைந்திருக்கிறது. அத்தோடு எனக்குப் பிடித்த வலைப்பூ என்னும் இன்னுமொரு பகுதியிலும் இதனை இணைக்கலாம் இந்தத் திக்கு முக்காட்டத்தின் இறுதியில் தமிழும் நயமும் பகுதியில் இணைத்தலே சாலச்சிறந்தது என்று இங்கு இணைத்துள்ளேன் வாசிக்கிறதோடு மட்டும் நிற்காமல் உங்களுக்குத் தெரிந்த மிளகு பற்றிய விடயங்களையும் பதிவு செய்யுங்கள். நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்க…

  21. நாலு கோடியா? ...........காசில்லப்பா, பாடல்! - ஒளவையின் புலமை. சோழமன்னன் ஒருநாள் தனது ஆஸ்தான கவிஞர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும் என கட்டளை இட்டான்.இந்தக் கவிஞர்கள் அரண்மனையிலே சும்மா தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா?; அவர்களுக்குச் செய்ய ஒரு வேலை கொடுக்க வேண்டாமா என சோழமன்னன் நினைத்தானோ என்னவோ, இதை ஒரு வீட்டு வேலையாகச்(Homework) செய்து வர, பணித்திருந்திருக்கலாம். அதை கேட்ட கவிஞர்கள், "நாலு கோடிக்கு எங்கே போவது?", எனக் கவலையுடன் வீடு திரும்பினார்கள். அன்று அவ்வழியாக வந்த ஒளவையார் அந்தக் கவிஞர்கள் கவலையுடன் இருப்பதைக் கண்டு, " ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். " ஒளவையே, எம்மை சோழ மன்னன் நாளை சூரிய உதயத்திற்கும…

  22. Started by vijivenki,

    இன்பமாக வாழ மனிதனுடைய மனதிலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து எழக்கூடியதுதான் இன்பமான வாழ்வு என்பதாகும். மனிதனுக்கு உண்மையிலே வறுமை என்பது இல்லை. பிறந்த மனிதனுக்கு இயற்கையிலேயே, கடைசி வரையிலே எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் ஒருவரைப் பார்த்து அவரைப்போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். அவன் தன்னிடம் உள்ள ஆற்றலை உணர்ந்து, வளர்த்துக் கொள்ளும் திறமை பெறாமையும், செயல்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டாமையுமே, சோர்வு, வறுமை உண்டாவதற்குரிய காரணங்களாம். மனத்தைக் களங்கப்படுத்திக் கொண்டும், தனக்குத் தானே ஒரு எல்லை கட்டிக் கொண்டும், அதிலேயே மனதை சிக்க வைத்துக் கொண்டும் இது வேண்டும், அது வேண்டும் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.