பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்சியில், விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூறிய நிகழ்வு. A 9 பாதை திறப்பின் போது(08.04.2002) அரசியல் போராளிகளை யாழ்ப்பாணம் அழைத்து வர தன்னெளிச்சியாக கூடிய 30,000 ற்க்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை சீக்கிரம் வாருங்கள் என்று பரவசப்பட்டு கூறிய காட்சி https://www.facebook.com/video/video.php?v=798125666923245
-
- 1 reply
- 1.2k views
-
-
பொதுவாகவே, பெரியாரிஸ்ருக்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் மீதான ஈடுபாடு நிறையவே உள்ளது. இப்பழக்கவழக்கங்களைத் தத்தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இதயசுத்தியான ஆசையும் இவர்களிடத்தில் உள்ளது. பொதுப்பட இந்தச் சாராரிடம் என்னைக் கவர்ந்த விடயங்கள் என சிலவற்றைக் கூறுவதானால், ஒரு விவாத்தில் இறங்குன் விவாதப்பொருள் தொடர்பில் சற்றேனும் தம்மைத் தயார் படுத்திக் கொள்ளல், தரவுகளைக் கடினமாக முயன்று திரட்டிக் கொள்ளல், தங்களது கொள்கையில் ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் குறைந்தபட்சம் பொது இடங்களிலேனும் நடந்து கொள்ளல், தமது பார்வையில் மக்களிற்குத் தீங்கு என்று தாம் நினைப்பனவற்றை, பொது நலத்திற்கு மேலால்--இன்னமும் சொல்வதானால் சில அர்ப்பணிப்புக்ளையும் செய்து…
-
- 3 replies
- 1.3k views
-
-
என்றுமுளதா தென்றமிழ்? JeyamohanSeptember 3, 2023 அன்புள்ள ஜெயமோகன் , தமிழ் மொழி ஆங்கில எழுத்துரு வடிவில் தொடரும் என்றும், தமிழ் எழுத்துரு மெல்ல வழக்கொழியும் என்று நீங்கள் சில ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தீர்கள். அது போலவே, இப்போது வாட்ஸாப் போன்ற கருத்துப் பரிமாற்ற மென்பொருட்களில் தமிழில் எழுதும் வசதி இருந்தாலும், ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழ் எழுதப்படுகிறது. குழுக்களில் தங்கிலீஷே எழுத்து மொழியாக இருக்கிறது. தமிழில் யாரும் கடிதங்கள் எழுதுவது இல்லை. தமிழில் செய்திகள் படிக்கும் வழக்கமும் தேய்ந்து, காணொளியாக மட்டுமே தமிழுலகத்துக்குத் தேவையான வம்பு தும்புகள் பகிறப்படுகின்றன. உலகெங்கிலும் மாறிவரும் செய்தி பரவும் முறைகளையும், தனிப்பட்ட தவல் பரிமாற்ற வழிகளையும் …
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்…
-
- 15 replies
- 5.6k views
-
-
பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு - ச. சாமிநாதன் தற்காலத்தில் உலகெங்கிலும் பெண்கள் அணியும் ஒரு ஆடை தமிழனின் கண்டுபிடிப்பு என்று தோன்றுகிறது. பெண்கள் அணியும் மார்க் கச்சு தமிழனின் கண்டுபிடிப்பு என்றால் வியப்பாகத் தான் தோன்றும். இதற்குச் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் சில எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கின்றன. தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி... ... உண்பது நாழி; உடுப்பவை இரண்டே - புறம் 189 - மரக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய இப் புறநானூற்றுப் பாடலில் மக்கள் அனைவரும் உண்பது நாழி அளவு என்றும் ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள் என்றும் கூறுகிறார். பழந்தமிழர்களில் ஆண்கள் வேட்டியும் மேல் துண…
-
- 24 replies
- 6.5k views
-
-
இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார், இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன், நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக் பிரித்துக் குறிக்கவில்லை என்பது தெ…
-
- 1 reply
- 2.9k views
-
-
மொழிகளின் எதிர்நீச்சல் இரா. கதிரவன் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, கிழக்குப் பாகிஸ்தான் பெருமளவில் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களால் நிறைந்திருந்தது. ஆயினும், மேற்கு பாகிஸ்தான், 1948-இல், உருது மொழியை தேசிய மற்றும் ஆட்சி மொழியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தத் திணிப்பை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1952-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது,அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 21-02-1952 அன்று நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 1956-இல், மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பாகிஸ்தான் அரசு, உருது மட்டும் என்ற நிலையை திரும்பப் பெற்று, வங்காள ம…
-
- 0 replies
- 768 views
-
-
-
- 0 replies
- 586 views
-
-
பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, அரும்பொருள்காட்சியகத்தில் இலங்கைத்தமிழரின் பூர்வீகத்தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் எச்சங்கள் பல பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன. கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம்…
-
- 1 reply
- 4.4k views
-
-
இக்காணொளியில் வெல்லாவெளி குகை வரை கல்வெட்டினைப் பற்றி கூறப்படுகிறது, அதிலுள்ள பிராமி எழுத்துக்கள் 2300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை, தமிழரின் ஆதிகால இருப்பை வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றாக இக்குகை காணப்படுகின்றது, மிக மிக முக்கியம் வாய்ந்த இக்குகை கவனிப்பாரற்று புதர் மண்டிக் காணப்படுகிறது. இதனைப் பாதுகாப்பது அணைவரினதும் கடமை. கிழக்கு மாகாண சபை முக்கியமாகக் கவணமெடுக்க வேண்டும். வெல்லாவெளி குகை வரை கல்வெட்டு தொடர்பான மேலதிக தகவல்கள் சில இவ்விணைப்பில் உள்ளன. http://www.battinews.com/2012/09/Batticaloaancient.html
-
- 1 reply
- 785 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 43 https://app.box.com/s/hque5sn1x55esq8fn1ine0co8p0fnb2q நீ நீங்கு ! கன்று சேர்ந்தார் கண் கத ஈற்று ஆ சென்றாங்கு வண் கண்ணள் ஆய் வரல் ஓம்பு! யாய் வருக ஒன்றோ! பிறர் வருக! மற்று நின் கோ வரினும் இங்கே வருக! தளரேன் யான் நீ அருளி நல்க பெறின் (முல்லைக் கலி: 611:08-12) பொருள் இளம் கன்றைஎவர் நெருங்கினாலும் தாய்ப்பசு விரட்டி விரட்டித்தாக்கும். என் பின்னால் நீ தொடர்ந்து வராதே ! கடும் சினத்தொடு என் ஆயி வருகிறாள் உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரிக்கை செய்கிறாள் ஒரு பெண். உன் தாய் வந்தாலும் வேறு எவர் வந்தாலும் வரட்டும்! எனக்கு ஒன்றுதான். உன் அரசனே வந்தாலும் இங்கே வரச்சொல்! நான்அஞ்ச மாட்டேன். நீ மட்டும் என்னை விரும்புவதாக ஒத்துக் கொண்ட…
-
- 0 replies
- 470 views
-
-
2043 ஆம் ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
-
- 6 replies
- 5.5k views
-
-
மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல - தொல்காப்பியன் சில காலங்களுக்கு முன் ஊடகவியல் துறை (Department of communication) நண்பர் ஒருவர், " மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் தானே ! அதை ஏன் அரசியல்வாதிகள் வழிபாட்டுக்குரியதாக புனிதப்படுத்த வேண்டும்?" எனக் கொந்தளித்தார். தற்கால அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் அவருக்கு நியாமான கோபம் இருக்கலாம். ஆனால் மொழியை அவர்களுக்குரிய விடயமாக விட்டு விடுவது எவ்வகையில் சரி ? மேலும் அது வெறும் தகவல் ஊடகம் என்பது கார்ல் மார்க்ஸ், அண்ணா போன்றோரை வழிபடும்(!!) என் போன்றோர்க்கே வறட்டுத்தனமாகத் தோன்றுகிறதே! ஒருவனுக்கு அவன் தாய்-தந்தை போல, அவன் வேர்விட்ட மண் போல, நம்புகிறவனுக்கு அவன் 'சாமி' போல மொழியும் ஒரு உணர்வாயிற்றே! ஒருவன் சாமியை…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 8 replies
- 1.9k views
-
-
பெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? - குறள் ஆய்வு-7, பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆரியம் கூறும் பெண்ணியம் மற்றும் வள்ளுவம் கூறும் பெண்ணியம், குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) முறையான தரவுகள் எதுவும் இன்றி, பொத்தாம் பொதுவாக அறுதியிட்டுச் சொல்வதால், பெண்களைக் குறித்து ஆரிய தரும சாத்திர நூல்கள் கொண்டுள்ள கோட்பாடுகளைத் திருக்குறள் கோட்பாடுகளுடன் …
-
- 1 reply
- 7.7k views
- 1 follower
-
-
திருப்பதி : இந்தோனேசிய கரன்சியில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.முழு முதற்கடவுளான விநாயகருக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி, இந்தோனேசிய நாட்டிலும் மதிப்பு அளிக்கப்படுகிறது. அந்நாடு வெளியிட்டுள்ள, 20 ஆயிரம் ரூப்பியா நோட்டில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.அத்துடன், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட செம்மல், கிஹாஜர் தேவாந்தரானி உருவமும், மறுபுறம் கல்வி நிறுவன படமும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில், 1.7 சதவீத இந்துக்களே வசிக்கின்றனர்; அதிலும், அங்குள்ள பாலி தீவில் தான், அதிக இந்துக்கள் வசிக்கின்றனர்.இந்த கரன்சி நோட்டை, ஆந்திர மாநிலம், அமலாபுரம் எஸ்.பி.ஐ., அதிகாரி ரவிசுப்ரமணியம் சேகரித்து வைத்துள்ளார். http://www.dina…
-
- 7 replies
- 1.3k views
-
-
[size=4]அனைவருக்கும்[/size][size=4]வணக்கம்[/size][size=4].[/size] [size=4]தமிழர்கள் [/size][size=4]பற்றிய[/size][size=4] ஆராய்வு[/size][size=4] ஒன்றை[/size][size=4] உங்கள் முன் [/size][size=4]வைக்கிறேன்[/size][size=4]. [/size][size=4]களத்தில்[/size][size=4] பல்துறைசார்[/size][size=4] அறிவுடையோர்[/size][size=4] இருக்கின்றீர்கள்[/size][size=4]. [/size][size=4]உங்கள் [/size][size=4]சிந்தனையில்[/size][size=4],[/size][size=4]வினாக்களின்[/size][size=4] மூலம் [/size][size=4]இத்தொடரை [/size][size=4]நகர்த்துவது[/size][size=4] எனக்குப [/size][size=4] பல[/size][size=4]பரிமாணங்களைக்[/size][size=4] காட்டும்[/size][size=4] என்பதோடு [/size][size=4]மேலும்[/size][size=4] என்னையும் [/siz…
-
- 45 replies
- 31.7k views
-
-
பெருமை மிக்க நமது ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். அதிகமாகப் பகிருங்கள். மற்ற இனத்தவர்களிடமும் கொண்டு சேருங்கள். CLICK "LIKE" and "SHARE" 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and lea…
-
- 3 replies
- 855 views
-
-
தமிழ் சந்திக்கும் சரிவுகள் என்னென்ன..? -சாவித்திரி கண்ணன் இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த தவறும் மொழிகள் சாகின்றன! உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த வகையில் இருக்கின்ற, எந்த மொழியுமே அழிந்துவிட வாய்ப்பளிக்காமல், அரவணைத்து காக்க வேண்டும்…
-
- 0 replies
- 467 views
-
-
பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு புவியியல் அமைப்பிலுள்ள இயற்கை வளங்களும், தாவர, விலங்கினங்களும் அடங்கிய கூட்டுச் சேர்க்கையே சமுதாயமென்றும், அந்தச் சூழ்நிலையில் வாழும் மக்கள் அந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்றும் கூறுகின்றனர். தற்கால அறிஞர்களால் புதுமையாகக் கொள்ளப்படும் இதே கருத்து இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட நம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்குமாயின், நம் மூதாதையரின்…
-
- 0 replies
- 12.9k views
-
-
மாநாகன் இனமணி 101 https://app.box.com/s/hp57zr6n0xp9z2mt1lr37u5jin8uslsg மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்து தன் அருந்தொழில் திரியாது நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என (சிலம்பு இந்திர - 218-223) மருந்தும் தரும்கொல் இம்மாநில வரைப்பு எனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் (சிலம்பு இந்திர 232-234) திருவும் திணை வகையான் நில்லாப் பெருவலிக் கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது (நான்மணிக்கடிகை -40) பொருள்: அறம் ஆட்டையைப் போட்டால் கூற்றம் ஆண்மையைக் காவு கொள்ளும். அது கூற்றூவனின் அறம். ஆண்மை, பெண்மை இரண்டும் திரிந்த…
-
- 0 replies
- 688 views
-
-
வீரகேசரி இணையம் 5/23/2012 1:41:41 PM பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவ்வையார் படம் அரை நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம். அவ்வையாராக நடித்த கே.பி. சுந்தராம்பாள் அக்காலக்கட்டத்திலேயே ஒரு லட்சரூபாயை அப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக பெற்று தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பிடித்தார். ஜெமினி பிக்சர்ஸின் எஸ்.எஸ். வாசன் இப்படத்தை தயாரித்து பெரும் லாபம் சம்பாதித்தார். இவையெல்லாம் நமக்கு தெரிந்த செய்திகள். இத்திரைப்படத்தின் பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்று பலரும் அறியாதது. அவ்வையார் கதையை திரையில் கொண்டுவர முடிவு செய்த ஜெமினியின் கதை இலாகா கதை விவாதத்துக்காக அமர்ந்திருக்கிறது. இது ஏற்கனவே நாடகமாக பெரும் வெற்றி பெற்ற கதை என்றாலும் திரைக்காக சில புதிய விஷயங்களை மெருகேற்றுகிறார்கள். கதையின் பாத்திரங்களுக்கு …
-
- 17 replies
- 4.3k views
-
-
நாலும் இரண்டும் உணர்த்தும் வாழ்வியல் அறம்.! முன்னுரை அறம் என்னும் சொல்லிற்கு ‘அறுத்துச் செல்வம்’, ‘ஊழியை உண்டாக்குவது’ என்று பொருள் கூறுவர். மனித இனத்தின் நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மனித சமுதாயம் வரையறுத்துக் கொண்ட ஒழுக்கநெறி ‘அறம்’ எனப்படும். அறம் என்பதை வாழ்க்கை நெறி என்றும் கூறலாம். அதாவது, மனித வாழ்க்கையைச் செம்மையுடையதாகவும், அமைதியுடையதாகவும், பயனுடையதாகவும் அமைவதற்கு ஆன்றோர்கள் காட்டிய அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய முறைகளே அறம் ஆகும். இத்தகைய சிறப்புப் பெற்ற அறத்தைப் பற்றி நாலடியாரும் திருக்குறளும் கூறியுள்ள செய்திகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அறம் என்பது... அறம் செய்து வாழ வேண்டும் என்று நாலடியார் கூறுகையில், …
-
- 0 replies
- 3.7k views
- 1 follower
-
-
இந்த வருட மாவீரர் தினம் என்பது 4 இடத்தில் 4 அமைப்புக்கள் ஏட்டிப் போட்டியாக வைப்பார்களா என்பது தெரியாது. அவர்களுக்கு அஞ்சலி செய்தல், கௌரவம் செய்தல் என்பது கட்டாய தேவை. ஆனால் வழமை போல 4 பாட்டு, 3 நாடகங்கள், 2 நடனங்கள், என்று நடத்திக் கொண்டே இருக்கப் போகின்றார்களா? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க ஏதாவது செய்ய வேண்டாமா?? இதை மக்களிடமே விட்டுவிடலாம் எள நினைக்கின்றேன். மாவீரர் தினத்துக்கு வருகின்ற மக்களிடம் கருத்துக் கணிப்பாக என்ன எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்பது தொடர்பாக தகவல்களை திரட்டும் வண்ணம் எழுதவைத்துப் பெறலாம் என நினைக்கின்றேன். சில நாதாரிகள் கேவலமாக எழுதித் தரக்கூடும். அவற்றுக்கு குப்பைக்கூடு எதற்காக இர…
-
- 0 replies
- 772 views
-