Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

  1. 2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள். நாளைக்கு எல்லோரும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம்.10 மணிக்கு இங்கிருந்து வெளிக்கிட வேண…

  2. பெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான் அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா??? என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்…

  3. புதிய ஊர்கள் நாடுகள் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விருப்பம் தான். ஆனாலும் பணம் பணம் என்று அதைச் சேர்ப்பதில் உள்ள ஆர்வம் செலவழிப்பதில் இருப்பதில்லை பலருக்கு. யேர்மனியில் வசித்தபோது நானும் கணவருமே முழுநேர வேலை செய்தோம். முழுநேரம் என்றால் எட்டே எட்டு மணிநேரம் தான். அதற்குமேல் பெரும்பாலானவர்கள் வேலை செய்வதில்லை. ஆண்டில் ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு. சம்பளத்துடன் ஒரு நாளுக்கு 32 டொச் மார்க்குகள் மேலதிகமாக விடுமுறைக்காகத் தரப்படும். அப்ப சொந்த வீடும் ஒருத்தரிட்டையும் இல்லை. அதனால் மற்றவரைப் பார்த்துப் புகைந்து நாமும் சொந்த வீடு வாங்கவேணும் எண்ட துன்பமும் இல்லை. வாடகை லண்டன் போல் உச்சத்துக்கு போவதும் இல்லை. ஒருவரின் உழைப்பிலேயே மிக மகிழ்வாக வாழக்கூடிய நிலை. நத்த…

  4. சான்றிதழ். அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r ஜோதிபால......., "ஆதர மல் பவண்னே ஆயன மே கமண்ணே ஹொய்தோ யன்னே கவுதோ என்னே துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார். அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது.…

    • 66 replies
    • 7.4k views
  5. முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு. போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்…

  6. இது விஞ்ஞா ஆய்வு இல்லை. செயற்கை அறிவு பற்றிய ஆரம்ப விளக்கம் மட்டுமே. *** பிரபஞ்ச வரலாற்றைப் பற்றிப் பேசும்போது மனிதனை அறிவார்ந்த வடிவம் (intelligent form) என்று குறிப்பிடுவார்கள். மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் கூட வரயறைக்கு உட்பட்ட அறிவார்ந்த வடிவங்களே. பசி எடுத்தால் உண்ணவைத் தேடிச் செல்லவும் ஆபத்தை உணர்ந்தால் பாதுகாத்துக் கொள்ளவும் குளிர் மழையில் பாதுகாப்பாக ஒதுங்கவும் விலங்குகள் போதிய அளவு அறிவுடையவையாக உள்ளன. மனிதனும் இதே நிலையில் தான் சுமார் 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்துள்ளான். மனித இனம் வேகமாக வளர்ச்சியடைய ஒரு காரணியாக மனிதன் மொழிகளை உருவாக்கிக் கொண்டதைக் குறிப்பிடலாம். மொழி மூலம் தனக்குத் தெரிந்ததை இன்னொருவருக் விளக்கமாகப் …

  7. முருகமூர்த்தி அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர். பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களை வைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும் அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்பு கூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள், அவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவன‌து முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தை துப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும…

  8. ஆலமரமும் அழியாத ஞாபகமும் - சாந்தி நேசக்கரம் - __________________________________ வேர்கட்டிய மண்ணின் ஆழத்தை அழி(ரி)த்தது மழை. ஊர்கட்டி வளர்த்த காலத்தின் க(வி)தை இறுக்கம் தளர்ந்து சரியத் தொடங்கியது. வல்லியர் காலத்து வைரம் வசந்தம் காணாமல் இரவடி(ழி)த்த மழையின் பெயரால் பாறி வீழ்ந்தது. எம்மூரின் பரம்பரை ஆல்விழுதின் கதை விடிய முதல் ஆயுள் முடிந்தது. இருந்தவரை நிழல் நாங்கள் ஊஞ்சலாட விழுது ஊர் மடியில் கனத்தோரின் கதையறிந்து கண்ணீர் துடைத்த தோழமை. சோளகக் காலம் கால்நடைகள் உணவாக ஆலிலைகள் தந்த உரம் பாய்ந்த மரம். எங்கள் பெரிய ஆலமரம் ஓரிரவில் குடைசாய்ந்து ஓய்ந்தது உயிர். பங்கு பிரித்து கோடரி…

  9. செத்துப்போன கருவாடு பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது. பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை. வியாழக்கிழமை தமிழ்க்கடைக…

  10. ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். சில மாதங்கள் கழித்து........ ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க.. அது ஒன்னுமில்ல.. எங்க பார்ப்பம்.. அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ.... ஐயையோ.............................................. நானும…

  11. பார்க்கும் இடம் எங்கும் வெண்பனி ஓவியங்கள் வரைந்திருந்தது. குளிரும் இம்முறை அதிகம். பனிப்பொழிவைப் பார்ப்பதும் இரசிப்பதும் மட்டுமே போதுமாக இருந்தது சந்தியாவுக்கு. கணவனும் மகளும் வெளியே நின்று பனித்துகள்களை அள்ளி விளையாடி மகிழ இவள் ஜன்னலூடாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டினுள் கீற்றர் போட்டு வெப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் வெளியே பார்க்க வீடும் குளிர்வதாய் எண்ணம் தோன்ற, யன்னலை விட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள் சந்தியா. சிறிது நேரத்தில் கணவனும் மகளும் உள்ளே வர ஈரமாக்கிப் போன மகளின் உடைகளைக் களைந்துவிட்டு வேறு உடை அணிந்துவிட்டு நிமிர கணவனும் உடைமாற்றிவிட்டு வந்தமர்ந்தான். "எதையும் உமக்கு ரசிக்கத்தெரியாது. எங்களோட வெளியில வந்திருக்கலாம் தானே. ரசனை கெட்ட…

  12. டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது. எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள். மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார். இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்? எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்? …

  13. பெண் பார்க்கப் போறேன் அவர் ஒரு அங்கீகாரம் பெற்ற சீட்டுப்பிடிப்பாளர். சொந்தமாக கார், அதை ஓட்டுவதற்கு ஒரு ஆள், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர எடுபிடிகள் என எல்லாமே அவரிடம் இருந்தன. அத்தோடு முக்கியமாகப் பல பெண்களும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஒருநாள், தனது குடும்பத்தார், நெருக்கமானவர்கள், எடுபிடிகள், பழகிய பெண்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு மாரடைப்பு வந்து தனியாளாகச் செத்துப்போனார். தந்தையின் இறப்புக்குப் பின் அவரது மூத்தமகன் கோபாலகிருஸ்ணன் அரியணை ஏறினான். தகப்பனைப் போலவே எடுபிடிகளுடன் மகனும் தொழிலை நடத்தத் தொடங்கினான். மிக விரைவிலேயே தந்தையை விட அதிதீவிரமாகப் பல பெண்களோடு நெருக்கமானான். தொழிலை விரிவாக்க, நகரத்தில் அடைவுக் கடை ஒன்றைய…

  14. வசந்தகாலச் சோதனை நான் பிரான்சுக்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இளமைப் பருவம், அரைகுறை பிரெஞ்சு மொழி அறிவு, கொஞ்சம் படிப்பு, சிறு சிறு வேலைகள். ஊர்சுற்றல் என்று சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்த காலம் அது. அன்றொருநாள் வசந்த காலத்தில் காட்டுப் பகுதியில் நடக்கும் காணிவேல் ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். என்னிடம் இருந்த் 50 பிராங்கில் சாண்ட்வீச் வாங்கிச் சாப்பிட்டது போக மீதியை விளையாட்டுகளுக்குக் கொடுத்துத் தோற்றுவிட்டு காட்டுப் பாதையால் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சில நாட்களாகவே தடிமன் போன்று மூக்கு வடிந்தபடியும் இருமல் போன்றும் இருந்தது. அதுவரை அதைப்பற்றிக் ககவலைப் படவில்லை. ஆனால் அன்று வழமைக்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. மூச்சு விடக் கடினமாக…

  15. ஓடிய ஓட்டம் என்ன? எங்கள் ஊரின் அன்றைய அழகு தேவதை அவள்தான். பெயர் எல்சி. நிறம் வெள்ளை. அதனால்தான் ‘லொள்ளு’ விட பல இளைஞர்கள் அவளைச் சுற்றிச் சுற்றி சைக்கிளில் திரிந்தார்கள். அவர்களுக்குள் கவியும் இருந்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை என்று சொல்ல மாட்டேன். இருந்தான். அழகு என்பது பொதுவுடமை. அதை யாரும் ரசிக்கலாம்தானே. ஆனால் பயம் காரணமாக தூரஇருந்தே கவி ரசித்துக் கொண்டிருந்தான். தங்களைப் பார்த்து ஒருத்தியாவது சிரிக்க மாட்டாளா என்று ஏங்கும் இளம் வயது வாலிபங்கள் மத்தியில் எல்சி எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள். கவனியுங்கள் அவளுக்கும் பொதுவுடமைத் தத்துவம் தெரிந்திருக்கிறது. அவளுக்கு முழங்காலுக்கு கீழே இருக்கும் பாவாடை அணியப் பிடிக்காது. இதுவும் வாலிபங்களுக்கு அவளிடம் …

    • 15 replies
    • 3.7k views
  16. கடந்த ஆண்டு தாயகம் சென்றிருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நானும் கணவனும் மினி பஸ்சிலோ அல்லது பேருந்திலோ யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்துகொண்டிருந்தது. போய் வரும் நேரங்களில் அக்கம் பக்கம் புதினம் பார்ப்பது வழமைதானே. சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை. அன்று என்னவோ எனக்கு கோண்டாவிலுக்குக் கிட்டவே பின் இருக்கை ஒன்றில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிடைத்த நின்மதியில் எல்லோரையும் அராய முற்பட்டேன். நான் மற்றவகளின் ஆடைகளைஎல்லாம் பார்த்துவிட்டு காலில் என்ன அணிந்துள்ளனர் எனப் பார்க்கத் த…

  17. இதுவரை என் வாழ்வில் சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விட்டது ஓர் தேடலைத்தவிர என்று வாழ்வை அமைதியாக கழிந்த நாட்களில் அந்த ஓர் அழைப்பொன்று வாழ்வின் அடிமனதில் புதைந்த ஓர் புதையலை மனதில் இருந்து மெதுவாக தோண்ட ஆரம்பிக்கிறது .ஹலோ வணக்கம் வணக்கம் நீங்கள் நான் கலியபெருமாள் பேசிறன்டா ஓ ஐயா சொல்லுங்க எப்படிடா இருக்க இருக்கன் ஐயா இருக்கன் நல்ல சுகம் நீங்கள் எப்படி நான் நல்லம் நலமா இருக்கிறன் என்ற பிள்ளைகள் உன்னை பார்க்க வேண்டுமாம் வாவன் உன்ற ரத்தமும் ஓடுது இங்க ஒருக்கா இந்தியா வந்துவிட்டு போவன் இல்லை ஐயா நான் இன்னும் பாஸ்போட் எடுக்கல எடுக்கவும் நினைக்கல எடுக்கணும் என்று நினைக்கிறன் நேரமும் கிடைக்கல அது எடுக்க போனால் இரண்டு மூன்று நாள் அங்க மெனக்கெடணும். அந்த கொழும்பில நிற்கிற நாளும் கஸ்ரம…

  18. கண் தெரியும் தூரம் வரை….. காலம் தின்று..துப்பிய …., எச்சங்களின் மிச்சங்களாய்…., செத்துப் போன வீடுகளின், எலும்புக் கூடுகள் ! வெறுமைகளை மட்டுமே…, வெளியே காட்டிய படி…, உண்மைகளை ஆழப் புதைத்து.., கண் மூடித் துயில்கின்ற….., வரலாறுகளின் சுவடுகள் ! அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்.., ஆளப் புதைந்திருக்கும் ….., வைரவ சூலம் மட்டும்…., எத்தனை வடை மாலைகளையும், எத்தனை தேசிகாய்களையும்,…., தன் மீது சுமந்திருக்கும் ? அந்தக் கருக்குவாச்சி மரம், எத்தனை காதலர்களின், இரவு நேரச் சந்திப்புக்களை…, விரக தாபங்கள் சிந்தும், கற்பூர சத்தியங்களை…., தன்னுள் புதைத்திருக்கும் …

    • 16 replies
    • 3.4k views
  19. காரும் கதியாலும். ஆட்டுப்பால் ....முலைப்பால்.....அன்பால்....! அந்தக் கிராமம் பிரதான வீதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் உள்வாங்கி இருந்தது. அங்குள்ள மக்களும் விபரமானவர்களாகவும் அதே சமயம் வெள்ளந்தியானவர்களாகவும் இருந்தார்கள்.அங்கும் ஒரு பெரிய ஒழுங்கையில் இருந்து பிரிந்த சிறிய ஒழுங்கையில் சென்றால் அதன் முடிவில் எதிர் எதிராக இரண்டு வீடுகள்.அதில் ஒரு வீடு தங்கராசுவின் வீடு .அவன் மனைவி தனலட்சுமி. நண்டும் சிண்டுமாய் நாலு பிள்ளைகள். மூத்தவனுக்கு ஏழு வயசிருக்கும்.அடுத்த ஐந்து வயசில் ஆணும் பெண்ணுமாய் இரணைப்பிள்ளைகள்.மற்றது கைக்குழந்தை.அவர்களிடம் ஒரு சிறிய மொரிஸ்மைனர் கார் உண்டு. அதில்தான் வேலைக்கு போய் வருவது.தங்கராசுவுக்கு ஒரு ஆசை....ஒரு பெரிய ஃபரினா கேம்பிரிட்ஜ் வாங்க…

    • 12 replies
    • 3.4k views
  20. வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள் சூசை ஒரு Bci பட்டதாரி. அந்தப் பட்டப் படிப்புக்காக அவன் பல்கலைக்கழகம் எங்கும் போகவில்லை. அந்தப் பட்டத்திற்கான தகுதியை அவன் சினிமா தியேட்டர்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டான். பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர்கள்தான் அவனை (Bachelor of Cinema) பட்டம் பெற வைத்த முக்கிய கூடங்கள். எவ்வளவு கேவலமான படங்களாக இருந்தாலும் முதல்நாள் முதல் காட்சியில் பிரதம விருந்தினராக சூசை இருப்பான். அவனிடம் சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் கிடைத்து விடும். அறுபதுகளின் பிற்பகுதியிலேயே வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதே அதை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர்கள் விபரங்களையும்…

  21. ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல…

  22. இந்த உலகம் தொழிநுட்பத்தில் வளர்கிறது நாமும் அதன் போக்கில் காலத்துக்காலம் அதில் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈர்க்கப்பட்டு அதன் பின்பே சென்று கொண்டிருக்கிறம் என்பத விட ஓடிக்கொண்டிருக்கிறோம். நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி நம்மை எவ்வாறு அடிமையாக்கிறது நமது வாழ்வை அது எப்படி விளையாடுகிறது என்பதே இந்த கதை. இலங்கை போக்குவரத்துசபை பஸ் மட்டும் கைபோட்டால் நிற்குமா என்ன? நிற்கவில்லை அந்த கொழுத்தும் வெயிலில் மீண்டும் அடுத்த பஸ்ஸ்சுக்காக காத்திருந்தேன் அந்த மொபலை நொண்டிக்கொண்டே இந்த போணும் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் சாமி. என்ற நினப்பில் பஸ் கோர்ண் சத்தம் கேட்டது நிற்பானா ?மாட்டானா? என்று கைய போட்டாலும் அங்கே இறங்கும் பயணிக்காக நிற்பாட்டினான். உடனே ஏறிவ…

  23. குடை ராட்டினம் கண்ணுக்குள் நூறு கனவு. ஒரு பார்வை ஒரு உதட்டசைவு ஒரு புன்முறுவல் அடடா.. இதைத்தான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து என்று பாடி வைத்தார்களோ? வந்த வேலை மறந்து மீண்டும் மீண்டும் அதே தேடல்.. பார்த்த விழி பூத்திருக்க அங்கே ஒரு மௌன நாடகம் அரங்கேறியது. ஆரம்பப் பாடசாலையை முடித்து இன்று உயர்தர பாடசாலையில் சேர்வதற்காக வந்திருக்கும் பல்லின மாணவர்களின் கூட்டம் அழகிய மலர்த்தோட்டம். இத்தனைபேர் நடுவில் அவள் மட்டும்..... என்ன இது... பார்வையை எங்கும் அலைமோத விடாமல் ஒரே இடத்தையே காந்தமாய் கட்டிப்போட்டது பதினாறின் பருவங்கள் உள்ளுக்குள் உமிழ்ந்து உடலெங்கும் மின்சாரம் பாய்ச்ச.... அவளுக்குள்ளும் அதே நிலைத…

  24. அம்மாச்சி மகள் (குறுங்கதை) ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்…

  25. வானவில் நள்ளிரவு தாண்டியும் தூக்கம்வர மறுத்தது. கண்ணிலிருந்து கொட்டிய நீர் வற்றி கன்னங்கள் காய்ந்து மனம் இறுகிக் கிடந்தாள் வாசுகி. நேற்றுவரை எத்தனை கனவுகளில் மிதந்தாள். நெற்றிச் சுட்டி முதல் பாதக் கொலுசுவரை அத்தனையும் பார்த்துப் பார்த்து வாங்கி கற்பனையிலேயே தன் எழிலை ஒத்திகை பார்த்து மனதுக்குள் சிரித்தது நினைவில் புரண்டது. 'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள். அடடா என் வசீகரன் என்று எண்ணியதை நினைக்க அவளது முகத்தில் நாணம் கோலமிட்டது. பெண் மனதுதான் எவ்வளவு விசித்திரம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.