சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
இது மீள்பதிவு. இறுதிப்போர்க் காலகட்டத்தில், புலிகள் தப்ப விரும்பிய தமிழ் மக்கள்மீதே தாக்குதல் நடத்தினார்கள் போன்ற அயோக்கியத்தனங்களுக்கு... "He will not waste a single bullet on a civilian like me" - Anita Pratap இதனை எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஏன் என்று பிறகு சொல்கிறேன். என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, அனிதா பிரதாப் அவர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள். (அனிதா பிரதாப் முதன்முதலாக தலைவர் பிரபாகரனை பேட்டி கண்டவர். இதுவரை அதிக அளவில் பேட்டி கண்டவரும் அவரென்று தான் நினைக்கிறேன்) அவருக்கு தேவையானவற்றை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது. அனிதா பிரதாப், ரொம்பவே இனிமையானவர் என்றாலும், 2009க்குப் பிறகு,…
-
- 3 replies
- 1.9k views
-
-
நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை! நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரலை வசதியை பயன்படுத்துவதில் பேஸ்புக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியதற்காக தடை செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட சில நாட்கள் நேரலை வசதியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. http:/…
-
- 0 replies
- 1.4k views
-
-
Rajavarman Sivakumar Tholar Balan •ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்? பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு. “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார். 1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீ…
-
- 6 replies
- 2.6k views
-
-
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை! நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலனவை, தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பல்கலைக்கழக உணவகத்தில் தியாகி திலீபன் படம் வைத்திருந்தமையால் உரிமையாளர் கைது... இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயா அதே தியாகியின் படத்திற்கு மாலையிட்டு மரியாதை வணக்கம் செலுத்தினாரே அப்போது எங்கே போயிருந்தீர்கள் பொலிசாரே? கைகட்டி வாய்பொத்தி அவருக்கு பாதுகாப்புக்குத்தானே நின்றீர்கள்? உங்கள் வன்மத்தை தீர்க்க அப்பாவிகள்தானா கிடைத்தார்கள்? தியாகி திலீபன் எங்கள் வணக்கத்திற்குறியவர் அவர் இலங்கை அரசுக்கு எதிராக போரிட்டு மடிந்தவர் இல்லை இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சையை போதித்து உயிர் நீர்த்தவர். உங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றவும்தான் அவர் உயிர் ஈகம் செய்தார். தமிழர்கள் மாத்திரம் அல்ல இனம் மொழி கடந்த அத்தனை இலங்கையர்களும் வணங…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 9 replies
- 2.6k views
-
-
முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்! பாத்திமா மாஜிதா வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தத…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள் இலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது. அதில் ஒரு மேசையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும். இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2 - என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது. 3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.
-
- 0 replies
- 733 views
-
-
எழுந்து வா மகளே எழுந்து வா அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல் நீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா கொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய். நீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா, உனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா. நீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே …
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுமுறையைக் கொண்டாட வீட்டை விட்டுப் புறப்பட்டவன், எத்தனையோ நாடிருக்க இலங்கைக்கு ஏன் வந்தான்.. ஈழத்தின் பேரழகை இணையத்தில் பார்த்திருப்பான், அமைதியான தேசமென்று அடிமனதில் நினைத்திருப்பான்.. கடற்கரையில் குளிக்கலாம், காற்று வாங்கிக் களிக்கலாம், மலைத்தொடரை ரசிக்கலாம், மழைத்துளியைப் பிடிக்கலாம், மனைவியோடு பிள்ளையை மகிழ்வித்து சிரிக்கலாம் என்றெல்லாம் எண்ணியே, இலங்கைக்கு வந்திருப்பான்.. குருவியோடு குஞ்சுதனைக் கூட்டிக் கொண்டு வந்தவனை, குலைத்துவிட்ட பாதகரே கொதிக்குதையா என் மனது.. கொண்டு வந்த உறவுகளைக் குண்டு தின்று போனதனால், கண்டு வந்த கனவெல்லாம் கண்ணீராய்ப் போனதனால்.. நேற்றுவரை இவனுக்கு நிலவாகத் தெரிந்த பூமி, ஈன…
-
- 0 replies
- 953 views
-
-
Thevarasa Kailanathan மூத்த ஊடகவியலாளர் #இரட்ணம் #தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். புலம்பெயர் சமுகத்துடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மூத்த #ஊடகவியலாளர் Ratnam Thayaparan தனது #மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த #வாகனம்அவ…
-
- 0 replies
- 716 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நீங்கள் சினிமா பாடல்களுக்கு வாயசைக்கலாம் அல்லது ஏதேனும் வசனங்களுக்கு உங்கள் கற்பனையில் நீங்கள் நடிக்கலாம். உங்களின் சொந்த குரலை நீங்கள் பயன்படுத்த முடியாது. உங்கள் குரலை பயன்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோக்கிறீர்களா? - ஒரு முறை டிக் டாக்கை பயன்படுத்தி பாருங்கள். என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியும். இப்போது அதற்கு வாய்பில்லை. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிரிருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. டிக் டாக் செயலி …
-
- 0 replies
- 814 views
-
-
ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன. …
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
"மண்ணுளி பாம்பு" பற்றி... கேள்விப் பட்டீர்களா? மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி…
-
- 3 replies
- 14.5k views
-
-
Sangarasigamany Bhahi C.V.Wigneswaran· இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக நான் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அறிக்கையின் எந்த இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை போன்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. இலங்கையில் உள்ந…
-
- 1 reply
- 763 views
- 1 follower
-
-
மண்ணில் இந்த சோறு இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..! அம்மா வச்ச, "கோழிக்குழம்பு" நாளும் சுவைத்தால்..... போதுமோ...
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
'இன்டர்நெட் ஃபாஸ்டிங்' முறை பற்றி முதல் தெரிவித்த நடிகர் விவேக்! குவியும் ஆதரவு! நவீன தொழில்நுட்ப காலத்தில், அனைத்து வேலைகளும் சுலபமாகி விட்டது. இதன் விளைவு, நாளுக்கு நாள் குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் செல்போன், இன்டர்நெட் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகிறார்கள். இதன் மூலம் எதிர்பாராத பல தவறுகளும் நடக்கிறது. இந்த நிலையில், அதிகமாக இளைஞர்கள் பயன்படுத்தும் நெட் சேவையை, குறைக்கும் விதமாக ஜப்பான் நாட்டினர் கையாண்டு வரும் முறை குறித்து, நடிகர் விவேக் முதல் முறையாக ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை இளையதலை முறையினர் பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்…
-
- 6 replies
- 1.9k views
- 1 follower
-
-
மறவன்புலவு க. சச்சிதானந்தன் மாசி 26, 2050 சனி (09.03.2019) மன்னார் எலும்புக்கூடுகள். சிவசேனை மறவன்புலவு க. சச்சிதானந்தன் கரி வகைகள் மூன்று. கரி12, கரி13, கரி14. இவற்றுள் கரி14 கதிர் சார்ந்தது. இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியாவது. கரி14 + உயிர்வாயு = ஒற்றைக்கரியமிலம் அல்லது இரட்டைக் கரியமிலம். கரியமில வாயுவைத் தாவரங்கள் உள்ளீர்ப்பன, பச்சையத்தை ஊக்கியாக்குவன. சூரியனின் ஒளிக் கதிர் சேர்ப்பன. முதலுணவான சர்க்கரை தருவன. விலங்குகள் தாவரங்களை உண்பன. உயிர் உள்ளவரை தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ளிருக்கும் கரி14, சூழலிருக்கும் கரி14 உட…
-
- 2 replies
- 1.5k views
-
-
வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா! அங்கெல்லாம் உயிர் வாழ உவப்பான சூழல் உண்டா, என்றெல்லாம் மேற்குலக நாடுகள் தமது நாகரீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க இங்கே வளர்முக தேசங்கள் தாம் கை கொண்டிருக்கும் ஸ்மார்ட் கைபேசியும், மேலைத்தேய ஆடையும் தமது வளர்ச்சி என எண்ணிக்கொண்டு மனதளவில் இன்னும் 18, 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். பிற தேசங்கள் தவிர்த்து நான் நன்கறிந்த என் தேசத்தின் ஒரு பக்கத்தினை இங்கே பகிர்கிறேன். சிங்கள பேரினவாததிற்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் போராடிய ஆயுத குழுவின் போராட்டங்கள் 30 வருட கால சிவில் யுத்தமாக தேசத்தினை புரட்டி போட அந்த போராட்டங்கள் யுத்தத்தால் வெற்றிகொள்ளபட்டு தசாப்பதங்கள் கடந்த போது இன ஐக்கியம…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்கள அரசு, பணம் செலுத்திய ஆயுதங்களை "சிங்களத்துக்கு தண்ணி காட்டி" முல்லைத்தீவுக் கடலில் வைத்து இறக்கிய புலிகள்.! ★1997-05-13 அன்று புத்த பிக்குகளால் பிரித்தோதி, நல்ல சுபமுகுர்தம் பார்த்து, முப்படைகளின் திட்டமிடல், மற்றும் வல்லரசுகளின் ஆலோசனைகளுடனும் ஆரம்பிக்க பட்டது ஜெயசிக்குறு (OPERATION JAYASIKURU) இராணுவ நடவடிக்கை. ஆரம்பம் என்னவோ பெரும் விளம்பரத்துடன் நல்லா தான் இருந்தது. ஆனால் சண்டையின் போக்கு தான் எதிரிக்கு சாதகமாக இருக்கவில்லை. புலிகளின் தொடர் முறியடிப்பு தாக்குதலால் எதிரி திணறடிக்க பட்டான். உலகின் நீண்ட இராணுவ நடவடிக்கையாக (108நாட்கள் ஜெர்மன் படைகளால் ரசியாவுக்கு எதிராக 2ம் உலகப்போரின் போது மேற்கொள்ளப் பட்ட இராணுவநடவடிக்கை) பதிவு செய்யப்பட்ட "பப்ப ரோசா"…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
Vasu Sangarapillai பெண்கள் தனியே எதிர்ப்படும் போது ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…. ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது..// ஒரு காஷ்மீர் மாணவியின் உளக் குமுறல்... இராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா? காஷ்மீர் மாணவி.... "நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?” “நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்கள…
-
- 2 replies
- 1.7k views
-
-
ரணமாகிப்போன காயங்களும் மாறாத வடுக்களும் ************************************ கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று சொல்லுவார்கள்.ஆனால் பல மனிதர்களிடம் அது இருந்ததில்லை,அதிலும் என் இனத்திற்கு எதிராக போராடுபவனிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்..? ஆம் எனது தடுப்புமுகாம் வாழ்வில் நான் அனுபவித்த துயர் நிறைந்த சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்கிறேன்.... நான் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமிலே பல மாதங்கள் கடந்து வருடமாகவும் துயர் சுமந்தேன். இறுதி யுத்தகாலப்பகுதியில் பல பொதுமக்களும் சரி போராளிகளும் சரி இராணுவத்தின் எறிகணைகளிற்கு பலநூறுபேர் காயமடைந்தும் மரணித்தும்போவார்கள்.மரணத்தின் பிடியில் வாழ்வு,காயங்களிற்கு மருந்தின்றி…
-
- 0 replies
- 1k views
-