கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
பகலவன் பார்வையிலே பதுங்கி நிற்கும் நிழலே சிறு தட்பம் தந்தாய் பாதத்திலே அந்த நிமிடம் இளைப்பாறிய தேகத்திலே புத்துணர்வு தந்தாய் புன்னகை வெட்கத்திலே இந்த இரவு நேரத்திலே இதயத்தின் ஓரத்திலே உன் மீது தோன்றிய மோகத்தினாலே உன்னை எண்ணி வர்ணித்தேன் சில வரிகளாளே........
-
- 9 replies
- 2.1k views
-
-
இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெ…
-
- 2 replies
- 2.1k views
-
-
நவீன கவிதை / "காதலற்ற கோடைக் காலம்" "ஏழு வர்ண அழகு தொலைத்து எங்கும் விரிந்து பரந்த நீல ஆகாயமே விண்மீன்கள் சிமிட்டாத வானமே கனவுகள் தொலைத்தேன் மகிழ்ச்சி இழந்தேன் நீண்ட பகல் கோடையே வரட்ச்சி தந்து வாழ்வை கடினமாக்கி இதயத்தை வலியால் நிரப்புவது ஏன்?" "காய்ந்த இலைகள் சருகாகி வறண்ட மண்ணில் விளையாடுது வெப்பம் தாங்காது குருவிகள் கூட்டுக்குள் உறங்குது …
-
- 0 replies
- 2.1k views
-
-
குளிர்..... ----------------------- கதவுகளின் இடுக்குகளினூடாக கசிந்து வருகின்றது துருவங்களில் பயணித்த குளிரின் சாரல் கிளைகளினூடே தாவி ஏறுகின்ற குளிர் இலைகளின் விளிம்பில் உதிர்ந்து என் அறையெங்கும் வியாபிக்கின்றது வெளியே பூனை ஒன்று குளிரின் அரவம் கேட்டு தன் மீசைகளை ஒடுக்கி கதவுகளினூடே உள் நுழைகின்றது குளிர் எப்போதுமே இளமை காலம் ஒன்றில் கடந்து போன திருவெம்பாவை பாடல்களையும் வைரவர் கோவிலின் அதிகாலைப் பூசைகளையும் அந்தோணியார் கோவிலின் மார்கழி மாத இயேசு பிறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கின்றது இடையிடையே மார்கழி மழையில் நனைந்த நந்தியாவட்டை பூவின் வாசத்தையும் பவள …
-
- 14 replies
- 2.1k views
-
-
மனதுக்கும்…..உதடுகளுக்கும் , தொடுசல் அறுந்து நாளாகி விட்டது! வேடம் போடுவதில், நாடக நடிகர்களையும்…., மிஞ்சியாகி விட்டது! மாடு மாதிரி உழைச்ச, களைப்புப் போக, உல்லாசப் பயணம் போனால்…, அந்தக் கடற்கரை….., ஊர்க் கடற்கரையிடம்…, பிச்சை வாங்க வேண்டும்…, போலத் தெரிகின்றது! வசதியில்லாததுகள், வறுமையில் வாழ்பவர்கள்…, விற்கின்ற பொருட்களை…, அறாத விலை பேசி வாங்குவதில்…, ஒரு திருப்தி…! உறுத்துகின்ற மனதுக்கு.., நாங்களும் வாங்கா விட்டால்…, அதுகள் பட்டினி தான்…, என்று ஒரு சமாதானம்! வங்கியட்டைகளின் கனதி…., வீட்டுக்கடனின் பரிமாணம், கட்ட வேண்டிய சிட்டைகளின…
-
- 11 replies
- 2.1k views
-
-
உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…
-
- 10 replies
- 2.1k views
-
-
பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ ப…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஏரிக்கரைப் பூங்காற்றே... வானம் சிந்தாமல் மழையின் தூறல்கள் தேகம் நனைந்தாலும் மனதில் சாரல்கள் புரவியின் வேகமுடன் பரவிடும் நீரருவி பறந்திடும் பரவசத்தில் விரைந்திடும் நீர்த்திவலை வியப்பால் விழிவிரிய வனப்பால் மனம் நிறைய தமிழ்ப்பால் வார்த்தையின்றி தவித்தேன் உனைரசிக்க பாறை இடுக்ககளில் பனியின் துகள் சிதற சீறும் அரவமென உன் சீற்றம் எழுந்து நிற்க பொங்கு தமிழெனவே பொங்கி நீ நிமிர திங்கள் உன் அழகால் தினமும் நாணி நிற்க தாயாய் உனைக்கண்டேன் பேயாய் உனைக்கண்டேன் வெஞ்சினத்தால் துடிதுடிக்கும் வீரப்பெண்ணாய் உனைக்கண்டேன் காதலருக்கெல்லாம் நீ கண்ணுக்கு விருந்தானாய் கவிஞருக்கெல்லாம் நீ கவிதைப் பொருளானாய் கலைஞருக்கெல்லாம் நீ ஓவியக் கலையானாய் கன்னியருக்கெல்லாம் நீ கனவ…
-
- 5 replies
- 2k views
-
-
தூங்கும் போதும் தூங்கி எழும்பும் போதும் எல்லா நேரமும் எப்பவும் இவளுக்கு இவள் மகன் நினைப்புத்தான் ஊர் உறங்கி கிடந்த மாலை ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துப் போனார்கள் அன்று போனவன் போனவன் தான் இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு இன்று இவள் ஊரின் அம்மன் தேர் திருவிழா ஆண்டு தோறும் அந்த கற்பூர சட்டியை தலையில் வைத்தபடி அவனை இடுப்பில் அணைத்தபடி அந்த ஊரே அதிரும்படி அரோகரா சொன்னபடி அந்த அம்மன் தேர் பார்க்க அவனோடு சென்ற அந்த நாட்களின் நினைப்போடு எப்பவும் இவளுக்கு இவன் மகன் நினைப்பு தான் கடைசியாய் இவன் எடுத்த படத்தை காவியபடி தேடித்தேடி அலைந்து தெரு முழுக்கு கூவி திரிந்தும் எவனும் திரும்பி கூ…
-
- 2 replies
- 2k views
-
-
-
-
- 6 replies
- 2k views
-
-
கிருமியும்,கிராமத்தின் கவலையும்..! வண்டில் மாடும்,ஏரால் தீட்டும் வர்ணமும் பனையும்,தென்னையும் வாய்க்கால்,வரம்பும் கோயில்,குளமும் ஆடும்,மாடும் மூலிகைச்செடிகளும் தோட்டமும்,துரவும். முன்னோர் வாழ்வின் முதுசங்கள் இவைகள் என்மேல் அவர்களின் இருப்பும்,பாசமும் உங்களுக்கேனோ இல்லாமல் போனது. பட்டணம்,நகரமென படையெடுத்து போயிருந்து பழயவள் எனச்சொல்லி பழித்தீர்கள் என்னையும். கிராமத்தான் என்று கேலிபண்ணுவார்களென நகரத்து பெயர்களையே “நா” கூசாமல் சொன்னீர்கள் பக்கத்து வீட்டானின் பகட்டு வாழ்வைநம்பி காரும்,வீடும் கடன் பட்டே …
-
- 11 replies
- 2k views
-
-
யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…
-
- 13 replies
- 2k views
-
-
சிறுபான்மை..! *********** எஜமான்.. சொல்லுகிறார் இன்று 73வது சுதந்திர தினமாம் எல்லோரையும் செட்டையை அடித்து வானில் பறக்கட்டாம். ............... ஆனால் கூட்டில் இருந்த படியே. -பசுவூர்க்கோபி- 04.02.2021
-
- 7 replies
- 2k views
-
-
எங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இப்போர் சிதைத்துள்ளது கேள்விகள் ஏதுமின்றி பிசாசுகள் அப்பாவிக் குழந்தைகளை இப் போரில் சுட்டுக் கொன்றனர் நேசிப்புக்குரிய குழந்தை தன் தாயின் கண்ணெதிரே புதைக்கப்பட்டது இதயங்கள் உடைந்து நொறுங்கி ஊமைக் காயங்கள் நிலைபெற்றன மாணவர்கள் எங்கும் இல்லை பறவைகள் அற்ற வனாந்தரமாய் தாயில்லாப் பிள்ளைகள் போல் தனிமையில் கிடந்தன பாடசாலைகள் காகிதப் பறவைகள் காற்றில் சிறகு விரித்துப் பறந்தன தூசி படிந்த பள்ளி மணி அடிப்பாரற்று அநாதையாயிருந்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில் வகுப்பறை நாற…
-
- 1 reply
- 2k views
-
-
-
- 0 replies
- 2k views
-
-
கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" திரும்பியது வேரறுந்த வாழ்வு! "அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று! அன்றாடங்காய்ச்சிகள் முதல் அன்னைமண் காத்தோர் வரை உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் உதித்திட முன்னரே காவுகொண்டாய்! புத்தனை வணங்கிய பேய்கள் ஓய்ந்தனவென்றிருக்க, புதுப்பேயாய், நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ? தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே தொங்கி மிதந்தனர் தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்) அவர் நடந்த கரையோரம், திரைதொட்ட காலம் மலையேறிட, அவர் கிடக்கக் கரையெங…
-
- 4 replies
- 2k views
- 1 follower
-
-
”முரட்டு மேதை என்பர் மேலோர்'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.” . . இது என் சுய தரிசனக் கவிதை. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவனாக செயல்பட்ட நாட்க்களில் எழுதியது. ஒரு போராட்டத்தின்போது பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்னை intellectual and Thug என திட்டினார். அவருக்கு பதிலாக எழுதி பல்கலைகழக மாணவர் மன்ற அறிவுப்பு பலகையில் ஒட்டிய கவிதை. தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது. .கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்- வ.ஐ.ச.ஜெயபாலன் -.முரட்டு…
-
- 7 replies
- 1.9k views
-
-
பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.
-
- 3 replies
- 1.9k views
-
-
வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…! ******************** 2019..! ஆண்டொன்றை முடித்து அனைவருக்கும் அகவையெனும். விருதை வழங்கி வெளிக்கிடும் ஆண்டே வேதனையும் சோதனையும் வெற்றிகளும் தந்தவனே உன் வாழ்வில் போன உயிர் உன் மடியில் பிறந்த உயிர் என்றும் மறவோம் நாம்-எனி எமையாள யார் வருவார். 2020..! உன்னுக்குள் எமை வைத்து ஓராண்டு உன்வாழ்வின் எண்ணற்ற நிமிடமெல்லாம் எமைக்காக்க வருவாயே! புதிய உன் வரவால் பூமித்தாய் மலரட்டும் புதுமைகள் பிறக்கட்டும் இயற்கை செழிக்கட்டும் இன்னல்கள் அழியட்டும் பொய்,களவு பொறாமை போலியான வாழ்க்கை போதைக்கு அடிமை சாதி,மத சண்டை சரும நிற வெறித்தனம் அரசியல் சாக்கடை ஆதிக்…
-
- 8 replies
- 1.9k views
-
-
1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன. உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது. . * இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன். * …
-
- 2 replies
- 1.9k views
-
-
உக்ரைன் மோதல்..! **************** ஈழம் எரிவதற்கு உன் பங்களிப்பும் அதிகம் இருந்ததாக.. நாமறிவோம். இருந்தும்.. வலி சுமந்த எமக்குத்தான் உயிரின் வலி தெரியும்-உன் அப்பாவி மக்கள் அழிவு எம்மக்களாகவே பார்க்கிறோம். உன்னினம்,உன்மதம் உன்நிறமென்று எட்டிப்போக எம்மால் முடியவில்லை. ஏனெனில்.. உங்களைப் போன்றவர்களால் நாங்களும் அழிக்கப்பட்ட இனம். இரண்டுதரப்பு.. போரென்பதே உங்களின் கணிப்பும் பிடிவாதமும். இங்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள் பிள்ளைகளையிழந்த பெற்றோர் கை கால் இழந்த குஞ்சு குருமான்கள் அப்பா இறந்தது தெரியாமல் உணவு…
-
- 6 replies
- 1.9k views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதை எனது முன்னோரின் மண்ணான நெடுந்தீவு படைகளின் கட்டுபாட்டில் இருந்த போது 1985ல் எழுதியது. குமுதத்தில் வெளிவந்தது. . நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
தீராவிடம் தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும் பேரில் மோதிட வைத்த…
-
- 2 replies
- 1.9k views
-
-
கடலோரம் தென்னம் தோப்பு கரை மீது இரண்டு கிளிகள் கடல் அலையில் சுரம் எடுத்து கனவுகளை பாடுது காற்றினிலே தொட்டில் கட்டி கிளி இரண்டும் ஆடுது தென்றலிலே முகம் நனைத்து தேன்நிலவை தேடுது விழி ஓரம் கவி எழுதி வரம் ஒன்று கேக்குது வாழ்வு தனை வரையுது வசந்தத்தை பாடுது அலை வந்து சுரம் பாட அவள் மடி மீது தலை வைத்து மனதோடு பல ராகம் கிளி இரண்டும் சுக ராகம் அந்தி வானம் சிந்தி விட்ட அழகான மழை துளியில் கிளி இரண்டும் நனையுது கீதங்கள் கேக்குது ஏழு சுரத்தில் கவிதை எழுதி இதயம் இரண்டும் பேசுது எல்லை இல்லா வானத்தருகே ஏதோ கீதம் பாடுது . கிளி இரண்டும் இசை பாட கிண்கிணியின் ராகத்திலே கடல் அலையும் ஆடுது காதல் ம…
-
- 2 replies
- 1.9k views
-