கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
நெரிசலில் ஓர் மோகம் மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து ம…
-
- 47 replies
- 8.6k views
- 1 follower
-
-
குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக …
-
-
- 4 replies
- 642 views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். …
-
- 0 replies
- 98 views
-
-
ஊடறுப்பு (ஒருபேப்பருக்காக கோமகன் ) அதிகாலை நேரம் ஐந்து மணியை நேரக் கம்பிகள் அடித்துப் பிடித்துத் தொடமுயன்ற வேளையில் , இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டில் மேகங்கள் வெட்கத்தால் சிலிர்த்து சிவப்படையத் தொடங்கிக் கொண்டு இருந்தன . இந்த ஆல்லோல கல்லோலதால் வெறி கொண்ட கூழைக் கடாக்கள் வானத்தில் சித்திரம் வரைந்து சீறிக்கொண்டு பறந்தன . தூரத்தே ஒலித்த பிள்ளையார் கோயில் மணி ஐயரின் வருகையை அந்த ஊர் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தது . புல்லுப் பாயில் படுத்திருந்த தம்பையா தனது உள்ளங்கைகளைத் தனது முகத்துக்கு நேராகப் பிடித்து அவை இரண்டையும் சரசரவென்று தேய்த்தவாறே அவற்றில் கண்களைத் திறந்தார் .இததற்கு அவரிடம் ஒரு காரணமும் ஒன்று உண்டு யாரோ ஒரு புண்ணிய…
-
- 24 replies
- 2.2k views
-
-
சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே.. இளம் வயசில் ஆயிரம் பூக்கள் பூக்கும் அப்படித்தான் காதலுமா? யாருக்குத்தெரியும் அதை காதல் என்பதா? உணர்வா? காமமா?.... இன்றும் தெரியவில்லை... இப்படித்தான் அவளுக்கும் எனக்கும் ஒரு இது இருந்தது... பகிடி விடுவது நக்கலடிப்பது நுள்ளப்போவது (தொட்டது கிடையாது) இப்படித்தான் நேரம் போச்சு.. ஒரு நாள் கேட்டாள் என்னை பிடிச்சிருக்கா.....? பதில் சொல்லவரவில்லை அதற்கு நான் தயாரில்லை........ அதை நான் எதிர்பார்க்கவுமில்லை..... ஒன்றும் சொல்லாது விலகிச்சென்று விட்டேன் வீட்டுக்கு போன எனக்கு இதே யோசனை... அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு நான் படித்து முடித்து வர......?? ஆனால் அவளைப்பிடித்திருந்தது அதேநேரம் எனக்காக இன்னும் குறை…
-
- 18 replies
- 2.8k views
-
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/200…
-
-
- 3 replies
- 385 views
-
-
முதிர்கன்னி [மலர்குழலி] இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்க…
-
- 0 replies
- 239 views
-
-
அக்கினிக்குஞ்சு இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது . அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர். டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவி…
-
- 17 replies
- 2.6k views
-
-
ஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிரு…
-
- 23 replies
- 3.3k views
- 1 follower
-
-
இணையங்களைப் பார்க்க மனம் மேலும் குழம்பியது.முன்பு எல்லாம் மனச்சோகம் வந்தால் துயிலும் இல்லம் போய் சிறிது நேரம் மரநிழலில் இருந்து வந்தால் மனம் அமைதியாகும்.இன்று என்ன செய்யலாம் யோசிக்க படக் என்று அந்த ஞாபகம் வந்தது.சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மாவீரனின் தாயின் தொலைபேசி இலக்கம் கிடைத்திருந்தது.இன்றைக்கு அந்த அம்மாவோடு கதைப்போம். அம்மா அம்மா நான் என்னை அறிமுகப்படுத்தினேன். ஐயோ என்ர பிள்ளையே ! எப்படியிருக்கிறாய்?.நான் கேட்க வேண்டிய கேள்வியை அவ கேட்டா. நான் நல்லா இருக்கிறன் அம்மா நீங்க எப்படி அம்மா. நான் இருக்கிறன் .எனக்கு ஒரு குறையும் இல்லை.என்ர வீட்டுக்கு வந்திட்டன்.காலையில ஒருக்கா சமைச்சா மூன்று நேரமும் சாப்பிடுவன். தேங்காய் பொறுக்கி போடுவன்.ஓலை பின்னுவன். என்ர பாடு ப…
-
- 20 replies
- 2.2k views
-
-
உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே! அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் …
-
- 7 replies
- 5.9k views
- 1 follower
-
-
"எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்!" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பசுமையான வயல்களுக்கும், மின்னும் நெல் வயல்களுக்கும் மத்தியில், தயாளன் என்ற எளிய விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையாக உழைத்தான். அவனது கையும் காலும் மண்ணின் வாசனையுடன் பழகியது மட்டுமே அல்ல, அவனது ஆன்மா கூட இயற்கையின் தாளங்களுடன் எதிரொலித்தது. தயாளன் என்றும் பழங்கால பழமொழியில் நம்பிக்கையுடையவன். அதிலும் "வினை விதைத்தவன், வினை அறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்" அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றது 'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளார்ச்சி பெறாது” கைபடாத குழந்தை என்பது, தாயின் அன்பு, உறவுகளின் பாசம். இவை இல்லா…
-
- 0 replies
- 338 views
-
-
"வரன்" உப்பு கலந்த கடல்காற்றில் செந்நிற பூமியின் வாசனை கலந்த யாழ்ப்பாணத்தின் இதயத்தில், மேல் தட்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதிரழகி, நட்சத்திரங்களுக்குப் போட்டியான அழகு கொண்ட பெண்ணாகக் காணப்பட்டாள். அவள் தன் வீட்டின் நீண்ட பொது அறையில் இருந்த சாளரத்தை ஒட்டி நின்று கொண்டு இருந்தாள். சாளரத்தின் ஊடாக தெரிந்த மேகம் மழை வருவதற்கு அறிகுறியாக சற்று மூட்டமாகக் காணப்பட்டது. அவள் மனதைக் கவர்ந்த அந்த காட்சியை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த அவளின் மனம், பின்னோக்கி நகர்ந்தது. கதிரழகி, மூத்த மகளாக, கணனி கற்கையில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாள். அடுத்து முதுகலை பட்டம், வெளிநாட்டில் ஒன்றில் பெறவேண்டும் என்பது அவளின் ஆசையாக இருந்தது. ஆனால் பெற்றோர்கள் அவளுக்கு தி…
-
- 0 replies
- 196 views
-
-
அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பே…
-
-
- 3 replies
- 230 views
-
-
"அவளுக்கென ஓர் இலட்சியம்" ஆதிகாலத்தில் வயல்வெளிகளிலும், சேரிப்புறங்களிலும், ஆங்காங்கே வாழ்ந்து வந்த மக்கள் தமது தேவைகள் கருதியும், ஒருவருக்கு ஒருவரான தொடர்புகளை இலகுவாக்கிக் கொள்ளவும், ஒரு இடத்தை மையமாக வைத்து கூடி வாழ்ந்தார்கள், அது காலப்போக்கில் ஊர், அல்லது கிராமம், என பல பெயர்களில் அழைக்கப்படலாயிற்று, பின்னர் காலம் செல்லச் செல்ல மனிதர்கள் தமது தேவைகள் அதிகரிக்க, அதிகரிக்க கிராமங்களிலிருந்து சற்று நகர்ந்து வாழத் தொடங்கினார்கள், அது காலப்போக்கில் நகரமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் சில கிராமங்கள் எதுவித முன்னேற்றங்களுமின்றி இலங்கையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியான ஒரு கிராமம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக மட்டு நகரிலிருந்து ச…
-
- 0 replies
- 220 views
-
-
பிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது. சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது. “ எப்பிடி இருக்கிறீங்கள்?” “என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது. ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார். “கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்” “carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’ “அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். …
-
- 38 replies
- 8.3k views
-
-
மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை ந…
-
- 14 replies
- 4.7k views
-
-
"விதவையின் கனவு" நான் பதினெட்டு வயதை தாண்டிய குமரிப்பெண்ணாக இருந்தபொழுது, காதல் , காமம் பற்றிய எண்ணங்கள் திறந்தவையாக எனக்கு இருந்தன. நான் ஒளிவு மறைவு இன்றி என் நண்பிகளுடன் சுதந்திரமாக அரட்டை அடிப்பேன். ஆனால் என் கணவர் அதற்கு எதிர்மாறு. அவர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பாரம்பரியமான கட்டுப்பாடுகளுடன் காணப்பட்டார். நாம் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிய பொழுது, மூன்று நான்கு முறை சந்தித்த பின்பு தான் முதல் முத்தமே தந்தார். நானும் ஒவ்வொரு சந்திப்பிலும் அவருக்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியும் பார்த்தேன், ஆனால் அவர் என்னைப்பற்றி முழுதாக அறிவதிலேயே காலம் கடத்தினார். என்றாலும், காலம் ம…
-
- 0 replies
- 501 views
-
-
ஒர் அகதியின் கதை என் ஈழத்திரு நாட்டிலே யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் உறவுகளைத் தொலைத்த சோகங்கள் சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும் வரலாறாய் இருக்கும். கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை ஈந்த பெற்றோர் கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின் கதை. 1990இல் ஒரு ஆவணி மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின் ராணுவத்தினர் தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பி…
-
- 2 replies
- 1.8k views
-
-
வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது 1984 ஒரு காலைப்பொழுது. எவரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. அத்துடன் மோட்டார் சைக்கிள் சத்தமும். வெளியில் வந்து பார்த்தால் புதிதாக திருமணமான எனது மச்சாளும் அவரது கணவரும் வந்திருந்தனர். வரவேற்று உபசரித்து இன்று மத்தியானம் இங்குதான் சாப்பாடு என்று முடிவெடுத்தபின் நிற்கும் சேவலில் எதுவேண்டும் என்று கேட்டு மச்சாள் புருசன் பூவோடு நிற்கும் சிவப்பு சேவலைக்கைகாட்ட அதை முறித்து உரிக்கும்படி தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்த எனக்கு ஒரே மன உளைச்சல். மச்சாள் நமக்கு கிடைக்காது வேறு ஒருவரை கட்டிவிட்டாவே என்ற ஆதங்கம் உள்ளிருந்தாலும ஒரு வயது கூடியவர் என்பதால் நாம்தானே பார்க்காது விட்டோம் என்பது புரிந்தது. எனது மன உளைச்சலுக்கு காரணம் அவர்கள் வந்திருந்த ச…
-
- 210 replies
- 24.1k views
- 1 follower
-
-
1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான் சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் .. அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்க…
-
- 16 replies
- 5.9k views
-
-
திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் . நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் . இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்! பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்! அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"! சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்! ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்! மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந…
-
- 13 replies
- 1.6k views
-
-
"திங்கட்கிழமை லீவு எடுத்திட்டியே" என்று அருகிலிருந்து ஒரு குரல். வேறு யார். எல்லாம் திருமாறனின் நண்பன் தான். அண்ணன் கவுண்டமணி சொன்னது போல் "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன" என்ற வசனம் தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. இவ்வளவு நடந்த பிறகு இனி எங்களால் என்ன செய்ய முடியும். பேசாமல் வேலைக்கு போகலாம் என்றான். "டேய் லூசுத்தனமா கதைக்காம லீவு எடுத்துக்கொண்டு வா" அவனும் விடுவதாய் இல்லை. சரி எதையும் செய்யாமல் இருப்பதைவிட இதையாவது செய்வோம் என்று சம்மதம் தெரிவித்தான். 10மணிக்கு பேரூந்து புறப்படும் என்று அறிவிப்பார்கள். இருவரும் சரியாக அங்கு சென்று காத்திருப்பார்கள். அதன் பின்னரே ஏற்பாட்டாளர்கள் வந்து சேர்வார்கள். நானும் வருகின்றேன் என்று சொன்னவர்களில் பலரை அங்கு காணக்கிடைக…
-
- 3 replies
- 1.8k views
-