கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற…
-
- 0 replies
- 2k views
-
-
கோழியும் ஆமையும் - நிமிடக்கதை பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது. நன்றி
-
- 6 replies
- 2k views
-
-
தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம். ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி …
-
- 20 replies
- 2k views
-
-
மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள். பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்…
-
- 0 replies
- 1.9k views
-
-
பாகம். 4 பதிவின் தொடர்... எதிர்பாராத கெளசல்யாவின் சந்திப்பு கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று நண்பர்கள் கூறுவது பொய்யல்ல. அவளை யாராவது மாணவன் சீண்டினால், மற்றப் பெண்களைப்போல் சீறிச் சினந்து ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பது, அல்லது சீண்டுபவர் காலத்துக்கும் நினைத்து நினைத்து அவமானப்படும்படி முறைத்து, ஒரு வெறுப்பான பார்வையை வீசுவது என்று இல்லாது, என…
-
- 16 replies
- 1.9k views
-
-
திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும் தேனி. அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி. சுறு சுறுப்பாக எழுந்து வரிசைகட்டி வாழ்வதற்காக உணவெடுத்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது. இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்பு…
-
- 3 replies
- 1.9k views
-
-
நாள் ஒன்று வரும் மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம். எழுத்து ஆக்கம்: இளங்கோ, பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம் நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள். (எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்) கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும் தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வ…
-
- 8 replies
- 1.9k views
-
-
பேரூந்தில் அவனுக்கு நேர் எதிரே அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளையின மூதாட்டி பார்வையில் ஓர் அருவருப்பு தெரிந்தது.அந்த பார்வயை தவிர்க்க அவன் இடது புறமாக திரும்பி யன்னல் ஊடாக வெளியே பார்வையை ஒட விடுகிறான். மழை வெளியே பெய்து கொண்டிருந்து வானம் இருட்டிக்கிடந்தது யன்னல் கண்ணாடியில் இன்னமும் அந்த வெள்ளையின மூதாட்டி இவனை பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த விம்பத்தின் விழிகளைப்பார்க்க சக்தியற்றவனாக் பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். தனது கைத்தொலைபேசியை எடுத்து நோட்டம் விட்டான் அதில் கடைசியாக வந்த அழைப்பு கரன் என்றிருந்தது,அழைப்பு பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தது.உரையாடலை நினைவுக்கு கொண்டுவர முயன்றான். பொதுவாக பதினேழு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உ…
-
- 11 replies
- 1.9k views
-
-
இலங்கையில் ஜேபி (justice of peace) என்று பதவி ஒன்று இருக்கிறது. சுத்த தமிழில் சமாதான நீதிவான் என்று சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை. சில ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். "இப்ப சரியான பிசி " பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட மாட்டார்கள். அவர்களை பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு. ஜேபியாக என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும் யாருக்கும் தெரியாத பரம இரகசியம். எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார். பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார். இருட்ட முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலை குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம் நேரம் செல…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில சந்தர்ப்பங்கள், வாழ்வின் திருப்பு முனையாக அமைவது உண்டு . அந்த வகையில் சாதனா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம். பள்ளிப் படிப்பின் பத்தாம் ஆண்டு , முதற் தடவை ஓல் பரீட்ச்சை யில் எட்டுக்கு ஐந்து படங்கள் சித்தி எய்திய நிலையில் கணிதம் அவளுக்கு தோல்வியை தந்தது . பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் நன்றாக வாங்கி கட்டிக்க கொண்டாள் . " பராக்கு க்கு கூடிபோச்சு" "படிச்சு முன்னேறும் வழியை பாரு " " தோழிகள் சகவாசம் கூடிப்போச்சு" "தலை யலங்காரம் செய்யும் வேளை படித்தால் என்ன ? என சில நாகரிகமற்ற வசவுகள் . அவளை மேலும் கவலை யும் கண்டனங்களும் ஈட்டியாய் குத்தின.. அடுத்த கல்வி ஆண்டு ( ஏ எல்) வேறு பாடசாலை க்கு சக மாணவிகள் பாடசாலை மாற தயார…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
புரட் …சீ ( சிறுகதை ) - சாத்திரி ( பிரான்ஸ் ) காலை நித்திரையை விட்டெழுந்த கட்டிலில் இருந்து இறங்குவதற்குள் அருகில் கீழே படுத்திருந்த கார்க்கி துள்ளி எழுந்து மல்லிகா மீது பாய்ந்து வாலையாட்டியபடி முகத்தை நக்கத் தொடங்க அதன் தலையை மெதுவாய் தவிக்கொடுதவள் தனது கண்ணாடியை எடுத்துப் போட முயற்சிக்கும் போது மீண்டும் கார்க்கி அவள் மீது பாய கை தவறி கீழே விழ கார்க்கியை அதட்டியபடி கீழே விழுந்த கண்ணாடியை எடுத்துப் போட்டபடி கார்க்கியின் உணவை எடுத்து அதன் கிண்ணத்தில் போட்டுவிட்டு தேநீரை தயாரித்த மல்லிகா அதை எடுக்கும் போது கை தவறி தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்து போக.. திடுக்கிட்ட கார்க்கி மல்லிகாவை பார்த்து குரைத்து விட்டு மீண்டும் கிண்ணத்தில் தலையை விட்டு கொறிக்கத் தொடங்கியது. “…
-
- 4 replies
- 1.9k views
-
-
1998 ம் ஆண்டு, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பைத் துண்டாடத் தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருந்தது சிங்களப்படை. மாங்குளச் சந்தியைக் கைப்பற்றுவதற்காகப் பல பகுதிகளால் புதிய போர் முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது. மறுபுறம், புலியணியும் புதிய முனைகளில் முன்னேறிய இராணுவத்தின் மீது உக்கிரமான மறிப்புத் தாக்குதலை முன்னெடுத்தது. ஆனால், தினசரி வீரச்சாவும், காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால், படையணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் காயப்பட்டு, காயம் ஆறி (முழுமையாகக் குணமடைவதற்கு முன்) களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர். அதில் சிலர் வீரச்சாவடைந்து கூட இருக்கின்றனர். நிர்வாகத்திலிருந…
-
- 17 replies
- 1.9k views
-
-
நான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் . மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது…
-
- 18 replies
- 1.9k views
-
-
யார் யாருக்கு சீட்டு தெரியும் என்று கேட்டால், பெரியவர்களே கைகளை உயர்த்துவார்கள். இதில் உழைப்பாளிகளே தங்களது பணத்தினை ஈடுபடுத்துகிறார்கள். வாகனம், வீடு, கடை என அவர்களின் பெரிய செலவுக்கு பயன்படுகிறது, அத்தோடு அரசாங்க கணக்கில் வராத கறுப்பு பணம். சீட்டு பலவிதப்படும். கழிவுச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று இருக்கிறது. கழிவுச்சீட்டின் பொருள். ஒரு தொகை மக்கள் இணைந்து மாதம் மாதம் பணம் போடுவார்கள். முதல் சீட்டு தாய் சீட்டு, அது நடத்துபவருக்கு, ஏனையவை எடுப்பவருக்கு கழிவுகளுடன். 12 பேர் இணைந்து 12‘000 ரூபாய் சீட்டு போட்டால் தலா 1000 ரூபாய் கட்டவேண்டும். அவசரமாக கேட்பவருக்கு கழித்து கொடுக்கப்படும். கழித்த பணத்தின் மீதியை 12ஆக பிரித்து கட்ட வேண்டும். கடைசி சீட்டை எடுப்பவர்களுக்கு…
-
- 4 replies
- 1.8k views
-
-
Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
"திங்கட்கிழமை லீவு எடுத்திட்டியே" என்று அருகிலிருந்து ஒரு குரல். வேறு யார். எல்லாம் திருமாறனின் நண்பன் தான். அண்ணன் கவுண்டமணி சொன்னது போல் "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன" என்ற வசனம் தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. இவ்வளவு நடந்த பிறகு இனி எங்களால் என்ன செய்ய முடியும். பேசாமல் வேலைக்கு போகலாம் என்றான். "டேய் லூசுத்தனமா கதைக்காம லீவு எடுத்துக்கொண்டு வா" அவனும் விடுவதாய் இல்லை. சரி எதையும் செய்யாமல் இருப்பதைவிட இதையாவது செய்வோம் என்று சம்மதம் தெரிவித்தான். 10மணிக்கு பேரூந்து புறப்படும் என்று அறிவிப்பார்கள். இருவரும் சரியாக அங்கு சென்று காத்திருப்பார்கள். அதன் பின்னரே ஏற்பாட்டாளர்கள் வந்து சேர்வார்கள். நானும் வருகின்றேன் என்று சொன்னவர்களில் பலரை அங்கு காணக்கிடைக…
-
- 3 replies
- 1.8k views
-
-
கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்…
-
- 16 replies
- 1.8k views
-
-
மனம் சாய்ந்து போனால்........ 'டேய் மச்சான் ஏதும் பிரச்சினை வராது தானே?' ஜந்தாவது தடவையாக கண்ணனிடமிருந்து கேட்கப்பட்ட அதே கேள்வியால் சிறிது எரிச்சலடைந்த ரமேஸ், 'டேய் சும்மா இரடா, இதோட எத்தனையாவது தடவையா இதே கேள்வியை கேட்பாய்?' என்றான் சலிப்புடன், 'உனக்கென்னடா? எனக்கு பயமா இருக்கடா ' 'பயமா, இது எப்பவோ இருந்திருக்க வேண்டியது, இப்ப பயந்தா வேலைக்காகாது. மாப்பிளையா இலட்சணமா இரு' 'சொன்ன மாதிரி கவிதா வந்திருவாளாடா?' 'இங்க பாரடா, நீயும் ரென்சனாகி எங்களையும் ரென்சனாக்காத, ஆனந் வரும்போது கவிதாவோடதான் வருவான்' 'எதுக்கும் ஒருக்கா போன் பண்ணிப் பாரடா' கண்ணன் முள்மேல் நிற்பதுபோல் அவஸ்தைப்படுவதை அவதானித்த ரமேஸ் 'சரி சரி நான் போன் பண்ணுறன் நீ ரென்சனாகாத' 'டேய் ஆனந் என்னடா? எங்…
-
- 3 replies
- 1.8k views
-
-
வாழ்வின் மரணத்துக்கு பக்கதில் இருந்து திரும்புதல் என்பது இப்பொழுது சுகமான மீட்டலா இருந்தாலும் அவ்வேளைக்ளும் அந்த தருணங்களும் படபடப்பானவை ஒவ்வெரு நொடியும் பொழுதும் பக் பக் என வாங்கும் மூச்சை வேகமா விடவும் முடியாமல் அமைதி காப்பது என்பது அதை விட கொடிது .. அவ்வாறு அனுபவித்த ஒரு சம்பவத்துக்கு உங்களை கூட்டி போகலாம் வாருங்கள் .. பயிற்ச்சிகள் முடித்தா வேளை மூன்று அணிகள் பிரித்து இரண்டு இரவுகள் காட்டில் மறைந்து வாழ்வெனும் ஒரு அணி அவர்களை தேடி மிகுதி இரண்டு அணியும் செல்ல வேணும் கண்டு பிடித்தால் பிடித்து வந்து தண்டனை கொடுக்கலாம் எப்படியும் என்று சொல்லி ஏழு ஏழு பேர்களா பிரித்து குலுக்கள் முறையும் தெரிவு நடக்கு முதல் அணியே எங்கள் அணி தலைமறைவு ஆகணும் இரண்டு இரவு இன்று பின்னேரம்…
-
- 12 replies
- 1.8k views
-
-
நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ... அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று …
-
- 6 replies
- 1.8k views
-
-
காலக்கடனும் கடமையும். 27. 12. 2019 காலை 10மணிக்கு வவுனீத்தாவும் நானும் பார்த்திபனிடம் போய்க்கொண்டிருந்தோம். மழைத்தூறலுடன் கூடிய மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. 4மாதங்களின் பிறகு அவளும் நானும் சேர்ந்த பயணமது. இம்முறை நத்தார் விடுமுறைக்கு பார்த்தி எங்களிடம் வரவில்லை. அவன் விடுமுறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறான். சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை மடித்து சப்பாணி கட்டியிருந்தபடி கதைத்துக் கொண்டிருந்தாள். சிறுவயது ஞாபகங்கள் முதல் இன்று வரையான அவளது கதைகள் கேட்டபடி காரோடிக் கொண்டிருக்கிறேன். வெளிவரவிருக்கும் அவளது பாடல்களைத் தனது மொபைலில் இருந்து காருக்கு மாற்றிப் போட்டாள். எனக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கும் அவளது எண்ணங்கள் சிந்தனைகள் எப்…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமீபா குளம் -------------------- அமீபா ஒரு ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது. அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின…
-
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ... நடு நிசி....எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க முயற்சிக்கிறாள் ..அருகே இரு குழந்தைகளும் ஆழ்ந்த் நித்திரை ..... முன்னைய நாட்கலேன்றால் அவரவர் அறையில் தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி அனுமதிபெற்று ...உள் வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான கட்டளை. இந்நாட்டு வழக்கப்படி ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை அனுமதிப்பார்கள். சில வாரங்களா…
-
- 15 replies
- 1.8k views
-
-
வேலையால் வீடு திரும்பும் போது ரோரோன்டாவில் இந்த வாரம் அடிக்கும் சணல் வெக்கை என்னையும் வாட்டி எடுத்தது .பாடசாலை விடுமுறை என்பதால் வீட்டில் சின்னவனை காணவில்லை. பாஸ்கெட் போல் விளையாட நண்பர்களுடன் போயிருப்பான் .மனுசி வேலையால் வந்து ஏ சி யை உச்சத்தில் விட்டு உண்ட களைப்பு தீர தூக்கம். பெரியவன் வில் ஸ்மித் இன் பழைய சீரியலுடன் டி வி யில் மூழ்கியபடி. ஏழு முப்பதற்கு தொடங்கும் அலெக்ஸ்இன் ஜேப்படியில் யார் கூடுதல் பதில் சரியாக சொல்லவதாக தினமும் அவனுக்கும் எனக்கும் போட்டி.. இன்று எனக்கு ஐந்து அவனுக்கு மூன்று. குளிர்சாதன பெட்டியில் நன்கு உறைந்த ஸ்ரவுட்டை உடைத்து வாயில் விட்டபடி வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தை பார்க்கிகின்றேன். அத்தனை தாவர உயிர்களும் தண்ணீர் வேண்டி அழுது ஓய…
-
- 8 replies
- 1.8k views
-