கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
656 topics in this forum
-
கடந்த கிழமை நியூயோர்க்கிலிருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ வரும் போது என்றைக்கும் இல்லாத மாதிரி முன்னால் போன மனைவி அவசரகால கதவு இருந்த இடம் ஆட்களும் இல்லை.இடமும் பெரிதாக இருந்ததால் அதிலேயே இடம் பிடித்துவிட்டா. மற்றைய விமானங்களில் இருக்கை இலக்கங்கள் தருவார்கள்.அதை தேடிப் பிடித்து இருந்திடலாம்.முன்னுக்குப் போனாலும் பின்னுக்குப் போனாலும் எமது இருக்கைகள் எமக்காக காத்திருக்கும்.ஒரேஒரு வில்லங்கம் பின் இருக்கைக்கு போகிறவர்கள் முன்னுக்கு ஏறினால் கொண்டு போற பொதிகளை முன்னுக்கு எங்கே இடம் கிடைக்குதே அங்கே தள்ளிவிட்டுட்டு போய்விடுவார்கள்.எமது இருக்கை முன்னுக்கு இருந்தாலும் கடைசியாக ஏறினால் பொதிகள் வைக்க முடியாது.தேடித் திரிந்து பின்னுக்கு எங்காவது தான…
-
- 16 replies
- 4.2k views
-
-
முதல் மாசம் சம்பளம் வந்ததும் 10ம் திகதிக்கு முதல் காசை எடுத்து அண்ணாச்சி கடையில எல்லாரும் குடுத்திச்சினம். தாய் சீட்டு அவருக்கு, அதாவது முதல் சீட்டு அவருக்கு. அதால 20 பேருக்கும் தலா 4‘000. தன்ர கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டார். வியாபாரம் ஓரளவு ஓடிச்சு. வேற மலிகைசாமான் கடைகளும் பக்கத்தில இருக்கிறதால அவருக்கு கஷ்டம் தான். அண்ணாச்சி ஒரு பிழை விட்டிட்டார், அதின்ர விழைவு இன்னும் தெரியேல்ல. சில பேருக்கு வீட்டில இறுகீற்று. 4‘000.- பெரிய காசு. வாங்கிற சாமான்கள விலைய பார்த்து வாங்குற நிலை. சீட்டெண்டா சும்மாவா, அதுவும் 80‘000 பிராங் சீட்டு. வாயை கட்டி வைத்தை கட்டி வாழ வேண்டும். சரி பெரிசா வரும் எண்ட எண்ணம் மனசுக்க இருந்தது. வீடு வாங்கலாம் அது இது வாங்கலாம் என்கிற கற்ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
மேமாத நினைவும் இருகண்களை இழந்த போராளியின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 19, 2013 தாயகத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலம் அது. 08.06.2003 மகளின் 5வது பிறந்தநாள். அந்தமுறைப் பிறந்தநாள் செஞ்சோலையில் காலையும் , மாலை காந்தரூபன் அறிவுச்சோலையிலும் , மதியம் நவம் அறிவுக்கூடத்தில் பல்துறை அறிவுசார் கற்கை நெறிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஊனமுற்ற போராளிகளோடும் அன்றைய பொழுதை செலவிடுவதென முடிவாகி காலை 8மணிக்கு வள்ளிபுனம் செஞ்சோலைக்குச் சென்று மதியம் 12மணிக்கு விசுவமடுவில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றோம். ஏற்கனவே இருமுறை நவம் அறிவுக்கூடம் போயிருந்ததில் ஏற்பட்ட அறிமுகம் பல பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் , கவிஞர்கள் , எழுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம். ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி …
-
- 20 replies
- 2k views
-
-
எழுகின்ற தேசத்தின் விழுதாக....விலையாக....! அம்மா நான்...! முடிக்க முதலே அம்மா அழத்தொடங்கிவிட்டார். என்ரையம்மா இண்டைக்கு எடுக்க வேணுமெண்டு நேந்து கொண்டிருந்தனான். ஒவ்வொரு நாளும் நினைக்கிறனான் என்ர செல்லத்தை....! அம்மா அப்படித்தான் ஒவ்வொரு முறையும் குரல் கேட்டதுமே அழத் தொடங்கிவிடுவா...! தன் சோகங்களை தனது கனவுகளை ஒவ்வொன்றாய் ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும் கொட்டிவிட்டு கண்ணீரோடே விடைபெற்றுக் கொள்வா. அம்மாவின் பிள்ளைகளுக்காக நோர்வேயிலிருந்து ஒரு குடும்பம் மாதம் 6ஆயிரம் ரூபா கல்விக்காக நேசக்கரம் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உதவியில் அம்மாவின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தின் காலாண்டு அறிக்கை தொகுப்பதற்காகவே அம்மாவை இன்று அழைத்திருந்தேன். வளமைபோல அம்மா சொ…
-
- 10 replies
- 1.6k views
-
-
"பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]" இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர். பறவைக்கு கூ…
-
- 0 replies
- 136 views
-
-
ஊமைக் கனவுகள் தோழி அவள் காத்திருந்தாள். காலம் முழுவதும் காத்திருக்கலாம் போன்ற உணர்வுடன் காத்திருந்தாள். இனியும் காத்திருப்பின் காத்திருந்த அர்த்தம் எல்லாம் பொய்த்து விடுமோ என்ற அச்சமேயில்லாமல் காத்திருந்தாள். நெஞ்சம் நிறைய ஆதங்கத்துடன் இருந்தவள் வயிற்றில் இவன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி அரசல் புரசலாகக் காதில் விழுந்து தொலைத்தது. அவளின் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் உண்டானது போல அவளது மனம் குதூகலித்தது. “அண்ணை, ஊருக்குப் பயணமாம் எண்டு கேள்விப்பட்டனான், மெய் தானே?" அவளுக்கேயுரிய மெல்லிய குரலில் அவள் கேட்டபோது அவனும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்ல நேர்ந்தது. "ஏன் பவானி என்ன விசயம்? ஏதும் தேவையோ ஊரிலையிருந்து ?" மௌனமாய்ப் போனவளின் …
-
- 6 replies
- 2.6k views
-
-
எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு …
-
- 14 replies
- 1.7k views
-
-
Thursday, August 17, 2017 என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். _____________________________________________________ 2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போ…
-
- 28 replies
- 7.2k views
-
-
தாயை எண்ணிஎண்ணி நந்தாவுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம். எதுவித முடிவையும் எடுக்க முடியவில்லை. இத்தனை நாள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாகிவிட்டது. இருந்தும் மனதில் முடிவெடுக்க முடியாத பயம் சூழ்ந்து தூக்கம் இழக்க வைத்ததுதான் மிச்சம். நான் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படுகிறேன்? அவர்கள் என்ன கூறினால் என்ன. எனக்கு ஒன்று என்றால் அவர்களா ஓடி வரப் போகிறார்கள். எனக்கோ என் குடும்பத்துக்கோ அதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னாலும் என்ன தயக்கம் என தன்னைத்தானே கேட்டும் பயனில்லை. இத்தனை நாள் மற்றவர்கள் மனதில் என்னைப் பற்றி இருந்த பிம்பம் அழிந்துவிடுமே என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதை அங்குமிங்கும் அலைக்கழித்தும் விடை தான் கிடைக்கவில்லை. ஏற்கனவே அ…
-
- 18 replies
- 2.7k views
-
-
August 6th 2016 .Saturday . யாழ்ப்பாணம் . காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தோட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மோட்டார்சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து , “அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" . நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் . காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் . “ந…
-
- 7 replies
- 3.1k views
-
-
க..பூ..க..போ . (சிறுகதை) க..பூ..க..போ . இம்மாத அம்ருதாவில் . சாத்திரி .. இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணி…
-
- 14 replies
- 4.1k views
-
-
தேசியத்தலைவர் பற்றி - 02 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட 'கிணிகிர' இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது. மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து…
-
- 4 replies
- 1.5k views
-
-
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று. அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்… ஒன்று கலவி மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை இளமையான வயது கெட்டியான எருமைத் தயிர் சர்க்கரை சேர்த்த பால் மானின் மாமிசம் அழகிய பெண் துணை என் ஒவ…
-
- 0 replies
- 2.8k views
-
-
அவர் ஒரு ஆபிரிக்க செனகல் நாட்டைச்சேர்ந்த வயதான பெண். அடிக்கடி கடைக்கு வருவார். நிறைப்பணம் செலவளிப்பார். ஊருக்கும் அனுப்புவார். கனக்க பைல்கள் கொண்டு வந்து போட்டோக்கொப்பி எடுத்து பல இடங்களுக்கும் அனுப்புவார். பைல்கள் முறையாக அடுக்கப்பட்டு அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும். எழுதப்படிக்கத்தெரியாத அவரது இந்தத்திறமையைக்கண்டு நான் பிரமித்ததுண்டு. எழுதப்படிக்கத்தெரியாததால் என்னிடம் விலாசங்களை எழுதித்தரும்படி கேட்பார். அதில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்கள் சம்பந்தமானதும் விவாகரத்து மற்றும் முறைப்பாடுகள் சார்ந்த அமைச்சுக்களின் விலாசங்களும் இருக்கும். ஒருநாள் கனநேரமாக தொலைபேசியில் அழுதபடியிருந்தார். என்னுடனும் …
-
- 5 replies
- 2.5k views
-
-
பச்சைப்பாவாடை கவி அருணாசலம் அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை. வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன. முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதால…
-
- 9 replies
- 4k views
-
-
தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டா…
-
- 16 replies
- 2.1k views
-
-
முத்து அக்கா முத்து அக்காவிடம் கனக்க மஞ்சள் பைகள் இருந்தன. அழுக்கின் கறைகள் இல்லாமல் சிவப்பு நிறத்தில் ‘முருகா முருகா’ என்ற பெரிய எழுத்துக்களுடன் பளிச்சென்று தூய்மையாக எப்போதும் ஒரு மஞ்சள் பை அவர் கையில் தொங்கிக் கொண்டிருக்கும். பால் வியாபாரம்தான் முத்து அக்காவின் குடும்பத்துக்கான ஆதாரம். எங்கள் தெருவில் அநேகமான வீடுகளுக்கு முத்து அக்காதான் பால் கொண்டு வந்து கொடுப்பார். சாரயப் போத்தல் - ‘முழுப் போத்தல்’, எலிபன்ற் பிராண்ட் சோடாப் போத்தல் - அரைப் போத்தல் என்ற அளவில் அவரது பால் வியாபாரக் கணக்கு இருக்கும். காலையில் ஆறு மணிக்கே எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொருவர் வீட்டு அடுப்பிலும் பால் கொதிக்க ஆரம்பித்து விடும். அதிலும் எங்கள் வீட்டில்தான் முதலில் பால் பொங்க ஆர…
-
- 11 replies
- 4.4k views
-
-
"உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய…
-
- 0 replies
- 424 views
-
-
"அவளும் அப்படியா?" ஒரு காலத்தில் தமிழ் சமூகத்துடன் செழித்தோங்கிய நகரமான திருகோணமலையின் வளைந்த தெருக்களில் நீண்ட நிழல்களை வீசியபடி சூரியன் வானத்தில் தாழ்ந்தது. இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தளமும் ஆகும். மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம…
-
- 0 replies
- 370 views
-
-
இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக…
-
-
- 24 replies
- 947 views
- 1 follower
-
-
வீடு புதிதாகக் கட்டுப்படுகையில், குடிபூரல் நிகழுமுன்னர் அதற்குள் தச்சுப்பேய் இருக்கும் என்பது முடிந்த முடிபாக ஊரிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தச்சுப் பேயைப் பார்த்தவர்கள் சாட்சியம் கூற இருந்ததனால் நம்பிக்கைத் தன்மையில் சந்தேகம் ஒட்டவில்லை. விதிகளிற்கு ஏற்ப வாழும் கிராமம் பேயை உரச விரும்பவில்லை — ஒரு சிறுவனையும் அவன் தம்பியையும் தவிர. அவ்விரு சிறுவர்களிற்கும் பேயைப் பார்த்துப் பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வம் தாங்க முடியவில்லை. அப்போது அவர்களில் மூத்தவனிற்கு ஒன்பது வயதும் இளையவனிற்கு ஏழு வயதும் ஆகியிருந்தது. ஒரு இரவினைத் தங்கள் நடவடிக்கைக்குக் தேர்ந்தெடுத்தார்கள். மூத்தவன் ஒரு இரும்புக் கம்பியினை எடுத்துக் கொண்டான். இரண்டாமவன் குசினியில் இருந்து காய்கறி நறுக்கும…
-
- 11 replies
- 3.3k views
-
-
கொக்கும் கெழுத்திமீனும் பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களுக்கும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் . பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி…
-
- 22 replies
- 2.4k views
-
-
அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்.... தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை... என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழன…
-
- 4 replies
- 3.3k views
- 1 follower
-
-
நளபாகம் --------------- நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது. இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உ…
-
-
- 21 replies
- 1.6k views
- 1 follower
-