கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன். என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச்…
-
- 39 replies
- 3.8k views
-
-
பீனாகொலடா ( சிறுகதை ) / சாத்திரி ( பிரான்ஸ் ) Oct. 17 2014, அக்டோபர், இதழ் 60, இலக்கியம், சிறுகதை, முதன்மை 5 no comments இன்று லீவு நாள் வழக்கம் போல ஆறுதலாக நித்திரையால் எழும்பி சோம்பல் முறித்து எழும்பி போய் ஒரு பிளேன் டீ யை போட்டு எடுத்த படி ஹாலுக்குள் வந்து டிவியை போட்டு விட்டு சோபாவில் அமர்ந்து டீ யை ஆசையாய் ஒரு உறுஞ்சு உறுஞ்சும் போதே "என்னாங்கோ ஒருக்கா வாங்கோ "எண்டு அறையில் இருந்து மனைவியின் சத்தம்.."லீவு நாளிலை கூட நிம்மதியாய் ஒரு டீ குடிக்க முடியேல்லை" என்று சின்ன சினத்தோட அறைக்குள் போய் எட்டிப்பார்க்க கட்டிலில் குவிந்து கிடந்த துணிகளில் சிலதை எடுத்து என்னிடம் நீட்டியபடி இதுகளை கொண்டு போய் ரெட் குறொஸ் பெட்டிக்குள்ளை போடிட்டு வாங்கோ முக்கியமா இந்த பச்சை…
-
- 19 replies
- 3.1k views
-
-
ஒரு அறை நடுவில் ஒரு விளக்கு எதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள் விளக்கு அணைக்கப்படுகின்றது அடுத்து என்ன நடக்கும்? ------------------- இதனை கள உறவுகளே தொடருங்கள்
-
- 13 replies
- 1.3k views
-
-
ஏதேதோ நினைவுகள் வந்து மனதை தொடர்ந்தும் குழப்ப நித்திரை கொள்ளமுடியாமல் படுக்கையை விட்டு எழும்பி படிகளில் இறங்கி வீட்டின் சிற்றிங் ரூமிற்கு வருகின்றேன் .அக்காவின் மகன் எனக்கு முதலே எழும்பிவந்து தொலைகாட்சியில் சத்தத்தை குறைத்து வைத்து Sesame Street பார்த்துக்கொண்டு இருந்தவன் என்னை கண்டதும் சத்தம் போடவேண்டாம் என்று வாயில் விரலை வைத்து சிக்னல் போடுகின்றான் .அப்படியே அவனை தூக்கி மடியில் வைத்தபடி நானும் Elmo ,Cookie Monster களின் விளையாட்டுகளை ரசித்தபடி அவனுடன் சேர்ந்து Sesame Street பார்க்க தொடங்குகின்றேன் . இந்தியாவால் லண்டன் வந்து சேர்ந்து இருமாதங்கள் ஆகின்றது .அக்கா வீடுதான் வாசம் .அத்தானும் அக்காவும் வாரநாட்களில் வேலை என்று அலைவதால் வாரவிடுமுறையில் பிந்தித்தான் எழு…
-
- 24 replies
- 2.5k views
-
-
பொன்னம்மா அத்தையைத் தெரியாதவர் எம்மூரில் இல்லை. ஆனாலும் அவர் பற்றி விபரம் கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரிவதில்லை. உண்மையில் அவர் எனக்கு அத்தை கிடையாது. என் பெரியம்மாவின் கணவரின் தங்கை அவர். பெரியம்மாவின் பிள்ளைகள் அத்தை என்று கூப்பிடுவதனால் நாங்களும் அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டது. கூப்பிடுவது மட்டுமேயன்றி அவருக்கும் எமக்குமான நெருக்கமோ அன்பான பார்வையோ கூட என்றும் இருந்ததில்லை. என் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு அவர்களது எனினும் எண்ணிக்கை நினைவில் உள்ள நாட்களே நான் அங்கு செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்கள் வீடும் கூட ஒரு ஒதுக்குப்புறமாக இருந்ததும் வீட்டைச் சுற்றி யாரும் இனி வைத்தும் பார்க்க முடியாதவாறு சுற்றிவர மதிலும் இருந்ததாலுமோ என்னவோ நான் மட்டுமல்ல மற்றையவர்கள் கூ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன். 'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை. 'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நி…
-
- 29 replies
- 4.5k views
-
-
சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். 'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ?' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள். மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்க…
-
- 9 replies
- 1.7k views
-
-
உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது. பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல. நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை. கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை. நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றைய…
-
- 17 replies
- 2.8k views
-
-
எழுபதுகளின் கடைசி. மூன்றாம் முறை A/L பரீட்சை எழுதிவிட்டு ஏதோ டாக்டர் ஆக போகின்றவன் கணக்கு விடுமுறைக்கு மன்னாருக்கு அத்தானிடம் செல்கின்றேன்.அத்தானின் ஜீப்பில் மன்னார் வங்காலை காடுகள் எல்லாம் சுற்றி அடித்தாலும் பொழுது போவதாக இல்லை .ஒரு லைபிரரி ,ஒரு தியேட்டர் , எங்கும் கழுதைகள் ,அதிக வெய்யிலால் காஞ்சு கிடக்கு மண். இரண்டு நாட்களில் அம்மாவும் அக்காவும் மன்னாருக்கு வந்து சேர்ந்தார்கள் .சும்மா இருந்த அத்தானின் குவார்ட்டர்சில் இந்தியாவில் இருந்து கப்பல் வரும் போது கப்பல் கப்டன் ,ரேடியோ ஆபிசர் வரை தங்குமிடமாக அது மாறியிருந்தது .அவர்கள் ஒரே குடியும் கும்மாளமும் தான் .அத்தான் எச்சில் கையால் காகம் விரட்ட மாட்டார். குடி என்றால் என்னவென்று இன்றுவரை தெரியாது .அவர்களுக்கு இடமும் பொருளு…
-
- 75 replies
- 10.5k views
-
-
தம்பி நல்லாய் படிச்சு , உவன் கனகனின்ட மகனை போல நீயும் வெளிநாட்டுக்கு போய்மேற்படிப்பு படிச்சு டாக்டராக வந்திட வேணும் என்று கரனின் அப்பா சொல்லிகொண்டே இருப்பார்.கரன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கனகரின் மூத்தமகன் குகன் மருத்துவதுறையில் இறுதியாண்டு படித்திகொண்டிருந்தான்.கனகர் அரச உத்தியோகத்தர் .இரு மகன்கள் இரு மகள்கள்.மூத்தவன் குகன் அடுத்த இருவரும் பெண்கள் கடைசி கணேஸ். கரணும் கணேஸும் ஒரே வகுப்பு ஒரே பாடசாலை இருவருக்குமிடையே ஒரு போட்டி மனபான்மை இருந்தது. குகன் இறுதியாண்டு படிக்கும் பொழுதே ,கனகர் நல்ல சீதனத்துடன் கலியாணத்தை ஒழுங்கு படித்துவிட்டார்.பெண் சுகி மருத்துவத்துறையில் இரண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தாள…
-
- 17 replies
- 2.1k views
-
-
நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ... அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று …
-
- 6 replies
- 1.8k views
-
-
வன்னி மண்ணும் நட்புக்களும் என்பது எழுத்துக்களில் சொல்லவோ கண்முன் கொண்டுவரவோ முடியாத ஒரு அடன்பன்கொடி உறவுனலாம் .. வழமையா வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் எமக்கு சாயங்காலம் ஆகிட்டாசைக்கிளை தூக்கிட்டு போறது சந்தைக்கு பக்கமா ஒரு வீதி இருக்கு அதில் எல்லோரும் கூடி நிப்பது வழமை பம்மல் ...பகிடி ..சேட்டைகள் என்று போகும் அந்த இனிய சாயங்கால பொழுது .. சந்தையில் வேலை முடிந்து நிக்கும் பெடியளும் அதில வந்துநின்று ஒரு குட்டி மகாநாடு நடக்கும் ஒரு ஓரமா போகும் போது கடைக்கண் பார்வை பார்த்து போகும் பெண்பிள்ளைகளும் என்ன இன்னும் நம்மாளை காணவில்லை என்று உள்மனதில் ஏங்கும் தோழனும் தூரத்தில் ஆளைக்கண்டால் கண்களால் ஆள் வருது என்று சொல்லும் பாலாய நட்பும் என்று அந்த பொழுதுகள் இனிமையானவை ..(காவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
முன்பெல்லாம் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாவிட்டாலும் கூட நீலமற்ற வெண்சாம்பற் புகைகளாய்த் தெரியும் வானத்தைப் பார்த்தபடி இருக்க அருணா எப்போதும் சலித்ததில்லை. எமது ஊர் போல் வவ்வால்களும் பறப்பதில்லைத்தான். ஒரு குருவி கூடவா பறக்கக் கூடாது என்னும் ஆதங்கம் இன்று அவளுக்கு எழத்தான் செய்தது. மனதில் எழுந்துள்ள சோர்வின் வெளிப்பாடுதானோ இது என்று அவள் மனம் எண்ணியது. அங்குகூட இப்போதெல்லாம் வவ்வால்கள் பறப்பதில்லை என்று அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு ஜீவா கூறியது நினைவில் வந்தது. எல்லாமே கொஞ்சக் காலத்துக்குத் தானோ? மனிதர்கள் போல் பறவைகளும் மாற்றிடம் தேடிக்கொண்டு செல்லவாரம்பித்து விட்டன என எண்ணிக்கொண்டாள். நிர்மலன் இப்பொழுதெல்லாம் நன்றாகவே மாறிவிட்டான். வேலை முடிந்து ஆவலாக வீடு வருபவன…
-
- 23 replies
- 2.5k views
-
-
ஒரு குடும்பம் எப்படி இருக்க வேணும் என்பதற்க்கு கவிஞைர்களில் இருந்து அறிஞர்கள் வரை எத்தைனையோ உவமாணங்கள் சொல்லி உள்ளார்கள்.அவற்றை எல்லாம் தூக்கிவீசும் அளவுக்கு ஒற்றுமையின் இலக்கனம் அந்த குடும்பம். ஆனனால் என்ன ஒரு சின்ன குறை' பெருமை பேசுவதும் இடையிடேயே புளுகுவதும்.இதை பலர் குறையாக பார்க்காவிட்டாலும் அவர்களை இது சம்பந்தமாக நோிலும் மறைவிலும் கின்டல் பண்ணுவார்கள். அண்மையில் அவர்கள் தாயகம் சென்றிந்தார்கள்.அவர்கள் அங்கு இருந்து திரும்பிய பின் எப்படி எல்லாம் வெட்டி விழுத்துவார்கள் என்று இங்குள்ளவர்கள் கற்பனை பண்ணி கதைத்து சிரித்தார்கள். அவர்களும் வந்தார்கள் ஆனால் வழமையாக மாலை நேரங்களில் கூடும் இடத்துக்கு மழை காரனமாக வர முடியவில்லை.இதற்க்குள் அந்தக் குடும்பத்தலைவனின் தாயார் இ…
-
- 10 replies
- 1.4k views
-
-
எனது கடைக்கு நீண்ட காலமாக வரும் ஒரு லண்டன் காரன் பெயர் யோன். அவரின் தலை முடி கருப்பாக இருக்கும். அவர் கலப்பினமாக இருக்கலாம் என்று எண்ணி நீ எந்த நாட்டவன் என்று கேட்டுவைக்க நான் பிரிட்டிஷ். இங்குதான் பிறந்து வளர்ந்தேன் என்றதுடன் மேற்கொண்டு அவனை நான் அவன் யார் எவர் என்று கேட்பதில்லை. அவன் தூரத்தில் வரும்போதே ஒரு நாற்றம் என் மூக்கை அடைக்கச் செய்யும். நான் அவன் கடையில் நிற்கும் நேரம் அத்தனையும் எவ்வளவு விரைவில் அவனை அனுப்பிவிட முடியுமோ அத்தனை விரைவாக அணிப்புவேன். குடிவகைகளின் நாற்றமோ அன்றி குளிக்காமல் இருப்பவரின் நாற்றமோ இல்லை. பிணங்களின் வாடைபோல் அது இருக்கும். எனவே அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் வழியில் தென்படும் சவக்காலைகள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகும். அவனிடம் எ…
-
- 10 replies
- 1.4k views
-
-
காயாவும் கணபதியும் அந்த நான்கு அடுக்கு மாடிக்கட்டிடத்தின் மூன்றாம் அடுக்கில் அவசர எக்சிற்றுக்கு (exit) அருகாமையில்தான் அவர்களுடைய குடியிருப்பு. எக்சிற்றிற்கு அருகாமையில் இருப்பது எவ்வளவு தூரம் வசதியானதோ அவ்வளவுக்கு தொல்லைகளும் நிறைந்தது. செக்யூரிற்றி பாதுகாப்பு பெரிதாக இல்லாத அந்தப்பழைய கட்டிடத்தில் பல வகையான சங்கடங்கள் இருக்கத்தான் செய்தது. கஞ்சாவுக்கும் போதைக்கும் அடிமையான சிலர் அந்தக்கட்டிடத்தின் எக்சிற் வழிகளில் உமிழ்வதும் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளை போடுவதும் என்று அசுத்தச்சூழலுக்கு குறையில்லாமல் இருந்தது. வாடகைப்பணம் குறைவு என்பதால் குமரன் அவ்விடத்தில் தொடர்ந்து குடியிருந்தான் ஆனால் சமீபத்தில் தாயகத்திலிருந்து வந்த காயாவால் இவற்றை ஜீரணிக்க முடியவில்லை. நீண்…
-
- 17 replies
- 2.3k views
-
-
நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்கா…
-
- 19 replies
- 2.8k views
-
-
தொலைபேசி தொல்லை கொடுக்க எடுத்து "கலோ இங்க சுரேஸ் அங்க யார் ?" "இங்க லாதா உங்க திருமதி சுதா சுரேஸ் இருக்கிறாவோ"என்றாள் நக்கலா. சுரேஸும் பதில் நக்கலாக "திருமதி சுதா இருக்கவில்லை படுத்திருக்கின்றா" "சும்மா பகிடியை விட்டிட்டு டெலிபோனை அவளிட்ட கொடுங்கோ "எதோ அவசரமாக பேசபோகினமாக்கும் என்று நினைத்து டெல்போனை சுதாவிடம் கொடுத்தான்.சுதாவும் ,லதாவும் பாடசாலை காலத்திலிருந்தே நண்பிகள்.புலம்பெயர்ந்த பின்பும் அவர்களின் நட்பு ஒகோ என கொடி கட்டி பறக்கின்றது. புலம்பெயர்ந்த காலத்தில் இவர்களின் உரையாடல் ஆறுமாதத்திற்கு ஒருக்கா அல்லது ஒரு வருடத்திற்கு ஒருக்கா என்றுதான் இருந்தது. காரணம் தொலைபேசி கட்டணம் அந்த காலகட்டத்தில் அதிகமாக இருந்தமையாகும். இன்று இவர்களின் தொடர்பு கு…
-
- 17 replies
- 2.8k views
-
-
என் இல்லம் சொல்லும் சேதி இது... என் முற்றத்தில் மூழியாய் எறிக்கிறது முழுநிலவு. சற்றைக்கொருதரம் தன்னை ஸ்பரிசிக்கும் திரைச்சீலைகளின் உரசல்களை இழந்த சாளரத்து ஓரங்கள். தலைவாசல் கதவிழந்து தனிமையில் தவிக்கும் நிலைப்படிகள். மௌனித்துக் கிடக்கும் சமையலறை மேடை. பொலிவிழந்து புகைக்க மறந்த சோகத்தில் புகைபோக்கி. ஏஞ்சல்கள் ஆடும் ஊஞ்சலை எண்ணி ஏங்கும் வேப்பமரம். சிறு சோறு சமைக்கும் சில்வண்டுகளைத் தேடும் சிறு தாழ்வாரம். சுற்றிப் பறந்த ( த) தும்பிகளைத் தேடும் கம்பி வேலிகள். தேவதைகளைத் தேடி தேகம் இளைத்த நிலைக் கண்ணாடி;. ஓளித்து விளையாடிய தோழர்களின் தோள்சாயத் துடிக்கும் குட்டை மதில். ஓண்டிகாகி உறவிழந்து நிற்கும் ஒற்றைப்பனை. உல்லாசமிழந்து உருக்குலைந்த மண்டபம். ஒப்பனை இழந்த…
-
- 8 replies
- 1.6k views
-
-
நான் கண்ட கனவொன்றை (உண்மையிலை கனவு தானோ எண்டு கேக்கப்படாது) உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். (கீறிட்ட இடங்களை நிரப்பி வாசியுங்கோ.) …. யில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின் நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையை நாட்டின் தலைவர் …. தற்போதும் … மாளிகையிலேயெ தங்கியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கு இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் எனினும் ஜனாதிபதிக்கு விசுவாசமான ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்குத் இராணுவத்திற்கும் இடையில் சண்டை இடம்பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. பிந்திக் கிடைத்த செய்தியொன்றின் படி ஜனாதிபதி … காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனின…
-
- 0 replies
- 800 views
-
-
அப்பொழுது வயது பத்து இருக்கும் என நினைக்கின்றேன்.பத்திரிகைகள் வாசிப்பேன் .அப்பா அரச உத்தியோகம் என்றபடியால் பல இடங்களுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ,அவரது நண்பர்கள் அநேகர் அரச உத்தியோகத்தர்கள்.அவர்கள் எங்கள் வீட்டில் ஒன்றுகூடுவார்கள் இல்லையெனில் நாங்கள் அவர்கள் வீடுகளில் ஒன்று கூடுவோம்.பலர் சைவத்தமிழர்கள், ஒரு சிலர் கிறிஸ்தவர்கள்.எல்லொருடைய வீட்டின் வாசலிலும் ஒரு பிள்ளையார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும் .இதை சகல சைவத்தமிழர்களின் வீட்டிலும் அன்றைய காலகட்டத்தில் காணலாம்.வீட்டின் உள்ளே இன்னோரு அறையில் சிவன்,உமாபதியார், முருகன் ஒரு மூலையில் குடி கொண்டிருப்பார்கள் .வரவேற்பறையில் யோகசுவாமிகளின் படம் தொங்கிகொண்டிருக்கும்.இவரைப்பற்றி நான் உங்களுக்கு…
-
- 15 replies
- 2.2k views
-
-
மனம் சாய்ந்து போனால்........ 'டேய் மச்சான் ஏதும் பிரச்சினை வராது தானே?' ஜந்தாவது தடவையாக கண்ணனிடமிருந்து கேட்கப்பட்ட அதே கேள்வியால் சிறிது எரிச்சலடைந்த ரமேஸ், 'டேய் சும்மா இரடா, இதோட எத்தனையாவது தடவையா இதே கேள்வியை கேட்பாய்?' என்றான் சலிப்புடன், 'உனக்கென்னடா? எனக்கு பயமா இருக்கடா ' 'பயமா, இது எப்பவோ இருந்திருக்க வேண்டியது, இப்ப பயந்தா வேலைக்காகாது. மாப்பிளையா இலட்சணமா இரு' 'சொன்ன மாதிரி கவிதா வந்திருவாளாடா?' 'இங்க பாரடா, நீயும் ரென்சனாகி எங்களையும் ரென்சனாக்காத, ஆனந் வரும்போது கவிதாவோடதான் வருவான்' 'எதுக்கும் ஒருக்கா போன் பண்ணிப் பாரடா' கண்ணன் முள்மேல் நிற்பதுபோல் அவஸ்தைப்படுவதை அவதானித்த ரமேஸ் 'சரி சரி நான் போன் பண்ணுறன் நீ ரென்சனாகாத' 'டேய் ஆனந் என்னடா? எங்…
-
- 3 replies
- 1.8k views
-
-
நெடுஞ்சாலையின் அதிவேகத்தோடு வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்த வாகனம் சற்று வேகத்தைக் மிதப்படுத்தி வெளிச்செல்லும் பாதையில் வளைவாக ஓடி சிவப்பு வெளிச்சத்தில் தரித்து நின்ற பொழுதில் வாகனத்துக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அனாவிற்கு தான் போகுமிடத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அனா, அழகு என்றால் அனா என்று சொல்லுமளவிற்கு அங்கங்கள் ஒவ்வொன்றும் அளந்து செய்த செப்புச் சிலை. உயரமும் உயரத்திற்கேற்ற உடல்வாகும் பொன்நிற முடியும் பொலிவான தோற்றமும் கொண்ட அழகி மட்டுமல்ல அறிவு, துணிவு, ஆளுமை, கொண்ட பெண். சிறு வயதிலேயே படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் கலைகளிலும் அனாவின் தனித்தன்மை பெற்றவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் வியக்க வைத்திருக்கிறது. உயர்வகுப்…
-
- 5 replies
- 1.6k views
-
-
கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்…
-
- 16 replies
- 1.8k views
-
-
நம்மூரில ஓர் அக்கா. அவாக்கு புது சிமாட் ரீவி மேல ஆசை. வீட்டில இருந்த பழைய ரீவியோ.. பாழாகிற மாதிரி தெரியல்ல. அவா ஆத்துக்கார் போல அதுவும் அவா கூடவே ஒட்டிகிட்டு இருந்திச்சாம். ஓர் நாள் அந்த அக்காக்கு ஒரு ஐடியா தோனிச்சாம். "வேண்டாததை தலை முழுகிறது" என்றதைப் பற்றி.. இணையத்தில படிச்சு தெரிஞ்சுக்கிட்டாவாம். செலவைப் பார்க்காம.. சிமாட் ரீவி கனவில.. உடன ஒரு வாளி தண்ணியை அள்ளி வீட்டில் இருந்த பழைய ரீவி மேல ஊத்தினாவாம். தலை முழுகிட்டன் என்ற சந்தோசத்தில.. ஆகாசத்துக்கும் பூமிக்கும் பாய்ஞ்சாவாம். ஆனால்.. ரீவியோ.. தலை முழுகுப்படல்ல. அவ ஆத்துக்கார் எப்படி இத்தனை வருசமா அவாவ சுத்திசுத்தி வாறாரோ.. அது போல.. அதுவும் உன்னை விட்டுப் போகமாட்டேன் கணக்கா.. நல்ல சமர் வெக்கையில குளிச்ச மகிழ்ச்ச…
-
- 4 replies
- 1.2k views
-