Archived

This topic is now archived and is closed to further replies.

arjun

சென்னை கனவு

Recommended Posts

நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

கால வழுதியைபற்றி ஒருவர்-மருதங்கேணி சொல்லிருந்தார். அதை தவிர்க்க பாருங்கள். அதேநேரத்தில் மருதங்கேணி சொல்லிய ஏக பிரதிநித்துவம் 87 இல் இருக்கவில்லை. 30 வருடம் நடந்த போரில் ஒருவருக்கு 5-10 வீதத்தை தன்னும் கோவையாக தெரித்தால் அதுவே பெரிய புண்ணியம். பிழைகள் இல்லாமல் எழுதுவது என்பது மிக கடினம். பிழைகளை பற்றி கலவைப்படாமல் தெரிந்தவை பற்றி எழுதவும்.

Share this post


Link to post
Share on other sites

பதில்கள் இட்ட அனைவருக்கும் நன்றிகள் .

 

சென்னையின் அழகை எழுத தொடங்கி பலதும் பத்தும் எழுத வேண்டிவந்துவிட்டது .

 

நான் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் எழுதுவதால் பிழை வர இடமில்லை என்றே நம்புகின்றேன் .

 

புலிகள் வரலாறுதான் முப்பது வருடங்கள் மாற்று இயக்கங்களின் வரலாறு மூன்று வருடங்கள் தான் .

Share this post


Link to post
Share on other sites

 

இப்படி எல்லாம் கூட இருந்தோம் அதையெல்லாம் எழுதிக்கொண்டு இருக்கமுடியாது .


கடைசி சீன் .

 


கடைசி சீன் .

 

Share this post


Link to post
Share on other sites
"பக்கண்ணாவை பார்த்துக்கொண்டுதான் பார்ட்டி வைக்காமல் இருந்தன்" 
 
தான் ஜெர்மனி செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டதாகவும்  அடுத்தவாரமே கொழும்பு போக இருப்பதாகவும் அதுற்கு முதல் நண்பர்களுக்கு சின்ன பார்ட்டி ஒழுங்கு செய்துவிட்டு எனது வருகையை பார்த்துக்கொண்டு இருந்ததாக பாலு சொன்னான் .
 
நான் அன்று காலைதான் கொழும்பு சென்று திரும்பியிருந்தேன் .பாலு என்னைவிட ஏழு எட்டு வயது குறைந்தவன்.எனது நண்பர்கள் எல்லோரும் வெளிநாடு சென்ற பின் ஒரு வாண்டு கூட்டத்தை வைத்து ஒரு கிரிக்கெட் டீம் உருவாக்கியிருந்தேன்.மிக நல்ல டீம் .அயலட்டை அணிகளுக்கு இன்னிங்ஸ் ஆல் கொடுத்துக்கொண்டுதிரிந்தோம் . இப்ப பலர் லண்டனிலும் ஆஸியிலும் கனடாவிலும் இருக்கின்றார்கள். பாலு எமது மைதானத்திற்கு எதிரே இருக்கும் குடிசைவீட்டில் இருப்பவன் . தகப்பன் ,அண்ணார்மார் எல்லோரும் சுருட்டு தொழில் தான் .இவன் கடைசி பெடியன் பாடசாலை சென்றுகொண்டிருந்தான் .கிரிக்கெட் விளையாட வந்து அந்த வாண்டு கூட்டங்களில் ஒருவன் ஆகிவிட்டான் .
 
மிக நல்லகிரிக்கெட்  ஆட்டக்காரன் என்று சொல்லமுடியாது மிக சிறந்த பந்து  தடுப்பாளன். லெக் சைடில் முக்கால்வாசி இடம் கவர் பண்ணிவிடுவான் .கிரிக்கெட்டில் நல்ல பட்ஸ்மனுக்கு நல்ல பந்தும் ஆடத்தேரியாத ஆட்டக்காரர்களுக்கு இலகுவான பந்தும் வீசவேண்டும் .அண்ணைமார் இலகு பந்துதானே என்று ஆசையில் பாட்டை வீசி அப்படியே பாலுவின் கையிற்குள் காட்சை கொடுத்துவிட்டு "அட சீ" என்று கொண்டுபோவினம்.
 
இரவு பார்ட்டி பாலுவின் மிக நெருங்கிய நண்பன் கரனின் வீட்டில் .கரன் ஏற்கனவே ஜெர்மனி சென்றுவிட்டிருந்தாலும் கரன் வீட்டுகாரர்களுடன் இவனும் ஒரு மகன் மாதிரி பழகிவந்தான் .கரனின் தந்தையும் சுருட்டு தொழில் தான் ஆனால் பெரும் முதலாளி .கரன் சென் ஜோன்ஸ் பழைய மாணவன் .எனக்கு மாத்திரம் தான் ஒரு சின்ன போத்தல் விஸ்கி வாங்கி வைத்திருந்தான் .அடுத்தவாரம் பாலு ஜேர்மனி சென்றுவிட்டான் . 
 
சென்னையில் பகல் எறித்த வெயில் இரவு எட்டுஆகியும் சூட்டை தணியவிடாமல் கட்டி வைத்திருந்தது .கே கே நகர் ஒரு வீட்டின் ஹாலில் உமாவும் நானும் அரசியல் பேசிக்கொண்டுஇருக்கின்றோம் .வீட்டு வாசலில் உமாவின் மெய்ப்பாதுகாவலர். திடீரென்று கரண்ட் போய்விட்டது .மெழுகுவர்த்தி கொளுத்தி அதன் வெளிச்சத்தில் தொடர்கின்றோம் .
 
எனக்கு மனதில் என்ன பட்டதேன்று தெரியவில்லை ஒருவித உத்வேகத்துடன் 
"கனடாவிற்கு என்ன நடந்தது" என்று கேட்டேன் .
சற்று அமைதியானவர் ."உமக்கு ஒன்று விளங்கவேண்டும்" என்று தொடங்குகின்றார் .
 
ஜெர்மனி போன பாலு நண்பன் கரனுடன் ஜெர்மனியில் இருந்து பின்னர்  கனடா சென்றுவிட்டார் . 83 கலவரம்  .கரன் ஜெர்மனியில் இருந்து அமைப்பில் சேர இந்தியா செல்கின்றார் .இந்தியாவினால் பயிற்சிக்கு டெல்கிக்கு அனுப்பபட்ட முதல் பாட்சில் இவரும் டெல்கி போய்விட்டார் .கனடாவில் இருந்த பாலு தானும் இந்தியாவிற்கு பயிற்சிக்கு போகவேண்டும் என்று கனடாவில் இருந்த அமைப்பை நாடுகின்றார் .அந்த நேரம் கனடா அமைப்பில் இருந்த  ஒருவர் இவரது நெருங்கிய நண்பர் .இவரும் எமது கிரிக்கெட் டீமில் இருந்தவர்தான் .(எனது டியுசன் மாணவன் .மிக ஆரம்ப காலத்து புலி .ஜெர்மன் ஆரம்ப பொறுப்பாளர் )
 
பாலு தமிழ் நாடு சென்று முகாமில் பயிற்சி பெற்று மிக விரைவில் அனைத்துமுகாம் பொறுப்பாளர் ராஜனால் ஒரு முகாமிற்கு பொறுப்பாளராகவும் நியமிக்கபட்டுவிட்டார்  .டெல்கி பயிற்சி முடித்துவந்த கரன் சில மாதங்களில் நாட்டிற்கு திரும்பி துணுக்காய் பொறுப்பாளர் ஆகிவிட்டார் .
 
முகாம்களில் உட்கட்சி பிரச்சனை  சற்று தொடங்கவும் அமைப்பின் நடவடிக்கைகள் எதிர்பார்த்தது போலல்லாது ஏமாற்றம் அழிக்க அமைப்பை விட்டு வெளியேற பாலு முடிவெடுத்து கனடாவில் இருக்கும் அமைப்பாள நண்பருக்கு கடிதம் போடுகின்றார் .முகாம் பொறுப்பாளராக இருந்தபடியால் முகாமிற்கு பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியில் இருந்த ஒரு தேநீர் கடை விலாசத்தின் ஊடாக கனேடிய பொறுப்பாளருடன் கடிதத்தொடர்பை தொடர்கின்றார் .கனேடிய பொறுப்பாளர் பணமும் டிக்கெட்டும் அனுப்புவதாக உறுதிஅழித்து பதில் போடுகின்றார் .
 
காலம் செய்த  கோலம் தான் பாலுவின் விதியாகிவிட்டது .கனடாவில் இருக்கும்  அமைப்பின் மற்றொரு பொறுப்பாளர் பாலுவின் கடிதத்தை வாசித்து மாத்திரம் அல்ல அதை  இந்தியாவிற்கு அமைப்பிடம் அனுப்பிவிட்டார் .பாலு கைது செய்யப்பட்டு தேநீர் கடையில் இருந்த அனைத்து கடிதங்களும் பறிமுதலாகி மரணதண்டனை விதிக்கப்பட்டு கொலை செய்துவிட்டார்கள் . (எழுதும் போது எனக்கு கண்ணீர் வருகின்றது ).
 
"உமக்கு ஒன்று விளங்கவேண்டும் ." உமா தொடர்கின்றார் ."அந்த நேரம் தமிழ்நாட்டில் நாம் பயிற்சி எடுப்பது இந்தியாவால் மறுக்கபட்டு வந்தது .இலங்கை அரசு அதன் ஆதாரத்திற்கு அலைந்து திரிந்த காலம் .பாலு கனடா போய் முகாம்கள் பற்றிய விபரங்கள்,இருப்பிடங்கள் ,போராளிகளின் எண்ணிக்கை ,இலங்கையில் இருந்து வந்து போகும் பாதை இவற்றை வெளியிட்டால் விளைவு என்ன என்று உமக்கு விளங்கும் என்று நினைகின்றேன் .அதைவிட அவரில் இருந்த நம்பிக்கையில் தான் பொறுப்பாளர் ஆக்கி வெளியில் சென்றுவரும் வசதியும் கொடுத்தோம் .மரணதண்டனை கொடுத்தோம் ஒழிய கொலை செய்யவில்லை அவர் முகாமில் இருந்து தப்பி ஓடும் போது சுடவேண்டிவந்துவிட்டது ."
 
எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை .இருண்ட கே கே நகர் வீதியில் நடைப்பிணமாய் வீடு போய்சேர்ந்தேன் .
குறிப்பு -
பாலுவை செய்தாத சித்திரவதை எல்லாம் செய்து அடித்தே  கொன்றார்களாம்  என்று தோழார்கள் சொன்னார்கள் .
கரன் சில ஆண்டுகளின் பின் அமைப்பை விட்டு வெளியேறி பிரான்ஸ் சென்று விட்டார் .பல வருடங்கள் அங்கிருந்தவர்  இரு வருடங்களின் முன் தனது கடைக்குள் தூக்கு போட்டு இறந்துவிட்டார் .இவர் தந்தையார்  நான் MLA HOSTEL இல் தங்கியிருந்த நாட்களில் பிரான்சில் இருந்து தனது மகனை கூட்டிக்கொண்டு போக வந்தார் .அந்த நேரம் மகன் துணுக்காயில் இருந்தார் .
 
பாலுவை கனடா கூப்பிடுவதாக சொன்ன பொறுப்பார் கனடாவில் இப்போ பெரிய வர்த்தகர் .
கடிதத்தை இந்தியாவிற்கு அனுப்பியவரும் இங்குதான் உலா வருகின்றார் .
எல்லோரையும் கண்டு ஒரு சிரிப்புடன் போய்விடுவேன். நான் உமாவுடன் அந்த நேரம் இது பற்றி கதைத்தது எதுவும் இவர்களுக்கு தெரியாது .
 
எனது வாண்டு கிரிக்கெட் டீம் முழுக்க முழுக்க  பணக்கார பிள்ளைகள் தான் விளையாடினார்கள் .அதில் ஒரே ஒரு சுருட்டு தொழிலாளியின் பிள்ளை பாலு .நாட்டுக்காக கனடாவில் இருந்து போராட போய் அவர்கள் கையாலேயே சித்திரவதை பட்டு இறந்ததை என்னவென்று சொல்வது என்று எனக்கு தெரியவில்லை .
பாலுவை கனடா என்று தான் அங்கு எல்லோரும் அழைத்தார்கள் .

Share this post


Link to post
Share on other sites

அரசியல் கதைப்பதில்லை என முடிவு எடுத்தாலும் உங்களால் அரசியல் இல்லாமல் எழுத முடியாது. தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்...

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா
உட்பூசல்களும் தண்டனைகளும் தலைமைகளின் அதி உச்ச அதிகாரங்களும் தான்

ஒரு காலத்தில் ஈழ விடுதலைக்குத் தடையாக இருந்தன.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா

உட்பூசல்களும் தண்டனைகளும் தலைமைகளின் அதி உச்ச அதிகாரங்களும் தான்

ஒரு காலத்தில் ஈழ விடுதலைக்குத் தடையாக இருந்தன.

 

எக்காலத்திலும்...

Share this post


Link to post
Share on other sites

மிக நல்லதொரு தொடர்.. நானும் தவறாமல் வாசித்து வருகிறேன். :D

Share this post


Link to post
Share on other sites

வாசிக்க கவலையாக இருக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites
மனித மனங்கள்
அழகிய சென்னை மட்டும் அல்ல அது தமிழ்நாடு, இந்தியா என்று விரிந்தாலும் அதன் அழகை அனுபவிக்கவும் ரசிக்கவும் அதற்கான மனம் வேண்டும் .சுற்றுலா என்றோ அல்லது படிப்பு ,தொழில் என்று வந்திருந்தால் நிலைமை வேறு .எனது மனநிலை சொல்லத்தேவையில்லை .பை நிறைய பணம் ,கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ எவரும் இல்லை.இருந்தாலும்   உள்மனம் அவைஎல்லாவற்றையும் புறம்தள்ளி எமது பிரச்னையை மட்டும் மண்டைக்குள் போட்டு குடைந்துகொண்டிருந்ததால் வேறு விடயங்களை தேடிப்போக மனம் நாட்டம் கொள்ளவில்லை.கடந்து போகும் போது பார்த்தவற்றை ரசித்தேன் .
 
டெல்கியில் இருக்கும் போது அருகில் இருக்கும் தாஜ்மஹால் போக நினைக்கவில்லை  ஆனால் மாலையில் மலையாள பொலிசாருடன் உதைபந்து விளையாடுவது ,காஸ்மீரில் இருந்து வரும் தமிழ் பொலிசாருடன் திரிவது, சல்வாருடன் பூப்பந்து விளையாடும் வட நாட்டு அழகிகளை ரசிப்பது என்று போனது .
 
தமிழ் நாட்டில் அகதிகளுக்கான முகாம்களுக்கு செல்வது மிக மாறுபட்ட அனுபவம் .ஒரு முகாமின் இட நெருக்கடியை குறைக்க அருகில் சில குடிசைகள் போட எண்ணி அந்த ஊர்  பண்ணையாரிடம் சென்றோம் .தமிழ் நாட்டு கிராமங்களில் பண்ணையார் சொல்லாமல் எதுவும் அசையாது .எங்கும் பச்சை பசேலென வயல்வெளிகளும் தென்னை தோப்புகளும் அழகாகவும்  குளிர்மையாகவும் இருக்கும் .அந்த கிராமத்திற்கு சற்றும் பொருந்தாமல் மாட மாளிகையாக பண்ணையார் வீடு இருக்கும் .எத்தனைதமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம் .
 
கேற்றை திறந்து உள்ளே போய் கதவை தட்டினால் பண்ணையார் வெளியில் போயிருக்கின்றார் சற்று இருங்கள் என்றார்கள் .வீட்டு ஜன்னல் திரை சற்று இழுத்து மூடியது .நான் என்னுடன் வந்தவருக்கு சொன்னேன்  "இப்ப  புதியவார்ப்புகள் படம் ஓட போகுது".  நான்  சொல்லி வாய் மூடவில்லை அரை தாவணி பாவாடையுடன் இடுப்பில் குடத்துடன் பதினாறு வயது மயிலு .பண்ணையாரின் மகள் என்று சொல்லாமலே தெரிந்தார்  அவ்வளவு பூரிப்பு .தண்ணீர் குடிப்பமோ என்று நண்பரிடம் கேட்டேன் .பண்ணையார் வந்த பிறகு குடிக்கின்றன் இப்ப வேண்டாம் நான் ஊரில தான் உயிரை விடுவன் என்று விட்டார் .
 
வேறொரு  ஒரு முகாமில் குடிசைகள்  எல்லாம் கட்டி  கூரை போடுவதற்கு கிடுகு வாங்க போய்விட்டோம் .கிடுகளுடன் வந்தால் ஊர் நாட்டாண்மை எடுபிடிகளுடன் வந்து குடிசைகளை பிடுங்கி எறிந்துவிட்டதாக சொன்னார்கள் .இரத்தம் கொதிக்க தொடங்கிவிட்டது ஆனால் எதுவும் செய்யமுடியாத நிலை நாட்டாண்மையை தேடிப்போனால் எடுபிடிகள் சூழ கள்ளு அருந்திக்கொண்டு இருக்கின்றார் .கோபத்தை அடக்கிக்கொண்டு தற்காலிகமாக புறம்போக்கு நிலத்தில் தானே குடிசைகள் கட்டினோம் என்றேன் .தன்னிடம் வந்து அனுமதி கேட்கவில்லை என்ற கோவம் அவருக்கு .பிறகு சமாதானமாகி எங்களையும் கள்ளு அருந்த வற்புறுத்தினார் கடைசி பதநீர் ஆவது சாப்பிடவேண்டும் என்று அதை அருந்திவிட்டு வந்தோம் .அதன் பின் மேலும் குடிசைகள் போட இலவசமாக மரங்களும் கிடுகுகளும் தந்தார் .
 
இன்னுமொரு முகாம் இருந்த இடம்  காய்ந்து பொட்டல் வெளி நிலமும் ஒரே மணலாக இருந்தது .அந்த மண்ணில் முந்திரிகை மரங்கள் காடாக இருந்தது .இங்கு தண்ணீர் தான் பிரச்சனை .குழாய் கிணறு அடித்துக்கொடுத்தோம் .
 
நானாவது இப்படி வெளியில் திரிந்து கொண்டுஇருந்தேன் .பயிற்சிக்கு என நாட்டில் இருந்து வந்து முகாமை விட்டு வருடக்கணக்கில் வெளியே கூட போக முடியாமல் தான் பலர் நிலை .பாடசாலை முடிய முகாம்களுக்கு திரும்பியவர்களை  இடைக்கிடை போய் சந்தித்துவந்தேன் .சென்னையில் இருந்தாலும் முகாம்களில் இருந்தாலும் பலரது மனநிலையும் ஒன்றாகவே இருந்தது " எப்ப நாட்டிற்கு திரும்புவம் " என்பதுதான் அது .
 
 தொடர்ந்து அமைப்பில் இருந்து போராடுவது  அல்லது விட்டு விலகுவது முடிவு எதுவாயினும்  சுயமாக முடிவெடுக்க நாட்டிற்கு திரும்பவேண்டும் என்பதே அவர்கள் நிலை .ஆயுதங்கள் வருமாயின் விட்டுவிலகுவது என்ற எண்ணம் எவருக்கும் வராது, அது உமாவிற்கும் தெரியும் . அதைவிட பெரும்பாலானவர்கள் தலைமையில் மிக பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார்கள் . பெற்றோர்கள்  எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்ற பிள்ளைகளின் நிலைதான் .
 
சென்னையில் இருக்கும் சிலர் அந்த வெயிலுக்கும் மோட்டார் சயிக்கிலும் லெதர் ஜாக்கெட்டும் விரும்பிய சாப்பாடும் என்று அந்த நேரம் கிடைப்பதை அனுபவிப்பம் என்ற நிலை .
 
இவ்வளவு பொறுப்பையும் தனக்குள் வைத்திருக்கும் தலைமைக்குள் இருப்பவர்களுக்கு பல விடயங்கள் தெரிந்தாலும் சில விடயங்கள்  தெரியாது .குறிப்பாக  நிதி ,இந்தியாவுடனான அரசியல் ,ஆயுத நிலைமை போன்றவை .இவை எல்லாம் தனி ஒருவர் கையிலேயே இருந்தது .மற்றவர்கள் இந்தா வருது அந்தா வருது என்று ஆளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு திரிந்தார்கள்  .
 
இவை எல்லாவற்றையும் விட  அமைப்பு உள்முரண்பாடுகள்கள் நீங்கி அராஜகமற்ற ,உட்கடசி ஜனநாயகம் உள்ள அமைப்பாக மாறாமல்  விடிவில்லை என்று ஒரு பிரிவினர் நம்பினார்கள் .அதற்கு  புதிய நிர்வாகம் முக்கிய பொறுப்புகளை  எடுக்கவேண்டும் என்பது அவர்கள் நிலைமை .எனது நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது .
 
நாட்டில் வெற்றிகரமாக மகாநாட்டை முடித்தவர்கள் தமிழ் நாட்டில் மகாநாட்டை நடாத்த தமிழ்நாடு வந்துவிட்டார்கள் . தனது கையை மீறி எதுவும் நடந்துவிடக்கூ டாது என்ற நிலையில் சுன்னாகத்தில் நடந்த மகாநாட்டிற்கு தமிழ் நாட்டில் இருந்தும் பலரை பங்கு பற்ற உமா அனுமதித்திருந்தார் .அதிலும் முக்கியமாக இருவரை தேர்ந்துஎடுத்திருந்தார் .முகாம்களில் அதி உச்ச அராஜகங்கள் அட்டகாசங்கள் புரிந்தவர்கள்  என்று தோழர்களால் வெறுக்கப்பட்ட ஏழு எட்டு பேரில் இந்த இருவரும் அடக்கம்.இவர்களுக்கு நாட்டிற்கு போய் மகாநாட்டில் பங்கு பற்ற விருப்பமே இல்லை . இவர்களில் இருக்கும் கோபத்தில் நாட்டில் இருக்கும் அமைப்பினர் ஏதாவது செய்ய முயற்சிக்கலாம் அல்லது பல பழிகளை  போட்டு வாக்குவாதத்தில் மகாநாடு குழம்பலாம்  (இப்படி எழுதுவதற்கு சிறிது விளக்கம் பின்னர்)  ஆனால் அப்படி ஒன்றும் நாட்டில் நடக்கவில்லை .
 
மகாநாட்டில் நடந்தை பற்றி வாசுதான் பாடசாலைக்கு வந்து  ஏதோ புதிய திருப்பம் நடக்கபோகின்றது போல விளக்கம் தந்தார் .தமிழ்நாட்டில் இருந்து நாட்டிற்கு சென்றவர்களுடன் தலைமை சந்தித்து ஒரு கூட்டம் அடுத்த நாள் மாலை நடந்தது .
 
இரவு ஏழு மணியிருக்கும் ஒருவர் எமது வீட்டிற்குள் ஓடிவந்து மூன்றாம்மாடி மொட்டைமாடி அறையில் பதுங்கிவிட்டார் .நான் முதலில் சந்தித்த அனைத்துமுகாம் பொறுப்பாளர் .விருப்பமில்லாமல் மகாநாட்டிற்கு போனவரில்  ஒருவர் .போய் பார்க்கவே விரும்பவில்லை .சங்கிலியின் மோட்டார் சயிக்கில் வந்து நிற்கிறது "யாரும் வந்தார்களா ?"  இல்லை .மோட்டார் சயிக்கில் திரும்பி பறக்கின்றது .
 
ஆட்டோ ஒன்று வந்து நிற்கின்றது அதில் எங்களுடன் இருக்கும் ஒருவர் இறங்குகின்றார்.அவர் தனது பாக்கை எடுக்க இந்தியும் அவருடன் சேர்ந்து ஓட்டோவில் ஏறி ஓடிவிட்டார்கள் .அடுத்த நாள் காலை மாணிக்கம் ஒரு கடிதத்துடன் வருகின்றார் .
 
"எனது அனுமதியில்லாமல் எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்ககூடாது " உமா .
அந்த எழு எட்டு பேர்கள் பற்றியும் குழு வாதம் பற்றியும் நாளை .
இரண்டு நாட்களில் கோதாரி விழுந்த எமது பிரச்சனையை முடித்து விட்டு சென்னைக்கு திரும்புவம் .

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்  நிறைய அனுபவங்களை இந்தியாவில் பெற்றிருக்கின்றீர்கள் :D

Share this post


Link to post
Share on other sites

அண்ணா இந்த மாணிக்கம் என்பது மாணிக்கதாசனா?

Share this post


Link to post
Share on other sites
உள்முரண்பாடுகளும் ஆயுத கனவும் .
 
பலர் பயிற்சிக்கு வந்து இரண்டுவருடங்கள் ஆகிவிட்டது,வந்த ஆயுதங்களையும் இந்தியா பறித்துவிட்டது .அடுத்து ஆயுதம் இந்தா வருது இந்தா வருது என்றார்கள் ஒழிய என்ன நடக்கின்றது என்று எவருக்கும் தெரியாது ,அப்படி ஆயுதங்கள் வந்தாலும் திரும்பவும் இந்தியா அதை பறிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
 
உமாவை இந்தியா கை விட்டுவிட்டது என்ற எண்ணம் எனக்கும் ஓரளவு இருந்தது .வங்கம் தந்த பாடம் ,முற்போக்குசக்திகளுடன் இணைவோம் என்பதும் மார்க்சிசம் கதைப்பதும் வகுப்புகள் நடாத்தியதும் ,முகாம்களில் அராஜகம் ,கொலைகள் நடாத்தியது என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் விட றோ,மத்திய அரசு  இரண்டிற்கும் இவர் நம்பகமாக நடக்கவில்லை  என்பதுதான் முக்கியகாரணம் .
 
இந்திராகாந்தியை சந்தித்ததில் தொடங்கி வெளிநாட்டு தொடர்புகள் , வெளிநாட்டில் ஆயுதம் வாங்க முற்பட்டது ,ஆயுதம் தருகின்றோம் தாக்குதல்கள் நடாத்துங்கள் என்றதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டது குறிப்பாக எமது பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்தாமல் எப்படி தாக்குதல் நடாத்துவது ?,வானொலி ,சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்பு இப்படி பல காரணங்கள் .
 
உமா -பிரபா சூட்டு சம்பவத்திற்கு கைது செய்யபட்ட உமா இலங்கைக்கு திருப்பி அனுப்பும் சூழ்நிலை உருவாகிய நேரமே இந்தியாவில் தலைமறைவாக இனியும் இருக்க விரும்பவில்லை இலங்கைக்கு அனுப்புவதானால் அனுப்புங்கள் என்று சொல்லியதும் ,பின்னர் தமிழ் நாட்டு அரசால் விடுதலையாகி அவர்களே அங்கு இருந்து இயங்க தொலைபேசி வசதியுடன் MLA HOSTEL ஐ கொடுத்ததும் ஒரு வித அங்கீகாரம் தான் 
 
 டெலோ ,ஈபி ,ஈரோஸ் றோ வின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது .புலிகள் கூட றோ வுடன் பகைக்கவில்லை .அனுராதபுர தாக்குதல் றோ சொல்லியே செய்தார்கள் .ஆயதங்கள் புலிகளுக்கும் கொடுத்தார்கள் .
 
இயக்கங்களுக்கு இடையிலான ஒற்றுமை பேச்சுவார்த்தையில் புலிகளை விட அனைத்து இயக்கங்களும் கூட்டணியும் பங்குபற்றி சேர்ந்து இயங்க முடிவும் எடுத்துவிட்டார்கள் .  பின்னர்  றோ வின் நிகழ்சி நிரலில் தான் புளோட்டுக்கு தெரியாமல் புலி ,டெலோ ,ஈபி ,ஈரோஸ் இணைவு நடந்தது .நாபாவிற்கு இதில் பெரும்பங்கு இருந்தது .இந்த ஆரம்ப பேச்சுவார்த்தைகளின் போது உமாவும் சற்று அதிகார தோரணையில் நடந்தது பாலகுமாருக்கு பிடிக்கவில்லை .அந்த நேரம்  தமிழ் டைம்ஸ் இன் முன் அட்டையில் வந்த கார்ட்டுன்  ஒன்று இன்றும் கண்ணில் நிற்கின்றது . ஒரு சிலந்திவலை கீறி அதில் உமாவை சிலந்தியாகவும் ,சிறி ,நாபா ,பாலகுமார் இவர்களை ஈக்கள் போலவும் கீறியிருந்தார்கள் ஆனால் அந்த கூட்டு நடக்காமல் அடுத்த கூட்டு நடந்தது, கார்ட்டூனில்  உமாவின் இடத்தில் வந்த  பிரபா அந்த கார்ட்டூனை உண்மையாக்கியது காலத்தின் கொடுமை .
 
 
பாலஸ்தீனத்தால் வந்தது முதல் நாட்டில் தாக்குதல் ஏதாவது செய்யவேண்டும் என்று உமாவை நெருக்கிவந்த ராஜன் அதற்கு அனுமதியும் பெற்று ஒரு முகாமில் அதற்கான பயிற்சியும் கொடுத்துவந்தார் .அப்படியே அடுத்த படிக்கு போய் அவரது  தலைமையில் புது அமைப்பாக அந்த முகாம் உருவெடுக்கும் நிலைமை உருவானது .இந்த காலகட்டங்களில் உமா -ராஜன் சந்தித்து வந்தாலும் ராஜன் தனது சொந்த மெய்பாதுகாவலர்களுடன் வந்து போகதொடங்கினார் .முகாம்கள் எங்கும்  உமாவை இந்தியா கை விட்டுவிட்டது ராஜன் தலைமையில் உதவி கிடைக்கும் என்ற பேச்சு அமைப்பிற்குள் பரவ தொடங்கியிருந்தது .அதில் உண்மையும் இருந்தது .என்னிடமும் இருவர் வந்து அடிக்கடி இதே கருத்தை வலியுறுத்திவந்தார்கள் .(லண்டன் வானொலி ராமராஜ் ,ராஜா ). 
 
 
இந்தியாவில் இருந்து  மகாநாட்டிற்கு சென்றவர்கள் முகாம்களில் நடந்த அராஜங்களுக்கு விசாரணை வைத்தால் தங்களுக்கு பிரச்சனையில்லை ஏனெனில் தாம் எந்த ஒருமுடிவையும் தன்னிச்சையாக எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இது விடயமாக உமாவுடன் நடந்த வாக்குவாதத்தின் முடிவில் தான் பயந்துபோய் ஓடமுடிவேடுத்து எனது இருப்பிடம் வந்து பின்னர் ஆட்டோ ஏறி ஓடினார்கள் .
 
ஓடியவர்கள் பாதுகாப்பு தேடிப்போகும் புகலிடம் தான் விந்தையிலும் விந்தை .இலங்கைக்கோ அல்லது தமிழ்நாட்டு போலிசிடமோ அல்லது மாற்று இயக்கத்தவர்களிடமோ போகாமல் எமது அமைப்பில் இருந்து இந்தா பிரிகின்றேன் என்று நிற்கும் ராஜனிடம் தான் சென்றார்கள் .
 
சுன்னாகத்தில் வெற்றிகரமாக மகாநாட்டை முடித்து நாட்டில் புது பொறுப்பாளர்களையும் தெரிவுசெய்துவிட்டு தமிழ் நாட்டில் மகாநாடு நடாத்த வந்து ராஜனுடனும் கதைத்து  ஒரு வாரவிடுமுறையில் உரத்தநாட்டில் ஒரு பாடசாலையையும் ஒழுங்குபண்ணிவிட்டார்கள் .
 
அனைத்து முகாம்களிலும் இருந்து மகாநாட்டில் பங்கு பற்றுபவர்கள் என்று ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக்கையில் பிரதேசவாரியாக ஆட்களை  தெரிவுசெய்திருந்தார்கள் .மிகவும் நேர்த்தியாக ஒருங்கைக்கப்பட்டு மகாநாட்டிற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தது .முகாம்களில் பாதிக்கபட்டவர்களிடம் இருந்து அறிக்கைகள் எழுத்திலும் பெற்றிருந்தார்கள் .
 
நான் துரையுடனும் லிங்கத்துடனும் தொடர்பில் இருந்தேன் .இருவரும் சுன்னாகம் மகாநாட்டில் பங்குபற்றி விட்டுவந்திருந்தார்கள் .இரவில் அனேகம் ஒன்றாகத்தான் தூங்குவோம்.மகாநாடு நடந்தால் அமைப்பிற்குள் நடந்த அனைத்து தவறுகளும் தலைமையில் தான் போய் சேரும், இதை உமா அனுமதிப்பார் என்று தாங்கள் நம்மவில்லை எனவே மகாநாடு நடத்துவதை எப்படியும் தடுத்துவிடுவார் என்றும் அதற்கான முனைப்பில் தான் அவர் இப்போது ஈடுபடுகின்றார் என்றும் சொன்னார்கள் .தங்களை சந்திப்பதை பெரிதும் தவிர்த்து வருவதும் நாட்டில் இருந்து கூட தனது விசுவாசிகள் சிலரை வரவழைத்து அவர்கள் ஆயுதங்களுடன் உலா வருவதும் அதையே காட்டுகின்றது என்றார்கள் .
 
நாட்டிலிலேயே அமைப்பின் பொறுப்புகளில் இருந்து மகாநாட்டிற்கு வந்தவர்கள் எதிர்பார்த்தவிதத்தில் தலைமையிடம் இருந்து எதுவித வரவேற்று கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தாங்கள் அவமானப்படுத்த படுவதாக உணர்ந்தார்கள் .  இந்த நாட்களில் இவர்கள் பலரை சந்தித்தேன் .மிகவும் குழம்பியநிலையிலேயே காணப்பட்டார்கள். இவர்கள் உமாவை சுற்றியுள்ள கூட்டத்தை நன்கு அறிந்தவர்கள்  எனவே  தமது பாதுகாப்பு பற்றி அச்சத்தினால் ராஜனுடன் தொடர்பில் இருந்தார்கள் .
 
இந்த நாட்களில் டெல்கியில் இருந்த வந்த எனது சகாவுடன் நானும் ராஜனை சந்திக்கசென்றேன். பாடசாலை பாதுகாப்பு அற்ற இடம் என்றும் நிலைமைகளை பார்க்க உமாவை நம்புவதற்கு  தயாராகஇல்லை என்றார் 
 
உரத்தநாடு கலவர பூமியாக காணப்பட்ட நாட்கள் அவை . காரிலும் ஜீப்பிலும் மோட்டார் சயிக்கிளிலும் ஆயதங்களுடன் உமாவும் அவர் விசுவாசிகளும் ஒரு புறம் ,ராஜனும் அவர் ஆதரவாளர்களும் மறுபுறம் இடையில் நாட்டில் இருந்து வந்த பொறுப்பாளர்கள்  ,மாகாநாடு நடாத்த ஓடித்திரிபவர்கள் ,எதுவும் அறியாமல் முகாம்களில் இருக்கும் போராளிகள் . எல்லோர் மனதிலும் ஒருவித அச்சம் குடிகொண்ட சூழ்நிலை .
 
நாளை மகாநாடு ? 
 
நாளை என்ன நடக்கபோகின்றது ? எத்தனை தலை விழபோகுது ?  என்ற எண்ணமே அனைவரினது மனதிலும் இருந்தாலும் அனைவரும் முகாம்களுக்கு  நித்திரைக்கு ? திரும்பிவிட்டார்கள் .
 
தொடரும் .  
 
நாளை எனது திருவிழா .

Share this post


Link to post
Share on other sites
தலை தப்பியது தம்பி ராஜ்  புண்ணியம் .
 நாளை மகாநாடு . 
நேரம் பின்னிரவை தாண்டிவிட உரத்தநாடு உறங்கிவிட்டது .எம்மவர் எவரும் முகாம்களில் உறங்கியிருக்கமாட்டார்கள் .நாளை சுமூகமாக நடைபெறும் என்று நினைத்த மாகாநாடு கேள்விக்குறியாகிவிட்டிருந்தது .
நாங்கள் ஐந்து பேர்கள் சிலை செதுக்கும் சிற்பிகளின் கருங்கற்களில் அமர்திருந்து நாளை என்ன நடக்கும் என்று ஒரு ஒத்திகையில் இருக்கின்றோம். நாட்டில் இருந்துவந்த பல பொறுப்பாளர்கள் , ராஜன் பிரிவு எவருமே வராமல் உமா தனது ஆட்களை மட்டும் வைத்து வெற்றிகரமாக மகாநாட்டை நடாத்திவிடுவார் .பயத்தில் எவரும் எதிர்த்து வாய் திறக்கப்போவதில்லை  இப்படியே அமைப்பு இழுபடப்போகுது என்று அடித்துச்சொன்னார் துரை . 
 
நாட்டில் இருந்த பல பொறுப்பாளர்கள் ராஜனின் பாதுகாப்பிலேயே இருந்தார்கள் .நான் துரையிடம் கேட்டேன் ராஜனை பற்றி உமது கணிப்பு என்ன என்று ,  நீர் படுத்திருக்கும் சாமான் தான் என்றார் . நேரம் அதிகாலை மூன்றை எட்டிவிட்டது நாங்களும் நித்திரைக்கு சென்றுவிட்டோம் .
 
பாயில் படுத்துவிட்டேன் நித்திரைவரவில்லை .சற்று தள்ளி படுத்திருந்த  சீசரின் இனிமையான குரலில்  "ரோஜா ஒன்று முத்தம் தரும் நேரம் " காதிற்குள் தேன் பாச்சியது . அந்த நேரம் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த கழகத்தின் அனேக பாடல்கள் இயற்றி பாடியது இவர்தான் . 
 
சிறிது தூங்கிவிட்டேன், திரும்ப திரும்ப இரண்டு மூன்று நாட்களாக  முகாமில் இருக்கும் போராளிகள் அறுபது பேர்கள் வரை மகாநாட்டிற்கு சமர்ப்பித்த அறிக்கைககள் வாசித்தது வந்து வந்து போகுது . போராட வந்து இவ்வளவு அவலங்களை சந்திதிருக்கின்றார்களே என்று நினைக்க கோபம் கோபமாக வருகின்றது . 
 
அதில் ஒரு அறிக்கை, பெரியய்யாவிற்கு தெரியாமல் தான் முகாம் பொறுப்பாளர்கள் எங்களை இவ்வளவு கொடுமை  செய்வதாக முகாம்களில் போராளிகள் நினைக்கின்றார்கள் ஆனால் நான் ஒரு முறை செயலதிபரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது  "பெரியய்யா என்னால் இனி தாங்கமுடியாது என்னை விட்டுவிடுங்கள் ,எடுத்ததற்கும் அடித்தே கொல்கின்றார்கள்" என்றேன் . "விசாரணை என்றால் அப்படித்தான் " என்று விட்டு அவர் போய்விட்டார் என எழுதியிருந்தார் .  மகாநாட்டிற்கு என்று ஒரு அலுவலகத்தை திறந்து துரையின் பொறுப்பில் அதை கொடுத்திருந்தார்கள் . அங்குதான் இத்தனை அறிக்கைகளும் மாகநாடு சம்பந்தமான ஆவணங்களும் இருந்தன . 
 
இன்னமும் முழுதாக விடியவில்லை ஏதோ ஆராவாரம் கேட்டு கண் விழித்தால் எம்மவர் பலர் எமது அலுவலகம் நோக்கி  ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் .அருகில் படுத்திருந்தவர்கள் எவரையும் காணோம் . நானும் உடுத்திருந்த நாலு முழவேட்டியுடனும் கறுப்பு சேர்ட்டுடனும் அலுவலகம் நோக்கி ஓடுகின்றேன் .வழியெங்கும் ஒரே தோழர்கள் கூட்டம் கூட்டமாக  அனைத்து முகாம்களிலும் இருந்து ஓடிவந்து கொண்டிருக்கின்றார்கள் .அலுவலகத்தை சுற்ற வர  எங்கும் பெரும் உமாவின் படை.  மொட்டைமாடிக்கு ஏறுகின்றேன் ஏற்கனவே முன்நூறு  மேற்பட்ட தோழர்களுக்கு அங்கு வந்துவிட்டிருந்தார்கள் . மிகப்பெரிய மொட்டைமாடி அது அதிலும் சுற்ற வர பாதுகாப்பு . உமா நடுவில் கதிரையில் இருக்கின்றார் . வாசு சில காகிதங்களை எடுத்துவந்து வாசிக்க தொடங்குகின்றார் .
 
அனைத்து தோழார்களுக்கும் என்று தொடங்கி மூன்று பக்க கடிதத்தை வாசித்து முடிக்கின்றார் .அது இயக்கத்தை ஏன் விட்டு விலகுகின்றோம்  என்ற விளக்கத்துடன்  துரை எழுதிய கடிதம்.  துரை மாத்திரம் அல்ல இரவு என்னுடன் இருந்த நான்கு பேர்களும் (துரை ,லிங்கம் ,ராசா ,சீசர் ) போய்விட்டிருந்தார்கள் .கடிதம் எழுதிய பாணி புதிய பாதை எழுதுபவர் என்றபடியால் சொல்ல தேவையில்லை .
 
சாரம்சம் - மாற்றம் வேண்டி நிற்கும் எமது அமைப்பு மாற்றதிற்கு தயாராக இல்லாத நிலையில் தொடர்ந்தும் அதற்கு அராஜத்திற்கு துணை போக விரும்பாமல்  விலகுகின்றோம் .நாங்கள் ஆயுதத்திற்கு பயந்தவர்கள் அல்ல ஆனால் வன்முறையில் நம்பிக்கை வைக்காத படியால் வன்முறையை கையில் எடுக்கவிரும்பாமல் விலகுகின்றோம் .
 
வாசித்து முடிய தனது பேச்சை தொடரும் வாசு ,எமது அமைப்பை தமது பொறுப்பில் கொண்டுவர  இந்த ஐந்து பேரும் செயற்பட்டுவந்தது எமக்கு முன்னரே தெரியும் .இன்று மகாநாடு நடந்தால் அது சாத்தியம் ஆகமுடியாது என்று உணர்ந்து மகாநாட்டிற்கு முதல் ஓடிவிட்டார்கள் என்றார் .
 
அடுத்து உமா ,    தான் இப்படி எத்தனை தடைகளை  இதுவரை தாண்டி வந்திருப்பதாக ஒவ்வொன்றாக சொல்லி , தமது ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விடுதலை என்ற உணர்வில் போராட வருபவன் தான் போராளி , வெறும் உணர்சியில் தற்காலிகமாக தமது ஆசாபாசங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு போராட வந்தவர்கள் மீண்டும் அதை நாடி ஓடுவதில் வியப்பில்லை என்றும் ,எவர் எமது அமைப்பை விட்டு விட்டு போனாலும் தனி ஒருவனாக தன்னால் மீண்டும் ஒரு இயக்கத்தை கட்டிஎழுப்பமுடியும் என்று அடுக்கிக்கொண்டு போய்முடித்தார் .
 
எங்கும் ஒரே நிசப்தம் .ஓடிப்போனவர்கள் எப்பேர்பட்டவர்கள் என்று அனைத்து போராளிகளுக்கும் தெரியும் , குறிப்பாக அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த ராஜா . இனி என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயம் கேள்விக்குறி அனைவர் முகத்திலும் தெரிந்தது .
 
நான் மெல்ல எழும்புகின்றேன் ,
வணக்கம் ,  இயக்கத்தின்  பொறுப்புகளை கைப்பற்ற ஐந்து பெயர்கள் முயன்றார்கள் என்று நீங்கள் முன் வைத்த பெயர்களில் எனது பெயரும் இருந்ததால் எனது நிலையை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் .நேற்று இரவு வரை என்னுடன் இருந்தவர்கள் இயக்கத்தை  விட்டு விலகிப்போனது இப்போதுதான் எனக்கும் தெரியும் . ஆனால் அதில் அவர்கள் எழுதிவைத்து விட்டு போன கடிதம் சொன்ன செய்தி மிக தெளிவாக இருக்கு ,   அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று தான் அனைத்து தோழர்களும் விரும்புகின்றார்கள் அதையே தான் நாங்களும் கேட்டோமே ஒழிய  பொறுப்பையோ அல்லது தலைமையையோ அல்ல . நாட்டில் மகாநாடு நடந்ததே அமைப்பில் மாற்றம் வரமால் இனி அடுத்த அடி வைக்கமுடியாது என்றுதான் .
 
இனத்தின் விடுதலைக்காக போராட என்று பெற்றோரை விட்டு வந்தவர்களை  பொறுப்பாளர்கள எப்படி நடாத்தினார்கள் என்று அனைவருக்கும் தெரியும் .இரண்டு வருடங்களாக காலை எழும்பி ஏதோ கல்லு உடைக்க கிறேசருக்கு வேலைக்கு செல்பவர்கள் போல  இந்த வெய்யிலும்  புழுதி எல்லாம் புரட்டி எடுத்ததை விட வேறு என்ன செய்தீர்கள்.  அத்துடன் விட்டால் பரவாயில்லை பயிற்சிக்கு முடியாதவனை, கேள்வி கேட்பவனை  அடி ,உதை என்று சித்திரவதை. பல அப்பாவிகளை ஒற்றர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பிடித்து கொலைகள் வேறு .இப்படிப்பட்ட பிணம் தின்னும் கூட்டத்தை பொறுப்புகளில்  வைத்துதான் அமைப்பு இயங்குது .  இதை மாற்ற வேண்டும் என்று கேட்டதில் என்ன தப்பு?  தோழர்கள் தோழர்கள் என்று ஆழுக்கு ஆள் சொல்லுகின்றார்களே ஒழிய யாருக்கும் தோழமையின் அர்த்தம் தெரியுமா?  அவர்கள் ஏன் ஓடிப்போனார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் மாற்றம் இல்லாமல் அமைப்பு அசையமுடியாது என்றுதான் இப்போதும் நான் நம்புகின்றேன் .
 
ஒரே மூச்சில் பேசிவிட்டு இருந்துவிட்டேன் .கூட்டத்தில் ஒருவர் கல்லெறிந்தால் பின்னர் நடப்பது தெரியும் தானே .ஆளுக்கு ஆள் எழும்பி தமது ஆதங்களை கொட்டி தீர்க்க தொடங்கிவிட்டார்கள் .அப்ப ஒருவர் (இப்போ மச்சான்)  "நாட்டிற்கு வாங்கோ உங்கட வீரத்தை சேலஞ் பண்ணாலாம்"  என்றார் .
 
"விட்டால் பேசிக்கொண்டே போகின்றார்கள் பெரியய்யா,  சொல்லுங்கோ இப்பவே இவர்கள் எல்லோரையும் பிடித்து உள்ளுக்க போடுகின்றேன் முன்னர் இருந்தது போல் முகாம்களை கொண்டுவரவேண்டும் " என்று ஒரு குரல் பாதுகாவலரிடம் இருந்து வந்தது .(இவர்தான் பின்னர் உமாவை போட்டவர் .)
 
நான் மீண்டும் எழும்பி "இவர்களால் தான் எமது அமைப்பிற்கு இன்று இந்த நிலை . இப்படி இவர்களை பேச அனுமதிக்க முடியாது " என்றேன் .
 
"நீர் உமது கருத்தை வைக்க எந்த அளவு உரிமை இருக்கோ  அதே அளவு உரிமை அவர் கருத்தை வைக்க அவருக்கு இருக்கு " என்றார் உமா .
 
இப்போதுதான் தான் நான் சுயத்திற்கு திரும்பினேன் .கதைக்க கூடாத இடத்தில் கொஞ்சம் உணர்சி வசப்பட்டு உளறிகொட்டிவிட்டேன் போலிருந்தது .என்னிடம் உமா எவ்வளவு நெருக்கமானாலும் ஒரு பெரிய விடுதலை அமைப்பின் தலைவர் என்பதும் உறைத்தது.
 
கூட்டம் முடிய கீழே இறங்கிவருகின்றேன் அலுவலக வாசலில் உமா என்னை கண்டும் காணாதது போல் கண்களை சற்று சுருக்கியபடி லேஞ்சியை எடுத்து முகத்தை துடைக்கின்றார் .முதன் முதலில் உமாவுடனான சந்திப்பு நினைவு வந்தது .
 
"மடையா  உனக்கு அறிவு இருக்கா ? எங்கு என்ன கதைப்பது என்று தெரியாதா ? இப்ப எங்கு போகின்றாய் ?  இன்று இரவு இங்கு நீ படுத்து எழும்பலாம் என்று நினைக்கின்றாயா ? வெளிக்கிடு வாறன் ." என்று பேசிவிட்டு எங்கேயோ விரைவாக போய்க்கொண்டிருக்கின்றான் ஜெர்மனால் வந்து நின்று என்னுடன் அகதி வேலை செய்துகொண்டிருக்கும் அருள்ராஜ்  .
 
சற்று பயத்துடன் அவன் செல்லும் பாதையை பார்த்துக்கொண்டு தனியே நிற்கின்றேன் .
 
இனி அடுத்து நாளை .....

Share this post


Link to post
Share on other sites

செல்வன், அகிலன், உடுவில் சிவனேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார்?

Share this post


Link to post
Share on other sites

சென்னை கனவு இன்னும் முழுமையாக வாசித்து முடியவில்லை. அதிகம் களம் வரமுடியாமையால் இத்தகைய அனுபவத் தொடர்களை வாசித்து முடிக்க முடியவில்லை. தொடருங்கள் அர்யுன். ஒவ்வொரு போராளியின் அனுபவங்களும் வித்தியாசமானவை.

Share this post


Link to post
Share on other sites

whats-your-answer.gif

Share this post


Link to post
Share on other sites

நுணா ,

 

செல்வன் ,அகிலன் ,சிவனேஸ்வரன் கொலைக்கு காரணம் யார் ? இந்த கேள்விக்கு தானே பதில் கேட்கின்றீர்கள்

 

நான் சம்பந்தபட்ட விடயங்களை தான் எழுதி வருவதால் அதை எழுதவேண்டிய தேவை வரவில்லை .

 

உட்கொலை என்று நூறுவீதம் தெரியும் ஆனால் தோழர்கள் சொன்ன விடயங்கள்- முதல் இரண்டு கொலைகளுக்கும் சிவாரமும் (தராக்கி ) வெங்கட்டும்  பொறுப்பு .மற்றது உமா பொறுப்பு என்றார்கள் .

 

கடைசி நாள் நான் படுத்திருக்கும் போது ஒரு தோழர்  இந்த இடத்தில் தான் சிவனேஸ்வரன் கத்த கத்த இழுத்துக்கொண்டு வந்தார்கள் என்று சொன்னார் .அவர் ஒரு கராட்டி வீரர் அதனால் பலர் சேர்ந்து போய்த்தான் பிடித்தார்களாம் .  

 

Share this post


Link to post
Share on other sites

வாசிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. இன்றுதான் பார்த்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள் அர்ஜுன்.

Share this post


Link to post
Share on other sites
"இன்றிரவு இங்கு படுத்து எழும்பலாம் என்ற எண்ணம் இருக்கோ"  ராஜ் சொல்லிவிட்டு போனது  மனதில் திரும்ப திரும்ப வந்துபோனது .என்னுடன் இவ்வளவு காலமும் திரிந்தவர்களே சொல்லாமல் ஓடிவிட்டார்கள் .கனடாவின் கதையாக எனது கதையும் முடிய கூடாது .சண்டையில் இறந்தால் பரவாயில்லை துரோகி முத்திரை குத்தி தொலைத்துவிடுவார்கள் .உமா சொல்லாவிட்டாலும் விசுவாசிகள் விட்டுவைக்கமாட்டார்கள்  விட்டு வெளியேறுவதைத்தவிர வழியில்லை .
 
துரையின் அலுவலகத்தில் எனது BAG  , அதற்குள் தான் எனது பணம் ,அகதிகள் வேலைக்கான பணம் ,பாஸ்போர்ட் எல்லாம் இருக்கு (டெல்கியில் நான் விட்டுவிட்டு வந்த பாஸ்போட்டை மகாநாட்டிற்கு வந்த டெல்கி நண்பர் கொண்டுவந்தது அதிசயம் தான்  அவர் அத்துடன்  தான் டெல்கியில் நடந்துகொண்ட விதம் பற்றி மன்னிப்பும் கேட்டிருந்தார் )
 
ராஜ் இன்னும் இருவருடன் வந்து "நீங்கள் மூன்றுபேரும் போய் தஞ்சை பெரியகோயிலில்  நில்லுங்கள்,  இரவு நான் அங்கு வாறன் , நான் உங்களுடன் இப்போ வந்தால் என்னால் இங்கு  திரும்பிவரமுடியாது " என்றார் . 
 
ஒரு கடைக்கு மேல் இரண்டாம் மாடியில் இருக்கும் துரையின் அலுவலகத்திற்கு சென்றால் வெளியில் பெரிய பூட்டு கதவு பூட்டியிருக்கு. கொரிடோரில் யன்னல்கள் இல்லாததால் இருட்டாக வேறு இருந்தது .அவர்கள் இருவரையும் அங்கேயே நிற்க சொல்லிவிட்டு ஒரு சயிக்கில் கடைக்கு சென்று சயிக்கில் பூட்டுதிறப்பை தொலைத்துவிட்டேன் பூட்டை உடைக்கவேண்டும் என்று ஒரு சுத்தியலும் இரவல் வாங்கி  தீப்பெட்டியுடனும் மேலே வந்து கை நடுங்க நடுங்க ஒரே அடி பூட்டு திறந்துவிட்டது .BAG ஐ  எடுத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு பஸ் ஏறிவிட்டோம் .
 
தஞ்சை பெரியகோவில் கிணற்றில் வந்த களை  தீர தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு கதைத்துக்கொண்டு இருக்கின்றோம் .சில மணிகளுக்கு பின் அங்கு வந்த  ராஜ் வந்து எம்மை கூட்டிக்கொண்டு திருச்சி போகின்றார். ஜெர்மனில் இருந்து வந்து இலங்கை இந்திய கடத்தல் வியாபாரம் செய்யும் ஒருவரின் இருப்பிடம் அது .அங்கு இரவை கழித்துவிட்டு அதிகாலை பஸ் எடுத்து சென்னை திரும்பிவிட்டோம் .
 
சென்னையில் நான் இருந்த வீட்டிற்குத்தான் வருகின்றேன் .மகாநாடு நடைபெறாததாலும் பலர் ஓடிப்போனதாலும் உரத்தநாட்டை விட்டு தலைமையும் அவர்கள் விசுவாசிகளும் இப்போதைக்கு சென்னை வரமாட்டார்கள் என்று நம்பினேன்  அங்கு நின்ற பிரசாத்  மகாநாடு அடுத்த வாரம் நடைபெறஇருப்பதாகவும் எல்லோரையும் அதற்கு வருமாறும் காலை ஒரு தோழர் கடிதம் தந்துவிட்டுபோனதாக சொன்னார் .
 
இனியும் அங்கு தங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று ஐந்து சதத்திற்கும் கணக்கு எழுதி அத்துடன் மிகுதி பணத்தையும் பிரசாத்திடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த அனைத்து தோழர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னையிலேயே மிக குடிசனம் நெருக்கமான  மண்ணடிக்கு சென்று அங்கு ஒரு லோட்சில் தங்குகின்றேன் .என்னுடன் வந்த ஒருவர் தனது நண்பர்களின் இடத்திற்கு சென்று விட்டார் ,மற்றவர் குடும்பம் சென்னையில்  இருந்ததால் அவர்களிடம் சென்றுவிட்டார் .
 
சென்னையில் இது ஒரு புது அனுபவம் .பர்மா பஜார், துறைமுகம்  இரண்டும் அருகில் இருப்பதால் எங்கும் ஒரே சனக்கூட்டம் .கொழும்பு புறகோட்டையில் இருப்பது போலிருந்தது .முஸ்லிம் கடைகளில் பல நாட்களுக்கு பின் நல்ல மாமிச சாப்பாடு சாப்பிட்டது அங்குதான் .மயிர் வெட்டி தாடி வழித்து புது உருவம் எடுத்து சற்று பயம் நீங்கி திரும்ப லண்டன் செல்ல ஆயதமாகின்றேன் .நான் முன்னர்  இருந்த வீட்டிலும் ,என்னுடன் வந்தவர்  தாயார் வீட்டிலும்  தொலைபேசி இருந்ததால்  அனேகம் எல்லோருடனும்  தொடர்பில் இருந்தேன் .
தனது தாயாரும் அக்காவும்  இலங்கை திரும்புவதாகவும் இன்று ஸ்டேசனில் வழி அனுப்ப போவதாக நண்பன் சொல்ல இரவு நானும் ஸ்டேசனுக்கு சென்று அவர்களை வழி அனுப்பிவைகின்றேன் .அவர் தாய் தன் மகனின் கையை பிடித்து என்னிடம் தந்து பிள்ளையை எப்படியும் ஊருக்கு அனுப்பிவைப்பது உமது வேலை என்று எனக்கு ஒரு சந்தனபொட்டையும் வைத்து அந்த பொறுப்பையும் வேறு தந்துவிட்டு போய்விட்டார்கள்  .அவரையும் கூட்டிக்கொண்டு லோட்சிற்கு வருகின்றேன் .
 
தொலைபேசியில் ராஜ் என்னைவிட்டு ஓடிய தோழர்கள் திருவான்மியூரில் தங்கியிருப்பதாகவும் என்னை வந்து அங்கு கூட்டிக்கொண்டு போவதாகவும் சொல்லி  கூட்டிப்போனார் . அங்கு சென்றால் பல இயக்கங்களிலும் இருந்து ஓடிவந்தவர்கள் பலர் அங்கு தங்கியிருந்தார்கள் .குமணனை அங்குதான் சந்தித்தேன் .
 
அந்த நால்வரையும் நான் கேட்ட முதல் கேள்வி " ஏன் எனக்கு சொல்லாமல் என்னை விட்டு விட்டு  போனீர்கள் "  
 
"நீ எங்களுடன் எவ்வளவுதான் திரிந்தாலும் நீ உமாவின் ஆள்" என்ற எண்ணம்  தங்களுக்குள் இருந்ததாக சொன்னார்கள் . எவரையும் எவரும் நம்பாத அந்த  சூழ்நிலையில் அவர்களை சொல்லி பிழையில்லை .அவர்கள் எல்லோருமே வெளிநாடு போகும் சிந்தனையில் தான் இருந்தார்கள் அதற்கு ஒரே காரணம் "இப்போதைக்கு நாட்டில்  அரசியலும்  செய்யும்  சூழ்நிலை  இல்லை, அதைவிட எந்த இயக்கத்தால்  என்று இல்லை எவராலும் கொல்லப்படலாம்"
 
சில நாட்களில் ராஜனின் அமைப்பில் இருந்து ஒருவரை  சந்தித்தேன் . ஆரம்பத்தில் நாட்டில் நடந்த  மகாநாட்டிற்கு உமா அனுப்பிய  இருவரில் ஒருவர் .அவர் ராஜனுடனான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினார் .சந்திப்பு நடந்த இடம் வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் .இதுவே அங்கு நான் முதன் முறையாக  சென்றது .அழகான  பார்க் ,அதில் கார்களில் இருந்தபடியே சாப்பாட்டை ஒர்டர் பண்ணி  சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் .காரின் இரு ஜன்னல்களுக்கும் இடையில் சாப்பாடு ரேயை பொருத்தகூடியதாக வடிவமைத்துஇருந்தார்கள் .  அனேகம் எல்லோரும் பணக்காரர்கள் தான் .ராஜனும் இன்னமும் இருவரும் காரிலேயே வந்திருந்தார்கள் . நாங்களும் நாலு பேர்கள் சென்றிருந்தோம் . இந்தியா ஆயுதம் தந்து தாங்கள் நாட்டிற்கு போகும் நிலை மிகவிரைவில் வரும் என்று எங்களையும் இணையும் படி கேட்டுக்கொண்டார் . நாங்கள் யாரையும் நம்பும்  நிலையில் அப்போது இருக்கவில்லை .
 
எனது அப்பாவும் இலங்கையில் இருந்து வர, லண்டனில் இருந்து பணமும் வர மீண்டும்   லண்டன் பறந்துவிட்டேன்.  என்னிடம் இருந்த மிச்ச காசை கொடுத்து எப்படியும் ஊருக்கு போய் சேர்ந்துவிடு என்று என்னுடன் நின்ற தோழரிடம் சொல்லியிருந்தேன் .நான் லண்டன் வந்து இரு மாதங்களின் பின்னர் தான் அவர் ஊர் போய் சேர்ந்தார் .தான் கரைக்கு போய் படகு ஏற தான் படாதபாடு பட்டதாக சொன்னார் .எந்த இயக்கமோ கடத்தல்காரரோ  தனது அமைப்பின் பெயரை கேட்டுவிட்டு படகில் ஏற்ற மறுத்துவிட்டார்களாம் .பின்னர் NLFT விசுவானந்ததேவரே கொண்டுபோய்விட்டாராம் .
 
லண்டன் வந்து பின்னர் கனடா வந்தும் அழகிய சென்னை கனவு போகவில்லை .பத்து வருடங்களின் பின்தான் ஓரளவு  நனவானது .
 
அடுத்தமுறை அந்த கனவை சற்று பார்ப்போம் .
 
குறிப்பு -ஏதோ பல நாட்கள் மனதில் இருந்ததை கொட்டிவிட்டேன் .இன்றும் அமைப்பில் இருந்த பலரை சந்தித்துகொண்டே இருக்கின்றேன் .பலருக்கு பழையதை பற்றி வாய் திறக்கவே விருப்பம் இல்லை சிலர் எந்த நேரமும் அதே கதைதான் அதுவும் குறிப்பாக தண்ணி போட்டால் .
எனக்கு முதல் ஓடி வந்தவர்களில் இருந்து அண்மையில் வந்தவர்கள் என்று  பல தரப்பும் இருக்கின்றார்கள் .பல குற்ற செயல் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து உண்மையில் என்ன நடந்தது என்று அறிவம் என்றால் அவற்றை தவிர்த்தே வருகின்றார்கள் .அந்த நிலையில் நான் இருந்தாலும் அப்படித்தான் இருப்பேன் என நினைக்கிறேன் .
என்னுடன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தொடர்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நால்வரில்,
 சீசர் இந்தியா - குடும்பஸ்தர் ,இன்னமும் கலைஞன் தான் .
துரை பிரான்ஸ் -இவர்தான் எமது அமைப்பின் முற்போக்கின் மூல சக்தி .  இன்றும் நாலாம் உலகில் தான் வேலை செய்கின்றார் .
லிங்கம் லண்டன் -பெரிய முதலாளி ஆகிவிட்டார் .அண்மையில் மகளின் கல்யாணத்தை மிக ஆடம்பரமாக செய்து கனடாவிலும் சிறிய பார்ட்டி வைத்தார் நானும் போயிருந்தேன் .
ராசா -கனடா .சந்தோசமான குடும்பஸ்தர் .ஆள் மாறவே இல்லை அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த போது இருந்த அந்த எளிமை இன்னமும் மாறவில்லை . 
ராஜ்-  கனடா ,இப்பவும் எனது மாநாடு விளையாட்டை சொல்லி சிரிப்பார் .நான் அடிக்கடி சந்திக்கும் ஒருவர் .
பாபு -முகாமில் பிரச்சனை கொடுத்தவர்களில் ஒருவர் .இவர்தான் உமாவால் மகாநாட்டிற்கு நாட்டுக்கு அனுப்பபட்டு பின்னர் ராஜனுடன் சேர்ந்து என்னையும் சந்திக்க வைத்தவர் . அண்மையில் கார் திருத்தும் கராஜ் ஒன்றில் சந்தித்தேன் .கராஜ்காரரும் எமது அமைப்புத்தான் .இவனை அப்ப போடாமல் விட்டது எவ்வளவு பிழை இப்பவும் வந்து அலுப்பு தாறன் என்ற சொல்ல சிரித்துக்கொண்டு நிற்கின்றார் .இந்தியன் ஆமியுடன் சேர்ந்து ஆடாத ஆட்டம் எல்லாம் பிறகும் ஆடினவராம் .உலகத்தையே பச்சடி போட்டவர்  .
இதன் பின் நான் பதிந்த டயரி கதை முன்னர் பதிந்ததுதான் .

Share this post


Link to post
Share on other sites

கனவுகளுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

புதியதோர் உலகம் புத்தகத்தை யாழ்ப்பாணம் கொண்டுபோய் சேர்கவும் அதனை வெளியிடவும் கோவிந்தன் அன்று புலிகளின் உதவியை நாடியிருந்தார் அவரிடமிருந்து ஒரு தொகை புத்தகங்களை வாங்கிய பின்னர் அதை யாழில் வெளியிடாமல் அதிலிருந்த முக்கிய விடயங்களை எடுத்து புளொட் அமைப்புக்கு எதிராக மேலும் சில விடயங்களை சேர்த்து  மானிப்பாயில் வேலை செய்த சந்ததியாரின் ஒன்று விட்ட சகோதரி ஒருவரின் கடிதமும் இணைத்து (அந்த கடிதத்தை அவரிடம் எழுதி வாங்கியது நான்தான்)சிறிய நூலாக வெளியிட்டிருந்தோம் அது நினைவில் உள்ளது

Share this post


Link to post
Share on other sites

கனடாவின் கதை என்ற பகுதியில் "முதல் ஜெர்மனி புலி பொறுப்பாளர் என்னிடம் டியுசன் எடுத்தவர் " என்று எழுதியிருந்தேன் .இது பற்றி ஜெர்மனி வாழ் புலிஎன்று உயிர் விடும் உறவுகள் கேள்வி கேட்காதது வியப்பாக இருந்தது .

 

ஒருத்தருக்கும் தெரியாது போல . :(

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இது தொற்று நோய்களின் வரலாறு தெரியாத நம்ம ஆட்கள் முகநூலில் அடிச்சு விடும் ஒரு போலி விஞ்ஞான விளக்கம்! அடுத்த முறை இப்படியான விளக்கம் தரும் ஒருவரிடம் போலியோவுக்கு எங்கள் உடல் எப்படி இசைவாக்கம் அடைந்தது என்று கேட்டுப் பாருங்கள் (மேலே எழுதியிருக்கிறேன்)
    • இசைக்கலைஞன்,   கருணா, மாத்தாயா போன்றோரை வைகோவுடன் ஒப்பிடுவதே உங்களது அபத்தமான பார்வையை காட்டுகிறது. வைகோ எமது அயல் நாட்டின் அரசியல்வாதி. எம்மில் வைத்த அன்புக்காக எமது போராட்டத்திற்கு பல உதவிகளைச் செய்தவர்.  அவர் திமுக விற்கு ஆதரவளிக்க கூடாது என்று சொல்வதற்கான எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை என்பது உங்களிற்கு தெரியாதா?  அவர்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளில் வெவ்வெறு அரசியல் கட்சிக்களுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும்.  அதற்காக வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்க வேண்டிய  நிலை என்பது சதாரணமானது. அவர்களது பிரச்சனைளை எல்லாம் விட்டு விட்டு எமது போராட்டத்தை மட்டும் வைத்து தீர்மானங்களை எடுக்குமாறு கூறுவது பச்சை சுயநலம் அல்லவா?  இறந்த மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே ஒன்று படாமால் பிரிந்து நிற்கும் ஈழதமிழர் நாம் எப்படி அடுத்து நாட்டில் அரசியில் வெவ்வேறு கொள்கைகளுடன் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பதை துரோகம் என்று கூறு முடியும். இதற்காக தான் அவ்ரகளது நாட்டு அரசியலில்  நாம் மூக்கை நுளைக்க கூடாது என்று நான் கூறுகிறேன். அடுத்த‍து திமுக 1991 ம் ஆண்டின் பின்னர் எமது போராட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பதான என்றுமே சொல்லவில்லை. கருணாநிதையை நம்புமாறு யாரும் சொல்லவில்லை. 1989/1990 ஆட்சிக்காலத்தில் புலிகளுக்கு உதவி செய்த கருணாநிதியின் ஆட்சி புலிகளை காட்டியே கலைக்கபட்டது.  பத்மநாபா கொலையை புலிகள் சென்னையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடத்தி அவரது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். அதன் பின்னர் ராஜிவ் கொலையின் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. அதன் பின்னர் புலிகளுடன் தொடர்பு வைத்ததால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற ரீதியில் கருணாநிதி தனது சொந்த அரசியலை நடத்தி வந்தார்.   எமது போராபோராட்டத்தை நடத்தியது புலிகளே தவிர திமுக அல்ல. யுத்தம், சமாதானம் ஆகிய சகல விடயங்கிலும் புலிகளே சுயமாக முடிவுகளை எடுத்தார்கள்.  ஒரு விடுதலை போராட்டத்தை நடத்தபவர்கள் சுற்றி வர இருக்கும் அரசியல் சூழ்நிலைகள் கட்சிகளின் நிலை என்பதை  கருத்தில் கொண்டு  நடக்கவேண்டும். அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதை விடுத்து தமது தோல்வி கண்டவுடன் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர் மீது துரோகி பட்டம் சுமத்தி தப்பிக்க நினைப்பது அயோக்கித்தனம். புலிகளை சர்வதேச பயங்கரவாதிகளாக காட்ட இலங்கை அரசு நடத்திய பரப்புரைக்கு புலிகளும் உதவி செய்தனர் என்பது புலிகளை முழுமையாக நம்பிய தமிழ் மக்களுக்கு  துரதிர்சவசமானது. 
    • அந்த‌க் கொலைக்கும் அண்ண‌ன் சீமானுக்கும் தொட‌ர்வில்லை அண்ணா , அண்ண‌ன் சீமான் அந்த‌க் கொலை ந‌ட‌ந்த‌ போது கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் ,  10வ‌ருட‌ம் ஆக‌ போகுது அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து , அந்த‌க் கொலையை அண்ண‌ன் சீமான் செய்து இருக்க‌னும் திராவிட‌ம் இப்ப‌ அந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌த்த‌ கையில் எடுத்து பெரும் விம‌ர்ச‌ன‌த்த‌ உண்டு ப‌ண்ணி இருப்பின‌ம் / நான் நினைக்கிறேன் முத்துக் குமாரின் த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னையில் ந‌ட‌ந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌ம் அது ,   
    • மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!!   0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott   https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community