கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…
-
- 27 replies
- 2.6k views
-
-
அமெரிக்க தீர்மானம் பாகம் 1: மாசி மாதத்தின் இறுதி நாட்களுள் ஒன்று. விடிகாலையிலேயே தொலைபேசி அலறியது. யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் தொலைபேசிய எடுத்துக் காதில் வைத்தேன். "ஹலோ.. என்ன நித்திரையா?! ஜெனீவாவில நிண்டுகொண்டு நான் தான் டி.எஸ். கதைக்கிறன்.. அவசரம் இங்கை.." தொலைபேசியின் மறுமுனை படபடத்தது. "ஓ.. நீங்களா.. என்ன இந்த நேரத்தில?!" இது நான். "இந்த நேரத்திலயோ? நல்லா கேப்பீங்களே.. இங்க முதல் வரைவுத் தீர்மானம் வந்திட்டிது.. பார்த்தியளோ? அல்லது அதுவும் இல்லையா?" "ம்ம்ம்.. பார்த்தனான்... உப்புச் சப்பில்லாமல் இருந்தது.." "அதேதான்.. இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமே.. ஒரு ஃபோன் அடிச்சு பார்க்கிறது.." "ஓ.. அங்கையா.. இதோ அடிச்சுப் பா…
-
- 122 replies
- 11.1k views
-
-
கறுப்பி ஒரு பேப்பருக்காக கோமகன் அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக…
-
- 8 replies
- 1.3k views
-
-
இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும் என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின. என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன் என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்ற…
-
- 15 replies
- 1.6k views
-
-
'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுக…
-
- 9 replies
- 1.2k views
-
-
கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். "லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக.... அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ? யாரது எதிர்காலம்.... தனதா? எனதா....? எதிர்காலத்திற்கான கேள்விகளை விதைத்துச் சென்ற யாழினியின் தாக்கம்.... அவள் தானே உருவாக்கி, வளர்த்து, தீர்மானித்து, முடிந்த முடிவாய் அவனின் நிம்மதியை முடித்த செயலுக்குப் பரிகாரம் உண்டா என …
-
- 5 replies
- 1.2k views
-
-
அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தத…
-
- 25 replies
- 3.2k views
-
-
கணிதப்பாடத்தில் ஒரு சந்தேகம் தீர்க்கக் கேட்டுவந்தாள் சங்கீதா, யாரையுமே ஏறிட்டுப் பார்க்காத அழகுத் திமிரோடு, அவள் அறிவுத் திமிரும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஆனாலும் கணிதத்தில் வேங்கைப் புலியான சங்கரனிடம் சந்தேகம் கேட்கும்போது மட்டும், கிளிபோலக் கொஞ்சுவாள். சங்கரனுக்கும் தான் அழகன் என்ற திமிர் உண்டு. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்காத திமிர். ஆனாலும்! சங்கீதாவிடம் மட்டும் அந்தத் திமிர் மோதமுடியாது வழிந்து நிற்கும். அதற்குக் காரணம் என்னவோ..? இருவருக்கும் ஒன்றாக அமைந்த அந்தக் குணாதிசயம்தான் காரணமோ..? ஆமாம்! எதிலும் அவசரமின்றி ஆறுதலாகக் கணக்கிட்டுக், காலையில் நித்திரையால் எழும் நேரம், படிக்கும் நேரம், குளிக்கும் நேரம். உணவு உட்கொள்ளும் நேரம். இன்ன உடைதான் இன்று என்று நேற்…
-
- 14 replies
- 2.5k views
-
-
..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ... நடு நிசி....எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க முயற்சிக்கிறாள் ..அருகே இரு குழந்தைகளும் ஆழ்ந்த் நித்திரை ..... முன்னைய நாட்கலேன்றால் அவரவர் அறையில் தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி அனுமதிபெற்று ...உள் வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான கட்டளை. இந்நாட்டு வழக்கப்படி ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை அனுமதிப்பார்கள். சில வாரங்களா…
-
- 15 replies
- 1.8k views
-
-
நண்பர்கள் இருவர் ஒருவர் ஒரு கட்டிடத்தின் வேலைகள் முழுவதையும் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதற்கமைய வேலைக்கு ஆட்களை அமர்த்தி சொந்த தொழில் செய்பவர். வீடு வாகனம் விரும்பியபடி சுற்றுலா என்று கொஞ்சம் வசதியாக வாழ்பவர்...... இவர் பெயர் அகமெட்.. மற்றவர் வேலையை இழந்து வீட்டு வாடகை கூட செலுத்தாது பலவாறும் கடன் தொல்லையில் உலைபவர் சாப்பாட்டுக்கே கடினமான நிலை...... எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........ இவர் பெயர் முகமெட்..... அகமெட்டுக்கு தனது நண்பரது நிலை கவலை தருவதால் வேலை கொடுக்க விருப்பம் ஆனால் நட்புக்கெட்டுவிடக்கூடாது என்றும் யோசிப்பவர். அதனால் வேலை என்று இல்லாது தன்னுடன் உதவிக்கென்று கூட்டிச்சென்று அவருடன் சேர்ந்து தானும் உணவருந்தி அதற்க…
-
- 42 replies
- 4.5k views
-
-
கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!. http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109 பகுதி-2 பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவ…
-
- 20 replies
- 2.3k views
-
-
பகுதி - 1 அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில்…
-
- 20 replies
- 2.1k views
-
-
இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை, மகிழ்வு, பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு, கணவனின் ஆதரவான விசாரணை, பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது. இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் த…
-
- 23 replies
- 2.2k views
-
-
"திங்கட்கிழமை லீவு எடுத்திட்டியே" என்று அருகிலிருந்து ஒரு குரல். வேறு யார். எல்லாம் திருமாறனின் நண்பன் தான். அண்ணன் கவுண்டமணி சொன்னது போல் "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன" என்ற வசனம் தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. இவ்வளவு நடந்த பிறகு இனி எங்களால் என்ன செய்ய முடியும். பேசாமல் வேலைக்கு போகலாம் என்றான். "டேய் லூசுத்தனமா கதைக்காம லீவு எடுத்துக்கொண்டு வா" அவனும் விடுவதாய் இல்லை. சரி எதையும் செய்யாமல் இருப்பதைவிட இதையாவது செய்வோம் என்று சம்மதம் தெரிவித்தான். 10மணிக்கு பேரூந்து புறப்படும் என்று அறிவிப்பார்கள். இருவரும் சரியாக அங்கு சென்று காத்திருப்பார்கள். அதன் பின்னரே ஏற்பாட்டாளர்கள் வந்து சேர்வார்கள். நானும் வருகின்றேன் என்று சொன்னவர்களில் பலரை அங்கு காணக்கிடைக…
-
- 3 replies
- 1.8k views
-
-
உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl=
-
- 256 replies
- 22.5k views
-
-
பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என…
-
- 55 replies
- 26.2k views
-
-
தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-4 ----------------------------------- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொழும்பில நடக்காமல் போன பிரச்சினை பெரிய பிரச்சினையா கிடக்கு.யானைப்போருக்குள்ள பூனைப்போராக்கிடக்கு உந்தப்பிரச்சினை. இந்த மாதம் ஜெனிவா மாநாட்டில இலங்கைக்கு எதிரான "போர்க்குற்ற பிரேரணை" வாற நேரம் உது தேவையோ எண்டது நியாயமான கேள்விதான். ஏனெண்டா தமிழனுக்கு ஏதோ கொஞ்ச நஞ்ச நீதி கிடைக்கும் நேரத்தில ... அங்க சனமெல்லாம் வலு சந்தோசமா சோக்கா இருக்குது எண்டு காட்ட உப்பிடியான களியாட்ட நிகழ்வுகள் உதவும் எண்டுகினம் கனபேர். இன்னோரு பக்கத்தால "வெளிநாட்டில உள்ளவை மட்டும் கூத்தடிச்சு கும்மாளம் அடிக்கலாம்,இங்க நாங்கள் கொஞ்ச சந்தோசமா இருக்குறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ" எண்டுகினம் ஒரு சிலர். இத…
-
- 0 replies
- 854 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 100 இக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கொண்ட பாரிய மனிதப்புதைகுழி!!!!! தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்....(செய்தி) 1.கொலைசெய்து புதைத்தவனே அதை மீண்டும் தோண்டி எடுத்துக்காட்டும் வினோதம்... 2.மண்டை ஓடுகளில் "தமிழன்" என்று எழுதப்படவில்லை... 3.ஐ.நா என்ற ஒரு மனித உ(எ)ரிமை அமைப்புக்கு கண் தெரியாமல் போய் 5 வருடம்!!!! 4.இதில் யாரும் படுகொலை செய்யப்படவில்லை எனவும் அவர்களே தாங்களாக கிடங்கு கிண்டி தங்களை தாங்களாகவே புதைத்திருக்கலாம் என ஐ.நா நிபுணர் குழு(?) கண்டுபிடிப்பு. புதைகுழிக்குள் புதைக்கப்பட்டார்களா? இல்லை அவர்களாகவே புதைந்துபோனார்களா என்பது புரியாத புதிராக ஐ.நா மனித உ(எ)ருமை அமைப்புக்கு இருப்பதாக அதன் முக்கிய பேச்சாளர் தெரிவிப்பு. 5.இலங்க…
-
- 0 replies
- 748 views
-
-
முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.
-
- 47 replies
- 3.2k views
- 1 follower
-
-
பாகம். 4 பதிவின் தொடர்... எதிர்பாராத கெளசல்யாவின் சந்திப்பு கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று நண்பர்கள் கூறுவது பொய்யல்ல. அவளை யாராவது மாணவன் சீண்டினால், மற்றப் பெண்களைப்போல் சீறிச் சினந்து ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பது, அல்லது சீண்டுபவர் காலத்துக்கும் நினைத்து நினைத்து அவமானப்படும்படி முறைத்து, ஒரு வெறுப்பான பார்வையை வீசுவது என்று இல்லாது, என…
-
- 16 replies
- 1.9k views
-
-
ஒரு முக்கிய அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் பிரான்சுக்குப் போக வேண்டி இருந்தது. மற்றும்நேரம் வேறு ஆட்களுடன் சேர்ந்தோ அல்லது எமது வாகனத்திலோ ரணல் வழியாக பலதடவை போயிருக்கிறேன். ஆனால் அதிவேகத் தொடருந்தில் செல்வது இதுதான் முதற்தடவை. இம்முறை கோமகனையும் சுசீலாவையும் சந்தித்துவிட்டு வருவோமா என்று ஒரு எண்ணம் எழுந்தாலும், இரண்டு நாட்கள் நின்மதியாக இருப்பதை விட்டு கோவிடம் போய் நெருப்புப் பிடிச்ச கதையையும் எப்பிடி எத்தனை மணித்தியாலம் பல்கனியில் நின்றோம் என்பதையும், எத்தனை வாகனங்கள் எத்தனை மணிநேரம் அங்கு நின்றன, யார் யார் போன் செய்தார்கள் என்னும் விபரங்களைக் கேட்க மனம் வராததால் அங்கு போவதில்லை என்று முடிவெடுத்தேன். பயண நேரம் இரு மணித்தியாலங்களும் பதினைந்து நிமிடங்களும். டிக்கெட…
-
- 40 replies
- 4k views
-
-
வா…… என்னை வருடு! குளிர் பூச்சியத்திற்கு கீழே 15 ஆக இருந்தது. காற்று தாறுமாறாக வீசிக்கொண்டிருந்தது. அக்காற்றில் அலைக்கழியும் பனிப்பூக்கள் பூமியைத் தொட நிமிடங்களைக் கரைத்தன. அறையின் யன்னல் ஓரமாக எவ்வளவு நேரத்திற்குத்தான் இவற்றை இரசிப்பது? எனக்கு அலுத்து விட்டது. வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் அவள் மட்டும் இன்னும் சமையல் கட்டில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களின் தொடுகைக்காக மனதிற்குள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன. அவளின் பாராமுகமும் அலட்சியமும் என்னைத் தினம் தினம் அவமானப்படுத்துகிறது. அடி போடீ என்று வெறுக்கும் சக்தியை இன்னும் உயிர்மை கொடுக்கவில்லை. அந்தக்கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் கதகதப்பிற்காக ஒவ…
-
- 81 replies
- 9.2k views
-
-
பத்தாவது தேறியதும். தொடரந்து படிப்பைத் தொடர்வதற்கு என் குடும்பப் பொருளாதாரம் இடம்தர மறுத்தது. விவசாயத் துறையில் பயின்று அதில் முன்னேற முயன்ற எனக்கு ஒரு கூட்டுத்தாபன ஆலையில் இயந்திரங்களை இயக்கும் வேலை. மாமாவின் சிபாரிசு மூலம் கிட்டியது. என் மகனும் உத்தியோகம் பார்க்கிறான்...! என்ற மகிழ்ச்சியும், பெருமையும் அம்மாவின் முகத்தில் பிரகாசித்தது. இவன் சாதகத்துக்கு தண்ணீர் வாய்காலைத் தாண்டும் யோகமும் இல்லை. ஆனையிறவையும் தாண்டமாட்டான்...! என்று அம்மாவுக்கு யோசியன் சொல்லிய அடுத்த மாதமே, ஆனையிறவோடு மகாவலி கங்கையையும் தாண்டி மட்டுநகர் சென்றுவிட்டேன். சமுத்திரமும் தாண்டிப் புலத்திற்கு வந்ததும், குழந்தைப் பாக்கியமே இல்லை என்ற யோசியத்தையும் மீறி மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று கட்ட…
-
- 15 replies
- 6.7k views
-
-
வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் ! “லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்) வீரனாய் – 07.09.1979 வித்தாய் – 20.04.2009 பிறந்த இடம் – இடைக்காடு கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்” ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தின…
-
- 21 replies
- 5.2k views
-
-
இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான். இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள் எல்லாம் மறந்த…
-
- 13 replies
- 3.9k views
-