Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. வணக்கம் சேர் ..... இந்த வருட இறுதி பரீடசை நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம் வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம் கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு பாஸ் பண்ணி விடவும். எப்படியும் மற்ற பாடங்களில் தேறி விடுவேன். ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான் பெயிலானால் அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட குடும்பம் அம்மா களை எடுக்க போய் தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு கீழே இரண்டு தங்கைமார். நான் படிச்சு வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்ட…

    • 3 replies
    • 1.7k views
  2. நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் …

  3. புரட் …சீ ( சிறுகதை ) - சாத்திரி ( பிரான்ஸ் ) காலை நித்திரையை விட்டெழுந்த கட்டிலில் இருந்து இறங்குவதற்குள் அருகில் கீழே படுத்திருந்த கார்க்கி துள்ளி எழுந்து மல்லிகா மீது பாய்ந்து வாலையாட்டியபடி முகத்தை நக்கத் தொடங்க அதன் தலையை மெதுவாய் தவிக்கொடுதவள் தனது கண்ணாடியை எடுத்துப் போட முயற்சிக்கும் போது மீண்டும் கார்க்கி அவள் மீது பாய கை தவறி கீழே விழ கார்க்கியை அதட்டியபடி கீழே விழுந்த கண்ணாடியை எடுத்துப் போட்டபடி கார்க்கியின் உணவை எடுத்து அதன் கிண்ணத்தில் போட்டுவிட்டு தேநீரை தயாரித்த மல்லிகா அதை எடுக்கும் போது கை தவறி தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்து போக.. திடுக்கிட்ட கார்க்கி மல்லிகாவை பார்த்து குரைத்து விட்டு மீண்டும் கிண்ணத்தில் தலையை விட்டு கொறிக்கத் தொடங்கியது. “…

    • 4 replies
    • 1.9k views
  4. செவ்வந்தித் தோட்டம் காணவில்லை என்ற செய்தியுடன் காவல் அதிகாரிகளின் தகவல் பிரிவு தொலைக்காட்சியூடாக தமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதையும் பார்த்தவாறே மாதவி அழுது சிவந்த கண்களுடன், மெத்திருக்கையில் புதைந்து போயிருந்தாள். குளிர் காற்று மிதமாக அவளிருந்த இருப்பறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. கோடை காலத்தின் ஆரம்பம் ஆதலால் வீட்டின் முன்னே நின்றிருந்த மரத்தில் இலை தெரியாமல் பூத்திருந்த செரி ப்லோசம் (cherry blossom) இனிமையான ஒரு சுகந்தத்தைக் காற்றோடு அனுப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதன் மென்மையான சுகந்தம் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அவள் முகம் வாடி, வதங்கிப்போயிருந்தது. இன்றோடு அவள் சகோதரி, அவளுடன் ஒரே நாளில், ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவள் …

  5. பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார். சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்... அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண…

    • 15 replies
    • 1.5k views
  6. இப்பதிவை தொடரவேண்டி இருப்பதால் வரும் பதிவு வாலிபவயதுக் குறும்புக்கு சற்றும் பொருத்தமற்றுத் தோன்றுகிறது ஆகவே தொடரப்போகும் பதிவை "மஞ்சு என் உயிர் நீதானடி" என்ற தலைப்பில் பதியவுள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். "உன்னுடைய அப்பாவின் ஆட்கள்தானே நீதவான்! அவரிடமும் ஒரு நற்சான்றுப் பத்திரம் வாங்கினால் உன்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்கு உதவியாக இருக்கும்." மாமாவின் ஆலோசனை அவனை நீதவான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சொந்தம்தான் , ஆனாலும்! அவன் முன்விறாந்தை தாண்டி உள்ளேபோய்ப் பழகமுடியாத ஒரு தராதரப் பந்தம். அங்கிருந்த வாங்கில் போய் இருந்தான். சிறு மங்கை ஒருத்தி வந்து விசாரித்தாள். அவள் போனதும், அவர் வந்தார். வந்த விபரம் சொன்னான். ஓ அப்படியா! நீர் இன்னாருடைய மகனா! ச…

    • 8 replies
    • 1.5k views
  7. எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன். போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப்…

    • 28 replies
    • 2.9k views
  8. யாரும் தன்ர கதையை காது கொடுத்து கேக்கினம் இல்லை என்ற இயலாமையை மெல்லிய முனுமுனுப்பால் ஒருத்தருக்கும் கேட்டுவிடக்கூடது என்ற கவனத்துடன் கொட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி. என்னதான், தான் புறுபுறுத்தாலும், யாரும் தன்னை கண்டுகொள்ளப் போவதில்லை என்ற உண்மை கண்மணிக்கும் புரிந்திருந்தது. இருந்தும், அவளால் புறுபுறுப்பதை விட்டு விட முடியவில்லை. புறுபுறுத்துக்கொண்டே வீட்டின் உற்புறத்தை எட்டிப் பார்த்தாள். ஒரு பேத்தி ரிவியிலும், மற்றவள் கணணியிலும் தங்கள் தலையை புதைத்துக்கொண்டிருத்தார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை உதுகளை வேண்டிகொடுத்து பிள்ளையளைக் கெடுத்து வச்சிருக்கிற தாயையல்லோ சொல்லணும், உதுகளை அடிச்சு கலைக்கனும் ஓடிப்போய் விளையாடுங்கோ எண்டு, கண்டறியாத கரண்டு ஒண்ட கொடுத்து …

  9. நம்ம ஊருல இரண்டு பேர் இருப்பாங்க எப்பவும் அவங்களால் ஒரே சிரிப்பு தான்... மற்றவனை ஏமாற்றுவது இவங்களின் வேலையா இருக்கும்.. ஒருநாள் பனையை பார்த்து இருவரும் மிக கவனமா அவதானமா பேசிக்கொண்டு இருந்தாங்கள்.. அக்கம் பக்கம் உள்ளவனுக்கு எல்லாம் குழப்பம் என்ன இப்படி கதைக்குறாங்க என.. பக்கத்தில் போய் பார்த்தா ஒன்னும் இல்லை.. அப்பொழுது முதல் ஆள் கேட்டான் எப்படி ஐந்து காலால் நடக்குது என்று.. மற்றவன் கேட்டான் ஓம் ஒரு காலை தூக்கிட்டு ஊருது பாரு எறும்புக்கு எவ்வளவு துணிவு என.. சுற்றி நின்டவனுக்கு அனைவருக்கும் கடுப்பாகும்.. பேசிட்டு போயிடுவாங்க அப்படி அவங்களின் அலப்பரை கொஞ்சம் இல்லை . ஒரு முறை இருவரும் சைக்கிளில் தூரம் பயணம் போயிட்டு இருந்தாங்க.. அப்பொழுது காட்டு பாதையில் போனவர்களுக்…

  10. மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற…

  11. எனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக இது 110 % உண்மைக் கதை. முன்பின் அறியாத ஒருதொலைபேசி இலக்கத்தில் இருந்து நோர்வேஜியமொழியிலான ஒரு குறுஞ்செய்தி இப்படிக்கூறியது ”சஞ்சயன்! உன்னை அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ;) ” எனது நிறத்தையுடடைய ஒரு பெருங்கவி கூறியது போன்று ”கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவம் இல்லாதொரு உருண்டை உருளத்தொடங்கியது” குறுஞ்செய்தியின் இறுதில் இருந்த கண்சிமிட்டும் சித்திரம் என் நெஞ்சுக்குள் சிமிட்டத்தொடங்கியது. யாராக இருக்கும்? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுதேடினேன். பதில் கிடைத்தாயில்லை. அவள் யார்? எப்படி இருப்பாள்? கறுப்பா வெள்ளையா மஞ்சலா? எந்த இனத்தவள்? அ. முத்துலிங்கம் அய்யாவின் கதைகளில் வரும் குறிப்பிட்ட ”அந்தப் பகுதி” மட்…

  12. சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். 'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ?' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள். மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்க…

  13. தட்டி வான் 1.தட்டி வான் தெரியாத ஆரும் யாழ்ப்பாணத்தில இருக்க முடியாது.உந்த மினிவான் வரக்குமுன்னம் தட்டிவான் தான் கொடிகாமம்,பருத்துறை,யாழ்ப்பாணம் றூட் ஓடினது. காத்தோட்டமா இருந்து அங்கின இங்கின பராக்கு பாத்துக்கொண்டு போறதுக்கு நல்ல வசதி. 2.தட்டி வான் செய்த கொம்பனிக்காரன் இப்ப யாழ்ப்பாணம் வந்தா அதை லச்சகணக்கில காசு குடுத்து வாங்கிக்கொண்டு போவாங்கள்.ஏனெண்டா 100 வருச பழசு தட்டி வான்.இருந்தாலும் எங்கட ஆக்கள் இப்பவும் ஓடுகினம். 3.பிரச்சினை காலத்தில டீசலோ பெற்றோலோ இல்லாத நேரம் எங்கட ஆக்கள் தட்டிவானை மண்ணெண்ணையில ஒடிக்காட்டினவை.புகை பறக்க காது அடைக்கிற சத்தம் வரும். 4.கொடிகாமத்தில இருந்து யாழ்ப்பாண சந்தைக்கும், பருத்துறை சந்தைக்கும் மரக்கறியள்,தேங்காய் மூடையள்,பிலாப்பழம…

  14. கைரி ———— பிரான்சின் மெல்லிய குளிர்..இன்று லீவு நாள் . போர்வைக்குள் இருந்து எழுந்து வெளியே வர விருப்பமில்லாமல் படுத்திருந்தவனிற்கு எழும்பி வாங்கோ தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கு என்கிற மனைவியின் சத்தத்தையடுத்து பாதித் தூக்கத்தோடு வந்து அமர்ந்தவன் தேனீர் கிண்ணத்தில் இருந்து எழுந்த ஆவியில் இருந்த வந்த தேயிலை மணத்தை கண்ணை மூடி இழுத்து அனுபவித்தபடி குடிப்பதற்காய் வாயருகே கொண்டு போகும் போது தேனீர் ஆவியில் தனது காவிப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாள் கைரி.அப்படியே அந்த ஆவியை சாம் உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தான். 00000000000000000000000000 1985 ம் ஆண்டின் இறுதிப் பகுதி பலாலி இராணுவ முக…

    • 17 replies
    • 2.8k views
  15. பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன். 'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை. 'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நி…

    • 29 replies
    • 4.6k views
  16. தங்க மீன்கள் -------------------- சுவாமி விவேகானந்தர் அவரது புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவில் ஒரு தவளைக் கதை சொல்லியிருப்பார். கடலில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து விடும் ஒரு தவளை, அங்கேயே இருக்கும் தவளைகள், அவைகளின் உரையாடல்கள் என்று அந்தக் கதை போகும். இது எங்கேயும் எடுத்து விடுவதற்கு நல்ல வசதியான ஒரு கதை. 'என்னையே தவளை என்று சொல்கிறியா..........' என்று எந்த விவாதத்தையும் வாக்குவாதமாக மாற்றக் கூடிய தன்மையுள்ளது சுவாமியின் இந்தக் கதை. கதையின் சாராம்சத்தை, அதிலுள்ள தத்துவத்தை விட, எனக்குப் பிரச்சனையாகவே இருந்தது கடல் தவளை ஒன்று கிணற்று நீருக்குள், அந்தச் சின்ன வட்டத்திற்குள் உயிர் வாழுமா என்னும் உயிரியல் சந்தேகமே. கலர் கலரான கடல் மீன்கள் வட்டி என்று சொல்லப…

  17. "விடியலைத் தந்த பொங்கல்" கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கலிலும் விடியலைத் தேடுகிறேன். நம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் நிறைய முன்பு இருந்தது, என்றாலும் நம்பிக்கை இப்ப மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. ஆனால் நான் முயற்சியை, மாற்று வழிகள் தேடுவதை என்றும் நான் கைவிடவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆண்டாண்டு காலமாக தமிழன் சொல்வதை, அதில் இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நான் அதை மறக்கவில்லை. இன்று ஜனவரி 14, 2023 சனிக்கிழமை, மூன்றாவது இலங்கை இந்தியா ஒருநாள் சர்வதேச துடுப்படி ஆட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அதில் சலிப்புத்தான் வந்தது, இந்தியா 390 ஓட்டங்கள் எடுத்தவேளை, இலங்கை 75 ஓட்டமே பெறமுடியாமல் திண்டாடிக்க…

  18. "காதலே கலையாதே" உலகப் புகழ் பெற்ற காதலர்கள் என இன்று நாம் போற்றும் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, சங்க இலக்கிய ஆதிமந்தி - ஆட்டநத்தி இப்படி யாரை எடுத்தாலும் அங்கு காதல் வாழ்ந்ததாக முற்றும் முழுதாக சொல்லமுடியாது. பல சோகத்தில் முடிந்தன, பல மரணத்தில் முடிந்தன என்பதே உண்மை. என்றாலும் "காதலே கலையாதே" என்ற வார்த்தைக்கு அர்த்தமும் மதிப்பும் இருப்பதை காண்கிறோம். என் வாழ்வும் இப்படி ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது. மும்தாஜ் - ஷாஜஹான் மற்றும் உதயணன் - வாசவதத்தை காப்பியத்தி…

  19. Started by arjun,

    வேலையால் வீடு திரும்பும் போது ரோரோன்டாவில் இந்த வாரம் அடிக்கும் சணல் வெக்கை என்னையும் வாட்டி எடுத்தது .பாடசாலை விடுமுறை என்பதால் வீட்டில் சின்னவனை காணவில்லை. பாஸ்கெட் போல் விளையாட நண்பர்களுடன் போயிருப்பான் .மனுசி வேலையால் வந்து ஏ சி யை உச்சத்தில் விட்டு உண்ட களைப்பு தீர தூக்கம். பெரியவன் வில் ஸ்மித் இன் பழைய சீரியலுடன் டி வி யில் மூழ்கியபடி. ஏழு முப்பதற்கு தொடங்கும் அலெக்ஸ்இன் ஜேப்படியில் யார் கூடுதல் பதில் சரியாக சொல்லவதாக தினமும் அவனுக்கும் எனக்கும் போட்டி.. இன்று எனக்கு ஐந்து அவனுக்கு மூன்று. குளிர்சாதன பெட்டியில் நன்கு உறைந்த ஸ்ரவுட்டை உடைத்து வாயில் விட்டபடி வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தை பார்க்கிகின்றேன். அத்தனை தாவர உயிர்களும் தண்ணீர் வேண்டி அழுது ஓய…

    • 8 replies
    • 1.8k views
  20. Started by putthan,

    அவனை நான் முதலில் சந்திக்கும் பொழுது எட்டு வயது இருக்கும்.பெடியன் நல்ல கொளு கொளு என்று இருப்பான்.பார்த்தவுடனே கன்னத்தில் கிள்ள வேண்டும் போல இருக்கும்.அவனது அப்பா குகன் எனது நெருங்கிய நண்பன்,வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். குடும்ப சகிதமாக சென்றிருந்தேன்.போகும் பொழுது சும்மா போகக்கூடாது எதாவது கொண்டு போகவேணும் என மனிசி நச்சரிக்க மலிவுவிலையில் வாங்கிய சொக்லட் பெட்டியை ரப்பிங்க் பெப்பரில் சுற்றி எடுத்து சென்று, குகனின் மகனிடம் கொடுத்தேன்.thank you uncle.. என்று கூறிய படியே நான் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தான்.vow can I eat it now ammaa என்று கூறியபடியே என தாயிடம் அனுமதி கேட்டான்.not now darling latter...மறுப்பு தெரிவிக்க முகத்தை தொங்க போட்டபடியே உள்ளே சென்றுவிட்…

    • 21 replies
    • 3k views
  21. கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலம…

  22. 15.07.1996 பார்த்திபனின் வரவு. 15.07.1996 பார்த்திபனின் வரவு. 12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை. என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும். அதவர…

    • 6 replies
    • 3.7k views
  23. நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன். என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச்…

  24. "விட்டுக்கொடுத்துப் பழகு" 'விட்டுக்கொடுத்துப் பழகு', கேட்க நல்லாத்தான் இருக்குது. ஆனால் பழகின எனக்குத்தான் தெரியும் அதன் கொடுமை . 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் இன்னும் அடி வாங்காதவர்கள் என்றே எண்ணுகிறேன்! காலம் மாற கோலம் மாறும் என்பது உண்மையே! அப்படித்தான் என் மனம் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. நான் என் மனைவியை காதலிக்க ஆரம்பிக்கும் பொழுதே , 'என் மனதுக்கும் உண்மைக்கும் ஒவ்வாத ஒன்றில் நான் என்றும் ஈடுபட மாட்டேன். என் உணவு சைவம் , உடை , அலங்காரம் பகட்டு இல்லாமல், தேவையின் அடிப்படையில். அது என் தனிப்பட்ட கொள்கை, அதே போல நீ…

  25. முதலாளித்துவம் ------ பணப்பலம் உள்ளவனும் பணம் படைத்தவனும் பணத்தாசை பிடித்தவனும் ஒன்று சேர்ந்தார்கள் "பிறந்தது பொருளாதாரம்" ^ எழுத்துருவாக்கம் கே இனியவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.