நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
இயற்கையின் படைப்பில் கிடைக்கும் எண்ணற்ற பழவகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் பயன்களைக்குறித்து இப்பகுதியில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இங்கு பேரீச்சை மற்றும் சப்போட்டாப் பழங்களின் சிறப்புக்களை நாம் காணப்போகிறோம். பேரீச்சையின் பெரும் பயன்கள்: 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்களே! அது பேரீச்சைக்கு மிகவும் பொருத்தமான பழமொழி. வேறெந்தப்பழங்களையும் விட மிக மிக இனிப்பானது இது. பாலைவனத்திற்குக் கிடைத்த பேறு இப்பழம். இயற்கையின் அன்பும் அக்கறையும்தான் என்ன? வறண்ட பாலையிலும் இனிமை ததும்பும் பழம், 'ஏழ்மையிலும் காணக்கிடைக்கும் கொடைத்தன்மை போல்'. பனையின் இனத்தைச் சேர்ந்தது பேரீச்சை. யூப்ரடிஸ் நதிக்கரைகளை ஆதியாகக் கொண்டது இதன் வரலாறு. வறண்ட தட்பவெப்பமுடைய எல்லாப் …
-
- 0 replies
- 2.8k views
-
-
( உடற்பருமனாதல் பிரச்சினையின் மருத்துவ/உடற்றொழிலியல் தகவல்களை இலகுவான தமிழில் தரும் ஒரு குறுகிய முயற்சி - மூன்று பகுதிகளாக இடம்பெறும். இது இணையவனின் உடல் எடை குறைப்புத் தொடருக்கு போட்டியாக எழுதப் படுவதல்ல! இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன் மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்) உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது மூன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை உயரத்தின் வர்க்கத்தினால் …
-
- 17 replies
- 2.8k views
- 1 follower
-
-
பல கலாசாரங்களில் சிறுவர்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், சிறுமிகள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவே பரவலாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு ஆண்கள் எவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கோரப்பட்டாலும், பலருக்கும் இது சம உரிமை சார்ந்த விஷயமாக உள்ளது. எனவே எது சரி? அதைவிட எவ்வாறு சிறுநீர் கழித்தால் ஆணுக்கு சிறந்தது? பல ஆண்களுக்கு நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது சிரமமாகதான் இருக்கும். ஆனால் அதே சமயம் அதுதான் உடனே செய்யக்கூடியது, அதாவது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதற்கு அதிக நேரம் தேவைப்ப…
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
பைன் பருப்புகள் / கொட்டைகள் சாப்பிட்டால் ஆண்களுக்கு Vigra பாவிக்க தேவையில்லை என்று வேலை தள உடல் நல கூட்டத்தில் சொன்னார்கள். யாரவது பயன்படுத்தி உள்ளீர்களா? இது உண்மையா? பைன் பருப்புக்கு தமிழ் சொல் என்ன? http://www.nutrition-and-you.com/pine-nuts.html http://www.healthdiaries.com/eatthis/6-health-benefits-of-pine-nuts.html http://www.siberiantigernaturals.com/extravirginpinenutoil.htm
-
- 1 reply
- 2.8k views
-
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் உண…
-
-
- 36 replies
- 2.8k views
- 2 followers
-
-
பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்...களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வ…
-
- 2 replies
- 2.8k views
-
-
சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன. சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும் , இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உண…
-
- 10 replies
- 2.8k views
-
-
பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம் நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை…
-
- 3 replies
- 2.8k views
-
-
மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக…
-
- 6 replies
- 2.8k views
-
-
இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்! சனி, 9 பிப்ரவரி 2008( 13:47 IST ) நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையும், பானங்களையும் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெல்ஸ்லி, ஆதம் ட்ரூவோன்ஸ்கி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த கலோரி அளவு கொண்ட இனிப்புச் சத்துகள், சக்தியின் அடர்த்தி தன்மை, திருப்தித் தன்மை ஆகியவைத் தொடர்பாக நடத்திய ஆய்வில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு அளவைக் குறைத்துக் கொண்டாலே உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதைக் கண்டறிந்…
-
- 0 replies
- 2.8k views
-
-
பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது. முள்ளந்தண்டுப் பகுதியில் உள்ள மூளையின் நீட்டமான முண்ணானில் ஏற்படும் பாதக விளைவுகளாலும் இது ஏற்படக் கூடும். இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்…
-
- 21 replies
- 2.8k views
-
-
பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..! புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது. ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும். ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும். இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
பீட்ரூட்டை சமைத்தோ அன்றி பச்சையாகவோ உண்டுவந்தால் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். ஏனைய கீரைவகைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் உண்ணலாம். அல்சர் என்று சொல்லப்பம் வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாவற்றையும் இந்தக் கீரை குணமாக்கவல்லது. மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுகநிவழகள, பீட்ரூட் சாறறுடன தண்நீர் சேர்த்து, இரவுவேளை தூங்கத்திற்க்கு முன்னர் பருகிவிட்டு சென்றால் பலன் பல கிடைக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்கும் சக்தியும் இதுக்கு இருக்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 2.7k views
-
-
எனக்கு நெஞ்சிக்குள் சரியான சளியாக இருக்குது...வெளியால தடிமனாய் வருதுமில்லை.நெஞ்சை அரிச்சுக் கொண்டு இருக்குது...இரவு நித்திரை கொள்ளும் போது மூசிறன்...இதற்கு எதாவது தமிழ் வைத்தியம் இருக்கா?...தெரிந்தால் சொல்லவும்...நன்றி
-
- 28 replies
- 2.7k views
-
-
மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது. இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..! உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..! Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests. http://news.bbc.co.uk/1/hi/health/6725775.stm
-
- 16 replies
- 2.7k views
-
-
இளம் பெண்கள் பலர் கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக நவீன சிகிச்சை, மெஷ’னில் உடற்பயிற்சி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இனி செலவே செய்யாமல் கொடியிடை பெறலாம். அதற்கான சிறு சிறு பயிற்சிகள் இதோ... கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பிட்டங்கள் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் மைக்ரோ ஏரியாக்களில் (சிறிய தசைக…
-
- 8 replies
- 2.7k views
-
-
தூது வளை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும். சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்ப…
-
- 1 reply
- 2.7k views
-
-
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஜெர்மனி அரசுக் கட…
-
- 17 replies
- 2.7k views
-
-
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அ…
-
- 8 replies
- 2.7k views
-
-
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம். அவரைக்காய இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெ…
-
- 2 replies
- 2.7k views
-
-
முடி உதிர்வதால் தலையில் வழுக்கை தோன்றுவது என்பது ஆண்களில் நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 40% ஆண்களில் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு செயற்கையான காரணங்களும் உண்டு மரபணு சார்ந்த காரணங்களும் உண்டு. செயற்கைக் காரணங்களில் கதிரியக்க சிகிச்சை அளித்தல் (radiotherapy) அல்லது எரிதலுக்கு இலக்காதல் என்பனவும் முடி உதிர்வைத் தூண்டுகின்றன. இவ்வாறு தோன்றும் வழுக்கைக்கு தீர்வாக இன்று நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை என்பது, வழுக்கை உள்ள இடத்தில் பிறிதொரு இடத்தில் இருந்து சத்திர சிகிச்சை முறைகளின் கீழ் பத்திரமாக அகற்றிய மயிர்களை நாட்டுதல் என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இரு…
-
- 14 replies
- 2.7k views
-
-
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. …
-
- 10 replies
- 2.7k views
-
-
தீய கொலஸ்ரோல் டெச்ட்தீய கொலஸ்ரோல் - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளை, நரம்பு, தசை, ஈரல், குடல், இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும், விற்றமின் டி, கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போது…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஜெசிகா பிரவுண் பிபிசி ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது. ``ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்பட…
-
- 23 replies
- 2.7k views
-
-
பெண்களே உங்கள் முகம் அழகாய் மாற வேண்டுமா>?ஜொலிப்பாய் இருக்க வேண்டுமா.. இதோ நான் குடுக்கும் செய் முறைய பண்ணி பாருங்கள்.. உங்கள் முகம் ஒரு வாரத்தில் ஜொலிப்பாய் பள பளப்பாக வருவிர்கள்.. மற்றவர்களே உங்களை பார்த்து கேட்பார்கள்.. என்ன நீங்கள் பண்ணுறிர்கள்..முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளும் மாறும். இதோ நீங்கள் பண்ண வேண்டியது பச்சை பயறு இருக்கு இல்லை இதை மிக்ஸில் போட்டு அரைத்து அதன் மாவை அரித்து எடுங்கள்.. அத்துடன் கஸ்தூரி மஞ்சள் போட்டு மிக்ஸ் பண்ணி வயுங்கள்.. படுக்க போக முதல் பாலில் மிக்ஸ் பண்ணி ஒரு அரை மணித்தியாலம் போட்டு விட்டு கழுவி விடுங்கள் ..சோப்பு போடதிர்கள்.. விடிந்து முடிய உங்கள் முகம் பாருங்கள்.. ஜொலிப்பாய் இருக்கும்.. இயற்க்கை செய் முறை சருமத்துக்கு ந…
-
- 6 replies
- 2.7k views
-