வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
லண்டனில் கடந்த சில வருடங்களுக்கு முன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, பலத்த காயத்துடன் உயிர் தப்பியவர் தமிழ் சிறுமியான துஷா. இவருக்கு துப்பாக்கி சன்னத்தினால் முள்ளம் தண்டு பாதிக்கபட்டது. அத்துடன் இவருக்கு சுவாச பாதிப்புகள் இருப்பதால், கொவிட் உட்பட்ட தொற்றுக்கள் அதிகம் பாதிக்க கூடும் என அவரின் வைத்தியர்கள் அஞ்சுகிறார்கள். இது சம்பந்தமாக வைத்தியர் கடிதம் கொடுத்தும், பாடசாலை நிர்வாகமும், உள்ளூராட்சி அரசும் (கவுன்சில்) கடும் போக்கு காட்டுவதாலும், பெற்றார் மீது தண்ட பண நடவடிக்கை பாயாலாம் என்பதாலும், இந்த சிறுமி தொற்றபாயத்துக்கு மத்தியிலும் பாடசாலை செல்ல வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளார். https://www.thesun.co.uk/news/12960578/girl-shot-lungs-return-school-cov…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய வாழ் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீகாந்தராஜா என்ற கனடிய தமிழர், 32 வயது நிரம்பியவர். இவர் அமெரிக்காவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்க்கப்பல்கள் டிசைன் செய்யும் சாப்ட்வேர், இருட்டிலும் பார்க்கும்படியான உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும், ஆயுதங்கள் முதலியவற்றை பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து பிரதீபன் நடராஜா என்பவரும் கைது செய்யப்பட்டார்…
-
- 6 replies
- 1.1k views
-
-
கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து! இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற் ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது. ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால்…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ் இளைஞர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் விப…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிறிலங்காவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கள, தமிழ் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள சிறிலங்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது. புத்தாண்டு எல்லா சிறிலங்கர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில…
-
- 4 replies
- 1.1k views
-
-
கினிமினி மீது விசாரணை ஆரம்பம் கினிமினி என்னும் பிரித்தானியாவின் வர்த்தக இராணுவ (merchant army) நிறுவனத்தின் இலங்கை நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பித்தது, லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ். இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட STF என்னும் இலங்கை போலீசாரின் விசேட பிரிவினரின் முதலாவது அணி, இவர்கள் இரண்டாவது அணிக்கு பயிட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கிழக்கு இலங்கையின் றால் பண்ணை ஒன்றினுள் புகுந்து, 85 பேரை சுட்டுக் கொண்டிருந்தது. இந்த றால் பண்ணை அமேரிக்க நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. இது வெளிநாடு ஒன்றில் நடந்த, பிரித்தானிய நிறுவனம் சம்பந்தப்பட்டு, மறக்கடிக்கப்படட ஒரு யுத்த குற்ற சம்பவம் என லண்டனில் உள்ள, தமிழர் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய வெளிவிவகார அலுவலத்துக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழர் போராட்டம் என்பது அனைத்துத் தமிழர்களிற்காகவும் தமிழர் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்றது. பங்களிப்புச் செய்தோர், செய்யாதோர் முதலிய பிரிவினை வாதங்களிற்கு அப்பாற் பட்டு தமிழ் இன பிணைப்பால் அனைத்துத் தமிழர்களும் பிணைக்கப்பட்டு அனைத்துத் தமிழ் உள்ளங்களினதும் சுபீட்சத்திற்காகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எந்த ஒரு பங்களிப்புத் தானும் எப்போதுமே செய்திராத ஒரு தமிழ் உறவு கூட தமிழ் எதிரியினால் உயிர் குடிக்கப்படும் போது, தமிழ் இன பிணைப்பால் அனைவரும் துன்பப்படுகின்றோம் (கவனிக்கவும்: துரோகிகள் என்பவர்கள் வேறு. ஆவர்கள் பங்களிப்புச் செய்யாதவர் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள். ஏனெனில் துரொகிகள் தேச விடுதலைக்கு எதிராக உழைக்கிறார்கள். அவர்கள் சும்மா இருக்கவில்லை).. எமது…
-
- 3 replies
- 1.1k views
-
-
Oct 13, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பத…
-
- 2 replies
- 1.1k views
-
-
Merci la France நன்றி பிரான்ஸ் இந்த MOBILE FILM குறும்படத்துக்கு உங்கள் ஆதரவுகளையும் கருத்துங்களையும் கொடுக்கவும் http://www.dailymotion.com/video/xgj934_merci-la-france-mobile-film-festival-2011_shortfilms இந்த இணையத்தில் அவர்களுக்காக vote போடுங்கள் அவர்களை வெற்றிஅடையசெய்யுங்கள். நன்றி நண்பர்களே http://dai.ly/h5QCHF
-
- 3 replies
- 1.1k views
-
-
கன்பராவில் 5ம் திகதி பாரளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா தூதரகங்களுக்கு பேரணி மகஜர் நாளை சிட்னியில் நடைபெறும் பேரணி விபரத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=51524
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று யேர்மனியின் düsseldorf நகரில் முன்னறிவிக்கப்படாத திடீர் போராட்டம் நடைபெறுகிறது. யேர்மனி வாழ் தமிழ் இளைஞர்களால் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. DÜSSELDORF நகருக்கு கிட்ட உள்ள நகரங்களில் உள்ள தமிழர்கள் அங்கு ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இப்போது DÜSSELDORF நகரை அண்டிய பகுதிகளில் பாடசாலை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காலவரையற்ற இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திட்டமிட்டபடி 9ம் திகதி düsseldorf நகரில் மாபெரும் போராட்டம் நடக்கும்.
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தின் fபெட்னா நிகழ்வானது இம் முறை சன் ஜோசே, கலிபோர்னியாவில் எதிர்வரும் ஜூலை 2- 5.2015ல் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்துடன் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து வழங்குகின்றனர். நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவர்கள்,முன்பதிவு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை போன்ற தொடர்புகளுக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு மூன்று நாள் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வு ஆகையால் அனைவரையும் வருக வருக வென அழைகின்றனர். வட அமெரிக்கத்தமிழ் சங்கத்தினர் http://www.fetna2015.org/#tamilvizha ( விபரங்களுக்கு) http://fetna.org/inde…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 2.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. நன்றி www.Tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...4&Itemid=68
-
- 1 reply
- 1.1k views
-
-
Beefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய் இறைச்சியை வாங்கி இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான். Steakக்குக்கு Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wineஐ வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான். அரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன். கிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வ…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
பிரிட்டனின் தலைவலி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதும், வந்த முக்கியமான தலைவலிகளில் ஒன்றாக இப்போது, பிரான்ஸ் நாட்டில் இருந்து, காற்று அடைத்த டிங்கி ரப்பர் படகுகளில் கிளம்பி வரும் அகதிகள். முன்னர் தி யங்கில் என்று, பிரான்ஸின் துறைமுகப்பகுதியான காலாயிஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய முகாம் ஒன்று இருந்தது. இது அரசாங்கத்தினாலோ, அல்லது அமைப்புகளினாலோ நடாத்தப்பட்டது அல்ல. மாறாக, அகதிகள் ஒன்றாக ஒரு இடத்தினை பிடித்து குடி இருந்தார்கள், அங்கே. இங்கிருந்த படியே, பிரிட்டனின் டோவர் பகுதிக்கு செல்ல, ferry ஏற வரும் வண்டிகளில், திருட்டுத்தனமாக ஏறி, பிரிட்டனினுள் வருவதே அவர்கள் நோக்கம். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருந்த காரணத்தி…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்ற தமிழ் பெண்ணின் சாதனை! இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார். பெர்கன் செஞ்சி…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதி ஒருவர் கனடாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இறந்து உள்ளார். சதாயினி விஜயகுமார் – வயது 17 என்பவரே மார்க்ஹம் நகரத்தில் இருந்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது எதிர்பார்த்து இராத விதமாக இறக்க நேர்ந்தது. காட்டில் இவர்கள் இறைச்சியை நெருப்பில் வாட்டி உண்டனர். இவரே இறைச்சியை நெருப்பில் வாட்டி, தயார் செய்து, ஏனையோருக்கு உண்ண கொடுத்து உள்ளார். இதற்கு பிற்பாடு இவர் உண்ண தொடங்கினார். இறைச்சியோடு இருந்த எலும்பு இவரது மூச்சுக் குழாயில் சிக்கியது. கூட சென்று இருந்தவர்கள் இவரை காப்பாற்ற பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர். இவர்கள் வந்திருந்த இடம் காட்டுப் பகுதி என்பதால…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
காக்க காக்க கமரோன் கவிழ்க்க : ரதன் “Our lives, our homes, our liberties each day are made less secure because of unrestrained and unpunished police brutality.” —National Negro Congress, Petition Against Police Brutality, 1938 சில வாரங்களுக்கு முன்னர் பாரிசின் மெட்ரோ நிலையத்தில் நானும் எனது நண்பரும் நுழைவாயிலில் நின்ற போது, அமெரிக்காவைச் சேர்ந்த சில வெள்ளை நிற மாணவர்களும், ஒரு 35 வயது மதிக்க ஒருவரும் நுழைவாயில் உள்ளே செல்லும் கதவருகில் நின்று கொண்டிருந்தனர். ஒருவரிடம் நுழைவுச் சீட்டு இருந்தது. மற்றவர்களிடம் இல்லை. ஒவ்வொருவராக நுழைவுச் சீட்டை உள்ளே தள்ளும் போது கதவு திறக்கும். 35 வயது மிக்க வெள்ளை இனத்தவர் திறந்த கதவை இழுத்துப் பிடிக்க அனைவரும் நுழைவுச் சீட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையின் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி! லண்டன் மாநகரின் புகழ்மிக்க வில்லியம்சன் கலைக்கூடத்தில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு தனி ஆற்றுகையானது இலங்கையின் சிறுபான்மையோருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் முகமாக ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் பாடத்தில் சிறப்புப் பட்டதாரியான இவர். பல்கலைக்கழக காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் தனியாகவும் குழுவாகவும் திறந்த வெளிகளிலும் கண்காட்சி கூடங்களிலும் தனது படைப்பாக்கங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்! அறிமுகம்: அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நேற்று தாயக மக்களின் அவலங்களை வெளிஉலகிற்கு எடுத்துச்சொல்லி சர்வதேசத்திடம் நீதியும், உதவியும் கேட்கும் மக்கள் போராட்டம் ஒன்று கனடாவில் வெற்றிகரமாக நிகழ்ந்து உள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபோது தோன்றிய ஓர் ஆதங்கத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். ஆதங்கம்: உங்களிடம் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்; எனது ஆதங்கம் மாவீரர் தினத்தை வெளிநாடுகளில் நாங்கள் ஏன் ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக செய்யக்கூடாது என்பதுதான்! அதாவது, நேற்று நடைபெற்ற அதே மனிதச்சங்கிலி முறையில் தாயகத்தில் மக்களின் அவலங்களை ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
உண்மையை இங்கே எடுத்து சொல்லுங்கள் Thousands flee across lagoon 'under fire from Tamil Tigers' in Sri Lanka http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6288043.ece
-
- 0 replies
- 1.1k views
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சித்திரம் வரைதலில் ஆர்வம் கொண்ட சாருஜா, தனது எட்டாவது வயதில் பாடசாலையில் நடைபெற்ற, புதிய புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வரையும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து Merton School of Art Competition எனும் பெயரில் நடைபெற்ற ஒரு சித்திரப் போட்டியில் Merton Boroug…
-
- 14 replies
- 1.1k views
-
-
நேரம் மாற்றி விட்டீர்களா..... நேற்று நள்ளிரவு ஐரோப்பா, கோடைகாலத்தை வரவேற்க தயாராகி விட்டது.அதற்கு முன்னோடியாக... நேரம் மாற்றப் பட்டுள்ளது. உங்களது மணிக்கூட்டின் முள்ளை, ஒரு மணித்தியாலம் முன்னே... அரக்கி வையுங்கள்.
-
- 6 replies
- 1.1k views
-