நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
ஊழல், உளவு, அரசியல் சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன. தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் வ…
-
- 2 replies
- 927 views
- 1 follower
-
-
தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான், அகிலன் நினைவு விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருகிறார். தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய இதழாக விளங்கிய ‘சொல் புதிது’ சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இவருடைய ‘ரப்பர்’, ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘ஏழாம் உலகம்’, ‘கொற்றவை’, ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’, ‘கன்னியாகுமரி’ போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோயிலில் வசித்து வரும் ஜெயமோகன், தொலைபேசித் துறையில் பணியாற்றி வருகிறார். ‘கஸ்தூரிமான்’, ‘நான் கடவுள்…
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
அழைத்தார் பிரபாகரன் ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ…
-
- 2 replies
- 2.6k views
-
-
வாசுதேவனின் தொலைவில் கவிதை நூலுக்கு விருது கருத்துக்களக் கவிஞரும் பிரான்சில் வசித்து வருபவருமான வாசுதேவன் அண்ணாவின் "தொலைவில்" என்ற கவிதை நூலுக்கு விருது கிடைத்துள்ளது. யாழ் இணையம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறோம்.
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம் தமிழ் திரையுலகினர் ஈழத்திற்காக ஆவேசமாக, ஆத்திரமாக, வேதனையாக தங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப்பதிவுகள் ‘ஈழம்-மௌனத்தின் வலி’என்று தனிப்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், நடிகர் சூர்யா, நடிகர் பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் பாலா,அமீர், சேரன், லிங்குசாமி, மிஸ்கின்,ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜிசக்திவேல், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான்,இன்குலாப், பா.விஜய்.தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா முதலானோர் தங்களது ஈழ உணர்வுகளை பதிவு செய்துள்ளனர். நேற்று சென்னையில் நடந்த இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் சூர்யா, பிரக…
-
- 2 replies
- 1k views
-
-
90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன. அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன. ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏ…
-
- 2 replies
- 561 views
-
-
சென்னை புத்தக கண்காட்சியில் தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ நாவல். தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” நாவல் இரண்டாம் பதிப்பு சென்னை புத்தக கண்காட்சியில் சிந்தன் புக்ஸ் காட்சியறையில் கிடைக்கின்றது. கடந்த கார்த்திகை 23ம் திகதி கிளிநொச்சி பரந்தனில் முதலாவதாக “உயிர்வாசம்” வெளிவந்தது. சமகாலத்தில் இரண்டாவது பதிப்பு சென்னையில் புதிய அட்டை வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் ஆடுகளம் திரைப்பட உதவி இயக்குனர் ஹஸீன் ஆகியோர் பிரதிகளை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி சென்னையில் கண்காட்சி வளாகத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது.. ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
போக முடியாமல் இருக்கு ,அங்கு வேறு ஒரு விடயமும் இருக்கு என்று கேள்வி .
-
- 2 replies
- 932 views
-
-
பார்த்திபனின் 'கதை' இளங்கோ - டிசெ 1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். 'கதை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் நண்பர்கள் தொகுத்திருக்கின்றனர். ஒருவகையில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது போலத் தோன்றும். பார்த்திபன் ஒருகாலத்தில் நிறையவும், நிறைவாகவும் எழுதி, பின்னோர் பொழுதில் எப்போதாவது ஒரு கதை என்கின்ற அளவிற்கு தன்னை ஒதுக்கியும்கொண்டவர்.எழுதப்பட்ட காலவரிசைப்படி கதைகள் தொகுக்கப்பட்டது, ஒரு தொகுப்பிற்கு பலமா பலவீனமா என்பது ஒருபுற…
-
- 2 replies
- 2k views
-
-
தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் இரண்டாவது நாவல் பயங்கரவாதி. தமிழ்நாட்டில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் இந் நூலை வெளியிட்டுள்ளது. இன்று கிளிநொச்சியில் 3மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார். அத்துடன் முன்னாள் …
-
- 2 replies
- 805 views
-
-
நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவுடன் விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலாவின் தொகுப்பான ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கயிலாசபிள்ளை தலைமை தாங்கினார். மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர் க. ஸ்ரீபவன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார். அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், இம்மாமன்றத்தின் பிரதித் தலைவர் மு. கதிர்காமநாதன் மற்றும் அங்கத்தவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்காக சக…
-
- 2 replies
- 2.3k views
-
-
உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு -அ.நிக்ஸன்- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A.Promised Land) (வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். இந்நூல் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசி நகரில் வெளியிடப்படவுள்ளது. 17ஆம் திகதி ஒபாமாவின் 58ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாள் அன்று மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொ…
-
- 2 replies
- 725 views
-
-
நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்த துடியான இளம்பெண் எனது ஹாங்காங் அடையாள அட்டையை வாங்கிப் பரிசோதித்தார். “இந்தப் பகுதிக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா? முகவரியையும் மாற்றிவிடலாமே” என்றார். நான் சொல்லச்சொல்ல முகவரியைக் கணினியில் உள்ளிட்டார். தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் ம…
-
- 1 reply
- 529 views
-
-
-
- 1 reply
- 607 views
-
-
நந்தி கடல் பேசுகிறது நூல் அறிமுக விழா.
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய " இலங்கை அரசியல் யாப்பு" (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. கிழக்கு லண்டன் - ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணி வரை இடம்பெற்றது. தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழ…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
“கள்ளத்தோணி” மனம் பெரும் சுமையாகி கனக்கிறது! – தமிழ்க்கவி கள்ளத்தோணி’ ‘தோட்டக்காட்டார்’ ‘புளிச்சக்கீரை’ ‘கொண்டைகட்டி’ இதெல்லாம் நாங்கள் எம்முடன் பாடசாலையில் படிக்கும் இந்திய வம்சாவழித்தமிழ் சக மாணவர்களை விளிக்கும் சொற்கள். அதன் அர்த்தம் எமக்கு தெரியாவிட்டாலும் எமது பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து பெற்றவைதான் அந்தச் சொற்கள். பிள்ளைகள் பிறந்தால் அவர்களது தலைமுடியை திருப்பதிக்கோ சிறீரங்கத்துக்கோ நேர்த்தி செய்து வைப்பார்கள். பெண்பிள்ளையானால் போச்சு. ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு அந்த முடியை ஒரடி ஒன்றரையடி நீளத்தில் பின்னி ரிபண் வைத்துக்கட்டி பாடசாலைக்கு விடுவார்கள். ஆறாம் ஆண்டு படிக்கும் பையன் பின்னலுடன் வருவான். அவனை நண்பர்கள் சக மாணவர்கள் கொண்டைகட்டி என்பார்கள். அப்படிய…
-
- 1 reply
- 818 views
-
-
புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024 அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்…
-
- 1 reply
- 327 views
-
-
கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் புகழ்பெற்ற இரண்டு நூல்கள் தற்போது லண்டனில் பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம். 2009 ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான அமுதன் அடிகள் விருதை தஞ்சாவூரில் பெற்ற் கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற நாவலும், ஒருபேப்பரில் அவர் சுவைபட தொடராக எழுதிய "கடந்தது நடந்தது" கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த "நேற்றுப்போல இருக்கிறது" என்ற கட்டுரைத்தொகுதியுமே மேற்குறித்த நூல்களாகும். யாழ்களத்தில் இரண்டு நூல்களைப்பற்றிய கருத்துக்கள் நிறையவே பரிமாறப்பட்டது யாழ்கள் அங்கத்தவர்களுக்கு ஞாபகமிருக்கும். லண்டனில் East Ham பகுதியில் உள்ள பூபாலசிஙகம் புத்தகசாலயில் அவை கிடைக்கப்பெறும் என்று அறியத்தந்துள்ளார்கள். இங்க…
-
- 1 reply
- 650 views
-
-
நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல் - எஸ்.வி.வேணுகோபாலன் மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க? மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு. மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும…
-
- 1 reply
- 849 views
-
-
விவசாயி சஞ்சிகை வெளியீடு – பத்திரிகை செய்திக்குறிப்பு இயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய “விவசாயி” எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் சஞ்சிகை ஆசிரியர் சி.அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது. ‘நஞ்சில்லா உணவு நாளைய சந்ததிக்கு’ எனும் மகுடவாக்கியத்துடன் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி மற்றும் உள்ளூர் உற்பத்திகள் ஆகியவற்றுடன் தமிழரின் மரபுசார் வாழ்க்கைமுறை தொடர்பான விவசாய விற்பனர்கள், சாதாரண விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆக்கங்களுடன் சஞ்சிகையாக மாதாந்தம் வெளிவர…
-
- 1 reply
- 979 views
-
-
ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன் முழுமையான நாவல் வாசிப்பென்பது சமநேரத்தில் பல்வேறு அடுக்குகளிலான சிந்தனையுடன் அந்நாவல் சுட்டும் புனைவுலகினுள் பயணம் செய்வதாகும். தொடர்பாடல் எனும் வகையில் வாசகனோடு கொள்ளும் உறவில் நாவலின் சொல்முறை இணக்கமாக இருக்கிறதா எனக் காண்பது ஒரு அணுகுமுறை. வட்டார வழக்கு நாவல்களில் பின்குறிப்பாகச் சொற்பட்டியலில் வட்டார வழக்குகளுக்கு விளக்கம் தராதுவிட்டால் நாவலின் சொல்முறையில் முழுமையாகத் தோய்வது பல சமயங்களில் இயலாதுபோய்விடுகிறது. மாறாக, கதை சொல்லியின் விவரணங்களில் தமிழகம் ஈழம் புகலிடம் என அனைத்துத் தமிழருக்குமான மொழியைக் கண்டடைந்து, பாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலில் குறிப்பிட்ட மதம் மற்றும் வட்டார மாந்தர்களின் வழக்கு மொழிய…
-
- 1 reply
- 948 views
-
-
பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின் கூட்டுச்சதியோடு சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பானது ஆழ்ந்த வேதனையையும் உளச்சோர்வையும் தந்து படுகுழிக்குள் தள்ளியது. “நாம் தோற்றுப்போய்விட்டோம்” என்ற அவல மனநிலையுடன் தமிழர்கள் பதினொரு ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இன்னமும் அப்படியேதான் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் ” நாம் தோற்…
-
- 1 reply
- 2.6k views
-
-
http://youtu.be/iE5rhImQRLM
-
- 1 reply
- 691 views
-