மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
தாத்தா ஒருவர் மும்முரமாக அன்றைய செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அவரின் சிறுவயது பேத்தி அவரிடம் அவ்வப்பொழுது தொந்திரவு செய்து செய்திதாளில் கவனம் செலுத்த இயலாமல் நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளின் தொந்திரவிலிருந்து விடுபட, தாத்தா ஒரு காரியம் செய்தார். செய்தித்தாளின் ஒரு பகுதியில் வெளியாகியிருந்த உலக வரைபடத்தை சிறுதுண்டுகளாகக் கிழித்து அவளிடம் கொடுத்து, " நீ உன் அறைக்குச் சென்று இதை மறுமடியும் ஒன்றுசேர்த்து சரியான வரைபடமாகக் கொண்டு வாம்மா.." என அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்தவர், 'ம்..யப்பாடி, இனி நிம்மதியாக தொந்திரவு இல்லாமல் செய்த்திதாளில் கவனம் செலுத்தலாம்...முழு உலக வரைபடத்தையும் ஒன்று சேர்ப்பதற்கு எப்படியும் ஒருநாள் முழுவதும் அவளுக்கு தேவைப்படும்' என எண்…
-
- 6 replies
- 1.4k views
-
-
நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது நாம் செய்யும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீதை குடிகாரி என்று ராமனே சொல்லி இருக்கிறான் (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (1)) ராமனின் சிறப்பியல்பாகச் சொல்லப்படும் முக்கிய விஷயமே, 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடாத யோக்கியாம்சம்' என்பார்கள். அவன், ஒரே மாதான சீதையையாவது சிந்தையால் தொட்டானா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கான ஆதாரங்களாக நான் வால்மீகிக்கெல்லாம் போகப்போவதில்லை. கம்ப ராமாயணத்திலிருந்து தான் எடுத்து வைக்கப் போகிறேன். இவற்றைப் படித்த பிறகு நம் பெண்கள் தமது ராம பக்தியைத் தொடரட்டும். "நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி அறுசுவையுள்ள உணவுகளை விருப்பமுடன் உண்டு நெடுங்காலம் நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய். உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை.அந்த அச்சமே இல…
-
- 10 replies
- 9.5k views
-
-
இயேசு சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர் பெற்றெழுந்த நிகழ்வை நினைவு கூர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையும், பிற கிறிஸ்துவ சபைகளும் ஆண்டு தோறும் சிறப்பிக்கும் கொண்டாடப்படும் ஆகும். சனி மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வரும் நாள் ஈஸ்டர் ஞாயிற்றிக்கிழமையின் தொடக்கம். மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கும் பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயித்தெழுதலாலும் வென்று மனித குலத்துக்கு புது வாழ்வு அளித்து அவர்கள் நிறவான பேரின்பம் அடைய வானக வழியை இயேசு திறந்தார் என கிறிஸ்துவர்கள் நம்புவதாய் கிறிஸ்துவ வழிபாட்டு ஆண்டின் மய்யமாக உள்ளது. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின்படி கி.பி.27-33-இல் ச…
-
- 0 replies
- 462 views
-
-
-
விஜயதசமியை முன்னிட்டு இணுவைக்கந்தனில் இடம்பெற்ற மானம்பூ திருவிழா
-
- 0 replies
- 362 views
-
-
திருவாசகம் காட்டும் முக்திநெறி எஸ்.கருணானந்தராஜா திருவாசகம் பக்திச் சுவையைப் பிழிந்து கொடுக்கும் திவ்யநூல். திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே! என்கிறார் வள்ளலார் பெருமான். கறந்த பால்கன்னலோடு நெய்கலந்தாற்போல சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் பெருமானாக இறைவனைத் தன் உள்ளத்தே கண்டு இன்புறும் மணிவாசகரின் அத்வைத அனுபவக் கருத்துக்கள் நிறைந்துள்ளதால்> இறைவன் நமக்கு அண்மையிலும் அண்மையானவன் என்னும் நம்பி;கையை திருவாசகம் படிப்போர் உணர்கின்றனர…
-
- 0 replies
- 3.2k views
-
-
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1 அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி? எஸ்.எல்.வி. மூர்த்தி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன? …
-
- 50 replies
- 46.8k views
-
-
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மதம் மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்களில் ஆங்காங்கே மதம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். லெனின் மதம் பற்றி அதிகமாகப் பேசியும், எழுதியும் இருப்பதால் ‘மதத்தைப் பற்றி’ எனும் தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆனால், தந்தை பெரியார் மதம் குறித்து பல கட்டுரைகள் எழுதியும், பல மேடைகளில் பேசியும் உள்ளதால், அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெ…
-
- 1 reply
- 806 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று அமைகின்றது. நவமி 10 ஆம் திகதி முன்னிரவில் அற்றுப்போகின்றது. எனவே விரதம் 01 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். மறுநாள் விஜயதசமி மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது. பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு எப்படி நாட்களைப் பகுப்பது? நாட்களைப் பகுப்பது என்பது ஒரு கருத்தியல்தான். கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும்தான் செய்யப்படுகின்றது. ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூலநட்…
-
- 6 replies
- 879 views
-
-
அந்த வகுப்பு மாணவர்களிடையே ஒற்றுமையே இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியருக்கு ஒரு யோசனை வந்தது. மாணவர்களை அழைத்தார். எல்லோரிடமும் ஒரு வெற்றுத்தாள் கொடுத்தார். "இந்த பேப்பரில், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் பெயர்களை எழுதி, அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த நல்ல விஷயத்தை எழுதிக் கொடுங்கள்" என்றார். மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும், ஆசிரியர் சொல்கிறாரே என்று எழுதிக் கொடுத்தார்கள். மறுநாள், வகுப்பில் மாணவர்கள் எழுதிக் கொடுத்த விஷயங்களை வாசித்தார், ஆசிரியர். ஒவ்வொரு மாணவனுக்கும் ஆச்சரியம்! "நம்மை பற்றி இவ்வளவு நல்லவிதமாக நினைத்திருக்கிறானே..." என்று ஒவ்வொரு மாணவனுக்கும் மற்ற மாணவனைப் பற்றி சந்தோஷம். ஒருவருக்கொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தூக்கில் தொங்கப் போகிறேன் என்று ஒருவன் போவோர் வருவோருக்கெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய குரலை சிலர் கேட்கிறார்கள் பலர் கேட்கமலே போகிறார்கள். சட்டென அவன் தூக்கில் தொங்குகிறான், அவ்வளவுதான் கவனிக்காமலேபோன அனைவரும் அவனைக்காப்பாற்ற ஓடி வருகிறார்கள். இங்கு வாய் மொழி பெறத்தவறிய கவனத்தை அவனுடைய செயல் சட்டெனக் கவர்ந்துவிட்டதை உணர முடியும். உடல் மொழியே 80 வீதமான கவனத்தைத் தொடுவதாக உளவியலாளர் கூறுகிறார்கள். சாகப்போன ஒரு செயலுக்கு இவ்வளவு தாக்கம் இருக்குமானால் வாழ்க்கை முழுவதும் விநாடிக்கு விநாடி நாம் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு குறுங்காலச் செயல், அந்த உயிர் தப்பினாலும், உயிர் போனாலும் அதன் மீதான கவனம் கு…
-
- 0 replies
- 831 views
-
-
-
- 0 replies
- 655 views
-
-
இந்து சமயத்திலை புராணக் கதைகளுக்கு குறைச்சலில்லை. அப்படித் தான் அண்டைக்கு ஒரு கதை கேட்டன். அது பிள்ளையாருக்கு எப்படி யானை முகம் வந்தது எண்டதைப் பற்றினது. அந்தக் கதையைக் கேக்க எனக்கு மகாவம்சத்திலை இருக்கிற கதைகள் தான் ஞாபகம் வந்தது? நான் அந்தக் கதையைச் சொல்ல முன்னம் ஆராவது இதைப் பற்றின கதை அல்லது கதையள் தெரிஞ்சால் வந்து சொல்லுங்கோ.....
-
- 2 replies
- 1.9k views
-
-
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின் மாற்றம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு…
-
- 0 replies
- 580 views
-
-
அமைதியை அடைவதற்கான அழைப்பு "அமைதி [சமாதானம்] , உங்கள் உள்ளேயே இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் ஒரு வசுவில் ஏறும்போதும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்களுடனேயே இருக்கிறது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியில் நீங்கள் இருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அந்த அமைதி உங்களுடன் வரமுடியாத எந்த இடத்திற்கும் உங்களால் போகமுடியாது. ஏனெனில் அது உங்கள் உள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது." …
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவாமி விவேகானந்தர்! உங்கள் பணி என்ன? ''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே! உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும். என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்! 'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு அன்பர் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது. பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர் எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார். யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார். "மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார் சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தோத் திருவிழா கடந்த பதின்மூன்று வருடங்களின் பின்னர் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்று காலை இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுகப் பிள்ளையார் உள்வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்று முற்பகல் 10 மணிக்கு சுவாமி அழகிய திருத்தேரில் ஆரோகணித்தார். தேரில் சுவாமி ஆரோகணித்ததும் தேரின் முன் தேங்காய்கள் உடைக்கப்பட்டு முற்பகல் 11 மணிக்க சுவாமி தேரில் வெளிவீதயுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது. அடியவர்கள் பக்திப்பரவசமாக தேரின்வடம் பற்றி இழுத்து வர அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். http://www.malarum.com/article/tam/2015/04/14/9607/13-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%…
-
- 3 replies
- 1.5k views
-
-
பெரியானைக்குட்டி சுவாமிகள் (இ. 1911) , கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர். இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர். இவரின் சீடர்களில் சித்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன், அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான். "நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ, அப்போதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து இந்த சுவற்றில் அடிக்கவும்" என்றான். இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 ஆணிகள் என படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன், அவனிடம் அடித்த ஆணிகளை மறுபடியும் பிடுங்கச் சொன்னான். இளைஞனும் அப்படியே செய்தான். அதைப் பார்த்த அவன் நண்பன், அவனிடம் சொன்னான். …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார். சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் த…
-
- 10 replies
- 9.6k views
-
-
கடும் குளிர் காலம். ராத்திரி நேரம். அந்த ஆசிரமத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தார் ஒரு துறவி. ‘இந்த நேரத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்களே’ என்று யோசித்தார் அவர். ‘நான் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இங்கேயே படுத்துத் தூங்கிவிடுவதுதான் நல்லது.’ ஆனால் அவரிடம் போர்வையோ, கம்பளியோ எதுவும் இல்லை. இருக்கிற ஒற்றை ஆடையை முடிந்தவரை நீட்டிச் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்க முயன்றார். சிறிது நேரத்தில் குளிர் மிகவும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கதகதப்புக்காக ஏங்கினார் அந்தத் துறவி. ‘எங்கேயாவது கொஞ்சம் மரக்கட்டைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். பற்றவைத்துக் குளிர் காயலாம்.’ தேடியபோது ஆசிரமத்துக்கு வெளியே சில புத்தர் சிலைகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் போட்டு அங்கிருந்…
-
- 3 replies
- 1.4k views
-
-
07 FEB, 2024 | 10:29 PM அமரர் என். சண்முகதாசனின் 31ஆவது நினைவு தினம் (பெப்ரவரி 08) (சமுத்திரன்) 'பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு 1939 - 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அதன் பின்னர், நான் அதனின்று வழுவவேயில்லை' இந்த வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சண்முகதாசன். தனது அரசியல் நினைவுகள் பற்றிய நூலை அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் 'Political Memoirs of an Unrepentant Communist' எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் 1989 ஜூலையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்க…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-