சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மனு எனும் தனி நபர் ஒருவரால் கிமு 200 தொடக்கம் கிமு 150 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட பிராமண சமூக நீதி நூல் என்று தற்காலத்தில் இனங்காட்டப்படும் நூல் செய்யுள் வடிவில் உள்ளது. அந்தச் செய்யுள்கள் சரிவர மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா அல்லது சரிவரப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனவா என்பது வினாக்குறியாகவே உள்ளது. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியவர்களிடையே குழப்பம் உள்ள போது.. இங்கு எப்படி இருக்கும்..! அதுமட்டுமன்றி மனு தான் வாழ்ந்த கால சமூகத்தின் அடிப்படையில் எழுதிய ஒரு சட்ட நூலே அது என்றும் சொல்லப்படுகிறது. அது இந்து மதக் கோட்பாடுகளைச் சொல்ல என்று வந்த நூல் அல்ல. செவி வழி வந்த வேதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகச் சிலர் சொல்கின்றனர். செவி வழி வரும் ஒரு செய்தி ஒரு மணித்திய…
-
- 2 replies
- 11k views
-
-
உங்களின் வாழ்க்கைச்செலவுகளை கட்டுபடுத்துவதற்கு நீங்கள் என்ன என்ன ஐடியா க்களை பயன்படுத்துகிறீர்கள் கீழே உள்ளவை fb எடுத்தவை உங்களின் முறையையும் சொல்லுங்க *********************************************************************************************************************************** மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல். வீடு நிறைய பொருட்களை சேர்த்துவைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும். நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிட்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்துபோய்விடுவார்கள் . …
-
- 2 replies
- 659 views
-
-
வேலை உங்களை எரிக்க அனுமதிக்காதீர்கள்! ஸ்ரீதர் சுப்ரமணியம் இங்கிலாந்தில் பணிபுரிந்தபோது எங்கள் டீமில் டிம்* என்று ஒருவர் இருந்தார். நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவர் திடீரென்று சொதப்ப ஆரம்பித்தார். யுஐ டிசைனராக இருந்த அவரிடம் இருந்து, டிசைன்கள் அரைகுறைத் தரத்துடன் வர ஆரம்பித்தன. ஏதாவது கமென்ட் சொன்னால் அதை வைத்து ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார். "என்னால் இவ்வளவுதான் முடியும் ஸ்ரீ" என்று சிடுசிடுப்பார். ரொம்ப அழுத்திக் கேட்டால், கோபக் கணையுடன் எதிர்மறை கமென்ட்டுகள் பாய்ந்து வரும். ஒருகட்டத்தில் இந்த ஆளை வேலையை விட்டுத் தூக்கிவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். டிம்மைப் பற்றி என் மேனேஜரிடம் சொன்னேன். முழுவதையும் நிதானமாகக் கேட்ட அவர், "டிம் ஒருவ…
-
- 2 replies
- 693 views
-
-
ஒரு சமூகப் பரிசோதனை. யாருக்கு கொடுக்கும் மனம் உள்ளது? இந்த வீடியோவைப் பாருங்கள்.
-
- 2 replies
- 798 views
-
-
முற்றவெளி மந்திரம் sudumanalFebruary 18, 2023 யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது. சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணு…
-
- 2 replies
- 917 views
- 1 follower
-
-
`யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO மா.அருந்ததி Hug நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'. நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம். தொடுதல் தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்கள…
-
- 2 replies
- 676 views
-
-
ஒவ்வெரு மனிதனின் வாழ்க்கையிலும் பயம் சில நேரங்களில் துரத்துகிறது எதனால் பயம் ஏற்படுகிறது ,ஏன் பயம் என்னை துரத்துகிறது ,பயம் என்பது சில நேரங்களில் என்னால் எதையும் சாதிக்க முடியாமல் ஆக்கிவிடுகிறதே ,என்று சில சூழ்நிலைகளில் நாம் சிந்திப்போம் ,இனி இந்த பயம் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் பயத்தின் விளிம்பிலிருந்து எப்படி நழுவுவது என்பதை பற்றிய ஆய்வு கட்டுரை .......................... எந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுகிறது இதனுடைய சூழ்நிலையும் மனதில் ஏற்படும் மாற்றங்களே .பொதுவாக நாம் எந்த காரியத்தில் பயப்படுகிறோமோ அதை பற்றி நம் எண்ணும் சில தவறுகள் ,நாம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது அந்த தீங்கு அவனை எட்டும் முன்னால் ஏற்படும் ஒரு பயம் ,நாம் நம்முடைய வேலையிலாக இரு…
-
- 2 replies
- 7.7k views
-
-
சைவ உணவு – பழக்கமா? பண்பாடா? மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன. பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல …
-
- 2 replies
- 1.2k views
-
-
இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்? யாழினி இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான். அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெயரும் ஆண் அல்லது பெண்ணும் எனக்கு ஒரு சந்தேகம் இங்கு மட்டுமல்ல பல இணையத்தளங்களிலும் கருத்துக்களங்களில் எழுதுபவர்கள் ஆண்கள் பெண் பெயருடனும் பெண்கள் ஆண் பெயருடனும் தம்மை பதிந்துவிட்டு எழுதுகின்றார்கள். நாம் வேறு எங்கும் போகவேண்டியதில்லை யாழிலேயே அது தற்போது அதிகரித்துவருகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆளையாள் தேடுவதையும் தனி மடல் போடும்படி கேட்பதையும் தற்போது கூடுதலாக பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை ஆண் பெண் இருபாலாருக்கும் மனதளவிலும், எழுத்தளவிலும், ஏன் சிந்திக்கும் அளவிலும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக (ரதி மன்னிப்பீர்களாக) சாதாரணமாக ரதி படுக்கத்தான் கூப்பிடுகின்றேன் என்று எழுதுவார். என்னைப்பொறுத்தவரை ஒரு பெண் இப்படி …
-
- 2 replies
- 1.7k views
-
-
வாசிப்பை நேசி இன்றைய சிறார்களிடையே வாசிப்புப்பழக்கம் அருகி வருகின்றது. இளமையில் கையாளும் வாசிப்புப்பழக்கமே கல்விக்கு அடித்தளம் என்பதை சிறார்களுக்கு உணர்த்தி, வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பு என்பது மெளனமான முறையில் நிகழ்கின்ற ஓர் உரையாடல் போன்றது. வாசிப்பானது பொருள் உணர்ந்து, ஆழமாக, நிதானமாக, பரந்து பட்டு நேசித்த நூல்களை வாசிக்க வேண்டும். அப்போது தான் அவை மனதில் ஆழமாகப்பதியும். வாசிப்பில் ஈடுபடும்போது மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய நூல்களை நேசித்து வாசியுங்கள் பயன் பெறுவீர். தற்போதைய சமூகம் அறிவு மையச் சமூகமாகும், சவால்கள் நிறைந்த சமூகமாகும். இவற்றுக்கு ஈடுகொடுக்க கல்வி மட்டும் போதாது. வாசிப்பின் மூலம் பெற்ற அற…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகனின் மனைவியை வீட்டில் வைத்து கத்தியால் குத்தியும்,வெட்டியும் கொன்றனர் என்கிற சந்தேகத்தில் புத்தளம்-கந்தயாய பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதிகள் புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்ரீமதி அனுராதிகா (வயது 29) என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். சம்பவம் இடம்பெற்றபோது அனுராதிகாவின் கணவன் வீட்டில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இப்படுகொலைக்கு குடும்பப் பிரச்சினையே காரணம் என்று பொலிஸார் நம்புகின்றனர் http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10755:2010-09-21-13-56-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410.
-
- 2 replies
- 1k views
-
-
PiraSath முதல்,இறுதிப் பாக்கங்கள் சிதைந்தும், நடுபக்கம் நைந்தும் முண்டமான ரானி காமிக்ஸை ஒரே மூச்சில் மின்னல் வேகத்தில் படித்து, அதன் முடிவு தெரியமல் மூன்று நாள் தூங்கமலும், முப்பது நாட்கள் மண்டையோட்டுக் குகையில் குள்ளர்களோடும் , பல பின்நேரங்களை ரிஷியுடன் மாநகர நூலகத்தில் பழைய புத்தக இடுக்குகளில் தொலைந்த பாக்கங்களை தேடிய அலைந்ததும், அங்கே மேலும் முண்டமான பல புத்தகங்களை தொல்பொருள் ஆய்வாளனின் பெருமிதத்துடன் மீட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது.அப்பு ஆசையாக வளர்த்த கருப்பு நாய் மில்லர் - டெவில் ஆனதும்,வீட்டுக் கொல்லையில் வாழ்ந்து மடிந்த அப்பாவின் காளைமாடு மாயாவியின் குதிரையாகியதும்,சூடடித்து வெறுங்காணியில் குவித்திருந்த வைக்கோல் மண்டையோட்டு குகையாகியதும் சாத்தியமற்றதக…
-
- 2 replies
- 2.9k views
-
-
அண்மையில் மலேசியாவில் சீமான் அவர்களது பேச்சைக்கேட்டபோது......... நீங்கள் என்ன மதமாகவும் இருக்கலாம் நீங்கள் என்ன சாதியாகவும் இருக்கலாம் அவற்றை பின்னால் வையுங்கள் முதலில் நாம் தமிழர்கள் அதன் கீழ் ஒன்றுபடுவோம் அதன் பின் உங்கள் மதம் சார்ந்து உங்கள் சாதி சார்ந்து சிந்திக்கலாம் என்று ஒரு வசனத்தை அவர் பாவித்தார். தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த மதத்தை சேர்ந்தவன் தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த சாதியைச்சேர்ந்தவன் என்றார். இதன்படி சீமான் தனது சீற்றத்தை குறைத்து அல்லது இவற்றோடு முட்டி வெல்வதைவிட அவற்றை அங்கீகரித்து செல்ல முற்படுகின்றாரா??? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நீங்களும் கேட்டிருப்பீர்கள் அல்லது கேளுங்கள். (6 இலிருந்து 8 நிம…
-
- 2 replies
- 803 views
-
-
ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! சு.சூர்யா கோமதிசெந்தில் குமார்.கோக.சுபகுணம் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம். புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவத…
-
- 2 replies
- 701 views
-
-
ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள் காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார். இதனை பார்த்தவுடன், இக்கால அழகை விவரிக்கும் தரமற்ற பத்திரிகையின் பக்கம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை மன்னித்துவிடலாம். கொழும்பின் உயர்தர தனியார் பள்ளிகளில் ஒன்றான புனித ஜோசப் கல்லூரியில் அனைவரும் பார்க்க, வைக்கப்பட்டிருந்த அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
எனது மகள் சோம. அழகு 2016ல் 'திண்ணை' இணைய வார இதழில் எழுதிய கட்டுரை . மேற்கூறிய சட்டம் தொடர்பான பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது : ரௌத்திரம் பழகுவேன் - சோம. அழகு உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம். இந்த …
-
- 2 replies
- 630 views
- 1 follower
-
-
'ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா... எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!’ இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை. 1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி... ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடி…
-
- 2 replies
- 1.2k views
-
-
திருமணங்களின் நீண்ட ஆயுளுக்கு, 'அன்பு' எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு நம்பிக்கையும் அவசியம். இந்த இரண்டில், எது இல்லாமல் போனாலும் அந்தத் தாம்பத்யம் தடுமாற ஆரம்பித்துவிடுகிறது. பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகர் ஒருவர், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியொன்றைப் பதிவு செய்திருக்கிறார். "எனக்குத் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என் மனைவிக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்பது ஒரு பரிசோதனையில் தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தனக்குக் குழந்தை பிறக்காது என்ற விஷயம், என் மனைவிக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். இப்போது நான் என்ன செய்வது..?" - இதுதான் அவரின் கேள்வி. …
-
- 2 replies
- 1.2k views
-
-
DEC 3, 2014 எல்லாமே எமோஷனல்தானா? சமீபத்தில் ஒரு சோஷியாலஜி பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெற்றவர். என்றாலும் இப்பொழுதும் தேசிய சட்டப்பள்ளியில் (National Law school)பணிபுரிகிறார். எப்பொழுதுமே நல்ல ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் அறிவின் ஜன்னல்களைத் திறந்துவிட்டுவிடுவார்கள். இவரும் அப்படித்தான். ‘ரிட்டையர்ட் ஆகிட்டீங்க இல்ல...எதுக்கு மறுபடியும் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் சில இடங்களைப் பிடிப்பவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும். ‘வர்ற பசங்க அறிவாளிகளா இருக்காங்க....அவங்ககிட்ட இருந்து நாமும் ஏதாச்சும் கத்துக்கலாம்’ என்றார். …
-
- 2 replies
- 1k views
-
-
ரயில் நகரத் தொடங்கியது. வவுனியா வரை ரயில்ப் பிரயாணம். பின்னர் பேரூந்தில் புகழ்பெற்ற A-9 வீதியூடாகப் பயணம். 2002 சமாதான உடன்படிக்கையை அடுத்து மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் சாத்தியமாகியிருந்த தரைவழிப்பயணப் பாதை அது. A-9 என்கிற யாழ்-கண்டி வீதி. தாண்டிக்குளம், வவுனியா. காலை மணி ஐந்தரை. யாழ் செல்லும் பேரூந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பயணிகள் தேநீர் அருந்திக்கொண்டும், சிலர் வீதியோரத்து கை பம்ப் அடிக்கும் குழாய்க் கிணற்றில் நீர் இறைத்து பல் விளக்கிக்கொண்டுமிருந்தார்கள். டீ குடித்துவிட்டு யன்னலோரம் என் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில்வே பாதையில் இரண்டு மயில்கள் சாவகாசமாக நடைபோட்டன. தூரத்தில் மய…
-
- 2 replies
- 1k views
-
-
இன்னொருவரின் கட்டுரையின் தலைப்பினை எழுதியவர் அனுமதி இன்றி மாற்றி எழுதுவது Ethic இல்லையாயினும், நல்லதொரு பதிவு இன்னும் சிலரை சென்றடையட்டும் என்று தலைப்பில் அடைப்புக் குறிக்குள் 'பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளிடம்' என்பதை சேர்த்துள்ளேன்.: நிழலி பேசுவதற்கு என்ன இருக்கிறது? வா.மணிகண்டன் http://www.nisaptham.com/ புத்தகக் கண்காட்சியில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் ஒரு கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்ற போது அவரிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. எதைக் கேட்பது? அவரிடம் ‘நல்லா இருக்கீங்களா?’ என்பதை விடவும் அபத்தமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தனது மகனின் விடுதலைக்காக தேய்ந்து கொண்டிருக…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள். படித்ததில் மனதில் பதிந்தது
-
- 2 replies
- 1k views
-
-
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம். அமெரிக்கா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பைக்கில் செல்லும்போது, அந்த இரவில், சுயநினைவின்றியும், ஆடைகள் பாதி அகற்றப்பட்டும் கிடந்த பெண்ணை, ஒருவன் பாலியல் தீண்டல் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அந்தப் பெண் மீட்கப்பட, தப்பி ஓட முயற்சித்த அந்த ஆண், 20 வயதான பிராக் ஆலன் டர்னர் என்று தெரியவருகிறது. வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. டர்னர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக சிறை சென்றவன். இந்நிலையில், 2016, ஜூன் 2ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பில், ‘கடுமையாக பாதிக்காத வண்ணம்’ டர்னருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை அளித்தார் நீதிபதி. ஆனால், அந்தத் துன்புறுத்தலால் தன் உடலும், மனமும் எவ்வளவு ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டது’ என்பதை மிகவும் உணர்வுப்பூர்…
-
- 2 replies
- 679 views
-
-
எஸ் வி வேணுகோபாலன் மொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது …
-
- 2 replies
- 1.5k views
-