சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
"மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழகம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும். வாலறிவன் யார்? அவன் நற்றா…
-
- 2 replies
- 1.7k views
-
-
மாவளி கண் பார் -------------------------- சொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை. நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக …
-
-
- 10 replies
- 586 views
- 1 follower
-
-
முதல் மழைத்துளி கிளர்த்தும் மண் வாசனையை நுகரும்போதும், பண்டிகை நாளொன்றின் விடியலின்போதும் ஊரின் நினைவுகள் எங்கு சென்றாலும் தொடர்கின்றன. எப்படியோ காற்சட்டைப் பையினுள் ஒட்டிக் கொண்டு வீடுவரும் கடற்கரை மணல் துகள்களைப் போல, எவ்வளவு முயன்றாலும் உதறமுடிவதில்லை. ஒருவகையில் ஊர் என்பது துண்டு துண்டான நினைவுகளாகவே இருக்கிறது. அது ஒரு கோவிலின் நினைவாகவோ, வீட்டின் நினைவாகவோ அல்லது ஒரு மரத்தின் நினைவாகவோகூட இருக்கலாம். எங்கள் வீட்டு முற்றத்தில் ஓர் 'விலாட்' மாமரம் நின்றிருந்தது. வளரிளம் பருவத்தில் நன்கு சடைத்திருந்தது. நான் பிறந்த அதே வருஷத்தில் நாட்டப்பட்ட மரம். மிக இனிப்பான பழங்கள். அந்த மண்ணுக்கேயுரிய பிரத்தியேக குணம். ஊரை விட்டு, எங்கெங்கெல்லாமோ சென்றபோதும் மாம்பழம் சாப்பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
வாழ்வின் மிக நீளமான ஆண்டு எது? அதை எப்படித் தீர்மானிப்பது? யோசித்துப் பார்த்தால் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய இடங்களை, மறக்கமுடியாத பயணங்களை மேற்கொண்ட ஆண்டு மிக நீளமானதாயிருக்கும். எனக்கு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மிக நீளமானதாயிருந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடமும்! தொண்ணூற்று ஐந்தாமாண்டில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதல் இரண்டு தவணைகள் மட்டுமே பாடசாலை நடைபெற்றது. அதில் நான்கு விடுமுறைகள் வேறு. ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கை தோற்றதும், இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை 'ரிவிரச' ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆவணி மாத பாடசாலை விடுமுறை அப்படியே விடுமுறையாகவே நீண்டது. அந்த முறை நல்லூர்த் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா உலக சுகாதாரமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தொற்றுநோயாகவும், உலகலாவிய பிரச்சனையாகவும் உள்ளது என கருத்துதெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் தமது நெருங்கிய partner-ஆல் உடல் ரீதியான மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற தகவலையும் தெரிவிக்கிறது. இதனை பலரும் பெண்வெறுப்பு என்றே பதிவிடுகிறார்கள். இந்த பெண்வெறுப்பு என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான மிசோஜினி (misogyny) என்ற சொல்லானது, கிரேக்க மொழியை தனது வேராக கொண்டுள்ளது. Misos – (hate) வெறுப்பு என்பதாகவும் Gyny – (woman) பெண் என்பதாகவும் கருதி பெண்வெறுப்பு என அர்த்தம் கொள்ளப்பட்டது. இந்த பெண்வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
உங்களின் வாழ்க்கைச்செலவுகளை கட்டுபடுத்துவதற்கு நீங்கள் என்ன என்ன ஐடியா க்களை பயன்படுத்துகிறீர்கள் கீழே உள்ளவை fb எடுத்தவை உங்களின் முறையையும் சொல்லுங்க *********************************************************************************************************************************** மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல். வீடு நிறைய பொருட்களை சேர்த்துவைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும். நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிட்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்துபோய்விடுவார்கள் . …
-
- 2 replies
- 660 views
-
-
மீ டூ: பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை! பல்லவி கோகோய் சமீப காலமாக மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துவருகிறது. இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் மீதும் மீ டூ புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரால் ஏற்பட்ட கொடூரமான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்திரிகையாளர் பல்லவி கோகோய். ஏசியன் ஏஜ் செய்திதாளில் எடிட்டர் இன் சீப் ஆக இருந்த எம்.ஜே.அக்பரை எனக்குத் தெரியும். அவர் சிறந்த பத்திரிகையாளர். அவரும், தன்னுடைய அதிகாரத்தை வைத்து என்னை இரையாக்கினர் என்கிறார் பல்லவி கோகோய். 23 ஆண்டுகளாக மூடிவைத்திருந்த வாழ்வின் மிக வலி மிகுந்த நினைவுகளை…
-
- 4 replies
- 1.7k views
-
-
எனக்கு மீசை இல்லை, முழச் சவரம் தான். உடலில் வளரும் மயிர்களை சேவ் பண்ணுகிறது சரியா, உடல் இதனால் வெப்பத்தை இழக்குறதா & உடல் கழிவுகளை இலகுவாக அகற்றுகிறதா சேவ் பண்ணுவதால். மருத்துவரீதியாக தகுந்த காரணங்கள் தரமுடியுமா? (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்) சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான். மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பள…
-
- 60 replies
- 15k views
-
-
சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும், உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள் துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். படத்தின் காப்புரிமைAFP யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார். "இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார். துனீசியாவி…
-
- 16 replies
- 2.3k views
-
-
பதினெட்டுக்குள்ளே 1 - மீறல்களும் உரிமைகளும்! | குழந்தைகள் மென்மையானவர்கள்... அவர்களை பூக்களைப் போல கையாள வேண்டும். | இணையத்தில் படித்ததாக நண்பர் ஒருவர் சொன்ன கதை இது. இரு ரயில் தண்டவாளங்கள் அருகருகே உள்ளன. ஒரு தண்டவாளத்தில் ரயில் எப்போதும் வராது. மற்றொன்றில் ரயில் வந்துகொண்டே இருக்கும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடுகிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரயில் வருகிறது. தூரத்தில் இருக்கும் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். அருகில் ட்ராக் மாற்றும் கருவி இருந்தால் யாரைக் காப்பாற்றுவீர்கள். இப்படி ஒரு கேள்வி ஒரு கூட்ட…
-
- 0 replies
- 615 views
-
-
முகத்துக்கு அல்ல, அகத்துக்கு தேவை 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' - டாக்டர் செல்வ சீத்தாராமன் Sponsored content ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் உடலில் எந்த உபாதை வந்தாலும் மருத்துவரை அணுகும் நாம், தலைமுடி மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு அழகு நிலையங்கள் நோக்கிச் செல்கிறோம். ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது தேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன்கள் செய்வதே சிறந்தது. 'ஏய் சொட்டை, ஹெல்மெட் மண்டை, வழுக்கப்போது பாத்து!' - தலைமுடி கொட்ட ஆரம்பித்தவுடன் நண்பர்கள் இப்படியெல்லாம் கேலி செய்யும்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் அந்த நொடி ரொம்ப கேஷுவலாக அதை எடுத்துக்கொள்ளலாம், ஏன் அவரே அதுகுறித்து சிரிக்கவும் செய்யலாம். 'வயசு ஆயிருச்ச…
-
- 0 replies
- 513 views
-
-
இனிய வணக்கங்கள், கடந்த சில நாட்களாய் இந்த முகநூல் பற்றியதோர் கருத்தாடலை செய்யவேண்டும் என்று நினைச்சு இருந்தன். இன்றுதான் சந்தர்ப்பம் கிடைச்சது. விசயத்துக்கு வருவோம். நான் நினைக்கின்றேன் சுமார் மூன்று அல்லது நான்கு வருசங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் முகநூலில் இணைவதற்கு தொடர்ச்சியாக மின்னஞ்சலில் எனக்கு அழைப்புக்கள் அனுப்பிக்கொண்டு இருந்தான். வழமையாகவே வலைத்தளங்களில் இணையுமாறு ஏதாவது புதுசுபுதுசாய் அனுப்பிக்கொண்டு இருப்பான். நான் இணைவதில்லை. ஆனால் இதில் என்னமோ அவனை திருப்திப்படுத்துவதற்காக இணைந்துகொண்டேன். இதில் ஒரு விசயம் சொல்லவேணும், பலர் பலவிதமான வலைத்தளங்களில் இணைவதற்கு தினமும் மின்னஞ்சலில் அழைப்புக்கள் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். மற்றவர்களின் மனம்…
-
- 20 replies
- 5.5k views
-
-
முகநூலும் பெண்களும் ஒரு நோக்கு- நிவேதா உதயராயன் பெண்கள் இன்றி இவ்வுலகில் எதும் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும் அன்றுதொட்டுப் பெண்கள் தெய்வங்களாக, மனவலிமை உடையவர்களாக, இளகிய மனம் கொண்டவர்களாக, குடும்பச் சுமைகளைத் தம் உடலாலும் மனதாலும் சுமப்பவர்களாக, உடல்வலிமை அற்றவர்களாக என பல அவதாரங்கள் கொண்டவர்களாக கடந்தகாலங்களில் கூறப்பட்டார்கள். அதன் பின்னர் பெண்ணியம், புரட்சி, சமவுரிமை என்றெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்ணின் வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்படலாயின. பொருளாதார வளர்ச்சியிலும் பெண்ணின் பங்கு சமமாகக் கணக்கிடப்பட்டு, பெண் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் முதன்மையடைந்து இன்று தன் சுய சம்பாத்தியத்தில் ஆண் சாராது வாழும் …
-
- 29 replies
- 3.7k views
-
-
நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா? தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது. பாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது. மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது: சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த …
-
- 0 replies
- 499 views
-
-
முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 04 நவம்பர் 2012 இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள் (social media networks) இருக்கின்றன. இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும் சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நின்று ஆராய வேண்டிய தேவ…
-
- 0 replies
- 869 views
-
-
View Postnunavilan, on Sep 5 2009, 12:25 PM, said: முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன். நுணாவிலான் யாழில் கவிதைகள் எழுதிய இலக்கியன் போல்தான் உள்ளது. ஒன்றைக் கவனித்தால் குழப்பம் தீர்ந்துவிடும். இந்த இலக்கியன் அண்மைக்கால ஈழத்துக்கவிதைகளைச் சேகரித்துப் போட்டுள்ளார். அதில் பலருடைய கவிதைகளை இணைத்துள்ளார். எல்லோருடைய பெயர்களையும் அறியாதவிடத்து மிகத் தெளிவாகத் தெரிந்தவர்களின் பெயரை இணைத்துள்ளார் மற்றப்படி அவர் இன்னொருவர் கவிதையை தனதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கவிதையை யாத்தவர் பெயரைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. மாற்றிப்பதிந்து சிக்கல்களைத் தோற்றுவித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டிருக்கலாம். ஒன்று மட்டும் உணர முடிகி…
-
- 7 replies
- 1.6k views
-
-
முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கென்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றைய விசேட தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த முட்டாள்கள் தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ் சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.” “அவர் என்ன சொன்னார்?” “அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதிய…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? [size=2] [/size][size=3] [size=4]ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு: 1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்ப…
-
- 0 replies
- 654 views
-
-
முதலாவது இரத்தப் போக்கு (மாதவிடாய்) கமலா வாசுகியுடன் செ.சுமித்ரா, மட்டக்களப்பு (‘தாய்வீடு’ (கனடா) மார்ச் 2016 ) மாதவிடாய் என்ற சொல் எப்படி உருவாகியது? என்ன விடாய் அது??? இதை உருவாக்கியவர்களது மாதவிடாய் பற்றிய புரிதல் என்ன???? அன்றிலிருந்து இன்று வரை மாதவிடாய் பற்றிய தமிழ்ச்சமூகத்தி;ன் விளக்கம் என்ன?ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் பெண்களுக்கு என்ன நடக்கின்றது, அவர்கள் என்ன உணர்கின்றார்கள் என்பதைப்பற்றிய சமூக விளக்கம் என்ன? மூன்று நாட்களோ, அதற்கு கூடுதலான நாட்களோ உடலின் ஒரு பகுதியிலிருந்து சூடான குருதி வெளியேறிக் கொண்டிருக்கும்;. அதனை “மறந்து” அத்தனை நாளாந்தக் கடமைகளையும்; இன்னோரன்ன பல காரியங்களையும் செய்து கொண்டிருக்கும் பெண்களது அந்த நாட்;களைப்ப…
-
- 3 replies
- 3k views
-
-
அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வருடம் காபொத சாதாரண பரீட்சைக்காக மாலையில், சனி ஞாயிறுகளில் எல்லாம் டியூசனுக்குப் நண்பிகள் சேர்ந்து போவோம். கொஞ்ச நாட்களாக புதிய முகமொன்று எங்களுக்குக் காவலுக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. ஆள் பார்க்க அழகாகவும் உயரமாகவும் இருந்தான். ஆனால் எதோ ஒரு குறை ஆளில் உள்ளதாக மட்டும் எனக்குப் பட்டதன்றி என்ன என்று விளங்கவில்லை. பதின்நான்கு வயது எல்லாவற்றையும் விளையாட்டாக எடுக்கும் வயது. எங்களில் ஒருத்தியை சைட் அடிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. ஆனால் யாரை என்று கொஞ்சநாள் புரியவில்லை.நான் அவனை மறித்துக் கேட்கட்டுமாடி என்றதற்கு இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். சரி என்ன நடக்கிறது என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம…
-
- 55 replies
- 4.4k views
-
-
எனக்கு முப்பது வயது முடியப்போகிறது. இது ஒரு சிக்கலா? எனக்கு ஒரு சிக்கலும் இல்லை. அனால் என் தாயாருக்கு தான் கவலை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை. காதலித்து பார்த்து, அந்த பெண்ணையே மணந்து கொள்கிற அளவுக்கு எனக்கு திறமை பத்தாது. வசதி, வாய்ப்பும் அமையவில்லை. அம்மா காண்பிக்கின்ற பெண்ணையே மணந்து கொள்வது என்று நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியாக முடிவு எடுத்தேன். வந்தது வினை. இதுவரை முப்பது பெண்களின் படங்களை காட்டிவிட்டார்கள். ஒன்று எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு பிடித்தால் அந்த பெண்ணிற்கு என்னை பிடிக்கவில்லை. ஜாதகம் (தமிழ் வார்த்தை என்ன?) சரியில்லை, பொருத்தமில்லை என்று ஏதோ கரணம் சொல்லி எதுவும் சரியாக அமையவில்லை. தாயாருக்கு கவலை அதிகமாகிப்போனது. யாரோ திருவிடந்தை கோவில…
-
- 0 replies
- 570 views
-
-
முதியவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? மதுரை மாநகராட்சிப் பூங்கா. ஒரு மூதாட்டியும் அவருடைய நடுத்தர வயது இளைய மகனும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சோகம். இருவரும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மனைவி சொல்கேட்டு அம்மாவை மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டில் விடுவதற்காக அவன் வந்திருந்தான். வந்த இடத்தில்தான், அண்ணன் கொடைக்கானலுக்குக் குடிபோய்விட்டது தெரிகிறது. பழைய வீட்டிலிருந்தவர் அண்ணனின் தொலைபேசி எண்ணைத் தருகிறார்.தம்பி மொபைல் போனில் பேச, அண்ணன்காரன், “இங்கேயெல்லாம் அம்மாவைக் கொண்டு வந்து விட்டுவிடாதே...” என்கிறான். அம்மா, போனை வாங்கி அவனிடம் பேச, “இந்தப் பக்கம் வரவே வராதே” என்கிறான். இப்போது இருவரு…
-
- 0 replies
- 918 views
-