சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
காதலுக்காக எத்தனையோ விடயங்கலை பலர் தியாகம் செய்வார்கள், ஆனால் எமது வாழ்வியல் முறையை மாற்றி நாம் யார் என்ற அடையாலத்தை இழந்து நாம் காதலித்து திருமணம் செய்ய வேண்டுமா? அதனால் வரும் பிரச்ச்கனைகளை எம்மால் எதிர் கொள்ள முடியும்மா? நான் குறிப்பிடப்போவது எமது வீட்டு அயலில் வசித்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், எனது நண்பியும் கூட, 2002- 2005 காலப்பகுதியில் அவர் யாழ்பாணத்தில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார், அங்கு தமிழ் நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த, கொஞம் அங்கு உயர்வ்குப்பினர் என் கருதப்ப்டும் பின்னனியைக் கொண்ட ஒருவரும் பணி புரிந்து வந்தார், இருவருக்கும் காதல் மலர்ந்து டிருமணம் செய்யும் தருவாயும் வந்தது ஆனால் காதலனின் குடும்பதிற்கு தமது மகன் தமது இனத்தில…
-
- 11 replies
- 1.6k views
-
-
வேண்டுதல்களும் வாழ்த்துகளும் ஒருவர் உடல் நலக்குறைவால் வருந்தும்போது அவர் நலம் பெற பிரார்த்திப்போம் அதேநேரம் பிரார்த்தனை மீது நம்பிக்கையற்றவர்கள் அல்லது கடவுள் நம்பிக்கையற்றவர்கள் நலம் பெற வாழ்த்துவார்கள் இது சரியா?? ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோது வாழ்த்துக்கள் மட்டும் எப்படி பலிக்கும் என்று எதிர்பார்த்து வாழ்த்தமுடியும்??? (உண்மையில் தெரிந்து கொள்ளவே கேட்கின்றேன்)
-
- 2 replies
- 1.3k views
-
-
http://youtu.be/hdWi9B3OyFA நாளுக்கு நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மகள்களின் பூப்படைதல் நிகழ்வை நாகரீகத்தின் உச்சமாக நடாத்திக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களை தினமும் அறிகிறோம். இந்த வீடியோ இணைப்பில் இன்னொரு புதுவகை விழா. ஒருகாலம் தேசத்தின் பாடல்களை பாடிய பாடகர் சாந்தன், பிறின்சி ரஞ்சித்குமார் போன்றோர் பாடலைப்பாட புதுவை அன்பன் பாடலொன்றை சடங்கிற்கு உரிய சிறுமிக்காக பாடியுள்ளார்கள். மிகவும் வருத்தம் தருகிறது இந்நிகழ்வு. பெண் பிள்ளைகள் துணிச்சலோடு சாதனைகள் படைக்கும் திறமையாளர்களாக வளர்ந்து வர வேண்டிய வளர்க்கப்பட வேண்டிய இக்காலத்தில் போகப்பொருளாகவே பெண்பிள்ளைகளை அவர்களது எண்ணங்களை சிதைக்கும் நிகழ்வாகவே இன்றைய கால சாமத்தியச் சடங்குகள் நடாத்தப்படுகிறது.…
-
- 49 replies
- 4.3k views
-
-
திருமணத்திற்கு முன்பு காதலித்துவிட்டு திருமணத்திற்கு பின் வேலை, படிப்பு என பிசியாகிவிடுவாதாலேயே பல்வேறு காதல் திருமணங்கள் தோற்றுப் போகின்றன. ஆயிரம் முறை ஐ லவ் யூ சொன்ன உதடுகள் வெறுப்பு உமிழும் போது மனதெல்லாம் ரணமாகிப் போகும். இதன் காரணமாகவே திருமண வாழ்க்கையே திசை மாறிப் போக வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்குப் பின்னரும் தம்பதியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மணவாழ்க்கையில் வசந்தம் வீச அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போய்விடக்கூடாது. வார்த்தையால் கூறுவதை விட உண்மையான அன்பை செயல்கள் மூலம் புரியவைக்க வேண்டும…
-
- 10 replies
- 1.2k views
-
-
பத்து திருமண பொருத்தம் 1.விட்டுகொடுக்கும் மனப்பான்மை, 2.சகிப்புத்தன்மை, 3.சொந்த பந்தம் மற்றும் பெரியவர்களை மதித்தல், 4.மனைவி சொல்வதை கணவன் கேட்டு நடத்தல், 5.கணவன் சொல்வதை மனைவி கேட்டு நடத்தல், 6.சீரான தாம்பத்ய வாழ்க்கை, 7.புத்திரபாக்கியம், 8.தாம்பத்ய உறவில் மனைவியினால் கணவனுக்கு கிடைக்கும் சுகம், 9.தாம்பத்ய உறவில் கணவனால் மனைவிக்கு கிடைக்கும் சுகம், 10.வருமானத்துக்குட்பட்டு செலவு செய்யும் இருவரின் மனப்பான்மை, ஆகிய இந்த பத்து பொருத்தங்களும் இருந்தால், ஜாதக பொருத்தமே தேவையில்லை திருமணம் செய்யலாம். http://eluthu.com/
-
- 3 replies
- 1.5k views
-
-
கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள் பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்து…
-
- 0 replies
- 925 views
-
-
இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். வேர் களை ( VER KALAI) மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு பெண்களின் விருப்பமின்றி உடலுறவு வைத்துக் கொள்ளும் Marital Rape குறித்து தற்போது குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இது இப்போது வரை ஒரு கண்டுகொள்ளப்படாத விஷயமாக இருக்கிறது. குறிப்பு: இந்த கட்டுரையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன. 34 வயதான சஃபா திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அ…
-
- 83 replies
- 4.8k views
-
-
கூச்சத்தை நீக்க சில வழிகள் பொதுவாக நம்மில் பலருக்கு முக்கியமான சந்திப்புகளின் போது புதிய நபர்களை அணுகுவதில் பிரச்னை எழுகிறது. இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக நேர்முகத்தேர்வின் போதும், வியாபார சந்திப்புகளின் போதும் கூச்சத்தால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனால் நமது வளர்ச்சி தடைபடுகிறது. புதிய நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் கூச்சத்தால் அசௌகரியமாக உணர்கிறோம். கூச்சத்தை போக்குவதற்கான சில வழிகளை நாம் இங்கு காண்போம். உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Nvdm7AGvOKU&feature=player_embedded
-
- 0 replies
- 840 views
-
-
கரும்பாலை ஏரியா குழந்தைகளை கரை சேர்க்கும் ‘ஸீட்’ அமைப்பு கார்த்திக் பாரதி ‘எங்களுக்கான அதிகபட்ச ஆசை எதுவும் கிடையாது. இயலாதவர்களுக்கு எங்களின் உதவி தேவைப்படும் வரை இந்த நிறுவனம் இருக்கும். அதன் பிறகு கலைத்து விடுவோம்’ என்கிறார் ‘ஸீட்’ (SEED) நிறுவனத்தின் கார்த்திக் பாரதி. நிறுவனம் சிறியதாக இருந்தாலும் இவர்களின் சேவை பெரியது. மதுரை கரும்பாலை ஏரியா என்பது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டு வேலையாட்கள் என உடல் உழைப் பாளிகளை உள்ளடக்கிய பகுதி. இங்கு வசிப்பவர்களின் குழந்தை களை பள்ளிக்கு படிக்க அனுப்பு வதே பெரிய காரியம் என்ற நிலையை மாற்றி, இப்போது இங்கே பிஹெச்.டி. மாணவர்கள் வரை உருவாகி இருக்கிறார்கள். இதற்கு மூலகாரணம் கார்த்திக் பாரதி. இவரு…
-
- 0 replies
- 694 views
-
-
மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” (வீடியோ இணைப்பு) மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை. ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம். தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம். யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், "Go to your room and think what you did..." என்பதில்லையே... செய்த பிழைக்…
-
- 0 replies
- 874 views
-
-
தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமிழ்க் கல்வி …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை! யாழன் ஆதி தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக…
-
- 0 replies
- 801 views
-
-
சமீபத்தில் "உங்கள் குழாயில்"(Youtube) தேடியபோது மனதை தொட்ட குறும்படம் இது.. ! ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? "கால்நடையா போகிறேன்.. கஞ்சன் கிட்டே கேட்கிறேன்.. உழைச்சு திங்க வயசில்லே.. உசிரை மாய்க்க மனசில்லே.. என்ன மட்டும் மறந்திட்டியே.. பிச்சைக்கார கடவுளே.." http://youtu.be/oPZTjdzS1-s
-
- 0 replies
- 714 views
-
-
தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள் ------------------------------------------------------------------ அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்: 1981 – பத்ம பூஷன் 1990 – பத்ம விபூஷன் 1997 – பாரத ரத்னா 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது 1998 – வீர் சவர்கார் விருது 2000 – ராமானுஜன் விருது 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் 2007 – கிங் சார்லஸ்-II பட்டம் 2008 – பொறியியல் டாக்டர் பட்டம் 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது 2009 – ஹூவர் மெடல் 2010 – பொறியியல் டாக்டர் பட்டம் 2012 – சட்டங்களின் டாக்டர் 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: அக்னி சிறகுகள் இந்தியா 2012 எழுச்சி தீபங்கள் அப்புறம் பிறந்தது …
-
- 0 replies
- 874 views
-
-
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையை…
-
- 38 replies
- 2.6k views
-
-
வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நதமனறததகக-மனனல-கததககதத-பண-உயரழபப/150-242545 நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம் கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய…
-
- 2 replies
- 594 views
-
-
வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா? துஷ்யந்தன் ஆண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை, தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே சொல்லும் ஒரு சில ஆண்கள் கூட அதற்க்கு முன்னால் வரும் தங்கள் பப்பி லவ்வை மறந்து கூட வெளியே சொல்வது இல்லை, வெளியே சொன்னால் எங்கே இது பிஞ்சிலேயே பழுத்தது என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தால். அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான். எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு காதல் வந்து இருக்கிறது, அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம், அவளை பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம், அவள் எனக்கு சொந்த மச்சாளும் கூட, நான் எங்கள்…
-
- 20 replies
- 18.2k views
- 1 follower
-
-
ஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்... ஆண், பெண் இருவருக்கும் உடல் அமைப்பில்தான் வித்தியாசம் உள்ளது. மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான், என்று நினைக்கிறார்கள். உண்மையில் இருபாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது. இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன, என்பதுதான் உளவியல் சொல்லும் உண்மை. பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
எதற்காக எங்கள் பெண்கள் கணவரை அப்பா என்று அழைக்கிறார்கள்!!!! திருமணமான பின் எங்கள் பெண்கள் கணவனை அப்பா என்று அழைப்பதன் அர்த்தம் தான் என்னவோ? காதலிக்கும் போது டாலிங் சுவிற்றி மை காட் அது இது எண்டு அழைப்பவர்கள் பின் ஏன் அதை மாற்றுகிறார்கள் வெள்ளைக்காரர்களும் இதை கேட்கிறார்கள்............ அதாவது உன் மனைவி எதற்காக உன்னை அப்பா என்று அழைக்கிறாள் என்று!!!!! உங்கள் வீட்டில் உங்கள் மனைவி உங்களை எப்படி அழைப்பாள்? அப்படி அப்பா என்று அழைப்பது முறையா? என்ர மனிசி என்னை அப்பா என்று அழைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது!!!! உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
-
- 18 replies
- 5.9k views
-
-
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! FB
-
- 23 replies
- 5.8k views
-
-
ஏழில் செவ்வாய் உள்ள ஆண் அல்லது பெண் எப்படியான குற்றம் உள்ளவரை திருமணம் செய்யலாம்.. இங்கு உள்ளவர்கள் அனேகமானவர்களிற்கு திருமணம் ஜாதகம் பார்த்து தான் நடந்து இருக்கும்..இதில் உங்களிற்கு நிறைய அனுபவம்கள் இருக்கலாம்..உங்களிற்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இது எப்படியான தாக்கத்தை திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும்,,..சிறு வயதில் இருந்து..அம்மா நீ ஏழில் செவ்வாய் யாரையுமே காதலித்து போடாதை என்று..பயமுறுத்தி கொண்டு இருப்பார்..இப்போது சாத்திரி மார்களோ..உனக்கு பெண் தேடி தான் பிடிக்கணும் எங்கேயும் ஒருத்தி தான் இருப்பா..என்று சொல்லுகிறார்கள்..எனக்கு இது எதுமே புரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்களன்..plz .................
-
- 48 replies
- 13.5k views
-
-
நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு. இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற "நன்றி தெரிவித்தல் நாள்" அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விடுமுறை நாள் என்னும் விதத்தில் இந்நாள் ஒரு குடும்ப விழாவாகக் கொண…
-
- 8 replies
- 3.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஏப்ரல் 2023 காதல் உறவுகள் எப்போதும் ஒருவருடைய உடல் நலத்தை பேணிக் காப்பதோடு, நீண்ட காலம் வாழவும் உதவுகிறது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் நண்பர்களுடன் பழகுவதிலும் இதே போன்ற நன்மைகள் ஏற்படுகிறதா? பென்னி ஷேக்ஸ் என்பவர் நாட்டிங்காமில் மேடை நகைச்சுவை கலைஞராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனநல பிரச்னைகளும், பெருமூளை வாதமும் இருப்பதால் எல்லோரையும் போல் அவரால் செயல்பட முடியாது. இதனால் நண்பர்களுடன் பழகுவதற்கு அவர் குறைந்த நேரத்தையே செலவிடுகிறார். இதன் காரணமாகவே பெரும்பாலும் அவர் தனிமையில் இருப்பதை அவருடைய நண்பர்கள் புரிந்துகொள்கின்றனர். இருப்பினும் சரியான நேரத்துக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், …
-
- 2 replies
- 898 views
- 1 follower
-