Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by vanni mainthan,

    '' போராட போ'....'' எம் தமிழா ஏனழுதாய் என்று கொஞ்சம் எண்ணு விளங்கி விட்டால் எம் படையில் வந்துயின்று நில்லு... உந்தன் முன்னால் நிக்கும்- பகை வந்துயின்று கொல்லு- எங்கள் உரிமை போரில் வந்து நீயும் பங்கெடுத்து நில்லு.... அன்னை மண்ணை ஆளவந்தான் அடித்தவனை கொல்லு அந்த பகையை அழித்திடவே போர்களமே செல்லு.... துரத்தி வந்த பகையவனை துரத்தி நீயும் கொல்லு- நீ ஈழ மண்ணின் மைந்தனென்றால் இன்று அதை செய்யு.... பாத்திருந்த போதும் நீயும் பங்கெடுத்து நில்லு - அந்த பல்லிழித்த காலமதை இன்றுடனே வில்லு.... உன்னடிமை நீ உடைக்க உரிமையுடன்; செல்லு அந்த புனித போரில் பங்கெடுத்து இன்று நீயும் வெல்லு.... அன்னை மண்ணை ஆள வந்தான் அடித்தவனை…

  2. சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.... சிவன் வந்தான் சிவனோடு அவன் மகன் குகனும் வந்தான் மூத்தவன் கணபதியும் அன்னை பார்வதியும் பிறிதொரு நாள் வருவதாக சேதியும் வந்தது! "என்ன திடீர் விஜயம்...?" என்றேன் "நாட்டில் சமாதானமாமே... அது தான் சும்மா சுற்றிப் பார்க்க வந்தோம்" என்றான் குகன் மயலிறகால் காது குடைந்த வண்ணம்... "கழுத்தில் நஞ்சு கட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடலாமாமே... அதுதான் நானும் வந்தேன்" என்றான் நீலக் கழுத்தை தடவிய வண்ணம் சிவன்...! பாம்பு பல்லிளித்தது மயில் தோகைவிரித்து அழகு க…

    • 4 replies
    • 2k views
  3. எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும் எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா? குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள். எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எத்துணை இடர்களுக்குள் எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள் வாழ இடம், வசிக்க வீடு உழைப்புக்கு வழி உண்பதற்கு உணவு உடுக்க உடை இப்படி எதற்குமே வழியின்றி தனித்து விடப்பட்டு மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம் பசித்து அழும் குழந்தையை ஆ…

    • 4 replies
    • 734 views
  4. நம் பசி தீர்க்க தன் பசிக்கு உணவு நாடிச் சென்றவள சென்றும் பல நாழியாச்சு நலமோடு வரும் வரையில் நாம இருப்போம் ஒற்றுமையாய் நகர்ந்து சென்று ஓடாதே நன்றும் தீதும் காத்திருக்கும் நிறத்தில் வேறு கண்டாலும் நிஜத்தில் நாம் உறவுகள் பத்திரமாய் நாம் இருப்போம் சென்ற வழி பார்த்திருப்போம் பதறாதே சோதரி பகல் பொழுது சாய முன் பசி தீர்க்கும் தாயவள் பாயந்து ஓடி வந்திடுவாள்

  5. இருள் சூழ்ந்த கரிய மேகத் திரளிடையே அடிக்கடி விட்டு விட்டு பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய் சீழ் கட்டிய இரத்த வாடைகள் நிரூபனின் நாற்று வலை தாங்குவோர் இன்றி தத்தளிக்கும் ஈழ மக்களை ஏந்திட நாமிருக்கிறோம் எனும் குரலுக்கு ஏதும் செய்திய முடியாதோராய் நாமிங்கு! நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ முது பெரும் விடுதலைத் தீயாய் கனன்று மிளாசி எரிந்தது, அதில் காங்கிரஸின் பொய் வேடத்தை தமிழகம் உணர்ந்து கலைஞரின் வாழ்விற்கும் காற் புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பி மகிழ்ந்திருந்தது! நிரூபனின் நாற்று வலை இன்று செங்கொடி அவர்கள்; முத்துக்குமார் வரிசையில்.... நீயும் போனாயா சகோதரி- இல்லை உன் கண் முன்னே காங்கிரஸின் நர்த்தன நடனத்தில் …

    • 4 replies
    • 1.2k views
  6. உங்களைச் சுற்றி மௌனம் மட்டுமே மலர்ந்து நிற்கிறது மனதுக்குத் தெரியாத மர்மங்களில் .. எங்களைச் சுற்றி இனங்கள் மட்டுமே இடித்துக் கொண்டு நிற்கிறது.. மனதுக்குத் தெரிந்த மர்மங்களில் ...! http://tamilpaingili.blogspot.com.au/2011_11_01_archive.html

  7. ஓர் வளவில் குடியிருந்தோம் எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள் உங்கள் ரகசிய நடமாட்டங்களின் காலடிச் சத்தங்கள் எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க எதேச்சையாகத் தான் கவனித்தோம் விசாரிக்கத் தொடங்கிய வேளை அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது எமை நீர் அறுப்பதற்கு தயாரான ஆயிரம் தடையங்கள் கிழக்கிலும் நீரெம்மை கிழித்துத் தொங்கவிடும் மரணத்தின் சாக்குரல்கள் அடிவயிற்றில் புரளத் தொடங்க வேறுவழியெதுவும் இருக்கவில்லை கீறோ, கிழிதலோ இன்றி அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய் விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம் அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது குலை குலையாய் எமையழித்து அதைக் கொண்டாடும் அளவுக்கு நிகழ…

  8. எல்லாம் இனிதே நடக்கிறது. இன்னும் சில மணிகளில் முற்றிலும் மயானமாகிவிடும் புகை மண்டலத்தினுள்ளிருந்து சிங்கக் கொடி உயரும் நிலத்தில் வீழ்ந்து இறந்துகொண்டிருப்பவர்கள் ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்

    • 4 replies
    • 1.2k views
  9. ஊரில் இருக்கும் நண்பா நலமா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!! காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான் சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள் ... நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!! இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால் மண்டையை மண்டையை ஆட்டிக் கேள் சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும் கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!! கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!! …

  10. Started by karu,

    தீரா விடம் – சித்தி கருணானந்தராஜா தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும்…

    • 4 replies
    • 1.3k views
  11. Started by jcdinesh,

    எங்கிருந்தோ வந்து அன்பு என்னும் மூன்று எழுத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்... அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது. அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன். அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது. என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால் பிரியாமல் இருக்க வேண்டும் நாம்......... படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா

    • 4 replies
    • 1.7k views
  12. சினேகிதிகளின் கணவர்கள் அவளது கணவனைப்போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன் . எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின் குறிப்பை இணைத்துவிடுகிறாள் . எவ்வளவு குடிக்க வேண்டும் ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழகிக்கொண்டேன் . நான் குழப்பமடைவதெல்லாம் சினேகிதியை பெயர் சொல்லாமல் எப்படி அழைப்பதென்று . ஒரு சிநேகிதியை ’சிஸ்டர்’ என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று ------------------ மனுஷ்யப் புத்திரன் அதீதத்தின் ருசி தொகுப்பில் இருந்து...................

  13. இரத்தம்தோய்ந்த குரூரச்சிவப்பான கொள்ளிக்கண்கள் பார்வைகளே படுபாதகம் செய்யுமாற்போற் சுவாலைப்பார்வைகள் தரவையெங்கும் பிச்செறியப்பட்ட பிணப்பாகங்கள் வல்லுறவினால் சிந்திய விந்துக்கள் வழியெங்கும் செங்குருதி வழிந்து காய்ந்த தேகங்களை ஆட்காட்டிக்குருவிகள் அடையாளம் கண்டுகொண்டாற்போல் அமைதியாய் இருந்தன உள்ளம் துடித்தது பற்கள் நரும்பின மீசைகள் துடித்தன தோள்கள் முறுக்கேறின எல்லாமே கனவானது ஆட்காட்டிகள் எல்லாமிழந்து அனாதரவாய் நின்றன. அவற்றின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக்கொண்டது பழி வாங்கும் நேரம் இதுவல்ல பார்த்து நடக்கவேண்டிய நேரம் ஏற்றத்தைக் கைவிட்டு ஆற்றைக்கடக்க வேண்டும் ஆற்றுப்படுத்த வேண்டியது அதிகம் இருக்கிறது எங்கோ பனிமலைத் தேசத்தில் இருக்கும் நண்பன…

  14. ஆனந்த புரத்தில் எழுதப்பட்டது.. ************************************* புற நானூற்றின் புதிய பக்கம்.! ********************************** மு.வே.யோகேஸ்வரன் ************************** சுடச் சுட எழுந்தனர் புலிகள் .. சுற்றிவர நின்று .. 'படப் பட'வென்று பொழிந்தது ராணுவம்.. விழ விழ எழுந்தனர் வீரர்..! ஆனந்த புரமா அது ?..இல்லை... இலங்கை அரசின் தானென்ற அகங்காரத்தை தகர்த்த மண்! வானிறங்கி வந்து மேகங்கள் மழை பொழிவதுபோல்.. குண்டுமழை நடுவே.. புறநானூற்றின் புதிய பக்கமொன்றை பொறித்த மண்.! முன்னூறு மூர்க்கப் புலிகள் தளபதிகள்..சுற்றிவரப் 'பெட்டிகட்டி'.. விண்ணோரும் போற்றும் வீரத் தலைவனை காக்கப் போர்புரிந்து.. கருந்தீயைக் கக்கும் 'பொஸ்ப…

  15. Started by sathiri,

    Tuesday, September 20, 2005 அவள் அவள் வீட்டு கதவு தானே திறக்கும் உள்ளே அணைப்பதற் கென்றே ஏற்றப்பட்ட விளக்கெளியில் உரிவதற்காய் உடுத்திய சேலையில் கலைப்பதற்கென்றே செய்த ஒப்பனையில் கசக்குவதற்காக சில மலர்களை காதேரம் வைத்து அழிப்பதற்காக வைத்த அகன்ற அழகிய பொட்டுடன் காத்திருக்கிறாள். உடம்பில் எங்கும் உணர்சியில்லை வயிற்றைதவிர என்வாயிற்று இன்று ஆணினமே அழிந்துவிட்டதா சுனாமி வந்து சுத்திக்கொண்டுபோய்வட்டதா படுக்கைவிரிப்பு பத்திரமாய் இருக்கிறதே வைத்தபொட்டு வைத்தபடியே இருக்கிறதே அதுஅழியா விட்டால் அவளிற்கு அமங்கலமல்லவா செல்லாத இராத்திரி சிறுகச் சிறுக விடியும்பகல் ஜயோ..பட்டினிப்பகலா?? எங்கோ ஒருகட்சி தலைவன் …

    • 4 replies
    • 809 views
  16. கண்ணுக்குள்ள நிக்கிறியே -என்ன (னை) விண்னுக்குள்ள தள்ளுறியே, அடியே...... எ எண்ணத்தில தீய வைக்கிறியே........ செவ்விதழை மடிக்கிறியே-என்ன(னை) செவ்வாயில புதைக்கிறியே, கொடியே.... ஏஞ்சிந்தையில புது சிந்துபாடுறியே............... ஒத்திவச்ச காணிய கடக்கயில பத்தியெளும் பெருமூச்சு-உன்ன பாக்கையில தோணுதடி! பொத்திவச்ச ஆசையெல்லாம் முத்திவந்து முனுங்குதடி!! நெத்தி சுருக்கி நீ பாக்கையில நெட்டுருகி போகுதடி! எட்டுவைச்சு பாதகத்தி நீ நடக்கையிலயென் சத்திகெட்டுப்போகுதடி!! மனச சுத்தி அடிக்கிறியே மலைய சுருக்கி சுமக்கிறியே....... கனவ அள்ளி தெளிக்கிறியே கையளவிடை மறைக்கிறியே....... ஊன உருக்கி -புது உருவம் திரட்டுறியே கானக்குயிலாய் உருவேத்திறியே........... …

    • 4 replies
    • 733 views
  17. Started by வர்ணன்,

    செத்துப்போ! ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான் பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு? நீ செத்துப்போ! ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்! உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ...... விக்னேஸ்வரன் மாண்ட போதும்... வீணே என்று நீ கிடந்தாய்! அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? செத்துப்போ ....... மானமே! 8)

    • 4 replies
    • 1.3k views
  18. Started by கந்தப்பு,

    மனிதா! - என்.சுரேஷ், சென்னை தமிழினத்தின் அழிவைக் கண்டு குருடனாக வாழ்வோன் உனக்கு கண்களெதற்கு? கைகுட்டையை உடையாய் அணியும் நடிகைகளின் சதையழகை கண்டதும் அவர்களோடு ஆடுவதாய் கனவு காண உறங்கச் செல்லும் மனிதா! உந்தன் சகோதரிகள் விதவைகளாகும் நிஜம் கண்டு எந்த உணர்ச்சியுமில்லையே உன்னிடம்? அன்பை மறந்த மனிதா! உணர்ச்சியும் உணர்வுமில்லாத ஒரே இடம் கல்லறை தானே? உனக்கிந்த பூமியிலென்ன வேலை நரகத்திற்கு ஓடிச்செல்! கனிவே இல்லாத மனிதா! உந்தன் இதயம் பாறைகளாயிருப்பின் அவைகளும் அழுதிருக்கும் பட்டினி மரணத்தால் ஆங்காங்கே சாகும் தமிழினத்தின் நிலை கண்டு! ஆனால் உன் இதயம் எதைக்கொண்டு தான் செய்துள்ளதோ? தமிழ் பேச வெட…

  19. என் தலையெழுத்தினை பிழையாய், எழுதத் தொடங்கிய காதல்... என் தலைவாசல் தனைத் தட்டிநிற்கின்றது! வரவேற்க முடியாமலும்... தூக்கியெறிய முடியாமலும்... நான் படும் பாடு, என் எதிரிக்கு கூட... வந்துவிடக் கூடாது இந்த நிலைமை!!! பூட்டி வைத்த நான்கு சுவர்களுக்கு நடுவில்... நான் கதறி அழுத சத்தத்தையும், என் விரல் மொழிகள் வரைந்த குருதிச் சுவரோவியங்களையும், என் தலையணை தனைத் தோய்த்த நீரோவியங்களையும், மற்றவர் மனமறியாமல் புதைத்துவிட்ட... ரகசியமானவனாய் நான்!? எனக்கு, ஒரு இதயத்தினையும் ஒரேயொரு எண்ணத்தினையும் கொடுத்த, இறைவனுக்கும் என்மேல் இரக்கமில்லையோ!??? அன்பையும் ஆதரவையும் அன்போடு எதிர்பார்ப்பது... எத்தனை ஏமாற்றங்களைக் கொடுத்தாலும், அத்தனை வலியையும் நெஞ…

  20. வாழ்த்துகின்றோம் எம் அண்ணா! ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத் தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும் போதே வரலாறு தந்தவன் மானத்தோடு எம்மை தலை நிமிரச் செய்தவன்! எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன் ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்! கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும் தூசென்று காட்டி நிற்கும் தீரனே! தரையோடு தொடங்கினாய் இயக்கம்! இன்று வான், தரை,கடலெங்கும் தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும் ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்! 'அண்ணா! உன் பெயர் சொல்ல புல்லும் கூடப் புலியென எழும்! அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த தலைவா! உன்னால் ஈழம் வாழும்! தமிழ் மானம் காத்த தலைவா வாழி! தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி! ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங…

  21. உன்னையும் என்னையும் இங்கே இணைத்தது ஈழம் எனும் நேர்கோடு இடையில் பல எதிர்கோடு இவற்றை தண்டி நீ ஓடு இதற்கு மேல் நீ எழுது கருத்தோடு

    • 4 replies
    • 907 views
  22. பிறப்பால் இவன் செய்த குற்றம் ஏதும் இல்லை. இருந்தும் பெற்ற தாய் நிராகரிக்க.. மனிதக் கருவி துணை இருக்க.. வளர்ந்தவன் Knut எனும் பெயர் தாங்கி.. தன் அழகால் குறும்பு செய்யும் நடத்தையால் உலகையே கவர்ந்தான். பாவம்.... 30 ஆண்டுகள் நீண்ட ஆயுள் வழக்கிருந்தும்.. மானுட உலகில்.. அவன் இருப்பு வெறும் நான்கு ஆண்டுகள் தான். விடைபெற்று விட்டான்.. போதும் பூமிப் பந்தில் இந்த வாழ்க்கை... வேண்டாம் எனியும் மனிதரோடு கொண்ட சகவாசம் என்று. இன்று கண்ணீரோடு அவன் நினைவில் இவன்..! http://www.bbc.co.uk/news/magazine-12805534

    • 4 replies
    • 2.9k views
  23. உனக்கு யாரோ ஒருவனின் கவிதை பிடித்ததில் இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் என்னில் ஏதாவது ஒன்று உனக்கு பிடித்ததில் கவிதையாவது இருக்கட்டுமே என்று -யாழ்_அகத்தியன்

    • 4 replies
    • 1.2k views
  24. mummy i want தண்ணி....!!!! ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல் தமிழினத்தின் அருமை போச்சு! தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி? படலை திறந்து வந்தோம் உடலை மட்டும் தானே கொண்டுவந்தோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.