கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
"காவோலை" "காவோலை விழ குருத்தோலை சிரிக்க காதில் மெல்ல காவோலை கூறிற்று 'காலம் மாறும் கோலம் போகும் காயாத நீயும் கருகி வாடுவாய்' குருத்தோலை சிரித்தது குலுங்கி ஆடியது குறும்பு பார்வையில் கும்மாளம் அடித்தது குருட்டு நம்பிக்கை வெயிலில் காய குருத்தோலை விழுகுது பாவம் காவோலையாக !!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 226 views
-
-
அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும்-பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி தமிழர் படையாகி களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர் உலகம் வியந்தாக. படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும் புதிய விதியல்ல விழுந்த மாவீரர் விதையா யாயினர் எழுவார் என்றென்றும். படலை திறந்தொரு தெருவில் இறங்கிட பயந்து சிலரோட நடுத்தெருவில் பலர் கதை முடிந்து சாவொரு மலிந்த நிலையாக, களங்கள் திறந்து சுழன்று சமரிடை புலி நிமிர்ந்த மாவீரன் குருதி படிந்து புதைந்து கிடந்தமண் கோவில் லாகாதோ. சதிகள் குவிந் தொரு நிலையில் மனமது தளந்து போகாமல் விமானத் தளங்கள் அழிந்தன களங்கள் எரிந்தன தமிழர்…
-
- 1 reply
- 739 views
-
-
சினேகிதிகளின் கணவர்கள் அவளது கணவனைப்போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன் . எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின் குறிப்பை இணைத்துவிடுகிறாள் . எவ்வளவு குடிக்க வேண்டும் ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழகிக்கொண்டேன் . நான் குழப்பமடைவதெல்லாம் சினேகிதியை பெயர் சொல்லாமல் எப்படி அழைப்பதென்று . ஒரு சிநேகிதியை ’சிஸ்டர்’ என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று ------------------ மனுஷ்யப் புத்திரன் அதீதத்தின் ருசி தொகுப்பில் இருந்து...................
-
- 4 replies
- 2.4k views
-
-
ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் திருடன் விளையாட்டு ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சண்டையில் முடிந்தது. அழுதுகொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள்.... “ராஜா - ராணி மந்திரி - போலீஸ், எல்லாரும் திருடன்!” ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் …
-
- 0 replies
- 614 views
-
-
பூக்கள் அழகானவை ..... கற்பனயில் பூக்கும் -நீ பூக்களின் ராணியாக .... அழகாய் இருக்கிறாய் ....!!! உன் உடலின் வியர்வைகள் ... பனித்துளிபோல் அழகாய் .... உன் மூச்சு காற்று எங்கும் ... வாசமாய் மனம் கவர்கிறாய் .... நீ உதிர்ந்து விழுந்தாலும் ..... உன்னை தாங்கும் காம்பு யான் ... மீண்டும் பூப்பாய் என்று ... காத்திருக்கிறேன் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 769 views
-
-
அனாதைக் குழந்தையம்மா .. :..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:.. அன்புள்ள அம்மாவுக்கு…! அழுது…அழுது… அடம்பிடித்து வேப்ப மரத்தில் ஏறியொழித்து… இன்னும்….இன்னும்…. எத்தனை….எத்தனை… விட்டாயா…? ஏஐன்சிக்குக் காசுகட்டி எல்லாம் முடிந்தபின் – எனை கொற கொறவென இழுத்தபோது படலையைப் பற்றியபடியே நானிட்ட கூச்சல் ஊரையே கூட்டியதே…! மறந்துவிட்டாயா…? ஏனம்மா என்னை ஐரோப்பியத்தெருக்களில் அனாதையாய் அலையவிட்டாய்…? “உயிரெண்டாலும் மிஞ்சுமெண்டுதான் மோனை ஐயோ… வேண்டாம் நிறுத்து…! உணர்விழந்த உடலுக்கு உயிரெதற்கம்மா…? நான் சின்னப்பொடியனெண்டாப்போலை காம்பில வாறவன் போறவன் வெள்ளை.. கறுவல்.. காப்பிலி.. சப்பட்டை.. எ…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
[size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size] [size=5][/size] வாடி விழுந்த பூவுக்குள் சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது! தேடி வைத்த தேன்கூடு ஏதுமன்றி தனிமையில் காய்கிறது! செத்து விழுந்த சருகுகளுக்குள் சில காலூன்றி எழும்பி விழுகிறது! பறக்க முனைந்து பாதி சிறகுகளை வலிய விரித்து தவழ்கிறது! பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும் அழையா விருந்து நடக்கிறது! ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்… சிறுகச் சிறுக வருடங்களாய் சேர்த்து வளர்த்த தேன்வதை… ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு… யாருடைய அகங்காரத்தால் வதைபட்டு அழிந்ததுவோ…? நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 16 replies
- 1.2k views
-
-
அம்மாவுக்கு வயசாகிவிட்டது மறதியும் வந்துவிட்டது ஆனால் அவள் நான் எப்ப போனாலும் சாப்பிட்டியா என்று கேட்கவும் பின் போகும் போது பத்திரம் பார்த்து போ என்று சொல்வதையும் ஏன் இன்னும் மறக்காமல் இருக்கிறாள் என்பது மட்டும் தெரியவில்லை. பா.உதயன்
-
- 5 replies
- 722 views
-
-
தேநீர் கவிதை: இல்லாத வீடு தன் நண்பனை அறிமுகப்படுத்தினான் என் நண்பன். ஒரு காலத்தில் ஒரே ஊரில் வசித்திருந்ததில் ஒருமித்தோம் இருவரும். ‘அந்த மாவு மில்லுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்கள் வீடு' என்றார். ‘உங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு துர்மரணம் நிகழ்ந்ததில்லையா?' என்ற என் ஊகத்தை மறுத்தார் அவர். ‘நீங்கள் வைத்திருந்த பவழமல்லி தெருவெல்லாம் மணக்குமே?' என்ற அவர் நினைவுப் பரிமாறல் என்னைக் குழப்பியது. …
-
- 0 replies
- 885 views
-
-
என்றும் என்னுயிர் பேபிக்கு எண்ணிப்பார் ஒரு தடவை என்ற போது தள்ளிப் போ என்னை விட்டு என்றேன் இன்று தள்ளிப் போ என்று நான் சொல்லவில்லை அள்ளித் தா உன் அன்பை என்கின்றேன் கள்ளச் சிரிப்பால் என்னை மயக்கிய போது உன் கண்களைக் கண்டு வியந்தேன் இன்று உன்னைக் காணாத போது என் கண்களைக் கண்டு வியக்கின்றேன் ஆனால் உன்னைக் காணும் போது பட்டாசு போல் வெடிக்கின்றேன் ஏன் என்று எனக்குள் நான் இன்றும் வியக்கின்றேன் இன்று என்னுயிர் மனைவி நீ என்றும் என் குழந்தை நீ வாத்தியார் **********
-
- 12 replies
- 1.9k views
-
-
என் முறை வரும்போது... கருவுக்குள் என்னைச் சுமந்து கருச்சிதையாமல் என்னைக் காத்து பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க பால் போத்தலுடன் நான் இங்கே... பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது என் முறை எனக்கும் வரும்போது அங்கே என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில் வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்
-
- 11 replies
- 2.2k views
-
-
-
ஒரு உறவை இழந்தாலே ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில் கொத்துக்கொத்தாய் ஆயிரமாயிரமாய் கொடுத்துக்கொண்டிருந்ததை கேட்டு பார்த்து அழுது புரண்டு காப்பாற்றும்படி மன்றாடி தோற்று இன்றும் எழும்பமுடியாமல் நித்திரை தொலைத்து நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம் தொலைத்தவை கொஞ்சமா? காவலுக்கு நின்ற தம்பிகளை தங்கைகளை பறி கொடுத்து தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி தலை குனிந்து நிற்கும் எம் இனம் மீண்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
இரத்தம்தோய்ந்த குரூரச்சிவப்பான கொள்ளிக்கண்கள் பார்வைகளே படுபாதகம் செய்யுமாற்போற் சுவாலைப்பார்வைகள் தரவையெங்கும் பிச்செறியப்பட்ட பிணப்பாகங்கள் வல்லுறவினால் சிந்திய விந்துக்கள் வழியெங்கும் செங்குருதி வழிந்து காய்ந்த தேகங்களை ஆட்காட்டிக்குருவிகள் அடையாளம் கண்டுகொண்டாற்போல் அமைதியாய் இருந்தன உள்ளம் துடித்தது பற்கள் நரும்பின மீசைகள் துடித்தன தோள்கள் முறுக்கேறின எல்லாமே கனவானது ஆட்காட்டிகள் எல்லாமிழந்து அனாதரவாய் நின்றன. அவற்றின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக்கொண்டது பழி வாங்கும் நேரம் இதுவல்ல பார்த்து நடக்கவேண்டிய நேரம் ஏற்றத்தைக் கைவிட்டு ஆற்றைக்கடக்க வேண்டும் ஆற்றுப்படுத்த வேண்டியது அதிகம் இருக்கிறது எங்கோ பனிமலைத் தேசத்தில் இருக்கும் நண்பன…
-
- 4 replies
- 907 views
-
-
கங்காருவின் மைந்தர்களே களிப்பெமக்குத் தாருங்கள் சிங்கத்தின் குழந்தைகளை சிதறடிக்க விரட்டுங்கள் தடுப்பரண் போட்டெம்மை படுத்துகின்ற சிங்களத்தை துடுப்பாட்டக் களத்தினிலே கடுப்பாக்கி அனுப்புங்கள் மைதானம் வந்திருக்கும் மனிதக் கொலைகாரன் மகிந்த முகத்தினிலே மண்கவ்வ வையுங்கள் சிங்கக் கொடிதாங்கி சிரித்துக் கூத்தாட சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச் சிரித்துநிற்க உதவுங்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
என்ன பாவம் செய்தமோ ...? ஈழ தமிழார் என்றால் ... துன்பம் ஒரு தொடர் கதை ....!!! அதோ தெரிகிறது வெளிச்சம் .... இதோ வருகிறது விடிவு .... என்று நினைக்கும் போது.... வெளிச்சத்துக்கு முடிவு .... வந்துகொண்டே இருக்கிறது ...!!! கொடியது கொடியது ... மனிதபிறவி கொடியது ... அதனிலும் கொடியது ..... தமிழனாய் பிறப்பது கொடியது .... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பிறந்தது கொடியது ... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ... கொடியது .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை
-
- 1 reply
- 1.3k views
-
-
கார்த்திகைப் பூக்களின் யாத்திரை இத் தேவகுமாரர்களின் சீரான பாதம் பட்டு புதை குழிகள் கூடப் புதுப்பிறப்பெடுக்கும் இவர் சுவாச வெப்பங்கள் மோதும் திசையெங்கும் வீரவிடுதலையின் வேதங்கள் சொல்லும் ஆர்ப்பரித்துப் பொங்கி எழும் ஆழிமகள் கூட இவர் அக்கினிப் பார்வையிலே அரைவினாடி மூச்சடங்கும் வானத்துத் தேவதையும் இவ்வனதேவதைகளுக்கு தூவானமாய் வாழ்த்தினை தூவி வழியனுப்பும் பூவரசம் பூவும் இப் புனித யாத்திரைக்கு சாமரம் வீசிவிட்டு தனக்குள்ளே சிலிர்க்கும் இக் காவிய நாயகர்கள் கவிதை வரிகளுக்குள் ஜீரணிக்க முடியா திவ்விய பிரபந்தங்கள்
-
- 16 replies
- 2.7k views
-
-
காதலர் தினத்தையொட்டி இரு காதல் பாடல்கள். அனைத்து யாழ்கள உறவுகளும் மகிழ்வோடு காதலர் தினத்தைக் கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன் என் மனதில் விழுந்த நதிக்காக நான் எழுதிய இரு பாடல்கள் இங்கே. இந்தப் பாடல்களின் தோற்றத்தால் இரு இறுவட்டுக்களும் ஒரு திரைப்படமும் உருவானதில் பெரு மகிழ்ச்சி. காதலர் தினத்தைக் கொண்டாட தயங்குபவன் தமிழனாக இருக்க முடியாது. காதலைப் போற்றாதவன் மனிதனாக வாழ முடியாது. காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் அறிந்திருக்க வேண்டும். காதல் என்பது என்னைப் பொறு…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெண் அன்பில் ஒருதாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...
-
- 6 replies
- 1.8k views
-
-
-
வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய மண்ணில்ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறதுமணிப்பூரில் ஒலிக்கும்இந்திய கீதம்போல என்னுடைய மண்ணில்ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறதுதிபெத்தில் பறக்கும்சீனக் கொடி போல என்னுடைய விரலில்நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறதுமியன்மாரியரின் கையில்தீயால் இடப்பட்ட காயத்தைப்போலதீபச்செல்வன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 6 replies
- 3.7k views
-
-
உன் விடியல் உன் கையில்...... கவிதை.... தமிழா நீ எழுந்திடு நம் தாய் நாடு மீட்க சேர்ந்திடு.... தமிழீழம் உன் தாயல்லவா உன் தாயை நீ கை விடலாமா...? எதிரியின் அழிப்பில் நீ என்றும் உன் இனத்தை அழிய விடலாமா...? ஒற்றுமை உணர்வின் உயிராக நமக்கு காக்கைகள் உனக்கு தெரியலையா..? அதில் ஒன்றுக்கு அநீதி இழைத்துவிட்டால் அவை எல்லாம் சேர்ந்து உன்னை தாக்காதா...? நீ உன் ஒற்றுமையின் பலம் காட்டு மலை போன்ற எதிரியும் உனக்கு மண் மேடு.... மியிர் கொட்டி பூச்சி தன் உயிர் காக்க தன் மியிர் கொண்டு உன்னை தாக்கிடுமே...! மனிதனாய் பிறந்த உங்களுக்கு ஏன் மயக்கம் இன்னும் தெளியவில்லை..! உங்கள் உரிமைக்காய் நீங்கள…
-
- 3 replies
- 1.1k views
-
-
உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…
-
- 14 replies
- 2.4k views
-
-
தமிழனென்று பெருமை கொள்வாய்.... சிறு கவிதை.... ஈழத்தின் மண்ணைப் பார் நீ வலிகளை உணர்ந்துகொள்வாய்....... மாவீரர் கல்லறையைப் பார் நீ தியாகங்களை புரிந்துகொள்வாய்..... இன்று தமிழரின் எழுச்சியை பார் நீ ஒற்றுமையை உணர்ந்து கொள்வாய்..... நம் தலைவனின் உறுதியை பார் நீ உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்வாய்...... வன்னியின் அடங்காத திமிரை பார் நீ தமிழனென்று பெருமைகொள்வாய்..... இளங்கவி
-
- 0 replies
- 543 views
-