கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ…
-
- 7 replies
- 1.2k views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். ஏன் இந்த நிலையென்று ஏக்கமாய் நான் பார்த்தபோது வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற காலம் கைகொடுக்கும் அதுவரை காத்திருப்போம் என்றார்கள். செண்பகன் 23.10.13
-
- 11 replies
- 1.2k views
-
-
வீர நாய்கள் – தீபச்செல்வன்:- எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும் அழைக்கப்படும்போதெல்லாம் சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும் எனது வீடுகளில் எந்த வேளையிலும் சோதனைகள் நடத்துவதையும் அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும் எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும் எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும் எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன் பார்த்துச்செல்லும்போதும் துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
:roll: பொங்கி எழடா.... எழடா எழடா தமிழா எழடா எழந்தே தமிழீழம் தனை நீ அடையடா... அடிமை விலங்கதை அறிதே;தே எறியடா.... உடைத்தே தமிழீழம் தனை நீ அடையடா.... தலைகள் குனிந்தது போதும் நிறுத்தடா.... ஆண்டுகள் ஆயிரம் அடிமையாய் ஏனடா....?? சொந்தங்கள் பிரிந்த சோகம் ஏனடா...?? உன் மண்ணில் உனக்கின்று அவலம் ஏனடா....?? கண்ணீர் கவலைகள் கருணையாய் ஏனடா....?? கரிகாலன் தமிழா உனக்கின்று ஏனடா....?? பொறுத்தது போதும் இனி பொங்கியே எழடா......!!! -வன்னி மைந்தன்-
-
- 3 replies
- 1.2k views
-
-
அடைந்து சுதந்திரம் இன்றுடன் இலங்காவுக்கு வயது ஐம்பத்து ஒன்பது ஆகிறது! ஐயா பெரியோரே பாரினிற் சிறந்த படு பாதகர் தேசம் இலங்காவென்பதை நீர் யாவரும் அறிவீர்! முந்தைநாள் ஜே.ஆர் நேற்று சந்திரிகா இன்று மகிந்தன் கோவணத் துண்டை கொடியில் காயப் போடுகின்றார்! கண்டுகளிப்பதற்கு சிங்களக் குண்டர்கூட்டம் தறுதலை நகர் கொழும்பில் கூடுகிறது! கடனில் வாங்கிய விமானங்களின் வேடிக்கை பழுதடைந்த கவசவாகனங்களின் அணிவகுப்பு வீதித்தடைகள் அங்கவடையாளச் சோதனைகள் விமரிசையாக நடக்கிறது இலங்காவின் பிறந்ததினம்! நீளத்தாடியுடன் வீணைமீட்கும் சுவாமியார் ஒருபுறம் ஓலைவிசிறிலால் உடம்புசொறியும் பிக்கு மறுபுறம் குடுவடிக்கும் குண்டர்படை கொலைவெறியுடன் அணிவகுக்க கொடுங்கோல் மன்னன் மகிந்தன்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மண்ணிறங்குகிற கால்கள் By தீபச்செல்வன் ____________________ பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது கால்கள் இறங்காமல் எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடி அவள் எல்லாருடைய கண்கள் வழியாகவும் நடந்து செல்லுகிறாள். பதுங்குகுழி உடைந்து மண் விழுகையில் தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள். கால்களை ஷெல் கிழித்த பொழுது தனது கண்கள் குருதியில் நனைத்து கிடந்தன என்று கூறியபடி சக்கரத்தை உருட்டுகிறாள். எனது கால்கள் இல்லாததைப்போலிருக்கின்றன. நடப்பதற்கு ஆசைப்படுகிற கால்கள் எப்பொழுதுமே தொங்குகின்றன. மண்ணிறங்கும் கால்களுக்காக கனவு காணுகிற இராத்திரிகளில் அவளது மனம் நாற்காலியின் கீழாக தூங்குகிறது. எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற சக்கரங்…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று ஒரு சகோதரி எழுதியதை வாசித்தேன். நான் வாசித்ததை இங்கு பதிவு செய்கிறேன். இந்த காலங்களில் நானும் பிறந்த மண்ணில் இருந்தேன். மொறிஸ் குறிப்பாக வடமராச்சியில் அந்நிய படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இவருடன் ஜேம்ஸ், ஜூட், ரமேஷ் மாஸ்டர், ஜீவா, ஜெயம், ஐயன் இன்னும் பலர் களமாடினார்கள். அனைத்து மாவீரர் தெய்வங்களுக்கும் எனது வீர வணக்கம் - அகஸ்தியன். சுமை தாளாத சோகங்கள்! வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் ஈழம் தாரீர்!.. கடலிடைக் கிடந்த தீவின் கவின்மிகு கரைகள் எங்கும் படர்ந்துநல் வாழ்வு கொள்ளும் பைந்தமிழ் வம்சம் காண்மோ! இடரிடைப் படுமோ? எங்கள் ஈழமண் இழப்ப தாமோ? மடமதிக் காடையோர் முன் மறத்தமிழ் தோற்ப தாமோ? இலங்கையின் ஏறத் தாழ இரண்டிலோர் பகுதி யான நிலங்களை உடைமை கொண்டு நிமிர்ந்துவாழ் தமிழர் தம்மைக் கலங்கிட வைக்கும் நீதிக் கயவர்கள் நம்கண் முன்னே விலங்கினம் என்ப தல்லால் வேறெது சொல்வ தற்கே? இந்திய நாடே! மற்றும் ஏனைய நாட்டோரே! நீர் தந்திட வாரீர், உங்கள் தார்மிகக் கருணை எம்மேல்! மந்திகள் மேயும் எங்கள் மண்ணினை மீட்டுத் தாரீர்! சிந்நிய குருதி போதும்: செந்தமிழ் ஈழம் தாரீர்!.. செந்தமிழா, நம் தமிழீழம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறுவயதுகளில் வாழ்க்கையின் வழிகளில் காலம் ஒரு கவிதையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது கனவில் தோன்றும் கவிதைவரிகளைப்போல வாழ்தலின் இனிமைகளைமட்டுமே கண்களைத்திறந்தபடி ரசித்துத் திரிந்தேன் உடலின் ஒவ்வொரு நுண்ணிய அணுக்களிலும் புகுந்து இயற்க்கை நான் என்னும் ஆன்மாவை வனைந்து கொண்டிருக்க காலமடியில் இளமை வழிந்தோடிக்கொண்டிருந்தது.. அணல் எறிக்கும் புழுதி வீதிகளில் உலாவித்திரியும் என் பாதங்களை பூமித்தாய் வாஞ்சையுடன் நீவிக் கொடுப்பாள் அப்பொழுதெல்லாம் பூமிக்கு நான் பாரமாக இருப்பதாக உணர்ந்ததில்லை... அம்மாதரும் முத்தங்களை வாங்கியவாறே எதற்க்கிந்த வாழ்தலென்ற புரிதல் இல்லாவிட்டாலும் நிறைவாக அறிதல் குறித்த தீராப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
மானுடத்தை நேசி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிபடுக்கப் பாயின்றி தரிக்க நிழலின்றி சிதைந்த தேகமும் சிந்திய கண்ணீரும் கொண்டலையும் மானுடம் இரண்டு இலட்சத்தை தாண்டுதே தேனாட்டில்! துப்பாக்கி கலாசாரம் காறி உமிழ்ந்த எச்சிலின் காயங்கள் சிதைக்கின்றன இன்னும் எம்மவரின் தேகங்களையும் தடம் பதித்த எம் புனித தேசத்தையும்! காலனாம் பிணந்தின்னிக் கூட்டங்கள் சொந்த இலாபத்துக்காய் கந்தகக் குழாய் ஏந்தியதால் அப்பாவி ஜீவன்கள் அலைகின்றன தெருக்களில்! மௌனித்த உதடுகள் மீண்டும் திறக்க ஜனித்த சிசுக்கள் உரம்பெற சிவந்த எம்மண் சிலிர்க்க தமிழர் உரம்பெறு நாள்தான் எப்போ! துப்பாக்கி வேட்டும் குண்டுத் தாக்குதலும் தமிழர்களின் பசிக்கான தீனியா அழித்தது போதும் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு! கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை! குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி! நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்! பூவைத் துளைத்து அதன் …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
நான் புல்லாங்குழலில் இருந்து கசியும் ஒரு மெல்லிய இசையாக உன்னை ரசிக்கிறேன் நீ புல்லாங்குழலுள் அடைபட்டு துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி என்னை வதைக்கிறாய் நான் பூவிலிருந்து ஒழுகும் பரவச வாசனையாக உன்னை நுகர்கிறேன் நீ பூக்களை தாங்கி நிற்கும் ஊமைக் காம்புகளாக்கி என்னை மறந்துபோகிறாய் நான் புத்தகங்களுக்கு நடுவே பொத்திவைத்த மயிலிறகாக உன்னை சேகரிக்கிறேன்.... நீ புத்தகங்களுக்கு உள்ளே கிழிந்துபோன பக்கங்களாக்கி என்னை புரட்டிப்போகிறாய்... நான் எல்லாவற்றிலும் உன்னை அழகாக ரசித்துக்கொள்கிறேன் நீ அனைத்திலும் என்னை அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்.. நான் ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே கொடுக்க நிறைய அன்புடன் காத்திருக்கிறேன் நீ பேசாது உன் வனமங்களுடன் எடுக்க ஒரு புன்னகையைகூடதர நேர…
-
- 13 replies
- 1.2k views
-
-
[size=4][/size] [size=4]இந்த மரம் அந்த நதி எல்லாமே [/size][size=1] [size=4]இது எதுவுமே மாறல[/size][/size][size=1] [size=4]ஆனால்[/size][/size][size=1] [size=4]என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்[/size][/size][size=1] [size=4]இது எவ்வளவு பெரிய சோகம் [/size][/size][size=1] [size=4]மறக்க முடியல[/size][/size] [size=4]சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன் [/size][size=1] [size=4]கவலை என்றால் மடியில் சாயா அம்மா [/size][/size][size=1] [size=4]ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா [/size][/size][size=1] [size=4]இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு[/size][/size][size=1] [size=4]சின்ன வயசில் வந்த காதல்[/size][/size][size=1] [size=4]காதலிக்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
அன்னையின் வீடு வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை வசைப்பாடிகிற சகோதரரே நான் எதிர்பார்ததில்லையே ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை ஒரு வாக்கை அல்லது ஆதரவான உங்கள் பாராட்டுதலை. என் பிள்ளைகளின் உணவை உண்டும் என் மனைவியின் தண்ணிரை அருந்தியும் பாடுகிறேன் நான். அன்னைவீட்டுக் கூரை எரிகிறது என் சகோதரர்களோ பாகப் பிரிவினைச் சண்டையில். தண்ணீர் ஊற்றுவதானால் அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே …
-
- 4 replies
- 1.2k views
-
-
எழில்மிகு அமெரிக்கா! - அரிமா இளங்கண்ணன் காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொடுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் போவான் காடுமரம் செடிகொடிகள் நிறைந்திருக்கும் கண்கவரும் மலர்க்கூட்டம் சிரிப்புதிர்க்கும் ஓடுகின்ற 'மிசிசிப்பி' ஆற்று நீரும் உடன் துணையாய் 'மிசெளாரியதும் வளம்கொடுக்கும் நாடியதிண் மீன்பிடிக்கச் செல்லு வோர்கள் நல்லபலன் கிடைத்ததெனக் களித்தி ருப்பர் ஆடுகின்ற சிறுவரெல்லாம் மாலைப் போதில் அமெரிக்கக் களங்களிலே மகிழ்ந்தி ருப்பர்! காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொ டுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் …
-
- 4 replies
- 1.2k views
-
-
நாங்கள் தூக்கத்தில் விழித்து கொண்டு இருப்பவர்கள் நாங்கள் வாழ்வோடு செத்துகொண்டிருப்பவர்கள் நாங்கள் கந்தககாற்றில் கருகி போனவர்கள் நாங்கள் மருத்துவத்துக்காய் மயங்கி விழ்தவர்கள் நாங்கள் ஈழதாகம் கொண்டு தண்ணீர்தாகம் உற்றவர்கள் நாங்கள் ஈழம் எனும் கனவு கண்டவர்கள் நாங்கள் முள்ளிவாய்க்காலில் முடங்கி முட்கம்பி முடிச்சுக்குள் நாங்கள் எங்கள் மண்ணில் அகதியானவர்கள் நாங்கள் நாங்கள் வேறு யாருமல்ல நாங்கள் ஈழத்தமிழர்கள்
-
- 6 replies
- 1.2k views
-
-
-
காட்சிப்பிழைகள் - கே இனியவன்காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்) காதல் ஒரு மந்திர கோல் ..... இரண்டு இதயங்களை .... ஒன்றாக்கி விடும் ....!!! நெற்றியில் ... குங்கும பொட்டு.....? அப்பாடா - சாமி .... கும்பிட்டு வருகிறாள் ....!!! தேவனிடம் .... பாவ மன்னிப்புக்கேட்கிறாள் .... என்னிடமும் கேட்பாள் .....!!! ^^^ கனவு நிஜத்தில் நிறைவேறாத ... ஆசைகளை நிறைவேற்றும் .... நீர்க்குமிழி .....!!! திடுக்கிட்டு எழுந்தாள் .... தாலியை கண்ணில் வணங்கி... என்னை பார்த்தாள் ....!!! இன்னும் சற்று தூங்கியிருந்தால் .... சொர்கத்தை......... பார்த்திருப்பேன்....!!! ^^^ நீ என்னை .... காதலிக்கும் வரை ... உத…
-
- 2 replies
- 1.2k views
-
-
உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது உச்சியிலே சுள்ளென முறைக்கும் சாய்ந்தாடும் மரஞ்செடியும் சலனமின்றி விறைக்கும். ஊரெல்லாம் புழுங்கும் உடல்களெல்லாம் வியர்வை வெள்ளம்விழுங்கும். அடர்மர முற்றமதில் சுற்றமொன்றாய்க்கூடும் சிறுசுகளும் பெருசுகளும் விசிறிகொண்டு வீசும் நாசியிலே புழுதிமணம் புதுச்சேதி ஒன்றுபேசும். காய்ந்த புல்லை மேய்ந்தபசு தாகசாந்தி தேடும் நட்டுவைத்த பயிர்களெல்லாம் தலைகுனிந்தே வாடும். வாய்பிளந்த பூமியது நீலவானை நோக்கும் பொறுமையன்றோ உனது பண்பு என்று வானம் கேட்கும். தூரவான இடியோசை காற்றின் சிறை உடைக்கும் சில்லென்றதென்றல் வந்து புதிய யுகம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
புயல் சுழன்றடித்த பெருந்தீவின் மாயான அமைதியில் சலனமில்லா ஊர்களின் நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில் வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் முன்பொரு காலத்தில் எந்நேரமும் விளையாட்டு சாமான்கள் விழுந்துடையும் சத்தங்களும் விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும் கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும் நினைவின் தொகுப்பாய் எஞ்சிய ஒற்றை நிழற்படம் முன் சிறுபிள்ளை பிரார்த்தனை முனுமுனுப்புகளுமிருந்தன இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன துயரிரவின் பேரமைதியில் ஊமைநிலத்தில் ஊடுருவிய புத்தரின் நிலைகுத்திய காந்த விழிகளுக்கப்பால் 'புயலின் சூன்யத்தை, கோர பசியை, தீரா உயிர்வேட்கையை, மாளா குரூரத்தை, அழிவின் ஆரோகணத்தை, ஏதொவொரு பிணத்தை புண…
-
- 15 replies
- 1.2k views
-
-
தேடிக்கொண்டிருக்கிறேன்! --------------------------------------- என்னைத் துடைத்து அழகு பார்த்தவன் இன்னொருவனுக்கு பரிசாய்க் கொடுத்துப் புதைந்து போனான்! விதையென்றானதாய் விழி துடைத்தவள் என்னைத் தாங்கினாள் வீறுடன் நடந்தாள் பேருடன் வந்தாள்! பெரும் பேறினைப் பெற்றவள் தானென கருமையில் கலந்தாள் கடமை முடித்தாள்! மீண்டும் தோள்களில் மிடுக்குடனிருந்தேன் நாட்கள் கழிந்தன! வங்கத்திலாடிய வஞ்சகர் கூட்டம் நஞ்செடுத்தாடி நாயகர் சாய்ந்தனர் நானுமிப்போ தமிழீழ மக்களைப்போல அனாதையாய் சாய்தேன் யாருமிப்போ தீண்டுவதில்லை யார்வருவாரோ தேடிக்கொண்டிருக்கிறேன்!
-
- 6 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழர்க்கு தலைவனாம் எண்ணத்தில் கைக்கெட்டும்தூரத்தில் கொத்து கொத்தாய் கொலைகள். தடுக்க தைரியமில்லா தலைவா தப்பான சேர்க்கையில் தன்மானம் இழந்தாயோ? இல்லை வெள்ளை தோலினிலே தன்னிலை தளர்ந்தாயோ? அருகினிலே மாழ்வது உன்னினமே தட்டிக் கேட்க துப்பில்லை தரம் கெட்டவளின் பசப்பினிலே தடுமாறி போனாயோ? இல்லை உடல் தளர்ந்தும் உன் ஆசைகள் தளரவில்லையா? மதி கெட்டவனே அருவருப்பாயில்லை உனக்கு வாக்கெடுப்பு நடாத்தி பார் யார் தமிழினத் தலைவனென்று உன் கரங்களே எங்கள் தம்பிக்கு வாக்களிக்கும். அறிந்தும் அறியாதவன் போல் நாடகம் ஏன்? நாளைய சந்ததி படிக்கும் வர…
-
- 2 replies
- 1.2k views
-
-
நாட்டுப் புதினம் - 1 நாலாண்டு(5) சமாதானம் நாவறண்டு நாசமாய் கிடக்குது- அரச அதிபர் அறைகூவல் விடுகிறார்- இது போர் அல்ல மக்காள் போர் அல்ல போர் என்று சொல்லாமலே தமிழ் மக்களை கொல்லுவம் சமாதானக் கதவுகளை இன்னும் திறந்து வைத்திருக்கிறதா சொல்லுவம் தமிழ் மக்களைக் கொல்வதால் எங்கட இலங்கையை பாதுகாக்கலாம் சிங்கள ராணுவத்தைக் இழப்பதால் அவங்கட புலிகளை வெல்லலாம் செஞ்சோலையில போய் குண்டுகளை கொட்டுவம் உலகத்துக் அங்க புலிகள் முகாம் எண்டு சொல்லுவம் திட்டம் தீட்டி படுகொலை செய்யவம் கண்ணை மூடிக்கொண்டு-அதை நியாயப் படுத்த நீங்க இருக்கீங்க தானே ரம்புக்வெல கண்காணிப்பு குழுவுக்கு மெல்ல காதில பூவை சுத்திட்டு ஐக்கிய நாடுகள் சபையில சொல்லுவம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்... இறை தூது கொண்டு.. நீ வந்தாய் தூசிகள் படித்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..! அகிலத்தில் - முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்... அடப்பாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை வைத்தார் இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்..! அதர்மத்தின் வீரம் அகோரம் தர்மத்தின் வீரம் சாந்தம்..! இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்…
-
- 8 replies
- 1.2k views
-
-
கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர் தீபச்செல்வன் 01 நமது வாழ்வின் கனவு நகரமே படைகள் உன்னை மிதிக்கும் பொழுது நமது மனம் மிதிபடுகிறது. கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் மூழ்கியது. அதிகாரத்தின் கைகளிற்குள் அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது. ஆழமான கிணறுகள் வசந்தநகரை விட்டு பின்வாங்கின. நமது நகரம் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது. மெல்ல மெல்ல படைகள் கடிக்கத்தொடங்கிய நாட்களில் வீடுகள் எங்கோ போயிருந்தன. கடைகள் கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின. எனது வீடு முழுவதையும் தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற படைகள் நகரமெங்கும்; நுழைந்து கொடிகளை பறக்க விடுகையில் காயம் ஆறாதிருந்த கட்…
-
- 1 reply
- 1.2k views
-